- Joined
- Jan 10, 2023
- Messages
- 49
- Thread Author
- #1
கௌதமனுக்கு மதுரையில் பர்னிச்சர் கடை தொடங்க எண்ணம்.. அது தொடர்பாக இடம் வாங்குவது பற்றி சிலரை சந்தித்து ஆலோனை பெற வேண்டியிருந்ததால் கூடுதலாக இரண்டு நாட்கள் அங்கே தங்க வேண்டியதாய் போனது..
அது பற்றி இந்திரஜாவிடம் தகவல் சொல்லிவிட்டு குழந்தையை பற்றி விசாரிக்கலாம் என்று அவளுக்கு அழைத்திருந்தான்.. ஆனால் இந்திரஜாவுக்கு பதிலாக பூங்கொடிதான் போனை எடுத்தாள்..
“சொல்லு கௌதமா..?” என்று உற்சாகமாக ஆரம்பிக்க..
“அத்தை நான் நாளை மறுநாள் சாயந்திரம் தான் வருவேன்.. பாப்பா கிட்ட சொல்லிடுங்க..” என்றான் கனத்த குரலில்..
“ஓஹ் அப்படியா சொல்லிடறேன்ப்பா..!!” என்றாள் பூங்கொடி..
“அப்புறம் பாப்பா எப்படி இருக்கா..? என்ன செய்யறா..? என்னை தேடினாளா..!! நேத்து வீடியோ கால் செஞ்சேன்.. ஸ்வேதா குட்டி தூங்கிட்டதா இந்திராஜா சொன்னா.. இப்போ கால் பண்ணட்டுமா.." மகள் மீதான பாசத்திலும் பரபரப்பிலும் அவசர அவசரமாக வார்த்தைகளை உதிர்த்தான்..
பூங்கொடிக்கு திக்கென்று இருந்தது.. இப்போது கௌதமன் வீடியோ காலில் அழைத்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகி விடுமே.. அழுக்கு உடையும் கலைந்த தலையும்.. சளி ஒழுகும் மூக்குமாக வலம் வருகிறதே இந்த பிசாசு..
இந்திரஜா இருந்திருந்தால் பிள்ளையை ஏதோ ஒப்பேற்றி வீடியோ காலில் பேச வைத்திருப்பாள்.. இது என்னை பார்த்தாலே காத தூரம் ஓடுமே..!! என்ற எண்ணத்தோடு குரலை செருமிக் கொண்டு..
“பாப்பாவை கூட்டிட்டு இந்து கடைக்கு போயிருக்கா..!! போனை மறந்து வெச்சிட்டு போயிட்டா.. அவ வந்ததும் கால் பண்ண சொல்லட்டுமா..” என்றாள் தன்மையான குரலில்..
“சரி அத்தை.. பாப்பா நான் இல்லாம ஒழுங்கா சாப்பிடுறாளா..? இல்ல அடம் பிடிக்கிறாளா..?” அகல்யாவிற்கு குழந்தையின் மீதிருந்த அதே தவிர்ப்பு அவனிடமும்..
“அதை நான் எப்படிப்பா சொல்லுவேன்.. குழந்தை அவளாகவே சாப்பிட ஆரம்பிச்சுட்டா..”
“அப்படியா..?” அவன் குரலில் நம்ப முடியாத ஆச்சரியம் தெரிந்தது.. தன் மகள் பிஞ்சு விரல்களால் சோற்று பருக்கைகளை அள்ளியும் அள்ளாமலும் சிந்தி சிதறி வாயில் திணிப்பதாக கற்பனை செய்து கொண்டான்.. பிள்ளை விஷயம் என்றால் கௌதமன் எப்போதுமே குதூகலமாகி விடுவான்.. குழந்தையை தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இறுக்கம்தான்..
“ஆமா கௌதமா.. நம்ம இந்துதான் குழந்தையை அவளாகவே சாப்பிட பழக்கி விட்டுருக்கா.. அதுமட்டுமில்ல.. அடிக்கடி அண்ணியோட ரூமுக்கு கூட்டிட்டு போய் அவங்க கிட்டயும் பேச வைக்கறா.. நீ என் பொண்ணுக்கு துன்பத்தைக் கொடுத்தாலும்.. அவ உன் பொண்ணை நல்லா கவனிச்சிக்கிட்டு எல்லா விதத்திலும் உனக்கு உதவுறா பாத்தியா.. நான் ஒன்னும் இதை குத்தி காட்ட சொல்லல..” என்று பூங்கொடி சொல்லி முடிக்கும் முன்..
"புரியுது அத்தை.. இந்து ரொம்ப நல்லவ.. அவ வந்ததும் ஃபோன் பண்ண சொல்லுங்க.." மீண்டும் அவன் குரலில் இறுக்கம் வந்து அமர்ந்து கொள்ள..
இறங்கிய குரலில் "சரிப்பா.." என்று முடித்தாள் பூங்கொடி..
"ஒரு நிமிஷம் அத்தை..!!" என்றவன் ஏதோ பேச தயங்கி நிற்பதை புரிந்து கொண்டு.. "அம்மாகிட்ட பேசணுமா.. கொடுக்க வா.." பூங்கொடி அவளாகவே கேட்டாள்..
“இல்ல.. என்று ஒரு கணம் நிறுத்தியவன்.. "சரி.. நான் வச்சுடறேன் அத்தை..” என்று அழைப்பை துண்டித்திருந்தான்..
ஒருவேளை இந்திரஜா போனை எடுத்திருந்தால் சம்பந்தப்பட்டவளிடம் போனை கொடுக்கச் சொல்லி ஒன்றிரண்டு வார்த்தை பேசி இருப்பானோ என்னவோ..!!
அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த இந்திரஜாவை தட்டி எழுப்பினாள் பூங்கொடி..
"ப்ச்.. என்னம்மா.." இந்திரஜா சலிப்போடு எழுந்து அமர்ந்தாள்..
"அடியே கௌதமன் போன் பண்ணினான்..!!"
"என்னவாம்.." அவள் குரலில் பெரிதாக வித்தியாசமில்லை..
"நாளை மறுநாள் சாயந்திரம் வர்றானாம்.."
"சரி வரட்டும்.."
"இந்த புள்ள.. அழுக்கு கவுனும்.. பரட்டை தலையுமா மூக்கொழுகிட்டு கிடக்குதே.. கூட்டிட்டு வந்து அதை குளிக்கவைச்சு வேற ஏதாவது நல்ல டிரஸ் போட்டு விடுடி.. அவன் வேற வீடியோ கால் பண்றேன்னு சொன்னான்.. அப்புறம் புள்ளையை நல்லாவே பார்த்துக்கலைன்னு வந்து குத்தம் சொல்ல போறான்.."
"சொன்னா சொல்லட்டும்.. இனியும் விழுந்து விழுந்து வேலை செஞ்சு அவர்கிட்ட நல்ல பெயர் வாங்கி என்ன செய்யப் போறோம்..?" இந்து உதடு சுழித்தாள்..
"அப்படி சொல்லாதடி.. உனக்கு கல்யாணம் ஆகும் வரை அவனோட ஆதரவு வேணும்.. கொஞ்சம் பொறுத்துதான் போகணும்.. அதுவரைக்கும் அவன் குழந்தையை ஒழுங்கா பார்த்துக்கற மாதிரி நடிச்சாவது தொலை.."
"இவ்ளோநாள் அதைத்தானே செஞ்சோம்.. சரி இப்ப என்னை தூங்க விடு.."
"தமிழ்லதானே சொல்றேன்.. அந்தப் பிள்ளையை கூட்டிட்டு வந்து குளிக்க வைச்சு ஏதாவது புது டிரஸ் போட்டு விடு.."
"நாளைக்கு சாயங்காலம் தான வராரு.. அப்ப பாத்துக்கலாம் இப்ப என்னை ஆள விடு..!!"
"அடியே அவன் வீடியோ கால் செஞ்சா என்ன பண்ணுவ..?"
"அட.. வீடியோ கால் செய்யும் போது பாத்துக்கலாம்..!!" என்று மீண்டும் படுத்து தன் மதியநேர உறக்கத்தை தொடர்ந்தாள்..
மறுநாள் கௌதமன் இரண்டு நாட்கள் கழித்துதான் வரப்போகிறான் என்ற விஷயத்தை பூங்கொடி கார்த்திகாவிடம் சொல்லிக் கொண்டிருப்பதை அகலிகா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்..
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. கௌதமன் கார்த்திகாவிற்கும் அழைத்திருந்தான்..
பொதுவான விஷயங்கள் பேசிவிட்டு வைத்திருப்பான் போலும்.. துணிகளை எடுக்க வந்த அகலிகா இதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. மனதோடு சொல்ல முடியாத வெறுமை பரவியது..
அம்மாவிடம் அத்தையிடம் அத்தை மகளிடம் பேச முடிகிறது.. என்னிடம் பேச ஒன்றுமே இல்லையா..? அவள் மனம் ஏங்கித் தவிப்பதை தடுக்க முடியவில்லை.. எதிர்பார்க்காதே என்று ஆயிரம் முறை தலையில் தட்டி அடக்கி வைத்தாலும்.. கௌதமன் என்றவுடன் அவள் மனம் கடிவாளமில்லாத குதிரையாக அவனை நோக்கி ஓடத்தான் செய்கிறது..
நேசம் பாசம்.. காதல் காமம்.. தாபம் எப்படி வைத்துக் கொண்டாலும்.. அதன் ஒரே அர்த்தம்.. அகலிக்கு அவனை அளவுக்கதிகமாக பிடிக்கிறது.. அந்த பிடிப்புதான் இல்லாத ஆசாபாசத்தை எதிர்பார்க்கச் சொல்கிறது..
புழுதியில் விழுந்து புரண்டு அழுக்கு பண்டாரமாக ஒரு டெடி பேர் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா..
பிள்ளை இப்படி ஒரு கோலத்தில் இருப்பதில் தாயின் மனதில் பாரம்.. எந்த தாயும் தான் பெற்ற மகள் இது போல் அழுக்கு கோலத்தில் வலம் வருவதை பார்த்து சகித்துக் கொள்ள மாட்டாள்.. சீவி சிங்காரித்து விதவிதமாய் அணிவித்து அழகு பார்க்கத்தானே பெண் குழந்தைகள்..
ஸ்வேதாவின் தந்தை நாளை மாலை வரப்போகிறார் என்பதால் நிச்சயம் அந்த நேரத்திற்கு நெருக்கத்தில்தான் குழந்தையை குளிப்பாட்டி அழகு படுத்துவாள் இந்திரஜா.. அதுவரை குழந்தை அழுக்கு கோலத்தில் தான் இருக்க வேண்டுமா..? இப்படியே புழுதி மண்ணோடு நாள் முழுக்க இருந்தால் பிள்ளைக்கு நோய் வந்துவிடாதா..? எப்படியாவது குழந்தையை சுத்தப் படுத்த வேண்டும்.. என்று ஒரே எண்ணம் மட்டுமே அவள் மனதில் மேலோங்கி நிற்க ஸ்வேதாவிடம் வந்து நின்றாள்..
"பாப்பா.. நான் உன்னை குளிக்க வைக்கறேன்.." மென்மையாக பேசி அவளை அழைக்க முயன்றாள்..
ஸ்வேதா பேயை கண்டது போல் அவளிடமிருந்து நழுவி ஓட.. அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அகலிகா..
"உன்னை விடறதா இல்ல.. நீ இன்னைக்கு குளிச்சே ஆகணும்.." என்று குழந்தையை தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்..
அது சற்று பெரிய பழைய காலத்து குளியலறை.. பெரிய பெரிய பித்தளை அண்டாக்களில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.. அது போக குளியல் தொட்டி.. பற்றாக்குறைக்கு குழாய் திறந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் வரும்.. குளியலறைக்கு வெளியே சுடு தண்ணீர் வைக்க கல்லடுப்பு..
தங்களது அறையில் இருக்கும் அட்டாச்டு பாத்ரூம் மிகவும் சிறியது.. அங்கே ஸ்வேதாவை சமாளிக்க முடியாது என்பதால்.. வீட்டின் பின்பக்கமிருந்த இந்த பெரிய குளியலறைக்கு தூக்கி வந்திருந்தாள்..
காக்கா குருவி பூச்செடி எதையாவது வேடிக்கை காண்பித்து குளிக்க வைத்து விடலாம் என்ற எண்ணத்தோடு..
ஸ்வேதா அடங்குவதாக இல்லை.. அவளை கடித்து அடித்து ஒரே ரகளை..
கையெல்லாம் ஒரே காயம்.. இருந்தாலும் அகலிகா அதை பொருட்படுத்தவில்லை.. நல்ல வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிக்கவைத்து துடைத்தெடுத்து விட்டால் போதும்.. என்ற நோக்கோடு தன்னால் முயன்ற வரை போராடிக் கொண்டிருந்தாள்..
எங்கே தண்ணீரில் அமுக்கி கொன்றுவிடுவாளோ என்ற பயத்தில் பிள்ளை அவளிடம் இருந்து திமிறி கொண்டு வெளியே வந்தது..
"ஆஆஆஆ.." என்று மூர்க்கமாக எதிரி போல் நினைத்து பலமாக தாக்கிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா..
ஆக்ரோஷமாக திமிறி ஓட நினைக்கும் குழந்தையை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை..
சொல்லி புரிய வைக்கவும் முடியாது.. அவள் கையசைத்து பேசும் விதம் ஸ்வேதாவுக்கு விளங்கவும் இல்லை..
"அம்மு.. அம்மு.. அம்மா.. உன்னை குளிக்க வைக்க போறேன்டா.. கொஞ்சம் அமைதியா இரு.. அழுக்கா இருக்க பாரு.. நீ குளிச்சு சுத்தமா இருக்க வேண்டாமா.." என்று கொஞ்சி கெஞ்சி அவள் செய்த முயற்சிகள் எதுவும் வேலைக்காகவில்லை..
இறுதியில் குழந்தை நறுக்கென புறங்கையில் கடித்து வைத்திருந்ததில் வலி பொறுக்க முடியாமல் சட்டென தனது பிடியை தளர்த்தினாள் அகலி..
இறுக்கமாக அணைத்திருந்த பிடி தளர்ந்ததும் ஸ்வேதா இழுவிசையுடன் வேகமாக முன்னோக்கி நகர்ந்ததில்.. நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தாள்..
விழுந்த வேகத்தில் தரையின் கூர்மையான முனை குத்தியதில்.. குழந்தையின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.. பதறிவிட்டாள் அகலி..
"அய்யோஓஓஓஓ.. என்ன காரியம் செஞ்சு வச்சுட்டேன்.." தலையில் அடித்துக் கொண்டு அலறினாள்.. அடிபட்ட வேகத்தில் குழந்தை மயக்கமாகி இருந்தது..
"கடவுளே என் குழந்தையை காப்பாத்து.." உடலில் நடுக்கத்தோடு நெஞ்சம் பதற குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்..
அவள் அலறலில் குடும்பமே அங்கு ஒன்று சேர்ந்து விட்டது.. அன்று விடுமுறை என்பதால் சிவரஞ்சனி பிள்ளைகள் வீட்டில் இருந்தனர்.. உத்தமனும் நரேந்திரனும் மட்டும் கடைக்கு சென்றிருந்தனர்..
"ஐயோ குழந்தை தலையில காயம்.. எப்படி வந்துச்சு..?"
மற்றவர்களும் பதறினர்..
"எப்படி வந்திருக்கும்.. இவதான் குழந்தை மேல உள்ள ஆத்திரத்தில் அதை கீழே தள்ளி விட்டுருப்பா.." பூங்கொடி மனசாட்சியே இல்லாமல் பழி சுமத்தினாள்..
"நா.. நான் ஒண்ணுமே பண்ணல.. பாப்பா.. தவறி கீழே விழுந்துட்டா..நா.. நான்.. சத்தியமா ஒன்னும் பண்ணல.." குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அவள் கதறிக் கொண்டிருந்த நேரத்தில்.. மறுநாள் வருவதாக சொன்ன கௌதமன் விதியின் சதியால் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தான்..
பூங்கொடி இந்திரஜா இருவருக்கும் அடிவயிற்றில் பந்து சுழன்றது.. ஸ்வேதா தங்கள் பொறுப்பாயிற்றே.. பழி தங்கள் மீது வந்து விடக் கூடாதே..?
கூட்டமாக குடும்பத்தார் நின்றிருந்ததில் புரியாமல் அருகே வந்தவன் நெற்றியில் ரத்த காயத்தோடு அகலிகாவின் கையில் தன் குழந்தை மயங்கியிருப்பதை பார்த்து திக்கென்ற. அதிர்ச்சியோடு உயிர் வரை பதறி இருந்தான்..
"பா…ப்பாஆஆ.. எ.. என் குழந்தைக்கு என்ன ஆச்சு.. என் குழந்தைக்கு என்னடி ஆச்சு.. ஏண்டி இப்படி கிடக்கிறா..?" என்று விழிகளில் பதட்டமும் கோபமும் சூழ அகலியிடம் கேட்டவன் குழந்தையை அவள் கையிலிருந்து வாங்கினான்..
"என்ன ஆகணும்.. குழந்தையை கீழே தள்ளி விட்டுட்டா.. இவகிட்ட ஒட்ட மாட்டேங்குதுங்கிற ஆத்திரத்துல.. பிள்ளையை கொல்ல பார்த்திருப்பா.." பூங்கொடி அடங்குவதாய் இல்லை..
"ஐயோ.. அப்படி சொல்லாதீங்க.. தயவுசெஞ்சு அப்படி சொல்லாதீங்க.. நான் பெத்த குழந்தையை நானே கொல்லுவேனா..!!" அகலி கதறி துடித்தாள்.. இதயமே வெடிப்பதாக உணர்ந்தாள்..
"நீ செய்வடி.. நீ எல்லாத்துக்கும் துணிச்சவதான்.. ஏற்கனவே உன் தைரியம் எதுவரை போகும்ன்னு நாங்க பாத்துட்டோமே.. புருஷனை ஏமாத்திட்டு வீட்டை விட்டு ஓடிப்போனவதானே நீ.. இப்ப குழந்தையை கொல்ல முயற்சி செஞ்சிருக்க மாட்டியா..?" பூங்கொடி தன் மனதிலிருந்த வன்மத்தை ஒட்டுமொத்தமாக தீர்த்துக் கொண்டிருந்தாள்..
கௌதமனுக்கு எதிலும் கவனம் இல்லை.. மண்டியிட்டு அமர்ந்து மடியில் தன் குழந்தையை போட்டுக்கொண்டு அவளை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.. குழந்தையின் மயக்கத்தில் கௌதமனுக்கு சர்வமும் நடுங்கிப்போனது..
"வீட்ல சேர்த்து அடைக்கலம் கொடுத்ததே பெருசுன்னு மூளையில் உட்காராம.. அது சரியில்ல.. இது சரி இல்லைன்னு எல்லாரையும் அதிகாரம் பண்ண வேண்டியது.. குழந்தையை பார்த்துக்க எங்களுக்கு தெரியாதா.. பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டுங்க.. பாப்பாவை குளிக்க வைங்கன்னு.. என்னமோ இவளுக்கு தான் குழந்தை மேல அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்கறது.. இப்போ என்ன செஞ்சாளோ தெரியல குழந்தைக்கு பேச்சு மூச்சில்லாம கிடக்குது.." இது சிவரஞ்சனி..
"ஆமாங்க.. மேடமுக்கு நான் குடுக்கற மாத்திரையில் கூட வந்து தலையிட்டு.. இவங்க இஷ்டத்துக்கு மாத்தி கொடுக்கறாங்க.. அதிக பிரசங்கித்தனமா எல்லாத்திலயும் தலையிடுறாங்க.. இந்த சின்ன குழந்தைக்கு வந்த ஆபத்து மாதிரி நாளைக்கு மேடமுக்கும் ஏதாவது பிரச்சினை வந்துட்டா என்ன செய்ய..?" தன் தவறை மறைக்க அகலிகாவின் மீது பழி போட்டாள் சுசீலா..
நெஞ்சுக்கு நேரே இரு கைகளை கோர்த்து நடுங்கியவாறே நின்று கொண்டிருந்தாள் அகலிகா..
ஸ்வேதாவுக்கு மயக்கம் தெளியவில்லை.. கௌதமன் தண்ணீர் தெளித்து பார்த்தான்.. குழந்தை கன்னத்தை தொட்டு உலுக்கி பார்த்தான்..
மெல்ல அவனருகே மண்டியிட்டு அமர்ந்தாள் அகலிகா..
"பாப்பா.. பாப்பா.." அகலிகா கண்ணீர் விட்டு அழ..
மெல்ல நிலை குத்திய கண்களோடு நிமிர்ந்தவன் அகலியை பார்வையால் எரித்தான்..
"என் புள்ளையை என்னடி செஞ்ச.. என் புள்ளையை என்ன...ன செஞ்ச..?" பற்களை கடித்தான் ஆக்ரோஷமாக..
"பா.. பா..ப்பாவை குளிக்க வைக்...கலாம்னு பாத்ரூம் கூ.. கூட்..டிட்டு போ.. போ..னேன்.. என் கையிலருந்து கீழே வி.. ழுந்துட்டா.." சொல்லி முடிக்கவில்லை.. பளாரென்று அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது..
சுதாரிப்பதற்குள் மற்றொரு அறை..
"என் குழந்தை பக்கத்துல போகாதன்னு சொன்னேனே..!!"
மீண்டும் ஒரு அறை..
"போகாதன்னு சொன்னேன் இல்லடி.." அவளை கொல்லும் வெறியோடு மீண்டும் அறைந்தான்..
துவண்டு கீழே விழுந்தவளை பாவப்பட்டு தூக்கி அமர்த்தினாள் சிவரஞ்சனி..
ஒவ்வொரு முறை அகலிகாவின் கன்னத்தில் அடிக்கும் போதும்.. பூங்கொடி.
"டேய் கௌதமா அடிக்காதடா.." என்று கத்தினாள்.. ஆனால் தடுக்கவில்லை.. அவனை தடுக்கும் அளவிற்கு அங்கு யாருக்கும் பலமும் இல்லை..
அகலிகா கிட்டத்தட்ட மயக்கமடையும் நிலை.. எப்படியோ தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.. குழந்தைக்கு நினைவு வரவேண்டும் என்பது மட்டுமே அவள் சிந்தனையில் அழுத்தமான அதிர்வெண்களாக தேங்கி நின்றது.. மற்றது எதுவும் மூளையில் உரைக்கவில்லை..
"எதுக்காகடி என் வாழ்க்கையில திரும்ப வந்த.. என் குழந்தையை கொல்லவா..? கண்ணு முன்னாடி நிக்காத.. எங்கேயாவது தொலைஞ்சு போ.." சீற்றத்தோடு கத்தியிருந்தவன் குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு மருத்துவமனை செல்வதற்காக வாசலை நோக்கி ஓடினான்..
மண்டியிட்டு அமர்ந்திருந்தவளால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.. கன்னத்தில் தாள முடியாத எரிச்சல்..
"அவனே சொல்லிட்டான்.. கொஞ்சமாவது வெட்கம் மானம் சூடு சொரணை ஏதாவது ஒட்டிக்கிட்டு இருந்தா.. இப்பவே இந்த வீட்டை விட்டு போயிடு.." என்றாள் பூங்கொடி..
"அதெல்லாம் இருந்திருந்தா திரும்பி வந்திருப்பாளா.. நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பாளா.. இவ ஒரு முடிவோடதான் வந்திருக்கா.. குழந்தை செத்தாலும் பரவால்ல.. இவ வாழனும்.." இது இந்திரஜா..
"இங்க பாரு.. உன்னோட நல்லதுக்காகதான் சொல்றோம்.. சின்னவர் பயங்கர கோபத்துல இருக்காரு.. திரும்பி வந்தா உன்னை அடிச்சே கொன்னுடுவாரு.. அவர் வர்றதுக்கு முன்னாடி நீயே இங்கிருந்து போயிடு.." என்றாள் சிவரஞ்சனி..
"அவங்க சொல்றதுதான் சரி.. அடி வாங்கி செத்துடாதே.. குழந்தையோட நிலைமை என்னன்னு தெரியல.. வீட்டை விட்டு ஓடறது உனக்கொன்னும் புதுசு இல்லையே.. இங்கருந்து போயிடு.." இந்திரஜா அழுத்திச் சொன்னாள்..
"இவன் இப்படியெல்லாம் சொன்னா கேக்க மாட்டா.." என்று உணர்வில்லாமல் நின்று கொண்டிருந்த அகலிகாவை வாசலுக்கு வெளியே இழுத்துச் சென்று தள்ளிவிட்டு கதவை சாத்திக் கொண்டாள் பூங்கொடி..
கருத்த மேகங்களால் அடர்ந்திருந்த வானம் பொத்துக் கொண்டு வெடித்து மழையாக கொட்டி தீர்க்க துவங்கியது..
"இங்கேயே நிக்காம எங்கேயாவது போய் தொலை.." ஒதுங்க இடமில்லாத அளவிற்கு வெளியே தள்ளி இரும்பு கேட்டையும் பூட்டியிருந்தாள் பூங்கொடி..
மழையில் தொப்பலாக நனைந்ததை கூட உணர முடியாமல் வெட்டி வெட்டி இழுக்கும் விம்மலோடு அங்கேயே முழங்காலிட்டு அமர்ந்து இரும்பு கதவின் மீது தலை சாய்த்து.. மண்ணை வெறித்தாள் அகலிகா..
தொடரும்..

Last edited: