- Joined
- Jan 10, 2023
- Messages
- 132
- Thread Author
- #1
தன்னை ஒரு காமக் கொடூரன் போல் சித்தரித்து அவள் விலகி சென்று படுத்துக் கொண்ட விதம் அவனுக்குள் அமிலமாய் இறங்க.. உள்ளம் கொதித்துப் போனான் ஹரிஷ்..
"இப்போ எதுக்காக கீழே இறங்கி படுத்திருக்கே.. நான் ஒன்னும் உன்னை கடிச்சு தின்னுட மாட்டேன்.. மேலே வந்து படு" என்றான் அடிகுரலில் சீற்றமாக..
அவன் குரலே புலிக் குகையில் நுழைந்து விட்டோமோ அச்சத்தைக் கொடுத்தாலும்.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளோ.. "வேண்டாம்.. நான் உங்களை ரொம்ப டெம்ப்ட் பண்றேன்னு நினைக்கிறேன்.. என்னால இந்த நேரத்துல உங்களுக்கு எந்த சுகத்தையும் கொடுக்க முடியாது.. என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம்.. இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கோங்க.. நாளைக்கு எப்படியாவது கல்யாணி அம்மா கிட்டே பேசி வேற ரூம் ஷிப்ட் ஆகிடறேன்".. என்றாள் அமைதியான குரலில்..
தலைதாழ்ந்து சொன்னவள்.. சத் என்ற சத்தத்தில்.. நிமிர்ந்து பார்க்க.. ஹரிஷ் தன் கரத்தை கண்ணாடி மேஜையில் ஓங்கி குத்தியிருந்தான்.. கரத்தின் ஓரத்தில் கண்ணாடி பட்டு குருதி வழிந்தோட.. இதயமே வெளியே வந்து விழுவது போல் "ஐயோ..ஹரிஷ்".. என்று அலறி துடித்தாள் மதி..
கீழே அமர்ந்திருந்தவளால் சட்டென எழுந்திரிக்க முடியாமல் போகவே.. தடுமாறிக் கொண்டிருந்தவளை அழுத்திப் பிடித்து அமரவைத்தவனோ "கஷ்டப்படாதே" என்றான் தழுதழுக்கும் குரலுடன்..
"ஏன்.. ஹரிஷ்.. ஏன் இப்படி பண்றீங்க".. என்று கண்ணீர் விட்டு கதறியவள் அவன் கரத்தினை பற்ற முயல சட்டென தன் கரத்தினை விலக்கிக் கொண்டவன்.. "அழாதேடி.. ஜன்னி வந்திருமாம்.. அம்மா சொன்னாங்க.. உனக்கு நான் இங்கே இருக்கிறது பிடிக்கலைன்னா சொல்லு.. வெளியே போய்டறேன்.. அதுக்காக இப்படி பேசாதே மதி.. ரொம்ப வலிக்குது.. கோபத்துல என்னை காயப்படுத்திகிட்டேன்.. ஆனா அப்போவும் நீதான் ஹர்ட் ஆகுறே.. நான் என்ன பண்ணட்டும் சொல்லு".. என்று வலி நிறைந்த குரலில் கேட்ட ஹரிஷ் மிக மிக புதியவன்.. எங்கிருந்து வந்தது இத்தனை நிதானமும் கனிவும்.. திமிரும் அகம்பாவமும் தெறிக்கும் அவன் பார்வையும் பேச்சும் எங்கே போனது.. என் அன்பையும் காதலையும் புறக்கணித்த ஹரிஷ் என்ன ஆனான்.. அழுகை நின்று போக.. விழிகள் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன..
"நான் அதுக்காக மட்டும்தான் உன்கிட்டே வர்றேனா மதி".. அப்பாவி குழந்தையாய் அவன் கேட்ட கேள்வியில் மனம் உருகிப் போனாள் மதி..
"இதுக்கு முன்னாடி அப்படித்தானே நீங்க போட்ட ஒப்பந்தம் .. நமக்குள்ளே கட்டில் உறவுமுறையை தவிர வேறெதுவும் இருந்ததில்லையே.. இருக்கவும் கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க".. அவள் நிதானமான பேச்சில் நெஞ்சில் சுருக்கென தைக்க.. வலியுடன் நிமிர்ந்தவனின் விழிகளில் கூடுதலாக குற்ற உணர்ச்சியும்.. அதுதானே உண்மையும் கூட.. அவள் அன்புக்கும் அக்கறை.. கனிவு.. காதல் அத்தனைக்கும் செக்ஸ் என்று வர்ணம் பூசியவன் அவன்தானே.. எச்சில் கூட்டி விழுங்கிக்
கொண்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை..
உறங்கிக் கொண்டிருந்த ஹரிஷிற்கு விழிப்பு தட்டிய வேளையில்.. அவன் விழிகள் தன்னிச்சையாக மதி முகம் தேட அவளோ முழுமதியாக உறங்கி கொண்டிருந்தாள்.. ஆனால் எப்போது குழந்தைக்கு பால் கொடுக்க எழுந்தாளோ தெரியவில்லை.. குழந்தை உறங்கியிருக்க.. அவன் சின்னஞ்சிறிய முகத்தின் மேல் முழுவதுமாக அவள் மார்பு அழுத்தியிருப்பதை கண்டவன் எங்கே மூச்சு முட்டி குழந்தைக்கு பிரச்சினை ஆகி விடுமோ என்ன பயந்துதான் அவள் மார்பகத்தை தூக்கிவிட்டு குழந்தையை தள்ளிப் படுக்க வைத்துவிட்டு.. பால் ஒழுகும் காம்புதனை ஒரு துணியால் துடைத்து விட்டான்.. இல்லாது போனால் காம்பில் கிருமிகள் தேங்கி குழந்தைக்கு வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என இணையத்தில் படித்த நியாபகம்.. எல்லாம் முடித்து ஆடையை சரி செய்யும் நேரத்தில்தான் மதி உறக்கம் கலைந்து எழுந்த நிகழ்வு..
அதை தெளிவாக அவளிடம் விளக்கினான் ஹரிஷ்.. மனம் ஒருமாதிரியாகிப் போக "ஐம் சாரி" என்றாள் குற்ற குறுகுறுப்புடன்.. அதற்கு மேல் அவளிடம் வேறெந்த தன்னிலை விளக்கமும் கொடுக்க விரும்பாதவன்.. "சரி மேலே வந்து படு".. என்றான் உரிமையுடன்..
அவளும் அதற்கு மேல் அவனை காயப்படுத்த விரும்பவில்லை.. மறுபேச்சின்றி குழந்தையை தூக்க முயல.. அப்போதும் குருதியில் நனைந்த அவன் காயத்தை கண்டவள்.. "ஐயோ ஹரிஷ்.. காயம்".. என்று அவன் கைப்பற்றினாள்..
"சே.. நான் ஒரு முட்டாள்.. ரத்தத்தோட குழந்தையை தூக்க வரேன் பாரு".. என்று தலையில் அடித்துக் கொள்ளவே.. அப்போதும் தன்னைப் பற்றி கருத்தில் கொள்ளாது.. தன் பிள்ளையை பற்றியே யோசித்தவனை விந்தையாக பார்த்தவள்.. "அது.. அது பரவாயில்லை.. உங்களுக்கு அடி பட்டிருக்கு.. மருந்து போடணும்".. என்றாள் மீண்டும் விழிகளை காயத்தில் பதித்து..
"ப்ச்.. பரவாயில்லை விடு".. அவள் தன் கரத்தை உருவ முயற்சிக்க..
"முதல்ல போய் அந்த பர்ஸ்ட் ஏட் பாக்சை எடுத்துட்டு வாங்க".. என்றாள் அதிகாரமாக.. ஹரிஷ் மறுபேச்சின்றி எழுந்து சென்றவன் கப்போர்டிலிருந்து தேடி கண்டுபிடித்து முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளருகே அமர்ந்தான்..
காயம் பட்ட இடத்தில் அவள் மருந்து போட்டுவிட.. அவன் விழிகளோ அவள் மீது உணர்வுக் குவியலாய் நிலைத்து நின்றன.. மிக நெருக்கத்தில் அவள் முகம்.. தன்னைக் கட்டுப்படுத்த இயலாது தவித்துப் போனான்.. நிச்சயம் காமம் அல்ல.. காதலுடன் ஒரு முத்தம்.. சிறு குழந்தையின் மினிமினுப்பான குண்டு கன்னங்களை கண்டவுடன்.. முத்தம் வைக்கவோ.. கடித்து வைக்கவோ இதழ்கள் குறுகுறுக்குமே.. அது போல்.. ஆனால் இங்கேயோ கன்னம் ஒட்டிக் கிடந்தாள் மதி..
அவள் மெலிவு அவனை கவலை கொள்ள வைத்தாலும்.. என்றுமே மதி அவனுக்கு பேரழகிதான்.. தேய்ந்தாலும் வளர்ந்தாலும்..
"இனிமே இப்படி பண்ணிக்காதீங்க ப்ளீஸ்".. என்று கெஞ்சி நிமிர்ந்தவள் விதி விதிர்த்து போனாள்.. அவன் பார்வை அப்படி.. மிக நெருக்கத்தில் வண்டாய் குடையும் அந்த காந்த விழிகள்.. தடுமாறி தவித்துப் போனாள் பேதையவள்.. காதல் கொண்ட அடிமனம் அந்த பார்வையில் உருகி.. சாக்லேட் கண்ட சிறுபிள்ளையாய் அவன் பால் நழுவி ஓட.... "வேண்டாம் மதி.. மீண்டும் காயங்கள் வேண்டாம்.. தாங்கமாட்டாய்".. என்று ரணம் கண்ட மனம் செய்த எச்சரிக்கையில் சுதாரித்துக் கொண்டவள்.. விழிகளை திசை திருப்பினாள்.. அவள் பார்வை செல்லும் இடங்களை பெண்டுலமாய் ஏக்கத்துடன் பின் தொடர்ந்தன அவன் கபில நிற விழிகள்..
இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தாளோ என்னவோ.. "நான்.. நான்.. மேலே படுத்துகிறேன்".. என்று உறங்கும் குழந்தையை தூக்கவும்.. அவளை அவன் தூக்கினான்..
"பாத்து.. பாத்து.. ஸ்டிட்ச்ஸ் போட்ட இடம் வலிக்குது".. முகம் சுணங்கினாள் மதி.. புதிதாக பிறந்த முயல்குட்டி போல் பக்குவமாகத்தான் தூக்கினான்.. ஆனாலும் அவள் உடல் நிலை இன்னும் தேறி வராத பட்சத்தில் உடல் முழுக்க எங்கே தொட்டாலும் ஏதோ ஒரு வலிதான்..
"எங்கே ஸ்டிட்ச்ஸ் போட்டாங்க".. அவனுக்கு புரியவில்லை..
"என்ன கேள்வி இது".. என்பதைப் போல் பார்த்தவள்.."வெஜைனால".. என்றாள் இயல்பாக..
"அங்கே எல்லாமா ஸ்டிட்சஸ் போடுவாங்க".. என்றான் திகைத்து விழித்து.. இதெல்லாம் அவனுக்கு புதிது.. மாதவிக்கு குழந்தை பிறந்த போது கூட இது போன்ற விஷயங்களை அவன் அறியவில்லை.. பிறப்புருப்பின் வழியே குழந்தை பிறக்கும் என அறிவான்.. ஆனால் அங்கே தையல் எப்படி.. இதையெல்லாம் கூகிள் சொல்லவில்லையே..
அவன் முகத்தில் பலவித மாறுதல்கள் வந்து போக.. "பேபி தலை பெருசு.. அதான்".. என்று முடித்தாள்..
அதனால? என்று தொடந்தான் மீண்டும்.. இன்னும் கூட அவனுக்கு புரியவில்லை.. ஏன் இப்படி தோண்டி துருவி கேட்கிறான்.. அவளுக்கோ மேற்கொண்டு சொல்ல தயக்கம்.. உடலளவில் நெருக்கம் உண்டு.. அவனுக்கு தெரியாத மறைக்கப் பட்ட தேகத்தின் அங்கம் என்று அவளிடம் எதுவுமில்லை.. ஆனாலும் சில விஷயங்களை விளக்க முடியவில்லை..
"ப்ச்.. அதனால.. அந்த இடத்தை டியர்(Tear) பண்ணி பெருசாக்கி குழந்தையை வெளியே எடுத்தாங்க".. என்று ஒருவழியாக சங்கடத்துடன் சொல்லி முடிக்க.. அவனோ சட்டென கண்களை மூடித் திறந்து உடல் முழுக்க சிலிர்த்துப் போனான்.. காதுகளோடு ஏதோ கூசியது.. உண்மையில் பிரசவம் பெண்களுக்கு மறுஜென்மம்தான்.. வலி வேதனையுடன் தன்னால் ஏற்பட்ட மன உளைச்சளையும் வேறு தாங்கி.. அப்பப்பா.. கண்ணை காட்டியது.. அவள் உடல் ரீதியாக அனுபவித்திருந்த வலிக்கு கிட்டத்தட்ட சரிசமமான வலி வேதனையை அவனும்தான் மனரீதியாக அனுபவிந்திருந்தான்.. ஆனால் அவள் முழுமையடைந்த தாய்மையின் பின்னே.. வலி நிறைந்த காரணிகளை கண்டவனுக்கு அவன் பிரச்சினைகள் பெரிதாகவே தெரியவில்லை..
எத்தனை முறை தன் தேவையை தீர்த்துக் கொள்ள முரட்டுதனமாக அவள் பெண்மையினுள் தன் ஆயுதத்தை செலுத்தி இருக்கிறான்.. அப்போது இப்படி ஒரு உன்னத கடமை பெண்மைக்குள் புதைந்து கிடந்ததை எப்படி மறந்து போனான்.. "குழந்தை வந்தா கலைக்கணும்.. குழந்தை வரக்கூடாது".. அலட்சியமாக அவன் இட்ட கட்டளைகள் காதுகளுக்குள் ரீங்காரமிட மனம் பாரமாகிப் போனது.. நியாயமாக பார்த்தால் குழந்தை வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவள்தானே.. என்ன வெட்டிமுறித்தேன் என அலட்சிய திமிருடன் அவளை அதிகாரம் செய்து கொண்டிருந்தேன்.. என்னவோ போல் ஆனவனுக்கு தூக்கம் தொலைந்து போனது..
திரும்பி பார்த்து அவளை சீண்டி தொந்தரவு செய்யாமல் அமைதியாக முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.. ஆனால் அவளுக்குதான் மனம் வெறுமையாகிப் போனது.. குறைந்த பட்சம் அவன் ஏக்கம் விழிகளாவது துணையாக கிடைக்குமா.. என்று எட்டிப் பார்க்க.. மறுகணமே அவன் தேவை தீர்ப்பவனாய் அவள் புறம் திரும்பினான் அவன்..
ஜென்ம சாபல்யம் தீர்ந்தவளை போல் விழிகளை விரித்தாள் அவள்.. அய்யோ கடவுளே இந்த அபரிமிதமான காதலை எங்கே ஒளித்து வைப்பேன்.. தடுமாறினாள் மதி..
அவன் சிமிட்டிய விழிகளில் அவள் மொத்த உலகமும் தொலைந்து போனது.. "நான் உன்னை கட்டிப்பிடிச்சிக்கவா மதி.. குழந்தையை அந்தப் பக்கம் போடறியா.. ஐ டோன்ட் நோ.. வாட் ஐ ஃபீலிங்.. ஒரு மாதிரி நெர்வசா இருக்கு".. என்றான் என்னவோ அவனே குழந்தையை பெறும் வலியை ஏற்றுக் கொண்டவன் போல்.. "நியாயப்படி நானே இவ்ளோ ஃபீல் பண்ணல.. இவருக்கு என்னவாம்".. என்று நினைத்தவள்..
"வேண்டாம்" என அழுத்தமாக மறுத்தாள்.. தன்மானம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது மெச்சிக் கொண்டது அவள் மனம்.. ஆனால் அவன் முகம் வாடியதும் மீண்டும் உருகினாள்..
"இது எல்லா பெண்களுக்கும் குழந்தை பிறக்கும்போது இயற்கையா நடக்கக் கூடியதுதான்" என்றாள் இயல்பான குரலில்..
"சோ வாட்.. அதுக்காக.. நான் உன்னைப் பத்தி கவலைப் படக் கூடாதா என்ன".. கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. கொஞ்சம் பயந்துதான் போயிருக்கிறான் பாவம்.. ஓங்கி மேஜையில் குத்தி தன்னை காயப்படுத்திக் கொள்ளும் போது இந்த பயம் எங்கே போனதாம்.. கேட்கத் தோன்றியது.. விழுங்கிக் கொண்டாள்..
"சாரி".. என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு..
"காலை ஏன் குறுக்கி வைச்சிருக்கே.. கொஞ்சம் ஃபிரியா படு மதி" என அவனே கால்களை வசதியாக நீட்டி விட்டபடி "எதுக்கு சாரி" என்றான்..
"நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன்.. நீங்க.. நீங்க".. என இழுக்க..
எதைப்பற்றி பேசுகிறாள் என யூகித்தவன் "புரியுது.. ஆனா அதுல தப்பொண்ணும் இல்லையே.. எனக்கு சொந்தமானதுதானே.. முதல் உரிமை எனக்குதான்.. இப்போ தோணல.. எப்பவுமே இப்படி நல்லவனா இருப்பேன்னு சொல்ல முடியாதே.. தோணும்போது எனக்கு தேவையானதை நானே எடுத்துப்பேன்.. பிகாஸ் யூ ஆர் ஆல்வேஸ் மைன்".. என்று முடித்துவிட.. என்ன சொன்னான்.. என கிரகித்துக் கொள்ள முடியாமல் விழித்தாள் மதி..
தொடரும்..

Last edited: