• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அந்த பெரிய வீடு சுறுசுறுப்போடு அன்றைய நாளின் முக்கிய வைபவத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தது..

வாயிலின் இரு பக்கங்களிலும் வாழை மரங்கள்.. வீட்டை சுற்றி மேலும் கீழுமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த கலர் விளக்குகள்.. கொடிமரம்.. ஒலிபெருக்கி இவை அனைத்தும் அந்த வீடு ஒரு கல்யாண வீடு என்று சொல்லாமல் சொல்லியது..

உறங்கிக் கொண்டிருந்த சிலரும் கூட.. முனகலும் சோம்பலுமாய் ஒரு வழியாய் எழுந்து முகூர்த்தத்திற்காக தயாராக ஆரம்பித்தாயிற்று..!!

வீட்டிலேயே திருமணம்.. அதுவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு.. முக்கிய சொந்த பந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்..

தன் அறைக்குள்.. படு ஜோராக தயாராகிக் கொண்டிருந்தாள் இந்திரஜா.. இன்னும் அரை மணி நேரத்தில் முகூர்த்தம்.. ஆசைப்பட்ட மாமனின் கையால் தாலி வாங்கிக் கொள்ளப் போகிறாள்.. ஆம் அவளுக்கும் அவள் மாமன் மகன் கௌதமனுக்கும் திருமணம்.. பெரு முயற்சியின் பலன் இன்று கைகூட போகிறது.. ஆசைப்பட்ட வாழ்க்கை அவள் கைசேர போகிறது..

சொந்தக்கார பெண்களில் ஒருத்தி அழகு கலை பயின்றவள் என்பதால்.. அழகு கலை நிபுணரை அழைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.. படு ஜோரான ஒப்பனையோடு இந்திரஜாவை அலங்கரித்து விட்டிருந்தாள் அந்த பெண்..

இந்திரஜா அப்படி ஒன்றும் பேரழகி இல்லை என்றாலும் இன்று ஒப்பனையின் உபயத்தில் மினுமினுப்பாக தெரிந்தாள்.. எளிமையான கேரட் நிறத்தில் காஞ்சி பட்டு.. அதற்கு பொருத்தமான ஆரி வேலைப்பாடுகளோடு கூடிய பச்சை ரவிக்கை.. கண்ணை உருத்தாத நகைகள்.. சிகை அலங்காரம்.. என செயற்கையும் இயற்கையும் கலந்து ஒரு முறைக்கு இருமுறை பார்க்க தூண்டும் அழகோடு மிளிர்ந்தாள் இந்திரஜா.. அலங்கரிக்கும் வேலைகள் முடிந்து கண்ணாடியில் ஒருமுறை தன்னை பார்த்துக் கொண்டவளுக்கு வாவ்.. இது நானா? என்ற பிரமிப்பு.. அழகுநிலைய வாசல் ஏறாதவள் இல்லை இந்திரஜா.. ஆனாலும் இன்று வியக்க வைக்கும் கூடுதல் பொலிவு.. இதுதான் கல்யாண களையோ?

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் இந்திரஜாவின் தாய் பூங்கொடி..

"ஐயோ இந்து..!! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. எவ்வளவு அழகா இருக்க.." என்று ஆனந்த வியப்போடு மகளை ரசித்து திருஷ்டி கழித்தாள் பூங்கொடி.. இந்திரஜாவின் முகத்தில் வெட்கத்தோடு கூடிய புன்னகை..

அந்நேரத்தில் கதவை திறந்து கொண்டு.. உள்ளே ஓடி வந்தது ஐந்து வயது பூச்செண்டு ஒன்று.. பிள்ளையை பார்த்ததும் இந்து முகத்தில் உற்சாகம்..

"ஏய் ஸ்வேதா குட்டி.." என்று இரு கைகளை நீட்டி ஓடிவந்த குழந்தையை அணைத்து மடியில் அமர்த்தி கொண்டாள்..

குழந்தையை கண்டதும் பூங்கொடியின் முகம் அஷ்ட கோணலாக நிறம் மாறி போனது.. ஆனால் வேறு வழி இல்லை இந்த ஸ்வேதாவை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.. அவளை முன்னிறுத்தி தான் இந்த திருமணம்.. இந்த ஸ்வேதா குட்டி இல்லையேல் திருமணத்திற்கான அவசியமே இல்லையே..!!

இந்திராஜாவின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் ஸ்வேதா குட்டி.. அதே பாசத்தை முகத்தில் காட்டி குழந்தைக்கு முத்தமிட்டாள் இந்திரஜா..

பட்டு பாவாடை சட்டையில் விடியற்காலையிலேயே திருமணத்திற்காக மிக ஆர்வமாக பட்டுடுத்தி தயாரான நலம் விரும்பிகளுள் இந்த குட்டி மனுஷியும் ஒருத்தி..

"நீ ரொம்ப அழகா இருக்க..?" என்பதை வாயால் சொல்லவில்லை ஸ்வேதா.. செயலில் உணர்த்தினாள்.. குட்டி பாப்பா ஸ்வேதாவிற்கு காது கேட்காது.. வாய் பேச வராது.. பிறவி குறைபாடு..

குழந்தையின் சைகை பாராட்டில் "அப்படியா..?" என்று கண்கள் விரித்து வினவிய இந்திரஜா "நீ கூடதான் ரொம்ப அழகா இருக்க..!!" என்று சைகையின் மூலம் குழந்தைக்கு புரிய வைத்தாள்..

பிரத்தியேக டீச்சர் மூலம் குழந்தைக்கு சைகை பாஷை சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க.. இந்திராஜாவும் குழந்தைக்காக அந்த பாஷையை கற்றுக் கொண்டிருக்கிறாள்..

குழந்தை இந்திரஜாவின் மடியில் அமர்ந்திருப்பது பூங்கொடிக்கு பிடிக்கவில்லை.. ஓடிப்போனவள் பெற்ற குழந்தை..‌ அதுவும் குறைபாடுள்ள குழந்தை.. இதை எப்படி ஒழித்து கட்டுவது என்பதில் தான் அவள் எண்ணம் சென்று கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த வீட்டிற்கு ஸ்வேதா குட்டி இளவரசியாக வலம் வரும் பட்சத்தில் அவள் சுண்டு விரல் நகத்தை கூட அசைக்க முடியவில்லை என்பது பூங்கொடிக்கு தீராத மனக்குறை.. ஆசைதீர இரண்டு வார்த்தை திட்ட கூட முடியவில்லையே இந்த குட்டி பிசாசை.. என்று மனதுக்குள் கனன்றதுண்டு..

"பாப்பா இறங்கி கீழே உட்காரு.. சித்தி புடவை கசங்கிடும் இல்ல.." உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில் விஷத்தையும் வைத்துக்கொண்டு முறுவலித்தாள் இந்த பூங்கொடி..

"பரவாயில்லை இருக்கட்டும் மா.. குழந்தை உட்கார்ந்து புடவை கசங்கி போனா போகட்டும்..‌ குழந்தையை தூக்கி கொஞ்சறதை விட சந்தோஷம் இந்த உலகத்தில் உண்டா சொல்லு.." என்று ஸ்வேதாவின் நெற்றி முட்டி.. அவள் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்திருந்தான் அவன்.. கௌதமன்.. இன்னும் சற்று நேரத்தில் இந்திரஜாவிற்கு மாலையிட போகிறவன்..

கௌதமனை கண்டதும் இந்திரஜாவின் விழிகள் விரிந்து வெட்கத்தை தத்தெடுத்து கொண்டன..

பட்டு வேட்டி சட்டையில் நெடு நெடுவென்று வளர்ந்தவனாக வாட்டசாட்டமாக விரைப்பாக நின்று கொண்டிருந்தான் அவன்..

முன்பு லேசான தொப்பையும் சற்று பெருத்த உடல்வாகுமாய் இருந்தவன்.. பல விதங்களில் மட்டந் தட்டப்பட்ட ஒருத்தியால் உடற்பயிற்சியின் விளைவாக உடம்பை குறைத்து கட்டுக்கோப்பான தேகத்தோடு மெருகேறி இருந்தான்..‌

இந்திரஜாவின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை அவனைப் பார்த்ததும் ஓடி வந்தது..‌

இறுகிப் போயிருந்த அவன் இதழ்கள் ஓடி வந்த குழந்தையை கண்டதும் அவசரமாக புன்னகைத்துக் கொண்டன..

புன்னகையோடு இரண்டு கைகளை நீட்டி நின்ற ஸ்வேதாவை ஆசையோடு தூக்கிக் கொண்டான் கௌதமன்..

"பாப்பா அழகா தயாராகிட்டாளா..?" ஒரு கையில் குழந்தையை அணைத்து பிடித்துக் கொண்டு மறுக்கையால் சைகையில் கேட்க.. ஆமாம் என்ற தலையசைத்தாள் குட்டி..

"நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்கப்பா.." கையை காற்றில் அசைத்து தன் தந்தைக்கு புரிய வைத்திருந்தாள்..

"அழகா..?" அவன் இதழ்களில் வறண்ட புன்னகை.. ஆனால் மகிழ்ச்சி புன்னகைக்கும் வறண்ட புன்னகைக்கும் வித்தியாசம் தெரியாத ஸ்வேதா அப்பா தன் பாராட்டில் மகிழ்வதாக எண்ணி அவன் கழுத்தை கட்டிக்கொண்டது..

இந்திரஜா புன்சரிப்போடு எழுந்து வந்து கௌதமனின் அருகே நின்று மகள் தந்தையின் கொஞ்சல்களை ரசித்து கொண்டிருந்தாள்..

சற்று தொலைவில் நின்று இதை பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடிக்கோ முகத்தில் வெறுப்பு..‌

கௌதமன் பூங்கொடியின் அண்ணன் மகன்.. அவன் கையில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த ஸ்வேதா குட்டி கௌதமனின் மூத்த தாரத்து குழந்தை..‌

முதல் மனைவியின் குழந்தையை கௌதமன் தூக்கி வைத்து கொண்டாடுவது அவளுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே பிடிக்கவில்லை..

தன் மகள் வாயிலாக பிறக்க போகும் குழந்தை மட்டுமே இந்த வீட்டில் வாரிசாக கொண்டாடப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்... அதற்காகத்தான் இத்தனை ஏற்பாடு..

முதலில் கௌதமனுக்காக நிச்சயிக்கப்பட்டவள் இந்திரஜாதான்.. ஆனால் ஒரே வீட்டுக்குள் வளர்ந்த அத்தை மகளின் மீது எந்தவித உணர்வும் ஏற்படவில்லை என்று கௌதமன் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டதால் வெளியிலிருந்து பெண் எடுக்கப்பட்டு அகல்யாவிற்கும் அவனுக்கும் மனம் முடிக்கப்பட்டது..

இதில் பூங்கொடிக்கு மிகுந்த வருத்தமும் கோபமும்.. வெளியில் பெண் பார்த்து நிச்சயம் முடித்து விட்டு வந்த நாளில் அவள் செய்த கலாட்டாவில் வீடே வெல வெலத்து போனது..

யார் சொன்ன சமாதானங்களும் அவளிடம் எடுபடவில்லை..

"அவனுக்கு விருப்பம் இல்லைன்னு சொன்ன பிறகு நாங்க என்னதான் செய்ய முடியும்" என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்க வந்த கௌதமனின் அன்னை கார்த்திகா தேவியிடம் சீறினாள்..

"போதும் அண்ணி எதுவும் பேசாதீங்க.. என் அண்ணனே எனக்கு துரோகம் பண்ணிட்டாரே.. சொந்தம் விட்டுப் போய்ட கூடாது என் பொண்ண கௌதமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு..‌ தலைமுறைக்கும் இந்த உறவு நீடிக்கனும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன்.. என் கனவுல மண்ணள்ளி போட்டுட்டீங்களே..!! கல்யாண வயசுல வீட்ல இவனுக்காக ஒரு பொண்ணு காத்திருக்கும் போது வெளியில போய் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டு வந்தா என்ன அர்த்தம்.. அப்புறம் எனக்கு இந்த வீட்ல என்ன மரியாதை..? சேலைத் தலைப்பால் கண்ணை துடைத்துக் கொண்டு அழுகையில் பூங்கொடியின் குரல் உடைந்தது..

"பூங்கொடி என்ன பேசுற குழந்தைகளோட விருப்பம் முக்கியம் இல்லையா..?" நரேந்திரன் தன் தங்கையிடம் தன்மையாக பேசி புரிய வைத்துவிடும் நோக்கோடு பேச்சை ஆரம்பித்தார்.. பூங்கொடி அவர் வார்த்தைகளை ஏற்பதாய் இல்லை..

"என்ன பெரிய குழந்தைகளோட விருப்பம்..? என் பொண்ணு மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டு மாமனை கட்டிக்க தயாரா இருக்காளே.. நம்ம கௌதமன் நீங்க சொன்னா கேக்க மாட்டானா..? உங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லுங்க.. பொண்ணு வீடு ரொம்ப வசதின்னு கேள்விப்பட்டேன்.. சொந்தத்தை விட பணம் தான் முக்கியமா போச்சுங்கும்போது என் வேதனையும் புலம்பலும் இந்த வீட்ல வீண் குப்பைதான்..‌ நானும் என் மகளும் உங்களை சார்ந்து வாழற அனாதைங்க தானே.. அதனால தான் உங்க கண்ணுக்கு நாங்க தெரியாம போயிட்டோம்.. என்று மூக்கை சிந்திக் கொண்டு விசும்பினாள் பூங்கொடி..

நரேந்திரனுக்கும் கார்த்திகா தேவிக்கும் தர்ம சங்கடமாகி போனது.. எப்படி தன் தங்கையை சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை..‌

இந்திராவை மணக்க விருப்பமில்லை என்று தன் மகன் திட்டவட்டமாக மறுத்துவிட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும்..

நரேந்திரன் கார்த்திகா தேவியின் மூத்த மகன் உத்தமனுக்கும் இந்திரஜாவிற்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் கௌதமனை திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர்களுக்குள்ளாகவே பேசி முடிவு செய்திருந்தனர்.. இந்த விஷயம் கௌதமன் காதுகளை எட்டாமல் போனது..‌

சரியாக அவனுக்கு 27 வயது முடிந்து திருமணம் செய்யலாம் என்று முடிவோடு நரேந்திரனும் கார்த்திகா தேவியும் இந்திரஜாவை பற்றி அவனிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது தான்..‌ தனக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்று தன் எண்ணத்தை திடமாக தெரிவித்திருந்தான்.. தர்ம சங்கடமான சூழ்நிலை.. ஆனாலும் மகனின் விருப்பத்தை மதித்து வெளியில் பெண் பார்த்து திருமணம் பேசி நிச்சயம் பேசி முடித்தாயிற்று..‌

கௌதமனுக்கு இந்திரஜாவை மணக்க விருப்பமில்லை.. அதனால் வெளியில் பெண் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று நேரடியாக பூங்கொடியிடம் விஷயத்தை தெரிவித்து விட்டு தான் ஏற்பாடுகளை செய்தார்கள்.. ஆனாலும் பூங்கொடிக்கு மனம் மாறவே இல்லை..

கடைசியில் கெளதம் தான் தன் அத்தையை சமாதானப்படுத்தினான்..

இந்திரஜாவிற்கு வசதியான நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்.. கௌதமனின் மென்மையான பாசமான பேச்சில் பூங்கொடியின் கோபம் பனியாக குளிர்ந்து கரைந்து போயிருந்தது.. சீரும் சிறப்புமாய் பணக்கார வரனுக்கு திருமணம் செய்து வைப்பதாயய் கூறி இருக்கிறானே.. அத்தை வாய் அத்தோடு மூடிக்கொண்டது..

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கௌதமன்..‌ தேவையில்லாமல் அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டான்.. அவனுக்குள்ளும் கோபங்கள் உண்டு.. ஆனால் தன் கோபதாபங்களை அவசியமில்லாமல் வெளிப்படுத்தும் குணங் கெட்டவனில்லை.. நிதானமும் பொறுமையும் கொண்டவன்.. சிந்தித்து முடிவெடுக்க கூடியவன்.. உத்தமனை விட கௌதமனுக்கு அவ்வீட்டில் மதிப்பும் மரியாதையும் அதிகம்..

கௌதமனுக்கு அகலிகாவை மிகவும் பிடித்திருந்தது..‌ திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளிலிருந்து அவள் நினைவுகளில் ஏகப்பட்ட கற்பனைகளை வளர்த்து வைத்திருந்தான்..

கல்யாணம் முடிந்து ஒரு வருடத்திலேயே ஸ்வேதாவும் பிறந்து விட்டாள்.. தம்பதிகளுக்கு இடையிலான வழக்கமான சண்டையும் சச்சரவும் இருவருக்குள்ளும் உண்டு.. எல்லாம் ஒரு நாள் சரியாகிப்போகும் என்று அவனும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.. ஆனால் இது தீர்க்க முடியாத பிரச்சனை என்று அவனுக்கு அப்போது புரியவில்லை..

அவனிடம் குறைகண்ட அகலிகா.. இன்னொருவனோடு நிறைவான காதல் கொண்டு பெற்ற குழந்தை தாலி கட்டிய கணவனையும் நிற்கதியாக விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.. காரணங்களை கடிதத்தில் தெரிவித்திருந்தாள்.. அதுதான் அவள் கணவனுக்கு செய்த மிகப்பெரிய உபகாரம்.. யாரிடமும் வெளியில் காண்பிக்க முடியாத கடிதம்.. கௌதமனை அவமானப்படுத்தி சிலுசில்லாக உடைய வைக்கும் கடிதம்.. இன்னும் அவன் ரகசிய பெட்டியில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.. நெஞ்சுக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது..

தன்னை பற்றி பரவாயில்லை.. காது கேட்க முடியாத வாய் பேச முடியாத பெற்றெடுத்த தன் மகளின் மீது கூடவா கொஞ்சம் கூட பாசம் இல்லாமல் போய்விடும்..!! இவளையா மனதார நேசித்தேன்.. நெஞ்செங்கும் அவள் மீது கடும் வெறுப்பு பரவியது..

எதிர்பாராத பெரும் துரோகத்தில் இடிந்து போனான் கௌதமன்.. வீடு நிலை குலைந்து போனது.. பூங்கொடிக்கு ஒரு வகையில் கொண்டாட்டம்..‌ ஊரார் கவுதமனை வாய்க்கு வந்தபடி வசைபாடினர்..‌ ஒரு பெண் ஓடிப்போகலாம்.. ஆனால் ஒரு மனைவி ஓடிப் பனால் அவள் கணவனுக்கு நேரம் அவமானங்கள் கொஞ்சம் நெஞ்சம் இல்லை..

எதிரில் வருத்தப்பட்டு அவனுக்கு ஆறுதல் சொன்ன உலகம் பொண்டாட்டியை திருப்தி படுத்த முடியலயாம்.. அதனால தான் இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டா..!! என்று முதுகின் பின்னால் கை கொட்டி சிரித்தது.. அவமானத்தில் மனமுடைந்து வெளியே தலை காட்ட முடியாமல் தவித்தான் கௌதம்..

ஒரு கட்டத்தில் தன்னை தேற்றிக்கொண்டு இரும்பாக தன்னை இறுக்கிக் கொண்டு.. குழந்தைக்காக வாழ ஆரம்பித்து தன்னை மெருகேற்றிக் கொண்டு ஓரளவு பழைய துன்பங்களிலிருந்து வெளியே வர ஆரம்பித்திருந்தான்..

தன் மகளை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்க அவனால் முடியும்.. ஆனால் அவன் குட்டி இளவரசிக்கு இந்திரஜாவை பிடித்திருக்கிறது.. விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவளோடு அதிகமாக ஒட்டிக் கொள்கிறாள் ..

வேலைப் பளுவும் வேதனையுமாக பட்டறையில் முடங்கி கிடந்த காலங்களில் இந்திரஜாதான் பேரூபகாரியாக குழந்தையை பார்த்துக்கொண்டாள்.. அந்த நன்றி கடன்தான் இப்போது அவனை திருமணத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் அழுத்துகிறது.. மற்றவர்களை போல் அல்லாமல் சாதாரண குழந்தைகளிலிருந்து வேறுபட்ட ஸ்வேதா கௌதமன் இந்திரஜாவை தவிர யாரோடும் ஒன்றிப் போவதில்லை.. அதுதான் பிரச்சினையே..!!

"இந்திஜா கல்யாணமாகி இன்னொருத்தர் வீட்டுக்கு போயிட்டா.. நம்ம அம்மு குட்டியை யார் பார்த்துக்குவாங்க.. அவ ஏங்கி போய்ட மாட்டாளா..!! ஓடிப்போன ஒருத்திக்காக நீ ஏன் உன்னோட வாழ்க்கையை அழிச்சுக்கணும்.. உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைக்காக இந்திரஜாவை கல்யாணம் பண்ணிக்க கூடாதா..?" கார்த்திகா தேவி தயங்கி தயங்கி கேட்டபோது முதல் முறை முடியவே முடியாது என் குழந்தையை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்று மறுத்திருந்தான் கௌதமன்..

முதல் திருமணத்திலிருந்து இன்னும் வெளியே வந்த பாடில்லை.. அவன் மனைவி அகலிகாவோடு வாழந்தபோதே அவளால் ஏற்பட்ட பாதிப்பு அதன் தாக்கம் நெஞ்சம் முழுக்க புகையாக நிறைந்து மூச்சுத்திணற வைக்கிறது.. இதில் இன்னொரு திருமணமா..? வாய்ப்பே இல்லை..

ஆனால் திரும்பத் திரும்ப திருமண விஷயத்தைப் பற்றி பேச்செடுக்கையில் ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்ள வேண்டியதாய் போனது.. தன் மகளுக்காக..!!

கண்ணும் கருத்துமாக அளவில்லாத பாசத்தை பொழிந்து ஒரு தந்தையாக கௌதமனால் தன்மகளை பார்த்துக் கொள்ள முடியும்தான்.. ஆனால் அந்த குட்டி மனுஷியின் சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் புதைந்திருக்கும் அம்மா ஏக்கத்தை இந்திரஜாவால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்..‌

அந்த ஒரு காரணத்திற்காக தான் இந்திரஜாவை மணக்க சம்மதித்தான்.. சுயநலமாக யோசித்த போதிலும் ஆனால் தன்னை மணந்து கொண்டால் அவள் இழக்கப்போகும் சந்தோஷங்களை பற்றி விலாவரியாக எடுத்துச் சொல்லி.. நன்றாக யோசித்துக்கொள்ளவும் சொன்னான்..

இந்திரஜா எதையும் யோசித்துப் பார்த்ததாக தெரியவில்லை.. அவன் சொன்ன அத்தனை பெரிய பிரச்சனை அவளைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை என்பது கௌதமனை பொறுத்தவரையில் பெருத்த ஆச்சரியம்..

"நான் இப்படித்தான் இந்திரஜா.. என்னால முடிஞ்ச விஷயங்களை மாத்திக்கிட்டேன். ஆனா மாத்தவே முடியாத என்னுடைய இயல்பான குணங்கள் உள்ளுக்குள்ளே அப்படியேதான் இருக்கு.. இதுதான் நான்.. உனக்குள்ளே நிறைய கனவுகள் இருக்கலாம்.. அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. இப்பவும் சொல்றேன் என் குழந்தைக்கு ஒரு அம்மா தான் தேவை.. எனக்கு மனைவி தேவையே இல்லை.." என்று அணுஅணுவாக தன்னிலையை பற்றி விளக்கியிருந்தான்..

அவன் சொன்னதை ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டு..

"எனக்கும் ஸ்வேதாவுக்கு அம்மாவா மட்டும் இருந்தா போதும் மாமா.. வேற எந்த சுகத்தையும் எதிர்பார்க்கல.. உங்களை மணக்கப் பரிபூரண சம்மதம்" என்று சந்தோஷ பொலிவுடன் கூறி இருந்தாளே..!!

திருமணத்திற்கு ஒப்புக்கொண்டவன் மீண்டும் மனம் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பயத்தில் தான் அவசர அவசரமாக இதோ.. வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது..

இப்போதும் கூட கவுதமனுக்கு மனம் கேட்கவில்லை..

மீண்டும் ஒருமுறை அவள் விருப்பத்தை கேட்டு உறுதிப்படுத்துவதற்காக தான் இந்த அறைக்குள் நுழைந்தான்..

இந்திராஜாவும் தன் குழந்தையும் கொஞ்சி பேசுவதை கண்டு மனம் குளிர்ந்து போயிருந்தான்.. குட்டியின் சந்தோஷாத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.. ஆனால்..!!

அவள் விருப்பத்தை கேட்டே ஆக வேண்டும்..

"உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் இந்திரஜா.." என்று ஆரம்பித்தான்..

சூழ்நிலையை புரிந்து கொண்டு ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள் பூங்கொடி..

"சொல்லுங்க மாமா..!!" என்றாள்..

தன் அலங்காரத்தை ஒருமுறையேனும் அவன் ஏறெடுத்து பார்ப்பான்.. ரசிப்பான் என்ற நப்பாசையில் ஏக்கப் பார்வை வீசினாள்..

ஆசை நிராசையாகிப் போனது.. அவன்தான் சொல்லிவிட்டானே.. என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்று.. ஆழ்ந்த மூச்சோடு மனதை சமன்படுத்திக் கொண்டாள்..

"இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் தானே.. மறுபடி மறுபடி ஒரே விஷயத்தை சொல்றேன்னு நினைக்காதே.. என்னால உனக்கு எந்த தாம்பத்திய சுகத்தையும் கொடுக்க முடியாது.. இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் போச்சு.. குழந்தைக்காக மட்டும் தான் இந்த கல்யாணம்.. தியாகம் மட்டும்தான் உன்னோட வாழ்க்கையா இருக்கும்.. என்ன சுகமும் இல்லாத இந்த திருமணத்தை உன்னால் ஏத்துக்க முடியுதா.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல நல்லா யோசிச்சுக்கோ..!!" என்றான் இறுகிய குரலில்..

"யோசிக்க ஒண்ணுமே இல்ல மாமா.. எனக்கு பூரண சம்மதம்" என்று அழுத்தமாக தன் முடிவை பதிவு செய்திருந்தாள்..

ஆழ்ந்த பெருமூச்சோடு அவளை ஒரு பார்வை பார்த்தவன்.. அங்கிருந்து சென்றிருந்தான்..

இதோ மணமேடையில் இருவரும் ஜோடியாக..!! ஐந்து வயதான தன் ஸ்வேதா குட்டி தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டிருக்க.. முகத்தில் எந்தவித சந்தோஷமும் இல்லாமல்.. இந்திரஜாவின் கழுத்தில் தாலி கட்டும் நேரம்.. தற்செயலாக திரும்பியவனின் பார்வை எதிர்ப்புறம் நின்றிருப்பவளின் மீது நிலை குத்தி நின்றது..‌

அக்னி குண்டத்தின் பிரதிபலிப்போ அல்லது உண்மையில் அவனுக்குள் எரியும் நெருப்பில் உஷ்ணமோ தெரியவில்லை.. கண்கள் சிவந்து உக்கிரமாக மாறிப் போயிருந்தான்..

அனைவரின் பார்வையும் அவள் மீது பதிந்திருந்தது..‌ அத்தனை வெறுப்பும் கோபமும் அவர்களின் கண்களில்..

இரண்டு வருடங்களாய் போராடி அவனை சம்மதிக்க வைத்து இந்திரஜாவின் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில்.. இன்னொருவனோடு ஓடிப்போன அவன் முதல் மனைவி அகலிகா கண்முன்னே வந்து நிற்கிறாளே..!!

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Jan 10, 2023
Messages
12
Starting eh vandhutaala ah 🙄🙄🙄🙄
 
New member
Joined
Sep 10, 2024
Messages
23

குழந்தை இந்திரஜாவின் மடியில் அமர்ந்திருப்பது பூங்கொடிக்கு பிடிக்கவில்லை.. ஓடிப்போனவள் பெற்ற குழந்தை..‌ அப்படியே அன்னையின் சாயலை கொண்டிருக்கும் குழந்தை.. அதுவும் குறைபாடுள்ள குழந்தை.. இதை எப்படி ஒழித்து கட்டுவது என்பதில் தான் அவள் எண்ணம் சென்று கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த வீட்டிற்கு ஸ்வேதா குட்டி இளவரசியாக வலம் வரும் பட்சத்தில் அவள் சுண்டு விரல் நகத்தை கூட அசைக்க முடியவில்லை என்பது பூங்கொடிக்கு தீராத மனக்குறை.. ஆசைதீர இரண்டு வார்த்தை திட்ட கூட முடியவில்லையே இந்த குட்டி பிசாசை.. என்று மனதுக்குள் கனன்றதுண்டு..

ஆரம்பமே அமர்க்களம் அப்டீன்றது இதானோ 🤪
 
Member
Joined
Jun 27, 2024
Messages
1
Grt and good start... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Joined
Jul 10, 2024
Messages
39
ஆரம்பத்திலேயே தாறுமாறு தக்காளி சோறு மாதிரி அமர்க்களமா இருக்கே. 🤔🤔🤔 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 🙄🙄🙄
 
Member
Joined
Nov 30, 2024
Messages
7
Starting super ❤️ 👏❤️ ❤️ ❤️ ❤️ but athukulla ponava vanthutalaaaa,,,,,,ena nadaka pogutho 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
 
Joined
Jul 31, 2024
Messages
29

ரெண்டு வருஷமா வராம இப்ப எங்கயிருந்து வந்தா புண்ணியவதி 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
New member
Joined
Sep 18, 2024

Super ❤❤❤❤❤
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
101
Ponava ethuku vantha...💜💚💚💛💛💛💛💚💚💚💛💛🩷🩷💚💜💜💚💛🩷💛💜💚💛🩷🩷🩷🩷💚💚💚💛💛💛💛💚💚💚💚💚💚💚💚💚💛💛💛
 
Top