• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 18

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
68
அவள் கரத்தைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வர..

"ஏன் டாக்டர் இப்படி இழுக்கறீங்க கை வலிக்குது விடுங்க..!" என்றபடியே திமிறி கொண்டு அவனிடமிருந்து விடுபட முடியாமல் வேகமாக பின் தொடர்ந்தாள் தேம்பாவணி..

அவள் வார்த்தைகளை சட்டை செய்யாமல் நிற்க வேண்டிய இடம் வந்த பிறகே அவள் கையை விடுவித்தான் வருண்..

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு..
"இங்க பாரு.. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ..! இனி நீ உங்க வீட்டுக்கு போக வேண்டாம்.." என்றதும் தேம்பாவின் கண்கள் விரிந்தன..

"அ..‌ அதெப்படி வீட்டுக்கு போகாம இருக்க முடியும்.. அப்பா என்னை தேடுவார்.. சத்யா.."

"ஏய்ய்ய்..! இப்பவும் உன் அப்பனையும் அந்த பொறுக்கி நாயையும் காப்பாத்தணும்னு நினைக்காதே..! எல்லாம் எனக்கு தெரியும்.." என்றான் கோபத்துடன்

இன்னும் அதிகமாய் அவள் கண்களில் அதிர்ச்சி..

"என்ன தெரியும்..!?"

"எல்லாமே..! ஓடிப்போன உன் அம்மாவை பழிவாங்க.. உன் அப்பா உன்னை கொடுமை படுத்தினது.. அந்த சத்யா ஒரு ஹோமோ செக்ஸுவல்.. ஏதோ ஒரு கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு உன்னை அடிச்சு காயப்படுத்தினது.. எல்லாம் எனக்கு தெரியும்.."

தேம்பாவணி அவன் விழி பார்க்க முடியாமல் தடுமாறினாள்..

"அதுமட்டுமில்ல நேத்து ஜூஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்து உன்னை அவன் ஃப்ரெண்டுக்கு தார வார்க்க பார்த்திருக்கான்.. அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாம தானே எனக்கு போன் பண்ணி வர சொன்ன..?"

தேம்பாவணியின் கண்களிலிருந்து முனுக்கென கண்ணீர் வழிந்தது..

"இதுக்கப்புறமும் உன் அப்பனையும் அந்த ராஸ்கலையும் நம்பி உன்னை எப்படி திருப்பி அனுப்புவேன்னு நெனச்ச..!"

அவள் திணறலோடு பார்வையை திருப்பிக் கொள்ள.

"இங்க பாரு தேம்ஸ்.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல.. வாயை திறந்து ஒரு ஸ்டேட்மென்ட் கொடு.. அவங்க ரெண்டு பேரையும் உள்ள தள்ளி ஆயுள் முழுக்க களி தின்ன வைக்க வேண்டியது என் பொறுப்பு..!" என்றான் நிதானமான குரலில்..

"வேண்டாம்..! அப்பாவ எதுவும் செய்ய வேண்டாம்.. அவர் தப்பானவரா இருந்தாலும் வாழ்க்கையில எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம் அவர் மட்டும்தான்.. அவரும் இல்லாம போனா நான் அனாதையாகிடுவேன்..! ப்ளீஸ் அவர் எதுவும் செஞ்சுடாதீங்க.."

அவள் பேச்சில் வருணிற்கு ஆத்திரம் பொங்கியது.

"அப்படியே ஓங்கி அறைஞ்சேன்னா..! இது கூட ஒரு மாதிரி டிராமா பாண்டிங் (trauma bonding).. தன்னை துன்புறுத்துறவங்களையே நேசிக்கிற பரிதாபமான நிலை.. இப்படிப்பட்ட சைக்கோத்தனமான அப்பாவை உறவுன்னு சொல்லிக்கறதை விட நீ யாருமில்லாத அனாதைன்னு சொல்லிக்கறது எவ்வளவோ பெட்டர்.."

கோபத்தில் அவன் படபடவென பொரிந்ததில் தேம்பாவணி நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள்.. அவள் பார்வையில் இறுதியாக தான் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன்..

"ஐ அம் சாரி.. நான் அப்படி மீன் பண்ணல..‌" என்பதற்குள்..

"தட்ஸ் ஓகே.." என சிரிக்க முயன்றாள் அவள்..!

இழுத்து மூச்சு விட்டவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு..‌

"இங்க பாரு தேம்பா..! உன் அப்பா சத்யாவோட பிரச்சனையை அப்புறமா பாத்துக்கலாம்.. இப்போதைக்கு அவங்களால உனக்கு எந்த ட்ரபிளும் வராது.. நீ எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா காலேஜ் போயிட்டு வரலாம்.. நீ மெண்டலி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க..! உன் மனச தெளிவுபடுத்தி உன் ஆழ்மன பயங்களை போக்கி..‌ இங்கருந்து சந்தோஷமா அனுப்பி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.." என்றான் பொறுமையாக..

"அனுப்பி வைக்கப் போறீங்களா..?" தேம்பாவணி கண்கள் சுருக்கினாள்..

"எஸ்..! நீ டிப்ரஷன்ல இருந்து வெளியே வந்து.. எல்லாம் சரியான பிறகு.. தெளிவா முடிவெடுக்கிற தைரியம் உனக்கு வந்துடும்.. அப்புறம் உன் வழியை பார்த்து நீ போயிட்டே இருக்கலாம்.."

"தட் மீன்ஸ்..? என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்..! மறுபடியும் என் அப்பாகிட்டயே திரும்பி போகணும்னு சொல்ல வரீங்களா..?"

"அப்படி சொல்ல வரல..‌ கண்டிப்பா உனக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தர வேண்டிய பொறுப்பு என்னோடது.. நீ மேற்கொண்டு படிக்கலாம்.. வேலைக்கு போகலாம்..! என்ன வேணாலும் செய்யலாம்.. ஆனா முதல்ல நீ இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வரணும்..!"

"அப்ப இந்த வீடு எனக்கு தற்காலிகமா அடைக்கலம் தரக்கூடிய புகலிடம் அப்படித்தானே..!"

"ஏய்..‌ நான் அப்படி சொல்ல வரல.. நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்க இருக்கலாம்..!"

தேம்பாவணி கசப்பாய் புன்னகைத்தாள்..

"எத்தனை நாள் வேணுமானாலும்ன்னு சொல்லும்போதே தெரிஞ்சுருச்சு இது எனக்கு தற்காலிக இருப்பிடம்னு..‌ ஒகே..! கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்னு நான் யோசிக்கறேன்.." தன்னை இயல்பாக்கி கொண்டு தோள்களை குலுக்கினாள் அவள்..!

"நானும் அதையேத்தான் சொல்றேன் மனச போட்டு குழப்பிக்காதே..‌ எதைப் பத்தியும் யோசிக்காம சந்தோஷமா இரு..! இந்த வீட்ல உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.."

"ம்ம்..! இந்த வீடு பிரச்சனையே இல்லாத சந்தோஷமான வாழ்க்கையை தந்துட்டா இங்கேயே இருக்கணும்னு எனக்கு தோணுமே..!" மனசுக்குள் தோன்றிய வார்த்தைகளை வெளியே சொல்லாமல் விழுங்கிக் கொண்டாள்..

"அ.. அப்புறம் ஏன் கல்யாணம் ஆகலன்னு பொய் சொல்ல சொன்னீங்க..!" பேச்சை மாற்றினாள்..

"அதை ஒரு கல்யாணமாவே நான் ஏத்துக்கல.. அப்படி ஒருத்தன் உனக்கு தேவையா.? பேசாம அவனை டைவர்ஸ் பண்ணிட்டு உன் வாழ்க்கை வாழப் பாரு தேம்பா..!" என்றான் கொதிப்பாக..

"அதெல்லாம் பெரிய ப்ராசஸ்.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தைரியம் இல்ல டாக்டர் சார்.."

"அதுக்குத்தானே நான் இருக்கேன்..! நிச்சயமா இந்த பிரச்சினையிலிருந்து உன்னை நான் வெளியே கொண்டு வந்துடுவேன் நம்பு..!"

தேம்பாவணி மௌனமாக சிரித்தாள்..

"தேம்ஸ்..! உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.. எதுக்காக மத்தவங்க கிட்ட இல்லாத அன்பை இருக்கிற மாதிரி எக்சாஜுரேட் பண்ணி சொல்ற..?"

"புரியலையே..?"

தலை சாய்த்து கண்கள் இடுங்கினாள் தேம்பாவணி..

"ஐ மீன்.. இப்படிப்பட்ட ஒரு அப்பனை விட்டுக் கொடுக்காம என் அப்பா ரொம்ப நல்லவர், வல்லவர் அன்பானவர்ன்னு ஏன் இல்லாத கதையை இட்டுக்கட்டி சொல்றேன்னு கேட்கிறேன்..‌ டைனிங் டேபிள்ல நீ பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன்..!"

"இல்லாத விஷயத்தை கற்பனையா திரிச்சி சொல்றதுல ஒரு சுகம்.."

வருண் அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"நான் அப்படித்தான்..! எனக்கு கிடைக்காத உறவுகளையும் அன்பையும் நினைச்சு ஏங்கி அழ மாட்டேன்..! ஒருவேளை அந்த உறவுகள் என்கிட்ட பாசமா இருந்தா.. எனக்கும் அப்படி ஒரு அழகான வாழ்க்கை கிடைச்சிருந்தா எப்படி இருக்கும்னு நானே ஒரு கற்பனை கதையை உருவாக்கி மத்தவங்க கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டுக்குவேன்..!"

வருணின் மனம் உருகியதில் முகம் கனிந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

"நான் எக்சாஜுரேட் பண்ணி சொன்னது என் அப்பாவை பத்தி இல்ல..! ஒரு அப்பான்னா எப்படி இருக்கணும்னு எனக்குள்ள இருக்கற ஆசையைத்தான் பத்தி..! எப்பவுமே ஒரு அப்பாவா ஒரு தோழனா..‌ ஒரு வழிகாட்டியா என் கூடவே இருந்தது என் பப்லு மட்டும் தான்.. இப்ப அவனும் மறைஞ்சு போயிட்டான்.." விரக்தியாக புன்னகைத்தாள்..

"ஏன் அப்படி நினைக்கிற.. நான்தான் என்னை உன் ஃபிரண்டா ஏத்துக்கோன்னு சொன்னேனே..!"

வேகமாக தலையசைத்தாள் தேம்பாவணி..

"உங்களுக்கு புரியல டாக்டர் சார்.. என் எதிர்பார்ப்புகளை உங்களால் பூர்த்தி செய்யவே முடியாது.. எனக்கு தேவை அபரிமிதமான அன்பு.. உங்கள மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு என்னோட அப்ரோச் டாக்ஸிக் பிஹேவியரா தோணும்..! நான் தான் சொன்னேனே..! ஒரு சாதாரண மனுஷனால எனக்கு நண்பனா இருக்கவே முடியாது.."

"என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும் தேம்பா..! ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் கொடேன்..!' என்றான் மென்மையான குரலில்..

இழுத்து மூச்சுவிட்டு.. "சரி பார்ப்போம்" என்றாள் அவள்..

அடுத்து மூவருமாய் ஷாப்பிங் புறப்பட்டார்கள்..!

திலோத்தமா வருணோடு முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள தேம்பாவணி உற்சாகமாய் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு..

மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்..

பாடலை ஒன்ஸ்மோர் போட சொல்லி கேட்டு தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

'எவ்ளோ ரொமான்டிக்கான பாட்டு.. எனக்கு தோணுற பீலிங் கூட இவங்களுக்கு வரலையா.. ஏன் ரெண்டு பேரும் நவகிரகம் மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.. ஒரு கண்ஜாடை இல்லை.. காதல் சிரிப்பு இல்லை.. ஏதாவது சண்டையா இருக்குமோ..!" அவள் குட்டி மூளை ஏதேதோ யோசித்தபடி பாட்டை வாயோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தது..

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா..

பாடலை முணுமுணுக்கும் போது அவள் பார்வை வருண் பக்கம் ஏன் சென்றதோ தெரியவில்லை..

செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ..

இந்த வரிகளில் வருண் கண்ணாடி வழியே அவளை பார்த்தான்..

திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.. தாப சலனத்தோடு பார்த்துக் கொள்ளவில்லை.. பாடல் வரிகளில் தற்செயலாக இடம்பெயர்ந்து விட்டன இருவரின் கண்களும்..

ஒரு பெரிய மாலில் காரை நிறுத்தியிருந்தான்..

திலோத்தமா முன்னே செல்ல.. பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்ற வருணோடு ஒட்டி அவன் காதில் கிசுகிசுத்தாள் தேம்பாவணி..

"உங்க வைஃப் உங்க மேல கோவமா இருக்காங்களா டாக்டர் சார்..?"

"ஏன் அப்படி கேக்கற..!"

"சிரிக்கவே மாட்டேங்கிறாங்களே..! முகத்தை ஏன் இப்படி உர்ருனு வச்சிருக்காங்க..?"

"அது என் பிரச்சனை.. அவ கோவமா இருந்தாலும் எப்படி சமாதானப்படுத்தணுங்கற வித்தை எனக்கு தெரியும்..‌ நீ உன் வேலைய மட்டும் பாரு..!" என்றதும் உதட்டை சுழித்துக் கொண்டு அவனை விட்டு விலகி முன்னே நடந்தாள்‌ தேம்பாவணி..

இதுதான் வருண்..! கலகலப்பான பேர்வழிதான்.. ஆனாலும் யாரையும் கோட்டை தாண்டி தன்னை நெருங்க விட்டதில்லை..! அவனுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவனுக்கு மட்டுமே சொந்தமானது..!

வீட்டு உபயோகத்திற்கு.. கல்லூரி செல்லும் போது அணிந்து கொள்ள.. என பார்த்து தேர்வு செய்து உடைகளை வாங்கிக் கொண்டாள் தேம்பாவணி..

திலோத்தமா புடவை செக்ஷனில் காண்பவை யாவுமே தேன் என்ற ரீதியில் வரிசையாக புடவைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க.!

"இந்த லெமன் எல்லோ உங்களுக்கு நல்லாவே சூட் ஆகும்.." என்று தேம்பாவணி எடுத்து தந்த புடவையை அலட்சியமாக தூக்கிப் போட்டவள்.. "நல்லா இல்ல எனக்கு பிடிக்கல..!" என்று விட்டு வேறு புடவையை எடுக்க சென்றாள்..

"சார் நீங்க எனக்காக செலவு பண்ண வேண்டாம்.. என்னோட டெபிட் கார்டு யூஸ் பண்ணிக்கறேன்.. இனிமேதான் யாரும் என்ன கேள்வி கேட்க முடியாதே..!" கை நிறைய ஆடைகளோடு அவனிடம் வந்து நின்றாள் தேம்பாவணி..

"அதை நீ தனியா போகும்போது யூஸ் பண்ணிக்கோ.. இப்பதான் நான் உன்கூட இருக்கேனே..! நான் பாத்துக்கறேன் நீ போய் தேவையானதை வாங்கிக்க..!"

"கணக்குல வச்சுக்கோங்க சார் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடுவேன்.. யாரும் எனக்கொன்னும் ஓசியில செய்ய வேண்டாம்.. உங்க டாக்டர் பீஸ் முதற்கொண்டு எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுவேன்.."

"கண்டிப்பா..! எல்லாத்தையும் எழுதி வைச்சி மொத்தமா வசூல் பண்ணிக்கறேன்.." நக்கல் புன்னகையோடு அவனும் ஈடு கொடுத்து பேச தேம்பாவணியின் முகம் சுருங்கியது..

"ஃபிரண்டுன்னு சொன்னீங்க.. இப்படித்தான் கணக்கு போட்டு வாங்குவாங்களா..?"

"நானா கேட்டேன்..‌ நீதானே வாய்க்கு வந்தபடி திமிரா பேசின..!"

"ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்..! பரவாயில்ல நமக்குள்ள என்ன..‌ நான் உன் ஃபிரண்டுதானே நான் வாங்கி தராம வேற யார் வாங்கி தருவாங்க.. இப்படித்தானே நீங்க சொல்லி இருக்கணும்..!"

"அப்படி நினைச்சுதானே எல்லாத்தையும் நான் வாங்கி தரேன்.. நீ உன் டெபிட் கார்டு யூஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேன்..?"

"ஆனாலும் வாயால நான் சொன்ன மாதிரி சொல்லலையே..‌ அப்படி சொன்னாதானே எனக்கு சந்தோஷம்.."

இதழ் குவித்து ஊதினான் வருண்..!

"சரி இப்ப சொல்றேன்..! நான் உன் ஃபிரண்டுதானே.. உனக்கு நான் செய்யாம வேற யாரு செய்வாங்க.. போ.. போய் என்ன வேணுமோ வாங்கிக்கோ..!" அவள் கன்னத்தில் தட்டி சிரிக்க.. முகம் பூவாய் மலர்ந்து உற்சாகமாய் அடுத்த உடையை எடுப்பதற்காக சென்றாள் தேம்பாவணி..

"திலோத்தமா..!" பிடரியை வருடியபடி ஒரு மாதிரியான தயக்கத்துடன் அவள் பக்கத்தில் வந்து நின்றான் வருண்..

"இங்க பாருங்க.. இதுக்கெல்லாம் நான் பே பண்ண முடியாது.. நான் எடுக்கறதுக்கும் நீங்கதான் பணம் கட்டணும்.." கறாராக பேசியவளை சலிப்பாக பார்த்தான்..

"ஆமா உனக்கு தண்டம் அழத்தானே நான் இருக்கேன்..! மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. அந்த பொண்ணுகிட்ட எல்லாம் வாங்கியாச்சானு ஒருவாட்டி செக் பண்ணிக்க சொல்லேன்..!" என்றான் குரலை செருமிக் கொண்டு..

"ஏன்.. நீங்களே போய் சொல்லுங்க.. நான் என்ன அவளுக்கு மீடியேட்டரா.. இல்ல அசிஸ்டன்ட்டா.. நான் எதுக்காக போய் அவளை கேக்கணும்.."

"ப்ச்..! முக்கியமான திங்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டாளான்னு கொஞ்சம் கேளு.. எதையாவது மறந்திருக்க போறா..! நீ பொண்ணுதானே.. இன்னொரு பொண்ணுக்கு என்னென்ன வேணும் எதை வாங்கணும்னு உனக்கு தெரியும் இல்ல..!" சொல்லா முடியாமல் மென்று விழுங்கினான்..

"எனக்கென்ன வாங்கணும்னு மட்டும்தான் தெரியும்.. மத்தவங்களுக்கு எது தேவைன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..! ஒரு நிமிஷம்.. இந்த புடவை கலர் ஒகேவா.. இதை எடுத்துக்கவா.. அவள் முடிப்பதற்குள் பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றிருந்தான் வருண்..

அந்தப் பக்கமாக முயல் குட்டி போல் ஓடிக் கொண்டிருந்த தேம்பாவணியை நிறுத்தினான்..

"எல்லாம் வாங்கிட்டியா..?"

"ம்ம்.. வாங்கியாச்சு.. இந்த டிரஸ் மட்டும் கரெக்டா இருக்கான்னு தெரியல.. போட்டு பாக்கணும்.."

"ப்ச்.. அதெல்லாம் இருக்கட்டும்.. முக்கியமானது வாங்கினியா..?"

"என்ன முக்கியமானது..?"

"ஏய்..! இடியட்.. இன்னர் கார்மெண்ட்ஸ் வாங்கினியா..‌ இதுக்காக உன்னை திரும்ப தனியா அழைச்சிட்டு வர முடியாது.."

"ஆமா இல்ல..‌ மறந்துட்டேன்..! இதோ போய் வாங்கிக்கறேன்..!" தலையிலடித்துக் கொண்டு மீண்டும் அந்த செக்ஷனுக்குள் ஓடினாள் தேம்பாவணி..

பெண்கள் செக்ஷனை சுற்றி சுற்றி வர அவனுக்கும் போர் அடிக்கவே ஓர் இடத்தில் நின்றுக்கொண்டு அலைபேசியில் மூழ்கினான்..

"சா.. சார்.." கிசுகிசுப்பாக ஒரு குரல்..

சுற்றி சுற்றி பார்த்தவன்.. தான் நின்று கொண்டிருப்பது ஒரு ட்ரையல் ரூமுக்கு பக்கத்தில் என்பதை உணர்ந்து திடுக்கிட்டு தள்ளி நிற்க.. கதவை லேசாக திறந்து கொண்டு தலையை வெளியே நீட்டினாள் தேம்பாவணி..

"திலோ அக்கா எங்க சார்..?"

"அவ எங்க போய் தொலைஞ்சாளோ..!"

"என்ன..?"

"எங்க போனான்னு தெரியல..‌ ஏன் கேக்கற..!"

"சுடிதார் சிப் ஸ்ட்ரக் ஆகிடுச்சு..! அவங்கள வந்து ஹெல்ப் பண்ண சொல்லுங்க.."

"அவதான் இங்க இல்லையே நான் எங்க போய் அவளை தேடுறது..!"

"வேற யாராவது சேல்ஸ் கேர்ள் இருந்தா கூப்பிடுங்க..!" என்றதும் அந்த செக்ஷன் முழுக்க கண்களை சுழல விட்டான் வருண்..!

"இங்க யாருமே இல்லையே.. நான் வேணும்னா கீழ போய் யாரையாவது கூட்டிட்டு வரட்டுமா.."

"எவ்வளவு நேரம் இந்த சின்ன ரூமுக்குள்ள நிக்கறது.. எனக்கு கிளாஸ்ட்ரோஃபோபிக் வந்துரும் போலிருக்கு.."

"இப்ப என்ன பண்ண சொல்ற..?"

"நீங்க ஹெல்ப் பண்ணுங்க சார் ப்ளீஸ்.."

"என்னது நானா..?" அதிர்ந்தான் அவன்..

"நீங்கதானே சொன்னீங்க.. நான் ஒரு டாக்டர்.. எனக்கு ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லைன்னு.."

"ஏய் லூசு அது வேற இது வேற..!"

"எல்லாம் ஒன்னுதான்.. ஆப்ரேஷன் பண்ணும் போது பேஷண்ட்டோட டிரஸ் ரிமூவ் பண்ண மாட்டீங்களா..?"

"அடக்கடவுளே நான் ஒன்னும் சர்ஜன் இல்லை.. சைக்கியாட்ரிஸ்ட்..!"

"பரவாயில்லை டாக்டர்.. ஆபத்துக்கு பாவமில்ல.. ப்ளீஸ் பாதியில நிக்குது.. என்னால இப்ப வெளியே வரவும் முடியாது.. ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்."

"இரு கத்தாத.. வந்து தொலையறேன்..!"

அவன் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள.. அந்நேரம் பார்த்து அந்தப் பக்கமாய் வந்த பணிப்பெண் ஒருத்தி வாயில் கை வைத்து கண்களை விரித்தவள் பிறகு வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்து ஓடிப்போய் கீழ் தளத்திலிருந்த தன் தோழியிடம் ஏதோ கிசுகிசுத்தாள்..

"இரு நான் கண்ண மூடிக்கறேன்.."

"இல்ல வேண்டாம்.. கண்ணு திறந்துகிட்டே ஜிப் போட்டு விடுங்க..!"

"அது தப்பு.."

"இது ரொம்ப தப்பு.." அவள் சொன்ன பிறகுதான் கண்ணை திறந்து பார்த்தான்.. அவன் விரல்கள் ஜிப்பை தேடுகிறேன் பேர்வழியென தேம்பாவணியின் இடையில் பதிந்திருக்க..

"ஓஓ.. ஐ அம் சாரி.." என்றவன் சட்டென அவள் சுடிதார் ஜிப்பை மேல் நோக்கி இழுத்து விட்டான்..

"டிரஸ் போட்டு பார்க்க வேண்டாம்.. சைஸ் சரியா இல்லனா இன்னொரு நாள் வந்து மாத்திக்கலாம்.. இங்க ரிட்டன் எடுத்துப்பாங்க.."

"ஓகே..!" மெதுவாக தலையசைத்தாள்..

"என்ன பர்ஃப்யூம் யூஸ் பண்ற..!"

"நான் எந்த பர்ஃப்யூமும் யூஸ் பண்ணலையே..! குளிச்சிட்டு அப்படியே உங்க கூட வந்துட்டேன்.."

"அப்படியா.. பேபி சோப் வாசனை.. இல்லைனா ரூம் பிரஷ்னர் ஸ்மெல்லா கூட இருக்கும்.. பட் குட் பிரக்ரன்ஸ்..!" என்றபடி பாக்கெட்டில் கை நுழைத்து அந்த சின்ன அறையில் அவளை உரசியபடி அப்படியே நின்றிருந்தவன் தேம்பாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..‌ போகலாமா..!" தேம்பாவணி தடுமாற்றத்துடன் கண்களை விரிக்க.. சட்டென தெளிந்தவன்..

"ஓ..‌ ஐ அம் சாரி..!" கதவை திறந்து கொண்டு வெளியே வந்து.. உதடு குவித்து கண்களை விரித்து பெரிதாக மூச்சு விட்டு

Varun please dont Go with the flow..

மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jul 16, 2025
Messages
27
அடப்பாவி வருணு இப்போ மட்டும் go with a flow வேண்டாமா 😈... அப்பாவி பிள்ளையை சங்கட படுத்தாதே😠 .... தேம்பா ஆர்மி சும்மா இருக்க மாட்டோம் பார்த்து நடந்துக்கோப்பா😉💖
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
வரூண் டோன்ட் கோ வித் தி ஃப்ளோவா சரிதான் சரிதான் பயபுள்ள சிக்கிருச்சு ஆனால் வைத்தியம் நீ இன்னோரு டாக்டர தேடும் அளவுக்கு போய்டாத தம்பி முக்கியமா வீட்ல இருக்கவங்க வாயில் அவலாகிடாத வருணே எஸ்கேப் ஆயிடு
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50
அவள் கரத்தைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்து வர..

"ஏன் டாக்டர் இப்படி இழுக்கறீங்க கை வலிக்குது விடுங்க..!" என்றபடியே திமிறி கொண்டு அவனிடமிருந்து விடுபட முடியாமல் வேகமாக பின் தொடர்ந்தாள் தேம்பாவணி..

அவள் வார்த்தைகளை சட்டை செய்யாமல் நிற்க வேண்டிய இடம் வந்த பிறகே அவள் கையை விடுவித்தான் வருண்..

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு..
"இங்க பாரு.. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ..! இனி நீ உங்க வீட்டுக்கு போக வேண்டாம்.." என்றதும் அவள் கண்கள் விரிந்தன..

"அ..‌ அதெப்படி வீட்டுக்கு போகாம இருக்க முடியும்.. அப்பா என்னை தேடுவார்.. சத்யா.."

"ஏய்ய்ய்..! இப்பவும் உன் அப்பனையும் அந்த பொறுக்கி நாயையும் காப்பாத்தணும்னு நினைக்காதே..! எல்லாம் எனக்கு தெரியும்.." என்றான் கோபத்துடன்

இன்னும் அதிகமாய் அவள் கண்களில் அதிர்ச்சி..

"என்ன தெரியும்..!?"

"எல்லாமே.. ஓடிப்போன உன் அம்மாவை பழிவாங்க.. உன் அப்பா உன்னை கொடுமை படுத்தினது.. அந்த சத்யா ஒரு ஹோமோ செக்ஸுவல்.. ஏதோ ஒரு கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு உன்னை அடிச்சு காயப்படுத்தினது.. எல்லாம் எனக்கு தெரியும்.."

தேம்பாவணி அவன் விழி பார்க்க முடியாமல் தடுமாறினாள்..

"அதுமட்டுமில்ல நேத்து ஜூஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்து உன்னை அவன் ஃப்ரெண்டுக்கு தார வார்க்க பார்த்திருக்கான்.. அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாம தானே எனக்கு போன் வர சொன்ன..?"

தேம்பாவணியின் கண்களிலிருந்து முனுக்கென கண்ணீர் வழிந்தது..

"இதுக்கப்புறமும் உன் அப்பனையும் அந்த ராஸ்கலையும் நம்பி உன்னை எப்படி திருப்பி அனுப்புவேன்னு நெனச்ச..!"

அவள் திணறலோடு பார்வையை திருப்பிக் கொள்ள.

"இங்க பாரு தேம்ஸ்.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல.. வாயை திறந்து ஒரு ஸ்டேட்மென்ட் கொடு.. அவங்க ரெண்டு பேரையும் உள்ள தள்ளி ஆயுள் முழுக்க களி தின்ன வைக்க வேண்டியது என் பொறுப்பு..!" என்றான் நிதானமான குரலில்..

"வேண்டாம்..! அப்பாவ எதுவும் செய்ய வேண்டாம்.. அவர் தப்பானவரா இருந்தாலும் வாழ்க்கையில எனக்குன்னு இருக்கற ஒரே சொந்தம் அவர் மட்டும்தான்.. அவரும் இல்லாம போனா நான் அனாதையாகிடுவேன்..! ப்ளீஸ் அவர் எதுவும் செஞ்சுடாதீங்க.."

அவள் பேச்சில் வருணிற்கு ஆத்திரம் பொங்கியது.

"அப்படியே ஓங்கி அறைஞ்சேன்னா..! இது கூட ஒரு மாதிரி டிராமா பாண்டிங் (trauma bonding).. தன்னை துன்புறுத்துறவங்களையே நேசிக்கிற பரிதாபமான நிலை.. இப்படிப்பட்ட சைக்கோத்தனமான அப்பாவை உறவுன்னு சொல்லிக்கறதை விட நீ யாருமில்லாத அனாதைன்னு சொல்லிக்கறது எவ்வளவோ பெட்டர்.."

கோபத்தில் அவன் படபடவென பொரிந்ததில் தேம்பாவணி நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள்.. அவள் பார்வையில் இறுதியாக தான் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவன்..

"ஐ அம் சாரி.. நான் அப்படி மீன் பண்ணல..‌" என்பதற்குள்..

"தட்ஸ் ஓகே.." என சிரித்தாள் தேம்பாவணி..!

இழுத்து மூச்சு விட்டவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு..‌

"இங்க பாரு தேம்பா..! உன் அப்பா சத்யாவோட பிரச்சனையை அப்புறமா பாத்துக்கலாம்.. இப்போதைக்கு அவங்களால உனக்கு எந்த ட்ரபிளும் வராது.. நீ எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா காலேஜ் போயிட்டு வரலாம்.. நீ மெண்டலி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்க..! உன் மனச தெளிவுபடுத்தி உன் ஆழ்மன பயங்களை போக்கி..‌ இங்கருந்து சந்தோஷமா அனுப்பி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு.." என்றான் பொறுமையாக..

"அனுப்பி வைக்கப் போறீங்களா..?" தேம்பாவணி கண்கள் சுருக்கினாள்..

"எஸ்..! நீ டிப்ரஷன்ல இருந்து வெளியே வந்து.. எல்லாம் சரியான பிறகு.. தெளிவா முடிவெடுக்கிற தைரியம் உனக்கு வந்துடும்.. அப்புறம் உன் வழியை பார்த்துகிட்டு நீ போயிட்டே இருக்கலாம்.."

"தட் மீன்ஸ்..? என்ன சொல்ல வர்றீங்க டாக்டர்..! மறுபடியும் என் அப்பா கிட்டயே திரும்பி போகணும்னு சொல்ல வரீங்களா..?"

"அப்படி சொல்ல வரல..‌ கண்டிப்பா உனக்கொரு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தர வேண்டிய பொறுப்பு என்னோடது.. நீ மேற்கொண்டு படிக்கலாம்.. வேலைக்கு போகலாம்..! என்ன வேணாலும் செய்யலாம்.. ஆனா முதல்ல நீ இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே வரணும்..!"

"அப்ப இந்த வீடு எனக்கு தற்காலிகமா அடைக்கலம் தரக்கூடிய புகலிடம் அப்படித்தானே..!"

"ஏய்..‌ நான் அப்படி சொல்ல வரல.. நீ எத்தனை நாள் வேணுமானாலும் இங்க இருக்கலாம்..!"

தேம்பாவணி கசப்பாய் புன்னகைத்தாள்..

"எத்தனை நாள் வேணுமானாலும்ன்னு சொல்லும்போதே தெரிஞ்சுருச்சு இது எனக்கு தற்காலிக இருப்பிடம்னு..‌ ஒகே..! கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டு அடுத்து என்ன செய்யணும்னு நான் யோசிக்கறேன்.." தன்னை இயல்பாக்கி கொண்டு தோள்களை குலுக்கினாள் அவள்..!

"நானும் அதையேத்தான் சொல்றேன் மனச போட்டு குழப்பிக்காதே..‌ எதைப் பத்தியும் யோசிக்காம சந்தோஷமா இரு..! இந்த வீட்ல உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.."

"ம்ம்..! இந்த வீடு பிரச்சனையே இல்லாத சந்தோஷமான வாழ்க்கையை தந்துட்டா இங்கேயே இருக்கணும்னு எனக்கு தோணுமே..!" மனசுக்குள் தோன்றிய வார்த்தைகளை வெளியே சொல்லாமல் விழுங்கிக் கொண்டாள்..

"அ.. அப்புறம் ஏன் கல்யாணம் ஆகலன்னு பொய் சொல்ல சொன்னீங்க..!" பேச்சை மாற்றினாள்..

"அதை ஒரு கல்யாணமாவே நான் ஏத்துக்கல.. அப்படி ஒருத்தன் உனக்கு தேவையா.? பேசாம அவனை டைவர்ஸ் பண்ணிட்டு உன் வாழ்க்கை வாழப் பாரு தேம்பா..!" என்றான் கொதிப்பாக..

"அதெல்லாம் பெரிய ப்ராசஸ்.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கிற அளவுக்கெல்லாம் எனக்கு தைரியம் இல்ல டாக்டர் சார்.."

"அதுக்குத்தானே நான் இருக்கேன்..! நிச்சயமா இந்த பிரச்சினையிலிருந்து உன்னை நான் வெளியே கொண்டு வந்துடுவேன் நம்பு..!"

தேம்பாவணி மௌனமாக சிரித்தாள்..

"தேம்ஸ்..! உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.. எதுக்காக மத்தவங்க கிட்ட இல்லாத அன்பை இருக்கிற மாதிரி எக்சாஜுரேட் பண்ணி சொல்ற..?"

"புரியலையே..?"

தலை சாய்த்து கண்கள் இடுங்கினாள் தேம்பாவணி..

"ஐ மீன்.. இப்படிப்பட்ட ஒரு அப்பனை விட்டுக் கொடுக்காம என் அப்பா ரொம்ப நல்லவர், வல்லவர் அன்பானவர்ன்னு ஏன் இல்லாத கதையை இட்டுக்கட்டி சொல்றேன்னு கேட்கிறேன்..‌ டைனிங் டேபிள்ல நீ பேசிட்டு இருந்ததை நான் கேட்டுட்டேன்..!"

"இல்லாத விஷயத்தை கற்பனையா திரிச்சி சொல்றதுல ஒரு சுகம்.."

வருண் அவளை ஆழ்ந்து பார்த்தான்..

"நான் அப்படித்தான்..! எனக்கு கிடைக்காத உறவுகளையும் அன்பையும் நினைச்சு ஏங்கி அழ மாட்டேன்..! ஒருவேளை அந்த உறவுகள் என்கிட்ட பாசமா இருந்தா.. எனக்கும் அப்படி ஒரு அழகான வாழ்க்கை கிடைச்சிருந்தா எப்படி இருக்கும்னு நானே ஒரு கற்பனை கதையை உருவாக்கி மத்தவங்க கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டுக்குவேன்..!"

வருணின் மனம் உருகியதில் முகம் கனிந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்..

"நான் எக்சாஜுரேட் பண்ணி சொன்னது என் அப்பாவை பத்தி இல்ல..! ஒரு அப்பான்னா எப்படி இருக்கணும்னு எனக்குள்ள இருக்கற ஆசையைத்தான் பத்தி..! எப்பவுமே ஒரு அப்பாவா ஒரு தோழனா..‌ ஒரு வழிகாட்டியா என் கூடவே இருந்தது என் பப்லு மட்டும் தான்.. இப்ப அவனும் மறைஞ்சு போயிட்டான்.." விரக்தியாக புன்னகைத்தாள்..

"ஏன் அப்படி நினைக்கிற.. நான்தான் என்னை உன் ஃபிரண்டா ஏத்துக்கோன்னு சொன்னேனே..!"

வேகமாக தலையசைத்தாள் தேம்பாவணி..

"உங்களுக்கு புரியல டாக்டர் சார்.. என் எதிர்பார்ப்புகளை உங்களால் பூர்த்தி செய்யவே முடியாது.. எனக்கு தேவை அபரிமிதமான அன்பு.. உங்கள மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு என்னோட அப்ரோச் டாக்ஸிக் பிஹேவியரா தோணும்..! நான் தான் சொன்னேனே..! ஒரு சாதாரண மனுஷனால எனக்கு நண்பனா இருக்கவே முடியாது.."

"என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும் தெரியும் தேம்பா..! ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் கொடேன்..!' என்றான் மென்மையான குரலில்..

இழுத்து மூச்சுவிட்டு.. "சரி பார்ப்போம்" என்றாள் அவள்..

அடுத்து மூவருமாய் ஷாப்பிங் புறப்பட்டார்கள்..!

திலோத்தமா வருணோடு முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள தேம்பாவணி உற்சாகமாய் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு..

மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்..

பாடலை ஒன்ஸ்மோர் போட சொல்லி கேட்டு தாளம் தட்டிக் கொண்டிருந்தாள்..

'எவ்ளோ ரொமான்டிக்கான பாட்டு.. எனக்கு தோணுற பீலிங் கூட இவங்களுக்கு வரலையா.. ரெண்டு பேரும் நவகிரகம் மாதிரி முகத்தை திருப்பிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க.. ஏதாவது சண்டையா இருக்குமோ..!" அவள் குட்டி மூளை ஏதேதோ யோசித்தபடி பாட்டை வாயோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தது..

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா..

பாடலை முணுமுணுக்கும் போது அவள் பார்வை வருண் பக்கம் ஏன் சென்றதோ தெரியவில்லை..

செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ..

இந்த வரிகளில் வருண் கண்ணாடி வழியே அவளை பார்த்தான்..

திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.. தாப சலனத்தோடு பார்த்துக் கொள்ளவில்லை.. பாடல் வரிகளில் தற்செயலாக இடம்பெயர்ந்து விட்டன இருவரின் கண்களும்..

ஒரு பெரிய மாலில் காரை நிறுத்தியிருந்தான்..

திலோத்தமா முன்னே செல்ல.. பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்ற வருணோடு ஒட்டி அவன் காதில் கிசுகிசுத்தாள் தேம்பாவணி..

"உங்க வைஃப் உங்க மேல கோவமா இருக்காங்களா டாக்டர் சார்..!"

"ஏன் அப்படி கேக்கற..!"

"சிரிக்கவே மாட்டேங்கிறாங்களே..! முகத்தை ஏன் இப்படி உர்ருனு வச்சிருக்காங்க..?"

"அது என் பிரச்சனை.. அவ கோவமா இருந்தாலும் எப்படி சமாதானப்படுத்தணுங்கற வித்தை எனக்கு தெரியும்..‌ நீ உன் வேலைய மட்டும் பாரு..!" என்றதும் உதட்டை சுழித்துக் கொண்டு அவனை விட்டு விலகி முன்னே நடந்தாள்‌ தேம்பாவணி..

இதுதான் வருண்..! கலகலப்பான பேர்வழி என்றாலும் யாரையும் கோட்டை தாண்டி தன்னை நெருங்க விட்டதில்லை..! அவனுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவனுக்கு மட்டுமே சொந்தமானது..!

வீட்டு உபயோகத்திற்கு.. கல்லூரி செல்லும் போது அணிந்து கொள்ள.. என பார்த்து தேர்வு செய்து உடைகளை வாங்கிக் கொண்டாள் தேம்பாவணி..

திலோத்தமா புடவை செக்ஷனில் காண்பவை யாவுமே தேன் என்ற ரீதியில் வரிசையாக புடவைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க.!

"இந்த லெமன் எல்லோ உங்களுக்கு நல்லாவே சூட் ஆகும்.." என்று தேம்பாவணி எடுத்து தந்த புடவையை அலட்சியமாக தூக்கிப் போட்டவள்.. "நல்லா இல்ல எனக்கு பிடிக்கல..!" என்று விட்டு வேறு புடவையை எடுக்க சென்றாள்..

"சார் நீங்க எனக்காக செலவு பண்ண வேண்டாம்.. என்னோட டெபிட் கார்டு யூஸ் பண்ணிக்கறேன்.. இனிமேதான் யாரும் என்ன கேள்வி கேட்க முடியாதே..!" கை நிறைய ஆடைகளோடு அவனிடம் வந்து நின்றாள் தேம்பாவணி..

"அதை நீ தனியா போகும்போது யூஸ் பண்ணிக்கோ.. இப்பதான் நான் உன்கூட இருக்கேனே..! நான் பாத்துக்கறேன் நீ போய் தேவையானதை வாங்கிக்க..!"

"கணக்குல வச்சுக்கோங்க சார் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துடுவேன்.. யாரும் எனக்கொன்னும் ஓசியில செய்ய வேண்டாம்.. உங்க டாக்டர் பீஸ் முதற்கொண்டு எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுவேன்.."

"கண்டிப்பா..! எல்லாத்தையும் எழுதி வைச்சி மொத்தமா வசூல் பண்ணிக்கறேன்.." நக்கல் புன்னகையோடு அவனும் ஈடு கொடுத்து பேச தேம்பாவணியின் முகம் சுருங்கியது..

"ஃபிரண்டுன்னு சொன்னீங்க.. இப்படித்தான் கணக்கு போட்டு வாங்குவாங்களா..?"

"நானா கேட்டேன்..‌ நீதானே வாய்க்கு வந்தபடி திமிரா பேசின..!"

"ஒரு பேச்சுக்கு சொல்றதுதான்..! பரவாயில்ல நமக்குள்ள என்ன..‌ நான் உன் ஃபிரண்டுதானே நான் வாங்கி தராம வேற யார் வாங்கி தருவாங்க.. இப்படித்தானே நீங்க சொல்லி இருக்கணும்..!"

"அப்படி நினைச்சுதானே எல்லாத்தையும் நான் வாங்கி தரேன்.. நீ உன் டெபிட் கார்டு யூஸ் பண்ண வேண்டாம்னு சொன்னேன்..?"

"ஆனாலும் வாயால நான் சொன்ன மாதிரி சொல்லலையே..‌ அப்படி சொன்னாதானே எனக்கு சந்தோஷம்.."

இதழ் குவித்து ஊதினான் வருண்..!

"சரி இப்ப சொல்றேன்..! நான் உன் ஃபிரண்டுதானே.. உனக்கு நான் செய்யாம வேற யாரு செய்வாங்க.. போ.. போய் என்ன வேணுமோ வாங்கிக்கோ..!" அவள் கன்னத்தில் தட்டி சிரிக்க.. முகம் பூவாய் மலர்ந்து உற்சாகமாய் அடுத்த உடையை எடுப்பதற்காக சென்றாள் தேம்பாவணி..

"திலோத்தமா..!" பிடரியை வருடியபடி ஒரு மாதிரியான தயக்கத்துடன் அவள் பக்கத்தில் வந்து நின்றான் வருண்..

"இங்க பாருங்க.. இதுக்கெல்லாம் நான் பே பண்ண முடியாது.. நான் எடுக்கறதுக்கும் நீங்கதான் பணம் கட்டணும்.." கறாராக பேசியவளை சலிப்பாக பார்த்தான்..

"ஆமா உனக்கு தண்டம் அழத்தானே நான் இருக்கேன்..! மனதுக்குள் நினைத்துக் கொண்டு.. அந்த பொண்ணுகிட்ட எல்லாம் வாங்கியாச்சானு ஒருவாட்டி செக் பண்ணிக்க சொல்லேன்..!" என்றான் குரலை செருமிக் கொண்டு..

"ஏன்.. நீங்களே போய் சொல்லுங்க.. நான் என்ன அவளுக்கு மீடியேட்டரா.. இல்ல அசிஸ்டன்ட்டா.. நான் எதுக்காக போய் அவளை கேக்கணும்.."

"ப்ச்..! முக்கியமான திங்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டாளான்னு கொஞ்சம் கேளு.. எதையாவது மறந்திருக்க போறா..! நீ பொண்ணுதானே.. இன்னொரு பொண்ணுக்கு என்னென்ன வேணும் எதை வாங்கணும்னு உனக்கு தெரியும் இல்ல..!" சொல்லா முடியாமல் மென்று விழுங்கினான்..

"எனக்கென்ன வாங்கணும்னு மட்டும் தான் தெரியும்.. மத்தவங்களுக்கு எது தேவைன்னு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..! ஒரு நிமிஷம்.. இந்த புடவை கலர் ஒகேவா.. இதை எடூத்துக்கவா.. அவள் முடிப்பதற்குள் பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றிருந்தான் வருண்..

அந்தப் பக்கமாக முயல் குட்டி போல் ஓடிக் கொண்டிருந்த தேம்பாவணியை நிறுத்தினான்..

"எல்லாம் வாங்கிட்டியா..?"

"ம்ம்.. வாங்கியாச்சு.. இந்த டிரஸ் மட்டும் கரெக்டா இருக்கான்னு தெரியல.. போட்டு பாக்கணும்.."

"ப்ச்.. அதெல்லாம் இருக்கட்டும்.. முக்கியமானது வாங்கினியா..?"

"என்ன முக்கியமானது..?"

"ஏய்..! இடியட்.. இன்னர் கார்மெண்ட்ஸ் வாங்கினியா..‌ இதுக்காக உன்னை திரும்ப தனியா அழைச்சிட்டு வர முடியாது.."

"ஆமா இல்ல..‌ மறந்துட்டேன்..! இதோ போய் வாங்கிக்கறேன்..!" தலையிலடித்துக் கொண்டு மீண்டும் அந்த செக்ஷனுக்குள் ஓடினாள் தேம்பாவணி..

பெண்கள் செக்ஷனை சுற்றி சுற்றி வர அவனுக்கும் போர் அடிக்கவே ஓர் இடத்தில் நின்றுக்கொண்டு அலைபேசியில் மூழ்கினான்..

"சா.. சார்.." கிசுகிசுப்பாக ஒரு குரல்..

சுற்றி சுற்றி பார்த்தவன்.. தான் நின்று கொண்டிருப்பது ஒரு ட்ரையல் ரூமுக்கு பக்கத்தில் என்பதை உணர்ந்து திடுக்கிட்டு தள்ளி நிற்க.. கதவை லேசாக திறந்து கொண்டு தலையை வெளியே நீட்டினாள் தேம்பாவணி..

"திலோ அக்கா எங்க சார்..?"

"அவ எங்க போய் தொலைஞ்சாளோ..!"

"என்ன..?"

"எங்க போனான்னு தெரியல..‌ ஏன் கேக்கற..!"

"சுடிதார் சிப் ஸ்ட்ரக் ஆகிடுச்சு..! அவங்கள வந்து ஹெல்ப் பண்ண சொல்லுங்க.."

"அவதான் இங்க இல்லையே நான் எங்க போய் அவளை தேடுறது..!"

"வேற யாராவது சேல்ஸ் கேர்ள் இருந்தா கூப்பிடுங்க..!" என்றதும் அந்த செக்ஷன் முழுக்க கண்களை சுழல விட்டான் வருண்..!

"இங்க யாருமே இல்லையே.. நான் வேணும்னா கீழ போய் யாரையாவது கூட்டிட்டு வரட்டுமா.."

"எவ்வளவு நேரம் இந்த சின்ன ரூமுக்குள்ள நிக்கறது.. எனக்கு கிளாஸ்ட்ரோஃபிக் வந்துரும் போலிருக்கு.."

"இப்ப என்ன பண்ண சொல்ற..?"

"நீங்க ஹெல்ப் பண்ணுங்க சார் ப்ளீஸ்.."

"என்னது நானா..?" அதிர்ந்தான் அவன்..

"நீங்கதானே சொன்னீங்க.. நான் ஒரு டாக்டர் எனக்கு ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லைன்னு.."

"ஏய் லூசு அது வேற இது வேற..!"

"எல்லாம் ஒன்னுதான்.. ஆப்ரேஷன் பண்ணும் போது பேஷண்ட்டோட டிரஸ் ரிமூவ் பண்ண மாட்டீங்களா..?"

"அடக்கடவுளே நான் ஒன்னும் சர்ஜன் இல்லை.. சைக்கியாட்ரிஸ்ட்..!"

"பரவாயில்லை டாக்டர்.. ஆபத்துக்கு பாவமில்ல.. ப்ளீஸ் பாதியில நிக்குது.. என்னால இப்ப வெளியே வரவும் முடியாது.. ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்."

"இரு கத்தாத.. வந்து தொலையறேன்..!"

அவன் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள.. அந்நேரம் பார்த்து அந்தப் பக்கமாய் வந்த பணிப்பெண் ஒருத்தி வாயில் கை வைத்து கண்களை விரித்தவள் பிறகு வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்து ஓடிப்போய் கீழ் தளத்திலிருந்த தன் தோழியிடம் ஏதோ கிசுகிசுத்தாள்..

"இரு நான் கண்ண மூடிக்கறேன்.."

"இல்ல வேண்டாம்.. கண்ணு திறந்துகிட்டே ஜிப் போட்டு விடுங்க..!"

"அது தப்பு.."

"இது ரொம்ப தப்பு.." அவள் சொன்ன பிறகுதான் கண்ணை திறந்து பார்த்தான்.. அவன் விரல்கள் ஜிப்பை தேடுகிறேன் பேர்வழியென தேம்பாவணியின் இடையில் பதிந்திருக்க..

"ஓஓ.. ஐ அம் சாரி.." என்றவன் சட்டென அவள் சுடிதார் ஜிப்பை மேல் நோக்கி இழுத்து விட்டான்..

"டிரஸ் போட்டு பார்க்க வேண்டாம்.. சைஸ் சரியா இல்லனா இன்னொரு நாள் வந்து மாத்திக்கலாம்.. இங்க ரிட்டன் எடுத்துப்பாங்க.."

"ஓகே..!" மெதுவாக தலையசைத்தாள்..

"என்ன பர்ஃப்யூம் யூஸ் பண்ற..!"

"நான் எந்த பர்ஃப்யூமும் யூஸ் பண்ணலையே..! குளிச்சிட்டு அப்படியே உங்க கூட வந்துட்டேன்.."

"அப்படியா.. பேபி சோப் வாசனை.. இல்லைனா ரூம் பிரஷ்னர் ஸ்மெல்லா கூட இருக்கும்.. பட் குட் பிரக்ரன்ஸ்..!" என்றபடி பாக்கெட்டில் கை நுழைத்து அந்த சின்ன அறையில் அவளை உரசியபடி அப்படியே நின்றிருந்தவன் தேம்பாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்..

"போ..‌ போகலாமா..!" தேம்பாவணி தடுமாற்றத்துடன் கண்களை விரிக்க.. சட்டென தெளிந்தவன்..

"ஓ..‌ ஐ அம் சாரி..!" கதவை திறந்து கொண்டு வெளியே வந்து.. உதடு குவித்து கண்களை விரித்து பெரிதாக மூச்சு விட்டு

Varun please dont Go with the flow..

மனதுக்குள் சொல்லிக் கொண்டான்..

தொடரும்..
இதெல்லாம் சரியே இல்ல டாக்டர் மத்தவங்களுக்கு go with the flow உங்களுக்கு மட்டும் don't go with the flow வா அப்படி எல்லாம் விடமுடியாது சார் நீங்க வசமா சிக்க போறீங்க பாரு 😁😁😁
பாட்டு செம்ம பொருத்தம் ரெண்டு பேருக்கும் 🤭🤭🤭
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
Haha என்ன டாக்டரே உங்க மந்திரத்த நீங்களே follow பண்ணலனா எப்படி 😂😂😂... just go with the flow என்ன ஆகும்னு தா பாப்போமே வருண்.....

But எங்கயோ ரெண்டு பேரும் connect ஆயிருகீங்க ....unga conversations கூட ரொம்ப உரிமையா பேசிக்கரா மாறி தெரியல... உங்களுக்கு புரிஞ்சா செரி....

தேம்பா so sweet... அப்டியே oru Barbie doll ஞாபகம் வருது நினைக்கும்போது...
Don't worry themba sekkram அது உன்னோட வீடு தான்...

இந்த திலோவுக்கு இவளோ தேவையா...விட்ட கடைய காலி பண்ணிருவ போல...waste fellow.... எங்க தொலைஞ்சலோ அப்டியே தொலைஞ்சு போயிட்டா கூட நல்லது தா....
 
Last edited:
Active member
Joined
Oct 26, 2024
Messages
33

Superb.. varun... Don't go with the flow..
😂😂😂😂😂
 
Member
Joined
Jul 19, 2025
Messages
22
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
51
யுவர் ஆனர் இதை வன்மையாக கண்டிக்கிறேன். எல்லாருக்கும் "Just go with the flow ". வருணுக்கு மட்டும் " Don't go with the flow". 🤣🤣🤣🤣🤣🤣🤣 அஸ்கு புஸ்கு

வருணே ஏன் பயமா இருக்கா தேம்பா கிட்ட சிக்கிருவோம்னு. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நீ எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சாலும் வெண்மதி இருக்குப்பா உன் கூடவே. 😛😛😛😛😛
 
Member
Joined
Apr 30, 2025
Messages
23

Enna ya varun.., enna nadughuthu inghe...... Nadagatum... Nadagadum..... Varun vizhuinthitiyaaaaa...... 🫣🫣🫠💜💜💜.... Ud 👌👌👌💜💜💜sana sis.... 🫶🫶🫶
 
New member
Joined
Jul 28, 2025
Messages
12
இனி அடிக்கடி இந்த வார்த்தைய சொல்ல வேண்டி வரும் டாக்டரே....
 
Top