- Joined
- Jan 10, 2023
- Messages
- 35
- Thread Author
- #1
சித்ரா அழுது கொண்டே எழுந்து வெளியே வந்தாள்.. செக்யூரிட்டிக்கே அவளைப் பார்க்க பாவமாய் போனது.. அக்ஷயாவை இடுப்பில் அமர்த்திக் கொண்டு ரோட்டில் நடந்தவளுக்கு எங்கே போவது எனத் தெரியாத நிலை.. வீட்டுவாசலில் மீன்கொத்தி போல வாடகைக்காக காத்திருப்பார் ஹவுஸ் ஓனர்.. கண்டிப்பாக அங்கே போக முடியாது.. வெயில் வேறு சுட்டெரித்தது.. பால்வண்ண முகம் வியர்த்து போயிருக்க சோர்வாக ஓரமாக போடப்பட்டிருந்த கல்லில் அமர்ந்தாள் சித்ரா.. "சித்தி பசிக்குது".. தூக்க கலக்கத்துடன் அவள் மார்பில் முகத்தை புரட்டியது குழந்தை.. கையிலிருந்த காசு மொத்தமும் தீர்ந்து போன நிலையில் குழந்தைக்கு ஒரு கிளாஸ் வாங்கிக் கொடுக்கவும் வழியில்லை.. கொடுமையின் உச்சம் பச்சைக் குழந்தையை பசியில் வாடவிடுவது.. தீராத வேதனையை அனுபவித்தாள்..
ஆருரன் கொடுத்த காயம் வேறு இதயத்தை ரணப்படுத்தியிருக்க.. பரவாயில்ல.. விதுரனையும் அவன் தாயையும் இந்த நிலைக்கு ஆளாக்கி ஆருரனை உயிருடன் வார்த்தைகளால் சாகடித்த உனக்கு இது தேவைதான்.. இன்னமும் நீ படவேண்டும்.. அனுபவி.. என இடிந்துரைத்தது மனசாட்சி.. ஆனால் மடியில் கிடக்கும் குழந்தை.. அவள் என்ன பாவம் செய்தாள்.. தன்கையில் சரணடைந்த ஒரே காரணத்திற்காக அவளும் தண்டனை அனுபவிக்க வேண்டுமா.. பசியில் வாடும் குழந்தையைக் கண்டு மனம் பதைபதைத்தது..
மூன்று வயது குழந்தையை மார்போடு அணைத்தபடி ஊமையாக அழுதாள் சித்ரா.. எதற்காக அழுதுதீர்ப்பது.. தன்னால் ஆருரனின் குடும்பமே சீர்குலைந்ததை எண்ணி அழுவதா.. அல்லது அதற்கு பலனாக தான் இப்படி நடுரோட்டில் நிற்பதை எண்ணி அழுவதா.. உச்சி வெயில் மண்டையை பிளக்க ஒதுங்க இடமின்றி குழந்தையின் மேல் புடவை முந்தானையை போர்த்தியபடி அந்த கல்மீது அமர்ந்திருந்தாள் சித்ரா..
"அரைமணி நேரம் கழிந்திருக்கும்.. அம்மா.. உங்களை அய்யா வரச் சொன்னாரு.. நல்லவேளை நீங்க எங்கேயும் போகல.. இல்லைனா உங்களை எங்கே தேடியிருப்பேன்.. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஓடிவந்தார் அந்த வயதான செக்யூரிட்டி.. சித்ரா நிர்மலமான முகத்துடன் அவரை ஏறிட்டு பார்க்க "சீக்கிரம் வாங்கம்மா.. உங்களை கூட்டிட்டு போகலைன்னா என் வேலை போய்டும்".. அவர் பரிதவிப்புடன் நிற்க வேறுவழியில்லாமல் குழந்தையை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவருடன் சென்றாள் சித்ரா..
பெரிய வாயில்கதவை திறந்துவிட்டு "உள்ளே போம்மா".. என்றார் செக்யூரிட்டி.. அதே வீடுதான்.. ஆனால் இப்போது சிங்கத்தின் வாயில் தலையை விடுவது போல அச்சுறுத்தியது.. எச்சில் விழுங்கியபடியே வானுயர்ந்த அந்த மாளிகையை நோக்கி நடைபயின்றாள் சித்ரா..
எந்தவித விசாரணையும் இல்லாமல் நேரடியாக உள்ளே அனுப்பப்பட்டாள் சித்ரா.. "சித்தி".. என குழந்தை சிணுங்க.. கொஞ்சம் பொறுத்துக்கோடா.. "ஏதாவது சாப்பிட கிடைக்குதான்னு பாக்கிறேன்".. என தோளில் போட்டு தட்டினாள்.. அச்சுவிற்கு காலையில் பாலும் பிஸ்கட்டும் மட்டும் கொடுத்திருக்க அவளுக்கோ சாப்பிட எதுவும் இருக்கவில்லை.. பசி வயிற்றைக் கிள்ளியது.. வெயிலில் காய்ந்த களைப்பு வேறு..
நெற்றியில் துளிர்த்த ஈரத்தை துடைத்துக் கொண்டே கால்கள் துவள உள்ளே போக "இடது பக்கம் போங்க".. வழிகாட்டினார் கார்ட் ஒருவர்.. மிரள மிரள விழித்துக் கொண்டே அவர் காட்டிய திசையில் சென்றாள்.. முன்பு அவள் சென்றது இந்த மாளிகைக்கு பின்புறமிருந்த அலுவலகம்.. இது ஆரூரன் வசிக்கும் வீடு.. வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் பணச்செழிப்பு தாண்டவமாட அவன் வளர்ச்சி கண்டு மனதுக்குள் பெருமகிழ்ச்சி கொண்டாள் காரிகை..
அந்த கார்ட் சொன்னதுபோல இடதுபக்கமிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள் சித்ரா.. அடேங்கப்பா.. அறையா அது.. ஒரு குட்டி மாளிகை.. ஊரில் தான் மாளிகை என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அவள் வீட்டின் மொத்த அளவையும் அந்த ஒரு அறை ஆக்ரமித்திருக்க.. சகல வசதிகளும் அந்த ஒற்றை அறைக்குள்ளே.. இப்படித்தான் டிசைன் வேண்டும் என பலநாள் கனவுகளுடன் யோசித்து வடிவமைத்திருப்பான் போல.. இன்டீரியர் டிசைன்.. அங்கிருந்த பொருட்கள்.. சாதனங்கள் அனைத்துமே அந்த அறைக்காகவே செதுக்கப் பட்டிருந்தது என்றுதான் கூறவேண்டும்..
அறையின் பிரம்மாண்டத்தில் மலைத்து நின்றவள்.. சா.. சா.. அனுமதி கேட்கவே நா குழறியது.. "உள்ளே வாங்க மிஸ்.சித்ராவர்ஷினி".. உள்ளிருந்து ஒரு கணீர்குரல் கேட்க.. பயம்.. பதட்டம் சூழ நெஞ்சாங்கூடு ஏறி இறங்க அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் சித்ரா..
எதிரே அலுவலக மேஜையுடன் கூடிய இருக்கையில் ஆளுமை தோரணையுடன் அமர்ந்திருந்தான் ஆரூரன் .. எதிரே அவன் அழகை ரசித்தபடி ரஞ்சனி பவ்யமாக நின்றிருந்தாள்.. சித்ராவை பார்த்ததும் அவள் முகம் சுருங்கிப் போனது.. "இவ ஏன் மறுபடி இங்கே வந்தா" என்பது போன்ற பார்வை..
"வாங்க மிஸ் வர்ஷினி".. குரலில் ஒரு ஏளனம்.. அளவுக்கதிகமான நக்கல்.. விழிகளை தாழ்த்திக் கொண்டாள் சித்ரா.. புயலென எழுந்தவன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கி அவள் முகத்திற்கு நேரே சொடக்கிட்டான்.. விலுக்கென நிமிர்ந்தாள் சித்ரா..
அவள் காதுக்கு நேரே குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "என் தம்பியை நல்லாதான்டி மயக்கி வச்சிருக்கே.. நீ போனதும் வீட்டையே ஒரு வழி பண்ணிட்டான்.. நீதான் வேணுமாம் அவனுக்கு".. என்று இதயத்தை குத்திக் கிழித்தவனின் வார்த்தைகளில் காதுகள் கூச வேதனையுடன் நிமிர்ந்தாள்..
அவள் பார்வையை புறக்கணித்தவன்.. "ப்ச்.. வேற வழியில்லாமதான் உன்னை வரவச்சிருக்கேன்.. ஒழுங்கா அவனை பாத்துக்கோ.. உன்கிட்டே தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு.. தானா வந்து மாட்டியிருக்கே.. அவ்ளோ சீக்கிரம் உன்னை விடமாட்டேன்.. கொஞ்சம் கொஞ்சமா உன்னை சித்ரவதை செய்யப்போறேன்.. நீ கொடுத்த வேதனையை வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுக்கப் போறேன்".. என்று பற்களைக் கடித்து வன்மத்துடன் கூற விரக்தியுடன் சிரித்துக் கொண்டாள் சித்ரா.. அவள் கதறுவாள்.. அஞ்சுவாள்.. மிரளுவாள் என நினைத்திருக்க எதற்கும் அசராமல் அவள் பூத்த புன்னகை அவனை இன்னும் சினமூட்டியது.. இருக்குடி உனக்கு.. மனதுக்குள் கருவினான்.. அவன் விழிகளில் கொஞ்சமும் காதல் இல்லை.. வன்மமும் கோபமும் மட்டுமே.. எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போனவள் மனமுடைந்து கண்ணீர் தழும்ப நின்றாள்..
"என்ன அவகிட்டே நின்னு ரகசியம் பேசறாரு".. ரஞ்சனியின் பார்வை உன்னிப்பாக அவர்கள் மேல் படிய.. சட்டென நிலை உணர்ந்து பின்னால் நகர்ந்தான் ஆரூரன்.. ஆல்ரைட்.. நீங்க ரெண்டு பேருமே இங்கே வேலை செய்யப்போறீங்க.. "மிஸ் வர்ஷினி நீங்க என் தம்பி விதுரனை பாத்துக்கோங்க.. ரஞ்சனி.. நீங்க என் அம்மாவை பாத்துக்கோங்க".. என்று கணீர் குரலில் ஆணை பிறப்பிக்க.. ரஞ்சனியின் முகம் அஷ்ட கோணலாக சுருங்கியது..
"சார்.. நான் உங்க தம்பியை பாத்துக்கிறேன்.. இவங்க வேணும்னா" .. என்று முடிக்கும்முன்.. மேஜையில் ஓங்கி தட்டினான் ஆரூரன்.. "எனக்கே ஆர்டர் போறீங்களா".. என்று அடிக்குரலில் உறும பயத்தில் முகம் வெளிறியது அவளுக்கு.. அவன் கத்திய காட்டு கத்தலில் அக்ஷயா விழித்து அழ ஆரம்பித்து விட அப்போதுதான் அந்த பிஞ்சு குழந்தையின் மேல் ஆரூரன் கவனம் பதிந்தது.. விழிகளை குழந்தையின் மேலே பதித்துக் கொண்டே "இஷ்டம் இருந்தா வேலை செய்யுங்க.. இல்ல தாராளமா வெளியில போகலாம்".. என்றான் ரஞ்சனியிடம்..
"அழகான விதுரனிடம் வேலை பார்க்கலாம் என்றால் இப்போது கைகால் விளங்காத கிழவியிடம் வேலை பார்க்க சொல்லிவிட்டானே.. அந்த கிழவிக்கு சேவை செய்யவா நான் வந்தேன்.. ஐயோ கடவுளே" என முகத்தை சுளித்தாள் ரஞ்சனி.. ஆனாலும் இந்த சம்பளம்.. இப்படி ஒரு முதலாளி.. இவ்வளவு வசதியாக தங்கும் இடம் எங்கே கிடைக்கும்.. பேசாம ஓகே சொல்லிடு ரஞ்சனி என மனசாட்சி பரிந்துரைக்க "எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல சார்.. நான் வேலை செய்யறேன்".. பணிவுடன் உரைத்தவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை ஆரூரன் .. பார்வை முழுவதும் சித்ரா மீது.. என்ன பார்வை இது.. அவன் பார்வை வீச்சை தாங்கவே முடியவில்லை அவளால்.. இரையை இரக்கமின்றி கொத்தித்தின்ன காத்திருக்கும் கழுகின் பார்வை.. புருவம் உயர்த்தி தன்னையே வைத்த கண் வாங்காது பார்க்கும் அவன் கூரிய பார்வையில் மையல் கொள்ளமுடிய வில்லை பாவையால்.. மாறாக அச்சம் தோன்றியது..
"நீங்க போகலாம்".. ரஞ்சனிக்கு உத்தரவிட ஆரூரனையும் சித்ராவையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் ரஞ்சனி.. தனியே விடப்பட்ட புள்ளிமானுக்கு வேர்த்து கொட்டியது அச்சத்தில்.. தலை நிமிரவே இல்லை அவள்.. "லுக் அட் மீ".. கர்ஜித்தான்.. விருட்டென நிமிர்ந்தாள்.. ரத்தப்பசை சுண்டிப்போனது முகத்தில்..
"கிருஷ்ணா மிஸ்.சித்ரா சொன்னான்.. அப்போ இந்த குழந்தை?".. தாடையை தடவியவன் விழிகள் அழுத்தமாக அச்சுவின் மேல் படிய.. "அக்கா குழந்தை" என்றாள்.. ஒரே வார்த்தையாக..
"ஓஹ்.. உன்கிட்டே குழந்தையை விட்டுட்டு உங்க அக்கா என்ன பண்றா" என்றான் குரலில் நக்கல் வழிந்தோட .. "அக்.. அக்கா இறந்துட்டா".. என்றவள் கண்கள் முணுக்கென கண்ணீரை சிந்த இரக்கமில்லாமல் அவளை பார்த்து உச் கொட்டி உதட்டைப் பிதுக்கினான் ஆரூரன்.. "எல்லாம் கர்மா.. செஞ்சதை திருப்பி அனுபவிச்சுதானே ஆகணும்.. ஆனா இன்னும் முடியல.. இன்னும் நிறைய அனுபவிக்கனும் பேபி".. என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் சித்ரா..
அவளை அழுத்தமாக பார்த்தபடியே அங்கிருந்த பெல்லை அழுத்த ஒரு பெண்மணி வேகமாக ஓடிவந்தாள்.. "குழந்தையை வாங்கிட்டு போய் சாப்பிட ஏதாவது கொடுங்க" என்று உத்தரவிட .. "குழந்தையை கொடுங்கம்மா".. என்றாள் அந்த பெண்.. தயக்கத்துடன் ஆரூரனை பார்த்தாள் சித்ரா.. "சீக்கிரம்".. அவன் உறும.. "கொடுங்கம்மா குழந்தையை நான் பாத்துக்கிறேன்".. அந்த பெண் பதற .. குழந்தையை கொடுத்துவிட்டாள் சித்ரா .. அந்தப்பெண் அச்சுவை தூக்கிச்செல்ல.. படபடப்புடன் அவளை பின்தொடரப் போனவளை "நில்லு".. என்ற கட்டளையில் அங்கேயே வேரூன்றி நிற்கச் செய்தான் ஆரூரன்..
"அவங்க குழந்தையை பாத்துப்பாங்க.. நீ நில்லு.. உன்கிட்டே கொஞ்சம் பேசணும்".. என்றான் அழுத்தமாக.. அச்சுவை திரும்பி திரும்பி பார்த்தபடி அவன் முன்வந்து நின்றாள் சித்ரா..
"உனக்கு இங்கே என்ன வேலை தெரியுமா".. பேண்ட் பாக்கெட்டில் கைநுழைத்து ஆழ்ந்த பார்வையுடன் கேட்க .. "விதுரனை பாத்துக்கணும்".. என்றாள் உள்ளடங்கிய குரலில்.. பெண்ணவளின் விழிகள் அவன் விழிகளை எதிர்கொள்ள மறுத்தது.. குற்ற உணர்ச்சியோ.. பயமோ.. ஏதோ ஒன்று அவளை அவஸ்தைக்குள்ளாக்கியது..
"அதுமட்டும் இல்ல.. பகல்ல அவனை பாத்துக்கோ.. ராத்திரி என்னை பாத்துக்கோ".. என்றான் கிறங்கிய விழிகளுடன்.. துடித்து நிமிர்ந்தாள் சித்ரா.. இதயம் பொசுங்கிப் போனது அவன் வார்த்தைகளில்.. அவள் வேதனையில் இன்பம் கண்டான் அவன்.. "என்ன பாக்கறே.. சுகம் கொடுக்கிற மெஷின் எனக்கும் வேணும்.. அந்த நாட்கள்ல உன்கூட இருந்த அனுபவங்கள் போதலை.. எனக்கும் கல்யாணம் ஆகப்போகுது இல்லையா.. பொண்டாட்டியை எப்படி சந்தோஷப் படுத்தறதுன்னு உன்கிட்டே இருந்து கத்துக்கப் போறேன்.. நீதான் எஸ்பர்ட் ஆச்சே.. எல்லாம் சொல்லிக்கொடு".. என்று கண்ணடிக்க.. அவன் பேச்சில் அமில வீச்சை கண்டவளாய் துடித்துப் போனாள்..
"இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்".. என்று வெகுண்டெழுந்து அங்கிருந்து நகரப் போக.. "நான் உன்கிட்டே அனுமதி கேட்டதாய் நினைவில்லையே".. என்றவன் அவள் புடவையை பிடித்து இழுக்க.. ஒருமாதமாய் மாற்றுடை இல்லாமல் துவைத்து அணிந்திருந்த புடவை "இதோ வந்தேன் அய்யா".. என அவன் கைகளுக்குள் சரண் புகுந்தது..
அம்மா.. என கீழே உருண்டு விழுந்தவளை தூக்கி நிறுத்தியவன்.. "உனக்கு தேவை பணமும் சுகமும்தானே.. அப்புறம் ஏன்டி.. பத்தினி மாதிரி நடிக்கிற.. என்றவன் விழிகள் அவளை இலஜ்ஜையின்றி மேய்ந்தது.. கூனிக்குறுகி போனவள் மார்பின் குறுக்கே இருகைகளால் மறைத்துக் கொள்ள.. உடம்பை கின்னுனு வைச்சிருக்கே.. ஏன் சுகம் கொடுக்க எவனும் கிடைக்கலியா.. கவலையை விடு.. நான் இருக்கேன்ல.. என அவள் நெஞ்சில் விஷ ஈட்டி பாய்ச்சி பெண்ணவளின் துடித்த இதழ்களை வன்மையாய் கவ்வியிருந்தான்..
தொடரும்..

Last edited: