- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா..
மைக் செட் உபயத்தில் L.R ஈஸ்வரி அனைவரது செவிகளை பக்தி பரவசம் பொங்கும் இசையால் நிறைத்துக் கொண்டிருந்தார்..
பண்ணை பாளையத்தின் அருள்மிகு செல்லியம்மன் கோவில் திருவிழா.. கோவிலின் சுற்றுப் பாதையில் நடைப் பதை கடைகள் களைகட்டும் சீசன் அது..
சற்று தள்ளி கோவிலின் வளாகத்தில் ராட்சதராட்டினங்களும்.. குழந்தைகளுக்கான விளையாட்டு திடலும்.. தரைப்படகுகளும் என விதவிதமான விளையாட்டு இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.. இரவு நேரங்களில் கூட்டம் அலைமோதும் இந்த பகுதி பகலில் வெயிலின் உச்சத்தில் வெறிச்சோடி கிடந்தது.. ஆனால் அதற்கு நேர் மாறாக அன்னதான பந்தியில் நிரம்பி வழிகிறது கூட்டம்..
முக்கிய நபர்களின் பெயரைச் சொல்லி எங்கிருந்தாலும் வரவும் என்று அழைத்துக் கொண்டிருந்தது மைக் செட் மேடை.. சாமி ஊர்வலத்தில் களை கட்டும் கரகாட்ட கோஷ்டி அப்போதுதான் வேனில் வந்து இறங்கினர்.. பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரிக்கான மேடையில் விடலைப் பருவத்தினர் ஏறி சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர்..
கோவிலுக்கு எதிர்ப்புறம் பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்க.. மற்ற இடங்களில் குழுமியிருந்தனர் பண்ணை பாளையம் முக்கிய ஆட்கள்..
முக்கியமான ஆட்கள் யாருக்காகவோ காத்திருப்பதாக தோன்றியது..
"ஐயா வந்துட்டாங்க" குரலைத் தொடர்ந்து அத்தனை கண்களும் மரியாதையோடு எதிர் திசையை நோக்கின.. குடும்பத்தோடு வந்து கொண்டிருந்தார் ஊர்த் தலைவர் தாமோதரன்.. பட்டுகம்பளம் விரித்த மரியாதை போல் பாதையெங்கும் மக்கள் பவ்யமாக விலகி நின்று கைகூப்பி வணக்கம் சொல்ல அனைவரிடமும் புன்னகையோடு தலையசைத்தார் அவர்.. நெடு நெடுவென்ற உயரத்தோடு காதோரம் மட்டும் முடி நரைத்து வீர நடை போட்டு வந்தவரை தொடர்ந்து அவர் மனைவி காமாட்சி.. தாமோதரனின் தங்கை மகள் செல்ல மீனா அவள் அண்ணன் பாண்டியன்.. இடப்பக்கத்தில் அவர் தம்பி வித்யாதரன் அவர் மனைவி சித்ரா மகன் அகரவேந்தன்.. மகள் முல்லை.. பின்பக்கம் இரண்டு வயது குழந்தையோடு தாமோதரனின் மூத்த மகள் கோகிலாவும் அவள் கணவன் கௌரிதரனும் வந்து கொண்டிருந்தனர்..
"என்னடி உங்கப்பன்.. இந்த முறையாவது முதல் மரியாதை எனக்கு தருவானா..!!" மீசையை முறுக்கியபடி மனைவியின் காதில் ரகசியம் பேசிக் கொண்டு நடந்தான் கௌரிதரன்..
"முதல் மரியாதை வீட்டு வாரிசுகளுக்குதானே தவிர வீட்டோட மாப்பிள்ளைக்கு கிடையாது.. அவன் இவன்னு என் அப்பாவ மரியாதை இல்லாம பேசின சங்கறுத்துருவேன் ஜாக்கிரதை.." கண்களில் அனல் தெறிக்க முறைத்தவள் குழந்தையோடு வேகமாக சென்று விட.. நின்ற இடத்திலிருந்து அவளை முறைத்தான் கௌரி..
"ரொம்ப ஏத்தம் தான்டி உனக்கு.. உன் அப்பனும் ஆத்தாளும் இருக்கிற தைரியத்துல தானே ஓவரா ஆடற.. இருடி எனக்குன்னு ஒரு நேரம் வரும்.. அன்னைக்கு இருக்குடி உங்க எல்லாத்துக்கும்.. தனக்குள் கருவிக்கொண்டு அடுத்த கணமே தன் உடல் மொழியை மாற்றிக் கொண்டு நல்ல மாப்பிள்ளையாக குடும்பத்தாரோடு நடந்தான் கௌரிதரன்..
காமாட்சியோடு பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடி வந்த செல்ல மீனாவின் கண்கள் தூரத்தில் தெரிந்த வளையல் கடையை ஆர்வத்தோடு மேய்ந்து கொண்டிருந்தன.. ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவளாக கால்கள் அவ்விடம் நோக்கி நடை போட காதை பிடித்து திருகி.. தன் பக்கம் இழுத்தான் பண்டியன்..
"எங்கன அந்த பக்கம் ஓடுற..!!" அவன் அதட்டலில்..
"ஸ்ஸ்ஸ்ஸ்.. வளையல் வேணும்.. திருவிழா போனா மறுபடியும் இந்த டிசைன் கிடைக்காது வாங்க முடியாது விடுடா.." திமிறினாள் அவள்..
"தொலைச்சிடுவேன்.. மாமா.. பார்த்தா கத்துவார்.. அமைதியா நட.. வளையல் எல்லாம் அப்பறமா வாங்கிக்கலாம்.." பாண்டியன் மிரட்டியதை தொடர்ந்து என்னவாம் இவளுக்கு காதோரம் கிசுகிசுத்தார் காமாட்சி..
"ஆங்.. கண்ணாடி வளையல் வேணுமாம்.. பிரேக்கில்லாத வண்டி மாதிரி அங்கேயும் இங்கேயுமா அலைபாயறா.." புகார் சொன்னான் அண்ணன்..
"இப்ப எதுக்குடி கண்ணாடி வளையல்.. ஏற்கனவே வாங்கி உடைச்சதெல்லாம் பத்தலையா..!!" காமாட்சி செல்ல மீனாவை அதட்டினார்..
"உடைச்சதெல்லாம் உங்க புள்ளதானே.. குத்தம் சொல்றது மட்டும் என்னையா." பதிலுக்கு பதில் நின்றாள் மீனா..
"என்னடி பேச்சு இது..? வாய ஒடச்சிடுவேன்.." மிரட்டினார் காமாட்சி..
என்னமோ நடக்காததை சொன்ன மாதிரி சிலிர்த்துக்கிறீங்க.. நாளைக்கு நாலு வளையல் உடைக்கிறது தினமும் நடக்கிற கதை தானே.."
"அய்யோ இவ ஒருத்தி.. வாயை மூடுடி வெக்கங் கெட்டவளே.." உதட்டோரம் சிரித்துக் கொண்டு அவள் தலையில் குட்டினார் காமாட்சி..
"ஹ்ம்ம்.. எல்லாம் எனக்கு பிடிச்ச கலர் வளையல்.. வேற எவளாவது வாங்கிட்டு போயிடுவாளுங்க.. இப்பவே வளையல் வேணும்.." செல்ல மீனா அடம்பிடித்தாள்..
"ஏன்டி.. கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாது உன்னால..!! எப்பவும் ஊர் சுத்திட்டே இருக்கணுமோ.. நீ இப்படி திமிரெடுத்து திரிய காரணம் அவன்தானே .. எல்லாம் அவனை சொல்லணும்.." பற்களை கடிக்க.. அவனைப் பற்றி பேசியதும் சண்டை கோழி போல் சிலிர்த்தாள் மீனா..
"இப்ப எதுக்கு தேவையில்லாம அத்தானை வம்புக்கு இழுக்கிற.. வளையல் கேட்டது நானு.. என்னைய பத்தி மட்டும் பேசு.."
"சும்மா இருடி கழுதை.. மாமா பார்க்கிறாரு.." அவன் செல்ல மீனாவை அடக்க முயல..
"அத்தானை பத்தி நீ எதுக்காக பேசுற..!! போய் அவர் கிட்ட சொல்லட்டுமா.." வீதியில் அவனோடு மல்லுக்கு நிற்பதை கண்டுவிட்டார் தாமோதரன்..
"மீனம்மா.. இங்கே வா.." பரிவோடு கைநீட்டி அழைக்க.. கோபம் நீங்கி அழகான சிரிப்போடு கால் கொலுசுகள் சிணுங்க அவர் கைவளைவில் அடைக்கலமானாள் மீனா.. தாமோதரன்தான் அந்த குடும்பத்தின் தூண் அவர் சொற்படி தான் அனைத்தும் நடக்கிறது என்றாலும் செல்ல மீனாவிற்கு எப்போதும் சிறப்பு சலுகைகள் உண்டு.. பெற்ற மகளை விட இவள் தான் தாமோதரனின் அன்புக்கு பாத்திரமானவள்.. பல விஷயங்களில் அவள் பேச்சை காது கொடுத்து கேட்டு தட்டாமல் செய்வார்..
இறந்து போன தன் தங்கையை அச்சசலாக உரித்து வைத்திருக்கும் அவள் தோற்றமும் குணமுமே அதற்கு காரணம்.. வித்யாதரனுக்கும் செல்ல மீனா மீது பிரியம் உண்டு.. ஆனால் தாயில்லாத குழந்தையை தன் குழந்தையாக பாவித்து அவள் மீது அளவு கடந்த பிரியம் கொண்டவர் தாமோதரன்தான்..
"என்ன தங்கம்.. உன் அண்ணன் கூட சண்டை போடுற மாதிரி தெரியுது..!!"
"வளையல் கேட்டேன் மாமா.. வாங்கி தர முடியாதுன்னு சொல்றான்.." அண்ணனைப் பற்றி புகார் கூறி அவனை பார்த்து உதடு சுழித்து ஒழுங்கு காட்டினாள் மீனா..
"வளையல் தானே.. பூஜை முடியட்டும்.. கடையவே விலைக்கு வாங்கிடலாம் போதுமா..!!" தாமோதரனின் வாஞ்சையான குரலில் தோள்களை குலுக்கி காது வரை புன்னகைத்தாள் அவள்..
"மீனம்மா கேட்டா அண்ணா உலகத்தையே விலைக்கு வாங்கிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.." என்றார் வித்யாதரன் புன்னகையோடு..
"ஆமா.. என் மருமக கேட்கட்டும் உலகத்தையே அவ காலடியில் கொண்டு வந்து போடுறேனா இல்லையா பாரு.." என்றார் அவர் மீசையை முறுக்கி கம்பீரமாக..
"தங்கச்சி புள்ள மேல இவ்வளவு பாசம் வைக்கிறது தப்பு இல்ல ஆனா.. அதுல கொஞ்சம் பெத்த பொண்ணு மேலேயும் வைக்கலாம்" குத்தலாக பேசிக்கொண்டே வேட்டியை மடித்து கட்டியபடி பின்னால் வந்த கௌரிதரன் தாமோதரன் திரும்பிப் பார்த்த பார்வையில்.. "அடியே பிள்ளையை கொடு.. எவ்வளவு நேரம் நீயே தூக்கி சுமப்ப.. கால் வலிக்காது..?" என்று மனைவியின் புறம் திரும்பி குழந்தையை வாங்கிக் கொண்டு நல்லவனாக நடந்தான்..
குடும்பமாக அனைவரும் கோவிலுக்குள் நுழைய.. பூசாரி வாங்கோ என்ற வரவேற்புடன் அவர்கள் கொண்டு வந்த பூஜைக்கான பொருட்களை எடுத்துச் சென்று பூஜையை ஆரம்பித்திருந்தார்..
"இங்க பாரு தங்கம்.. நீ சொன்னியேனு தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்.. சம்பந்தப்பட்டவனை இன்னும் காணல.. இப்ப என்ன செய்யலாம் சொல்லு..?" அவன் பேச்சை எடுக்கையில் மட்டும் விரும்பத் தகாத ஒருவனைப் பற்றி பேசுவது போல் இறுகிவிடும் அவர் குரல்..
"இதோ இப்ப வந்துருவாரு மாமா.." அவருக்கு பதில் சொல்லிவிட்டு தவிப்போடு அவள் விழிகள் சம்பந்தப்பட்டவனை கோவில் வளாகத்தில் தேடிக் கொண்டிருந்தன..
பூஜை முடித்து பரிவட்டம் கட்டும் வேளையில்.. பூசாரி தன் கழுத்தில் மாலை போடும் முன் தடுத்து நிறுத்தினார் தாமோதரன்..
"இந்த முறை மரியாதை எனக்கு வேண்டாம்.. என் மகனுக்கு பரிவட்டம் கட்டுங்க.." என்றதில் ஒட்டுமொத்த குடும்பமும் திகைத்து அவரை பார்த்தது..
போயும் போயும் அவனுக்கா பரிவட்டம் கட்டுவது.. என்ற திகைப்பு அல்ல அது.. அவனுக்கு மரியாதை தர சொல்வது இவர்தானா.. என்ற நம்ப இயலாத அதிர்ச்சி..
"என்ன மாமா போயும் போயும் போக்கத்த பைய அவனுக்கு மரியாதை.." என்று கௌரிதரன் ஆரம்பிக்கும் முன்.. "ஹ்ம்ம்".. என்ற உறுமல் அவன் பேச்சை தடுத்து நிறுத்தியது..
"இது என்னோட முடிவு கிடையாது.. என் மருமகளோட விருப்பம்.. இதுல யாரும் தலையிடக்கூடாது.. புரிஞ்சுதா.." அவர் அழுத்தமான குரலுக்கு பின் யாரும் வாய் திறந்து பேசவில்லை.. கௌரிதரன் வாயை மூடிய பிறகும் செல்ல மீனா அவனை தீயாக முறைக்க தவறவில்லை..
"என்ன எவ்வளவு நேரம் காத்திருக்கிறது அவர் வருவாரா வரமாட்டாரான்னு தெரிஞ்சா அதுக்கு ஏத்த மாதிரி முடிவு எடுக்கலாமே..!!" பூசாரி மரியாதையோடு சொன்னதை தொடர்ந்து தாமோதரன் கேள்வியாக மருமகளை பார்த்தார்..
அவளோ சங்கடமாக கோவிலுக்கு வெளியே பார்ப்பதும்.. தாமோதரனை தவிப்பாக பார்ப்பதுமாக இருந்தாள்..
"டேய் அண்ணா போன் செஞ்சு பாத்தியா தன் அண்ணனின் காதோரம் ரகசியமாய் கேட்க.. இருபது முறை ட்ரை பண்ணிட்டேன் எடுக்கவே இல்லடி.." என்றான் அவன்..
"என்ன தங்கம்.. அவனுக்காக இல்ல.. உன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் இந்த வீட்டோட மூத்த வாரிசா அவனுக்கு பரிவட்டம் கட்ட ஒத்துக்கிட்டேன்.. ஆனா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம எங்கேயோ சுத்தி திரியறவனுக்காக என் மரியாதையை இழக்க நான் தயாரா இல்லை.." என்னும்போதே.. கூட்டத்தில் அலறிக் கொண்டு அந்தரத்தில் பறந்தான் ஒருவன்..
அதைக் கண்டு ஒட்டு மொத்த கூட்டமும் மிரண்டு சலசலக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பார்வையும் அவ்விடத்தில் நிலைத்தது.. கிராம மக்களை தாண்டி இரண்டு பேரை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் ஒருவன்.. நெடு நெடுவென தாமோதரன் போன்று உயரம்.. நல்ல முரட்டுத்தனமான உடற்கட்டு .. சுருட்டை முடி.. முறுக்கு மீசையோடு பேண்ட் சட்டையில் இருந்தவன் தன்னை நோக்கி பாய்ந்தவர்களை வெறித்தனமாக அடித்துக் கொண்டிருந்தான்..
விழிகளை மூடி திறந்தார் தாமோதரன்.. அத்தான்.. என்று அவன் பக்கம் ஓட முயன்ற செல்ல மீனாவை கைப்பற்றி தடுத்து நிறுத்தியிருந்தார்..
சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு வேகமாக வந்தவன் கீழே தளர்ந்து கிடந்தவனை பற்களை கடித்து காலால் எட்டி உதைப்பதை பார்த்துக் கொண்டே "ஐயரே.. ஊர் மரியாதையை என் இரண்டாவது மகனுக்கு தர நினைக்கிறேன்.." என்றார் அவர்..
"இரண்டாவது பையனா?" பூசாரிக்கு ஒன்றும் புரியவில்லை..
"என் தம்பி மகன் அகரவேந்தன்.. அவனும் என்னோட மகன் தான்.. இந்த வருஷம் பரிவட்டம் கட்டி ஊர் மரியாதையை அவனுக்கு கொடுங்க.." அவர் உத்தரவில் செய்வதறியாது மற்றவர்கள் திகைக்க.. பெரியப்பாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு முன்னே வந்து நின்றான் அகரவேந்தன்..
செல்ல மீனா தன் முயற்சிகள் அனைத்தும் வீணானதை எண்ணி சோர்ந்து போய் நின்று கொண்டிருக்க.. கூட்டத்தின் நடுவே புயலெனப் புகுந்து துள்ளலோடு படியேறி வந்த அந்த முரடன் வெற்றி வேந்தனின் கண்முன்னே.. அவன் தம்பி அகர வேந்தனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.. அகர வேந்தன் இதழோரம் நகைப்புடன் வெற்றியை பார்த்தான்..
"என்னத்தான் இப்படி சொதப்பிட்டியே..?" செல்லமீனா சங்கடத்தோடு அவனைப் பார்க்க.. யாரையும் பொருட்படுத்தாது எகத்தாளத்தோடு நடந்து வந்தான் வெற்றி வேந்தன்.. தாமோதரனை போல் குறைவில்லாத கம்பீரமும் அதைவிட அதிகமாகவே திமிரும் முரட்டுத்தனமும் மேலோங்கி நின்றது வெற்றி வேந்தனிடம்..
தன் மகனுக்கான சலுகைகள் அவன் குணத்தை முன்னிறுத்தி பறிக்கப்படுவதில் வேதனையோடு நின்று கொண்டிருந்தாள் காமாட்சி.. தன் அத்தானுக்காக இத்தனை பிரயத்தனப் பட்டும் பலனில்லாமல் போனதில் கண்கள் கலங்கி நின்றிருந்தாள் செல்ல மீனா..
கோவிலுக்குள் நுழைந்தவன் செல்ல மீனாவின் எதிரே வந்து நின்றிருந்தான்.. அவள் கரம் பற்றி விரல் மூலம் அவள் நெற்றி குங்குமத்தை தொட வைத்து அதை தன் நெற்றியில் இட்டுக் கொண்டவன் "ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தாலும் தொலைச்சிடுவேன்.." என்று கண்களை உருட்டவும் அவசரமாக கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் அவள்..
"இந்த மரியாதை எல்லாம் எனக்கு பொருட்டே இல்ல.. எனக்கு என்ன வேணும்னு உனக்குதான் தெரியுமே.. உன் வார்த்தைக்காக தான் இங்கே வந்தேன்.. சாமியை பாத்தாச்சு.. நான் கிளம்பறேன்.. என்றவனின் பார்வை அவளை தவிர வேறு யாரையும் இம்மியளவும் தீண்டவில்லை.. கற்பகிரக அம்மனையும் கூட..
"சீக்கிரம் வீடு வந்து சேரு.." அவள் கண்ணீரால் கண்களின் ஓரம் கலைந்திருந்த மையை விரலால் தொட்டு சரி செய்துவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் வெற்றி..
தந்தை மகன் இருவருக்குமே அவள் ஒருத்தி மீது மட்டுமே அதீத அன்புண்டு.. ஆனால் இருவருமே எதிரெதிர் திசை என்னும் போதினில்
இருவருக்கிடையில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறாள் செல்ல மீனா..
தொடரும்..

Last edited: