New member
- Joined
- Sep 19, 2023
- Messages
- 15
சபாஷ் கடுவன் பூனை இந்த எபியில் கொஞ்சமா தான் திட்டி இருக்கு.
Next ud Sanaசில வருடங்களுக்கு முன்..
"என்ன.. நீங்க மட்டும் தான் நிக்கிறீங்க.. மத்தவங்க எல்லாம் எங்க போனாங்க.." கையில் குழந்தையோடு அந்த செவிலி பெண் கமலியை விசாரிக்க.. எல்லாரும் கேண்டின் போயிருக்காங்க இப்ப வந்துருவாங்க.." என்றாள் கமலினி..
அஷோக் தங்கைக்கு குழந்தை பிறந்திருக்கிறது.. பிரிந்து போன குடும்பம் இவர்களின் திருமணமான நான்காவது வருடத்தில் ஒன்று சேர்த்திருக்க.. கமலினி அந்த குடும்பத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டாள்..
குடும்பத்துக்குள் நடக்கும் உள்கட்சி பூசல்களை பெரிதாக கருத்தில் கொள்ளாமல் கணவனுக்காக.. அவன் மீது கொண்ட காதலுக்காக அனுசரித்து வாழ பழகி கொண்டிருந்த காலம்..
அஷோக் தங்கை ராகவி கர்ப்பிணியாகி பிறந்த வீட்டிற்கு வந்திருக்க.. கமலினி ராகவியை நெருங்க முடியாதபடிக்கு பார்த்துக் கொண்டாள் அசோக்கின் தாய் மாலினி..
குடிக்க தண்ணீர் கூட கமலினியின் கைப்பட எடுத்துக் கொடுப்பதை மாலினி அனுமதிப்பதில்லை..
"என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்.. ராகவி நீ போய் ரெஸ்ட் எடு.. நைட் பூரா தூங்கல.. பகல்லயாவது கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்ல.." இருவரும் பேசிக் கொண்டிருந்தால் ராகவியை தனியாக பிரித்து அனுப்பி விடுவாள்..
ஒரு கட்டத்தில் "கர்ப்பிணி பொண்ணு அங்க இங்க சுதந்திரமா உலாத்த முடியாத மாதிரி.. இவ என்னத்துக்கு நடுவுல நடுவுல வந்து நிக்கிறா..? ஏதாவது ஒரு மூலையில அடங்கி கிடக்க வேண்டியது தானே..!!" வெளிப்படையாகவே எரிச்சலை கொட்டினாள்..
தாய் பேச்சைக் கேட்டு ராகவியும் கமலியிடம் சரியாக பேசுவதில்லை.. காயப்பட்டு தனியே விடப்பட்ட பறவை.. கணவனிடம் அடைக்கலம் தேடி ஓடி வந்தது..
"அவங்க அந்த காலத்து மனுஷங்க.. அப்படித்தான் ஏதாவது பேசுவாங்க.. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடுமா.. ஏற்கனவே எனக்கு வேலையில டென்ஷன்.. இந்த மாதிரி சில்லறை விஷயங்களை தோள்ல தூக்கி போட்டு சுமக்க முடியாது.. நீதான் இந்த குடும்ப தலைவி.. எல்லாத்தையும் நீ தானே பார்த்துக்கணும்.. கொஞ்சம் பொறுத்து போ கமலி.." அவன் இப்படி சொன்ன பிறகு கமலி இரணங்களை தனக்குள் சுருட்டி கொண்டாள்..
ராகவியின் வளைகாப்பு அன்று அங்கிருந்த பெரியவர்களின் ஆலோசனைப்படி கமலியையும் அமர வைத்து.. வளையல் அணிவித்து நலுங்கு வைத்தனர்..!!
"இவளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் அடிச்சு சொல்லிட்டாரு.. எதுக்கு தேவையில்லாத இந்த மாதிரி சாங்கியம்.." ராகவியின் மாமியாரிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் மாலினி..
ஒப்புக் கொள்ளாத திருமணத்தை நான்கு வருடங்கள் கழித்து.. மகனுக்காக அங்கீகரித்ததாக சொல்லிக் கொண்டாலும் மருமகளோடு எந்த ஆசா பாசமும் இல்லை..
அதிலும் அவள் சம்பந்தப்பட்ட மருத்துவ ரிப்போர்ட் பற்றி அஷோக் தாயிடம் விளக்கமாகச் சொன்ன பிறகு.. மருந்துக்கும் மருமகளிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை..
"நம்ம ஊர்ல எத்தனை பொண்ணுங்க உன்னை கட்டிக்க தவம் இருந்தாங்க.. அத்தனை பேரையும் அலட்சிய படுத்திட்டு.. இவ கிட்ட அப்படி என்ன இருக்குன்னு பெத்தவங்கள எதிர்த்துகிட்டு வந்து கல்யாணம் செஞ்சுக்கிட்ட.."
"அம்மா..?"
"சொந்த பந்தம் குடும்பப் பின்புலம் பணம் வசதி வாய்ப்பு எதுவுமே இல்லாத அனாதையா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிச பெத்து தர முடியாதவளை வச்சு என்ன செய்யப் போறியோ..?"
"என்னம்மா இப்படி பேசுறீங்க.. குழந்தை இல்லன்னா என்ன..? குழந்தை பெத்துக்க ஆயிரம் வழிமுறைகள் உண்டு.. இன்னும் நிறைய டைம் இருக்கு.. பாத்துக்கலாம்.. இப்போதைக்கு எனக்கு அவ குழந்தை அவளுக்கு நான் குழந்தை.." என்று பெற்றவளின் வாயை தற்காலிகமாக அடைத்திருந்தான் அஷோக்..
இந்த நிலையில் தான்.. ராகவி பிரசவ வலி கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்..
காலையிலிருந்து மற்றவர்கள் பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் வெறும் வயிறாய் நல்ல செய்திக்காக காத்திருந்த காரணத்தால் அஷோக் அவர்களை கேண்டின் அழைத்துச் சென்றிருந்தான்..
ராகவிக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை டாக்டர் வந்து சொல்லிவிட்டு செல்ல உடனடியாக அஷோக்கை ஃபோனில் அழைத்து தகவலைச் சொன்னாள் கமலி..
"ராகவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.. இந்த நேரத்துல ஒருத்தர் கூட நிக்காம எல்லாருமா கேன்டீன் போய்ட்டீங்களே..? கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்.. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.." மகிழ்ச்சியோடு படபடத்தாள்..
அந்த நேரத்தில் தான்.. குழந்தையை சுத்தம் செய்து பூந்துவாலையில் சுற்றி.. எதிர்பாராத நேரத்தில் அவள் கையில் வைத்து விட்டு சென்றிருந்தார் அந்த நர்ஸ்..
புத்தம் புதியதாய் பூமிக்குள் கால் வைத்த ரோஜா மொட்டு.. குட்டி பையன் தன் பிஞ்சு விரலை வாயில் வைத்து சப்பிக்கொண்டு கண்களை திறப்பதும் மூடுவதுமாக தன் கையில் மிதந்த பூங்காற்று குமிழியை ஆழ்ந்த மூச்சிழுப்புகளோடு கண்ணிமைக்காமல் பார்த்தாள் கமலி..
தலை முதல் கால் வரை ஏதோ சுகமாய் குறுகுறுக்க கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது.. அன்போடு குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்..
நல்லவர்களுக்காகவே தேர்ந்தெடுத்து வைத்த சோதனை கற்களை குறிபார்த்து எரிவதைப் போல்.. அவள் முத்தமிட்ட அடுத்த கணம் பிள்ளைக்கு மூச்சு திணறல்..
ஒரு கணம் அவள் இதயம்.. துடிப்பை நிறுத்தியது.. சுவாசிக்க மறந்தாள்..
"எ.. என்ன ஆச்சு..? நல்லாத்தானே இருந்தான்.." குரல் நடுங்கியது..
"சி.. சிஸ்டர்.." அவள் அழைத்துக் கொண்டிருந்த நேரம் அஷோக் தன் வீட்டாரோடு காபி பலகாரத்தை முடித்துவிட்டு அவ்விடம் வந்து சேர்ந்திருந்தான்..
அவள் பதட்டத்தையும் கையிலிருந்த குட்டி ஜீவன் வித்தியாசமாக துடிப்பதையும் கண்டு..
"என்ன ஆச்சு?" அவனும் பதட்டத்தோடு கேட்க..
உள்ளிருந்து ஓடி வந்த அந்த நர்ஸ்.. "என்னம்மா ஆச்சு..? குழந்தையை என்ன செஞ்சீங்க..!!" என்றார் பதட்டமும் அவசரமுமாக..
"நான்.. நா.. நா..ன் ஒண்ணுமே செய்யல..!!" கமலி பதில் சொல்ல கூட தெரியாமல் விழிக்க..
அவசரமாக அவள் கையிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினார் அந்த நர்ஸ்..
நர்ஸ் கேட்ட கேள்வியில் எந்த தவறும் இல்லை.. பொதுவாக இம்மாதிரியான சூழ்நிலையில் நடந்ததை தெரிந்து கொள்ள.. சாதாரணமாக கேட்கக்கூடிய கேள்விதான் அது..
சில நேரங்களில் குழந்தையை சார்ந்தவர்கள் சர்க்கரையைத் தருகிறேன் சக்கரை தண்ணியை கலக்கி தருகிறேன் என்று ஏதாவது ஏடாகூடம் செய்து.. பிறந்த பச்சிளங்குழந்தைகளை தங்களையும் அறியாமல் ஆபத்துகளில் இழுத்து வைப்பதுண்டு..
அது போன்ற அனுபவங்களை எதிர்கொண்ட நர்ஸ் அவசரமாக இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு உள்ளே சென்றுவிட..
மாலினிக்கோ கமலினி மீது பெரும்பழி சுமத்த அந்த ஒரு கேள்வி மட்டுமே போதுமானதாக இருந்தது..
"போச்சு.. எல்லாம் போச்சு..!! ஐயோ கடவுளே இப்ப நான் என்ன செய்வேன்.." என்று பெருங்குரலெடுத்து தலையிலடித்துக் கொண்டு அழ..
"அம்மா இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி அழறீங்க.. அமைதியா இருங்க.. பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.." என்று தன் தாயை தேற்றினான் அஷோக்..
"என்னடா ஆகணும்.. இன்னும் என்ன ஆகணுங்கறேன்.. தான் ஒரு குழந்தையை பெத்துக்க முடியாத மலடின்னு இவளுக்கு தெரியுமா இல்லையா.. மொத மொதல்ல குழந்தையை இவ எதுக்குடா வாங்குனா.. இவளோட வயித்தெரிச்சல்.. நம்மளால இப்படி ஒரு குழந்தையை பெத்துக்க முடியலையேங்கற பொறாமை.. எல்லாம் சேர்ந்து என் பேரனை உயிருக்கு போராடற அளவு கொண்டு வந்து விட்டுடுச்சு.."
"அம்மா எதையாவது உளராதீங்க.. கொஞ்சம் அமைதியா இருங்க..!! உங்க பேரனுக்கு ஒன்னும் இல்ல.."
"அட போடா.. உனக்கு வேணா உன் பொண்டாட்டி முக்கியமானவளா இருக்கலாம்.. எனக்கு என் மகளும் என் பேரனும் தான் முக்கியம்..!! குழந்தையை பார்க்க எவ்வளவு சந்தோஷமா ஓடி வந்தேன்.. இப்படி ஆகிடுச்சே.. இவ்வளவு கெட்ட எண்ணத்தை மனசுல வச்சுக்கிட்டு எதுக்காக குழந்தையை வாங்கணும்..!! ஐயோ என் பிள்ளையை காப்பாத்து கடவுளே..!!"
"அம்மாஆஆ.." என்று இழுத்தவன் மனைவியை சங்கடமாக பார்த்தான்..
கண்களில் கண்ணீர் வடிவதை கூட அறியாமல் திக் பிரமை பிடித்தவளாக நின்றிருந்தாள் கமலி..
மாலினி சராமாரியான பழிச் சொற்களோடு புலம்பித் தீர்க்க.. கருங்கல் சிலை நடப்பதை போல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்த கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே வந்து அமர்ந்தாள்..
அதற்குள் ராகவியின் புகுந்த வீட்டு ஆட்களும் வந்துவிட.. மாலினி வாய்விட்டு புலம்புவதை கேட்டுவிட்டு ராகவியின் மாமியார் கமலினியிடம் வந்து நின்றாள்..
"ஏன்மா.. நீயே புத்திர பாக்கியம் இல்லாம வறண்டு போயிருக்க.. யாருக்கும் தொல்லை இல்லாமல் வீட்டில் இருக்கிறத விட்டுட்டு மொத ஆளா கிளம்பி வந்து குழந்தையை கையில வாங்கணுமா நீ.. உன் மூச்சு காத்து பட்டு பிஞ்சு குழந்தைக்கு நோவு வந்திருச்சே..!! உன்னால அந்த குழந்தைக்கு ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா திரும்ப வான்னா வருமா.. உன்னை குத்தி காட்டி உன் குறையை எடுத்துச் சொல்லணுங்கிறது என் நோக்கம் இல்லை..!! அதிக பிரசங்கித்தனமா முன்னாடி வந்து நின்னு குழந்தைக்கு ஆபத்தை உண்டு பண்ணிட்டியே..!! பெரியவங்க ஏதாவது சொன்னா மூடநம்பிக்கை நாங்க எல்லாம் கொடூர மனசு படைச்சவங்கன்னு இஷ்டத்துக்கு சொல்றீங்க.. புதுசா பிறந்த குழந்தையை தொட்டுப் பார்க்க நமக்கென்ன அருகதை இருக்குன்னு உனக்கே தோண வேணாமா..!!" கற்சிலையாய் அமர்ந்திருந்தவளை ஈவு இரக்கமில்லாமல் வார்த்தைகளால் வலிக்க வலிக்க துண்டாடி விட்டுப் போனாள் ராகவியின் மாமியார்..
"குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை..!! பிறந்த குழந்தை சரியா அழல.. அதனால வந்த மூச்சு திணறல்.. மத்தபடி பேபிக்கு பயப்படும்படியா ஒன்னும் இல்ல.. குழந்தை நல்லா இருக்கு.. ஒவ்வொருத்தரா போய் பாருங்க.." டாக்டர் சொல்லிவிட்டு செல்ல.. ராகவியின் கணவன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தான்..
அஷோக் ராகவியிடம் வந்தான்..
"அவங்க பேசுறதை எல்லாம் மனசுல வச்சுகாதே கமலி..!! குழந்தை இப்படி ஆனதுல டென்ஷன்.. பதட்டத்துல என்ன பேசுறோம்ன்னே தெரியாம.."
"நான் வீட்டுக்கு போகணுமா அஷு.. எனக்குத் தலை வலிக்குது.. உணர்ச்சி துடைத்து அவளிடமிருந்து வந்தன வார்த்தைகள்..
"சரி வா நான் உன்னை வீட்டுல கொண்டு போய் விடுறேன்..!!"
"வேண்டாம்.. நீங்க இங்க இருக்கனும்.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கறேன்.." அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்.. ஜடம் போல் எழுந்து நடந்தவள் எப்படி வீடு போய் சேர்ந்தாளோ தெரியவில்லை..
"ஆஆஆங்.." குட்டியான அழுகையில் ஒரு பக்கமாய் ஓடிக்கொண்டிருந்த நினைவுகள் முற்றிலுமாக துடைக்கப்பட்டு.. அந்த மழலை சத்தம் மட்டுமே மனதை நிறைத்திருக்க.. தலை தாழ்ந்து சூர்ய தேவ் தன்னிடம் தந்த பிள்ளையை பார்த்தாள் கமலி..
குழந்தையை குளிப்பாட்டி பூந்துவாலையில் சுற்றி தன் கையில் வைத்திருந்தாள்..
அன்றைய நாளின் சம்பவங்கள் சிறு துளையிலிருந்து இருந்து குபுகுபுவென்று வெளிப்பட நீர் திரளாக அவள் மனதோடு முட்டி மோத.. தன்னையும் அறியாமல் தொற்றிக் கொண்ட பயத்தில் கைகள் நடுங்கியது..
"நீ என் ராஜா குட்டி..!! இந்த உலகத்தை ஆளப் பிறந்தவன்.. உனக்கு ஒன்னும் ஆகாது.. சகல ஆரோக்கியத்தோடு நீ சந்தோஷமாய் இருப்ப..!!" வாய் விட்டு சொன்னபடி குழந்தையை முத்தமிட துடித்தவள்.. அனாவசிய முத்தங்கள் குழந்தைக்கு இன்பெக்ஷனை தரலாம் என்று செவிலியருக்கே உண்டான உள்ளுணர்வோடு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
"என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க..!! குழந்தையை அட்டெண்டர் கிட்ட குடுங்க.." கணீர் குரலில் அவன் பக்கம் திரும்பினாள் கமலி.. அவள் கண்கள் கலங்கி போயிருந்தன..
புருவங்கள் இடுங்கி அவள் விழிகளை பார்த்தவன் அடுத்த கணம் அலட்சியமாக உதடு வளைத்தான்..
கையுறையை கழட்டி குப்பை கூடையில் போட்டபடி..
"உங்க சர்டிபிகேட் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாத்தையும் ஒரு முறை செக் பண்ணனும்னு நினைக்கறேன்.. நீங்க ஒரு ப்ரொபஷனல் நர்ஸ்தானான்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துடுது.." என்று கடுகடுத்தபடி அங்கிருந்து நகர்ந்திருந்தான்..
ஆண் குழந்தை பிறந்திருப்பதாக உறவினர்களிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த காரணத்தால்.. ஆவலோடு பிள்ளையை பார்க்க தவித்து நின்று கொண்டிருந்த.. அந்தப் பெண்ணின் கணவன் குழந்தையின் தகப்பன் கையில்.. பூக்குவியலை வைத்தாள் கமலினி..
சிசுவை கையில் வாங்க தெரியாமல் லேசான திணறலோடும் நன்றி உணர்வோடும் கமலியை பார்த்தான் அவன்..
அந்த பார்வையில்.. சேர்த்து வைத்திருந்த ரணங்களில் இதமாக குளிர்ச்சி பரவியதாக உணர்ந்தாள் அவள்..
புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தாள்..
சுடு தண்ணீர் மூலம் அந்த பெண்ணை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் சாந்தி..
ஆயாம்மா சுத்தப்படுத்திய கழிவு மிச்சங்களை ஒரு டிரேயில் வாரி போட்டுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்..
"கமலி.. இவங்க அட்டெண்டர் கிட்ட இருந்து ஒரு காட்டன் நைட்டி வாங்கிட்டு வா.. டிரஸ் சேஞ்ச் பண்ணனும்..!!" சாந்தி வேலையினூடே சொல்லியதில்.. வெளியே வந்தாள் அவள்..
"டிரஸ் சேஞ்ச் பண்ணனும்.. தளர்வா காட்டன் நைட்டி கொண்டு வந்திருக்கீங்களா..?" என்று கேட்க விவரம் புரியாத அந்த பெண்ணின் கணவன் புத்தம்புதியதாய் வாங்கி வைத்திருந்த நைட்டியை அவளிடம் நீட்டினான்..
"என்னங்க புதுசு கொண்டு வந்திருக்கீங்க.. இந்த நேரத்துல இதை உடுத்திக்க முடியாதே..!! குழந்தைக்கும் அலர்ஜியாகும்.. ஏற்கனவே உடுத்தி மொரமொறப்பு இல்லாம.. சுத்தமா உலர்த்தி வச்ச மென்மையான உடுப்பு எதுவும் இல்லையா..?" அவள் கேட்டதில் சற்று யோசித்தவனாய்..
"ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்றீங்களா.. பக்கத்துலதான் வீடு.. கார்ல போய் உடனே எடுத்துட்டு வந்துடறேன்.." என்றான் அவன்..
"சீக்கிரம் போயிட்டு வாங்க.. ரொம்ப நேரம் அவங்களை அப்படியே வச்சிருக்க முடியாது.. இன்பெக்ஷன் ஆகிடும்.." என்று அனுமதி தந்த கணம் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு உறவிடம் தன் பிள்ளையை தந்துவிட்டு காரிடோரை நோக்கி ஓடினான் அவன்..
"கமலி உன்னை டாக்டர் கூப்பிடுறார்.." விஜயலட்சுமி வந்து அழைத்துவிட்டு செல்ல..
கலவரத்தோடு இழுத்து மூச்சு விட்டவள் உள்ளே சென்று சாந்தியிடம் சொல்லிவிட்டு சூர்ய தேவ் அறையை நோக்கி நடந்தாள்..
அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்
இருக்கையில் அமர்ந்து தன் இடக்கையின் இரு விரல்களை இரு தாடைகளிலும் பதித்த படி அவளை தீர்க்கமாக பார்த்திருந்தான் சூர்யதேவ்.. இரண்டு மூன்று நிமிடங்களாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை..
கண்களை மூடி திறந்து நீண்ட மூச்சை இழுத்து விட்டவள்.. "சாரி சார் நான் அப்படி செஞ்சது தப்புதான்.. கடமையில நான் சரியா இருந்திருக்கணும்.. ஆனா என்னோட தடுமாற்றத்திற்கு காரணம் இருக்கு.." கமலி இடைவெளி விட்டு நிறுத்தினாள்..
கன்னத்திலிருந்து கையை எடுத்துவிட்டு.. மேற்கொண்டு சொல் என்பதைப் போல் நிமிர்ந்து அமர்ந்தான் சூர்ய தேவ்..
"பிறந்த குழந்தையை முதன் முதலா நான் தொட்டா அந்த குழந்தைக்கு ஆபத்து வரும்னு என்னை சுத்தி இருக்கிறவங்க குற்றம் சுமத்தியதுண்டு.. ஏற்கனவே என் வாழ்க்கையில் அப்படி ஒரு ஜீரணிக்க முடியாத சம்பவம் நடந்திருக்கு.. என்னால் அந்த புது உயிருக்கு எந்த ஆபத்து வந்துடக்கூடாதுன்னு தான்..!!
"கமலினி.." சூர்யதேவ் அவள் பேச்சை இடைவெட்ட நிமிர்ந்து பார்த்தாள் அவள்..
"நீங்க என்ன மாந்திரீகம் செய்கிற மந்திரவாதியா..?"
"டாக்டர்..?"
"பேபியை கையில தூக்கினதும் ஜூ மந்தர காளி ன்னு ஏதாவது மந்திரம் போட்டு.. குழந்தைகளோட உயிரை உறிஞ்சி எடுத்துக்கற சூனியக்காரியா..?"
"ஆங்.." என விழித்தாள் கமலி..
"அபத்தமா தெரியுது இல்ல.. மெடிக்கல் ஃபீல்டுல இருக்கிற ஒரு நர்ஸ் நீங்க சொல்லுறதும் எனக்கு அப்படி தான் தெரியுது..!! யூனிஃபார்ம் போட்டுக்கும்போதே உங்களுக்குள்ள இருக்கிற தேவையில்லாத நெகட்டிவ் எண்ணங்களையும் மூடநம்பிக்கைகளையும் எடுத்து வெளியே வீசி எறிஞ்சிடனும்.. ஏன் ட்ரெய்னிங்கில் உங்களுக்கு சொல்லித் தரலையா..?" என்றான் கடுமையான குரலில்..
"புது உயிரை இந்த உலகத்துக்கு கொண்டு வரணும்..
தாயோட உயிரை எந்த பாதிப்பும் இல்லாம காப்பாத்தணும்..
தாய்க்கும் சேய்க்கும் தேவையான மருத்துவ உதவிகளை செய்யனும்..
ஹாஸ்பிடல்ல இருக்கிற வரைக்கும் அவங்க நம்மளோ ரெஸ்பான்சிபிலிட்டி.. கண்ணுங் கருத்துமா அவங்கள பாத்துக்கணும்"
"இது.. இது மட்டும்தான் உங்க நோக்கமா இருக்கணும்.. தேவையில்லாத முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளுக்கும் சென்டிமென்ட்டல் பேத்தல்களுக்கும் இங்கே இடமில்லை.."
கமலி பேச வார்த்தைகளின்றி அமைதியாக நின்றிருந்தாள்..
கொஞ்சம் கூட கனிவில்லாத கடுகடுப்பான அந்த வார்த்தைகள்.. அவளுக்குள் துளியளவு ஆறுதல் தராத அந்த வார்த்தைகள்.. ஆனால் சாமரமாய் அவள் நெஞ்சை சிலிர்க்க வைப்பது ஏனோ..!!
"ஓ மை காட்..!! உங்கள மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை.. மத்தவங்களுக்கு அறிவுரை சொல்ற இடத்துல இருக்கீங்க.. நீங்களே மனசை போட்டு குழப்பிக்கிட்டு இப்படி முட்டாள்தனமா பின் வாங்கினா எப்படி.. தைரியமா தன்னம்பிக்கையோடு நோயாளிகளை எதிர்கொள்ள கூடிய ஒரு ஸ்டாஃப் தான் எனக்கு தேவை.. உங்களை வைச்சிக்கிட்டு என்ன பண்ண போறேன்னு எனக்கு ஒன்னும் புரியல..!!" என்றுவிட்டு டென்ஷனோடு உஃப் என்று ஊதினான்..
கமலி விழி தாழ்ந்தாள்..
'லுக் அட் மீ.."
கணீர் குரலில் லேசாக திடுக்கிட்டு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் கமலி..
"ஒவ்வொரு முறையும் இப்படி கூப்பிட்டு வச்சு அட்வைஸ் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.. அது என்னோட வேலையும் இல்ல.. இதுதான் லாஸ்ட் வார்னிங்.. பொறுப்பை உணர்ந்து ஒழுங்கா வேலை செய்யுங்க.. யூ மே கோ நவ்.." என்றான்..
அமைதியாக அங்கிருந்து வெளியேறினாள் கமலி..
"சிஸ்டர்.. டிரஸ் எடுத்துட்டு வந்துட்டேன்.." ஒரு பாலிதீன் கவரை அவளிடம் நீட்டினான் சற்று நேரத்திற்கு முன்பாக பிரசவமான பெண்ணின் கணவன்..
அவன் நீட்டிய கவரை வாங்கிக் கொண்டவள்.. தெளிவான முகத்தோடு அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள்..
அந்த புன்னகையின் அர்த்தம் புரியாது அவனும் பதிலுக்கு புன்னகைத்து வைத்தான்..
எந்த நிலையிலும் என் தனிப்பட்ட நிலையை எண்ணி பின்வாங்க வேண்டிய அவசியமே இல்லை.. கடமை என்னை அழைக்கிறது.. எதையும் முன்னெடுத்து பணியாற்ற வேண்டியவள் நான்.. என்ற கர்வத்தோடு நிமிர்ந்து நடந்தாள் கமலி..
தொடரும்..
அடா அடா என்னவொரு அட்வைஸ் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மண்டகசாயம் மருத்துவர் வாயிலருந்து மணி மணியா வார்த்தைகள் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஆனா ஒன்னு கமலி டன்ஷன் ஃப்ரி அண்ணாச்சி மொமண்ட் 🤷♀️🤷♀️🤷♀️🤷♀️சில வருடங்களுக்கு முன்..