- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
அந்த வெள்ளை கட்டிடம் இரண்டு மாடிகள் கொண்ட சைக்யாட்ரிக் கிளினிக்..
மனநல மருத்துவர் வருண் பிரசாத் என்ற நீள் வட்ட வடிவ மரப்பலகையின் கீழே வரிசையாக வகைப்படுத்தப்பட்டிருந்த பட்டங்களை நின்று படிக்க யாருக்கும் பொறுமை இல்லை
டாக்டர் வருண் பிரசாத்
1. MBBS (Bachelor of Medicine, Bachelor of Surgery)
2. MD (Psychiatry) or DNB (Psychiatry)
3. DPM (Diploma in Psychological Medicine)
4. FRCPsych (Fellow of the Royal College of Psychiatrists)
5. ABPN (American Board of Psychiatry and Neurology certification) இப்படி ஏகப்பட்ட படிப்புகளை படித்து முடித்துவிட்டு அறிவுக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் முப்பத்தெட்டு வயதிலும்.. குறும்பு கொப்பளிக்கும் இளமைக்கும்.. மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அந்த வசீகர புன்னகைக்கும் உத்திரவாத சர்டிபிகேட் வாங்கியவனை போல் இதோ தனக்கு எதிரே அமர்ந்திருந்த அந்த பெண்ணை நிமிர்ந்து அமர்ந்தபடி மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் மனநல மருத்துவர் வருண் பிரசாத்..
குறும்பு கொப்பளிக்கும் தோற்றம் என்று வர்ணித்துவிட்டு ஏன் இத்தனை அழுத்தமான பார்வையோடு நோயாளிகளை கையாள வேண்டும் என்று கேட்கலாம்..
காரணமில்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தால் இந்த மனநல மருத்துவனையும் அவன் டீல் செய்யும் பேஷண்ட் லிஸ்டில்தான் சேர்க்க வேண்டும்..
ஒரு மருத்துவனாக எப்போதும் சரியாக இருப்பான் வருண்..
தன்னிடம் வந்திருக்கும் நோயாளியை எந்த இடத்தில் இறுக்கத்தை தளர்த்தி.. கலகலப்பாக பேசி சிரிக்க வைக்க வேண்டும் என்ற வித்தையை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை..
கண்ணீரை துடைத்துக்கொண்டு லேசாக விம்மியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்..
நிச்சயம் நாற்பதின் தொடக்கத்தில் இருக்க வேண்டும்.. சுடிதார் அணிந்து இளமையை தொலைத்தவள் போல் முகவெட்டு.. உடம்பு வடிவமில்லாது தேவையில்லாத இடங்களில் சதை போட்டிருந்தது..
இழுத்து மூச்சு விட்டான் வருண்..
"இங்க பாருங்க சஞ்சனா.. என்ன பிரச்சனைன்னு வாய் திறந்து நீங்க சொன்னாதான் உங்களுக்கு என்னால உதவி செய்ய முடியும்..!" மிக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி சொன்னான்..
மூக்கை உறிஞ்சிக் கொண்டு பேச ஆரம்பித்தாள் அவள்..
"முன்ன மாதிரி என் புருஷன் என்கிட்ட அக்கறையா நடந்துக்கறதில்ல.. சொல்லப்போனா என்னை கண்டுக்கவே மாட்டேங்கறார்.. ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே இல்லை.. அவர் வேற ஏதாவது பொண்ணு கூட தொடர்புல இருக்காரோனு நினைச்சு நினைச்சு எனக்கு நிம்மதியே போயிடுச்சு.. தேவையில்லாம குழந்தைகள் கிட்ட கோபப்படறேன்.. கத்தறேன் எரிச்சல் படுறேன்.. பைத்தியம் ஆயிடுவேனோன்னு பயமா இருக்கு.. எல்லாரும் என்னை வித்தியாசமா பாக்கற மாதிரி தோணுது.. தயவு செஞ்சு எனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க டாக்டர்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ..!"
"ஓகே ரிலாக்ஸ்..! எனக்கு உங்க சிச்சுவேஷன் புரியுது.. முதல்ல நான் கேக்கறதுக்கு நிதானமா பதில் சொல்லுங்க.. உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு.."
பன்னென்டு வருஷம்..
உங்க கணவர் ஆரம்பத்தில் உங்க மேல பாசமா இருந்தார் அப்படித்தானே..
"ஆமா டாக்டர்.. நாளாக ஆக பசங்க பிறந்த பிறகுதான் இப்படி ஆகிட்டாரு.. எதுக்கெடுத்தாலும் சலிப்பு.. கல்யாண நாள் கூட மறந்துட்டார்.. ஆரம்பத்துல இருந்த அக்கறையும் அன்பும் இப்ப எங்க போச்சுன்னு தெரியல.. உடம்பு சரியில்லைன்னா கூட என்ன ஏதுன்னு கேக்க மாட்டேங்கறார்.."
"வேற பொண்ணு கூட தொடர்புல இருக்கார்னு நினைக்கிறீங்களா..?"
"குதர்க்கமா மனசுக்குள்ள அப்படிதான் தேவையில்லாத எண்ணமெல்லாம் தோணுது.. ஆனா அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லைன்னு புத்திக்கு தெரியுது.."
"எப்படி சொல்றீங்க..?"
"நிறைய விசாரிச்சு பார்த்துட்டேன்.. அவர் போன் ஹிஸ்டரி கூட எடுத்து செக் பண்ணிட்டேன்.. எல்லாமே தெளிவா இருக்கு.."
இருக்கையில் சாய்ந்து மேஜையில் கண்களை பதித்து புருவத்தை நீவியபடி யோசித்தான் வருண்..
"சஞ்சனா இப்போ உங்களுக்கு என்ன வேணும்.. ஐ மீன் என்ன எதிர்பாக்கறீங்க அவர்கிட்டருந்து?"
"அவரோட மொத்த அன்பும் எனக்கு வேணும்.. அதுக்கு நான் என்ன செய்யணும்.."
"ஒன்னும் பண்ணாதீங்க அமைதியா இருங்க போதும்.."
"என்ன டாக்டர் சொல்றீங்க..?"
"இதுவரைக்கும் நீங்க தானே அவருக்கு அட்டென்ஷன் கொடுத்துட்டு வந்தீங்க.. இனி ஆட்டென்ஷனை வாங்க ட்ரை பண்ணுங்க.."
"எப்படி..?" சஞ்சனா ஆர்வமாக கேட்டாள்..
"அடிக்கடி சண்டை போடாதீங்க.. எந்த கேள்வியும் கேட்காதீங்க.. எதையும் எதிர்பாக்காதீங்க.. வழக்கத்துக்கு மாறுதலா எப்பவும் அமைதியா இருங்க.."
"இருந்தா..?"
"கண்டிப்பா அவரோட கவனம் உங்க பக்கம் திரும்பும்.. உங்க மாற்றமும் அலட்சியமும் பாரா முகமும் அவருக்குள்ள ஒரு பயத்தை உண்டு பண்ணும்.. அந்த பயம் எந்த காலத்திலும் உங்களை விட்டுட கூடாதுன்னு தோண வைக்கும்.. மறுபடி உங்களை பழையபடி மாத்த உங்க பார்வையை தன் பக்கம் திருப்பறதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்ங்கற நிலைக்கு போயிடுவார்.."
"டாக்டர் இதெல்லாம் நடக்குமா..?" சஞ்சனாவின் கண்களில் ஆசை அருவி வழிந்தது..
"உங்க கணவர் உண்மையிலேயே உங்க மேல அன்பு வச்சிருந்தா நிச்சயமா இதெல்லாம் நடக்கும்.."
"ஒருவேளை இதெல்லாம் நடக்காம போயிட்டா..!" சடுதியில் மாறிப்போன அவள் முகத்தில் திடீர் கலவரம்..
"அவருக்கு உங்க மேல அன்பு இல்லைன்னு அர்த்தம்.."
"அடக்கடவுளே அப்படின்னா நான் என்ன செய்யறது டாக்டர்..?" மீண்டும் பதறினாள் அவள்..
"ஒன்னும் செய்ய வேண்டாம்.. உங்க மேல கொஞ்சம் கூட அஃபெக்ஷன் இல்லாத ஆள் கிட்ட அன்பை எதிர்பார்த்து வாழ்க்கையை வீணாக்காதீங்க.. பிடிச்சதை.. செய்யுங்க உங்க விருப்பம் போல மாறுங்க.. உங்க குழந்தைகள் கிட்ட அன்பா இருங்க.. அடுத்தவங்களுக்காக உழைக்கிறேன்னு உங்களை இழந்துடாதீங்க.. உங்களுக்காக கொஞ்சம் டைம் ஒதுக்குங்க.. முதல்ல உங்களை நீங்க நேசிக்க பழகுங்க.."
"டாக்டர்..?"
"இப்போதைக்கு தூக்கம் வர்றதுக்காக ஸ்லீப்பிங் டேப்ளட்ஸ் எழுதி தந்திருக்கேன்.. நான் சொன்னதையெல்லாம் செஞ்சு பாருங்க.. ஒருவேளை உங்க கணவர் கிட்ட மாற்றம் தெரியலைன்னாலும் ரிலாக்ஸா இருங்க.. உலகம் அத்தோடு முடிஞ்சு போய்டாது.. இயற்கையை நேசிக்க கத்துக்கோங்க.. உங்க ஃபிரண்ட்ஸ் இல்லனா குழந்தைகளோட எங்கேயாவது வெளியே போயிட்டு வாங்க.. நேச்சர் கண்டிப்பா உங்களுக்கு அமைதியை தரும்.. வலுக்கட்டாயமா எதையும் உங்களுக்குள்ள புகுத்தி காம்ப்ளிகேட் பண்ணிக்காதீங்க.. வாழ்க்கையே அதன் போக்குல வாழுங்க.. ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ.." என்றபடியே..
மருந்துச் சீட்டை கிழித்து அந்த பெண்ணிடம் தந்தான் வருண் பிரசாத்..
அந்தப் பெண்ணின் முகத்தில் குடி கொண்டிருந்த குழப்பம் நீங்கி பளிச்சென புன்னகைத்தாள்..
அவன் இளம் வயதுக்கும் சொல்லும் அறிவுரைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் போனதில் அந்த பெண்ணுக்கும் ஆச்சரியம் தான்.. முப்பத்தெட்டு வயதை சுமக்கவில்லையே அவன் தோற்றம்..
தன் தோழியின் பரிந்துரைப்படிதான் இங்கு வந்திருந்தாள் சஞ்சனா.. படுதிருப்தியாக அவள் மனம் ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்து கொண்டது நம் டாக்டருக்கு.
வருணின் இதமான புன்னகையும் தீர்க்கமான பார்வையும் அவள் மன அழுத்தத்தை குறைத்து ஒரு நம்பிக்கையை தந்திருந்தது என்றால் அவன் பேச்சு அறிவுரைகள் தீர்வுகள் அவள் மொத்த பிரச்சனையின் முக்கால்வாசியை துடைத்து தூய்மை படுத்தியிருந்தது என்று சொல்லலாம்..
மாற்றங்கள் நம்மிலிருந்துதான் உருவாக வேண்டும் என்ற உறுதியான எண்ணமுடையவன் வருண்..
சஞ்சனா தன் மனப் போக்கையும் எதிர்பார்ப்பையும் மாற்றிக் கொண்டால் பாதி கவலைகள் காணாமல் போய்விடும்.. அதைதான் செய்திருக்கிறான் இப்போது..
"பிரச்சனை தீருமானு தெரியல ஆனா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு..! வாழ்க்கையை எப்படி வாழனும்னு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு தேங்க்யூ டாக்டர்.." அவள் எழுந்து விடை பெற்றுக் கொண்டு செல்ல.. பேனாவை உள்ளங்கையில் தட்டியபடி சன்னமான புன்னகையுடன் தலையசைத்தவன்
அந்தப் பெண் போன பிறகு தான் அயற்சியோடு நீண்ட மூச்சு விட்டான்..
ஒரு நாளைக்கு இதுபோல் இரண்டு மூன்று பேரை சந்திக்க நேரிடுகிறது..
பெரும்பாலும் இப்படித்தான்.. கணவரிடமிருந்து அன்பு கிடைக்கவில்லை.. கணவர் தன்னை கவனிப்பதே இல்லை.. அவரால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது தூக்கம் கெடுகிறது நிம்மதி குலைகிறது என 90% இங்கு வரும் பெண்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் தங்கள் வாழ்க்கை துணையால் ஏற்படுவதாக மட்டுமே குற்றம் சாட்டி சிகிச்சைக்காக வருகின்றனர்..
திருமணமாகாத பெண்கள் என்றால் காதலனால் தொல்லை..
வெகு அரிதாக வேறு சில வித்தியாசப்பட்ட கேசுகளும் வருவதுண்டு..
ஸ்பிலிட் பர்சனாலிட்டி.. மனச்சிதைவு.. தூக்கத்தில் நடப்பது.. அளவு கடந்த பயம்.. என புரிந்து கொள்ள முடியாத இது போன்ற பிரச்சினையில் சிக்கி தவித்து அவனிடம் சிகிச்சைக்காக பெற வருபவர்கள் சிலர்தான்..
மற்றும் சிலர் டிப்ரஷன்.. டென்ஷன்.. ஆன்சைட்டியோடு.. கூகுளில் இதுபற்றி கண்டமேனிக்கு படித்துவிட்டு இதுக்கெல்லாம் காரணம் என்ன டாக்டர்.. ஒருவேளை அப்படி இருக்குமா.. இல்லை இப்படி இருக்குமா என நான்கைந்து மருத்துவ வார்த்தைகளை கற்று வைத்துக் கொண்டு அவனை நச்சரிக்கும் ஆர்வக்கோளாறு ஆட்கள்..
அதையும் தாண்டி அரிதாக கவுன்சிலிங்காக வரும் சில ஆண் நோயாளிகளும் "சதா என் மனைவி என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருக்கா டாக்டர்.. என்னன்னே தெரியல.. பிரச்சனை என்கிட்டயா..? இல்ல அவகிட்டயா..!" என்று அப்பாவி போல் விழித்து தலையும் புரியாமல் வாழும் புரியாமல் மொட்டையாக இப்படி ஒரு கேள்வியை அவனிடமே வந்து கேட்கும்போது..
பாவம் வருண் நொந்து போவான்..
"உங்க வீட்டுக்குள்ள கேமரா வச்சு நான் என்ன லைவ் ஷோவா பாத்துட்டு இருக்கேன்.. பிரச்சனை என்னென்ன முழுசா சொன்னாதானே தெரியும்..' புன்னகையோடு படுகேஷுவலாக கேட்டாலும் அவன் வார்த்தைகளில் நிறைவான நக்கல் ஒளிந்திருக்கும்..
ஆக மொத்தம் இங்கு வருபவர்கள் தனக்கு பிரச்சினை என்று கைகாட்டுவது அவர்கள் வாழ்க்கை துணையைத்தான்..
குழப்பத்தோடு வருபவர்களை ஒரு தெளிவோடு.. அவர்கள் பிரச்சினைக்கான தீர்வோடுதான் வெளியே அனுப்புவான்..
சிரிக்கவும் வைப்பான். சிந்திக்கவும் வைப்பான்..
அந்தப் பெண்மணி சென்ற ஐந்து நிமிடத்தில் அவன் அலைபேசி ஆதிகால ரிங்டோனுடன் கதறிக் கொண்டிருந்தது..
திரையில் மை வைஃப் திலோ என்று சேமிக்கப்பட்டிருந்த பெயரை பார்த்துவிட்டு.. புருவங்களை உயர்த்தியபடியே அவசரமாக அழைப்பை ஏற்றான்..
அவள் முழுப்பெயர் திலோத்தமா..
"சொல்லு திலோ.."
"எப்ப வருவீங்க..?"
"தெரியலடா.. என்ன விஷயம்..?"
"வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே மறந்துட்டீங்களா..?"
நாக்கை கடித்துக் கொண்டவன் "ஆஆஆ..மா.. மறந்து போச்சு பாரேன்.. ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இரு.." என்றவன் மறு கையால் இன்டர் காமில் மாலினிக்கு அழைத்திருந்தான்..
"சார்..?"
"சமோசா சாப்பிடறியா மாலினி.."
"இ.. இல்லையே சார்.." மாலியின் குரலில் திணறல்..
ஸ்டஃட் உருளைகிழங்கு.. தக்காளி சாஸ் வாசனை இங்க வரைக்கும் வருதே..?
"சா....ர்"
"சரிவிடு.. பேஷண்ட்ஸ் யாராவது வெயிட் பண்றாங்களா..?"
"இல்ல சார்.."
"ஓகே.. அப்ப நான் கிளம்புறேன்.. யாராவது என்னை மீட் பண்ணனும்னு சொன்னா அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு நாளைக்கு வர சொல்லு.."
"ஓகே சார்.."
"ஒகே நீ சமோசாவை கன்டினியூ பண்ணு.."
இன்டர்காமை வைத்துவிட்டு மீண்டும் அலைபேசிக்கு வந்தான்..
"ஓகே தயாரா இரு டார்லி.. டிவென்டி மினிட்ஸ்ல வந்துருவேன்.."
"தேங்க்யூ வருண்.." எதிர்பக்கம் உற்சாகத்தோடு துள்ளி குதித்தது அவள் குரல்..
"லவ் யூ பேபி..!" புன்னகையோடு அழைப்பை துண்டித்தான் வருண்..
மீண்டும் இன்டர்காம் ஒலித்தது..
"சொல்லு மாலினி.."
"சார் பேஷண்ட் ஒருத்தங்க வெயிட் பண்றாங்க.."
"ம்ம்.. என்று தாடையை தேய்த்தபடியே யோசித்தவன் நாளைக்கு வர சொல்லேன்.. எனக்கு முக்கியமான வேலை இருக்கே..!" என்றான் அவசரக் குரலில்..
"நான் சொல்லிட்டேன் சார்.. அவங்க உங்களை பார்த்தே ஆகணும்னு நிக்கறாங்க..!"
கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு சில மைக்ரோ நொடிகள் யோசித்தவன் "ஓகே வர சொல்லு.. சீக்கிரம்..!" என்றபடி மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்..
இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பிறகு கதவைத் தட்டு ஓசை..
கம்மின்.. என்றவன் தனது மனைவி திலோத்தமாவிற்கு வெகு சிரத்தையாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி கொண்டிருந்தான்..
அலைபேசியில் கவனம் பதித்திருந்தவனின் பக்கவாட்டு பார்வைக்கு ஒரு பெண் இருக்கையில் வந்தமர்வது மங்கலான காட்சியாக தெரிந்தது..
கவனமாக படம் பிடிக்கப்படும் நிழற்படங்களில் தவறி விழும் blur image போல் காட்சி மங்கலாக தெரிந்த போதிலும் வந்தவளின் தோற்றம் பளிச்சென கண்களை நிறைத்து அவனை நிமிர்ந்து பார்க்க சொல்லியது..
"டாக்டரை வர சொல்லுங்க..!" மழலை குரலோடு கொஞ்சம் பெண்மைக்கான இனிமையை கோட்டிங் செய்து.. கால் கிலோ சர்க்கரை சேர்த்து கலந்தாற் போல் ஒரு குரல்..
நிமிர்ந்து அந்த பெண்ணை கண்களை சுருக்கி பார்த்தான் வருண்..
"பர்டன்..?"
"எனக்கு ரொம்ப நேரம் இல்லை சார், நான் வீட்டுக்கு போகணும் டாக்டர் வர சொல்லுங்களேன்.."
படு சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்த அந்த பெண்ணை கண்டதும் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்ள.. "ஏன் மேடம் உங்களுக்கு என்ன பாத்தா டாக்டர் மாதிரி தெரியலையா..?" என்றான் இரு கைகளை மேஜையில் ஊன்றிக்கொண்டு சாவகாசமாக அமர்ந்தபடி..
"இல்ல.. டாக்டர் பாத்ரூம் போயிருக்கார்.. நான் வர்ற வரைக்கும் பேஷன்ட் யாராவது வந்தா பார்த்துக்கோன்னு உங்கள சப்ஸ்டியூட்டா உக்கார வச்சுட்டு போயிருக்கனும்.."
"பரவாயில்லையே கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..! நான் டாக்டர் இல்லைன்னு கண்டுபிடிச்ச மாதிரி டாக்டர் எப்படி இருப்பார்ன்னு உங்க அனுமானத்துல சொல்லுங்க பாப்போம்.."
"எப்படி இருப்பார்.. பஞ்சு மேகம் மாதிரி வெள்ளை தாடி வெள்ள மீசை.. தலைமுடி கூட வெள்ளை வெளேர்னு இருக்கும்.. ஐம்பது வயசுல கூட பாக்க க்யூட்டா வெள்ளரிப்பழம் மாதிரி இருப்பார்.."
"வாவ்.. டாக்டரை ஏற்கனவே நேர்ல பார்த்து இருக்கீங்களா நீங்க..?"
"ச்சே.. ச்சே..! எத்தனை சினிமா படம் பார்த்திருப்பேன் மோஸ்ட்லி எல்லா படத்திலயும் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் இப்படித்தான் இருப்பாங்க.."
"வெரி பிரில்லியன்ட்..!" என்றவன் அவள் தோற்றத்தை கூர்ந்து ஆராய்ந்தான்..
கரும்பாக்கு நிற குர்தி அணிந்திருந்தாள்.. காதில் சின்னதாய் பிளாஸ்டிக் தோடு.. காலர் வைத்த சுடிதார் கழுத்தில் என்ன அணிந்திருக்கிறாள் என்று தெரியவில்லை.. நெற்றியில் ஒரு சின்ன கரும்பொட்டு.. நீளமான கூந்தலை மொத்தமாக தூக்கி ஒரு பெரிய பேண்டுக்குள் அடக்கி போனி டெய்ல் போட்டிருந்தாள்..
இத்தனை அழகை ஒடிசலான அந்த தேகத்திற்குள் எப்படி சுமந்திருக்கிறாளோ.. என கவிதை பாட தோன்றும் வனப்பும்.. அழகுமுள்ள செதுக்கி வைத்த வெண்சிலை..
"சார் ப்ளீஸ் டாக்டரை வர சொல்லுங்க..!"
"அவர் பாத்ரூம்ல இருக்காரு.. மேடம் பாவம் என்ன அர்ஜென்டோ.. வயித்த கலக்குதாம்..!" சிரிக்காமல் சொன்னான் வருண்..
"ஐயோ பாவம் மத்தியானம் என்ன சாப்பிட்டாரோ..?" இவள் கவலை பட்டாள்..
"ரொம்ப அக்கறை.. இப்ப அதுதான் ரொம்ப முக்கியமா.. உங்க பிரச்சனையை சொல்லுங்க மேடம்..?"
அந்தப் பெண் தயங்கி அமைதியாக அமர்ந்திருக்க..
"ஓகே உங்களை பத்தின டீடைல் சொல்லுங்க எழுதி வச்சுக்கிறேன்.." என்றவன் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு.. "உங்க பேர் சொல்லுங்க.." என்றான்
"தேம்பாவணி.."
"ஸ்கூலிங்கா..? என்ன கிளாஸ் படிக்கிற பாப்பா..! உன்கூட பேரண்ட்ஸ் யாராவது வந்திருக்காங்களா..?"
"ஹலோ சார் நிறுத்துங்க.. என்ன நீங்க பாட்டுக்கு கேள்வி கேட்டுட்டே போறீங்க.. பதில் சொல்ல கொஞ்சம் பிரேக் கொடுங்க.."
"ஐ அம் நாட் டு ஸ்கூல் ஸ்டுடென்ட்.. காலேஜ் படிக்கிறேன்..'
'ஓஹோ.." புருவங்களை உயர்த்தியவன் பேனாவை பேப்பரின் மேல் வைத்துவிட்டு கைகட்டி சாய்ந்நநு அமர்ந்தான்..
"எனக்கு பத்தொன்பது வயசாச்சு.."
"அடேங்கப்பா..!"
"யூ நோ ஒன்திங்..! எனக்கு கல்யாணம் கூட ஆகிடுச்சு.."
"குழந்தைங்க எந்த ஸ்கூல்ல மேடம் படிக்கறாங்க..?"
"சார் விளையாடாதீங்க..! நான் பொய் சொல்லல.." என்றவள் கழுத்திலிருந்து சுடிதாருக்குள் மறைந்திருந்த தன் தாலியை எடுத்து அவனிடம் காண்பிக்க.. நெற்றி சுருங்க அந்த தாலி சரடை கூர்மையாக பார்த்தான் வருண்..
"சாமி போட்டோ முன்னாடி நின்னு நீயே கட்டிக்கிட்டியா பாப்பா..?"
"இந்த நக்கல் பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம்.. மூணு மாசத்துக்கு முன்னாடி தான் எனக்கு கல்யாணம் ஆச்சு.. என் ஹஸ்பண்ட் பேரு சத்யா.."
"நீயே மேல சொல்லு..!" கன்னத்தில் கை வைத்த படி கதை கேட்கும் ஆர்வத்தோடு அமர்ந்திருந்தான் வருண்..
"உங்ககிட்ட ஏன் சொல்லணும் நான் டாக்டர்கிட்ட தான் சொல்லுவேன்.."
"நீ சொல்றதை டாக்டர் கேட்டுக்கிட்டு தான் இருப்பாரு.."
"எப்படி..?"
"பாத்ரூம்ல மைக் வச்சிருக்கோம்.. இங்க பாருமா.. ஏதோ ஒரு பேர் சொன்னியே..! ஹான் எஸ்.. தேம்பாவணி..! எனக்கும் நேரமில்லை.. வேலை இருக்கு.. விஷயம் என்னன்னு சொல்லு.. உன் பிரச்சனைக்கு ஆட்டோமேட்டிக்கா டாக்டர்கிட்டருந்து சொல்யூஷன் கிடைக்கும்.."
புத்தகப் பையின் வாரை விரல்களால் சுருட்டியபடி தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
"மேடம் ப்ளீஸ்.. வி டோன்ட் ஹாவ் மச் டைம்..!"
"ஒருத்தனை காணும்.."
"யாரு..?"
"என்னோட ஃபிரண்டு.."
"ஃபிரண்டை காணும்னா போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பளைண்ட் கொடுங்க இங்கே ஏன் வந்தீங்க..?"
"அ.. அது.." கொஞ்சமாக முகத்தை முன்னோக்கி நகர்த்தி வந்து.. "அது என்னோட இமேஜினரி பிரண்ட்.." என்றாள் ரகசிய குரலில்..
"வாட்..!"
"எஸ் ஹீ இஸ் மை இமேஜினரி பிரண்ட்..! கொஞ்ச நாளா அவன் தொலைஞ்சு போயிட்டான்.. ப்ளீஸ் அவனை கண்டுபிடிச்சு கொடுங்க.."
கண்களை மூடி நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் வருண்..!
"சார்..! இதுக்குதான் நான் உங்ககிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. டாக்டருக்கு என் பிரச்சனை புரியும்.. உங்கள மாதிரி சாதாரண ஆசாமிங்களால என்னை புரிஞ்சுக்க முடியாது.." சோகமாக சொன்னவளை நிமிர்ந்து பார்த்து மென்மையாக சிரித்தான் வருண்..
"இங்க பாருங்க தேம்பாவணி.. மனசு டிப்ரஷன் ஆகும்போது.. ஏதாவது ஒரு மன குழப்பத்தில் இருக்கும் போது நம்மள நாமளே ஏமாத்திக்கறதுக்காக.. நம்ம பிரச்சனைகளுக்கு வடிகாலா நம்ம மூளையே உருவாக்கற ஒரு கம்பேனியன்தான் இந்த இமேஜனரி பிரண்ட்.. மேபி.. நீங்க தனிமையினால பாதிக்கப்பட்டு இருக்கணும்.. இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நல்ல துணை கிடைச்சிருக்கலாம்.. அதனால அந்த இல்யூஷன் உங்களை விட்டு போயிருக்கலாம்.. சோ நீங்க பர்ஃபெக்ட்லி நார்மலா இருக்கீங்க.. உங்க பிரச்சனைக்கு சொல்யூஷன் கிடைச்சிடுச்சா.. நிம்மதியா போயிட்டு வாங்க..!"
"நோ.. நோ..! ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க.. எனக்கு அவன் வேணும்.. அவன் இல்லாம ராத்திரி என்னால நிம்மதியா தூங்க முடியாது.. ப்ளீஸ் ஏதாவது ஊசி போட்டு.. மாத்திரை கொடுத்து.. ஹிப்னடைஸ் பண்ணி மறுபடியும் பப்லியை என்கிட்ட வர வச்சுடுங்க.." என்று அவசரமாக மறுத்து தவித்தவளை வினோதமாக பார்த்தான் வருண்..
"ஹேய்.. ரிலாக்ஸ்.. ஒரு நிமிஷம் இருங்க நான் சொல்றத கேளுங்க..!" அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் அலைபேசி ஒலித்தது..
மீண்டும் திலோத்தமா..
தொடரும்..

Last edited: