• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
51
இணையான இரு ரோஜா நிற கோடுகளை கண்டதும் உமாவின் இதயத்தில் ஆனந்த பூக்கள் மழையாக சொரிந்தன.. அடுத்த கணம் அவள் மனம் தேடியது கணவனைத்தான்.. அவரிடம் முதலில் இந்த விஷயத்தை கூற வேண்டும்.. பிறகுதான் மற்றவர்களுக்கு தகவல்.. நிச்சயம் இந்த சந்தோஷ செய்தி அவர் மனதை மாற்றும்.. கற்பாறை இதயத்தை இளகச் செய்யும்.. தான் தந்தையாக போகிறோம் என்ற செய்தி கேட்டவுடன் அவர் முகத்தில் சந்தோஷ தேன்துளிகள் மெல்ல மெல்ல முகிழ்ப்பதை ஆசை தீர கண்டு ரசிக்க வேண்டும்..

"குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா சரியா போயிடும்.. பிஞ்சு முகம் பார்த்தாலே சிடுசிடுப்பு மாறிடும்.. அதுக்காகவாது சீக்கிரம் ஒன்னு பெத்து போடு".. மாமியார் முதல் பிறந்து வீடு வரை, இதே அறிவுரை தான்.. மனைவியிடம் காட்டப்படாத பரிவும் கனிவும் கூட.. பெற்ற மகளிடம்.. மகனிடம் அளவு கடந்து வெளிப்படுமாம்!!.. புத்திர பாசத்திற்கு சக்தி அதிகம்..

அவர் முரட்டுக் கரத்தை என் வயிற்றில் அழுத்திக்கொண்டு வெட்கத்தோடு.. கருவுற்றிருப்பதை அவரிடம் சொல்லி சலுகையாக நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும்.. நிச்சயம் இன்று என்னை அனுமதிப்பார்.. "தள்ளிப்போ" என்று.. உதாசீனப்படுத்த மாட்டார்.. எப்படி விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைப்பது..

"நான் கர்ப்பமா இருக்கேன்"..

'உங்க குழந்தை என் வயித்துல வளருது"..

"நாம அம்மா அப்பா ஆகப் போறோம்.. இப்படி சொல்லலாமா!!".. அந்த கண்களை பார்த்தால் வார்த்தைகள் வருவதே கடினம்.. ஆழ்ந்து விழுங்கும் முரட்டுப் பார்வை.. கோபமா காமமா என்று கூட உணர முடியாது.. அவளுக்கு தெரிந்த அவனின் இரண்டே உணர்வுகள் அது மட்டும் தானே!!..

யூடியூப் வீடியோக்களில் கணவனிடம் மனைவி தன் கருவுற்றிருக்கும் விஷயத்தை புதுவிதமாக எப்படியெல்லாம் தெரியப்படுத்துகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. எதுவும் திருப்தி அளிக்கவில்லை.. தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த யோசனை தோன்றியது..

அவருக்கு பிடித்த இனிப்பு ஒன்றை தயாரித்து.. வந்ததும் வராததுமாக உமா என்று அழைக்கும் முன் அவர் வாயில் ஊட்டி.. கண்கள் அகல திறந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்போது.. அவர் கழுத்தோரம் புதைந்து "நீங்க அப்பா ஆக போறீங்க!!" என்று சொல்லலாம்.. நினைத்துப் பார்க்கும்போதே வெட்கம் பிடுங்கி தின்கிறது.. நேரடியாக எப்படி சொல்வது!!.. இதழ் கடித்து வெட்கப்பட்டு கொண்டு கால் கட்டை விரலால் டைல்ஸ் தரையை அழுத்தினாள்.. ஆயிரம் இனிய கனவுகளும்.. அழகான மெல்லிசை பாடல்களும் அவள் மனம் நிறைத்து மலர் வாசம் பரப்புவதாய்.. ஒரு மாதிரியான சிலிர்ப்பான உணர்வு.. காலையிலிருந்து சமைக்கும் போது.. உறங்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.. பொங்கி வழியும் சந்தோஷம் இதழ்களில் வெளிப்படுகிறது!!..

அகத்திற்குள் அவன் மீதான நேசம் ஆழ புதைந்திருந்த போதும்.. அடிக்கடி அவனை காண வேண்டும்.. அவனோடு நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைகள் வற்றிப் பொய் வெகு நாட்களாயிற்று!!.. இன்று மீண்டும் அவன் முகம் காண துளிர்விட்ட ஆசையில்.. அவனுக்கு மிகப் பிடித்த காசி அல்வாவை நெய்வாசத்தோடு கிளறி வைத்துவிட்டு அடிக்கடி வாசலை பார்க்கலானாள்..

காதலிக்கும் முன்பு வரை இதுபோன்ற வாழ்க்கை காட்சிகளின் ஹைதர் காலத்து கதாபாத்திரங்களாக மாறி போவோம் என்று கடுகளவும் நினைத்ததில்லை.. சீறும் கணவனிடம் தணிந்து போவது.. அவனுக்கு பணிவிடைகள் செய்வது.. தகாத வார்த்தைகள் பேசினாலும் மரவட்டையாக தனக்குள் சுருண்டு அமைதியாக கடந்து செல்வது.. அவன் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில் மயங்கி நிற்பது.. இதோ இப்போது வயிற்றில் பிள்ளையை சுமந்து அடுத்த கணம் அவன் செய்த அத்தனை அநியாயங்களையும் மறந்து விட்டு அவனுக்காக அன்போடு காத்திருப்பது.. என பழைய கிளாசிக் ஹீரோயினாக தான் மாறி போயிருந்ததை நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது..

அப்படியானால் பெண்ணடிமைத்தனம் எனக்குள்ளேயே மண்டி கிடக்கிறதா?.. இல்லவே இல்லை.. பெண்கள் கணவனிடம் மட்டுமா பணிந்து போகிறார்கள்!!.. அன்னை தந்தை.. கணவன்.. மகன் மகள்.. பேரன் பேத்தி.. என அனைவரிடமும் அன்பால் பணிந்து போகிறாள்!!.. அவள் கருணையை தவறாக பயன்படுத்திக் கொள்வது அவரவர் தவறு..

தன்னை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசிய கணவன் ஒருவேளை பட்டினி கிடந்தாலும் தாங்க முடிவதில்லையே!!.. இது அடிமைத்தனம் அல்ல அன்பு!!.. இந்த அன்பை தானே அவர்களுக்கு சாதகமாக ஆயுதமாக பயன்படுத்தி பெண்ணை வீழ்த்துகிறார்கள்!!..

அடச்சே!!.. இது என்ன சந்தோஷமான நேரத்தில் அடிமைத்தனம்.. ஆயுதம் என அபத்தமான சிந்தனைகள்.. தறிக்கட்டு ஓடிய எண்ணங்களை தடுத்து நிறுத்தி மீண்டும் தன் வயிற்றிலிருந்த கருவின் மீது ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் குவித்தாள்..

இரவு நேர வேலைகள் மிக அரிது.. காட்சி ஒப்பந்தங்களை மிக விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுபவன் இன்று ஒன்பது மணி தாண்டியும் வீடு திரும்பாததில் லேசான ஏமாற்றத்தோடு போனில் அழைக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவளை மனதோடு ஒட்டிக் கொண்டிருந்த தன்மானமும் கோபமும் முரண்டியது..

இப்படி ரோஷப்பட்டு உட்கார்ந்திருந்தா வந்த உடனே அவர் கிட்ட. விஷயத்தை எப்படி சொல்லுவ?.. என்று இன்னொரு மனம் சாடியது.. என்னதான் கருவில் உதித்த குழந்தை மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அவன் பேசிய வார்த்தைகளில் தாக்கம் அடிநெஞ்சில் இன்னும் காந்தலாய் வதைக்கிறது!!.. தீராத காயம் அவன் ஆறுதல் வார்த்தைகள் என்னும் மயிலிறகின் மூலம் மட்டுமே குணமடையும்.. கட்டில் பாஷைகளோ விடாத தொல்லைகளோ அவள் மனதை சாந்தியடைய செய்யாது!!.. இருப்பினும் இந்த குழந்தை மூலம் தங்களுக்கு இடையே ஒரு பெரும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு தயாரித்து வைத்திருந்த இனிப்பை விள்ளல் எடுத்து விழுங்கியபடி காத்திருந்தாள்..

தொண்டை குழிக்குள் பட்டாக வழுக்கிய இனிப்பின் மீது மீண்டும் கவனம் சென்றது.. Pregnancy cravings.. ஏதாவது தின்று கொண்டே இருக்க சொல்கிறது.. அதிலும் இனிப்பும் புளிப்பும் அவ்வளவு பிடிக்கிறது.. அவனுக்காக செய்தேன் என்று அதில் அரை பங்கை அவளே காலி செய்திருந்தாள்..

இதோ வந்து விட்டான்.. பைக் சத்தம் கேட்கிறதே!!.. அழுத்தமான காலடி ஓசை.. நடப்பதிலும் நிதானம் கிடையாது.. மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டு.. கண்ணாடியில் ஒரு முறை தன் அலங்காரத்தை சரி பார்த்துக் கொண்டவள்.. அவசரமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்..

ஒரு கிண்ணத்தில் அல்வாவை போட்டு எடுத்து வருவதற்குள்.. இடுங்கிய விழிகளோடு எதையோ உற்று பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன்..

அப்போதுதான் அவன் கையிலிருந்த பொருளை கவனித்தவள் தன் மடத்தனத்தை எண்ணி நெற்றியில் அறைந்து கொண்டாள்..

அவன் கரத்தில் பிரக்னன்சி கிட்டை கண்டு "அட கடவுளே.. இதை மறைத்து வைத்திருக்கணுமே!!.. சர்ப்ரைஸா.. விஷயத்தை சொல்லணும்னு நெனச்சு இப்படி சொதப்பிட்டேனே".. என்று நொந்து கொண்டாள் உமா..

அரவம் கேட்டு அவன் பார்வை வாசல் பக்கம் திரும்பியது.. நூறு பூக்கள் ஒன்றாக பூத்தது போல் மலர்ந்து புன்னகைத்தாள் உமா..

அந்த சிரிப்பை அசட்டை செய்து "என்னது இது?".. கனிவை அறியாத முகத்தோடு அவன் கேட்ட கேள்வியில் இதயத்தில் பலத்த ஏமாற்றம்.. ஒரு கணம் ஒன்றும் புரியாதவளாய் அவனைப் பார்த்து விழித்தாள்.. ஒருவேளை இது பிரக்னன்சி கிட் என்று அவருக்கு தெரியாதோ என்ற சந்தேகத்துடன் அவள் நிற்க..

"நீ பிரக்னண்டா இருக்கியா!!" என்றான் கடுகடுப்பு சற்று கூடி!!..

ஒருவேளை நல்ல விஷயத்தை அவரிடம் இவ்வளவு நேரம் சொல்லாமல் மறைத்திருந்ததால் வந்த கோபமாக இருக்கலாம் என்று எண்ணியவள்.. வெட்கத்தோடு ஆமாம் என்று தலையசைத்து.. அவனை நெருங்கினாள்..

கனவுப்படி கற்பனையின்படி அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும்.. தாண்டவன் ஆசையோடு அவள் முகம் பார்க்க வேண்டும் வெட்கத்தில் அவனுக்குள் புதைந்து கொள்ள வேண்டும்.. நிஜத்திலும் நடத்திக் கொள்ள கோடான கோடி ஆசைகளோடு அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள முயல.. சடாரென்று விலகியவன்.. தலையைக் கோதியபடி குறுக்கும் நடுக்கமாக நடந்தபடி தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்..

சட்டென முகம் மாறிய போதிலும் "சாரிங்க.. காலையிலயே சொல்லணும்னு நினைச்சேன்.. நேர்ல உங்க முகத்தை பார்த்து சொன்னாதான் திருப்தியா இருக்கும்னு தோணுச்சு!!.. மத்தபடி உங்க கிட்ட மறைக்கணும்னு எந்த எண்ணமும் இல்லை".. அவன் கோபம் குழப்பத்திற்கான காரணம் இதுதான் என்று நினைத்து அவள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க..

"ஜாக்கிரதையா தானே இருந்தோம் எப்படி நடந்துச்சு?".. என்று அவளை பார்த்து கேட்ட கேள்வியில்.. என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை.. இதய பரப்பில் பூகம்பத்திற்கான ரிட்டர் அளவுகோல் அதிகரித்துக் கொண்டே செல்வதாக அப்படி ஒரு அதிர்வு!!..

"எ.. எ.. என்ன பேசறீங்க.. ஒண்ணுமே புரியலையே!!".. அவன் கண்களுக்குள் ஊன்றி பார்த்தாள்.. அவள் பார்வையை தவிர்த்து வேறுபக்கம் திரும்பியவன் இந்த குழந்தையை கலைச்சிடலாம் என்றான் வெகு சாதாரணமாக!!.. திக்கென்று ஒரு அதிர்வு.. நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு நிற்க முடியாத அளவில் கால்கள் துவண்டு போனது.. ஜீரணிக்க வழியில்லாது மனம் முரண்டு பிடித்தது..

காலையிலிருந்து இந்த நொடி வரை அவள் கண்ட ஆயிரம் கனவுகளும்.. முல்லைப் பூக்களாக மனதை சூழ்ந்திருந்த கற்பனைகளும் கருகி மண்ணோடு மண்ணானது..

"இந்த குழந்தை நமக்கு வேண்டாம்!!.. கலைச்சிடலாம்.. நல்ல வேளை சீக்கிரமா சொல்லிட்ட.. இல்லன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்".. எப்படி சர்வ சாதாரணமாக பேச முடிகிறது இவனால்.. "இது கனவு கனவு.. விழித்துக் கொள் உமா" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்ட போதிலும்.. அடிமனதில் பீறிட்டு எழுந்த வலி இது நிதர்சனம் என்று புரிய வைப்பதாய்!!..

"ஏன்.. ஏன்.. இப்படி பேசுறீங்க!! நம்ம குழந்தை இல்லையா இது!!".. நடுக்கத்தில் மூச்சு வாங்கியது.. எப்பேர்ப்பட்ட மாபாதகம் உடல் வெடவெடத்தது..

"இப்ப எதுக்காக இவ்வளவு சீன் கிரியேட் பண்ற.. அபார்ஷன் எல்லாம் இப்ப நார்மலைஸ் பண்ணியாச்சு.. ஒரு குழந்தையை வளர்க்கற அளவுக்கு நான் தயாராகல.. எனக்கு பொறுமையும் இல்லை".. இப்படி சொன்னவனை நம்ப இயலாத பார்வையோடு வெறித்தாள் உமா..

"என்னால நம்பவே முடியல.. நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல!!.. நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை கேட்டு ரொம்ப சந்தோஷப்படுவீங்கன்னு நினைச்சேன்.. எவ்வளவு கனவு கண்டேன்!!.. எவ்வளவு ஆசையா உங்க கிட்ட சொல்ல காத்திருந்தேன்.. இப்படி என் சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சிட்டீங்களே" கட்டிலில் தொப்பென அமர்ந்தவள் தலையில் கை வைத்து கண்ணீர் வடித்தாள்..

"ஏய்.. ஏய்.. இப்ப எதுக்கு அழுது ஊர கூட்டுற" என்று பற்களை நறநறவென கடித்தவன்.. "இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத சுமை?" என்றதில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்..

"கு.. குழந்தை சுமையா?"..

"ஆமா!!.. நீ பிரகனண்ட் ஆகிட்டா தலை சுத்தல் வாந்தி மயக்கம்னு நீ பாட்டுக்கு படுத்துக்குவ!!.. உன்னால என்னை சந்தோஷப்படுத்த முடியாது.. என்னால உன்னை பிரிஞ்சிருக்கவும் முடியாது.. ஐ மீன் உன் உடம்பை!!".. ஜொலித்துக் கொண்டிருந்த இதயம் மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து சிதலமடைந்து கொண்டிருந்தது அவன் பேச்சில்..

"அந்த குழந்தையை பெத்து வளர்த்து".. என்று ஒரு மாதிரியாக தலையை உலுக்கியவன் "இதெல்லாம் என்னால முடியாது.. ஐ ஹேட் பேபி.. எனக்கு குழந்தை வேண்டாம்!!.. டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன்.. நாளைக்கு போகலாம்".. சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் இயல்பாக கூறியவனின் மீது ஆத்திரம் பொங்கியது..

"இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.. எனக்கு குழந்தை வேணும்!!".. அவள் உறுதியாக நின்றாள்.. அவன் குழந்தை வேண்டாம்.. கலைத்து விடலாம் என்ற போது துவண்டு போன கொடியாக பலவீனமாகி போயிருந்தவள்.. தன் வயிற்றிலிருந்த குழந்தையை காப்பாற்றும் பொருட்டு மீண்டும் மனதிடத்துடன் நிமிர்ந்து நின்றாள்..

"குழந்தைங்கறது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா.. எத்தனை பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா!! அருமை தெரியாம சின்னஞ்சிறு சிசுவை வயிற்றிலேயே அழிக்க நினைக்கிறீர்களே.. நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!!.. உங்க ஜாடையில.. என்னோட குணத்தோட ஒரு குழந்தை.. குட்டி பாப்பாவோட அழுகை சத்தமும் சிரிப்பு சத்தமும்.. புல்லாங்குழல் இசை மாதிரி கேட்டுகிட்டே இருக்கணும்.. பாப்பாவோட ஒவ்வொரு அசைவையும் பார்த்து பாத்து சந்தோஷப்படணும்.. எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா!!.. நம்ம குழந்தை..ங்க.. ரத்தமும் சதையுமா உங்களாலும் என்னாலும் உருவான குழந்தை.. இப்படி வெறுக்கிறீங்களே!!.. இது கடவுளுக்கே அடுக்காது".. பேச முடியாத அளவிற்கு கண்ணீர் கரைகட்டி நிற்க கதறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.. நிறைய பேச நினைத்தாள் ஆத்திரமும் கோபமும் அணை கட்டியதில் என்ன பேசுவதென்றே புரியவில்லை..

"நான் வெறுக்கல.. எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்.. உனக்கு தான் உன்னோட குழந்தையோட சிரிப்பும் அழுகையும் புல்லாங்குழல் சத்தம்.. என்னை பொருத்தவரை அது தேவையில்லாத இரைச்சல் டிஸ்டர்பன்ஸ்.. என் சந்தோஷத்துக்கு எந்த தடையும் வரக்கூடாது"..

எப்போது உன் குழந்தை என்று பிரித்து பேசி விட்டானோ அப்போதே தெரிந்து போனது இவன் நெஞ்சில் ஈரத்தையும் பாசத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என!!.. "உங்க கிட்ட பேசி பிரயோஜனமே இல்ல.. நீங்க மனிதனே கிடையாது.. என்ன ஆனாலும் சரி!!.. என் குழந்தை எனக்கு வேணும்.. இந்த குழந்தையை நான் பெத்துக்க தான் போறேன்"..

அவளை அழுத்தமாக பார்த்தவன் "என்னோட எந்த சப்போர்ட்டும் உனக்கு கிடைக்காது!!".. என்றான்..

"தேவையில்லை.. என் குழந்தையை பார்த்துக்க எனக்கு தெரியும்".. என்றாள் தீர்க்கமாக!!..

"ஓஹோ!!".. என்றவனின் புருவங்கள் வளைந்தன.. "இந்த அளவுக்கு உறுதியா இருக்கேன்னா எனக்கு சந்தேகமா இருக்கே!!.. என் குழந்தையை வளர்க்கத் தான் இவ்வளவு பிடிவாதமா!!.. அப்படி தெரியலையே!!.. இல்ல வேற ஒருத்தனுடைய நினைவுச் சின்னமா இந்த குழந்தையை வயித்துல சுமக்கறியா!!.. என் ஆதரவு இல்லைன்னு சொன்ன பிறகும் இவ்வளவு துணிவா நிக்கிறேனா எல்லாம் அவன் கொடுத்த தைரியம் தானா!!.. யார் அவன்!!".. புலியின் குரூரம் அவன் விழிகளில்.. அமில மழையில் வீசியெறியப் பட்ட சின்னஞ்சிறு மலராய் துடித்துப் போனாள் உமா..

இதற்கு மேல் தாங்க முடியாது.. எவ்வளவோ பொறுத்துக் கொண்டாள்.. எத்தனையோ வார்த்தைகளை சகித்துக் கொண்டாள்.. ஆனால் இது?.. துண்டு துண்டாக வெட்டிய பின்பும் உயிரும் வலியும் மிச்சமிருப்பதை போல்!!.. வார்த்தைகள் இவ்வளவு கொடியதா!!.. பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.. பெட்டியில் துணிமணிகளை அள்ளி வைத்துக் கொண்டு.. கால் டாக்ஸி வரச் சொல்லி தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள்..

தடுக்கவில்லை.. எங்கே செல்கிறாய் என்று கேட்கவில்லை.. அங்கே சென்று ஒரு வாரமான பின்னும்.. அவள் வீட்டுக்கு சென்று அழைக்கவில்லை.. மன்னிப்பு கேட்கவில்லை.. இங்கே உமா தான்.. தன் துக்கங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாமல் முட்கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சின்னஞ்சிறு பறவையாய் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள்..

தொடரும்..
 
Last edited:
New member
Joined
May 26, 2023
Messages
2
இணையான இரு ரோஜா நிற கோடுகளை கண்டதும் உமாவின் இதயத்தில் ஆனந்த பூக்கள் மழையாக சொரிந்தன.. அடுத்த கணம் அவள் மனம் தேடியது கணவனைத்தான்.. அவரிடம் முதலில் இந்த விஷயத்தை கூற வேண்டும்.. பிறகுதான் மற்றவர்களுக்கு தகவல்.. நிச்சயம் இந்த சந்தோஷ செய்தி அவர் மனதை மாற்றும்.. கற்பாறை இதயத்தை இளகச் செய்யும்.. தான் தந்தையாக போகிறோம் என்ற செய்தி கேட்டவுடன் அவர் முகத்தில் சந்தோஷ தேன்துளிகள்.. மெல்ல மெல்ல முகிழ்ப்பதை ஆசை தீர கண்டு ரசிக்க வேண்டும்..

"குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா சரியா போயிடும்.. பிஞ்சு முகம் பார்த்தாலே சிடுசிடுப்பு மாறிடும்.. அதுக்காகவாது சீக்கிரம் ஒன்னு பெத்து போடு".. மாமியார் முதல் பிறந்து வீடு வரை, இதே அறிவுரை தான்.. மனைவியிடம் காட்டப்படாத பரிவும் கனிவும் கூட.. பெற்ற மகளிடம்.. மகனிடம் அளவு கடந்து வெளிப்படுமாம்!!.. புத்திர பாசத்திற்கு சக்தி அதிகம்..

அவர் முரட்டுக் கரத்தை என் வயிற்றில் அழுத்திக்கொண்டு வெட்கத்தோடு.. கருவுற்றிருப்பதை அவரிடம் சொல்லி சலுகையாக நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும்.. நிச்சயம் இன்று என்னை அனுமதிப்பார்.. "தள்ளிப்போ" என்று.. உதாசீனப்படுத்த மாட்டார்.. எப்படி விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைப்பது..

"நான் கர்ப்பமா இருக்கேன்"..

'உங்க குழந்தை என் வயித்துல வளருது"..

"நாம அம்மா அப்பா ஆகப் போறோம்.. இப்படி சொல்லலாமா!!".. அந்த கண்களை பார்த்தால் வார்த்தைகள் வருவதே கடினம்.. ஆழ்ந்து விழுங்கும் முரட்டுப் பார்வை.. கோபமா காமமா என்று கூட உணர முடியாது.. அவளுக்கு தெரிந்த அவனின் இரண்டே உணர்வுகள் அது மட்டும் தானே!!..

youtube வீடியோக்களில் கணவனிடம் மனைவி தன் கருவுற்றிருக்கும் விஷயத்தை புதுவிதமாக எப்படியெல்லாம் தெரியப்படுத்துகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. எதுவும் திருப்தி அளிக்கவில்லை.. தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த யோசனை தோன்றியது..

அவருக்கு பிடித்த இனிப்பு ஒன்றை தயாரித்து.. வந்ததும் வராததுமாக உமா என்று அழைக்கும் முன் அவர் வாயில் ஊட்டி.. கண்கள் அகல திறந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்போது.. அவர் கழுத்தோரம் புதைந்து "நீங்க அப்பா ஆக போறீங்க!!" என்று சொல்லலாம்.. நினைத்துப் பார்க்கும்போதே வெட்கம் பிடுங்கி தின்கிறது.. நேரடியாக எப்படி சொல்வது!!.. இதழ் கடித்து வெட்கப்பட்டு கொண்டு கால் கட்டை விரலால் டைல்ஸ் தரையை அழுத்தினாள்.. ஆயிரம் இனிய கனவுகளும்.. அழகான மெல்லிசை பாடல்களும் அவள் மனம் நிறைத்து மலர் வாசம் பரப்புவதாய்.. ஒரு மாதிரியான சிலிர்ப்பான உணர்வு.. காலையிலிருந்து சமைக்கும் போது.. உறங்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.. பொங்கி வழியும் சந்தோஷம் இதழ்களில் வெளிப்படுகிறது!!..

அகத்திற்குள் அவன் மீதான நேசம் ஆழ புதைந்திருந்த போதும்.. அடிக்கடி அவனை காண வேண்டும்.. அவனோடு நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைகள் வற்றிப் பொய் வெகு நாட்களாயிற்று!!.. இன்று மீண்டும் அவன் முகம் காண துளிர்விட்ட ஆசையில்.. அவனுக்கு மிகப் பிடித்த காசி அல்வாவை நெய்வாசத்தோடு கிளறி வைத்துவிட்டு அடிக்கடி வாசலை பார்க்கலானாள்..

காதலிக்கும் முன்பு வரை இதுபோன்ற வாழ்க்கை காட்சிகளின் ஹைதர் காலத்து கதாபாத்திரங்களாக மாறி போவோம் என்று கடுகளவும் நினைத்ததில்லை.. சீறும் கணவனிடம் தணிந்து போவது.. அவனுக்கு பணிவிடைகள் செய்வது.. தகாத வார்த்தைகள் பேசினாலும் மரவட்டையாக தனக்குள் சுருண்டு அமைதியாக கடந்து செல்வது.. அவன் தரும் சின்ன சின்ன சந்தோஷங்களில் மயங்கி நிற்பது.. இதோ இப்போது வயிற்றில் பிள்ளையை சுமந்து அடுத்த கணம் அவன் செய்த அத்தனை அநியாயங்களையும் மறந்து விட்டு அவனுக்காக அன்போடு காத்திருப்பது.. என பழைய கிளாசிக் ஹீரோயினாக தான் மாறி போயிருந்ததை நினைத்து உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது..

அப்படியானால் அடிமைத்தனம் எனக்குள்ளேயே மண்டி கிடக்கிறதா?.. இல்லவே இல்லை.. பெண்கள் கணவனிடம் மட்டுமா பணிந்து போகிறார்கள்!!.. அன்னை தந்தை.. கணவன்.. மகன் மகள்.. பேரன் பேத்தி.. என அனைவரிடமும் அன்பால் பணிந்து போகிறாள்!!.. அவள் கருணையை தவறாக பயன்படுத்திக் கொள்வது அவரவர் தவறு..

தன்னை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசிய கணவன் ஒருவேளை பட்டினி கிடந்தாலும் தாங்க முடிவதில்லையே!!.. இது அடிமைத்தனம் அல்ல அன்பு!!.. இந்த அன்பை தானே அவர்களுக்கு சாதகமாக ஆயுதமாக பயன்படுத்தி பெண்ணை வீழ்த்துகிறார்கள்!!..

அடேச்சே!!.. இது என்ன சந்தோஷமான நேரத்தில் அடிமைத்தனம்.. ஆயுதம் என அபத்தமான சிந்தனைகள்.. தறிக்கட்டு ஓடிய எண்ணங்களை ம தடுத்து நிறுத்தி மீண்டும் தன் வயிற்றிலிருந்த கருவின் மீது ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் குவித்தாள்..

இரவு நேர வேலைகள் மிக அரிது.. காட்சி ஒப்பந்தங்களை மிக விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுபவன் இன்று ஒன்பது மணி தாண்டியும் வீடு திரும்பாததில் லேசான ஏமாற்றத்தோடு போனில் அழைக்கலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவளை மனதோடு ஒட்டிக் கொண்டிருந்த தன்மானமும் கோபமும் முரண்டியது..

இப்படி ரோஷப்பட்டு உட்கார்ந்திருந்தா வந்த உடனே அவர் கிட்ட. விஷயத்தை எப்படி சொல்லுவ?.. என்று இன்னொரு மனம் சாடியது.. என்னதான் கருவில் உதித்த குழந்தை மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அவன் பேசிய வார்த்தைகளில் தாக்கம் அடிநெஞ்சில் இன்னும் காந்திக் கொண்டிருக்கிறது!!.. தீராத காயம் அவன் ஆறுதல் வார்த்தைகள் என்னும் மயிலிறகின் மூலம் மட்டுமே குணமடையும்.. கட்டில் பாஷைகளோ விடாத தொல்லைகளோ அவள் மனதை சாந்தியடைய செய்யாது!!.. இருப்பினும் இந்த குழந்தை மூலம் தங்களுக்கு இடையே ஒரு பெரும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு தயாரித்து வைத்திருந்த இனிப்பை விள்ளல் எடுத்து விழுங்கியபடி காத்திருந்தாள்..

தொண்டை குழிக்குள் பட்டாக வழுக்கிய இனிப்பின் மீது மீண்டும் கவனம் சென்றது.. Pregnancy cravings.. ஏதாவது தின்று கொண்டே இருக்க சொல்கிறது.. அதிலும் இனிப்பும் புளிப்பும் அவ்வளவு பிடிக்கிறது.. அவனுக்காக செய்தேன் என்று அதில் அரை பங்கை அவளே காலி செய்திருந்தாள்..

இதோ வந்து விட்டான்.. பைக் சத்தம் கேட்கிறதே!!.. அழுத்தமான காலடி ஓசை நடப்பதிலும் நிதானம் கிடையாது.. மனதுக்குள் செல்லமாக திட்டிக்கொண்டு.. கண்ணாடியில் ஒரு முறை தன் அலங்காரத்தை சரி பார்த்துக் கொண்டவள்.. அவசரமாக சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

ஒரு கிண்ணத்தில் அல்வாவை போட்டு எடுத்து வருவதற்குள்.. இடுங்கிய விழிகளோடு எதையோ உற்று பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன்..

அப்போதுதான் அவன் கையிலிருந்த பொருளை கவனித்தவள் தன் மடத்தனத்தை எண்ணி நெற்றியில் அறைந்து கொண்டாள்..

அவன் கரத்தில் பிரக்னன்சி கிட்டை கண்டு "அட கடவுளே.. இதை மறைத்து வைத்திருக்கணுமே!!.. சர்ப்ரைஸா.. விஷயத்தை சொல்லணும்னு நெனச்சு இப்படி சொதப்பிட்டேனே".. என்று நொந்து கொண்டாள் உமா..

அரவம் கேட்டு அவன் பார்வை வாசல் பக்கம் திரும்பியது.. நூறு பூக்கள் ஒன்றாக பூத்தது போல் மலர்ந்து புன்னகைத்தாள் உமா..

"என்னது இது?".. கனிவை அறியாத முகத்தோடு அவன் கேட்ட கேள்வியில் இதயத்தில் பலத்த ஏமாற்றம்.. ஒரு கணம் ஒன்றும் புரியாதவளாய் அவனைப் பார்த்து விழித்தாள்.. ஒருவேளை இது பிரக்னன்சி கிட் என்று அவருக்கு தெரியாதோ என்ற சந்தேகத்துடன் அவள் நிற்க..

"நீ பிரக்னண்டா இருக்கியா!!" என்றான் கடுகடுப்பு சற்று கூடி!!..

ஒருவேளை நல்ல விஷயத்தை அவரிடம் இவ்வளவு நேரம் மறைத்து சொல்லாமல் இருந்ததால் வந்த கோபமாக இருக்கலாம் என்று எண்ணியவள்.. வெட்கத்தோடு ஆமாம் என்று தலையசைத்து.. அவனை நெருங்கினாள்..

கனவுப்படி கற்பனையின்படி அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும்.. தாண்டவன் ஆசையோடு அவள் முகம் பார்க்க வேண்டும் வெட்கத்தில் அவனுக்குள் புதைந்து கொள்ள வேண்டும்.. நிஜத்திலும் நடத்திக் கொள்ள கோடான கோடி ஆசைகளோடு அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள முயல.. சடாரென்று விலகியவன்.. தலையைக் கோதியபடி குறுக்கும் நடுக்கமாக நடந்தபடி தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்..

சட்டென முகம் மாறிய போதிலும் "சாரிங்க.. காலையிலயே சொல்லணும்னு நினைச்சேன்.. நேர்ல உங்க முகத்தை பார்த்து சொன்னாதான் திருப்தியா இருக்கும்னு தோணுச்சு!!.. மத்தபடி உங்க கிட்ட மறைக்கணும்னு எந்த எண்ணமும் இல்லை".. அவன் கோபம் குழப்பத்திற்கான காரணம் இதுதான் என்று நினைத்து அவள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க..

"ஜாக்கிரதையா தானே இருந்தோம் எப்படி நடந்துச்சு?".. என்று அவளை பார்த்து கேட்ட கேள்வியில்.. என்ன பேசுகிறான் என்றே புரியவில்லை.. இதய பரப்பில் பூகம்பத்திற்கான ரிட்டர் அளவுகோல் அதிகரித்துக் கொண்டே செல்வதாக அப்படி ஒரு அதிர்வு!!..

"எ.. எ.. என்ன பேசறீங்க.. ஒண்ணுமே புரியலையே!!".. அவன் கண்களுக்குள் ஊன்றி பார்த்தாள்.. அவள் பார்வையை தவிர்த்து வேறுபக்கம் திரும்பியவன் இந்த குழந்தையை கலைச்சிடலாம் என்றான் வெகு சாதாரணமாக!!.. திக்கென்று ஒரு அதிர்வு.. நெஞ்சை பிடித்துக் கொண்டவளுக்கு நிற்க முடியாத அளவில் கால்கள் துவண்டு போனது.. ஜீரணிக்க முடியாத மனம் முரண்டு பிடித்தது..

காலையிலிருந்து இந்த நொடி வரை அவள் கண்ட ஆயிரம் கனவுகளும்.. முல்லைப் பூக்களாக மனதை சூழ்ந்திருந்த கற்பனைகளும் கருகி மண்ணோடு மண்ணானது..

"இந்த குழந்தை நமக்கு வேண்டாம்!!.. கலைச்சிடலாம்.. நல்ல வேளை சீக்கிரமா சொல்லிட்ட இல்லன்னா ரொம்ப கஷ்டமா போயிருக்கும்".. எப்படி சர்வ சாதாரணமாக பேச முடிகிறது இவனால்.. "இது கனவு கனவு.. விழித்துக் கொள் உமா" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்ட போதிலும்.. அடிமனதில் பீறிட்டு எழுந்த வலி இது நிதர்சனம் என்று புரிய வைப்பதாய்!!..

"ஏன்.. ஏன்.. இப்படி பேசுறீங்க!! நம்ம குழந்தை இல்லையா இது!!".. நடுக்கத்தில் மூச்சு வாங்கியது.. எப்பேர்ப்பட்ட மாபாதகம் உடல் வெடவெடத்தது..

"இப்ப எதுக்காக இவ்வளவு சீன் கிரியேட் பண்ற.. அபார்ஷன் எல்லாம் இப்ப நார்மலைஸ் பண்ணியாச்சு.. ஒரு குழந்தையை வளர்க்கற அளவுக்கு நான் தயாராகல.. எனக்கு பொறுமையும் இல்லை".. இப்படி சொன்னவனை நம்ப இயலாத பார்வையோடு வெறித்தாள் உமா..

"என்னால நம்பவே முடியல.. நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல!!.. நான் கர்ப்பமா இருக்கிற விஷயத்தை கேட்டு ரொம்ப சந்தோஷப்படுவீங்கன்னு நினைச்சேன்.. எவ்வளவு கனவு கண்டேன்!!.. எவ்வளவு ஆசையா உங்க கிட்ட சொல்ல காத்திருந்தேன்.. இப்படி என் சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சிட்டீங்களே" கட்டிலில் தொப்பென அமர்ந்தவள் தலையில் கை வைத்து கண்ணீர் வடித்தாள்..

"ஏய்.. ஏய்.. இப்ப எதுக்கு அழுது ஊர கூட்டுற" என்று பற்களை நறநறவென கடித்தவன்.. "இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத சுமை?" என்றதில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்..

"கு.. குழந்தை சுமையா?"..

"ஆமா!!.. நீ பிரகனண்ட் ஆகிட்டா தலை சுத்தல் வாந்தி மயக்கம்னு நீ பாட்டுக்கு படுத்துக்குவ!!.. உன்னால என்னை சந்தோஷப்படுத்த முடியாது.. என்னால உன்னை பிரிஞ்சிருக்கவும் முடியாது.. ஐ மீன் உன் உடம்பை!!".. ஜொலித்துக் கொண்டிருந்த இதயம் மண்டபம் கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து சிதலமடைந்து கொண்டிருந்தது அவன் பேச்சில்..

"அந்த குழந்தையை பெத்து வளர்த்து".. என்று ஒரு மாதிரியாக தலையை உலுக்கியவன் "இதெல்லாம் என்னால முடியாது.. ஐ ஹேட் பேபி.. எனக்கு குழந்தை வேண்டாம்!!.. டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன்.. நாளைக்கு போகலாம்".. சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் இயல்பாக கூறியவனின் மீது ஆத்திரம் பொங்கியது..

"இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.. எனக்கு குழந்தை வேணும்!!".. அவள் உறுதியாக நின்றாள்.. அவன் குழந்தை வேண்டாம்.. கலைத்து விடலாம் என்ற போது துவண்டு போன கொடியாக பலவீனமாகி போயிருந்தவள்.. தன் வயிற்றிலிருந்த குழந்தையை காப்பாற்றும் பொருட்டு மீண்டும் மனதிடத்துடன் நிமிர்ந்து நின்றாள்..

"குழந்தைங்கறது எவ்வளவு பெரிய வரம் தெரியுமா.. எத்தனை பேர் குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க தெரியுமா!! அருமை தெரியாம சின்னஞ்சிறு சிசுவை வயிற்றிலேயே அழிக்க நினைக்கிறீர்களே.. நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!!.. உங்க ஜாடையில.. என்னோட குணத்தோட ஒரு குழந்தை.. குட்டி பாப்பாவோட அழுகை சத்தமும் சிரிப்பு சத்தமும்.. புல்லாங்குழல் இசை மாதிரி கேட்டுகிட்டே இருக்கணும்.. பாப்பாவோட ஒவ்வொரு அசைவையும் பார்த்து பாத்து சந்தோஷப்படணும்.. எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா!!.. நம்ம குழந்தை..ங்க.. ரத்தமும் சதையுமா உங்களாலும் என்னாலும் உருவான குழந்தை.. இப்படி வெறுக்கிறீங்களே!!.. இது கடவுளுக்கே அடுக்காது".. பேச முடியாத அளவிற்கு கண்ணீர் கரைகட்டி நிற்க கதறலோடு வெளிப்பட்டன வார்த்தைகள்.. நிறைய பேச நினைத்தாள் ஆத்திரமும் கோபமும் அணை கட்டியதில் என்ன பேசுவதென்றே புரியவில்லை..

"நான் வெறுக்கல.. எனக்கு வேண்டாம்ன்னு சொல்றேன்.. உனக்கு தான் உன்னோட குழந்தையோட சிரிப்பும் அழுகையும் புல்லாங்குழல் சத்தம்.. என்னை பொருத்தவரை அது தேவையில்லாத இரைச்சல் டிஸ்டர்பன்ஸ்.. என் சந்தோஷத்துக்கு எந்த தடையும் வரக்கூடாது"..

எப்போது உன் குழந்தை என்று பிரித்து பேசி விட்டானோ அப்போதே தெரிந்து போனது இவன் நெஞ்சில் ஈரத்தையும் பாசத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என!!.. "உங்க கிட்ட பேசி பிரயோஜனமே இல்ல.. நீங்க மனிதனே கிடையாது.. என்ன ஆனாலும் சரி!!.. என் குழந்தை எனக்கு வேணும்.. இந்த குழந்தையை நான் பெத்துக்க தான் போறேன்"..

அவளை அழுத்தமாக பார்த்தவன் "என்னோட எந்த சப்போர்ட்டும் உனக்கு கிடைக்காது!!".. என்றான்..

"தேவையில்லை.. என் குழந்தையை பார்த்துக்க எனக்கு தெரியும்".. என்றாள் தீர்க்கமாக!!..

"ஓஹோ!!".. என்றவனின் புருவங்கள் வளைந்தன.. "இந்த அளவுக்கு உறுதியா இருக்கேன்னா எனக்கு சந்தேகமா இருக்கே!!.. என் குழந்தையை வளர்க்கத் தான் இவ்வளவு பிடிவாதமா!!.. அப்படி தெரியலையே!!.. இல்ல வேற ஒருத்தனுடைய நினைவுச் சின்னமா இந்த குழந்தையை வயித்துல சுமக்கறியா!!.. என் ஆதரவு இல்லைன்னு சொன்ன பிறகும் இவ்வளவு துணிவா நிக்கிறேனா எல்லாம் அவன் கொடுத்த தைரியம் தானா!!.. யார் அவன்!!".. புலியின் குரூரம் அவன் விழிகளில்.. அமில மழையில் வீசியெறியப் பட்ட சின்னஞ்சிறு மலராய் துடித்துப் போனாள் உமா..

இதற்கு மேல் தாங்க முடியாது.. எவ்வளவோ பொறுத்துக் கொண்டாள்.. எத்தனையோ வார்த்தைகளை சகித்துக் கொண்டாள்.. ஆனால் இது?.. துண்டு துண்டாக வெட்டிய பின்பும் உயிரும் வலியும் மிச்சம் இருப்பதை போல்!!.. வார்த்தைகள் இவ்வளவு கொடியதா!!.. பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.. பெட்டியில் துணிமணிகளை அள்ளி வைத்துக் கொண்டு.. கால் டாக்ஸி வரச் சொல்லி தன் பிறந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள்..

தடுக்கவில்லை.. எங்கே செல்கிறாய் என்று கேட்கவில்லை.. அங்கே சென்று ஒரு வாரமான பின்னும்.. அவள் வீட்டுக்கு சென்று அழைக்கவில்லை.. மன்னிப்பு கேட்கவில்லை.. இங்கே உமா தான்.. தன் துக்கங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாமல் முட்கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சின்னஞ்சிறு பறவையாய் உள்ளுக்குள் அழுது துடித்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..
😳
 
Member
Joined
Apr 7, 2023
Messages
33
😭😭😭😭😭
 
Member
Joined
Sep 14, 2023
Messages
118
Ippadiyum manitharkal iruparkala.......😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
108

🙃🙃🙃
 
Member
Joined
Feb 15, 2024
Messages
27
Ithuku elam sethu revenge eruku da unuku
 
Member
Joined
May 10, 2023
Messages
45

Ioosa irupano
 
Member
Joined
Jan 21, 2024
Messages
32
இவனுக்கு உமா கிட்டேஉடம்பு சுகம் தான் வேணும் பிள்ளை வேணாம் பைத்தியமா இவன்
 
Member
Joined
Jan 29, 2023
Messages
26
🥺😯🥺😯🥺😯🥺❤️
 
Joined
Jul 10, 2024
Messages
28
அடப்பாவி எதுக்கும் ரியாக்ஷன் கொடுக்க மாட்ட அப்படின்னு நினைச்சேன். இப்படி குழந்தையே வேண்டாம்னு குண்ட தூக்கி போட்டுட்டியே. கொஞ்சம் கூட உன் மேலே நம்பிக்கை வைக்கிற மாதிரி நடக்கமாட்டீங்கறியேடா சண்டைக்காரா.
 
Top