• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Active member
Joined
May 3, 2025
Messages
38
இப்படி ஒரு பெயரா.... ரொம்ப வித்தியாசமா இருக்கே... பேரும் சரி ஆளும் சரி....

ரோபோ கூட தோத்து போயிரும் போலயே....
பையனுக்கு கதை சொல்றேன்னு நல்லா உசுப்பி விட்டுடு இப்போ புலம்பி என்ன பண்ண....

இவனுக்கு கல்யாணமா....அய்யகோ !!!யாரு அந்த மலரோ....இவன் நசுக்கிடுவானே....🙁🙁🙁🙁
 
Member
Joined
Jul 16, 2025
Messages
22
இந்த மாதிரி டாக்டர் கைவிட்ட கேசுகெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடவேண்டியது😠
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
பேரும் வித்தியாசம். ஆளும் வித்தியாசம். என் கடன் அடித்து கொண்டிருப்பதுவே. குரு சூப்பர் ரோபோ. 👌👌👌👌👌 🥺🥺🥺🥺🥺🥺

ஆச்சாரியா நீங்க குருவுக்கு வயித்துல இருக்கும் போது கொடுத்த டிரெயினிங் கொஞ்சம் ஓவர் டோசா போச்சோ. 🤔🤔🤔🤔🤔

யாரும்மா அந்த பச்சகிளி.
 
New member
Joined
May 6, 2025
Messages
3
Kurukshetra - different name but nice.. Actually oru book la author ADHD term use pannirundharu, andha book edit pannavaru indha term ku expansion ketu author ku query pannitaru.. You know what.. Author idhu common term, expansion solli dhan theriyanum nu avasiyam illa nu feedback kuduthutaru.. Idhu enga rules, kandipa abbreviation and acronyms ku expansion venumnu solli samaalichom..

Subatra conceive aagirukumbodhu Arjunan Abimanyu ku chakra viyugam solli koduthadhu pola Aacharya avaroda veera dheera paraakiramangal ellaam sollirukaru pola..

It is good that you explained about dopamines and hyperactivity.. Different storyline sister.. Eagerly awaiting the part which justifies the disclaimer you have given.. All the best, sister.. Thank you..
ஜே ஜே .நீங்க சொல்றது பொருத்தமான உதாரணந்தான். அபிமன்யு சுபத்ரா வயிற்றில் இருக்கும்போது அர்ஜுனன் சக்கர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுபத்ரா தூங்கிட்டாங்க.அதனாலசக்கர வியூகத்துக்குள்ள போக தெரிஞ்ச அபிமன்யுக்குவெளிய வரத்தெரியல.அந்த போர்க்களத்தில் உயிர் விட்டுட்டான்.
 
New member
Joined
May 6, 2025
Messages
3
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன்

வாய் நிறைய மண்ணையுண்டு மண்டலத்தை காட்டியபின்


ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ

பூஜையறையில் தெய்வாம்சம் பொருந்திய மனைவி லஷ்மி பாடிய பாடலை கண்கள் மூடி கேட்டுக் கொண்டிருந்தவருக்கு அது பிரமை என்று உணர சில கணங்கள் தேவைப்பட்டன..

தேனினும் இனிய திவ்ய மதுரமான பாடல் நின்று போனதை தொடர்ந்து செவிகளை துளைத்த நிசப்தத்தில் மெல்ல பூஜையறையின் பக்கம் திரும்பியவருக்கு புன்னகையோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவி மறைந்து போனது மட்டும்தான் தெரிந்தது.. ஒட்டடையும் தூசியும் படிந்திருந்த பூஜை அறை லட்சுமி இங்கில்லை என்பதை தெளிவாக உணர்த்த..

காலை சூரியனாய் மலர்ந்திருந்த அவர் முகம் அஸ்தமனமாய் வாடிப்போனது.. வீடெங்கும் சதங்கை முத்து கொலுசொலியோடு நிறைந்திருக்கும் தன் மனைவியின் வாசனையில் இப்போதும் நெஞ்சுக்குள் சுகமாக.. அவள் தன்னை விட்டுப் போனதற்கான ஒரே காரணம் தான் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் சித்திரவதையை அனுபவித்து கொண்டிருக்கிறது அவர் மனம்..

சிதிலமடைந்த இந்த வீட்டிற்கு உயிர் கொடுக்க மட்டுமல்ல.. எந்திரமாய் இறுகிப் போன ஒருவனை அடியோடு மாற்றவும் வீட்டிற்கு ஒரு பெண் தெய்வம் வர வேண்டும்.. ஆனால் அதெல்லாம் நடக்கும் காரியமா என விதி அவரை பார்த்து பரிதாபமாக சிரிப்பது போல் தோன்றியது..

அவர் ஆச்சார்யா.. நிழல் உலக தாதா.. பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் கீழ்த்தரமான ரவுடி அல்ல அவர்.. மனைவிக்காக ஆயுதங்களை கீழே போட்டவர் இன்று மகனுக்காக மீண்டும் அதை எடுக்க துணிந்திருக்கிறார்..

"அய்யா.." என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் ஒருவன்..

ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தவர் கால்களை கீழே ஊன்றி அவனை நிதானமாக பார்த்தார்.. விஷயம் என்னவென புரிந்து போனது.. பழக்கப்பட்ட ஒன்று.. இனி அதற்கான தீர்வை தேட வேண்டும்.. நீண்ட பெருமூச்சோடு சொல்லு என்பதாக கண்களால் கட்டளையிட்டார்..

"ஐயா நம்ம சின்னைய்யா அடிச்ச ஆள் ஆஸ்பத்திரியில் சீரியஸா இருக்காரு.. எம்எல்ஏ ராஜராஜனோட பையன்.. ஆஸ்பத்திரியே கலவரமா இருக்கு.. இப்ப என்ன செய்யறது..?" கேட்டவனிடம் இருந்த பதட்டம் அவரிடம் துளிகூட இல்லை.. துணிந்து தானே இறங்கியது..? இனி பின்வாங்குவதில் நியாயம் இல்லை.. "பிரச்சனை வந்தா நான் பாத்துக்குறேன்..!! நீ ஹாஸ்பிடலில் இரு.. ஏதாவது முக்கியமான விஷயம் நடந்தா எனக்கு தகவல் சொல்லு.." அவரது அமைதியான பக்குவமான பேச்சு அவனை ஆச்சரியப்படுத்தியது.. இந்த நிதானம் இவர் மகனிடத்தில் இல்லையே!! என்ற ஐயமாக கூட இருக்கலாம்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் மகன் உள்ளே நுழைந்தான்.. நெடுநெடுவென உயரத்தோடு உணர்ச்சி இல்லாத முகம் கொண்டு மரக்கட்டை போல் நடந்து வந்தவனின் தோற்றத்திலும் முரட்டுத்தனம்.. லேசான தாடியும் அந்த கால போர்வீரன் போல் இறுகிய உடற்கட்டும் கொண்ட இவன் குருஷேத்ரா..

மகாபாரத காவியத்தின் போர்க்களம்.. பல உயிர்களைக் குடித்து ராஜ்யங்களை அடியோடு வீழ்த்திய அந்த இடத்தின் பெயர் என் மகனுக்கு வேண்டவே வேண்டாம்.. என் மகன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.. என்று தலைப்பாடாக அடித்துக் கொண்டாள் லட்சுமி.. பெயருக்கும் மகிழ்ச்சிக்கும் என்னடி சம்பந்தம்.. குருக்ஷேத்ரா போர்க்களம் மட்டுமல்ல.. பல வாழ்க்கை தத்துவங்களை மனிதர்களுக்கு உணர்த்திய பாடசாலை.. எனக்கு இந்த பெயர் தான் பிடித்திருக்கிறது.. அழகான வீரமான பெயர்.. என்று அடம் பிடித்து வைத்தவர் ஆச்சார்யாதான்.. போர் நடந்த களத்தை பெயராக வைத்ததாலோ என்னவோ.. ஆறடி தேகத்தை முறுக்கி வெட்டுவேன் குத்துவேன் என சண்டைக்கு அலைகிறான் மகன்..

"தம்பி..!!" அறைக்குள் நுழையப் போன தன் மகனை அழைத்தார் ஆச்சார்யா..

"அப்பா..!!" குரல் கொடுத்த அடுத்த கணம் பதில் வந்துவிடும்.. விளக்கை தேய்த்தவுடன் வரும் பூதம் எஜமானருக்கு கட்டுப்படுவது போல் அவர் என்ன சொன்னாலும் கேட்பான் உயிரையும் கொடுப்பான்.. ஆனால் அது பாசம் அல்ல.. ஒரு விதமான விசுவாசம்.. இந்த விசுவாசம் தான் அவரை உறுத்துகிறது.. அவர் எதிர்பார்ப்பது மகனிடம் இருந்து உண்மையான அன்பை மட்டுமே..!!

"அந்த எம்எல்ஏ ராஜராஜன் பையன் இப்போ ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடிகிட்டு இருக்கானாமே..!!"

"அப்படியாப்பா..!!"

"லேசா ரெண்டு தட்டு தட்டிட்டு விட சொன்னேன்.. எதுக்காக இவ்வளவு மூர்க்கத்தனம்.."

"என்னால கட்டுப்படுத்த முடியலப்பா.. கோபம் வந்திடுது.."

"குறைச்சுக்கோ.. தம்பி இவ்வளவு கோபம் நல்லதுக்கு இல்லை.."

"சரிப்பா முயற்சி செய்யறேன்..!!" உள்ளே சென்று விட்டான்.. அவனால் முடியாத காரியங்கள் மட்டுமே முயற்சி செய்கிறேன் என்ற பெயரில் வார்த்தைகளாக வெளிவரும்.. பத்து நாள் பட்டினி கிடந்து இறந்து போ என்று சொல்லியிருந்தால் கூட சரி என்று உடனே சம்மதம் தெரிவித்திருப்பான்.. நிதானம் அவன் மனக்கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயம்..

ஆச்சார்யாவும் அப்படித்தான் ஒரு காலத்தில் ஆயுதமும் கையுமாக திரிந்தவர்.. அவர் மென்மையான பக்கங்களை மீட்டெடுப்பதற்கு ஒரு லஷ்மி தேவைப்பட்டாள்.. இவன் தந்தையிலிருந்து வித்தியாசப்பட்டவன்.. வினோதமானவன்.. பயங்கரமானவன்..

ஐந்து வயதிலிருந்து அசாதாரணமாக தெரிந்தான்.. எப்போதும் ஒருவித கோபத்தோடு.. சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் அவன் வயது பிள்ளைகளை அடிக்கும் மூர்கத்தனத்தோடு சுற்றித்திரிந்தவனை ஆச்சார்யா முதலில் கண்டித்தார்.. மனைவிக்காக அடிதடி ரகளை ஓரளவு குறைத்துக் கொண்டு நியாயத்திற்காக மட்டும் பஞ்சாயத்து செய்த காலகட்டம் அது..

ஆனால் நாளாக ஆக அவன் அரக்கத்தனமான சேஷ்டைகள் அதிகரித்தன.. படிப்பில் கவனம் இல்லை பொழுதுபோக்குகளில் நாட்டம் இல்லை.. அடிதடி வெட்டு குத்து வம்பு சண்டை என்று பிரச்சனை உருவான அனைத்து இடங்களிலும் அவன் இருந்தான்.. நிலைகுலைந்து போனார் ஆச்சார்யா..

மகனை கண்டித்தார்.. அவர் அடித்தால் அழ மாட்டான்.. வலிகளை கொடுப்பவன்.. அதே வலிகளை ரசித்து ஏற்கவும் பழகி இருந்தான்..

சரி.. தன்மகன் தானே முரட்டுத்தனம் ஜாஸ்தி என்று ஒரு வகையில் ஏற்றுக் கொண்டாலும்.. இயல்பான இரக்கம் அன்பு பாசம் போன்ற குணங்களை அவனிடம் கண்டறிய முடியவில்லை.. கண்முன்னே நடக்கும் மனதை உலுக்கும் சம்பவங்கள் அவனுள் எந்த பாதிப்பையும் தோற்றுவிப்பதில்லை..

மென்மையான சிரிப்பு.. நகைச்சுவை உணர்வு.. அம்மாவிடம் பாசம்.. அப்பாவிடம் அரட்டை இதெல்லாம் பழக்கப்படாத வினோத குழந்தையாக வளர்ந்தவனுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் என்ன என்பதை அந்த சம்பவத்தில் உணர்ந்து கொண்டிருந்தார் ஆச்சார்யா..

அம்மாவின் மரணத்திற்கு அவன் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை.. இறுகிய முகத்தோடு கடைசி காரியங்களை செய்து முடித்தவனை கண்டு இதயத்தில் நீர் வற்றிப் போனது .. எப்படி.. எப்படி சாத்தியம்.. அன்பே உருவான தாயின் மரணம் இவனை பாதிக்கவில்லையா!!.. அவள் இழப்பில் கல் கூட கண்ணீர் வடிக்குமே..!! இவனால் மட்டும் எப்படி எந்த உணர்வுகளும் இல்லாத ஜடமாக நிற்க முடிகிறது..!!

"உன்னால தான் உன்னால மட்டும் தான் என் பையன் இப்படி ஆயிட்டான்" என்று ஒவ்வொரு நாளும் மனம் உடைந்து அழுத மனைவியின் கண்ணீர்த் துளிகள் அன்று அவள் இழப்பில் அமிலத் துகள்களாக சுட்டது.. அன்னையின் இழப்பு பாதிக்கவில்லை.. வலி மரத்து போயிருந்தான் குருக்ஷேத்ரா ..

நிச்சயம் அவனுக்குள் ஏதோ தவறு.. பிரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டு மனநல மருத்துவரிடம் மகனை அழைத்துச் சென்றார் ஆச்சார்யா..

பல பரிசோதனைகளுக்கு பிறகு மருத்துவர் சொன்ன விஷயம் அவர் நெஞ்சை உலுக்கியது..

பொதுவாக மனிதனுள் இருவகையான உணர்வுகள் கலந்திருக்கும்..

"கோபம்.. காமம்.. பொறாமை.. பேராசை போன்ற கெட்ட உணர்வுகள் ஒரு பக்கம்.."

"அன்பு.. பாசம்.. காதல்.. மனிதாபிமானம் போன்ற நல்ல உணர்வுகள் ஒரு பக்கம்.. இரு வேறு வகையான உணர்ச்சிகளை மூளையின் வெவ்வேறு பக்கங்கள் தான் கடத்துகின்றன.."

"உங்கள் மகனைப் பொறுத்தவரை கோபம் காமம்.. முரட்டுத்தனம் போன்ற வன்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சுரப்பிகள் அதி வேகமாக செயல்படுகின்றன.."

"ஆனால் புன்னகை பாசம் தாய்மை.. ரசனை மனிதாபிமானம்.. காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை கடத்தும் மூளையின் நரம்பு தூண்டுதல்கள் செயலிழந்த நிலையில் இருக்கின்றன.. அதனால உங்க மகன் இப்படித்தான் இருப்பார்.." மருத்துவர் சொன்னதை கேட்டு நிலைகுலைந்து போனார் ஆச்சார்யா.. தான் செய்த தவறுகளுக்கான தண்டனை இது என்ற குற்ற உணர்ச்சி அவரை அழுத்தியது.. மகனின் இந்த நிலையில் இதயம் கனத்துப் போனார்.. தன் ஜீவனில் பாதியான மனைவியின் இழப்பில் ஏற்கனவே உடைந்து போயிருந்தவர் இந்த விஷயத்தை கேட்டு உயிரில் சக்தி இழந்தார்..

"ஏன் டாக்டர்.. எதனால அவனுக்கு இப்படி ஒரு நிலை.. என்ன காரணம்..!!"

"ஹ்ம்ம்.. சரியா சொல்லணும்னா நமக்கு பிடிச்ச விஷயங்களை செய்யும் போது டோபமைன் அப்படிங்கற ஹாப்பி ஹார்மோன் நம்ம மூளையில் சுரக்கும்.. இந்த ஹார்மோன் சுரக்கும் போது நமக்குள்ள பிளஷர் கிடைக்கும்..

சில நேரங்களில் சில மனிதர்களுக்கு இந்த பிளஷர் அதிக அளவு தேவைப்படுது.. எந்த விஷயம் தனக்கு சந்தோஷத்தை கொடுக்குதோ அந்த விஷயத்தை அதிகப்படியா செய்ய நினைப்பாங்க.. அப்போ இந்த ஹார்மோன் அதிக அளவு சுரக்கும்.. அதிக இன்பம் கிடைக்கும்.. இது ஒரு விதமான உச்ச நிலை..

"அதிக அளவு டோபமைன் சுரக்கும் போது மனிதன் ஆக்ரோஷமாகிறான்.. தனக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடிய பழக்கங்களுக்கு அடிமையாகிறான்.. ADHD குறைபாடு கூட அதிக அளவு டோபமைன் சுரப்பதால் வரும் பிரச்சினைதான்.."

"மத்தவங்கள கொன்னு அவங்க துடிக்கிறதை பார்த்து இன்பத்தை அனுபவிக்கிற சைக்கோ கில்லர்களும் இந்த பிரிவுக்குள் வருவாங்க.. அப்புறம் அதிகமா போதை மருந்து பயன்படுத்தி தன்னையே மறந்து சந்தோஷமா இருக்கிறவங்க..
ஏன் சில பேர்.. சாப்பாட்டுக்கு ரொம்ப அடிக்ட்டா இருப்பாங்க.. நிறைய சாப்பிடறதால தான் சந்தோஷமா இருக்கிறதா நினைப்பாங்க.. அடிக்ட்டா கேம் விளையாடறது.. அப் நார்மலா படிச்சுக்கிட்டே இருக்கிறது.. இப்படி எல்லாமே அதிகப்படியான டோபமைன் சுரப்பதன் விளைவுகள்.. உங்க பையனும் அப்படிதான்.. அவனுக்கு அடி உதை வன்முறையில்தான் பிளஷர் கிடைக்குதுன்னு நினைக்கிறார்.. இதை தாண்டி சந்தோஷமான இன்னொரு உலகம் இருக்குன்னு அவன் மனசு ஏத்துக்க மறுக்குது.."

தலையே சுற்றியது அவருக்கு.. "அவன் ஏன் இப்படி அசாதரணமா இருக்கான்..?"

"உங்க ஜீன்.. நீங்க ஒருகாலத்தில் அப்படித்தானே இருந்தீங்க.. இல்லைன்னா உங்கள் நடவடிக்கைகளை அப்சர்வ் பண்ணி இன்ஸ்பையர் ஆகி இருக்கலாம்.."

"நான் இவ்வளவு மூர்க்கமா இல்லையே!!"

"உங்க மகன் கொஞ்சம் ஓவர்டோஸ்.. நல்லா யோசிச்சு பாருங்க சார்.. ஏதோ ஒரு வகையில் உங்க மகனுக்கு நீங்க வன்முறையை ஊட்டி இருக்கீங்க.."

ஆச்சார்யா யோசித்தார்.. குருஷேத்ரா லஷ்மியின் வயிற்றில் இருந்தபோது மனைவி சொல்ல சொல்ல கேட்காமல் தன் வீரதீர பிரதாபங்களை வயிற்றுப் பிள்ளையிடத்தில் காவியக் கதைகளாக வர்ணித்து சொன்ன காலங்களை நினைவு கூர்ந்தார்..

"அப்படியே அவன் கழுத்துல வைச்சேன் பாரு ஒரு குத்து.. தலை தொங்கிப் போச்சு.."

"என்னங்க.. பிள்ளைகிட்டே பேசற கதையா இது..!!"

"விடுடி.. என் பிள்ளை கதைகேட்டு வீரனா வருவான்.."

"கடவுளே நான் என்ன செஞ்சு வைச்சிருக்கேன்.." தலையில் அடித்துக் கொண்டார்..

"இதை குணப்படுத்த வழியே இல்லையா டாக்டர்.." கேட்டவருக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது..

"கவுன்சிலிங் கொடுக்கலாம்.. ஐம்பது சதவீதம் வாய்ப்பிருக்கு.."

மகனை கவுன்சிலிங் அனுப்பி வைத்தார்.. அங்கேயும் ஏதோ அடிதடி பிரச்சினை செய்து ஆஸ்பிட்டலை அடித்து நொறுக்கி பில்லை வீட்டிற்கு அனுப்பினான் குருஷேத்ரா..

அதன் பின் மருத்துவமனை அழைத்துச் செல்ல முயற்சிக்க வில்லை அவர்..

"வாடா உனக்கு இன்னொரு உலகத்தை காட்டறேன்" என்று உடன் பழகியவன் காசு கொடுத்து ஒரு பெண்ணை அழைத்து வந்து அவன் அறைக்குள் தள்ளிவிட மூக்கு வாய் உடைந்து.. இரத்தக் கிளறியாக வெளியே வந்தாள் அவள்.. காமம் அவன் அறியாத இன்னொரு பக்கம்..

"டேய் பொண்ணுங்களை இப்படியா டீல் பண்ணுவ.. அவங்க மென்மையானவங்க.. அவங்க இதையெல்லாம் தாங்க மாட்டாங்க.." சேக்காளி எடுத்துச் சொல்ல..

"அப்படியா.. எனக்கு தெரியாது.." அலட்சியமாக பதில் சொன்னான் அவன்..

அன்பு அடுத்தவர் வலியை உணரவைக்கும்.. அந்த மெல்லிய உணர்வை கடத்த மூளை தவறிப்போனதில் மற்றவர் வலி உணரத் தெரியவில்லை.. துடிக்க வைப்பதில் அவனை பொறுத்தவரை ஆண் பெண் பேதமில்லை..

அவனுக்கென்று ஒரு கூட்டம்.. அவனுக்கென்று ஒரு நியாயம்.. மகனை இப்படி மூர்க்கனாக.. முகத்தில் எந்நேரமும் இரத்த திட்டுகளோடு காண சகிக்கவில்லை அவன் தந்தைக்கு.. அப்படி ஒரு வாழ்க்கையை வெறுத்து விலகி மீண்டும் வன்முறை நிறைந்த நிழல் உலகத்தில் மகனுக்காக கால் பதித்தவர்.. அவன் மாறுவான் என்ற நம்பிக்கை இல்லை..

மீண்டும் மருத்துவரின் பாதமே சரணாகதி.. "ஏதாவது வழி சொல்லுங்க டாக்டர்.."

"டோபமைன் டிடாக்ஸ்.. ஆனா அவர் கொஞ்சம் மெனக்கிடனும்.."

"அய்யோ அதுக்குதான் வழியில்லையே.. வேற ஏதாவது.. !!"

"அவரோட Suppressed கண்டிஷன்ல இருக்கிற மென்மையான உணர்வுகளை தூண்டிவிடனும்.."

"எப்படி..?"

"அவர் கவனத்தை திசை திருப்பி விடுங்க.."

"அதான் எப்படி.."

"உங்க மகனை காதலிக்க சொல்லுங்க.."

"வாய்ப்பே இல்லை.. மென்மையான உணர்வுகளே இல்லைன்னு சொல்றீங்க.. இதுல காதல் எங்கிருந்து வரும்.."

அப்போ அவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க.. மாற்றம் வரலாம்.."

"என்ன.. ?" அவர் கண்களில் வெளிச்சம்..

"ஆனா அவனை யார் கல்யாணம் பண்ணுவா. பொண்ணுங்க தெறிச்சு ஓடுதுங்களே..!!"

"அது உங்க பிரச்சினை.. பாருங்க மிஸ்டர் ஆச்சார்யா.. வழியைத்தான் சொல்ல முடியும்.. பாதையை நீங்கதான் அமைச்சிக்கனும்.." மருத்துவர் சொல்லியதை தொடர்ந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கியவருக்கு பாதை கிடைத்துவிட்ட நம்பிக்கையில் முகம் பிரகாசித்தது..

தொடரும்..
இந்த கதைய படிக்க ரொம்ப நாள் காத்திருந்தேன் .சந்தோஷமா இருக்கு.நன்றி நன்றி சனாம்மா.கதை வேற வெல்ல சூப்பரா இருக்கும் .உங்களால் மட்டுந்தான் இந்த மாதிரியெல்லாம் எழுத முடியும்.கல்லா இருக்கிற மனுஷன் கரைய வைக்கிறது.இது உங்க கதையில் மட்டுமில்ல .உங்க கதைய படிச்சு அதில் நல்ல கருத்துக்கள் ஃபாலோ பண்ற எங்களுக்குந்தான் சாத்தியமாகுது.
 
Top