• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
50
அமைதியான விடியற்காலையில் எங்கோ மெல்லிசையாக செவிகளை தீண்டும் பூபாள ராகம் மிகப் பிடிக்கும் உமா மகேஸ்வரிக்கு.. ஆனால் வழக்கமான காலைப் பொழுதுகள் அதிரடியாக அல்லவா விடிகின்றன..

அதுசரி.. அதிரடி சண்டை நாயகனை திருமணம் செய்து கொண்டதன் விளைவோ என்னவோ!!..

நெருங்கி படுத்திருப்பவனின் கைகால்கள் எங்கேனும் பொத்தென மலைபாம்பு போல் மேலே விழும்.. நெஞ்சம் திக்கென்று இழுத்துப் பிடிக்க.. ஒவ்வொரு நாளும் திகில் நிறைந்த அதிகாலையாக விடியும் அவளுக்கு மட்டும்.. நல்லவேளையாக இதுவரை அவள் கழுத்தில் கைகாலை போட்டு நெருக்கிப் பிடித்து அழுத்தவில்லை.. அதுவரை சந்தோஷம்..

அருகே படுத்திருக்கும் பூச்செண்டு அன்னையின் சேலைத் தலைப்பை பிடித்துக் கொண்டு உறக்கத்திலும் அவள் மார்பைத் தேடி வாயைக் குவித்து உறங்கும் காட்சி மட்டுமே அவளை ஆசுவாசப் படுத்துவதாய்!!..

மெத்தை மேல் பூனையாக இருவரையும் கடந்து கீழிறங்க முயன்றால்.. "ஏய்ய்ய்ய்".. என்ற சத்தத்தோடு அவன் கரங்கள் காற்றில் அலைபாய்ந்து புடவை முந்தானையை இழுக்க முயலும்.. சிக்கிவிட்டால் மீண்டும் படுக்கையை விட்டு அகல இரண்டு மணி நேரங்கள் ஆகிவிடும்.. மலைபாம்பு மான்குட்டியை சுற்றிக் கொண்ட கதையாக அவளை தன்னுள் சுருட்டிக் கொள்வான்..

கணவன்தான்.. ஆனால் வில்லன்.. சினிமாக்களில் நாயகர்களை எதிர்த்து நிற்கும் ஆண்மையோடு கூடிய அழகான எதிர்மறை கதாநாயகர்கள் யாரை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம்.. அப்படி ஒரு முகவெட்டு.. வசீகரிப்பான்.. அடுத்த கணமே இறுகிய தாடையும் கூர் விழிகளும் அச்சுறுத்தும்.. சிரிப்பதில் கூட ரேஷன்கடை கஞ்சத்தனம்.. அப்படி ஒரு காட்சியெல்லாம் காணக் கிடைக்காத அதிசயம்..

கீழுதட்டை கடித்துக் கொண்டு சத்தம் வராமல் உறங்கிக் கொண்டிருந்தவனின் கரத்திலிருந்து தன் புடவையை உருவிக்கொள்ள முயன்றாள்.. இரும்பு கடப்பாறையை இறுக்கிப்பிடிப்பவனின் கரங்களுக்கு அந்த நூல் புடவை ஒன்றும் கடினமில்லையே!!.. அவள் மார்பிலிருந்து விலகிய புடவையை கையில் சுருட்டி வைத்திருந்தான் அவன்.. அசுர தாண்டவன்.. தாண்டவன் அவன் இயற்பெயர்.. முன்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் அசுரன் அவனாக சேர்த்துக்கொண்டது.. யாரும் பெரிதாக ஆட்சேபிக்க வில்லை.. குணமும் அப்படித்தானே!!..

எப்படியாவது விடுபட வேண்டும் என்று எண்ணத்தோடு.. முள்ளின் மேல் பட்ட சேலையை கிழியாமல் எடுப்பது போல் கவனமாக அவன் கரத்திலிருந்து தன் புடவையை உருவி கொள்ள முயன்று கொண்டிருந்தாள்.. உறங்கும் புலியை தாண்டி கூண்டைவிட்டு வெளியே செல்ல படாத பாடு படும் சிறு எலி போல் நிதமும் இந்தப் போராட்டம் தான்.. இம்முறையும் இறுதி கட்டத்தில் அவள் போராட்டம் பரிதாபமாக தோல்வியை தழுவியது.. புலி கண்களை திறந்து கொண்டது.. வேல்விழி என்பார்களே அதுபோல் எதிரே நிற்பவர்களை துளைத்தெடுக்கும் கூர்விழிகள்.. அடர்த்தியான புருவம்.. இரண்டு நிமிடங்கள் சேர்ந்தாற் போல் உற்றுநோக்கினால் எதிரே நிற்பவர்களின் இதயம் சற்று ஆட்டம் காணும்.. எந்த தவறும் செய்யாது போனாலும் சரி.. அப்படி ஒரு பார்வை.. ஒரு விஷயம் தான் அவளுக்கு புரியவில்லை.. எப்படி ஒரு மனிதனால் இருபத்தி நான்கு மணி நேரமும் இறுக்கத்தோடு கோபத்தை இழுத்துப் பிடித்து வலம் வர முடிகிறது.. திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இந்த சந்தேக முடிச்சு அவிழ்ந்த பாடில்லை..

இதோ.. இப்போதும் கூட.. சேலையை சரசரவென உருவி.. கருந்துளை போல் பெண்ணவளை தன்னோடு இழுத்துக் கொண்டு படுக்கையில் உருண்டு.. ஆடைகளை களைந்து அவள் மீது ஆதிக்கம் செலுத்துபவனின் ஆவேச முத்தங்களும் அடங்காத வேகமும் கூட.. மோகமா கோபமா.. என்ற சந்தேகம் வழக்கம் போல் எழுகிறது.. சமாளிக்க முடிவதில்லை.. குழந்தை பெற்று எட்டு மாதங்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில் அவள் மென் தேகத்தோடு இப்படியா முட்டி மோதுவது..

"வலிக்குது".. என்று முனகலோடு அவன் முரட்டு தேகத்தில் நகக் கீறல்கள் பதியும் வரையில் மனமிறங்கி வேகத்தை குறைபதில்லை.. இன்றைக்கு வேண்டாம் என்று சொன்னாலும் விடுவதில்லை.. எதிலும் அவள் விருப்பம் இல்லை.. ஆனாலும் வேண்டாம் என்ற மனநிலையில் சலிப்போடு ஒத்துழைக்க மறுப்பவளை.. கை தேர்ந்த வித்தகனாக.. அவள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி மயக்கி.. கூடலின் இறுதி வரையில் ரசனையோடு பயணம் செய்ய வைக்கும் சாகசக்காரன்.. இந்த மாயவித்தை தான் அவனை விட்டு பிரியாமல் தன்னை கட்டி போடுகிறதோ என்று கூட சில சமயங்களை தோன்றும்.. அடுத்த கணமே "அடச்சீ உடல் சுகத்திற்கு அலைகிறேனா நான்!!".. அன்பு தான் ஆட்சி செய்ய வேண்டும்.. எந்நேரமும் காமத்தோடு கட்டிலில் உருளுவதில் என்ன பேரின்பம் கிடைத்து விடப் போகிறது.. என்ற எண்ணம் தோன்றி வெட்கிப் போக வைக்கிறது..

கிடைக்கிறதே!!.. மயங்கி நிற்கிறேனே!!.. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறேனே!!.. "வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல தாலி கட்டி கிட்டவ நீதானே!! வாடி".. என்று இழுத்து அணைக்கும் போது விலகி நிற்க தோன்றவில்லையே!!.. கூடலில் கூட அனல் கக்கும் அந்த விழிகள் என்னை வசீகரிக்க தானே செய்கின்றன.. எங்காவது நடக்குமா? இப்படி ஒரு கூத்து!!.. கட்டிலில் கூட கோபம்.. இதில் வேறு வெறிக்க வெறிக்க அந்த சிவந்த கண்களையும்.. இறுகிய முகத்தையும் அழுத்தமான உதடுகளையும்.. அடர்ந்த மீசையையும் பார்த்துக் கொண்டே அவரோடு ஒத்துழைக்க வேண்டும்.. ராஜாவின் கட்டளை.. வேறு பக்கம் திரும்பினால்.. "அங்கே எவன் நிக்கிறான்.. என்னை பாருடி".. உறுமலோடு பற்களை கடித்து முரட்டுத்தனமாக தன் கன்னத்தை பற்றி இழுத்து வலிய தண்டனைகள் உதட்டுக்கு கொடுக்கப்படும்.. நிச்சயம் இவன் மிருகம்தான்..

எவன் நிக்கிறான் என்றால் என்ன அர்த்தம்... வார்த்தைகளுக்கு ரிஷி மூலம் நதிமூலம் ஆராய்ந்து மனதிற்குள் கொண்டு சென்றால் தனக்கு தான் பாதிப்பு.. ஆனாலும் விஷ வார்த்தைகளில் தன்னிச்சையாக கசிந்து கீழீறங்கும் கண்ணீர் அவனால் பொருட்படுத்தப்பட்டதே இல்லை..

கண்டும் காணாமலும் தேடல்கள் தொடரும்.. சில நேரங்களில் அவனால் உதிர்க்கப்படும் ஜீரணிக்க முடியாத வார்த்தைகளில் கண்ணீர் நிற்காது வழிந்து கொண்டிருந்தால்.. "இப்ப எதுக்கு இந்த நாடகம்.. ச்சே.. உன்னால எனக்கு நிம்மதியே இல்ல" என்று எழுந்து அவளை உதறித் தள்ளி.. கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் உடைத்து நொறுக்குவான்..

சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வந்து தூர நின்று எட்டிப் பார்த்தாலும் யாராலும் நியாயம் கேட்க முடிவதில்லை.. அதையும் மீறி அவன் தந்தை ராஜேஸ்வரன் மனம் தாளாமல் "தாண்டவா என்ன ஆச்சு?.. ஏன் இப்படி மூர்க்கமா நடந்துக்குற?.. அந்த பொண்ணு பாவம்!!.. அவளை கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்க முயற்சி பண்ணுப்பா!!".. பஞ்சுப்பொதிகளை கீழே வைப்பது போல் மிருதுவாக எடுத்துரைத்தாலும்.. அவன் கோபத்தின் அளவு கொதிநிலை பாதரசமானியை விட வேகமாக எகிறிக் கொண்டிருக்கும்..

"என் பொண்டாட்டி.. என் வீடு.. என்னோட ரூம்.. நான் அவளை அடிப்பேன் உதைப்பேன் சித்திரவதை செய்வேன்.. அதையெல்லாம் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. தேவையில்லாம என் விஷயத்துல தலையிடற வேலை வச்சுக்காதீங்க".. நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சீறும் சேவலாய் அவர் முன்னால் நிற்பான்..

தந்தையிடம் இப்படியா பேசுவது.. வாய்திறந்து கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள முடியுமா!!.. என்ன நடக்கப் போகிறதோ!! என்று இதயம் நடுங்கி கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருக்கும் உமாவிற்கு.. "எப்போ எப்பன்னு காத்திருப்பாரோ!!.. எனர்ஜி குறையாமல் எப்பவுமே வைலண்டா பிஹேவ் பண்றாரே!!".. என்றுதான் தோன்றும்.. தட்டிக் கேட்பவர்களை பரிதாபமாக பார்ப்பாள்..

"என்னடா இப்படியெல்லாம் பேசுற!!.. நான் உன்னை பெத்த அப்பாடா!!".. மகனை தட்டிக் கேட்க வேண்டிய தந்தை.. ஏதோ அவன் தயவில் வாழ்வது போல் கெஞ்சுவது கண்டு உமா இதயம் கசந்து போவாள்..

"அப்பாவா!!.. ஹாஹா".. இளக்காரமாக புன்னகைத்து.. "பெத்ததுனால அப்பா.. சரிதான்.. இல்லைன்னு சொல்லல.. ஒரு நாளும் நான் உங்களை அப்படி நினைச்சதில்ல.. நீங்களும் உங்க எல்லைக்குள் நின்னா நல்லது".. என்பான் அவன்.. பாவம்.. அவர்தான் மனம் புண்பட்டு கலங்குவார்..

இந்த அரண்மனை போன்ற வீட்டையும்.. கோடிக்கணக்கான சொத்துக்களையும் சம்பாதித்து வைத்திருக்கும் பெரும்பணக்காரர் ராஜேஸ்வரன்.. மனைவி மகன் மகள் என்று சந்தோஷமாக வாழ வேண்டிய குடும்பம் யார் கண் பட்டதோ இப்படி இரண்டாகப் பிரிந்து நிற்கிறது.. உறவு மட்டுமல்ல வீடும் கூட.. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டு தந்தையும் மகனும் பிரித்து கொண்டது போல்.. இங்கேயும் தனக்கு தேவையான பகுதிகளை மட்டும் பிரித்துக் கொண்டு பத்திரப்பதிவு செய்து அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டவன் அதற்குண்டான பணத்தை தன் சொந்த சம்பாத்தியத்திலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டான்.. அவன் ஒவ்வொரு நடவடிக்கையும் ராஜேஸ்வரனுக்கு மிகுந்த மனவேதனையை கொடுப்பதாய்!!..

"இப்படி விலகி நின்று சேற்றை வாரி இறைக்கவா பிள்ளையைப் பெற்றேன்".. என்று நெஞ்சுக்குள் மருகாத நாட்கள் இல்லை.. மகனின் அன்பு கிடைக்காது போனதில் தினம் தினம் அவர் கண்ணீர் உகுப்பதில் மனைவி ரங்க நாயகிக்கும்.. அடுத்து பிறந்த தம்பி தங்கைகளுக்கும் கூட அவன் மீது கோபம்..

எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் சாதனங்களும் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனை செய்யப்படும் புகழ் பெற்ற ஈஸ்வரன் ஸ்டோர்.. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் கிளைகளை பரப்பியுள்ளன.. ஈஸ்வரன் ஸ்டோர் உரிமையாளர் ராஜேஸ்வரன் என்று சொன்னால் தெரியாத ஆட்கள் கிடையாது.. தங்கள் மகளின் திருமணத்திற்கு சீர்வரிசை பாத்திரங்களை.. வீட்டு உபயோக பொருட்களை இங்கு வாங்கினால் தான் கைராசி என்று குவியும் மக்கள் கூட்டம் தான் இவர்களின் இலாபக் கணக்கு.. அள்ள அள்ள குறையாத பணம்.. ஆனால் தந்தைக்கு மூத்த மகனுக்கும் இடையே உள்ள உறவு.. அறுந்து போகும் ரப்பர் பேண்டை இழுத்துப் பிடிப்பது போல் அபாயகரமான நிலையில் உள்ளது.. தாண்டவனின் உறவு அவர்களோடு மட்டுமில்ல.. அனைவரோடும் அப்படித்தானே இருக்கிறது.. தாலி கட்டிய மனைவியிடம் கூட அன்போ மரியாதையோ பாராட்டுவதில்லையே.. ஏதோ அடிமை சாசனம் எழுதித் கொடுத்துவிட்டதை போல் மாங்கு மாங்கென சேவை செய்கிறாள்..

"படிச்ச பொண்ணுதானே அண்ணி நீங்க.. ஏன் இப்படி அடங்கி போறீங்க.. எந்த காலத்துல இருக்கீங்க.. எதிர்த்து நின்னாதான் நியாயம் கிடைக்கும்".. கொழுந்தனார் பகலவன் அண்ணியின் சுயமரியாதையை சுடரேற்றிவிட்டு சென்றுவிடுவான்.. ஆனால் எதிர்த்துப் பேசி நியாயம் கேட்டு ஒரு பலனும் இல்லை.. அவன் காதுகள் அடைத்து விட்டது.. தகாத வார்த்தைகள் பேசும் அந்த நாவும் அனல் கக்கும் அந்த விழிகளும் மட்டுமே சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது..

ஏட்டிக்குப் போட்டி என பேசி பஞ்சாயத்து என்று வந்துவிட்டால்.. குடும்ப உறுப்பினர்கள் தலையிடும் சூழ்நிலை ஏற்பட்டு மரியாதை இல்லாத வார்த்தைகளை அவர்களும் வாங்கிக் கட்டிக் கொள்ள கூடும்.. இது போன்ற சங்கடங்கள் அவ்வப்போது நேர்ந்துவிடுவதுண்டு என்பதால் உமா வாய் திறப்பதே இல்லை..

"என்ன?.. உன் மாமனார் என்ன பிரச்சனைன்னு கேட்கிறாரே.. சொல்ல வேண்டியது தானே!!.. உங்க புள்ள படுக்க கூப்பிட்டான்.. நான் மறுத்துட்டேன்னு".. காது கூசும்படியான பேச்சுக்களை கேட்க நேரிடும்.. சில நேரங்களில் துடித்துப் போவாள்.. பல நேரங்களில் இதயம் மரத்து கடந்து போவாள்.. நக்கல் புன்னகையோடு அவள் இதயத்தை குத்தி கிழிப்பதில் என்ன இன்பமோ!!..

இதற்காகவே கூடல் நேரத்தில் அவள் செவிகளை ஊடுருவி இதயத்தில் ரணப் படுத்தும் வார்த்தைகள் என்ன பேசினாலும் கண்டு கொள்வதில்லை.. பொம்மையாக கிடக்க வேண்டியது தான்..

அதையும். தாண்டி.. அவன் காட்டும் மோக வித்தையில் மயங்கி.. ஏதோ ஒரு வேகத்தில் அவனை கட்டி அணைத்தால் கொதிக்கும் நீர் கொட்டியது போல அவள் கரங்களை விலக்கி தள்ளுவான்.. ஆளுமை அவனுடைய தாக இருக்க வேண்டும்.. அவள் தொடவேக்கூடாது.. என்ன அராஜகம் இது.. உமாவின் மென்மையான ஸ்பரிசங்களை அவன் தேகம் ஏற்றுக் கொள்வதே இல்லை.. அவன் மூர்க்கத்தனம் தாளாமல்.. அவள் கொடுக்கும் நகக்கீறல்களையும் பற் தடங்களையும் ஏற்றுக்கொண்டு பழகிப்போன உடம்பு அவனுடையது..

இட்லி சூடாக இல்லை.. என்று தாண்டவன் தட்டை விசிறி அடித்துவிட்டு செல்ல.. "எப்படி அண்ணி இந்த அரக்கன் கூட குப்பை கொட்றீங்க?".. ஆற்றாமை தாங்காமல் பொங்கி வெடிப்பாள் தாண்டவனின் தங்கை ஷ்ராவனி.. தங்கை என்று தான் பேர்.. ஒரு நாளும் அவளிடம் அன்போடு பேசியதில்லை தாண்டவன்..

சிறுவயதில் விரட்ட விரட்ட அண்ணா..அண்ணா!! என்று ஓடிவரும் தம்பி தங்கைகளை.. "சீ தள்ளிப் போங்க பிசாசுகளா!!.. என்கிட்ட வந்தீங்க கல்லால அடிச்சு கொன்னுடுவேன்".. என்று அந்த வயதிலேயே கருங்கல்லை தூக்கிக்கொண்டு ஆக்ரோஷமாக நின்ற மகனை கண்டு ஒட்டுமொத்த குடும்பமும் ஸ்தம்பித்துப் போனது..

"விடு நாயகி.. பெத்தவளோட இழப்புல ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான்.. அவளோட சாவுக்கு நான் தான் காரணம்ன்னு நினைக்கிறான்.. உன்னை இரண்டாவது திருமணம் செஞ்சுக்கிறதுக்காகவே அவளை கொன்னுட்டதா பழி சுமத்தறான்.. யாரோ அவன் நெஞ்சில நஞ்சை விதைச்சிருக்காங்க.. அவன் கோபத்துக்கு இது தான் காரணம்.. கொஞ்சம் விட்டு பிடிப்போம்".. மணமுடித்து வந்த இரண்டாம் மனைவிக்கு இப்படித்தான் ஆறுதல் கூறினார் இராஜேஸ்வரன்..

மாற்றாந்தாயோடு சேர்த்து அவர் பிள்ளைகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் மகனை கண்டு வேதனை கொள்ளும் தன் மனைவிக்கு.. இன்றுவரை கீறல் விழுந்த ரெக்கார்டாக இதே வார்த்தைகள் ஆறுதலாக சொல்லப்பட்டு வருகின்றன இராஜேஸ்வரனால்..

மூத்த மகன் வெறுக்கிறான் என்று தெரிந்த பிறகு விலகி நிற்பதே புத்திசாலித்தனம்.. என ஒதுங்கி விட்டாள் ரங்கநாயகி.. தம்பியும் தங்கையும் தான் அவ்வப்போது அவன் பாசத்திற்காக ஏங்கி நிற்கின்றனர்..

ஆனால் அவன் காட்டும் வெறுப்பு சில நேரங்களில் அவர்களை கோபத்தின் உச்சத்திற்கு இட்டுச் செல்கிறது.. விலகி நிற்பது வேறு.. அராஜகம் செய்வது வேறு.. தாண்டவனின் அட்டூழியங்கள் அந்த வீட்டிலிருப்பவர்களை அளவுக்கு அதிகமாகவே சோதிக்கிறது.. அதிலும் உமாவிடம் அவன் நடந்து கொள்ளும் முறை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 10, 2023
Messages
31
Yen pa thandavaa ah appa second marriage so step mother
Step brother
Step sister mella kovam
Appa mella kovam okkk understood
Aana uma mella why 🙄🙄🙄🙄
 
Member
Joined
Jan 29, 2023
Messages
26
❤️❤️❤️❤️❤️
 
New member
Joined
Jan 16, 2023
Messages
1

Super 👌👌👌👌👌
 
Member
Joined
Jan 21, 2024
Messages
31
தாண்டவா அப்பா ரெண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டார் கோவம் உமா என்னடா பண்ணா இப்படி படுத்துறே
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Member
Joined
May 10, 2023
Messages
45

Interesting siss
 
Joined
Jul 25, 2023
Messages
18
மத்தவங்ககிட்டலாம் சரி சொந்த பொண்டாட்டிகிட்ட எதுக்கு இவ்வளவு கோபம்?

ஒரே மாதிரி சாஃப்ட் அன்ட் ஸ்வீட்டா பார்த்த கதாநாயகங்களுக்கு மத்தியில ஹார்ட் அன்ட் ஸ்ட்ராங்கா புரியாத புதிராக ஒரு‌ கதாநாயகன்
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
107

😲😲😲😲😲
 
Member
Joined
Jun 27, 2024
Messages
28
Grt start. Waiting for next... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jul 10, 2024
Messages
28
ஏன்டா அப்பா மேல கோபம் ஓகே. இப்படி இருக்கவங்க பொண்டாட்டி மேல ரொம்ப பிரியம் வைப்பாங்க. ஆனா இங்க தலைகீழா இருக்கே.

உமா கிட்டயும் ஏன் இவ்வளவு கோபம். கூடல் பொழுதிலும் கோபமா. வித்தியாசமான கேரக்டர்.
 
Top