- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
ஜுராசிக் வேர்ல்ட் ரிபர்த் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று குழந்தைகள் வேண்டுகோள் வைக்க..! "வருண் வரட்டும் பொறுங்கடா அவன் வந்து கூட்டிட்டு போவான்" என்று பெரியவர்கள் எத்தனை வலியுறுத்தி பார்த்தும் சின்னதுகள் பொறுமையில்லாமல் அடம்பிடிக்க ஆரம்பித்தன..
தொல்லை தாங்காமல் வருணுக்கு போனில் அழைத்து கேட்டபோது.. "சரிப்பா நான் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றேன்.. நீங்க போயிட்டு வந்துடுங்க.. என்னை எதிர்பார்க்க வேண்டாம் ஏதாவது அவசரம்னா கூப்பிடுங்க.. அப்புறம் திலோத்தமா வர்ராளா..?" சற்று தயக்கத்தோடுதான் கேட்டான்..
"ஆமாடா அவ வராமல் எப்படி? எல்லாரும் தான் போறோம்..!" ராஜேந்திரன் இயல்பாகச் சொல்ல..
"என்ன? அவளும் கூட வர்றாளா.. நம்ப முடியலையே" உள்ளூர நினைத்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் "சரிப்பா நான் டிக்கெட் புக் பண்ணிட்டு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்புறேன்" என்று போனை வைத்து விட்டான்..
இங்கே சாரதா திலோத்தமாவை தங்களோடு அழைத்துச் செல்ல அத்தனை மெனக்கெட வேண்டிதாய் போனது..!
"நான் வரல அத்தை.. வெயில்ல போனா எனக்கு தலைவலி வந்துடும். நீங்க போயிட்டு வாங்களேன்.. நான் வீட்டிலேயே இருக்கேன்.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.."
"என்னடா வெயிலு.. கார்ல போயிட்டு கார்ல வரப் போறோம்.. ஏசி கார்.. தியேட்டருக்குள்ளேயும் ஏசி அப்புறம் என்ன..?
"ஆமா உங்களுக்கென்ன தெரியும்.. நச நசன்னு காக்கா கூட்டமாட்டம் உங்க குடும்பத்தோட பழகற மாதிரி நடிக்கிறதே கடுப்புதான்.. பேசணும் சிரிக்கணும்.. அதுவும் அந்த குண்டம்மா.. அவ நான்ஸ்டாப்பா பேசற பேச்சுக்கெல்லாம் தலைய தலைய ஆட்டணும்.. கூடவே அந்த குட்டிச்சாத்தானுங்க.. அதுங்க பண்ற அலப்பறையை தாங்கிக்கிட்டு பல்ல பல்ல காட்டணும்.. நடுவுல அத்தை மாமானு வேற இளிச்சு வைக்கணும்..! என் கஷ்டம் எனக்குதானே தெரியும்.." மனதுக்குள் நறநறத்தாள்..
"இங்க பாருமா என் பொண்ணு வெண்மதி வந்ததிலிருந்து நீ ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கற.. என்னவோ உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ சரி இல்லைன்னு தெரியுது.."
"அய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை.. நான் இப்படி தனியா இருந்தே பழக்கப்பட்டுட்டேன்.. என் குணம் அப்படி.. அதான் அவங்கள பாத்து சகஜமா பேச முடியல.. அதுவுமில்லாம நீங்க வேற எப்பவும் குழந்தையை பத்தியே பேசிட்டே இருப்பீங்க.. எனக்கு சங்கடமா இருக்கும்.. அதனாலதான் வெளியே வர்றதில்லை.. மத்தபடி அண்ணிய எனக்கு ரொம்பவே பிடிக்கும்.." இறுதியில் பொய்சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்..
குழந்தையை பத்தி விடாம கேள்வி கேப்பீங்க என்றதும் சாரதாவிற்கு சுருக்கென ஆனது..!
"நீ சொல்றது புரியுதுமா.. ஆனா நீ இப்படி தனியாவே இருந்தா வீட்டுக்கு வந்தவ என்ன நினைப்பா சொல்லு.. அதுவுமில்லாம வருணோட மனசு ரொம்ப கஷ்டப்படும் இல்லையா.. ஏற்கனவே வருணுக்கு நீ சந்தோஷமா இருக்கியோ இல்லையோன்னு ரொம்ப கவலை.."
"ஆமா உங்க புள்ளைக்கு என்னை பத்தி ரொம்ப கவலை தான்..!"
"என்னடாம்மா யோசிக்கற..?"
"அ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை.. நான் வரேன்.. நீங்க போங்க.. ஒரு அஞ்சு நிமிஷத்துல புடவையை மாத்திட்டு வந்துடறேன்..!" என்றவள் சாரதா போன பிறகு தலையிலடித்துக் கொண்டு.. "ஐயோ எத்தனை நாள் இப்படி இதுங்களோட தொல்லையை சகிச்சுகிறதோ தெரியலையே..! இந்த விசா சீக்கிரம் கிடைச்சதுன்னா இதுங்ககிட்டருந்து எனக்கு விடுதலை கிடைக்கும்.. மறுபடி வருண்கிட்ட பேசனும்" என்றவாறு தலையை உலுக்கியபடி அலமாரியிலிருந்து புடவையை எடுத்தாள்..
திரைப்படம் பார்த்துவிட்டு அனைவருமாக வெளியிலேயே உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம் என்று இந்த உணவகத்திற்கு வந்து இப்படி வசமாக தேம்பாவணியின் கையில் சிக்கிக்கொண்டனர்..!
"ஏங்க இந்த பொண்ணு யாரு..?"
சாரதா தன் கணவனின் காதை கடித்தாள்..
"தெரியலையே.. அதான் உங்கள நானும் பார்த்ததில்லைன்னு அந்த பிள்ளையே சொல்லிடுச்சே..!"
"அப்புறம் எதுக்காக இங்க உக்காந்துட்டு இருக்காளாம்.. எழுந்து போக சொல்லுங்க..!"
"அதெப்படி.. சிரிச்சுகிட்டே வந்து உட்கார்ந்திருக்கிற பிள்ளையை எழுந்து போன்னு முகத்தில அடிச்சாப்ல சொல்ல முடியும்.. பாவம் அந்த பொண்ணு வாடிப் போய்டாது..!"
"இந்த பொண்ணு ரொம்ப வாய் துடுக்கா பேசுது எனக்கு பிடிக்கல..!"
"ஆமா அவதான் என்னை அழகா இருக்கேன்னு சொல்லிட்டாள்ல.. அதான் உனக்கு பொறாமை..!"
சாரதா மேற்கொண்டு ஏதோ சொல்ல வர..
"ரெண்டு பேரும் என்ன பேசிக்கறீங்க அங்கிள்..!" என்று இடையில் நுழைந்தாள் தேம்பா..
"அது ஒன்னும் இல்லமா.. ஆன்ட்டிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்..! நீ பாக்க மகாலஷ்மி மாதிரி இருக்கியாம்.. அதைத்தான் சொன்னாங்க..!" என்று சிரித்துக்கொண்டே ராஜேந்திரன் சமாளிக்க..
"ஓஓஓ.. அப்படியா ஆன்ட்டி.." கண்களை விரித்து சாரதாவை பார்த்தாள்..
"ஆ.. ஆமா.. ரொம்ப அழகா இருக்க.." என்று ராஜேந்திரனை முறைத்தாலும் எதிரில் அமர்ந்திருந்த சிறு பெண் பேரழகுதான் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை அவளுக்கு..
"நீங்க பேச மாட்டீங்களா..?" அடுத்த கேள்வி வெண்மதியிடம்..
"நான் சாப்பிடும்போது மட்டும்தான் வாயை திறப்பேன்.."
"நீங்க அக்கா..!" என்ற திலோத்தமாவை பார்க்க அவளோ தேம்பாவணியை பார்க்காதது போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்..
"அவங்க சாப்பிடக்கூட வாய திறக்க மாட்டாங்க..!" உள்குத்து வைத்து வெண்மதி சொன்ன பதிலில் தேம்பாவணி சிரித்து விட்டாள்..!
அதில் திலோத்தமாவிற்கு கோபம்..
"என்ன அண்ணி.. முன்ன பின்ன தெரியாதவங்க முன்னாடி என்னை கிண்டல் பண்றீங்களா..!"
"ஐயோ நான் கிண்டல் பண்ணலம்மா.. பேச்சு வாக்குல சொல்லிட்டேன்..! மன்னிச்சுக்க தாயி.." வெண்மதி பவ்யமாக பேசிய தோரணை மரியாதையா அல்லது கேலியா என தெரியாமல் கண்களை சுருக்கினாள் திலோத்தமா..
"ஹாய் குட்டீஸ்..!"
என்றதும் பொம்மை போலிருக்கும் பெண் எப்போது தன்னிடம் பேசுவாள் என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிறுசுகள் ரெண்டும் உற்சாகமாக கையசைத்தன..
"இங்க வர்றீங்களா..!" வாயை மட்டும் அசைத்து பக்கத்து இருக்கையை காண்பித்து கேட்க..
இருவருமே ஒரு சேர தாயை பார்த்தனர்..
"மூடிக்கிட்டு ஒழுங்கா ரெண்டு பேரும் இங்கேயே உட்காருங்க..!" வெண்மதி பற்களுக்குள் மிரட்டியதில்..
"வேண்டாம்" என்று தலையசைத்தான் சுகுனேஷ்..!
"என்ன..! எல்லாரும் அப்படியே உட்கார்ந்துட்டு இருக்கீங்க ஹோட்டலுக்கு வர்றது சாப்பிடத்தானே.. ஏதாவது ஆர்டர் பண்ணலாமே.." மெனு கார்டை எடுத்து வெய்ட்டரை அழைத்து தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தாள் தேம்பா..
தயிர் சாதத்தை பார்சல் செய்து தந்த அதே வெயிட்டர் இப்போது தேம்பாவணி வேறு இருக்கையில் மாறி அமர்ந்திருப்பதை வினோதமாக பார்த்தான்..
"எனக்கு ஒரு வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் ப்ரை, கோபி மஞ்சூரியன்.. அப்புறம் ஒரு ஃபலூடா..உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க.." மெனு கார்டை அவர்கள் பக்கம் தள்ளி வைத்துவிட்டு கையை கட்டி அமர்ந்து கொள்ள..
"என்னம்மா இந்த பொண்ணு ரொம்ப ஓவரா பேசுது..! ஏதாவது விவகாரமா இருக்க போகுது.. எழுப்பி அனுப்பி விடுங்க.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட நமக்கென்ன பேச்சு..!" அம்மாவிடம் ரகசியமாகச் சொன்னாள் வெண்மதி..
ராஜேந்திரன் மெனுகார்டை வாங்கி ஒவ்வொருவரிடமும் கேட்டு அவர்களுக்கு தேவையானதை வெயிட்டரிடம் ஆர்டர் செய்தார்..
"சாரி அங்கிள்.. லஞ்ச் பாக்ஸ் வீட்டிலேயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன்.. காலேஜ் கேண்டின்ல சாப்பாடு நல்லாவே இருக்காது.. அதனாலதான் வெளியே ஹோட்டலுக்கு வந்தேன்.. தனியா உக்காந்து சாப்பிட ஒரு மாதிரி இருந்துச்சு..! மத்தவங்க கூட போய் உட்கார பயம். நீங்க ஃபேமிலியா இருந்தீங்க.. சேஃபா தோணுச்சு.. அதனாலதான் இங்க வந்து உட்கார்ந்துட்டேன்.. உங்களுக்கு நான் இங்க உட்கார்ந்தது பிடிக்கலைன்னா சொல்லுங்க.. எழுந்து போய்டறேன்..!" தேம்பாவணி எழுந்திருப்பதைப் போல் கைகளை மட்டும் தான் ஊன்றினாள்..
"அட அதனால என்னமா.. பரவாயில்ல இங்கேயே சாப்பிடு.. நீ சாப்பிட போறதுக்கு நீ பணம் கொடுக்க போற.. எங்களுக்கு நாங்க கொடுத்துக்க போறோம். கூட உட்கார்ந்து சாப்பிடறதால என்ன ஆகிட போகுது..!" ராஜேந்திரன் சிரித்துக்கொண்டே சொல்ல..
"கிழிஞ்சது..!" தேம்பாவணியின் முகம் அஷ்ட கோணலாய் மாறியது..
முதலில் தேம்பாவணிக்குத்தான் அவள் ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது..
"அங்கிள் நீங்க கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப் பாருங்களேன்.."
"இல்ல பரவால்ல இருக்கட்டும் வேண்டாம்.." இராஜேந்திரன் திணறினார்..
"சாப்பிடுங்க அங்கிள்.. ஒரு ஸ்பூன் சாப்பிடறதுல என்ன ஆகிட போகுது.." அவள் நகர்த்தி வைக்க.. சங்கோஜத்துடன் ஒரு ஸ்பூன் உணவை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார் ராஜேந்திரன்..
"ஆன்ட்டி நீங்க..?"
"எனக்கு வேண்டாம்மா..! நீ சாப்பிடு.. இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொறிச்சா பசி போயிடும்.." சாரதா நாசுக்காக மறுத்துவிட்டார்..
தேம்பாவணி கேட்பதற்கு முன் "எங்களுக்கும் வேண்டாம் நாங்க ஆர்டர் செஞ்சது வரட்டும்.. சாப்பிட்டுக்கறோம்" என்று வெண்மதி செய்த அபிநயத்தில்..
"என்னக்கா தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டறீங்க..!" தோள்களை குலுக்கி சிரித்துக் கொண்டாள் தேம்பாவணி..
அரக்க பறக்க சுடச்சுட உணவை வாயில் திணித்துக் கொண்டு கையை உதட்டுக்கு நேரே வைத்து விசிறிக்கொள்ள..
"என்னம்மா இந்த பொண்ணு பஞ்சத்துக்கு செத்த மாதிரி சாப்பிடுறா.. பாக்க டீசண்டா இருக்கா..!" வெண்மதி அம்மாவிடம் ரகசியமாக கமெண்ட் அடித்தாள்..
திலோத்தமாவோ புருவங்களை உயர்த்தி ஒரு சலிப்புடன் முகத்தை திருப்பி கொண்டாள்..
"பொறுமையா சாப்பிடுமா..! இந்தா தண்ணி.." ராஜேந்திரன் தண்ணீர் குவளையை அவள் பக்கம் நகர்த்தி வைத்தார்..
"பயங்கர பசி..!" என்று விட்டு தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தாள்..
அதற்குள் மற்றவர்களுக்கும் உணவு வந்துவிட.. ஒவ்வொருவரும் தட்டில் பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தனர்..
மனைவிக்கு தேவையானதை எடுத்து தந்தார் ராஜேந்திரன்..!
"வெண்மதி இந்தா பெப்பர் சிக்கன்..! பட்டர் நான் ஆர்டர் பண்ணவா..?"
"நாட்டுக்கோழி ரோஸ்ட்.. பொண்ணுக்கு எடுத்து வைடி..!" ராஜேந்திரன் மகளுக்கு தேவையானதை எடுத்துக் கொடுக்கச் சொல்லி சாரதாவை நச்சரிக்க இந்த பக்கம் வெண்மதியோ..
"அப்பா வஞ்சிரம் ஃப்ரை..! ஆர்டர் பண்ணவா.. உங்களுக்கு பிடிக்குமே.. அவ்வளவு ஆய்லியா இருக்காதுன்னு நினைக்கிறேன்.. டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்.."
"அப்பா என்னப்பா படம் இது..! இதுக்கு டூரிஸ்ட் ஃபேமிலி போயிருக்கலாம்.. ஒன்னுமே புரியல.. பசங்களுக்காக பார்க்க வேண்டியதா போச்சு.."
"ஞாபகம் இருக்காப்பா.. சின்ன வயசுல என்னை நிவிய.. சின்னவனை.. இந்த படத்தோட ஃபஸ்ட் பார்ட் பாக்க கூட்டிட்டு போனீங்களே..! அப்ப ஜாலியா இருந்தது.. ஆனா இப்ப அந்த என்ஜாய்மென்ட் இல்ல.."
"நானும் தம்பியும் எத்தனை கேள்வி கேட்டோம் உங்ககிட்ட..!
நிவி தியேட்டர்ல தொலைஞ்சு போயிட்டா.. அவள தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள எல்லாரும் ஒரு வழியாகிட்டோம் நியாபகம் இருக்காப்பா..!"
"சாப்பிடறதுக்கு மட்டும் தான் வாய் திறப்பேன்" என்று பேச்சு நடுவேதான் அவ்வப்போது உணவைக் கொறித்தாள்..
தந்தை மகளுக்கான சம்பாஷனையை கன்னத்தில் கை வைத்து உணவை உண்டபடி சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
"இவங்க ரெண்டு பேருமே உங்க பொண்ணா அங்கிள்.."
"இவ என்னோட பொண்ணு.. அவ என் மருமக..!"
"பொண்ணு மேல ரொம்ப பாசமா இருக்கீங்க.. உங்க ரெண்டு பேரோட பான்டிங் பாக்கவே ரொம்ப அழகா இருக்கு..!"
"தேங்க்ஸ் மா..! என் பொண்ணு மேல நான் பாசம் வைக்காம எப்படி..? ஏன் உன் அப்பா கிட்ட நீ இப்படி பேச மாட்டியா..!" ஸ்பூனில் உணவை அள்ளி வாயில் திணித்தபடியே கேட்டார்..
"என்னது பேச மாட்டேன்னாவா..? நானும் என் டாடியும் பேச ஆரம்பிச்சா சோறு தண்ணியில்லாம பேசிக்கிட்டே இருப்போம்.. நீங்க இந்த படத்தை இப்பதானே பார்த்தீங்க.. நாங்க போன வாரமே பாத்துட்டோம்.. பொதுவாக நாங்க தியேட்டர் போறதெல்லாம் ரொம்ப ரேர் தான்.. ஹாலிடே டைம்ல வீட்ல உக்காந்து ஸ்னாக்ஸோட சேர்த்து இன்வெஸ்டிகேஷன் திரில்லர் மூவி பார்க்கற என்ஜாய்மென்ட் இருக்கே அது வேற லெவல் தெரியுமா..!"
"நானும் அப்பாவும் நிறைய வாட்டி இந்த ஹோட்டலுக்கு வந்திருக்கோம்.. நீங்க உங்க பொண்ணுக்கு பரிமாறத்தானே செஞ்சீங்க.. ஆனா என் அப்பா எனக்கு ஊட்டியே விடுவாரு..! வீட்ல கூட அப்பா தான் சமைச்சு தருவார்.. அப்.. பா..பானாலே.. ஒரு தனி எமோஷன் தான்.. இல்ல..? ச்சே.. காத்தடிக்குதுல.. பாருங்க பேசிட்டு இருக்கும்போது கண்ணுல தூசி விழுந்துடுச்சு." என கண்களை துடைத்துக் கொண்டாள் தேம்பாவணி..
"அம்மா நம்ம அப்பாவை விட இவங்கப்பா இவளை ரொம்ப நல்லா பாத்துக்கறாராம்.. ஓவரா பெருமை பீத்திக்கறா.. ஊர்ல உலகத்துல இல்லாத பொல்லாத அப்பா.." சாரதாவிடம் உதட்டை சுழித்தாள் வெண்மதி..!
"ஆமா இப்ப மட்டும் ஏன் தனியா வந்திருக்க.. காலேஜ்ல இருந்து உன்கூட பிரண்ட்ஸ் யாரும் வரலையா.." அதிசயமாக வாயை திறந்தாள் திலோத்தமா..
"அ.. அது.. எனக்கு ஏகப்பட்ட பிரண்ட்ஸ் இருக்காங்க..! அவங்களையெல்லாம் இங்க கூட்டிட்டு வந்தா ஹோட்டலே ஒரு வழியாகிடும்..! அதுவுமில்லாம அத்தனை பேரும் காலேஜ் கட்டடிச்சிட்டு வந்தா பிரின்ஸ்பால் அப்பா கிட்ட ரிப்போர்ட் பண்ணிடுவார்.. அப்பா ஜாலி டைப் பெருசா எதையும் கண்டுக்க மாட்டார். எனக்கு நிறையவே சுதந்திரம் கொடுத்திருக்கார் ஆனால் மத்தவங்க வீட்டுல அப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாதே..! அதனாலதான் யாரையும் கூட்டிட்டு வரல.. இத்தனை பெரிய பதிலில் ஏன்டா கேட்டோம் என்றானது திலோத்தமாவிற்கு..!"
சாப்பிட்டு முடித்தாயிற்று..! கையில் காசு இல்லை அவசரத்திற்கு தன் டெபிட் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் தான்.. சத்யாவின் முகம் குளோசப்பில் வந்து போனதில் நேராக கவுண்டருக்கு சென்று ஆட்டுக்கல் எங்கிருக்கு.. நான் வேணும்னா மாவாட்டி தரவா என்று கேட்பது உத்தமம்..
"வெயிட்டர்.. பில் கொண்டு வாங்க.. எல்லாருக்கும் சேர்த்து ஒரே பில்லா கொண்டு வாங்க.. நானே பே பண்ணிடறேன்..!" என்றாள் தேம்பாவணி..
"ஐயோ நீ எதுக்குமா எங்களுக்காக பே பண்ணனும்.. பரவாயில்லை நாங்க பாத்துக்கறோம்..!"
"என்ன அங்கிள் இப்படி சொல்லிட்டீங்க.. பேசிப்பழகி ஃபிரண்டாகிட்டோம்.. இனிமே நாம எல்லாரும் ஒரே ஃபேமிலி மாதிரி.. உங்களுக்காக நான் இது கூட செய்ய மாட்டேன்னா..!" என்று அசடு வழிந்து சிரிக்க..
"சரிம்மா.. இவ்வளவு ஆசைப்படும்போது நான் வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காது.. ஒரே ஃபேமிலின்னு வேற சொல்லிட்ட.. நீயே பே பண்ணிடு..!" ராஜேந்திரன் சொன்னதும் மூளையின் கனெக்ஷன் எடக்கு மடக்காய் இடம் மாறி போனதில் தலையை சுற்றி சிட்டுக்குருவிகளும் விட்டில் பூச்சிகளும் பறந்தன..
தொடரும்..

Last edited: