• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Member
Joined
Nov 30, 2024
Messages
21
Super super super super starting ♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️suryavum kamalium epdi onna serthu vekaporeenga Sana sis eagerly waiting for next ud super super super
 
Member
Joined
Jan 11, 2023
Messages
25
Unga last
ஹேப்பி அனிவர்சரி..!!

"நூறு வருஷம் கழிச்சு.. இதே சந்தோஷத்தோடு உன் கூட ஆனிவர்சரி கொண்டாடணும்னு ஆசைப்படறேன்.. ஐ லவ் யூ கமலி.. ஐ லவ் யூ மேட்லி.." மென்மையாக அவள் கரம் பிடித்து அந்த வைர மோதிரத்தை அணிவித்தான் அஷோக்..

"கமலி.. மிசஸ் கமலினி அசோக்..!!" கணீர் பெண் குரலில் சட்டென விதிர்த்து நிமிர்ந்தாள் கமலினி..

அவள் நின்று கொண்டிருக்கும் இடம் நீதிமன்றம்.. கண்முன்னே பெண் நீதிபதி அமர்ந்திருக்கிறார்.. தன் பதிலுக்காக காத்திருக்கிறார் என்ற விஷயம் மூளையில் உறைக்க வேகமாக அந்த நினைவடுக்குகளின் தாக்கத்திலிருந்து மீண்டு நிதர்சனத்திற்கு வந்தாள் கமலினி..

மீண்டும் ஒருமுறை தன் விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை வேதனையோடு பார்த்தாள் அவள்..

கண்களிலிருந்து விழுந்த இருதுளி கண்ணீர் மோதிரத்தின் மீது பட்டு வைரத்தின் பிரகாசத்தை மங்க செய்தது..!!

"கமலினி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..‌!!" அவளை திசை திருப்பினார் நீதிபதி..

"கவுன்சிலிங் போயிட்டு வந்த பிறகும் உங்க மனசு மாறலையா..? விவாகரத்து வாங்குறதுல இப்பவும் அதே உறுதியோடு இருக்கீங்களா..?" அதட்டலான கேள்வியில்.. தீர்க்கமாக அந்த நீதிபதியை பார்த்தவள்..

"எஸ் மேடம்.. விவாகரத்து தந்துருங்க.. எனக்கு அவர் கூட வாழ இஷ்டம் இல்லை.." என்றாள் உறுதியான குரலில்..

அவளுக்கு நேர் எதிராக நின்றிருந்த அசோக் திரும்பி கமலியை ஒரு பார்வை பார்த்தான்.. சர்வ சத்தியமாக அவனுக்கு விவாகரத்து கொடுப்பதில் துளி கூட இஷ்டமில்லை..

கமலினியை போல ஒரு பெண் உலகெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டாள்.. ஆனாலும் அவளை இழக்க சம்மதித்திருக்கிறான்..

அதற்குக் காரணம்..?

"மிஸ்டர் அசோக் கமலினிக்கு விவாகரத்து தர நீங்க சம்மதிக்கிறீர்களா..?" நீதிபதியின் கேள்வி அசோக்கை நோக்கி பாய்ந்தது..

மீண்டும் அவளை திரும்பி பார்த்தான்.. கமலினியின் நிர்மலமான பார்வை நீதிபதியின் மீது நிலைத்திருந்தது..

"இந்த அஞ்சு வருஷ திருமண வாழ்க்கையில் என் மனைவி அவளுக்காக ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம்.. அதை கூட கொடுக்காம போனா.. அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்டும்.." அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னவன் ஆழ்ந்த மூச்செடுத்து நீதிபதியை பார்த்தான்..

"இந்த விவாகரத்துக்கு நான் சம்மதிக்கிறேன்..!!" என்றான் உயிர்ப்பில்லாத புன்னகையோடு..

அவன் பதிலுக்கு தலையசைத்த நீதிபதி.. தீர்ப்பை எழுதிக் கொண்டு இருவரையும் பார்த்து நிமிர்ந்தார்..

மனமொத்து பிரியும் கமலினி அசோக் உங்கள் இருவரின் முடிவுக்கு ஒப்புதல் அளித்து..
இந்த கோர்ட் உங்களுக்கு விவாகரத்து அளிக்கிறது.. ஜட்ஜ் சொல்லி முடித்த அடுத்த கணம் நீண்ட மூச்சிழுத்து ஆசுவாசப்பட்டவள் கண்ணீரை உள்ளிழுத்து விழிகளை மூடி திறந்தாள்..

அந்தக் கண்ணீரும் நீண்ட பெருமூச்சும் வேதனையின் அடையாளமா அல்லது நிம்மதியின் வெளிப்பாடா அவளுக்கே வெளிச்சம்..

இருவருமாக மற்ற ஃபார்மாலிட்டிகளை முடித்துக் கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்..

குட் பை சொல்லி பிரியவும் திடமின்றி.. முன்னாள் கணவனை திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தாள் கமலினி..

ஆனாலும் "கமலி.. கமலி நில்லு.." என்று அழைத்துக் கொண்டு ஓடி வந்தான் அசோக்..

அந்த இடத்திலேயே நின்று கண்கள் மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள்.. இதழில் புன்னகையை தேக்கி கொண்டு அவன் பக்கமாக திரும்பினாள்..

"சொல்லுங்க மிஸ்டர் அசோக்..!!" கம்பீரமான அவள் அந்நிய தன்மையான பேச்சில் மனம் கசங்கினான் அசோக்..

இந்த விவாகரத்து பஞ்சாயத்து ஆரம்பித்ததிலீருந்து.. இப்படித்தான் பார்வையும் பேச்சும் எட்ட நிற்கிறது.. அவன் நெஞ்சில் சாய்ந்து.. அசோக் அசோக் என்று கொஞ்சி உருகியவள்.. இன்று யாரோ ஒரு அந்நியனிடம் பேசுவதைப் போல் தள்ளி நிற்பதில் வெறுமையாக உணர்ந்தான் அவன்.. அதற்காக தன்னை விட்டுக்கொடுத்து தன் மேல் குற்றம் சுமத்தி கொள்ள அவன் தயாராக இல்லை.. நான் என்ன செய்தேனோ அது சரி என்ற நிலையில் உறுதியாக இருந்தான்.. மன்னிப்பு கேட்கவோ தன் முடிவை மாற்றிக் கொள்ளவோ அவன் தயாராகவே இல்லை..

இனி இருவருக்கும் இடையேயான இந்த தூரம் தான் நிரந்தரம்.. இதுதான் நிதர்சனம்..‌ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. மனதை தேற்றிக்கொண்டு அவளைப் பார்த்தான்..

"உன் இஷ்டப்படி விவாகரத்து கிடைச்சிடுச்சு.. இனி என்ன செய்யப் போற கமலி..?" பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு இயல்பாக கேட்க..

குரலை செருமிக் கொண்டு.. "இனிமேதான் யோசிக்கணும்.." என்றாள் அவள் திடமான பார்வையோடு..

"உனக்கு ஏதாவது உதவி வேணும்னா..?"

"தேவையில்லை.. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு.. என் வழியை நான் பாத்துக்கறேன்.. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க..!!" என்றாள் லேசாக புன்னகைத்து..

"கமலி உனக்கு ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு.. ஒரு நண்பனா கூட என்னை ஏத்துக்க கூடாதா..?"

"எனக்கு எந்த நண்பனும் வேண்டாம் அசோக்.. தோழியா காதலியா மனைவியா.. நீங்க மட்டுமே உலகம்னு வாழ்ந்த எனக்கு ஏமாற்றம்னா என்னென்ன நல்லாவே காட்டிட்டிங்க..!! உங்களை பார்க்கும்போதெல்லாம்.. என் முன்னாடி தப்பு செசுட்டு தலை குனிஞ்சு நின்ன அந்த அசோக் முகம் மட்டும்தான் ஞாபகத்துல வந்து போகுது.. அப்படி ஒரு நம்பிக்கை துரோகி எனக்கு நண்பனா வேண்டாம்..!!" கமலினி விரக்தியான புன்னகையோடு சொன்னதில் அசோக் முகம் கருத்து போனது..

"காதலிச்சேன் உயிராய் வாழ்ந்தேன்.. உனக்காக உருகினேன் னு வாய் கிழிய பேசுற இல்ல.. நான் வேணும்னு நினைச்சா என் கூட அனுசரிச்சு வாழ்றதுல உனக்கு என்னடி பிரச்சனை..?" என்றான் பற்களை கடித்து..

கமலினி சிரித்தாள்.. "ஐயோ நீங்க எனக்கு வேணும்னு நான் சொல்லவே இல்லையே மிஸ்டர் அஷோக்.. வேண்டாம்ன்னுதானே இந்த விவாகரத்து.. ரெட்டை மாட்டு சவாரி செய்ய நீங்க தயாராகிட்டீங்க.. ஆனா ரெண்டுல ஒண்ணா வாழ எனக்கு உடன்பாடு இல்லை..!! இந்த கமலினி ஒருகாலத்துல உங்க காதலுக்கு அடிமையா இருந்தவள்தான்.. அதுக்காக நீங்க என்ன செஞ்சாலும் ஒரு நாய்குட்டி மாதிரி உங்களை சுத்தி வருவான்னு நினைக்கிறது தப்பு.. நான் உங்க எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவள்.." என்றாக நிமிர்ந்து நின்று..

"பட் ஐ லவ் யூ கமலினி.. நீயும் எனக்கு வேணும்.. உன்னை என்னால விட்டுக் கொடுக்க முடியலையே..!!"

"ஹாஹா.. இந்த நீயும்.. இந்த வார்த்தை தான் வலிக்குது.. உங்க மொத்த காதலையும் சேர்த்து வைச்சு ராஜேஸ்வரிக்கே கொடுங்க.. அவளாவது சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்.. என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வேண்டாம் அசோக்.. என் மேல அன்பு காட்டுற மாதிரி நடிக்க வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.. மூலை முடுக்குல நின்னு ரகசியமா காதல் செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லையே..!! வாரிசை கொடுக்கப் போற உங்க இரண்டாம் மனைவி மேல நீங்க வெளிப்படையாவே பாசத்தையும் காட்டலாம்.. இனி நான் அதுக்கு தடையா இருக்க போறதில்லைன்னு சந்தோஷ படுங்க.‌." என்று சொல்ல.. அவன் தப்பை எடுத்துக்காட்டிய குத்தல் பேச்சுகளில் கோபம் சுர்ரென்று ஏறியது அவனுக்கு..

"என்னடி நானும் பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்கேன்.. ஓவரா பேசிட்டே போற.. என்னை விட்டு தனியா வாழ்ந்திட முடியுமா உன்னால.. இப்ப கூட எனக்காக இல்ல உனக்காக தான் உன்னை கூப்பிடுறேன்.. நான் இல்லனா பைத்தியம் பிடிச்சு ரோடு ரோடா திரிவ..!! என்னை விட்டா இந்த உலகத்துல என்னடி தெரியும் உனக்கு..?" ஒருகாலத்தில் அவன் மீது அவள் வைத்திருந்த ஆழமான நேசத்தை முன்வைத்து இறுமாப்போடு சொன்னவனை கேலியாக பார்த்தாள் கமலி..

"அதெல்லாம் ஒரு காலம் அசோக்.. எப்ப என் காதலுக்கு கொஞ்சம் கூட நீங்க தகுதி இல்லாதவர்ன்னு தெரிஞ்சு போச்சோ.. அப்பவே என் ஒட்டு மொத்த காதலையும் சுருட்டி குப்பைத் தொட்டியில் தூக்கி போட்டுட்டேன்.. இப்ப இந்த கமலி நீங்க எது சொன்னாலும் கண்ணை மூடிக்கிட்டு நம்பி தலையாட்டற உங்க பழைய அரை வேக்காடு பொண்டாட்டி இல்ல.. என்னை பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க.. கண்டிப்பா உங்களை மறக்க முடியாம பைத்தியம் புடிச்சு திரிய மாட்டேன்.. காலம் காயங்களை ஆத்தும்.. இந்த உலகத்துல ஏதாவது ஒரு மூலையில நான் சந்தோஷமா வாழ்வேன்..!! நீங்க போய் உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க.." சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்க..

"போடி போ.. காதலிச்ச பாவத்துக்காக.. குழந்தை பெத்துத்தர முடியாத மலடியா இருந்தாலும் உன்னை ஒதுக்கி வைக்காம.. வாழ வைக்கனும்னு நெனச்சேன்.. ஆனா எப்போ இவ்வளவு திமிரா பேசிட்டியோ.. நீ எனக்கு தேவையில்லை.. நான் இல்லாம உன் வாழ்க்கை எவ்வளவு கொடுமையா இருக்க போகுதுன்னு இனி தான் தெரிஞ்சுக்க போற..!! என்னைக்காவது ஒரு நாள் நாம திரும்ப சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும்.. அன்னைக்கு ஐயோ.. அவசரப்பட்டு விவாகரத்து வாங்கிட்டோமே.. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இவர் காலடியில் வாழ்ந்திருக்கலாம்னு காலம் உனக்கு புரிய வைச்சிருக்கும்..!! கண்ணீர் விட்டு என் முன்னாடி அழுவ.. அன்னைக்கு உன் நிலைமையை பார்த்து நான் சந்தோஷமா சிரிப்பேன் டி.." நடந்து கொண்டிருந்த தன் முதுகை விடாமல் உரசிய அவன் வார்த்தைகளில் திரும்பி நின்றாள் கமலினி..

மீண்டும் அவனருகே வந்து நின்று கைகட்டி நிமிர்ந்து பார்த்தாள்..

குரலை செருமிக் கொண்டவள்.. கேலி சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக்கொண்டு "அப்படியா..?" என்று அலட்சியமாக கேட்க.. அவளை கோபமாக முறைத்தான் அசோக்..

"காலம் எனக்காக என்ன வச்சுட்டு காத்துருக்குன்னு பார்க்கலாம்.. உங்களை திரும்ப சந்திக்க போற அந்த தருணத்துக்காக நானும் காத்திருக்கேன்.." ஒரு துளி வருத்தமில்லாமல் நிமிர்வாகச் சொன்னவள்.. விரலில் அணிந்திருந்த அந்த மோதிரத்தை அவன் கையில் திணித்து விட்டு.. குட் பை.. என்று அழுத்தமாக சொன்னவள் காரை நோக்கி நடந்தாள்..

அவளுக்காக கார் கதவை திறந்தபடி நின்றாள் அவள் தோழி மாயா..

கமலி ஏறிய பின் மாயாவும் ஓட்டுநர் இருக்கையில் சென்று ஏறிக்கொள்ள கார் அங்கிருந்து கிளம்பியது..

கமலி இத்தனை பிடிவாதமாக நிற்பாள் என எதிர்பார்க்கவில்லை.. ஏதாவது ஒரு கட்டத்தில் தன் காலடியில் வந்து விழுவாள் என்று எதிர்பார்த்தான்.. விவாகரத்து கிடைத்துவிட்டது என்பதை கூட ஏற்க முடியவில்லை அவனால்..

காதல் மணவாழ்க்கை முறிந்து போனது மட்டுமல்லாமல்.. தன்னை தூக்கியெறிந்து சென்ற மனைவி கொஞ்சமும் வருதமில்லாமல்.. குட்பை சொல்லிவிட்டு சென்றது ஈகோவை தட்டி தூண்டியிருக்க ஆத்திரம் மூள கையில் வைர மோதிரத்தோடு அந்த காரை வெறித்தபடி நின்றிருந்தான் அசோக்..

கோவையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது.. சூர்யா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் என்ற பலகையை தாங்கி பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது அந்த கட்டிடம்..

நடு இரவு நேரத்தில்.. அந்த மருத்துவமனையின் பிரசவ அறையில்.. நிறை மாத கர்ப்பிணி பெண்ணொருத்தியின் அலறல் சத்தம் மட்டும் விட்டு விட்டு முனகலோடு ஒலித்துக் கொண்டே இருந்தது.. அறைக்கு வெளியே அந்த பெண்ணின் கணவனும்.. அந்தப் பெண்ணைப் பெற்றவர்களும் பதட்டத்தோடு நின்று கொண்டிருக்க.. பிரசவம் நல்லபடியாக நடக்க உள்ளே தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருந்தார் டாக்டர் காவ்யா..

உள்ளே நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்பது.. அவர்கள் பரபரப்பை பார்க்கும்போதே தெரிந்தது..

நர்ஸிடம் அவசரமாக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே வெளியே வந்த காவியாவை பிடித்துக் கொண்டார் அந்த பெண்ணின் கணவன்..

"டாக்டர் என்ன ஆச்சு.. எல்லாம் நார்மல் தானே..?" படபடப்பும் பிரசவத்திலிருந்து தன் மனைவி நல்லபடியாக பிள்ளையை பெற்றெடுத்து பிழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் அவன் முகத்தில்..

நீண்ட பெருமூச்சு விட்டாள் காவியா.. "எல்லாமே காம்ப்ளிகேஷன்ஸா இருக்கு மிஸ்டர் தீபக்.."

"நஞ்சுக்கொடி குழந்தையோட கழுத்தை சுத்தியிருக்கு.. குழந்தை தல திரும்பவே இல்லை..!! உங்க வைஃப்க்கு பிளட் பிரஷர் அதிகமாக இருக்கு.. இதில் ஒரு பிரச்சனை இருந்தாலே.. டெலிவரி ரொம்ப கஷ்டம்.. எல்லா பிரச்சனைகளும் சேர்ந்து இருக்கு.. நாங்களும் முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டு தான் இருக்கோம்.. கடவுளை வேண்டிக்கங்க அவ்வளவுதான் சொல்ல முடியும்.." என்றாள் இயந்திர குரலில்..

"ஐயோ கடவுளே..!!" என்று அந்தப் பெண்ணின் தாயார் பெருங்குரலெடுத்து அழ.. "தைரியமா இருங்க.. சீஅஃப் டாக்டருக்கு போன் பண்ணி இருக்கோம்.. அவர் வந்தாதான் அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்க முடியும்.." என்றாள் அவள்..

"சீக்கிரம் வர சொல்லுங்க டாக்டர்.. ஏன் இப்படி நேரத்தை கடத்துறீங்க.. அதுக்குள்ள என் மனைவிக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா..!!" அந்த கணவன் பதைப்பதைத்தான்..

"எங்க டாக்டருக்கு ஒரு உயிரோட வேல்யூ தெரியும்.. இன்ஃபாம் பண்ணி இருக்கோம்.. சீக்கிரம் வந்துருவார்.." காவ்யா சாதாரணமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்க..

அவரைப் பின் தொடர்ந்து செல்லப் போன நர்சிடம்..‌

"மேடம் என்னென்னமோ சொல்றீங்க.. யார் யாரோ வரனும்னு சொல்லி நேரத்தை கடத்துறீங்களே.. தயவுசெஞ்சு ஏதாவது பண்ணுங்க.." கண்ணீரோடு கெஞ்சினான் அவன்..

"கவலைப்படாதீங்க சார்.. எங்க சீஃப் டாக்டர் இந்த மாதிரி சிக்கலான கேஸ் மட்டும்தான் பார்ப்பார்.. அவர் அட்டென்ட் பண்ண டெலிவரி கேஸ் இதுவரைக்கும் எதுவுமே ஃபெயிலியர் ஆனதில்லை.. கண்டிப்பா உங்க மனைவியை அவர் காப்பாத்திடுவார்.. தைரியமா இருங்க.." என்றாள் இயல்பான குரலில்..

மிக சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் யாருக்குமே பொறுப்பில்லையே..!! பெரிய மருத்துவமனை என்று இங்கு கொண்டு வந்து சேர்த்தது தவறோ என நொந்து போனான் அவன்..

"என் மனைவியை நான் ஒரே ஒருமுறை பார்க்கலாமா.." அவன் குரல் நடுங்க கேட்க..

"இல்ல சார்.. இப்ப பார்க்க முடியாது.. டாக்டர் வந்துட்டாங்கனா அப்புறம் எங்களதான் கத்துவாங்க.." என்று மறுத்துவிட்டு நர்ஸ் அங்கிருந்து நகர்ந்து செல்ல.. முகத்தை மூடிக்கொண்டு தளர்ந்து போனவனாய் இருக்கையில் அமர்ந்து.. தன் மனைவியின் உயிரை காப்பாற்ற போகும் அந்த உன்னத மருத்துவருக்காய் காத்திருக்க ஆரம்பித்தான். கதிர் என்பவன்..

சரியாக 20 நிமிடங்களில்.. அழுத்தமான காலடி ஓசையில் அவன் நிமிர்ந்தான்..

உயரமாக திடகாத்திர உடற்கட்டோடு குத்துச்சண்டை வீரன் போல் ஒருவன்.. சமாதான கொடி பறக்க விடுவதை போல் வெள்ளை கோட்டுடன் வந்ததில்.. இருக்கிற வேதனையில் இவரா டாக்டர் என்ற தலைசுற்றி போனது அவனுக்கு..

பெண் மருத்துவரை எதிர்பார்த்தவனுக்கு பாகுபலி போல் திரண்ட தோள்களோடு ஒருவன் மருத்துவ கோட் அணிந்து வந்ததில் தொண்டையில் நீர் வற்றி போனது..

தன்னை கடந்து சென்றவனை "சார்ர்ர்" என்று கதிர் அழைக்க..‌ திரும்பி ஒரு அலட்சிய பார்வையை மட்டுமே பதிலாக தந்து விட்டு உள்ளே சென்றவனிடம் நம்பிக்கை இழந்து தொப்பென்று இருக்கையில் அமர்ந்தான் அவன்..

உள்ளே சென்றவன் கத்தி கொண்டிருந்த பெண்ணை நிதானமாக பார்த்தபடி கிளவுஸ் அணிந்து கொண்டிருந்தான்..

ஒரு ஆண் டாக்டர் பிரசவ வார்டுக்குள் வந்திருப்பதில் அந்த பெண் அலறலை கூட நிறுத்திவிட்டு..

"லே..‌ லேடி டாக்டர் இல்லையா..?" என்று திக்கி திணறி கேட்க..

அந்தப் பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு கால் பக்கத்தில் வந்து நின்றவன்.. பிறப்புறுப்பை சோதிக்கும் நேரத்தில்..

"வேண்டாம்.. லேடி டாக்டர் வர சொல்லுங்க" என்று கால்களை குறுக்கினாள் அந்த பெண்..

"ஏன்மா.. எந்த நேரத்துல கூச்சப்படறதுன்னு விவஸ்தை வேண்டாம்.. இப்ப நான் ஏதாவது செஞ்சு உன்னையும் உன் பிள்ளை என் காப்பாத்தினாதான் உண்டு.."

"உங்க இஷ்டத்துக்கு எல்லாம் டாக்டர் மாத்த முடியாது.. கால மடக்கு மா..!!" எரிச்சலாக கத்தியவன்.. பரிசோதனையின் மூலம் பிரசவத்தின் சிக்கல் என்ன என்று தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான்..

அந்தப் பெண் வலியில் பயங்கரமாக அலற..

"ப்ச்.. கத்தாதீங்க.. ரத்த அழுத்தம் ஏறி போச்சுன்னா குழந்தைக்கு ஆபத்து.. குழந்தை பெத்துக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது.. வலிக்கு தயாராகணும்.." என்றான் அழுத்தமாக..

"ஐயோ டாக்டர் என்னால முடியல.. ஊசி போட்டு சிசேரியன் பண்ணி குழந்தையை எடுத்துடுங்க.. செத்துருவேன் போலிருக்கு.." அந்த பெண் அழுதாள்‌‌..

அவள் அழுகையை பெரிதாக கண்டுகொள்ளாமல்.. மிக நூதனமாக.. தான் கற்றுக் கொண்ட யுக்திகளை பயன்படுத்தி.. அரை மணி நேரத்தில் சுகப்பிரசவத்தில் ஒரு அழகான ஆண் சிசுவை இந்த பூமிக்கு கொண்டு வந்திருந்தான் அந்த மருத்துவன்..

பனிக் குட தண்ணீரை அதிகமாக குடித்திருந்த குழந்தை மூச்சு பேச்சில்லாமல் சிலிகான் பொம்மை போல் கிடக்க.. பக்கத்தில் நின்றிருந்த காவ்யாவிற்கு நெஞ்சுகுழி வெற்றி போனது..

பிரசவித்த பெண் களைப்போடு மயக்கத்தில் ஆழ்ந்தாள்..

குழந்தையின் நெஞ்சை அழுத்தி.. முதுகை தட்டி தட்டி.. உயிர் காற்றை கொடுத்து.. விடாமல் போராடி ஒரு வழியாக அந்த குட்டி ஜீவனுக்கு மீண்டும் உயிர் தந்திருந்தான் அந்த மருத்துவன்..

குழந்தை தன் குட்டி குரலில் வீல்லென்று அழவும்.. ஒரு பெண்ணாக.. காவ்யா நிம்மதி பெருமூச்சு விட்டு மகிழ்ச்சியில் சிரித்தாள்..

ஆனால் மகத்துவமான அந்த காரியத்தை செய்தவனோ ஏதோ ஒரு பொம்மையின் ஸ்பேர் பார்ட்ஸ்ஸை ஒன்றிணைத்து ஒட்ட வைத்து ஷோரூமுக்கு டெலிவரி செய்தவன் போல்.. அடுத்தடுத்து என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்க வேண்டும்.. எப்படி தையல் போட வேண்டும்.. Ivயில் என்ன மருந்து ஏற்ற வேண்டும் என காவ்யாவிடம் சொல்லியபடி கைகளை சுத்தம் செய்து கொண்டு அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டான்..

நிச்சயமாக இந்த கேஸில்.. தாயும் சேயும் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை.. அதைச் சொல்லி பெண்ணின் கணவனை பயமுறுத்த விரும்பாமல்..

சீஃப் டாக்டர் வந்து என்னதான் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடுதான் காவ்யாவும் மற்றும் நர்சுகளும் காத்திருந்தனர்..

இந்த கேஸ் டாக்டருக்கு ஒரு சவால்.. உயிரை காப்பாற்றும் இந்த போராட்டத்தில் நிச்சயம் பதட்டப்படுவான்.. தடுமாறுவான் என்று மருத்துவரும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டிருக்க.. பக்குவமாக கையாண்டு தாயையும் குழந்தையும் காப்பாற்றிய அவன் புத்திசாலித்தனமும் தொழில் நேர்த்தியும் காவ்யாவை பிரமிக்க செய்தன..

"உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.. பேபியும் அம்மாவும் நல்லா இருக்காங்க.. நான் சொன்னேன் இல்ல.. எங்க டாக்டர் உங்க மனைவியை நிச்சயம் காப்பாத்திடுவார்னு.." அந்த நர்ஸ் புன்னகையோடு சொல்லிவிட்டு செல்ல.. ஆனந்தத்தில் கண்கலங்கி நிம்மதி பெருமூச்சு விட்டான் கதிர்..

அடுத்த சில நிமிடங்களில் பிரசவ அறையை வெளியே வந்த மருத்துவன் கையெடுத்து கும்பிட்டபடி ஒருவன் நின்று கொண்டிருப்பதை கண்டு கொள்ளாதவன் போல் தன்னறைக்கு சென்று விட்டிருந்தான்..

இந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டர் அவன்.. சூர்ய தேவ்..‌ கைனகாலஜிஸ்ட்.. இது அவனுடைய சொந்த மருத்துவமனை.. பக்கத்திலேயே இன்னொரு பிரிவாக கருத்தரிப்பு மையத்திற்கான கட்டிடமும் இருக்கிறது.. அந்த மையத்திற்கும் இவன்தான் தலைமை நிர்வாகி.. வயது 38.. இன்னும் திருமணமாகவில்லை.. ஒன்றிரண்டாக வெள்ளி முடிகள் இப்போதுதான் ஆங்காங்கே எட்டி பார்க்க துவங்கியிருக்கிறது..

MBBS

- MD (Obstetrics and Gynecology)

- MS (Obstetrics and Gynecology)

- DGO (Diploma in Gynecology and Obstetrics)

- DNB (Diplomate of National Board) in Obstetrics and Gynecology..

என மகப்பேறு துறைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ படிப்புகளையும் படித்து வைத்திருக்கிறான்..

தன் கருத்தரிப்பு மையம் மூலம் எத்தனையோ தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தந்திருக்கிறான்..

சிக்கலான எத்தனையோ பிரசவங்களை பக்குவமான முறையில் கையாண்டு.. தாய் சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறான்..

எத்தனையோ உயிர்களை பூமிக்கு கொண்டு வர காரணமாக இருப்பவனுக்கு இரக்கம் கருணை.. இதெல்லாம் எட்டாக்கனி..

தன் தொழிலில் 100% அர்ப்பணிப்போடு வேலை செய்வான்..

நான் பிரசவம் பார்க்கும் பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அது தன் தொழிலுக்கும் தான் படித்த படிப்புக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகம் என்று கருதுகிறான்.. தனக்குள் ஒளிந்திருக்கும் ஈகோவுடன் போட்டி போட்டுக் கொள்வதால் தன்னிடம் தானே தோற்பதில்லை..

தொழில் நேர்த்தியும்.. அர்ப்பணிப்பும் அவன் திறமையும் மட்டுமே.. அவன் பெயரும்.. அந்த மருத்துவமனையும் சுற்றுவட்டாரங்களில் பிரபலமடைய காரணம்..!!

ஆனால் இத்தனை பிரசவங்களை கையாண்டு தாய் சேய் உயிரை காப்பாற்றி.. புது உயிரை ஜனிக்க வைத்து வைத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருபவனுக்கு.. பெண்மையின் அருமை புரிகிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..

பல பிரசவங்களை பார்த்தவனுக்கு உணர்வுகள் மரத்து போய்விட்டதா தெரியவில்லை.. எந்த பிரசவ அலறல் சத்தமும் அவனை அசைத்து பார்த்ததில்லை.. எந்த புத்தம் புது சிசுவும் அவன் மெல்லிய உணர்வுகளை தூண்டியதில்லை..

ஒரு பிரசவத்தை நல்லபடியாக நிகழ்த்தி காட்டி.. தாயை காப்பாற்றி குழந்தையை இந்த உலகுக்கு கொண்டு வர செய்துவிட்டால் கிடைக்கும் திருப்தி.. அது மட்டுமே அவனுக்கு பிரதானம்..

பெண்ணின் உள்ளார்ந்த உறுப்புகளிலிருந்து அந்தரங்க பாகங்கள் வரைக்கும் ஆராய்ந்து படித்தவனுக்கு.. ஒரு இயல்பான ஆண்மகனுக்கு உரிய கிளர்ச்சி எந்த பெண்ணிடமும் ஏற்படுவதில்லை..

எந்தப் பெண்ணையும் மருத்துவ கண்ணோட்டத்தை தாண்டி அவனால் பார்க்க முடிவதில்லை..

சகோதரத்துவமான உணர்வுகள் இயற்கையாகவே அவனுள் உண்டு.. காதலின் சுவையை அறிந்ததில்லை.. காதலுக்கு காமம் அடிப்படை என்பதால் அந்த தேவையில்லாத பிரிவை பற்றி அறிய முற்பட்டதுமில்லை..

உணர்ச்சிகள் உயிர் பெறாத நிலையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவள் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை அவன்..

இப்போது வரை தனிமையை துணையாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் மகப்பேறு மருத்துவன் சூரியதேவ்..

உணர்ச்சிகள் உறைந்து இறுகிய நிலையில் திருமணம் செய்யாமல் 38 வயது வரை அவன் காலம் கடத்திவிட்டதற்கான காரணம் இதுதான்..


தொடரும்..
Unga last story ilakana pizhai naan innum padikala sis. Adhukulla maasa New story start pannitinga.... Well done sis
 
Top