• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அகல் 2

New member
Joined
Apr 18, 2024
Messages
1
படீர்.. படீர்.. என்று ஏதோ உடையும் ஓசை செவிகளைத் தீண்டினாலும் கண் திறக்க முடியவில்லை.. ஆறடிப் பெட்டிக்குள் வியர்வையில் குளித்து உடல் முழுக்க நனைந்து கிடந்தவளின் மூளை இன்னும் விழிப்போடுதான் இருந்தது..

பெட்டியின் மேல் பகுதி முற்றிலுமாக உடைக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டது.. யாரோ மெல்ல அவளை தூக்கி வெளியே மண்ணில் கிடத்தி முகம் தொட்டு ஸ்பரித்த வேளையில் உடல் ஒருமுறை அதிர்ந்து அடங்கினாலும்.. தனக்கு தீங்கு தராத ஏதோ ஒரு மனிதரின் அரவணைப்புக்குள் அடங்கியிருந்ததை தன் ஆழ்மனதின் மூலம் உணர்ந்து கொண்டிருந்தாள் அகல்.. சம்பந்தப்பட்ட உருவம் அவள் கன்னம் தட்டி உலுக்கியதிலும்.. தங்கு தடையின்றி காற்றோடு கலந்திருந்த ஆக்சிஜன் அவள் நுரையீரலை சென்றடைந்ததிலும்.. குரல்வளையிலிருந்து ஒரு பெரிய சத்தத்தோடு காற்றை உள்ளிழுத்து குட்டி குட்டி மூச்சுகளாக வேகமாக வெளியே வெளியேற்றியதில் இருமலோடு முதல் முறையாக சுவாசிக்க பழகும் குழந்தை போல மூச்சு விடத் திணறினாள் அகல்விழி..

"அம்மா.. அகல்ம்மா.. எழுந்திரு எழுந்திரு கண்ணு.. இந்த கிராமத்து ஜனங்க வர்றதுக்கு முன்னாடி இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சு போயிடு".. தன்னைக் காப்பாற்ற எண்ணி பதைபதைப்போடும் அவசரத்துடனும் பேசியதில் அந்தக் குரலின் சொந்தக்காரர் யார் என்று தெரிந்து கொண்டிருந்தாள்.. தான் பிறப்பதற்கு முன்னிருந்து தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் நன்றி உணர்ச்சி கொண்ட மனோகரன் அவர்.. சுவாசம் கொஞ்சம் கொஞ்சமாக சீரானதில் மெல்ல விழிகளை திறந்தாள் அவள்..

பலஹீனமாக சுவாசித்துக் கொண்டிருந்த பெண்ணவளை தூக்கி அமர வைத்தார் மனோகர்.. மந்திர சக்கரத்தில் கோழியின் தலையோடு ரத்தம் சிதறி கிடக்க.. அதனை சுற்றி மூன்று பேரும் ஒவ்வொரு திசையில் வாயில் குருதி கீற்றோடு மயங்கி கிடந்ததை கண்டு.. திகைப்போடு மனோகரை நோக்கினாள்..

அவள் பார்வையில் தொக்கி நின்ற கேள்வியை புரிந்து கொண்டு.. "நான் தான் நான் தான்மா இவங்க குடிச்ச பானகத்தில் விஷத்தை கலந்துட்டேன்.. உன்னை பலி கொடுக்க வந்தவங்க தெய்வத்தோட கோபத்துக்கு ஆளாகி இப்படி ஒரு நிலைக்குப் போனதா இந்த கிராமம் நம்பட்டும்.. அப்பதான் திருப்பி இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்ய மாட்டாங்க".. என்றார் மயங்கி கிடந்தவர்கள் மீது கோபமாக பார்வையை பதித்து..

"அய்யோ.. அவங்க பா.. பாவம் இல்லையா".. சற்றே சிரமப்பட்டு மூச்சு விட்டவளாக அவர்களை படபடப்போடு நோக்கினாள் அகல்.. "ஏற்கனவே என் மேல இருக்கிற பழி போதாதா மனோ மாமா?".. என்று அவரைப் பார்த்த பார்வையில் வேதனை மட்டுமே மிஞ்சியிருக்க.. அவள் நல்லுள்ளத்தை கண்டு மனம் வெம்பிய மனோகர்.. "உன்னை கொல்ல வந்தவர்களுக்கு கூட இரக்கம் பார்க்க நினைக்கிற உனக்கு போய் இவ்வளவு பெரிய அநீதி இழைக்க பாக்கறாங்களே இந்த முட்டாள் கிராமத்து ஜனங்க".. என்று தன் மனக்குமுறலை வார்த்தைகளில் பிரதிபலித்தார்..

ஆனால் வருந்துவதற்கோ.. நியாயம் பேசுவதற்கோ இது நேரம் அல்ல என்பதால் அவசரமாக "நீ கவலைப்படாதே தாயி.. விஷமுறிவு மூலிகை வச்சு இவங்களை காப்பாத்திடலாம்.. அவங்க மயக்கத்துல தான் கிடக்கறாங்க.. ஆனா இந்த கிராமத்துல இனிமே நீ ஒரு நிமிஷம் கூட இருக்க வேண்டாம்.. தயவு செஞ்சு இங்கிருந்து எங்கேயாவது போய் நல்லா இருமா.. இங்கே இருக்கிற ஒவ்வொருத்தரும் உன்னை புழுவை விட கேவலமாக நடத்தறதை என்னால தாங்கிக்கவே முடியல.. இளவரசி மாதிரி வாழ்ந்த பொண்ணு.. இப்படி பிச்சைக்காரியை அடிச்சு துரத்துற மாதிரி எல்லோரும் உன்னை அசிங்கப்படுத்துறதை பார்த்து என் மனசு தவியா தவிக்குது.. என்னால முடிஞ்ச சின்ன உதவி தான் இது.. இந்த மூணு பேருக்கும் இப்படி ஒரு நிலை வந்ததால இனிமே யாரும் உன்னை தேடக் கூட மாட்டாங்க".. என்றார் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே..

"நீங்க செய்ற உதவிக்கு எப்படி நன்றி கடன் செலுத்த போறேன் மனோ மாமா".. என்றாள் கண்கள் கலங்கி உணர்ச்சி நிறைந்த குரலில்..

"உங்க அப்பா என்னை போல வேலையாட்களுக்கு செஞ்ச பெரிய பெரிய உதவிகளுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. பேச நேரம் இல்ல.. தயவு செஞ்சி எங்கேயாவது தப்பிச்சு போயிடுமா வா".. என்று அவள் கைப்பற்றி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார் மனோகர்..

நடக்க முடியாத போதிலும் அவர் இழுவிசைக்கு கட்டுப்பட்டு வேகமாக அவருடன் நடந்து கொண்டிருந்தாள் அகல்..

"மா..மாமா.. மாமா.. நடக்க முடியல".. ஈனஸ்வரத்தில் ஒலித்த குரலோடு எச்சில் விழுங்கிக் கொண்டு கண்களை மெதுவாக மூடி திறந்தவளுக்கு.. கால்கள் துவளும் நிலை..

"இன்னும் கொஞ்ச தூரம் தான்மா எப்படியாவது உன்னை கொண்டு போய் ஊர் எல்லையில் விட்டுடறேன்.. அங்கிருந்து எப்படியாவது தப்பிச்சு ஓடிடு.. இனிமே இந்த கிராமத்து பக்கம் திரும்பியும் பார்க்க வேண்டாம்".. அவசரத் தன்மையோடு பேசியவாறு அவளை இழுத்துக் கொண்டு ஓடியதில் இருவரும் அரை மணி நேரத்தில் ஊர் எல்லையை அடைந்து விட்டனர்..

காத்து கருப்பு ஊருக்குள் நுழையாமல் இருப்பதற்காக மந்திரிக்கப்பட்ட இரும்பு கம்பி வேலிகளின் நடுவே போடப்பட்ட ஒற்றை ராட்சதக் கதவு பூட்டியிருந்ததில் இடுப்பில் சொருகியிருந்த சாவிக்கோத்திலிருந்து ராட்சத கதவிற்கு ஏற்ற அந்த பெரிய சாவியை தேடிக் கண்டுபிடித்து கதவைத் திறந்து சிரமப்பட்டு அதை வெளிப்பக்கமாக தள்ள.. அவருக்கு உதவி புரிந்தாள் அகல்..

"பரவாயில்லைம்மா.. நான் பாத்துக்குறேன்.. நீ போயிடு.. தயவு செஞ்சு ஓடி போயிடூ".. கயலின் கைப்பிடித்து சிறிது தூரம் அழைத்து சென்று விட்டவர் "போயிடுமா போயிடு".. என்று திரும்பத் திரும்ப அதே வார்த்தையை அழுத்தி சொன்னதில்.. எங்கே செல்வது யாரிடம் செல்வது என்று புரியாமல் அத்திசையிலிருந்து ஓட முயன்றவள் கடைசியாக ஒரு முறை மனோகரை திரும்பி பார்க்க.. மழை காணாத அந்த கிராமத்தில் எங்கிருந்து தோன்றியதோ வெறிபிடித்த அந்த நெருப்பு மின்னல்.. சடாரென அவர் மீது பட்டு தேகம் திகதிகுவென பற்றியெறிய.. எதிர்பாராத இந்த சம்பவத்தில்.. பெரிதாக விரிந்த அவள் கண்களில் மனோகரனின் உருவம் எரிவது பிரதிபலிக்க.. "ஆஆஆஆஆஆஆ.. மனோ மாமாஆஆஆஆ".. என்று தொண்டை கிழிய அலறினாள் அகல்..

"அம்மா.. ஆஆஆ.. அம்மா.. ஆஆஆஆ.. எரியுதே.. அய்யோஓஓஓ".. என்று அலறித் துடித்துக் கொண்டே அங்கும் இங்குமாக ஓடினார் அவர்.. ஒரு கட்டத்தில் உடல் முழுக்க கருகி மண்ணில் விழுந்தவரை கண்டு மூச்சுக்களை மட்டுமே வெளியேற்றும் சிலையாக நின்று கொண்டிருந்தவள் சிந்தை முற்றிலும் துடைக்கப்பட்டதாக.. அகல்விழிக்கு உதவி புரிந்ததற்காக அவருக்கு கிடைத்த நற்பலன் இது..

கண்களை சுழட்டி கொண்டு வந்த மயக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றவளுக்கு பக்கவாட்டில் ஏதோ ஒரு பயங்கர உருவம் நெருப்பாய் தகித்ததில் முதுகு தண்டு சில்லிட நடுக்கத்தோடு மெல்ல திரும்பினாள்..

கரிய நிறத்தில் அகோரமாய் ஒரு ஆண் அரக்கன் ரத்தம் வழிய அவள் முகத்தின் நெருக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.. கண்கள் சிவந்து கூரிய பற்களுடன் தோள்வரை தொங்கிய சடை முடியோடு.. பார்ப்பதற்கே குரூரமாக இரண்டு கொம்புகளோடு தன் நீண்ட நாக்கை நீட்டி அவளை சுழட்டி விழுங்க காத்திருக்கும் அவன் தான் இத்தனை நாட்களாக கனவிலும் நேரிலும் தனிமையிலும் அவளை துன்புறுத்தி பயமுறுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்..

நெருக்கத்தில் அவனை கண்ட அச்சத்தில் உடல் முழுக்க ரத்தம் சுண்டி போனதாய் உணர்ந்தவள்.. ஆ..ஆ..ஆ.. என்று மூச்சுக்கு திணறி ஒரு கட்டத்தில் மொத்த பயத்தையும் ஒன்று திரட்டி ஆஆஆஆஆ.. என்று அலறினாள்..

ஊராரின் புறக்கணிப்பில் தவித்துக் கொண்டிருப்பவள் இந்த அரக்கனின் அச்சுறுத்தலில் யாரிடமும் சொல்ல முடியாத நரக வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள் இதுநாள்வரை.. ஓட ஓட விரட்டும் ஏவல் அரக்கன் மருஷாட்சசன்.. நரக உலகின் முதல் வாசலின் பாதுகாவலன்..

தானாக முன்வந்து ஊர்மக்கள் அகல்விழியின் ஆன்மாவை அவனுக்கு பலி கொடுக்க வேண்டும் என்பது எழுப்படாத விதி.. அப்பழுக்கில்லாத அவள் ஆன்மாவிற்கான இத்தனை நாள் காத்திருப்பு வீணாகிப் போனதே..

அந்த விதியை மாற்றி அவளை காப்பாற்றிய மனோகர் மீது தன் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டியிருந்தான் மருஷன்.. இதோ காதால் கேட்க முடியாத கொடூரமான ஒலியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் அவன் கோர உருவம் கண்டு அங்கேயே மயங்கி சரிந்தாள் அகல்..

"உன்னை காப்பாற்ற முடியாது பெண்ணே.. யாராலும் என்னிடமிருந்து உன்னை காப்பாற்ற முடியாது.. உன்னை தனிமைப்படுத்தி.. அனைவராலும் வெறுக்க செய்து உன் ஆன்மாவை எனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி.. அந்த விதி இன்று பொய்த்துப் போயினும் என்றாவது மெய்யாகியே தீரும்".. என்று இடிமுழக்க குரலோடு எக்காளமிட்டு சிரித்தான் அந்த கொடூர மருஷன்..

"உன் மீது நேசம் கொண்டு உனக்காகவே துடிக்கும் ஒரு ஆன்மா.. உன்னையே உயிராக நினைக்கும் ஒரு ஜீவன்.. உனக்காக சகலத்தையும் ஏன் உயிரையும் தியாகம் செய்ய முன்வரும் ஒரு மனிதன் மட்டுமே.. இச்சாபக்கட்டிலிருந்து உன்னை காப்பாற்ற இயலும்"..

"உன் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக அவன் கூறப்போகும் இந்த ஒற்றை வார்த்தை மட்டுமே.. இந்த மருஷாட்சனை அழிக்கும் ஆயுதம்".. என்ற மருஷனின் இரத்த விழிகள் பளபளத்தன..

"அப்படி ஒரு ஆயுதம் இனி வரப்போவதில்லை.. அப்படியே வந்தாலும் அவனுக்கும் இதே கதி தான்" என்று எரிந்து கருகிப் போயிருந்த மனோகரனை காட்டி.. சர்வ லோகமும் அஞ்சி நடுங்கும் அளவிற்கு கர்ஜித்தான் மருஷன்..

தனக்கு இப்படி ஒரு சாப விமோசனம் உண்டு என்று தெரியாமல் கண்ணெதிரே தன்னை விழுங்க காத்திருக்கும் அரக்கனின் முன்பு மயங்கி கிடந்தாள் அகல்..

காக்கி உடையின் கம்பீரத்தோடு வில்லேற்றிய நாணாக விரைத்து நின்ற அவன் கட்டுடல் மேனியும் ஆணவனின் ஆளுமையை பல மடங்கு கூட்டியிருந்ததில் அவன் முரட்டுத்தனமான அழகில் மயங்கி.. பின்புறம் வந்து கட்டிக் கொண்டாள் மதுஷா..

ஆளுயர கண்ணாடியில் திருத்தமாக வெட்டி அடக்கப்பட்டிருந்த சிகையை கோதியவாறு மிடுக்கான தோரணையுடன் நின்று கொண்டிருந்தவன் இதுவரை காம களியாட்டத்தில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன் என்று மயங்கி கிடந்த மதுஷாவை இப்போது கண்டு கொண்டான் இல்லை.. மோகமும் வேகமும் அவன் நினைத்தால் மட்டுமே உடைப்பெடுக்கும்.. தன்னிலை மறக்கும் பண்பு அவனுக்கு இல்லை..

எப்பேற்பட்ட பேரழகியாக இருந்தாலும் கர்ஜிக்கும் குதிரையாக சீறிப் புறப்பட்டாலும் அதிவேகத்தை கட்டுப்படுத்தும் திறமை அவனுக்குள் உண்டு.. ஒட்டி நின்றவளை சுட்டு விரலால் தொட்டு தள்ளி நிறுத்தியவன் "ட்யூட்டிக்கு டைம் ஆச்சு" என்றான் இறுகிய முகத்தோடு.. காமரசம் வழிந்தோடிய அந்த மன்மதனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத விபீஷணன் இவன்..

எப்பேர்ப்பட்ட கொடூர ஆண்மகனாக இருந்தாலும் காமம் கொண்ட பெண்டீரிடம் தேவை தீர்ந்தபின் கொஞ்சி கெஞ்சி தன் நன்றி உணர்வை வெளிப்படுத்துவது வழக்கம்.. அந்த பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை போலும்.. உன் தேவையை தீர்த்து விட்டேன்.. பணமும் கொடுத்தாயிற்று.. இனி நீ வேறு நான் வேறு.. என்பதுதான் அவன் பாலிசி.. ஆனால் பாவம் மதுஷா தான் இது புரியாமல் அவனிடம் மயங்கி கிடக்கிறாள்.. சமீப காலமாக அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் அவளுள் வேரூன்றி கிடக்கிறது.. இன்று அதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று எண்ணத்தோடு தான் அவன் வீட்டிற்கு வந்தது.. வந்தவளை பேசவிடாமல் படுக்கையில் கிடத்தி அவன் வேலைகளை முடித்துக் கொண்டு பணத்தையும் கையில் திணித்து இப்போது வெளியே அனுப்ப பார்க்கிறான்.. மதுஷா சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பேரழகி..

"வினா.. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.. என்று நின்றவளை தன் காக்கி பேண்டில் பெல்ட்டை மாட்டிக் கொண்டே.. என்ன என்பது போல் விழிகளை மட்டும் நிமிர்த்தி பார்த்தான் அவன்..

"அது.. நான் உங்களை காதலிக்கிறேன் உங்களை கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஆசைப்படறேன்".. நாகரீக மங்கை சுற்றி வளைக்காமல் தன் விருப்பத்தை உடனடியாக கூறிவிட.. பதிலுக்கு இளக்கார புன்னகையை மட்டுமே இதழ்களில் தேங்கவிட்டு.. "என்னை கல்யாணம் செஞ்சுக்கிறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குனு நினைக்கிறே".. என்றான் இரண்டு புருவங்களையும் ஏற்றி இறக்கி நக்கலோடு..

தகுதி என்ற வார்த்தையை பயன்படுத்தி தன் சுயமரியாதையை தூண்டி விட்டதில் "ஏன் நான்.. அழகா இருக்கேன்.. உங்களை காதலிக்கிறேன்.. இதை விட பெருசா என்ன தகுதி வேணும்னு எதிர்பார்க்கிறீங்க".. என்றாள் சற்றே கோபத்துடன்..

"பணம் வேணும்.. நிறைய பணம் வேணும்.. எனக்கு பொண்டாட்டியா வரப் போறவங்களுக்கு அப்சரஸ் மாதிரி அழகோட கோடிக் கணக்கான பணமும் இருக்கனும்.. அப்படி ஒருத்தியால மட்டும் தான் இந்த விபீஷணனை சொந்தம் கொண்டாட முடியும்".. என்றான் கர்வத்தோடு..

"ஓஹோ அப்படியா.. அப்படி எந்த மில்லினியர் ராஜகுமாரி உங்களை கல்யாணம் பண்ணிக்க காத்திருக்காளாம்?".. மார்பின் குறுக்கே கைகட்டி எள்ளல் பார்வையோடு கேட்ட மதுஷாவின் குரலிலும் நக்கல் வழிந்தோடியது..

அந்நேரம் இருவருக்கும் பதில் சொல்லும் விதமாக காதுகளுக்கு இதமான மெல்லிசையோடு அலைபேசி ஒலித்தது.. திரையில் தெரிந்த பெயரை கண்டதும் விபீஷணனின் இதழ்கள் விரிந்தன.. தனது ஐபோனை கையிலெடுத்து அவளிடம் காண்பித்தவன் "இந்த விபீஷணனை சொந்தம் கொண்டாட போகும் மில்லேனியர்.. என்னோட ராஜகுமாரி.. மிருணாளினி"..
இந்த விபீஷணன் சக்ரவர்த்தியோட ஃபியான்சே".. என்று ஆணவத்தோடு சொல்லிக் கொண்டிருந்தவனை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மதுஷாவின் முகம் தீடிரென ரத்தம் சுண்டி போனது போல் வெளிறியது அவன் முகம் நிறம் மாறியதில்..

சடுதியில் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் குரல்வளையை பற்றியிருந்தான் விபீஷணன்..

"யார்கிட்ட குரலை உயர்த்தி பேசறே ஹான்?.. கொன்னு கடல்ல தூக்கி போட்டுருவேன்.. உன் வேலையை இந்த படுக்கையோடு நிறுத்திக்க.. எல்லை மீறி உரிமை எடுத்துக்கிட்டு என்கிட்ட நெருங்க நெனச்சா அடையாளம் தெரியாம அழிச்சிடுவேன்" என்றவனின் செவ்வரியோடிய விழிகளில் என்ன கண்டாளோ.. தனது கைப்பையை தூக்கிக் கொண்டு வேகமாக அங்கிருந்து ஓடியிருந்தாள்.. வாசலை தாண்டும் போது "பணம் தின்னும் ராட்சசன்".. பற்களை கடித்து அவள் இதழ்கள் வெறுப்போடு முணுமுணுத்தது காதுகளில் விழுந்தாலும் அதை ரசனையோடு உள்வாங்கிக் கொண்டான் அவன்..

வெகு நேரம் அழைத்துக் கொண்டிருந்த அலைபேசி அடங்குவதற்குள் ஆன் செய்து காதில் வைத்த அடுத்த கணம்.. எதிர்முனையில் வந்த கொஞ்சல் மொழிகளுக்கு பதிலாக.. "ஓஹ்.. ஐ மிஸ் யூ டூ பேபி.. லவ் யூ டா".. என்று ஏகப்பட்ட முத்தங்களை கொடுத்து அலைபேசியை நனைத்து வைத்தான் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத காதல் மொழிகளோடு..

மெல்ல விழிகளை திறந்தாள் அகல்.. இன்னும் இருள் நீங்காத அந்தகார இருட்டு அவள் உடலை வெடவெடக்க செய்து அச்சுறுத்தவும்.. சிரமப்பட்டு வேகமாக எழுந்தவள் கருகி சாம்பலாக கிடந்த மனோகரனை கண்டு அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய அழுகையோடு கதறிக்கொண்டே அவர் சடலத்தை நெருங்க முற்பட.. மூர்க்கத்தனமான சத்தத்தோடு அங்கு வீசிய காற்றையும் பயமுறுத்தியது அந்த குரல்..

"போ.. போ.. ஊருக்குள்ள போ".. என்ற கொடூரமான குரலில் உடல் மொத்தமும் தூக்கி வாரி போட.. தள்ளி விழுந்தவள் சில நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு எரிந்து கிடந்த மனோகரனின் பிரேதத்தை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள் அகல்..

"ஊர் எல்லைக்குள்ள போ" என்று.. அந்த சுற்று வட்டாரத்தை நடுநடுங்க செய்த மருஷனின் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்ததில்.. "ஆஆஆஆ".. என்று அச்சத்தோடு அலறியவள் வேறு வழி தெரியாது எழுந்து மிக வேகமாக ஊருக்குள் ஓடியிருந்தாள்.. ஊர் எல்லையை மிதித்து உள்ளே ஓடிய அடுத்த கணம் அந்த ராட்சச கதவு படு வேகமாக அடித்து சாத்திக் கொண்டது..

ஆன்மாவை விழுங்க காத்திருக்கும் ராட்சசன் ஒருவன்.. பணத்தின் மீது மோகம் கொண்டு உயிரையும் எடுக்க தயங்காத ராட்சசன் இன்னொருவன்.. எந்நேரமும் உயிரை பறிக்க காத்திருக்கும் விஷத்தைக் கக்கும் முள்வேலிகள் கொண்ட இரும்பு கூண்டில் அடைபட்டு கிடக்கும் பெண்ணோருத்தி.. இதில் அவள் மீது நேசம் கொள்ள போகும் அந்த ஜீவன் யார்?..

தொடரும்..
Next episode epo sis
 
New member
Joined
Jan 31, 2024

வாவ் செம சூப்பர் டியர் 🥰
 
Top