தன்னிடம் மட்டும்தான் உணர்ச்சி ததும்புகிறது என்றால் இதற்கு பெயர் காதல் இல்லாமல் வேறென்னவாம்.. வார்த்தைகள் முழுமை பெறாத அவன் வர்ணனை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவள் தேகம் முழுக்க குறுகுறுப்பும் கூச்சமுமாக கேள்விக்குறியாக முதுகு வளைந்து குறுகி படுத்தாள்.. அவன் அரவணைப்பில் இறுகிய தழுவுதல்களில் வலுக்கட்டாயமாக பூக்கும் பெண்மை.. இன்று தூர நின்று அவன் பேசிய தப்பும் தவறுமான கவிதைகளில் தானாகவே மலர்ந்து போனது..
முரளி கூட தன்னை பக்கம் பக்கமாக வர்ணித்து பேசி இருக்கிறான்.. சரளமான தமிழ் வார்த்தைகளில் உருகி உருகி கவிதை எழுதி இருக்கிறான்.. ஆனாலும் அதை கேட்டு காகிதத்தில் படித்து அவள் ஹார்மோன்களில் எந்த பூக்களும் பூத்ததில்லையே..!!
கடப்பாரையைக் காம்பாகக் கொண்டு பூங்கொத்து செய்தது போல்.. முரட்டுத்தனமான அவன் முகம் மென்மையாக தனக்காக உருகி கவிதை சிந்தியதில்..!! முதலில் அது கவிதையா.. எனக்கு அது கவிதைதான்.. நகத்தை கடித்து ஒரே சிரிப்பு.. ஒரே இரவுக்குள் வெறுப்பு காதலாக மாறுமா..!! அலுத்துப்போன வாழ்க்கையில் அன்பு பெருகுமா என்ன..? நடக்கிறதே..!! உறக்கம் வருவேனா என்றது.. அவன் அருகில் இல்லாமல் படுக்கை முள்ளாக குத்தியது.. இத்தனை நாட்களாக உறங்கவிடாமல் அவன் படாத பாடு படுத்திய போது கொஞ்ச நேரமேனும் உறங்க வேண்டும் என்று கண்கள் இருட்டிக்கொண்டு தேகம் ஓய்வுக்கு கெஞ்சியது உண்மை.. ஆனால் இன்று ஓய்வு எடுப்பதற்கான அத்தனை வழிவகைகள் இருந்த போதிலும் மனம் அவனைத் தான் தேடுகிறது..
இந்நேரம் அவன் பக்கத்தில் இருந்திருந்தால்.. இப்படியா வெட்டியாக படுத்துக் கொண்டிருப்பேன்.. வித்தியாசமான குலுங்கலோடு அவள் உலகம் மாறுபட்டிருக்கும்.. ஓவர்லோடு துணிமணிகளை போட்ட பின் வாஷிங் மெஷின் கிடுகிடுவென ஆடுவதைப் போல் கட்டில் குதிக்கும்..
அப்போது அதையெல்லாம் அனுபவிக்கவே பிடிக்கவில்லை.. ஆனால் இப்போது நடந்ததை நினைக்கவே அத்தனை பிடித்திருக்கிறது.. மீண்டும் மீண்டும் வேண்டும் என்ற ஏக்கம் தோன்றுகிறது.. காரணம் அவனை பிடிக்கிறது..
எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தவன் உறங்கிய பிறகு அவள் இனிய கனவுகளையும் தனதாக்கிக் கொண்டிருந்தான்..
மறுநாள் காலையில் அவள் விழித்த வேளையில் மிக நெருக்கத்தில் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் குரு..
"ஆஆஆஆ.." நெஞ்சில் கை வைத்து அலறி எழுந்தாள் அன்பரசி..
"எ.. என்ன.. இப்படி.. பாக்கறீங்க.." எச்சில் விழுங்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கேட்க.. "சும்மா பாத்தேன்.." என்றவனின் கண்கள் எப்போதும் போல் அவளை முறைத்துக் கொண்டிருந்தன.. அது முறைப்பா அல்லது ஆசை பார்வையா.. அவனுக்கே வெளிச்சம்.. தூர நிற்கும்போது அவனுக்காக பொங்கிய காதல் பார்வை இப்போது அண்மையில் தெரிந்த அவன் முகத்தில் பயமாக மாறிப் போயிருந்தது.. கண்கள் சிவக்க சிவக்க இப்படி முறைத்தால் பாசம் எங்கனம் வெளிப்படும்..
அவள் தொடைகளின் மீது ஏறி மறுபக்கம் சென்று புரண்டு படுத்தான் குரு.. உறங்குவதற்கா இந்த அலப்பறை..!! பெருமூச்சு விட்டபடி சுவர் கடிகாரத்தை பார்த்தாள் அன்பு.. மணி ஐந்தை தொட்டிருக்க.. இன்னும் ஒரு மணி நேரம் உறங்கலாம் என்று நினைப்போடு அப்படியே படுத்துக்கொண்டாள்.. அந்த நேரத்தையும் கடந்து உறங்கினாலும் யாரும் அவளை கேட்க போவதில்லை.. இந்த நேரத்தில் எழ வேண்டும் இந்த நேரத்தில் சமைக்க வேண்டும் என்ற கெடுபிடிகள் அங்கே கிடையாது.. ஆனபோதிலும் ஐந்து அல்லது ஆறு மணிக்கு எழுந்து பழக்கப்பட்ட உடலையும் மனதையும் எக்காரணம் கொண்டும் சோம்பேறித்தனத்திற்கு உட்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் அன்பரசி..
பக்கத்தில் படுத்திருந்தவனின் சிகையை மெல்ல வருடி கொடுக்க கண்களை திறந்து பார்த்தவன் மீண்டும் விழிகளை மூடியபடி தலையை மட்டும் நகர்த்தி நகர்த்தி அவள் கழுத்தடியில் கொண்டு வந்தான்.. கரங்கள் மெல்ல ஊர்ந்து அவள் இடையை வளைத்துக் கொண்டது.. ஒரு காலை அவள் கெண்டை கால்களின் மீது படரவிட்டான்..
மாதவிடாய் காலங்களில் கூட மனைவியை கட்டாயப்படுத்தி தன் இச்சையை தீர்த்துக் கொள்ளும் சில குரூர கணவன்மார்களின் மத்தியில் அடங்காத காமத்தை தள்ளி வைத்து உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கும் தன் கணவன் உயர்ந்தவன் தான் என்ற பெருமிதம் அவளுக்குள்..
இடையோரம் கிள்ளுவதும் அழுத்தமாக பதிவதுமான அந்த விரல்களும்.. அவள் மார்பு குழிக்குள் தெரிந்தும் தெரியாதது போல் முத்தமிட்டு கடிப்பதுமான அந்த முரட்டு உதடுகள்.. சேலை விலகிய கெண்டைக்கால் சதை திரட்சியை தன் பக்கம் இழுக்கும் அவன் கால்களும்.. அவன் சீறலான மூச்சும்.. அத்தனையும் மூடி போட்டு அடைத்த பின்னும் பொங்கி நுரைக்கும் தாபத்தின் வெளிப்பாடு என்று புரியாமல் இல்லை அவளுக்கு..
நேரடியான தேடல்களை தாண்டி ஆண் தேவையை தீர்த்து வைக்கும் நுட்பங்களை அவனே சொல்லிக் கொடுத்து பழக்கப்படுத்தி இருந்தது வசதியாகி போனது இந்நேரத்தில்..
சிகரெட் வாசனையை மறக்க வாயில் சுவிங்கத்தை போட்டு மெல்வதைப் போல்.. காபி அருந்தும் பழக்கத்தை மறக்க கருப்பட்டியை கடிச்சுக்கோ என்று சொல்வது போல்.. எத்தம் தின்னால் பித்தம் தெளியும் என்று கட்டிலின் விளிம்பு வரை உருள்பவனுக்கு அவளால் முடிந்த உதவி..
பலவந்தப்படுத்துதல்.. கட்டுப்பாடுகள் என்று எதுவுமில்லை.. கணவன் மனைவி புரிதல் மட்டுமே இங்கே முக்கியம்.. அவள் பலவீனங்களை ஓரளவு புரிந்து கொண்ட அவனால் தாக்கு பிடிக்க இயலவில்லை.. அவன் அவஸ்தைகளை புரிந்து கொண்டவள் தாபத்தை தீர்க்கும் பொருட்டு உதவி புரிகிறாள்.. ஆலாபனை ஆலிங்கன நேரத்தில் கேள்வனின் புல்லாங்குழல் கொண்டு அவள் இசைத்த கீதம் பிரதான நாதமாய்..!! முத்தம் மட்டுமே மொத்த மோகத்தை தீர்க்க வழியாகிப் போன நேரத்தில் பெண் இதழ்கள் துடித்து போயின..
"அங்கே மட்டும் வேண்டாம்.." சொல்லி சொல்லி களைத்துதான் போகிறாள்.. தீயினில் விரல் வைக்க துடிக்கும் குழந்தை போல் சொல்லச் சொல்ல கேட்காமல் சம்பவ இடத்தை நோக்கி ஊர்ந்து செல்பவனை கேசத்தை பற்றியிழுத்து அணைத்து.. முத்தமிட்டு அய்யோ.. பாவம் பார்த்தது என்னோட தப்பு தான்.. நொந்து போனாள்..
"அப்போ.. மூணு நாளைக்கு இது மட்டும்தானா..? அது கிடையாதா..?" அவன் பார்வை.. ஏக்கமும் தாபமுமாக அவள் கீழ்மட்ட ரகசியங்களை மேய்ந்தது..
புடவையை இழுத்து விட்டுக் கொண்டு.. "ஆமா.. ப்ச்.. வயிறு ரொம்ப வலிக்குது.. அழுத்திப் பிடிக்காதீங்க.." இதழ் கடித்து மாதந்திர வலியை பொறுத்துக் கொண்டாள்..
"எங்கே வலிக்குது.. இங்கேயா.. ஏன் வலிக்குது.." தொட்டு பார்த்தான்.. அவள் கண்களில் கண்ணீர்.. முதல் நாள் உதிரப் போக்கில் வலி இருக்குமே..!!
"ஏன் அழறே..?"
ஒன்னும் இல்ல.. இதழ் குவித்து ஊதினாள்.. ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.. ஆண் தேகத்தில் 206 எலும்புகளை எண்ணிப் பழகியவனுக்கு பெண் தேகத்தின் கூறு புரியவில்லை.. உச்சத்தில் உணர்ச்சி பெருக்கிலும் சில சில நேரங்களில் கண்களில் நீர் தேங்கி தன்னைக் கோபமும் தாபமமாக அவள் முறைப்பது வழக்கம்தானே.. அதனால் அவள் விழிநீருக்கு விடை தெரியவில்லை..
"சரி வயித்தை அழுத்தல.." வாய்தான் சொன்னது.. ஆனபோதிலும் அவன் வேகத்திலும் தாபத்திலும் பெண்ணுக்கு அவஸ்தைதான்.. போன்லஸ் சிக்கன் என்றாலும் பற்கள் படாமல் விழுங்க இயலாது..
இந்த நேரத்தில் எங்கெங்கே அவஸ்தை உண்டு அவனுக்கு தெரியாது.. சொல்லி புரிய வைக்கும் மனநிலையில் அவளும் இல்லை..
கூட்டு பொரியல்.. அவியல் ரசம் இனிப்பு துவர்ப்பு அனைத்தும் உண்டு.. சோறு மட்டும் இல்லை.. என்னும் நிலைதான்.. அன்புள்ளம் கொண்ட கணவன் என்றால் அவள் வலிகளைப் புரிந்து கொள்வான்.. இந்நேரத்தில் விலகி நிற்பான்..
புத்தம் புதியதாய் பிறந்த குழந்தை அன்னையின் மார்பு காம்புகளின் புண் அறியாது.. பசி தீர்ந்தால் போதும் என்ற தேவையின் அவசியம் மட்டுமே சிசுவின் அறிவு நரம்புகளில் புகுத்தப்பட்டிருக்கும்..
அப்படித்தான் இவனும்.. பெண்களின் தேகம் பற்றிய படிப்பறிவோ பண்பறிவோ கிடையாது.. வீட்டில் அக்கா தங்கை இருந்திருந்தால் கொஞ்சமேனும் ஞானம் கிடைத்திருக்கலாம் இப்போது அதற்கும் வழியில்லாமல் போனது.. இப்போது சொல்லி புரிய வைக்க வேண்டியவள் அவள் மட்டுமே..
படாத பாடு படுத்திய போதும் கணவன் மீதான அன்பு குறையவில்லை அன்பரசிக்கு..
அவன் ஆழ்ந்து உறங்கிய பிறகு தான் மேலாடைகளை அணிந்து கொள்ள முடிந்தது..
எழுந்து குளித்து.. வடிவாம்பாளை பூஜை செய்ய சொல்லிவிட்டு.. அவனையும் எழுப்பி கவனமாக தான் ஈரத்தில் நனையாமல் குளிக்க வைத்து.. உணவைப் பிசைந்து கையில் கொடுத்து.. என்றுமில்லா திருநாளாக இன்று ஒவ்வொன்றையும் ஆசை ஆசையாக பார்த்து பார்த்து செய்த மனைவியை காரணம் புரியாமல் வெறிக்க வெறிக்க பார்த்தான் குரு.. அவள் கண்களில் ஒளிரும் இந்த ஆசை மின்னல்கள் வேறு மாதிரியான போதையைக் கூட்டின.. அப்போதே அவளை களவாடி விழுங்க கொள்ளை ஆசை..
அவள் பின்னங்கழுத்தை பற்றி தன் பக்கம் இழுத்தவன் வடிவு அங்கும் இங்குமாக சுற்றி தெரிவதை கண்டு "ரூமுக்கு வா" என்று சொல்லிவிட்டு சென்றான்..
அவன் சென்ற பிறகும்.. ஆச்சார்யா வடிவோடு நின்று எதையோ பேசிக் கொண்டிருந்தாள் அன்பு..
வெகு நேரம் அவள் வராமல் போனதில் ஆத்திரம் மூள கதவருகே வந்தவன்.. "ஹேய்.. ஓய்ய்ய்.." என்று கத்தி கத்தி அழைத்து பார்க்க மூன்று பேருமே பேச்சு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை..
முரடன் சங்கடத்தோடு நெற்றியை தேய்த்தபடி..
"அம்.. அம்பே.." என்று சத்தமாக அழைக்க.. திடுக்கிட்டு அவன் பக்கம் பார்த்தாள் அவள்..
"வா.." கண்ணை காட்டி அழைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்..
"அம்பா..?" ஆச்சார்யா கேள்வியோடு வடிவை பார்க்க..
"ஆமாங்க அய்யா.. தம்பி இப்படி தான் அடிக்கடி அம்பு விடறாரு.." வடிவு சொன்னது அந்த பெரிய மனிதருக்கு என்ன புரிந்ததோ..!!
உள்ளே வந்தவளை இறுக அணைத்து.. ஆவேசமாக முத்தமிட்டு.. மேஜையில் தூக்கி அமரவைத்து.. மார்பு சேலை விலக்கி.. அவன் உலகமே அங்கேதான் அடைந்து கிடப்பதாக உணர்கிறானோ..!!
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே!
மன்னவனின் பசியாற, மாலையிலே பரிமாற..
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் கண்ணோ!
ராஜ சுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ!
முந்தைய நாள் தாடி வைத்த அவன் கூட்டாளி திலீப் தேவையில்லாமல் இந்த பாடலை தான் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.. அப்போது ஆராயாத அர்த்தங்கள் இப்போது பிடிபட்டது.. ஆனால் இங்கே காலை மாலை என்ற நேரங்காலமில்லை.. எப்போதும் பசி தீர்க்க அவள் வேண்டும்..
எச்சில் வடியும் அவன் உதடுகளை கூட சேலை முந்தானையால் அவள்தான் துடைத்து விட வேண்டும்..
"மனுஷன் வாழுறான்யா..!!" அப்படி ஒரு உற்சாக மனநிலையில்தான் சமீப நாட்களாக சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருக்கிறான் குருக்ஷேத்ரா..
கீழே இறக்கிவிட்டதும் அவள் ரவிக்கையின் கொக்கிகளை சரி செய்து கொள்ள சட்டை பட்டன்களை அணிந்து கொண்டு வெளியே வந்தான் அவன்..
வடிவு குறுக்கே வந்தாள்..
"சாப்பிட்டியா ராசா.." எப்போதும் பரிவோடு கேட்கும் அதே கேள்வி..
"ஹ்ம்ம்.. இட்லி.." கேள்வியை தாண்டி பதில் வருவதெல்லாம் உலக அதிசயம்.. ஆனால் பாட்டிக்கு தான் இதில் அதிர்ச்சி..
"ஹான்..? இட்லியா..?" கன்னத்தில் கை வைத்து வாயை பிளந்தாள்..
"ஆமா.."
"எத்தனை இட்லி சாப்பிட்ட..?"
"ரெண்டுதான் தந்தா.." அவன் வாசல் வரை சென்றிருந்தான்..
கேப்ப களியும் கருவாட்டு குழம்பும்தானே இன்றைய மெனு.. அதிலும் இன்னொரு சந்தேகம்.. இருபது இட்லி வரை சளைக்காமல் தின்பவன் இரண்டு இட்லி தான் சாப்பிட்டானா..!! "கிறுக்கு பையன் என்னவோ உளறிட்டு போறான்.." வடிவு அவனை கடந்து புழக்கடை பக்கம் செல்ல.. எதையோ யோசித்தவனாக அவள் பின்னால் சென்றான் குரு..
"ஏய் கிழவி.."
"சொல்லு ராசா..!!"
"பீரியட்ஸ்ன்னா என்ன..?"
வடிவுக்கு சங்கோஜமாகிப் போனது.. "அய்யே.. இதையெல்லாம் என்கிட்ட கேட்டுக்கிட்டு.. போய் உன் பொண்டாட்டிய கேளு.."
"ப்ச்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.. அந்த நேரத்துல பொண்ணுங்க உடம்புக்குள்ள என்ன நடக்கும்.." அவன் விடுவதாக இல்லை..
"வயிறு வலிக்கும்.. முட்டிக்கு மேல தொடை இரண்டும் உளையும்.. இடுப்பு எலும்பு விட்டு போய்டும்.. மாரெல்லாம் வின் வின்ன்னு வலிக்கும்.. இந்த மாதிரி நேரத்துல பொம்பளைங்க ஓய்வுல இருக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது.." வடிவு முடிந்தவரை விளக்கினாள்..
பாட்டி சொன்னதில் குரு முந்தைய நாள் இரவு அவளை படுத்திய பாட்டை பற்றி யோசிக்க ஆரம்பித்து இருந்தான்..
வடிவு சொன்னபடி வலிக்கும் இடங்களில் எல்லாம் மேலும் வலியை கொடுத்த கணங்கள் அவன் கண் முன் வந்து போயிற்று..
உச்சக் கட்ட உணர்ச்சி பிழம்பில் அவள் மார்பை கசக்கிப் பிழிந்த நிமிடங்களும்.. சொல்லச் சொல்ல கேட்காமல் தொடையில் பற்களை பதித்த தருணங்களும்.. ஒட்டு மொத்த இடுப்பை தன் கைகளுக்குள் அடக்க முயன்று அழுத்தி பிடித்து.. உஃப்.. விழிகள் மூடி திறந்தான் குரு..
இப்போது கூட.. ஆஆ.. அம்மாஆஆ.. என்ற முனகலும் அவன் தோளில் நகங்கள் பதியும்படி அழுத்தமாக பதிந்த கரமும் அவள் வலியை உணர்த்தும் சுவடு தானா.. அது புரியாமல் நான் வேறு.. காஞ்ச மாடு கம்பங் கொலையில் புகுந்த மாதிரி.. முட்டி.. முட்டி.. ச்சே.. தன்னையே திட்டிக்கொண்ட முதல் தருணம்.. இப்படியெல்லாம் தனக்கு உணர தெரியுமா.. அது கூட புரியவில்லை.. கருங்கற்கள் கனல் சூட்டில் மெழுகு போல் உருகியதாக உணர்ந்தான்.. ஏதோ மென்மையாக.. ஒரு புரியாத உணர்வு.. செவியோரம் சூடானது.. கோபம் மூர்க்கத்தனம்.. வன்முறையை இயல்பாக ஏற்றுக் கொள்ள பழகியவனுக்கு இந்த மென்மையான உணர்வு உள்ளுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தும் அதிர்வுகளை கொடுப்பதாய் நடுக்கம்.. தாங்க முடியாத அவஸ்தை.. உணர்வுகளை ஓரந்தள்ளி வீட்டை விட்டு கிளம்பி இருந்தான்..
மார்க்கெட்டில் கூட்டாளிகளோடு அமர்ந்திருந்த போதும் அனுமதியின்றி நுழைந்த விருந்தாளியாய் அவள் நினைவுகள் மட்டுமே மனதை ஆக்கிரமித்து இருந்தன..
இருப்புக் கொள்ளாமல் மதியத்தில் வீடு வந்தவனின் விழிகள் வழக்கம் போல அவளைத்தான் தேடியது..
புழக்கடையில் தன் துணிகளை துவைத்து கொண்டிருந்தாள் அன்பரசி.. கண்கள் ஒளிர பின்பக்கமிருந்து அவளை நெருங்கிக் கொண்டிருந்தவன் அவள் காலோரம் வழிந்து கொண்டிருந்த குருதியை கண்டு சட்டென நின்றான்.. அவன் விழிகளில் ஒருவித மாற்றம்.. அடுத்தவர்களை அடித்து வீழ்த்தி குருதியில் குளிப்பாட்டியவன் மனைவியின் மாதவிடாய் உதிரத்தை கண்டு தொண்டை குழிக்குள் ஏதோ அடைப்பதை போல் எச்சில் விழுங்கினான்..
தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தவளாக குனிந்து பார்த்து.. "அய்யோ.. நாப்கின் வேற தீர்ந்து போச்சு.. மறந்து போச்சுதே.. இப்போ என்ன செய்வேன்.." தலையில் அடித்துக் கொண்டு கால்களைக் குறுக்கி நடக்க முடியாமல் பின்பக்கமிருந்த கழிவறையை நோக்கி சென்று கொண்டிருந்தாள் அன்பு..
தன்னை சுத்தம் செய்து கொண்டு.. வீட்டுக்குள் நுழைந்தவள் "இப்ப பார்த்து பாட்டி கூட இல்லையே.. நான்தான் கடைக்கு போய் வாங்கணுமா" அலுப்போடு கட்டிலை பார்த்தவள் அங்கே வைக்கப்பட்டிருந்த நாப்கின் பாக்கெட்டுகளை கண்டு புருவங்கள் நெளிய வியப்பும் கேள்வியுமாக விழித்தாள்..
தொடரும்..