- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
தன்னை முற்றிலுமாக வெறுத்து அவதூறான வார்த்தைகளை பேசி தன்னை தள்ளி வைத்து கொடுமைப்படுத்திய அந்த அரிச்சந்திரா மீது வெறுப்பு குறையவில்லை.. கோபம் நீங்கவில்லை.. ஆனால் தன் தங்கைகளை தன் மகள்களாக பாவித்து அன்பு செலுத்தி மாமியாரை அன்னை போல் மிகுந்த மரியாதையோடு நடத்தி வருகிற இந்த ஹரிச்சந்திரா மீது அவளையும் அறியாமல் ஏதோ ஒரு ஈர்ப்பு.. வேண்டாம் என்று மறுக்க மறுக்க அவள் முகம் லேசாக சிவக்கின்றது..
அவன் தோள் சாய்ந்த போது.. பிறவிப் பலனை அடைந்து விட்டவன் போல் அந்த கண்களில் மின்னி தெறித்த பரவசத்தை காணுகிறாள்..
"மாதவி இந்த மாதிரி நேரத்துல நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.. எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா இருக்கணும்.. உனக்கு ஏதாவது மனக்குறை இருந்தா தயங்காம என்கிட்ட சொல்லலாம்..!!" அவள் கரம் பற்றிக் கொண்டு தோள் சாய்ந்திருந்தவளின் உச்சியில் தலையை சாய்த்துக் கொண்டான் ஹரி.. சிலிர்த்தாள்..
இருவருமாக வீடு வந்து சேர்ந்திருந்த நேரம் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது.. வாசலிலேயே ஜெயந்தி முகம் சுழித்தாள்.
"காலையில கிளம்பி ஹாஸ்பிடல் போனீங்க.. இருட்டப் போகுது.. இப்ப வந்து சேர்ந்திருக்கீங்க.. எங்க போறீங்க.. எப்ப வருவீங்க எந்த தகவலும் வீட்ல சொல்றதில்ல.. என்ன ஹரி இதெல்லாம்..!!" ஜெயந்தியின் பேச்சில் மாதவிக்கு வருத்தம்.. ஆனால் ஹரி அசரவில்லை..
"அம்மா வீட்டுக்கு போகணும்னு ஆசைப்பட்டா.. கூட்டிட்டு போனேன்.. வழியை விடுங்க.. இதென்ன குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி வாசல்லயே நின்னு என்கொயரி பண்றீங்க..!!" முகம் சுருக்கி அவன் கேட்ட கேள்வியில் விலகி நின்றாலும்.. அவன் புதிதான நடவடிக்கைகளில் மிக குழம்பிப் போனாள் ஜெயந்தி..
கணக்கு பார்க்காமல் வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்கிறான்.. தான் காலால் இட்ட வேலைகளை தலையால் செய்து தருகிறான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. ஆனால் அதே நேரத்தில் அவன் மனைவியை ஒரு வார்த்தை சொல்ல விடாமல் இப்படி அரனாய் பாதுகாப்பதும்.. சேவல் போல சீறிக்கொண்டு மூக்கு விடைத்து கத்துவதும் ஏன் என்று புரியவில்லை ஜெயந்திக்கு..
"நீ உள்ள போ மாதவி.. அம்மாகிட்ட பேசிட்டு வரேன்" சங்கடமாக நின்றவளை வீட்டுக்குள் அனுப்பி இருந்தான்..
"எந்நேரமும் புருஷனும் பொண்டாட்டியும் மாமியார் வீட்டிலேயே இருந்தா குடும்பம் உருப்படுமா..!! நான் உன் நல்லதுக்கு தானேப்பா சொல்றேன்.." மகன் சீறுகிறான் என்று தெரிந்ததும் அவள் குரல் இறங்கியது..
"என்ன நல்லது..!! உங்க மக வாரத்துல மூணு நாள் இங்க தானே டேரா போடுறா.. இதே அறிவுரையை அவகிட்டே ஏன் சொல்றது இல்ல.."
"என்னடா எப்ப பாரு உங்க மக உங்க மகன்னு தனியா பிரிச்சு பேசுற.. உன் தங்கச்சி இல்லையா அவ..?"
"இப்ப பிரச்சினை அது இல்ல.. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் உங்க மருமகளுக்கு ஒரு நியாயம்னு நீங்க நடந்துக்கிறது தான் பிரச்சனை.."
"என்னடா எப்ப பாரு என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்க.. வீட்ல பெரியவங்கன்னு இருந்தா தட்டி கேட்கத்தான் செய்வாங்க.. குடும்பம் கட்டுக்கோப்பா இருக்கணும்னா இப்படி கண்டிப்பா இருந்தா தான் சரி வரும்.. இல்லன்னா உன் பொண்டாட்டி சதா அவ அம்மா வீட்டிலேயே போய் பழியா உட்கார்ந்து கிடப்பா.. ஏற்கனவே வீட்டு வேலைகள் ஒன்றுமே செய்யறது இல்ல.. அவ செஞ்சாலும் நீ செய்ய விடறது இல்லை.. உன் பொண்டாட்டி மகாராணின்னா நாங்க எல்லாம் அவளுக்கு சேவகம் செய்ய பிறந்த அடிமைகளா..?" அம்மாவின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது..
"அவ பிரக்னண்டா இருக்கா.. டாக்டர் அவளை ஸ்டிரைன் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. நான் திரும்பத் திரும்ப கேட்கிறது ஒரே ஒரு கேள்விதான்.. மாதவியோட இடத்துல உங்க பொண்ணு இல்ல வேற ஒரு பணக்கார மருமகள் இருந்திருந்தா இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்துக்கும் குறை சொல்லி கணக்கு பாப்பிங்களா..?"
அம்மா பதில் சொல்ல முடியாமல் திணறினாள்..
"பதில் சொல்லுங்க..!!"
"நான் அப்படியெல்லாம் நினைக்கல.. வீட்டு வேலை செய்யின்னு சொல்றது தப்பா.. இந்த வீட்டுக்காக உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சு போனேன்.. வீட்டுக்கு வந்த மருமக எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு பாத்தா.. அவ என்னவோ மகாராணி மாதிரி என்னை வேலை வாங்கறதெல்லாம் சரியில்லைன்னு சொல்றேன்.."
"ஏன் அண்ணி கூட இந்த வீட்டு மருமகள் தானே.. கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் வேலை செய்றீங்களே.."
"இப்படியெல்லாம் கணக்கு பார்க்காதே ஹரி.. உன் அண்ணி வேலைக்கு போய் இந்த வீட்டுக்காக மாடா உழைக்கிறா.. உன் அண்ணனும் அண்ணியும் இல்லைனா இந்த வீடு இல்ல அது முதல்ல தெரிஞ்சுக்கோ.."
"நான் இல்லைன்னு சொல்லல.. அண்ணி ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடறாங்க.. அதன் பிறகான சின்ன சின்ன வேலைகளை அவங்களே செஞ்சுக்கலாம்.. குடிக்க தண்ணி கூட மாதவியை எடுத்துட்டு வர சொல்றதெல்லாம் ரொம்ப அதிகம்.. நீங்களும் அடிமையா வேலை செய்ய மருமக கிடைச்சுட்டாங்கற ஜோர்ல துரும்ப கூட தூக்கி போடாம எல்லா வேலைகளையும் கழுதை பொதி சுமக்கிற மாதிரி மாதவி தலையில கட்டுனது சரின்னு நினைக்கிறீங்களா..? அவளை ஒரு நிமிஷம் உட்காரக் கூட விடாம எவ்வளவு கொடுமை படுத்தினீங்க..
அடப்பாவி.. ஜெயந்தி வாய் பொத்தி அதிர்ந்தாள்.. ஹரி குணம் மாறும் முன்பு வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தாலும் இத்தனை விஷயங்களை கவனித்திருக்கிறானா.. ஒவ்வொரு விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறானே..!! அப்படியானால் ஆதிகாலத்திலிருந்து இவனுக்கு மனைவி மீது மிகுந்த அக்கறை இருந்திருக்கிறதோ..!! அக்கறை இல்லாமல் வெறுப்பவன் போல் இத்தனை நாள் நடித்துக் கொண்டிருந்தானா.. என்ன ஒன்றுமே புரியவில்லை..
"ஏன் நான் மாதவிக்கு கூட மாட உதவி செய்ற மாதிரி அண்ணனும் அண்ணிக்கு உதவி செய்யலாமே..!! பகிர்ந்து வேலை செய்யும்போது அது பாதியா குறையும்னு உங்களுக்கு தெரியலையா.. கூடமாட உங்க சவுகர்யத்துக்காக நீங்க மாதவியை வேலை வாங்கல.. அவ சும்மா இருக்கிறதா நினைச்சு அளவுக்கதிகமான சுமையை அவ மேல சுமத்தி அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கீங்க.. அப்புறம் ஆறுதல் தேடி அம்மா வீட்டுக்கு போகத்தான் செய்வா..!!" என்று இறுதி வார்த்தைகளில் அலட்சியம் காட்ட ஜெயந்தி கொதித்து விட்டாள். தான் கொலையே செய்தாலும் நியாயம் என்று சொல்லும் மகன் இன்று தன் முன்னே இன்னொருத்திக்காக பரிந்து நிற்பதை தாங்க இயலவில்லை..
"ஐயோ அம்மம்மா.. என்ன பேச்சு பேசுறான்.. இப்படி பொண்டாட்டி தாசனா மாறி போய்ட்டியே ஹரி.. அப்படி என்னதான் சொக்கு பொடி போட்டு உன்னை மயக்கினாளோ தெரியலையே.. நேத்து வரைக்கும் அவ வயித்துல வளர்ற குழந்தை என்னோடது இல்லன்னு சொல்லிட்டு திரிஞ்சவன்.. இப்போ அவ காலடியில் விழுந்து சேவை செய்ய பிறந்தவன் மாதிரி எப்படியெல்லாம் பேசறான்.. இதைக் கேட்க யாருமே இல்லையா..!! இப்படி பொண்டாட்டி காலடியில் விழுந்து கிடக்கத்தான் உயிரை உதிரமாக்கி தாய்ப்பாலா கொடுத்து இவனை வளர்த்தேனா.. ஐயோ கடவுளே உனக்கு கண்ணில்லையா..!!" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட.. தலையை உலுக்கியபடி அங்கிருந்து சென்று விட்டான் ஹரி..
அறைக்குள் வந்தவனை கட்டிலில் அமர்ந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி..
"எதுக்காக அவங்க கிட்ட போய் எனக்காக சண்டை போடறீங்க..? இனிமே எனக்காக சப்போர்ட் பண்ணி எதுவும் பேச வேண்டாம்.." என்றவளை திரும்பி பார்த்தபடி சட்டை பட்டன்களை கழட்டினான்..
"அதுக்காக அவங்க அப்படியே பேசட்டும்னு விட முடியுமா.. உன்னை யாராவது தப்பா பேசினா என்னால தாங்க முடியல.." என்று சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டி வைக்க விழி விரித்து பார்த்தாள் மாதவி..
இதென்ன வினோதமான பேச்சு.. இதுவரை மாமியார் பேசாத பேச்சுக்கள் இல்லை.. அத்தனையும் காதால் கேட்டு ஒரு வார்த்தை தனக்காக பேசாதவனுக்கு .. இப்போது மட்டும் ரத்தம் துடிக்கிறதா..?
"உணராதவங்க கிட்ட பேசி பயனில்லை.. இனி எனக்காக அவங்ககிட்ட சண்டை போட வேண்டாம்..!! விடுங்க.."
அவளருகே வந்து அமர்ந்தான் ஹரி.. "முழுக்க முழுக்க அண்ணி சொல்றதைதான் அண்ணன் கேட்கிறார்.. ஆனா அவரை பொண்டாட்டிதாசன்னு ஒருநாளும் இவங்க சொல்றதில்லையே.. நான் மட்டும் உன் பேச்சைக் கேட்க கூடாதுன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்.. அவங்க இப்படி உன்னை வெறுக்கிறதையும் தப்பா பேசறதையும் என்னால ஏத்துக்கவே முடியாது.." கோபம் கலந்த வார்த்தைகளோடு சொன்னவனின் விழிகளை ஊன்றி பார்த்தாள் மாதவி..
"என்ன அவங்க இவங்கன்னு வேற யாரோ மாதிரி அந்நியமா பேசறீங்க.. சொல்லப்போனா நான்தான் நேத்து வந்தவ.. அவங்க உங்களோட அம்மா..!! உங்க குடும்பத்தை விட்டுட்டு எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல.." மெதுவான குரலில் சொல்லி தலை தாழ்ந்து கொண்டாள்..
விரல்களால் அவள் தாடை தொட்டு முகத்தை நிமிர்த்தினான் ஹரி..
"நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாது.. நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னும் உனக்கு தெரியாது.. தெரிஞ்சா தாங்க மாட்டே கண்மணி..!!" என்று அவள் விழிகளுக்குள் கலந்து சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் வார்த்தைகளின் பொருளை ஆராய முடியாமல் தடுமாறியபடி விழித்துக் கொண்டிருந்தாள் மாதவி..
அவன் செய்யும் பணிவிடைகள் யாவும் அதிகப்படியாக தோன்றுகிறது.. திருமணமான நாள் முதல் இந்த குணம் இருந்திருந்தால் பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது.. ஆனால் ராட்சசனாக நடந்து கொண்டவன் இப்போது ரட்சனாக மாறி தன்னை பூஜிப்பதாக உணர்கிறாள்.. நடிப்பா இல்லை இதுதான் உண்மையா என்று புரியாமல் தடுமாறுகிறாள்..
தவிக்கிறாள்..
"நீங்க எப்படி இந்த அளவுக்கு மாறி போனீங்க..!! ஒரு காலத்துல என் நிழல் பட்டா கூட தோஷம்னு விலகி வெறுப்பா நடந்துக்கிட்டவர் நீங்க.. இப்போ என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட விலகவே மாட்டேங்கறீங்க.. இதெப்படி சாத்தியம்.. உண்மையிலேயே நீங்க என்னை காதலிக்கிறீங்களா..!! இல்லை இதெல்லாம் ஏதோ ஒரு நோக்கத்துக்காக நீங்க போடற நாடகமா..?" வீட்டு பக்கத்திலிருந்த பூங்காவில் அவள் கைகோர்த்து நடந்தபோது கேட்ட கேள்வி..
"என்ன நோக்கமா இருக்கும்னு நினைக்கிற.." புன்முறுவலோடு கேட்டான் ஹரி..
"அது..!!" என்றவள் சில கணங்கள் தயங்கி.. "உங்க பழைய காதலி ரோஷினி கூட பழகறதுக்கு நான் தடையாய் இருக்கேனா.. என்னை விவாகரத்து செய்யதுக்காகவோ.. இல்ல மொத்தமா உங்க வாழ்க்கைய விட்டு அனுப்புறதுக்காகவோ இந்த நாடகம் சரிதானே..?" அவள் கலக்கத்தோடு கேட்க பெரிதாக சிரித்தான் ஹரி.. வரிசை பற்களோடு கலகலவென்று சிரித்த அவன் முகத்தில்தான் எத்தனை வாத்சல்யம்.. இமைக்க மறந்தாள் மாதவி..
அவன் வெறுத்த காலங்களிலேயே ரசித்தவள்.. இப்போது நேசிக்கும் ஒருவனின் அழகை எப்படி வெறுக்க முடியும்..
கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லாமல் சிரித்துக் கொண்டிருப்பவனின் மீது எரிச்சல் வரவில்லை.. அவனை பார்க்க பார்க்க திகட்டவில்லை..
அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து சிரிப்பை தணித்து.. லேசான புன்னகையோடு நாவால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டே அவளை பார்த்தான்.. பதிலுக்காக காத்திருந்தாள் மாதவி..
"என் வாழ்க்கையை முழுமையாக்கப் போற உன்னை விட்டுட்டு முடிஞ்சு போன அத்தியாயங்களை நான் எதுக்காக தேடப் போறேன்.."
மாதவியின் இதழ்களில் கேலியான புன்னகை.. "நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு.. நம்பற மாதிரியே இல்லையே.. ரோஷினிக்காக என்கிட்ட எவ்வளவு சண்டை போட்டுருக்கீங்க..!! அவதான் வேணும்னு என்கிட்ட எவ்வளவு விவாதங்கள்.. மனசு உடைஞ்சு போய் எத்தனை நாள் அழுதிருக்கேன்.. இப்போ அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி நீங்க பேசுறது ரொம்ப வினோதமா தெரியுது.."
"பழசை பத்தி பேச வேண்டாமே மாது.. அதையெல்லாம் மறந்துடேன்.. இப்போ உன் கண் முன்னாடி என்ன நடக்குதோ அது மட்டும் தான் நிஜம்.. அதை மட்டும் நம்பு.." ஹரியின் குரல் குழைந்தது.. காதலோடு உருகியது..
"இவ்வளவு மாற்றம் எப்படி ஹரி.. என்னால நம்பவே முடியல.. நான் மட்டுமில்லை.. மத்தவங்களால கூட ஏத்துக்க முடியல.. உங்க மனசு இந்த அளவு மாறும்படி அப்படி என்னதான் நடந்துச்சு..!! உங்களுடைய இந்த மாற்றத்தை ஏத்துக்கவும் முடியாம.. இக்னோர் பண்ணவும் முடியாம குழம்பி தவிச்சு போறேன்.."
"நீங்க என் மேல காட்டின வெறுப்புக்கும்.. எனக்கு கொடுத்த காயங்களுக்கும் உன் முகத்திலேயே முழிக்க கூடாதுன்னு நினைச்சேன்.. ஆனா இப்ப நீங்க என்கிட்ட காட்டுற இந்த அன்பு.. உங்க கண்ணுல தெரியுற இந்த அளவுக்கதிகமான நேசம்.. உங்களை விட்டு விலக முடியாமல் மறுத்து பேச முடியாதபடிக்கு என்னை ஏதோ கட்டி போடுற மாதிரி இருக்கு.. உங்க அக்கறையும் காலை தொட்டு நீங்க செய்யற பணிவிடையும்.. உங்களை ரொம்பவே வித்தியாசப்படுத்தி காட்டுது.. ஏன் அப்படி..? தயவு செஞ்சு சொல்லுங்களேன் இல்லன்னா என் தலையே வெடிச்சிடும்.." புரியாமல் விழித்தவளை சிமெண்ட் இருக்கையில் அமர வைத்தான் ஹரி..
பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஒரு சில கணங்கள் அவள் முகத்தையே பார்த்தவன்.. "அந்த வானத்துல பாரு" என்று மேல் நோக்கி விரல் உயர்த்தினான்.
மாதவி நிமிர்ந்து ஆகாயத்தை பார்க்க அங்கு.. மாலை தன் கூட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தன பறவைகள்..
"அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அந்த பறவைகள் அங்கே இருந்ததா..?"
இல்லை என்ற தலையசைத்தாள் மாதவி..
"அப்போ இப்ப மட்டும் அந்த பறவைகள் எப்படி வந்துச்சு.. உன்னால காரணம் சொல்ல முடியுமா..?" மாதவி பதில் சொல்ல தெரியாமல் கண்களை சுருக்கினாள்..
"இல்லாத ஒரு தருணம் திடீர்னு தானே வந்துச்சு.. அதை உன்னால ஏத்துக்க முடியுது இல்ல.. சத்தமே இல்லாம திடீர்னு பூக்கற பூக்களையும்.. மண்ணை கீறி திடீர்னு விதையிலிருந்து முளைக்கிற குட்டி செடியையும் உன்னால ஏத்துக்க முடியும்னா.. நீ என் திடீர் மாற்றத்தையும் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்..!!"
"ஆனா எப்படி.. உங்க மனசு மாற என்ன காரணம் அதான் புரியல..?"
"சில சம்பவங்கள் நம் வாழ்க்கையை புரட்டி போட்டுடும்.. அப்படி ஒரு சம்பவம் தான்.. நான் உன் பக்கத்துல இப்படி உட்கார்ந்திருக்க காரணம்..!!"
"ஆனா..!!"
"உன்னோட அத்தனை ஆனாக்களுக்கும் என்கிட்ட இருந்து ஒரே பதில் தான்.." என்று நிறுத்தி அவள் கண்களை ஆழமாக பார்த்தான் ஹரி.. அதில் உறையத் துடித்த தன் மனதை மீட்டுக் கொண்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள் மாதவி..
"ஐ லவ் யூ என் கண்மணி.."
"ஐ லவ் யூ டு தி கோர்.. இதை நீ புரிஞ்சுக்கணும்.. எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும்.. நீ என்னை நம்பனும்.. அவ்வளவுதான்..!! இதுக்கு மேல வேற எதுவும் கேட்காதே மாதவி.. வீட்டுக்கு போகலாம்.. நேரமாச்சு.." எழுப்பி அவளை அழைத்துக் கொண்டு நடந்தான் ஹரி..
தொடரும்..