• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Member
Joined
Nov 30, 2024
Messages
21
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Joined
Jun 11, 2024
Messages
6
யோவ் டாக்டரே உம்ம வாய் ரொம்ப சின்னதோ.. அவ வாய் தான் வங்காளவிரிகுடா வரைக்கும் நீளுதாமா. உன்ற வாய் அதுக்கு மேல இல்லை நீளும். 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நீ கமலி புள்ள பின்னாடி சுத்தல எங்களை என்னன்னு கேளு டாக்டரே. 😃😃😃😃😃😃😃😃
கமலி பின்னால் சூர்யா சுற்றும் நாளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் 😉😉
 
Joined
Jul 31, 2024
Messages
42
மரங்களின் அடர்ந்த கிளைகளிலிருந்து குயில்களும் தேன் சிட்டுக்களும்.. கீச் கீச்சென்று ஒலியெழுப்பியதை ரசிக்க தெரியாதவனாய் வீட்டின் உட்பகுதியிலிருந்து இறங்கி வந்தான் சூர்யதேவ்..

வழக்கம்போல் வாசலில் பெரிய பெரிய பூக்களில் வர்ணங்களை நிரப்பியிருந்த ரங்கோலி கோலம்..

தாடை இறுக பற்களை கடித்த படி.. இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து மாடியை பார்த்தான்..

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே..

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே..

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லி தோட்டம்..

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்..

மாடியிலிருந்து மெல்லிய சத்தமாய் கசிந்த பாடல் அவன் காதுகளுக்குள் ஊடுருவியது..

சுற்றி முற்றும் பார்த்தவனுக்கு.. சிங்காரம் இல்லாததால் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு செக்யூரிட்டி ஓரமாக வைத்துவிட்டு சென்றிருந்த ஹோல்ஸ் பைப் கண்ணில் பட.. குழாயை திறந்து விட்டு பைப்பை எடுத்துக்கொண்டு கோலத்தின் பக்கம் வந்தான்..

ஒரு புள்ளியோ.. சின்ன இழையோ தடமில்லாத அளவிற்கு கோலத்தை அழித்த பிறகு.. நிமிர்ந்து மேலே பார்த்தான்..

பாறையிலே பூ முளைச்சு
பார்த்தவங்க யாரு

அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு

ஆயுசு நூறு..

ஜானகி தேனை உருக்கி அவன் செவிகளை வருடினார்..

கையிலிருந்த ஹோல்ஸ் பைப்பை டம்மென்று தரையில் போட்டுவிட்டு.. நுழைவாயிலை தாண்டி நடையை தொடர்ந்தான் சூர்ய தேவ்..

மாடியிலிருந்து அவன் செய்கையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கமலினி..

அவன் மீதான கோபத்தில் முகம் கருத்து போயிருந்தாலும்.. நேற்று வருண் சொன்ன விஷயங்களை அவள் மனம் நிதானமாக அசை போட்டுக் கொண்டிருந்தது..

"உங்க ஹவுஸ் ஓனர் மிஸ்டர் சூரிய தேவ் என்னோட ஃப்ரெண்டுங்க..!!" என்றான் வருண்..

"ஐயோ அப்ப தப்பான இடத்துக்கு வந்துட்டேனா..?" அதிர்ச்சியோடு எச்சில் விழுங்கினாள் கமலி..

வருண் பெரிதாக சிரித்தான்.. "நாட் லைக் தட்.. இந்த நிமிஷம் நான் ஒரு டாக்டர்.. உங்களுக்கு ஹெல்ப் பண்ணதான் நான் இங்க இருக்கேன்.. அதை நீங்க நம்பனும்.."

"மறைக்காம உண்மையை சொன்னதுக்கு தேங்க்ஸ் டாக்டர்.. இல்லைனா கண்டமேனிக்கு இன்னும் கொஞ்சம் அவரை திட்டியிருப்பேன்.." சொல்லிவிட்டு உளறியதை எண்ணி வாயை இறுக மூடிக் கொண்டாள்..

வருண் அடக்கப் பட்ட சிரிப்போடு அவளைப் பார்த்தான்..

"நீங்க எதையும் என்கிட்ட மறைக்கணும்னு அவசியமில்லை.. உங்களுக்கு திட்டனும்னு தோணுச்சுன்னா திட்டிடுங்க.. ஆனா கொஞ்சம் டீசண்டா திட்டுங்க.. ஏன்னா அவன் என்னோட ஃபிரெண்ட் பாருங்க.." அவன் சொன்ன விதத்தில் கமலிக்கு சிரிப்பு வந்தது..

"நான்தான் என் பிரச்சினையை சொல்லிட்டேனே டாக்டர்.. இந்த டென்ஷன்ல இருந்து ரிலீவ் ஆகணும்.. ராத்திரி நிம்மதியா தூங்கணும்.. அதுக்கு மட்டும் எனக்கு ஏதாவது மெடிசன்ஸ் குடுங்க..!!"

"மெடிசன்ஸ் எடுக்கறது எடுக்கட்டும்.. முதல்ல உங்களுக்கு எதனால தூக்கம் வரல.. எதனால உங்களுக்கு இந்த ஸ்ட்ரெஸ்..?"

"என்ன டாக்டர் இப்பதானே படிச்சு படிச்சு விளக்கமா சொன்னேன்.."

"உங்க ஃபிரண்ட் என்னை கட்டுப்படுத்த நினைக்கிறார்.. என் சந்தோஷங்களை முடக்க பார்க்கறார்.. நான் அந்த வீட்ல வாடகைக்கு இருக்கேன் அவ்வளவுதான்.. அதுக்காக நான் அவரோட அடிமை இல்லையே..!! என் இஷ்டப்படி வாழ எனக்கு எல்லா சுதந்திரமும் உண்டு சரிதானே..!!" அவள் கேட்ட விதத்தில்..

"ரொம்ப சரி.. அப்போ உங்க இஷ்டப்படி வாழுங்க.." என்றான் அவன் சாதாரணமாக..

"அதுதான் முடியலைங்கறேனே..!! எப்பவுமே ஏதாவது சண்டை இழுத்துக்கிட்டே இருந்தா எப்படி சந்தோஷமா இருக்க முடியும்.. எனக்கு அமைதி வேணும் நிம்மதி வேணும்.."

"அதையேதான் அவனும் கேட்கிறான் அமைதி வேணும் நிம்மதி வேணும்னு.." மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான் வருண்..

"ப்ச்.. டாக்டர் உங்களுக்கு புரியல.. இந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர்ற மாதிரி என் வாழ்க்கையை சேர்த்து அவர் வாழ்ந்துட்டு இருக்கற ஃபீல்.. எனக்கு ரொம்ப எரிச்சலாகுது.. அவரை என்னால மாத்தவும் முடியாது திருத்தவும் முடியாது.. அவருக்காக என் இயல்பை மாத்திக்க விரும்பல.. ஒவ்வொரு முறையும் அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது சொல்லும்போது மண்டையே வெடிக்குது .. அந்த டென்ஷனை குறைக்க ஏதாவது மெடிசன்ஸ் இருந்தா குடுங்க அவ்வளவுதான்.." மூச்சு வாங்கினாள் கமலி..

"லிசன் கமலி.." என்று குரலை செருமி கொண்டான் வருண்..

"நீங்க போர்ட்ரேட் பண்ற அளவுக்கு சூரியதேவ் அவ்வளவு கெட்டவன் இல்ல.."

"போர்ட்ரேட் பண்றேனா..?" அவள் கண்கள் சிவந்த நேரம்..

"ஒரு நிமிஷம் நான் சொல்றத முழுசா கேளுங்க..!! மனிதர்களுடைய இயல்பா பழக முடியாத தடுமாற்றம்.. தனிமை.. சிலரை இப்படி கடுமையா மாத்திடுது.. உங்கள மாதிரியே அவங்களுக்கும் ஜாலியா இருக்கணும் சந்தோஷமா வாழனும்னு ஆசை இருக்கும்.. ஆனா ஏதோ ஒன்னு அவங்களை வெளிய வர முடியாதபடிக்கு தடுக்கும்.."

"நீங்க என்ன சொல்ல வரீங்க டாக்டர்..?" விரலால் நெற்றியை தேய்த்தாள்..

"யாருக்காகவும் உங்க சந்தோஷத்தை கெடுத்துக்க வேண்டாம்.. நீங்க எப்படி இருக்கீங்களோ அதே மாதிரி இருங்க.. உங்கள பாத்து சந்தோஷமா எப்படி வாழ்றதுன்னு சூர்ய தேவ் கத்துக்கட்டுமே..!!"

"இதெல்லாம் நடக்கிற காரியமா டாக்டர்.. என்ன பாத்தா அந்த ஆளுக்கு.. சாரி.. அவருக்கு கோபம்தான் வருது.. இந்த உலகத்துல யாருமே சிரிக்க கூடாது சந்தோஷமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவரா இருக்கார் உங்க பிரண்ட்.." தன்னையும் மீறி கோபத்தில் படபடத்தாள் கமலி..

"நீங்க நினைக்கறது தப்பு.. சூர்ய தேவ் உங்களையும் என்னையும் போல இயல்பான மனுஷன் தான்.. படிக்கும்போது கோல்டு மெடலிஸ்ட்.. வேலைன்னு வந்த பிறகு பயங்கரமான வர்க்காலிக்.. அதனால பெருசா அவனுக்கு நண்பர்கள் வட்டம் கிடையாது.. உறவுகளும் பக்கத்துல இல்ல.. அவனோட அப்பாவும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான் இறந்து போனார்.. இந்த மாதிரியான நிலைமையில ஒரு மனுஷன் எப்படி நடந்துக்கணும்னு நினைக்கிறீங்க.."

கமலி அவன் மேற்கொண்டு சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள்..

"உச்சகட்ட தனிமை ஒரு மனுஷனை சைக்கோவாக கூட மாத்திடும்.. பெரும்பாலும் சீரியல் கில்லர்கள் இப்படித்தான் உருவாகறாங்க.. நீங்க மெடிக்கல் பீல்டுல இருக்கீங்க.. உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.. உங்கள மாதிரி கலகலப்பான ஆளுங்க பக்கத்துல இருந்தா சிடுசிடுன்னு இருந்தாலும் மனசுக்குள்ள ரிலாக்ஸா இருப்பான்.."

"கொஞ்சம் கொஞ்சமா அவன் மனசு மாறலாம்.. நம்மள மாதிரி இயல்பான ஒருத்தனா சிரிச்சு பேச ஆரம்பிக்கலாம்.. குறைந்தபட்சம் அடுத்தவங்களை அப்படியே ஏத்துக்கிற அளவுக்காவது அவன் மனசு தயாராக வாய்ப்புண்டு.."

"ஒரு நர்ஸ் நீங்க..!! தனிமையில தவிக்கிற ஒரு நபரை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு உங்களுக்கு தெரியும் இல்லையா..?"

"ஆனா அவர் ஒரு டாக்டர் ஆச்சே..?" அவள் கண்களை விரித்தாள்..

"டாக்டரா இருந்தாலும் அவனும் மனுஷன் தானே.. அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு.. சின்னதா ஒரு சிரிப்பு.. அடிக்கடி சொல்ற ஹாய் பைன்னு அப்பப்போ உங்க இருப்பை உணர்த்திக்கிட்டே இருங்க.. அவன் சீக்கிரம் மாறிடுவான்..‌"

"அவர் எதுக்காக மாறனும்.. அவர் மாறுவதால் எனக்கென்ன லாபம்.. நான் என்னோட பிரச்சனையை தீர்த்துக்கறதுக்காக இங்க வந்தேன்.. அவருக்காக இல்ல..!!"

"கமலி.. சூரிய தேவ் டாக்டர் அப்படிங்கற விஷயத்தை விட்டுட்டு அவனை ஒரு சக மனுஷனா பாருங்க.. இப்படி ஒரு பேஷண்ட் உங்க கிட்ட வந்தா ஒரு செவிலியரா அவனை எப்படி ஹேண்டில் பண்ணுவீங்கன்னு யோசிங்க..!! நான் அவனுக்காக பேசல உங்களுக்காகத்தான் பேசறேன்.. உங்க மன அழுத்தத்தை குறைக்கத்தான் அவன் பிரச்சனையை விளக்கி சொல்லிட்டு இருக்கேன்.. அதுக்காக நீங்க அவன்கிட்ட அன்பை பொழியனும்னு சொல்லல.. அவனையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கன்னு சொல்றேன்.. அவனை இந்த அளவுக்கு வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.. நார்மலா இருங்க.. அவன் எரிச்சலை காட்டினாலும் நீங்க ஒரு ஸ்மைல் பண்றதுல ஒன்னும் குறைஞ்சிட போறது இல்லையே..!! நான் இப்படித்தான்.. என்னை மாத்திக்க போறதில்லன்னு நீங்க அவனுக்கு புரிய வச்சுட்டா அதுக்கப்புறம் அவன் உங்களை தொந்தரவு பண்ண மாட்டான்.."

கமலி அவன் சொன்னதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்..

"மெடிசன்ஸ் எதுவும் தேவையில்லை.. மனசை அமைதியா வச்சுக்கோங்க.. உங்களை நீங்களே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க.. இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை..!! தொல்லையை தரும் ஹவுஸ் ஓனருக்கு எக்ஸ்ட்ராவா இன்னொரு தொல்லையை தந்துட்டு நீங்க பாட்டுக்கு போயிட்டே இருங்க அவ்வளவுதான்.." என்று தோள்களை குலுக்கினான்..

கமலி நிமிர்ந்து நன்றியோடு அவனைப் பார்த்தாள்.. "தேங்க்யூ டாக்டர்.. சொல்யூஷன் தந்திருக்கீங்க பட் இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு தெரியல பாக்கறேன்.."

"நீ டாக்டரை நினைச்சு கவலைப்படக்கூடாது.. அவர்தான் உன்னை நினைச்சு டென்ஷன் ஆகணும்..!!" என்ற முடிவோடு தான் வீட்டுக்கு வந்தாள்..

ஆனால் டாக்டர் சூர்யதேவ் ஏற்கனவே சைக்கோவாகி அவளுக்கு முன்பாகவே வருணிடம் ஓடி வந்த சங்கதியை அவள் அறியவில்லை.. தெரிந்திருந்தால் குத்தாட்டம் போட்டு சந்தோஷப்பட்டிருப்பாளோ என்னவோ..

இதோ அடுத்த நாளே தன் அன்றாட வேலைகளை தொடங்கி விட.. "நீ என்னடி என் வீட்டு வாசல்ல கோலம் போடுறது.." என்பதை வழக்கம்போல கோலத்தை அழித்து சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கிறான் சூர்யதேவ்..

பைப்பை கீழே போட்ட அதிர்வில் பூமி இரண்டாக பிளக்காமல் போனது அதிசயம்..

சன் மியூசிக்கில் பாடலை ஓட விட்டபடி.. காலை சமையலை செய்து முடித்தாள் கமலி..

சிங்காரம் ஊருக்கு செல்வதற்கு முன்.. மாடியேறி வந்து கமலியிடம்.. "டாக்டர் உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டாலும் அவரை கொஞ்சம் பாத்துக்கோமா..!!
வெளியே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்குவார்.. எனக்கு தெரிஞ்ச பொண்ணை சமையலுக்கு வைச்சுட்டு போறேன்னு சொன்னாலும் கேட்கல.. நீ கொஞ்சம் கூடமாட அனுசரனையா இருந்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.." என்றார்

"யாரு..‌ நானு..? சரிதான்.. பாத்துக்கணும் அவ்வளவுதானே.. மாடியிலிருந்து அப்பப்ப அவர எட்டி பார்த்துக்கறேன் போதுமா.. என்னால அவ்வளவுதான் செய்ய முடியும்.." என்று சொல்லி இருவருமாக சிரித்தபோது சிங்காரத்தின் கண்ணோரம் தன் எஜமானரை தனியாக விட்டுச் செல்லும் சோகம் புள்ளியாக தேங்கி நிற்கத்தான் செய்தது..‌

சுடச்சுட இட்லி அவித்து தேங்காய் சட்னியும்.. மிளகாய் கிள்ளி சாம்பார் வைத்த போது.. சிங்காரம் சொல்லிவிட்டு சென்ற.. அவரை கொஞ்சம் பாத்துக்கோ மா.. என்ற வார்த்தை நினைவில் வந்து தொலைக்க..

"ஆமா இவரு அப்படியே சின்ன குழந்தை.. ஆளாளுக்கு இவருக்கு சப்போர்ட் பண்றாங்க..!! விட்டா ஊரையே முழுங்கிடுவார் இந்த ஆளு..!!" என்று உதட்டை சுழித்துக் கொண்ட போதிலும் மனம் டாக்டருக்காக கொஞ்சம் இளகத்தான் செய்தது..

முந்தைய நாள் வருண் அவனைப் பற்றி சொன்னது அவள் மனதை சற்று அசைத்து பார்த்திருந்தது.. தனிமை எத்தனை கொடுமையானது என்பதை அவளும் அறிவாளே..!!

ஒரு செவிலியாக கமலிக்கு பொறுமையும் சேவை மனப்பான்மையும் மிகுதி.. அத்தோடு ஒரு சக மனுஷியாக சூரிய தேவ் பக்கமிருந்து யோசித்துப் பார்க்க துவங்கியிருந்தாள்..

வருண் சூரிய தேவ் பற்றிய பொதுவான விஷயங்களை மட்டும்தான் கமலியிடம் சொல்லி இருந்தான்.. அது கூட குடியிருப்பாளர் வீட்டு உரிமையாளர் என்ற வகையில் இருவரது உறவும் சுமுகமாக செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு..!!

கமலியின் மூலம் அவன் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்ற நப்பாசையும் அதில் ஒளிந்திருந்தது உண்மைதான்.. என்றுமில்லாமல் தன் நண்பன் ஒரு பெண்ணை பற்றி லிஸ்ட் போட்டு குறை சொல்வதெல்லாம் வரலாற்று நிகழ்வு.. அந்த வகையில் வருண் மனதில் கிறுக்குத் தனமாக ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்விட்டதும் உண்மைதான்..

மருத்துவமனைக்கு செல்ல தயாராகிவிட்டாள் கமலி..

வேலைக்கு செல்வதற்கு முன் ஹாட் பாக்சில் சுட சுட இட்லியும் சாம்பாரும் எடுத்து வைத்துவிட்டு.. வேகமாக கீழே இறங்கி வந்தவள் தயக்கத்தோடு சில நொடிகள் நின்று கதவை தட்டினாள்..

ஒரு சில வினாடிகளுக்கு பிறகுதான் கதவு திறக்கப்பட்டது..

இதுவரைக்கும் அந்த வீட்டின் உள்பக்க அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்ததே இல்லை கமலி..

வெளியிலீருந்து பார்த்தால் அந்த கதவின் அளவிற்கு கூடம் மட்டும் தெரியும்.. வெள்ளை நிற சலவை கல்.. சற்று தள்ளி சுவற்றோடு மூன்று படிகட்டுகளும் மாடியின் மரக் கைப்பிடியும்.. இவ்வளவுதான் அவள் கண்களுக்கு தெரிந்த சூரிய தேவ் வீட்டின் உட்புறம் அமைப்பு..

டாக்டர் இல்லாத நேரத்தில் கூட சிங்காரம் வீட்டுக்குள் அழைத்ததில்லை அவளை.. பயந்து நடுங்குவார்.. கமலியும் வீட்டுக்குள் சென்று பார்க்க எண்ணியதில்லை.. மதியாதார் வீட்டை அப்படி என்ன பார்க்க வேண்டியிருக்கிறது.. என தன்மானம் தடுக்கும்..

மாடியில் அவள் போர்ஷனை தாண்டி இன்னொரு புறம் மறுபாதியாக கீழ் வீட்டின் மாடி பகுதி கட்டிடமாக நிற்கும்.. அதாவது வெளிப்புறமாக மாடிப்படிகளில் ஏறி இவள் வீட்டிற்கு செல்லலாம்..

வீட்டிற்குள் இருக்கும் உட்புற மாடிப்படிகளில் ஏறி சூரிய தேவ் வீட்டு மாடி அறைகளுக்கு செல்லலாம்.. வழக்கமான டுப்லெக்ஸ் வீட்டிலிருந்து சற்று வித்தியாசப்பட்ட வடிவமைப்பு.. ஆனால் சூர்யதேவ் மாடி வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்டு இதுவரை அவள் பார்த்ததே இல்லை.. கீழே அந்த கூடம் கூட பெரும்பாலான நேரங்களில் விளக்கில்லாமல் இருளடித்து கிடக்கும்..

கதவு திறக்கப்பட்டு வெளியே வந்தான் சூர்ய‌ தேவ்.. ஃபார்மல் உடையில் அவனும் மருத்துவமனைக்கு செல்ல தயாராக இருந்தான்.. என்ன விஷயம்.. கண்கள் மட்டும் கூர்மையாக பேசின..

நல்ல கம்பீரமான தோற்றம்.. ஆனால் முகம் தான் கனிய மாட்டேன் என்கிறது.. மனதுக்குள் எழுந்த எண்ணங்களை ஓரந்தள்ளி

"இல்ல.. நீங்க சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!! ஆனா உங்களுக்காக டிபன் ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா..?"

"நான் உங்களை கேட்டேனா..? என்கிட்ட இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.." சொல்லிவிட்டு முகத்தில் அறைந்தது போல் கதவை படாரென்று சாத்தினான்..

எவ்வளவு முயன்ற போதிலும் கண்ணீர் விழிதட்டி நிற்க.. கன்னங்கள் வெளுத்து போயிருந்தன..

விழிகளை மூடி திறந்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள் வேகமாக படியேறி சென்று.. தனது கைப்பை உணவு பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்..

"கமலி இன்னைக்கு எமர்ஜென்சி கேஸ்.. டாக்டர் கூட நீ தான் அட்டென்ட் பண்ணனும்..!!" ஷீலா வந்து சொல்ல அரண்டு போனாள் கமலி..

"ஜெனரலா டெலிவரி வார்டில் டாக்டர் கூட சீனியர் ஸ்டாப் தானே நிப்பாங்க..?"

"அதனால என்ன..? நீதான் பக்காவா ட்ரெயின் ஆகியாச்சே..!! என்ன கமலி இப்படி தயங்கற.."

"பயமா இருக்கு மேடம்..!!"

"பயந்தா எப்படி கத்துக்க முடியும்.. நாங்க வேலைக்கு வந்த புதுசுல இந்த மாதிரி புதுசு புதுசா கத்துக்க எங்களுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்காதான்னு ஏங்கியிருக்கோம்.. நீ என்னடான்னா கெடச்ச வாய்ப்பை வேண்டாம்ன்னு தட்டி விடுற..?" கோபமாக கேட்டாள் ஷீலா..

"நீங்க போகலையா மேடம்.."

"ஒரு பேஷண்டுக்கு டி.என்.சி பண்ண வேண்டியதா இருக்கு.. நான் ரேகா மேடம் கூட நிக்கணும்..!! வேற சீனியர்ஸ் யாரும் இல்ல.. நீ தான் போகணும்.. உன்னால முடியலைன்னா நான் டாக்டர் கிட்ட போய் சொல்லிடட்டுமா..?" அவள் தயக்கத்தோடு யோசிப்பதைக் கண்டு ஷீலா இப்படி கேட்க..

"இல்ல வேண்டாம்.. நானே போறேன்.." என்று பிரசவ அறையை நோக்கி நடந்தாள் கமலி..

உள்ளே ஒரு பெண் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.. வயிற்றிலிருந்த சிசு வெளியே வருவேனா என்று அடம் பிடித்தது..

அந்தப் பெண்ணின் அழுகையை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. அவளோடு சேர்த்து இன்னும் ஒரு நர்ஸ் சாந்தி மட்டும் இருந்தார்..

பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை வந்த வலி.. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறையாக குறைந்து.. மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறையாக மாறியது..

"இங்க பாருங்கம்மா.. பேபியோட தல தெரியுது.. அடுத்த முறை பெயின் வரும்போது.. முக்கி குழந்தையை வெளியே தள்ளுங்க.."

"பெயின் வரும்போது நல்லா ஆக்சிஜனை உள்ள இழுத்து சுவாசியுங்க.." என்றான் சூர்யதேவ்..

அடுத்த வலியில் அந்த பெண் முழு விசையோடு குழந்தையை வெளியே தள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள்.. சாந்தி அவள் வயிற்றை முன்பக்கமாக தள்ள.. வெண்ணிற தொப்புள் கொடியும் ரத்த பூச்சுமாய் குழந்தையை வெளியே எடுத்தான் சூரிய தேவ்..

கமலிக்கு கண்கள் கலங்கிவிட்டது..

"வெல்கம் டு அவர் நியூ வேர்ல்ட்.." சிசுவிடம் சந்தோஷமாக சொன்னவளை ஒரு மாதிரியாக பார்த்தான் சூர்ய தேவ்..

பாய் பேபி.. என்று மேற்புறம் நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தவன்.. 12:30.. குழந்தை பிறந்த நேரத்தை சரியாக சொல்ல.. சாந்தி அவன் சொன்னதை குறித்துக் கொண்டாள்..

"உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு..!! எழுந்து உங்க குழந்தையை பாருங்க" என்று மயங்கியிருந்த தாயிடம் சந்தோஷமாக சொல்ல துடித்த உணர்வுகளை அடக்கிக்கொண்டு..

கண்கள் மின்ன பிறந்த சிசுவை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

பல்ப் சிரிஞ்ச்(bulb syringe) மூலம் புதிதாய் பிறந்த பிஞ்சு குழந்தையின் நாசி துவாரங்களை சுத்தப்படுத்தி தடையின்றி சுவாசிக்க வழி செய்து தொப்புள் கொடியை பதமாய் கத்தரிக்க.. தன் குட்டியான ரோஜாப் பூ வாயை அகல திறந்து ஆக்சிஜனை உள்ளிழுக்க அப்படி ஒரு அழுகை..

"அச்சோ என் செல்ல குட்டி.. அப்படி என்ன அழுகை.. இனி உங்க வாழ்க்கை முழுக்க நீங்க சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.." தன்னையும் மறந்து வாயுறைக்குள் அவள் சத்தமாக முணுமுணுக்க.. விழிகளை நிமிர்த்தி கமலியை முறைத்தான் சூர்ய தேவ்..

குழந்தையை தாயின் நெஞ்சின் மீது போட்டுவிட்டு.. பிரசவமான தாயின் பிறப்புறுப்பு பகுதியில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை செய்து கொண்டிருந்தான் மருத்துவன்..

கிட்டத்தட்ட அரைகுறை மயக்கத்திலிருந்த தாயின் மார்பு சூடு தந்த கதகதப்பில் உள்ளங்கையை இறுக மூடிக் கொண்டு கண்களைக்கூட திறக்க முடியாமல்.. உதட்டை மட்டும் லேசாக அசைத்துக் கொண்டிருந்தான் அந்தப் புதிய இளவரசன்..

சாந்தி அந்த பெண்ணின் அடிவயிற்றை அழுத்தி மிச்சமிருந்த கழிவுகளை வெளியே தள்ளிக் கொண்டிருக்க.. கர்ப்பப்பையை சுத்தம் செய்து தையல் போடும் பணியில் ஈடுபட்டான் சூர்ய தேவ்..

"கமலினி.. குழந்தை எடுத்துட்டு போய் வெயிட் செக் பண்ணுங்க.." விழி தாழ்ந்து அவன் வேலையை செய்து கொண்டே சொல்ல.. கமலி அதிர்ந்து போனாள்..

"நா.. நானா..?" அவள் திணறலோடு கேட்க நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் சூர்யதேவ்..

"இல்ல சாந்தி மேடம் பண்ணட்டும்.. நான் இந்த வேலையை பார்க்கறேன்.. அவள் தடுமாற்றத்தை கண்டு முறைத்தவன்.. நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் நீங்க செஞ்சா போதும்" என்றான் அழுத்தமாக..

அப்போதும் அவள் சிலையாக நிற்க..

"கமான்.. டேக் தி பேபி..!! நீங்க எங்க நிக்கிறீங்கன்னு தெரியுதா.. சீரியஸ்னஸ் புரியாம இவ்வளவு அசம்பந்தமா இருக்கீங்க..?" அவன் குரலில் கடுமை கூடியது..

சாந்தி.. "சொன்னதை செய்யேன்மா.." என்ற ரீதியில் சங்கடமாக கமலியை பார்த்தாள்..

"இல்ல சார்.. முதன்முதலில் நான் எப்படி குழந்தையை..!! வேண்டாம் சாந்தி அவங்களே அந்த வேலையை பார்க்கட்டும்.." பிடிவாதமாக நின்றாள் கமலி..

அவன் பார்வை அக்னியாய் சுட்டெரித்தது.. அவள் தரப்பு விளக்கங்களை கேட்க அவன் தயாராக இல்லை..

அந்தப் பக்கம் நகர்ந்து வந்து குழந்தையை கையிலெடுத்தவன்.. எதிர்பாராத வேளையில் அவள் கையில் பிஞ்சு சிசுவை வைத்திருந்தான்..

ஒரு கணம் திகைத்து தேகம் சிலிர்த்து வாயுறையின் மேல் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க அவனைப் பார்த்தாள் கமலி..

"பேபியை கிளீன் பண்ணுங்க.." என்றான் சூர்ய தேவ்..

நெஞ்சுக்குள் பீறிட்டு எழுந்த உணர்வை அடக்க முடியாமல் ரத்த பூச்சோடு கண்களை சிமிட்டி கொண்டிருந்த குழந்தையை இதயக் கூடு ஏறி இறங்க.. உதடு கடித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.. கரங்கள் மிக லேசான பஞ்சு பொதி மேக குவியலான சிசுவின் எடையை தாங்க முடியாமல் நடுங்கின.

"கமலினிஇஇஇ.." அவன் ஓங்கிய குரலில் திடுக்கிட்டு செய்ய வேண்டிய வேலைக்காக ஆயத்தமாகி குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றாள் கமலி..

"ஹவ் இர்ரெஸ்பான்சிபில் ஷீ இஸ்.. ஒரு வேலையும் உருப்படியா செய்யறது இல்ல.. ஆனா வாய் மட்டும் வங்காள விரிகுடா வரைக்கும் பாயுது..!!" எரிச்சலாக புருவங்களை ஏற்றி இறக்கியபடி தனது பணியில் கவனமானான் சூர்ய தேவ்..

தொடரும்..

தொடரும்
அடேயப்பா நல்லவனே அவளுக்காவது வங்காள விரிகுடா தான் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ஆனா உனக்கு உலக கடல் மொத்தமா ஒன்னா சேர்ந்து கொந்தளிச்ச மாதிரி ல பண்ற 🤯🤯🤯🤯🤯🤯மலகொரங்கு மருத்துவனே 😤😤😤😤😤😤😤😤
 
Top