மல்லிக்கு ஒன்பதாம் மாதம் ஆரம்பித்து விட்டதால் ரிஷி அவளுக்கு தெரியாமல் வளைகாப்பிற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.. மல்லியிடம் கூட சொல்லவில்லை.. விழாவின் நெருக்கத்தில் சொல்லிக்கொள்ளலாம்.. அதுவரை சஸ்பென்சாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.. ஆனாலும் அவனுக்கு வளைகாப்பு பற்றிய ஒருசில நடைமுறைகள் தெரியாமல் போகவே ஏற்பாடுகள் எவ்விதம் செய்யவேண்டும் என்ற உதவிக்காக அழைத்துப் பேசியது அவன் அன்னையை.. மிக பொறுப்பாக மனைவிக்கான வளைகாப்பை எடுத்து செய்வதும் மிக ஆர்வமாக என்னென்ன செய்ய வேண்டும் என்று அவன் கேட்டுக்கொண்ட விதமும் சிவகாமிக்குள் புகைச்சலை உண்டு பண்ணியது.. இதுவரை தன்னிடம் முகம் கொடுத்து பேசாத மகன் மனைவிக்காக விழுந்து விழுந்து வேலை செய்வதா.. அதுவும் நான் பார்த்து திருமணம் செய்துவைத்த ஒரு வேலைக்கார கழுதைக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா.. என்ற வயிற்றெரிச்சல்.. ஆனால் அவள் சுமப்பது தன் குடும்ப வாரிசு என்பதையும் தன் மகனின் பிரச்சினையை தாண்டி மல்லிதான் அவனுக்கு வாழ்க்கைக் கொடுத்திருக்கிறாள் என்பதையும் அவள் மழுங்கிப்போன பணக்கார ஆதிக்க மூளை மறந்துவிட்டது போலும்.. இதுவரை தன்னை சாப்பிட்டாயா.. எப்படி இருக்கிறாய் என ஒருமுறை கூட தன்னை அழைத்து பேசாத மகன் மல்லியைப் பற்றி பேசுகையில் எத்தனை மென்மையாய் பேசுகிறான்.. உற்சாகமும் அக்கறையும் கரைபுரண்டு ஓடுகிறதே அவன் குரலில்.. தாங்கவே முடியவில்லை அவளால்.. அதுவும் ஏகத்துக்கும் செலவு செய்து மிகப்பிரமாண்டமாய் வளைகாப்பை நடத்தப் போகிறானா.. மல்லியை அவன் அடிமை போலல்லவா நடத்தவேண்டும்.. நாமாக பார்த்து ஏதாவது பிச்சை போட்டு தன் காலுக்குக் கீழே வைத்துக் கொள்ளலாம் என்றால் அவள் என் மகனை கைக்குள் போட்டு முதலாளியாகி என்னையே அதிகாரம் செய்வாள் போலிருக்கிறதே என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.. அதுவுமல்லாது இடையில் ஒருமுறை ரிஷி மல்லியைப் பார்க்க குடும்பத்துடன் சென்றிருந்தபோது மல்லியிடம் அவன் இழைந்த விதத்தை பார்த்துக் கொண்டுதானே இருந்தாள்..
மல்லி அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகள்.. அவளின் ஆடை.. அவள் பயிற்சி வகுப்பிற்காக பார்த்து பார்த்து அவன் வாங்கிகொடுத்திருந்த உபகரணங்கள்.. வீட்டை மல்லி ஆளும் விதம்.. என அனைத்தும் அவளை மருமகளாக நினைத்து மகிழ வைக்காமல் வேலைக்காரிக்கு இத்தனை வசதிகளா.. என்று பொறாமையில் பொங்கவைக்க மல்லியின் சந்தோஷம் முள்ளாக குத்தியது சிவகாமியை.. ஆணாதிக்கம் பிடித்த ஆண்களை விட இதுபோன்ற சில கேடுகெட்ட பெண்களே பெண்களுக்கு எதிரி..
உள்ளுக்குள் வயிறெரிச்சலும் பொறாமையும் போட்டிப் போட்டு அழுத்திக் கொண்டிருக்க மல்லியை அழைத்து நெஞ்சில் பூட்டி வைத்திருந்த அனைத்து விஷத்தையும் பதமாய் இறக்கி விட்டிருந்தாள்..
"என்ன மல்லி எப்படி இருக்கே.. என் பேரபுள்ளைங்க எப்படி இருக்காங்க".. குரலில் ஒரு எகத்தாளம்..
"நான் நல்லா இருக்கேன் அத்தை.. குழந்தைகளும் ஆரோக்கியமா இருக்காங்க.. நீ எப்படி இருக்கீங்க.. மாமா சவுக்கியமா".. என்று வெகுளியாக கேட்டுவைக்க .. "ம்ம்.. எல்லோரும் சவுக்கியம்தான்.. ஆனா பாவம் ரிஷிதான் போன் பண்ணி ரொம்ப கவலை பட்டான்" என்று வஞ்சகமாய் பேச்சை ஆரம்பிக்க மல்லியின் புருவம் சுருங்கியது.. ரிஷிக்கும் மல்லிக்கும் இடையே உறவு அவ்வளவு சுமுகமாக இல்லைதான்.. பேச்சு வார்த்தைகள் ரொம்ப குறைவு.. வார்த்தைகளை அளந்து பேசினான் ரிஷி.. வினய் விஷயத்திற்கு பிறகு அவர்களின் அன்னியோன்யம் குறைந்து விட்டது.. கணவன் மனைவிக்கிடையில் பேசித்தீர்க்க முடியாத பிரச்சினைகள் எல்லாம் கற்பனைகளின் உபயத்தில் பூதாகாரமாக உருவெடுக்கும்.. கோபமும் ஈகோவும் வேறு நன்றாகவே அதற்கு பிரச்சினைக்கு தீனி போடும்.. இங்கேயும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது..
ஒருவேளை இதைப்பற்றித்தான் அத்தையிடம் சொல்லி இருப்பானோ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க.. "அவளோ உனக்கு ஒன்பது மாசம் ஆகிப்போச்சு.. வளைகாப்பு நடத்தனும் இல்லையா.. அம்மா அப்பா இருந்தா எடுத்து நடத்தியிருப்பாங்க.. இல்லை பணக்கார வீட்ல பிறந்திருந்தா எங்களுக்கு செலவு மிச்சமாகி இருக்கும்.. என்ன பண்றது.. ரெண்டும் இல்லாத பிச்சைக்கார அனாதை கழுதையை மருமகளா கொண்டுவந்துட்டேன்.. சொந்தக்காரங்க பூரா கேலிப்பேச்சு இங்கே".. என்றதும் மல்லியின் முகம் கருத்து வாடிப்போனது..
"ஏன் அத்தை இப்படியெல்லாம் பேசறீங்க.. நான் ஒன்னும் உங்க பையனை கட்டிக்கிறேன்னு ஒத்தைக்கால்ல நிக்கல.. அதுவுமில்லாம நீங்கதான் கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை பண்ணி வச்சீங்க".. என்று கோபத்தில் பதிலடி கொடுக்கவும் சிவகாமி ஆடிப்போய் விட்டாள்.. எப்படி மட்டம் தட்டினாலும் அமைதியாய் கண்ணீருடன் கேட்டுக்கொள்ளும் ஆள் மல்லி.. இன்று இவ்வளவு பேசுவாள் என எதிர்பார்க்கவில்லை அவள்.. தனக்கு தக்க பதிலடி கொடுத்தது வேறு அவள் கோபத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தது..
மல்லிக்கோ ரிஷி பாராமுகம் காட்டுவது ஒருபக்கம் மன அழுத்தம்.. கர்ப்பகால தொந்தரவுகள்.. அதுவுமில்லாது இப்போதெல்லாம் யாராவது அவமானப்படுத்தினால் சரிதான் போ.. என கேட்டுக்கொண்டு அமைதியாய் இருக்க முடியவில்லை.. உடனே பதிலடி கொடுத்து விடுகிறாள்.. அதுவும் ரிஷியின் பயிற்சிதான்..
"ம்ம்.. நல்லாதான் பேசற.. ஏன் பேசமாட்டே.. வாழவழியில்லாத உன்னைக் கொண்டு போய் ராணிமாதிரி உச்சாணி கொம்புல உக்கார வச்சிருக்கேன்ல.. அந்த நன்றி கூட இல்லாம இப்படிதான் பேசுவ.. இப்போகூட என்ன இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டிங்க.. நாங்கெல்லாம் என்ன செத்தா போய்ட்டோம்னு எங்க சொந்தக்காரங்கள்ல இருந்து பக்கத்துக்கு ஊரு ஜமீன் குடும்பம் வரைக்கும் போன் மேல போன் போட்டு ஒரே குடைச்சல்.. பதில் சொல்ல முடியல.. எல்லாத்தையும் பொறுத்துகிட்டு என் பையனுக்கு மருமகளா உன்னைக் கொண்டு வந்தா அதுக்கு நீ கொடுக்கிற மரியாதை இதுதானா" என்று வாய்மேல் பல்லைப்போட்டு பேச மல்லிக்கு எரிச்சல் முட்டியது..
"இப்போ என்ன நன்றியில்லாம நடந்துட்டாங்க.. ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க.. எனக்கு நிறைய வேலையிருக்கு.. என்ன விஷயம் சொல்லிட்டு வைங்க".. என்றாள் கடுப்புடன்..
"எப்பா.. என்ன பேச்சு பேசறா.. சொல்லிடறேன்டியம்மா.. ஊர்ல இல்லாத மருமகளை கொண்டு வந்துருக்கேன்னு உனக்கு வளைகாப்பு பண்ண முடிவு பண்ணியிருக்கேன்.. ரிஷிக்கிட்டே கூட சொன்னேன்.. ஆமா இவளுக்கு வளைகாப்பு ஒண்ணுதான் கொறைச்சல்.. எல்லாம் தண்ட செலவுன்னு அவனும் அலுத்துகிட்டான்.. இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே.. பண்ணிதானே ஆகணும்.. ஒண்ணுமில்லாத மருமகளாய் இருந்தாலும் எங்க குடுமபத்துக்குன்னு மானம் மரியாதை இருக்குல்ல.. அதுக்காகவாது இந்த வளைகாப்பை நடத்திதானே ஆகணும்".. என்று இடித்துரைக்க மல்லிக்கு அவள் பேசியது மேலும் மேலும் வேதனையை கூட்டினாலும் அனைத்தையும் தாண்டி ரிஷி அப்படி கூறினான் என்ற சிவகாமியின் வார்த்தைகள் மனதை பாறாங்கல்லாய் அழுத்தியது.. அவனுடன் கொஞ்சி கழித்த நாட்களில் யாரேனும் இப்படி அவதூறு பேசியிருந்தால் அது பெரிய விஷயமாய் வந்திருக்காது.. நம்பியிருக்க மாட்டாளோ என்னவோ.. ஏற்கனவே புரிதலும் இல்லாமல் பிரிவில் தவிக்கும் இன்றைய நாட்களில் ரிஷி அப்படி சொல்லியிருப்பான் என பரிபூரணமாக நம்பினாள்..
"எனக்கு வளைகாப்பெல்லாம் ஒன்னும் வேணாம்".. இறுகிய மனதுடன் அழுகையும் மரத்துப் போய் மல்லி கூற.. "அப்படி சொன்னா எப்படிமா.. உன் வயித்துல வளர்றது எங்க குடும்ப வாரிசு.. உனக்காக செய்யல.. உன் வயித்துல வளர்ற எங்க வாரிசு நல்லா இருக்க இதெல்லாம் நாங்க செஞ்சுதான் ஆகணும்.. அதை வேணாம்னு மறுக்கவோ அவமதிக்கவோ உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. உன்கிட்டே ஒருவார்த்தை சொல்லிவைக்கணும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. சரி நான் வச்சிடறேன்".. என வைத்துவிட்டாள்.. மொத்தத்தில் மல்லி வளைகாப்பு மேடையில் மனநிறைவுடன் கணவனின் அன்பில் பூரித்து நிற்கக்கூடாது.. மாறாக கூனிக்குறுகி மனதில் நிறைந்த கவலையுடன் நிற்க வேண்டும்.. அதற்கு சிறப்பாக வித்திட்ட பிறகுதான் சிவகாமிக்கு மனம் குளிர்ந்தது..
போனை வைத்த மல்லிக்கு வாழ்க்கையே பாரமாகிப் போனது.. வயிற்றில் சுமந்திருக்கும் கருவை மனதார கொண்டாட முடியவில்லை.. ஏற்கனவே கணவனின் அருகாமை கிடைக்காமல் படுமோசமாய் ஏங்கித்தவித்த மனம்.. இன்னும் இது போன்ற வார்த்தைகளை கேட்டு உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது.. முகம் வடிந்து களையிழந்து போயிருக்க செயலற்ற பொம்மை போல வளம் வந்தாள் அன்று முழுவதும்.. பிரச்சினைகளை பேசித்தீர்க்க ஆளின்றி மனதுக்குள் போட்டு புழுங்கினாள்.. மாமியிடம் சொல்லவும் வழியில்லை.. ஏனோ ஓரளவிற்கு மேல் மாமியிடம் கொட்டித்தீர்க்க முடியவில்லை..அரவணைக்க வேண்டிய கணவனும் வெகுதூரம் தள்ளி நிற்பதாய் உணர்ந்த பேதைக்கு ஏனோ மன உளைச்சலில் மூச்சு முட்டியது.. அனாதை.. வேலைக்காரி போன்ற வார்த்தைகள் வேதனையின் உச்சத்திற்கு இட்டுச் சென்றது அவளை.. தனிமையில் மவுனமாக கண்ணீர் விட்டாள்..
மறுபுறம் ரிஷி தன் மல்லியின் வளைகாப்பிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.. விலையுயர்ந்த காஞ்சி பட்டு.. நகைகள்.. மண்டபம்.. உணவு.. ஏன்.. ஜாக்கெட் கூட தைக்க கொடுத்துவிட்டான்.. பிரபலமான அழகுநிலைய நிபுணரை அலங்காரத்திற்கு புக் செய்தான்.. இது எதுவுமே மல்லிக்கு தெரியவில்லை..
அன்றிரவு வீட்டுக்கு வந்து சோர்வுடன் சோபாவில் வந்து விழுந்த ரிஷியின் முன் வந்து நின்றாள் மல்லி.. நிறைமாத வயிற்றில் ஒரு கைவைத்து சிகப்பு நிற காட்டன் புடவை குட்டியாக கைவைத்த ஜாக்கெட்.. நெற்றியில் கொஞ்சம் பெரிய பொட்டு.. மலர்ந்து சிவந்த உதடுகள்.. செழுமையான கன்னம்.. முறைக்கும் விழிகள்.. தன்னிடம் கோபம் காட்டும் முகம்.. என வந்து நின்றவளை என்ன ஏதென்று கேட்காமல் சோபாவில் சாய்ந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. இல்லை ரசித்துக் கொண்டிருந்தான்..
"உங்ககிட்டே பேசணும்".. என்றாள் அவள்.. "பேசு".. அவன் பேச்சு எப்போதும் போல தெனாவட்டுடன்..
"எனக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா".. என்று நேரடியாக விஷயத்திற்கு வர ரிஷியின் முகம் ஒரு நிமிடம் மாறியது.. எல்லாம் சஸ்பென்சாக முடித்துவிட்டு அவளிடம் மன்னிப்பு கேட்டு சமரச பேச்சு வார்த்தை நடத்தி மடியில் போட்டு கொஞ்சி பின் வளைகாப்பு பற்றி சொல்லலாம் என்று கனவு கண்டிருக்க சப்பென ருசியே இல்லாமல் போட்டுடைத்த மனைவியை ஏமாற்றத்துடன் பார்த்தான்..
"யாரு சொன்னாங்க".. என்றான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்..
"அத்தை சொன்னாங்க"..
"ஓஹ்".. என திரும்பிக் கொண்டான்..
"இப்போ எதுக்கு எனக்கு வளைகாப்பெல்லாம்.. தேவையில்லாத தண்ட செலவுதானே.. நிறுத்திடுங்க".. அவன் முகம தவிர்த்து எங்கோ பார்த்துக் கொண்டு கூற விலுக்கென திரும்பி அவள் முகம் பார்த்தான் ரிஷி.. அவளும் அவனை நோக்கினாள்.. "நீ சொன்னதுதானே.. அதை திருப்பி சொன்னேன்" என்ற பதிலடி அவள் விழிகளில்.. ஆனால் அவன்தான் சொல்லவே இல்லையே.. தன் அன்பை காதலை புறக்கணித்து எடுத்தெறிந்து பேசும் மனைவியின் மேல் கோபம் சுர்ரென எற.. "ஆமா தண்டச்செலவுதான்.. ஆனா உனக்காக இல்ல.. என் குழந்தைக்காக.. அதை வேணாம்னு சொல்ற உரிமை உனக்கு இல்ல".. என்று எழுந்து செல்ல.. கண்ணீருடன் அவன் முன் நின்றாள் மல்லி..
"அப்போ எனக்காக எதுவுமே செய்ய மாட்டிங்களா".. என்று ஏக்கம் படிந்த விழிகளுடன் கேட்க.. மறுபடியும் மொதல்ல இருந்தா.. எப்போது என்னை புரிந்து கொள்வாயாடி.. என்று சலிப்பாக இருந்தது அவனுக்கு.. களைத்து வரும் தனக்கு அவள் மாடி கிடைப்பதில்லை.. தஞ்சம் புக அவள் மார்பு கிடைப்பதில்லை என்ற கோபம் விரக்தி.. சோர்வு வேறு.. அலுவலகத்தில் வேலைப்பளு வேறு அவனை ட்ரில் எடுக்க.. அவன் அணைப்புக்கு பசுவை நாடும் குட்டிக் கன்றாய் ஏங்கினான்.. ஆனால் எப்போதும் முறுக்கிக்கொண்டு நிற்கும் மல்லியின் மேல் கோபம் பொங்கியது.. இருவருக்கும் துணையின் தேவை அளவுக்கதிகமாக இருந்தாலும் வெளியில் வெறுப்பை காட்டிக்கொள்ளவே விரிசல் அதிகமானதோ என்னவோ.. நீயாக வா.. என்மீது உனக்கு அன்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்.. என்ற ஈகோ இருவருக்குள்ளும்..
"உனக்காக நான் எதுக்கு செய்யணும்.. நீ யாருடி எனக்கு.. எல்லாம் என் பிள்ளைக்காக மட்டும்தான்.. செம கடுப்புல இருக்கேன்.. தள்ளிப்போ அங்குட்டு".. என எரிந்து விழுந்து சென்றவனின் முதுகையே வெறித்துப் பார்த்தாள் மல்லி.. அவளைப் பொறுத்தவரை சிவகாமி சொல்லிதான் விருப்பமில்லாமல் ரிஷி வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறான்.. இவ்வளவுதான் வாழ்க்கையா.. வரதட்சணையும் பணமும்தான் திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது இங்கே அல்லவா.. கண்ணீரை துடைத்துக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து விட்டாள்.. விடிய விடிய உறங்கவில்லை.. ரிஷி வந்து "தூங்கலையா" என்று அதட்ட "உங்க வேலையை பாருங்க" என கத்தினாள்.. திமிற திமிற அவளை தூக்கிச்சென்று படுக்கையில் போட்டு.. பாலைக் காய்ச்சி கொண்டுவந்து புகட்டினான்.. "குழந்தை பிறக்கிறவரை நீ என் கண்ட்ரோல்தான்".. என்று மிரட்டி பின் கட்டியணைத்து உறங்கிவிட்டான்.. ஏனோ அவன் அணைப்புகூட நெருப்பாய் தகித்தது மல்லிக்கு..
காலையில் அவனை வழியனுப்ப வாசலில் வந்து நின்றாலும் முறைத்துக் கொண்டே நிற்பாள்.. சிரிப்பு வந்தாலும் உதட்டுக்குள் அடக்கி எதையும் வெளியே காட்டாமல் வண்டியெடுத்து செல்வான் ரிஷி.. மனதளவில் மிகவும் சோர்ந்து போனாள் மல்லி..
நாள் முழுக்க யோசித்து ஒரு முடிவெடுத்தவள் அடுத்த நொடியே வினய்க்கு அழைத்திருந்தாள்..
"அண்ணா"..
"சொல்லுடா"..
'எனக்கு ஒரு உதவி செய்யணுமே"..
"சொல்லும்மா"..
"நீங்க நாளைக்கு நேர்ல வர்றீங்களா.. உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்".. என்று வினவ.. "சரிடா நான் வரேன்".. வைத்துவிட்டான் போனை..

பணம் இருந்தாலும் இல்லனாலும் மாமியார் மட்டும் மாறவே மாட்டாங்க பத்தாகுறைக்கு இந்த முனிக்கு வேற கோவ முனி புடிச்சி ஆட்டுது 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤷♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
இந்த கிறுக்கி ஏதோ பெருசா குண்டைத் தூக்கிப் போடப் போறா🥺... அவனோ அவன் பங்குக்கு சரியா செய்வான் 🙃.... யாப்பா இந்த பைத்தியங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போலயே 😭
அய்யய்யோ என்ன பண்ண போற இவ.... நீங்க பேசாம ஒரு இன்டர் meditator வெச்சா என்ன.... சத்தியமா முடியல.... பேசி தொலைக்க வேண்டியது தானே....
அப்படி என்ன ego...🤦🤦🤦🤦🤦
இப்படி இருந்தா குட்டி எறும்பு கூட போதும் உங்கள பிரிக்க....😒😒😒😒
ஆனாலும் இந்த சிவகாமியா கல்ல கொண்டு அடிக்கணும்.... எவ்ளோ திமிரு... எவ்ளோ பேச்சு.... பையன் நல்ல இருக்கானே..ன்னு happy eh இல்லாம என்ன பொறாமை....👊👊👊👊👊👊