• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
கை வைத்தியம் பல செய்தாலும் மருந்து மாத்திரைகள் உட் கொண்டாலும் குணமாகாத காய்ச்சல் மருத்துவமனை வாசலை எட்டியவுடன் தெறித்து ஓடிவிடும் மாயங்கள் நிகழ்வதுண்டு..

மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் குணமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் சூட்சுமம்..

வருண் மீது சூர்ய தேவ் கொண்ட அந்த நம்பிக்கைதான் கமலியின் பக்கம் அவனை செவி சாய்க்க வைத்திருக்கிறது..

சினிமாவில் உணர்ச்சிகரமான காட்சிகளின் போது நம்மையும் அறியாமல் மயிர் கூச்செரிவதை போல் அவள் பேசியதை கேட்டு அவனுக்குள் ஏதோ சின்ன சின்ன மாற்றங்கள்.. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டுமளவிற்கு அவன் ஒன்றும் பெருந்தன்மையானவன் அல்லவே..!!

அவளை தன்னறைக்கு அழைத்தான்..

"என்ன மேடம்.. உங்க இஷ்டத்துக்கு ஏதேதோ ஹோப் குடுத்து அந்த பொண்ண தவறான பாதையில கூட்டிட்டு போறீங்களோனு எனக்கு தோணுது.." என்றான் நக்கலாக..

"என்ன சொல்றீங்க டாக்டர்.. ஒண்ணுமே புரியலையே..?" கமலியின் கேள்வியில் அவன் முகம் மாறியது..

"என்ன புரியல..? நான் வாய்ப்பில்லைன்னு ரிப்போர்ட் தந்த பிறகும் அதிசயம் நடக்கும்னு சொன்னா என்ன அர்த்தம்.. சோ நீங்க அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கும்னு சொல்றீங்க அப்படித்தானே.. மெடிக்கல் ஃபீல்டுல இருந்துகிட்டு ஒரு டாக்டரோட ஸ்டேட்மெண்ட் தப்புன்னு சொல்றது குற்றம்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா.. இதுக்காக நான் உங்களை பனிஷ் பண்ணலாம்.." அவன் புருவங்களை உயர்த்தினான்..

"உங்க ரிப்போர்ட் தப்புன்னு நான் எப்ப சொன்னேன் டாக்டர்..!!"

"அடடா சூப்பர்.. நல்லாவே பேச்சை மாத்தறீங்க.." நக்கலாக உதடு வளைத்தான்..

"சாரி டாக்டர் மாத்தி பேசும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்ல.. அதிசயம் நடக்கும்ன்னு சொன்னேன்.. அது குழந்தை பிறப்பா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. அந்த பொண்ணோட வாழ்க்கையில் சந்தோஷத்தை நிகழ்த்தக்கூடிய வேறு ஏதாவது தருணமா கூட இருக்கலாம்.."

"ஓஹோ நீங்க அப்படித்தான் சொல்ல வந்தீங்களா..?" கேலியாக புருவம் உயர்த்தினான்..

"குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.. அந்த அர்த்ததிலும் சேர்த்துதான் சொன்னேன்.." இயல்பாக தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"சோ.. ஹாஸ்பிடல் ரிப்போர்ட் தப்பு.. என்னோட ட்ரீட்மென்ட் பொய்.. நான் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்ன ஸ்ட்ரீட்மென்ட் கம்ப்ளீட்லி ராங் அப்படித்தானே சொல்ல வரீங்க..?"

"இல்லையே டாக்டர்.. இன்னைக்கு நீங்க கொடுத்த ஸ்டேட்மென்ட் ரிப்போர்ட் எல்லாமே சரியா இருக்கலாம்.. ஆனா நாளைக்கு அந்த பெண்ணோட கர்ப்ப பையில மாற்றங்கள் ஏற்படலாம் இல்லையா..!! மாற்றம் ஒன்றுதானே டாக்டர் மாறாதது.."

"வாட் ரப்பிஷ் அது எப்படி நடக்கும்..?" மார்பின் முன் கைகளை மடித்து கட்டிய படி அவன் நக்கலாக கேட்க..

"ஏன் நடக்காது டாக்டர்.. கீழ்கோர்ட்ல தோத்துப்போன ஒரு கேஸ்.. சுப்ரீம் கோர்ட்ல மறுபடியும் ரீ அப்பீல் பண்ணி ஜெயிக்கிறது இல்லையா.. அதுக்காக கீழ் கோர்ட் தீர்ப்பு தப்புன்னு ஆகிடாது.. அந்த நேரத்துல வாதி பிரதிவாதிக்கிடையில் வைக்கப்பட்ட ஆதாரங்கள்.. சாட்சி.. வக்கீல் ஆர்கியுமென்ட்.. எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு தீர்ப்பை கொடுக்க வைச்சிருக்கலாம்.."

"அந்த மாதிரிதான்.. நாம கீழ் கோர்ட்.. அவங்க உடம்பை அப்படியே பரிசோதனை செய்து உண்மை நிலவரத்தை சொல்றோம்.. ஆனா மேல் கோர்ட்டுனு ஒன்னு இருக்கு.. அந்த கடவுள் என்னை எழுதி வச்சிருக்கானோ அதுதான் தீர்ப்பு.."

"நீங்க நர்ஸ்.. சாமியாரினி மாதிரி பேசுறீங்க.. அறிவியலை மீறி எந்த அதிசயமும் நடந்திடாது.. இனிமே இந்த மாதிரி ஃபேக் ஹோப் கொடுக்கிறதை நிறுத்துங்க.. திரும்ப இது ரிப்பீடாச்சுன்னா.. நீங்க மருத்துவத்துக்கு எதிராக கொள்கை பரப்புறிங்கன்னு மெடிக்கல் அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது வரும்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.." என்றான் அழுத்தமாக..

"சாரி டாக்டர்.. நான் சரியாத்தான் இருக்கேன்.. உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க..!! நான் தப்பு செய்றேன்னு தோணுச்சுன்னா.. என்னை வேலையை விட்டு நீக்கிடலாம்.." நிமிர்வாகச் சொன்னாள் கமலி..

முதன்முறையாக ஒருத்தி தைரியமாக எதிர்த்து பேசுகிறாள்..

சுத்தமாக பிடிக்கவில்லை.. கொஞ்சம் பிடிக்கிறது..

"நீங்க தப்பு மட்டும் தான் செய்யறீங்க கமலி.."

"லாஸ்ட் வீக் ஒரு அபார்ஷன் கேஸ்.. அவங்க கிட்ட என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா..?" பேப்பர் வெயிட்டை உருட்டியபடி கேட்டான்..

"ஓஹ்.. நல்லாவே ஞாபகம் இருக்கு.." என்ற கமலி அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள்..

முதல் குழந்தை ஒன்றே போதும் என்ற நிலையில்.. அந்தப் பெண் கருக்கலைப்பிற்காக வந்திருந்தாள்..

"இங்க பாருங்கம்மா.. அபார்ஷன் பண்ணிக்கறது உங்க உரிமை.. நான் தலையிடல.. ஆனா குழந்தை இல்லாம எத்தனையோ தம்பதிகள் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்ன்னு அலைஞ்சிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா வயித்துல வளர்ற குழந்தையை வேண்டாம்னு சொல்றீங்க.. ஒரு உயிரை வேண்டாம்னு கொல்றது தப்புனு உங்களுக்கு தோணலையா..!!" கமலி தயக்கத்தோடு ஆரம்பித்தாள்..

அந்தப் பெண் திரு திருவென விழித்தாள்.. ஏற்கனவே அவளுக்குள் குற்ற உணர்ச்சி.. இதில் கமலி வேறு அவள் அடிமன குறுகுறுப்பை கிளறி விட்டதில் திணறலோடு..

"அபார்ஷன் ஒண்ணும் தப்பில்லையே.. பெத்து அந்த குழந்தையையும் சரியா வளர்க்க முடியாமல் போறதுக்கு.. பெத்துக்காம இருக்கிறது பெட்டர் இல்லையா.. எங்களுக்கு இந்த ஒரு குழந்தையே போதும்னு முடிவு பண்ணிட்டோம்.." என்றாள் அவள்..

"அப்ப நீங்க அதுக்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. 12 வீக்ஸ் கிட்ட ஆகிட்டது.. கை கால் எல்லாம் முழுசா வளர்ந்த ஒரு குட்டி சிசு.. ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க.. நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன் பதில் சொல்றீங்களா..?"

"கே.. கேளுங்க சிஸ்டர்.."

"உங்க. முத குழந்தைக்கு எத்தனை வயசு.."

"ஐஞ்சு..!!"

"உங்களுக்கு ரெண்டு குழந்தைல ஒரு குழந்தை தான் வேணும்னா.. வயித்துல இருக்கற குழந்தையை அழிக்காம உங்க மூத்த குழந்தையை.."

"ஐயோ சிஸ்டர் வேண்டாம் அப்படியெல்லாம் சொல்லாதீங்க.." அந்தப் பெண்ணின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை சுரந்தது..

கமலி வெறுமையாய் புன்னகைத்தாள்..

"உங்க முதல் குழந்தை மேல இருக்கிற அட்டாச்மென்ட் ஏன் வயித்துல இருக்கற இந்த குழந்தை மேல இல்லாம போச்சு.. இதுவும் உங்க குழந்தை தானேம்மா.. உங்களை நம்பி தானே.. சின்ன சின்ன கனவுகளுடன் உங்க வயித்துல வளர்ந்துட்டு இருக்குது.. அந்த குழந்தையை அழிக்கறது அந்த சின்ன உயிருக்கு நீங்க செய்யற துரோகம் இல்லையா..?"

கண்ணீரோடு நிமிர்ந்தாள் அந்த பெண்..

"குழந்தை இல்லாம ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலா அலையற தம்பதிகளை பார்த்தா இப்படி ஒரு காரியத்தை செய்ய உங்களுக்கு துணிவு வராது.." என்றாள் துக்கம் தொண்டைக்குள் அடைக்க..

அந்த பெண் கண்ணீரை துடைத்துக் கொண்டு கமலியை பார்த்தாள்..

"வளர்க்க சிரமம்னு சொல்றீங்க..
அத்தனை கஷ்டங்களையும் தாங்கி குழந்தைகளை வளக்கறவங்கதானே பெத்தவங்க.. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.." கமலி சொல்லிவிட்டு செல்ல அந்தப் பெண் அப்படியே யுடர்ன் எடுத்து வீட்டுக்கு சென்று விட்டாள்..

அந்தப் பெண்ணின் கணவர் நம் மருத்துவர் சூர்ய தேவ்வுக்கு அழைத்து.. "நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன் கேக்கல.. நீங்க என்ன சொன்னீங்களோ தெரியல.. என் வைஃப் இந்த குழந்தையை பெத்துக்க சம்மதிச்சுட்டா.. தேங்க்யூ சோ மச் டாக்டர்" என்று.. அலைபேசியிலேயே முத்தமிடாத குறையாக நன்றி சொல்ல.. காரண கர்த்தா யார் என்று அவனுக்கு புரிந்து போனது.. அன்றைய நாளில் அது பற்றி அவன் பேசவில்லை.. இப்போது அந்த வழக்கையும் எழுத்து நடுவில் வைத்திருந்தான்.‌.

"டாக்டர் நான் நல்லது தான் செஞ்சேன்.."

"திருமணமான ஒரு பொண்ணுக்கு அவங்க விருப்பப்படி குழந்தை வேண்டாம்னா அபார்ஷன் பண்ணிக்க எல்லா உரிமையும் உண்டு.. அதுல தலையிட நீங்க யாரு..?" அவளை மடக்கினான் மருத்துவன்..

"நான் அவங்களை அபார்ட் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லல.. அதுல இருக்கிற நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி யோசிக்க சொன்னேன்.."

"அவங்கள யோசிக்க சொல்ல நீங்க யாரு.. முடிவெடுத்த பிறகுதானே இங்க வந்தாங்க..!! பேஷன்ட்டை மேனிபுலேட் பண்ணி வேறு மாதிரியா திசை திருப்பி விடுறது தப்பு தெரியுமா..?"

கமலி அமைதியாக நின்றாள்.. இவனிடம் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை..

"ஹாஸ்பிடல் ரூல்ஸ்க்கு எதிரா பல விஷயங்கள் செய்யறீங்க.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. இதுக்கு அப்புறமா நீங்க ஒழுங்கா இல்லைனா உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டியது வரும் யூ மே கோ நவ்..!!" என்றான் கடுமையான குரலில்..

அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் கமலி..

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவனை தன் பக்கம் முழு முற்றாக திருப்பிக் கொண்டிருக்கிறாள் கமலி..

அழகினால் அல்ல கவர்ச்சியால் அல்ல.. தன் செயல்களால்.. நன்னடத்தையால்.. அவள் செயல்கள் அவன் விதிகளுக்கு அப்பாற்பட்டு எரிச்சலை தந்தாலும் அதில் விளையும் நன்மைகள்.. அவன் கருத்தைக் கவர்கின்றன..

"அமைதியா இரு சூர்யா.. இவ எந்த எல்லை வரை போறான்னு பார்க்கலாம்.. கோ வித் த ஃப்ளோ.." தன் இதயத்தில் கை வைத்து தட்டிக் கொண்டான்..

"எத்தனை முறை கோலத்தை அழித்துவிடுகிறேனே.. இவளுக்கு சூடு சொரணை ரோஷம் இதெல்லாம் இருக்குமா.. இருக்காதா..?" சூர்ய தேவ்வுக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறுகிறது..

அதிலும் சில நேரங்களில் மான்களும் மயில்களுமாய் அச்சடித்தாற் போல் வரைந்து வண்ணம் தீட்டி வைத்திருக்கையில் தண்ணீரை ஊற்றி வர்ண கோலங்களை கலைக்க சங்கடமாய் போகிறது.. அந்த சங்கடமும் தயக்கமும் தான் அவள் வெற்றியோ..?

ஆனாலும் மனசாட்சி இல்லாமல் என் வீடு என் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்ற மமதையில் அந்த கோலத்தையும் கலைத்து விட்டுதான் செல்கிறான்..

வேலைக்கு செல்ல படியிறங்கி வரும் போது தண்ணீர் மட்டும் வழிந்தோடும் அந்த வாசலை பார்ப்பவள்..

"இந்த ஆளுக்கு மனசு இரும்பிலதான் செஞ்சிருக்கணும்.. இல்லைனா இப்படி ஒரு கோலத்தை அழிக்க மனசு வருமா.. அழகை ரசிக்க தெரியாத இவருக்கெல்லாம் நிச்சயமா சொர்க்கத்துல இடம் கிடைக்காது.." என்று சபித்துவிட்டு அவன் வீட்டை கடந்து செல்வாள்..

"அந்த மனுஷன் தான் கோலம் போட்டாலே அழிச்சு விடுறாருன்னு சொல்ற.. அப்புறம் எதுக்குடி வேலை மெனக்கிட்டு இடுப்பு ஒடிய கோலம் போடுற..?" மாயா அங்கலாய்ப்பாள்..

"கோலம் போடுறது எனக்கு ரிலாக்சேஷன்.. கீழதான் பெரிய வாசல் இருக்கு.. அப்படியே அழகா ரங்கோலி வரைஞ்சு தூரத்திலருந்து பார்க்கும்போது மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாரு..!! அதுக்காக எவ்வளவு வேணா கஷ்டப்படலாம்னு தோணுது.. என்னோட சந்தோஷத்துக்காக கோலம் போடுறேன்.. அவர் சந்தோஷத்துக்கு கலைச்சிட்டு போகட்டுமே..!!" மாயாவிடம் இப்படி சொல்லி அந்த பேச்சை கத்தரித்து விடுவாள்..

அன்று இரவு உணவுக்காய் சமைத்துக் கொண்டிருந்தாள்..

"ஒரு கரண்டி தோசை மாவு தான் இருக்கிறது.. அத்தோடு ஒரு கரண்டி ரவையை சேர்த்து.. சரியான பதத்தில் தோசை கல்லில் ஊற்றி.. பொடிப்பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை தூவி பொன்னிறமாக வார்த்து எடுத்தால்.. ம்ம்.. முறுகல் வாசனையோடு சுவையை நெஞ்சுக்குள் நினைத்து சிலாகித்தவள்..‌ காம்பினேஷன் தேங்காய் சட்னி.. வாவ்.. என்று தேங்காயை கீறி துண்டுகள் போட ஆரம்பித்தாள்..

செல்போனில்..

நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே

நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கேசென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்..

பாடலை ஓட விட்டு அதற்கேற்றார் போல் நடனமாடிக் கொண்டே சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

பாடல் நின்று அழைப்பு வர.. எரிச்சலானவள்.. "இந்த மாயாவுக்கு வேற வேலையே இல்ல.." என்ற சலிப்போடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

"ஹலோ கமலி.."

அஷோக் குரல்..

இதயம் ஒரு கணம் நின்று துடிக்க பின் மண்டையில் சூடேறியது.. சொல்லப்போனால் கிட்டத்தட்ட இத்தனை நாட்களில் அவனை மறந்து போயிருந்தாள்.. சூர்ய தேவ்வோடு சண்டை.. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. மருத்துவமனை.. கடமை.. இளையராஜா பாடல்.. என அத்தனையும் அவளை சுழட்டியடித்ததில் அஷோக் என்பவனின் நினைவு வராமல் போனது..

"எப்படி இருக்க கமலி..?"

இதயத்துடிப்பின் வேகம் கூடியது.. தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள் அழைப்பை துண்டிப்பதற்காக முயன்ற வேளையில்..

"ஃபோனை வச்சுடாத கமலி..!! எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் அவன்..

"எனக்கு உங்ககிட்ட பேச ஒன்னும் இல்ல.. அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே.. நான் ஃபோனை வைக்கறேன்.." என்றது கமலியின் சீரான குரல்..

"முடிஞ்சு போச்சா.. என்ன முடிஞ்சு போச்சு.. நம்ம வாழ்ந்த வாழ்க்கை..!! அதை அவ்வளவு சீக்கிரமாக உன்னால மறந்துட முடியுமா.." அவன் குரல் உருகியது.. அவனுக்கு கமலியும் வேண்டும் அவன் இரண்டாவது மனைவியும் வேண்டும்..

"அதான் நீங்க மறந்துட்டீங்களே..!! நான் மட்டும் ஞாபகம் வச்சிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு..?" என்றாள் அவள் விட்டேத்தியாக..

"நான் மறந்துட்டேன்னு யார் சொன்னா கமலி.. இப்பவும் நான் உனக்காக மட்டும் தான் யோசிக்கறேன்.. குறைந்தபட்சம் ஒரு நண்பனாகவாச்சும் என்னை ஏத்துக்கோ.. என்னை விட்டு உன்னால வாழவே முடியாது.. உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவன் நான்.. நீ என்னால வேதனையில் தவிக்கிறதை பார்த்துட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு..!!" அவள் பலவீனமான பக்கங்களில் சாட்டையை விலாசினான்.. அவள் துடிக்கவில்லை.. அலட்சியமாக சிரித்தாள்.. இந்த பேச்சில் அவன் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வெறி தலை தூக்கியது..

"பகல் கனவு காணுறீங்க மிஸ்டர் அஷோக்.. நான் சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்.. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க..!!" அவள் திடமான குரலில் சொல்ல..

"என்னங்க.. யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.." அலைபேசிக்கு அந்தப் பக்கம் ஒரு பெண் குரல்..

"டாடா.." என்று ஒரு பெண் குழந்தையின் குரலும்..

"இருடா செல்லம்.. டாடி ஃபோன்ல பேசிட்டு இருக்கேன் இல்ல.. டிஸ்டர்ப் பண்ணாதீங்கடி பட்டு.." அஷோக் தன் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்..

மழலையோடு பாப்பா அவனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க இங்கே உயிர் துடித்து கருகினாள் கமலி..

"பாப்பா உங்களை விடவே மாட்டேங்கறா.. நான் என்ன செய்ய முடியும்.." அவன் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரியின் குற்ற உணர்ச்சியில்லாத சந்தோஷக் குரல்..

அரும்பாடு பட்டு ஒன்று சேர்த்து ஒட்ட வைத்திருந்த இதயம் மீண்டும் பலத்த சேதாரத்துடன் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது..

தன் மனதை புண்படுத்துவதற்காகவே அஷோக் இப்படி செய்கிறான் என்று புரிந்து போனது.. தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதாக காட்டிக் கொள்வதில்.. தன் வேதனையை கிளறுவதில் அப்படி ஒரு அலாதி ஆனந்தம்.. விவாகரத்து கேட்டது நீதானே என்ற குற்றச்சாட்டை கையில் வைத்திருக்கிறான்..

அவன் என்னை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.. விவாகரத்திற்கான முதல் படி அவனுடையதாக இருந்திருக்க வேண்டும்.. அவன்தான் என்னை காலால் எட்டி உதைத்திருக்க வேண்டும்..

ஆனால் அதற்கு நேர் மாறாக நான் அவனை வேண்டாம் என்று நிராகரித்து தலை நிமிர்வோடு விலகிச் சென்றதில்.. ஆண் என்ற அகம்பாவம் அடி வாங்கியதில்.. இப்படி ஃபோன் போட்டு அவள் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்..

இத்தனை நேரம் தெளிவாக பேசியவள் இந்த நொடியில் துவண்டு போனாள்.. இதயத்தை யாரோ அடித்து நொறுக்கியதை போல் அப்படி ஒரு வலி.. அசோக் மீது காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை..‌

ஆனால் எதிர் முனையில்.. துரோகத்தில் விளைந்த சந்தோஷங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறன..

இதோ அவன் மடியில் சிரித்துக் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த மழலை ராஜேஸ்வரியின் வயிற்றிலிருந்த போதே தன் இதயத்திலிருந்து பெற்றெடுத்த குழந்தையாக மானசீகமாக ஸ்வீகாரம் செய்து.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பிள்ளையின் வரவுக்காய் காத்திருந்தாள் கமலி..

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே..!! அவள் இருந்த இடத்தில் இன்னொருத்தி.. என் பிள்ளை என்று பெறாத தாயாக அவளால் உரிமை கொண்டாடப்பட்ட அந்த குழந்தை இனி அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தம்.. நான் மட்டும் குறையுள்ளவள்.. "அதான் என்னை ஒதுக்கிட்டாங்க.. எத்தனையோ பேரை தன் திடமான வார்த்தைகளால் தாங்கி பிடித்தவளால் இந்த நொடி எவ்வளவு முயன்றும் தன்னை மீட்டுக்கொள்ள இயலவில்லை..

அழைப்பை துண்டித்து விட்டாள்.. அஷோக் எதற்காக அழைத்திருந்தானோ அந்த காரியம் வெற்றி கரமாக முடிந்திருந்தது..

கண்ணீரும் சின்ன சின்ன விம்மலுமாய் ஆரம்பித்த அழுகை எங்கே உடைந்து பீறிட்டதோ அவள் அறியாள்.. வாய் விட்டு அழத்தான் வேண்டும்.. இல்லையேல் இதயம் வெடித்து விடும்..

அழுதாள்.. அழுதாள்.. அழுது கொண்டே இருந்தாள்..

முன்னூறு நாள் கர்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளும் நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடு வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்..
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்

பெறாமலே பெரும் சுகம் நீயே..

அலைபேசியில் பாடல் ஆட்டோ பிளே மூலமாக இளையராஜாவிடமிருந்து டிராக் மாறி தேவாவிடம் தாவியது..

அழுகையை நிறுத்திவிட்டு செல்போன் பக்கம் பார்த்தாள் கமலி..

பெண் குழந்தை ஆசையில் தன் கணவனின் உயிரை சுமக்கும் ராஜேஸ்வரியின் வயிற்றில் கை வைத்து ஒவ்வொரு முறை அவள் சிலிர்க்கும் போதும் மனதிற்குள் தோன்றும் பாடல் வரிகள் இவை..

ஒரு கணம் மட்டுமே நின்ற அழுகை மீண்டும் வெடித்தது.. சிறு குழந்தையாய் தேற்ற ஆளின்றி தனியறையில் அழுது கொண்டிருந்தாள் அவள்..

"ஹலோ கதவை திறங்க..!! இவ்வளவு சவுண்டா பாட்டு வச்சிருக்கீங்க.. எனக்கு மண்டையே வெடிக்குது.. ஏய் இப்ப கதவை திறக்க போறியா இல்லையா..?"

எப்போதும் மரியாதையுடன் பேசும் குரல் இப்போது ஒருமைக்கு தாவியிருந்தது..

ஏற்கனவே உச்சகட்ட விரக்தியில் இருந்தவள்.. கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு வந்து கதவை திறந்தாள்..

"அறிவில்லையா உனக்கு.. அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருக்காங்க ஞாபகம் இருக்கா இல்லையா.." பற்களை கடித்து ஆத்திரத்தோடு ஆரம்பித்தவன் அவள் அழுது அழுது ஓய்ந்த விழிகளை பார்த்து ஒருகணம் பேச்சற்று போனான்..

"என்ன.. என்ன வேணும் உங்களுக்கு..?" அவள் விம்மினாள்..

"நான் சந்தோஷமாவே இருக்க கூடாது.. உங்க எல்லாருக்குமே அதுதானே வேணும்.. சரி பாட்டு கேக்கல.."

"பா..ட்டு கேக்கல.." அடி வயிற்றிலிருந்து கத்தினாள்..

அழுகையில் பிதுங்கிய உதடுகளை அரும்பாடு பட்டு இறுக்கி மூடிக்கொண்டவள்..

"பாட்டு கேக்கல சார்.. இனிமே எப்பவுமே கேக்க மாட்டேன்.. நீங்க சந்தோஷமாவே இருங்க.. அடுப்படி திண்டில் வைத்திருந்த அலைபேசியை கொண்டு வந்து.. அவன் முன்னால் வேகமாக வீசி எறிந்தாள்..

மூலைக்கொரு துண்டாக உடைந்து சிதறியது அவள் அலைபேசி..

சூர்ய தேவ் விதிர்த்து போய் நின்றிருந்தான்..

அவளிடமிருந்து வெளிப்பட்ட அளவு கடந்த ஆத்திரம் அந்த ஆத்திரத்தை மீறி கசிந்த கண்ணீர்.. அவனை ஏதோ செய்தது..

"இன்னும் என்ன செய்யணும் சார்.. நான் வேணும்னா செத்துப்போகட்டுமா.. !! என்னால உங்களுக்கு இனி எந்த தொல்லையும் இருக்காது.." சம்பந்தமே இல்லாமல் ஆற்றாமையோடு வெடித்தன வார்த்தைகள்..‌

தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான் சூர்ய தேவ்..

யோசனையோடு வீட்டுக்கு வந்தவன் அந்த அழுத முகத்தை மறக்கத்தான் நினைத்தான் முடியவில்லை.. பல பேரை சிரிக்க வைத்த முகம் அது.. இன்று அழுது கொண்டிருக்கிறது.. அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் இனம் புரியாத சஞ்சலம்..

அடுத்தடுத்த நாட்களில் வாசல் கோலமின்றி வெறுமையாக வறண்டு கிடந்தது..

ஜாகிங் செல்லும்போது ஒரு கணம் நின்று அந்த இடத்தை பார்த்தவன் பிறகு அதை கடந்து சென்றிருந்தான்...

அடுத்த மூன்று நாட்களும் வெறும் வாசல்.. இன்னைக்கும் கோலம் போடல என்று பரிதாபமாய் அவனை பார்த்து புகார் அளிப்பதாய் தோன்றியது..

"இதுக்கெல்லாம் பெருசா முக்கியத்துவம் கொடுக்காத சூர்ய தேவ்.. யார் எப்படி போனா உனக்கென்ன..?" மனதை தட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டான்..

மருத்துவமனையில் அவன் கண்காணித்தவரை கமலி தன் வேலைகளை சரியாக செய்தாள்.. ஒரு குறை கண்டுபிடிக்க முடியவில்லை..!!

மறுநாள் காலையில்.. ஏதோ ஒரு உந்துதலில் ஜன்னலை திறந்தான்..

சோகச் சாயலோடு.. முடி கற்றைகள் முகத்தில் விழ அதை ஒதுக்கிய படி.. கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கமலி..

அவன் இதயத்தில் ஜிவ்வென்று ஏதோ ஒன்று உச்சத்திற்கு ஏறி நின்றது..

அடிக்கடி கசிந்த விழிகளை துடைத்துக் கொண்டு.. கோலத்துக்கு கலர் பொடிகளை தூவி கொண்டிருந்தாள்.. கருப்படித்துப் போயிருக்கும் அவள் உடைந்த இதயத்தையும் புதுப்பிக்கும் முயற்சியாக இருக்கலாம்..

கோலம் போட்டுக் கொண்டிருந்த ஓவியப் பெண்ணை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

எழுந்து நின்று ஆழ்ந்த மூச்சோடு அந்தக் கோலத்தை தலை சாய்த்து பார்த்தாள்.. பிறகு மாடியேறி சென்று விட்டாள்..

அவள் சென்ற பிறகு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் சூர்ய தேவ்..

"இவ இஷ்டத்துக்கு வந்து கோலம் போட்டுட்டு போகத்தான் நான் வீடு கட்டி வச்சிருக்கேனா..?" அவனுள்ளிருந்த வழக்கமான சாத்தான் தலை தூக்கியது..

ஹோல்ஸ் பைப்பை எடுத்து வந்து கோலத்தின் மேல் வைத்தவன்.. என்ன நினைத்தானோ.. தண்ணீர் வரும் பகுதியை விரல்களால் மூடிக்கொண்டான்.. அந்த ரங்கோலி கோலத்தையும் வர்ணஜாலங்களையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்..

வண்ணங்களை மீறி அவள் அழுதமுகம் ஓவியக் கோலமாய் கண்முன் விரிந்து நின்றது..

அமைதியாக ஹோல்ஸ் பைப்பை தூக்கி ஓரம் போட்டுவிட்டு.. அவள் வரைந்த கோலத்தை மிதிக்காமல் அதை பார்த்துக் கொண்டே பக்கவாட்டில் நடந்து கேட்டை கடந்து சென்றிருந்தான்..

செக்யூரிட்டி காணாத அதிசயத்தை கண்டது போல் அகலமாக விழிகளை விரித்து அந்தக் கோலத்தையும்.. வாயிலை கடந்து சென்றவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 10, 2024
Messages
67
கை வைத்தியம் செய்தாலும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் குணமாகாத காய்ச்சல் மருத்துவமனை வாசலை எட்டியவுடன் குணமாகும் மாயமும் உண்டு..

மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் குணமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் சூட்சமம்..

வருண் மீது சூர்ய தேவ் கொண்ட அந்த நம்பிக்கைதான் கமலியின் பக்கம் அவனை செவி சாய்க்க வைத்திருக்கிறது..

சினிமாவில் உணர்ச்சிகரமான காட்சிகளை போது நம்மையும் அறியாமல் மயிர் கூச்செரிவதை போல் அவள் பேசியதை கேட்டு அவனுக்குள் ஏதோ சின்ன சின்ன மாற்றங்கள்.. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டுமளவிற்கு அவன் ஒன்றும் பெருந்தன்மையானவன் அல்லவே..!!

அவளை தன்னறைக்கு அழைத்தான்..

"என்ன மேடம்.. உங்க இஷ்டத்துக்கு ஏதேதோ ஹோப் குடுத்து அந்த பொண்ண தவறான பாதையில கூட்டிட்டு போறீங்களோனு எனக்கு தோணுது.." என்றான் நக்கலாக..

"என்ன சொல்றீங்க டாக்டர்.. ஒண்ணுமே புரியலையே..?" கமலியின் கேள்வியில் அவன் முகம் மாறியது..

"என்ன புரியல.. நான் வாய்ப்பில்லைன்னு சொன்ன பிறகும் அதிசயம் நடக்கும்னா என்ன அர்த்தம்.. சோ நீங்க அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கும்னு சொல்றீங்க அப்படித்தானே.. மெடிக்கல் ஃபீல்டுல இருந்துகிட்டு ஒரு டாக்டரோட ஸ்டேட்மெண்ட் தப்புன்னு சொல்றது குற்றம்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா.. இதுக்காக நான் உங்களை பனிஷ் பண்ணலாம்.." அவன் புருவங்களை உயர்த்தினான்..

"உங்க ரிப்போர்ட் தப்புன்னு நான் எப்ப சொன்னேன் டாக்டர்..!!"

"அடடா சூப்பர்.. நல்லாவே பேச்சை மாத்துறீங்க.."

"சாரி டாக்டர் மாத்தி பேசும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது.. அதிசயம் நடக்கும் என்று சொன்னேன்.. அது குழந்தை பிறப்பா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. அந்த பொண்ணோட வாழ்க்கையில் சந்தோஷத்தை நிகழ்த்தக்கூடிய வேறு எந்த சம்பவமாக கூட இருக்கலாம்.."

"ஓஹோ நீங்க அப்படித்தான் சொல்ல வந்தீங்களா..?" கேலியாக புருவம் உயர்த்தினான்..

"குழந்தை பிறக்க வாய்ப்புண்டு அந்த அர்த்ததிலும் சேர்த்துதான் சொன்னேன்.." இயல்பாக தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"சோ.. ஹாஸ்பிடல் ரிப்போர்ட் தப்பு என்னோட ட்ரீட்மென்ட் பொய்.. நான் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்ன ஸ்ட்ரீட்மென்ட் கம்ப்ளீட்லி ராங் அப்படித்தானே சொல்ல வரீங்க..?"

"இல்லையே டாக்டர்.. இன்னைக்கு நீங்க கொடுத்த ஸ்டேட்மென்ட் ரிப்போர்ட் எல்லாமே சரியா இருக்கலாம்.. ஆனா நாளைக்கு அந்த பெண்ணோட கர்ப்ப பையில மாற்றங்கள் ஏற்படலாம் இல்லையா..!! மாற்றம் ஒன்றுதானே டாக்டர் மாறாதது.."

"வாட் ரப்பிஷ் அது எப்படி நடக்கும்..?" மார்பின் முன் கைகளை மடித்து கட்டிய படி அவன் நக்கலாக கேட்க..

"ஏன் நடக்காது டாக்டர்.. கீழ்கோர்ட்ல தோத்துப்போன ஒரு கேஸ்.. சுப்ரீம் கோர்ட்ல மறுபடியும் ரீ அப்பீல் பண்ணி ஜெயிக்கிறது இல்லையா.. அதுக்காக கீழ் கோர்ட் தீர்ப்பு தப்புன்னு ஆகிடாது.. அந்த நேரத்துல வாதி பிரதிவாதிக்கிடையில் வைக்கப்பட்ட ஆதாரங்கள்.. சாட்சி.. வக்கீல் ஆர்கியுமென்ட்.. எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு தீர்ப்பை கொடுக்க வைச்சிருக்கலாம்.."

"அந்த மாதிரிதான்.. நாம கீழ் கோர்ட்.. அவங்க உடம்பை அப்படியே பரிசோதனை செய்து உண்மை நிலவரத்தை சொல்றோம்.. ஆனா மேல் கோர்ட்டுனு ஒன்னு இருக்கு.. அந்த கடவுள் என்னை எழுதி வச்சிருக்கானோ அதுதான் தீர்ப்பு.."

"நீங்க நர்ஸ்.. சாமியாரினி மாதிரி பேசுறீங்க.. அறிவியலை மீறி எந்த அதிசயமும் நடக்காது.. இனிமே இந்த மாதிரி ஃபேக் ஹோப் கொடுக்கிறதை நிறுத்துங்க.. திரும்ப இது ரிப்பீடாச்சுன்னா.. நீங்க மருத்துவத்துக்கு எதிராக கொள்கை பரப்புறிங்கன்னு மெடிக்கல் அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது வரும்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.." என்றான் அழுத்தமாக..

"சாரி டாக்டர்.. நான் சரியாத்தான் இருக்கேன்.. உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க..!! நான் தப்பு செய்றேன்னு தோணுச்சுன்னா.. என்னை வேலையை விட்டு நீக்கிடலாம்.." நிமிர்வாகச் சொன்னாள் கமலி..

முதன்முறையாக ஒருத்தி தைரியமாக எதிர்த்து பேசுகிறாள்..

சுத்தமாக பிடிக்கவில்லை.. கொஞ்சம் பிடிக்கிறது..

"நீங்க தப்பு மட்டும் தான் செய்றீங்க கமலி.."

"லாஸ்ட் வீக் ஒரு அபார்ஷன் கேஸ்.. அவங்க கிட்ட என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா..?" பேப்பர் வெயிட்டை உருட்டியபடி கேட்டான்..

"ஓஹ்.. நல்லாவே ஞாபகம் இருக்கு.." என்ற கமலி அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள்..

முதல் குழந்தை ஒன்றே போதும் என்ற நிலையில்.. அந்தப் பெண் கருக்கலைப்பிற்காக வந்திருந்தாள்..

"இங்க பாருங்கம்மா.. அபார்ஷன் பண்ணிக்கறது உங்க உரிமை.. நான் தலையிடல.. ஆனா குழந்தை இல்லாம எத்தனையோ தம்பதிகள் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்ன்னு அழைஞ்சிட்டு இருக்குற எந்த நேரத்துல ஒரு உயிரை கொல்றது தப்புனு உங்களுக்கு தோணலையா..!!" கமலி தயக்கத்தோடு ஆரம்பித்தாள்..

அந்தப் பெண் திரு திருவென விழித்தாள்.. ஏற்கனவே அவளுக்குள் குற்ற உணர்ச்சி.. இதில் கமலி வேறு அவள் அடிமன குறுகுறுப்பை கிளறி விட்டதில் திணறலோடு..

"அபாஷன் ஒண்ணும் தப்பில்லையே.. பெத்து அந்த குழந்தையையும் சரியா வளர்க்க முடியாமல் போறதுக்கு.. பெத்துக்காம இருக்கிறது பெட்டர் இல்லையா.. எங்களுக்கு இந்த ஒரு குழந்தையை போதும்னு முடிவு பண்ணிட்டோம்.." என்றாள் அவள்..

"அப்ப நீங்க அதுக்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. 12 வீக்ஸ் கிட்ட ஆகிட்டது.. கை கால் எல்லாம் முழுசா வளர்ந்த ஒரு குட்டி சிசு.. ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க.. நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்றீங்களா..?"

"கே.. கேளுங்க சிஸ்டர்.."

"உங்க. முத குழந்தைக்கு எத்தனை வயசு.."

"ஐஞ்சு..!!"

"உங்களுக்கு ரெண்டு குழந்தைல ஒரு குழந்தை தான் வேணும்னா.. வயித்துல இருக்கற குழந்தையை அழிக்காம உங்க மூத்த குழந்தையை.."

"ஐயோ சிஸ்டர் வேண்டாம் அப்படியெல்லாம் சொல்லாதீங்க.." அந்தப் பெண்ணின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை சுரந்தது..

கமலி வெறுமையாய் புன்னகைத்தாள்..

"உங்க முதல் குழந்தை மேல இருக்கிற அட்டாச்மென்ட் ஏன் வயித்துல இருக்குற இந்த குழந்தை மேல இல்லாம போச்சு.. இதுவும் உங்க குழந்தை தானேம்மா.. உங்களை நம்பி தானே.. சின்ன சின்ன கனவுகளுடன் உங்க வயித்துல வளர்ந்துட்டு இருக்குது.. அந்த குழந்தையை அழிக்கிறது அந்த சின்ன உயிருக்கு நீங்க செய்யிற துரோகம் இல்லையா..?"

கண்ணீரோடு நிமிர்ந்தாள் அந்த பெண்..

"குழந்தை இல்லாதவங்களுக்கு தான் ஒரு உயிரோட அருமை தெரியும்.. அத்தனை கஷ்டங்களையும் தாங்கி குழந்தைகளை வளக்கறவங்க தானே பெத்தவங்க.. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.." கமலி சொல்லிவிட்டு செல்ல அந்தப் பெண் அப்படியே யுடர்ன் எடுத்து வீட்டுக்கு சென்று விட்டாள்..

அந்தப் பெண்ணின் கணவர் நம் மருத்துவர் சூர்ய தேவ்வுக்கு அழைத்து.. "நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன் கேக்கல.. நீங்க என்ன சொன்னீங்களோ தெரியல.. என் வைஃப் இந்த குழந்தையை பெத்துக்க சம்மதிச்சுட்டா.. தேங்க்யூ சோ மச் டாக்டர்" என்று.. அலைபேசியிலேயே முத்தமிடாத குறையாக நன்றி சொல்ல.. காரண கர்த்தா யார் என்று அவனுக்கு புரிந்து போனது.. அன்றைய நாளில் அது பற்றி அவன் பேசவில்லை.. இப்போது அந்த வழக்கையும் எழுத்து நடுவில் வைத்திருந்தான்.‌.

"டாக்டர் நான் நல்லது தான் செஞ்சேன்.."

"ஒரு பொண்ணுக்கு அபார்ஷன் பண்ணிக்க எல்லா உரிமையும் உண்டு அதுல தலையிட நீங்க யாரு..?" அவளை மடக்கினான் மருத்துவன்..

"நான் அவங்களை அபார்ட் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லல.. அதுல இருக்கிற நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி யோசிக்க சொன்னேன்.."

"அவங்கள யோசிக்க சொல்ல நீங்க யாரு.. முடிவெடுத்த பிறகு தானே இங்க வந்தாங்க..!! பேஷன்ட் டை மேனிபுலேட் பண்ணி வேறு மாதிரியா திசை திருப்பி விடுவது தப்பு தெரியுமா..?"

கமலி அமைதியாக நின்றாள்.. இவனிடம் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை..

"ஹாஸ்பிடல் ரூல்ஸ்க்கு எதிரா பல விஷயங்கள் செய்யறீங்க.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. இதுக்கு அப்புறமா நீங்க ஒழுங்கா இல்லைனா உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டியது வரும் யூ மே கோ நவ்..!!" என்றான் கடுமையான குரலில்..

அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் கமலி..

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவனை தன் பக்கம் முழு முற்றாக திருப்பிக் கொண்டிருக்கிறாள் கமலி..

அழகினால் அல்ல கவர்ச்சியால் அல்ல.. தன் செயல்களால்.. நன்னடத்தையால்.. அவள் செயல்கள் அவன் விதிகளுக்கு அப்பாற்பட்டு எரிச்சலை தந்தாலும் அதில் விளையும் நன்மைகள்.. அவன் கருத்தைக் கவர்கின்றன..

"அமைதியா இரு சூர்யா.. இவ எந்த எல்லை வரை போறான்னு பார்க்கலாம்.. கோ வித் த ஃப்ளோ.." தன் இதயத்தில் கை வைத்த தட்டிக் கொண்டான்..

"எத்தனை முறை கோலத்தை அழித்துவிடுகிறேனே.. இவளுக்கு சூடு சொரணை ரோஷம் இதெல்லாம் இருக்குமா இல்லையா..?" சூர்ய தேவ்வுக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறுகிறது..

அதிலும் சில நேரங்களில் மான்களும் மயில்களுமாய் அச்சடித்தாற் போல் வரைந்து வண்ணம் தீட்டி இருக்கும்போது தண்ணீரை ஊற்றி வர்ண கோலங்களை கலைக்க சங்கடமாய் போகிறது.. அந்த சங்கடமும் தயக்கமும் தான் அவள் வெற்றியோ..?

ஆனாலும் மனசாட்சி இல்லாமல் என் வீடு என் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்ற மமமதையில் அந்த கோலத்தையும் கலைத்து விட்டுதான் செல்கிறான்..

வேலைக்கு செல்ல படி இறங்கி வரும் போது தண்ணீர் மட்டும் வழிந்தோடும் அந்த வாசலை பார்ப்பவள்..

"இந்த ஆளுக்கு மனசு இரும்பிலதான் செஞ்சிருக்கணும்.. இல்லைனா இப்படி ஒரு கோலத்தை அழிக்க மனசு வருமா.. அழகை ரசிக்க தெரியாத இவருக்கெல்லாம் நிச்சயமா சொர்க்கத்துல இடம் கிடைக்காது.." என்று சபித்துவிட்டு அவன் வீட்டை கடந்து செல்வாள்..

"அந்த மனுஷன் தான் கோலம் போட்டாலே அழிச்சு விடுறாருன்னு சொல்ற.. அப்புறம் எதுக்குடி வேலை மெனக்கிட்டு இடுப்பு ஒடிய கோலம் போடுற..?" மாயா அங்கலாய்ப்பாள்..

"கோலம் போடுறது எனக்கு ரிலாக்சேஷன்.. கீழதான் பெரிய வாசல் இருக்கு.. அப்படியே அழகா ரங்கோலி வரைஞ்சு தூரத்திலருந்து பார்க்கும்போது மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாரு..!! அதுக்காக எவ்வளவு வேணா கஷ்டப்படலாம்னு தோணுது.. என்னோட சந்தோஷத்துக்காக கோலம் போடுறேன்.. அவர் சந்தோஷத்துக்கு கலைச்சிட்டு போகட்டுமே..!!" மாயாவிடம் இப்படி சொல்லி அந்த பேச்சை கத்தரித்து விடுவாள்..

அன்று இரவு உணவுக்காய் சமைத்துக் கொண்டிருந்தாள்..

"ஒரு கரண்டி தோசை மாவு தான் இருக்கிறது.. அத்தோடு ஒரு கரண்டி ரவையை சேர்த்து.. சரியான பதத்தில் தோசை கல்லில் ஊற்றி.. பொடிப்பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை தூவி பொன்னிறமாக வார்த்து எடுத்தால்.. ம்ம்.. சுவையை நெஞ்சுக்குள் நினைத்து சிலாகித்தவள்..‌ காம்பினேஷன் தேங்காய் சட்னி.. வாவ்.. என்று தேங்காயை கீறி துண்டுகள் போட ஆரம்பித்தாள்..

செல்போனில்..

நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே

நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கேசென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்..

பாடலை ஓட விட்டு அதற்கேற்றார் போல் நடனமாடிக் கொண்டே சமையலுக்கு தயாரித்து கொண்டிருந்தாள்..

பாடல் நின்று அழைப்பு வர.. எரிச்சலானவள்.. "இந்த மாயாவுக்கு வேற வேலையே இல்ல.." என்ற சலிப்போடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

"ஹலோ கமலி.."

அஷோக் குரல்..

இதயம் ஒரு கணம் நின்று துடிக்க பின் மண்டையில் சூடேறியது.. சொல்லப்போனால் கிட்டத்தட்ட இத்தனை நாட்களில் அவனை மறந்து போயிருந்தாள்.. சூர்ய தேவ்வோடு சண்டை.. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. மருத்துவமனை.. கடமை.. இளையராஜா பாடல்.. என அத்தனையும் அவளை சுழட்டியடித்ததில் அஷோக் என்பவனின் நினைவு வராமல் போனது..

"எப்படி இருக்க கமலி..?"

இதயத்துடிப்பின் வேகம் கூடியது.. தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள் அழைப்பை துண்டிப்பதற்காக முயன்ற வேளையில்..

"ஃபோனை வச்சுடாத கமலி..!! எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் அவன்..

"எனக்கு உங்ககிட்ட பேச ஒன்னும் இல்ல.. அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே.. நான் ஃபோனை வைக்கறேன்.." என்றது கமலியின் சீரான குரல்..

"முடிஞ்சு போச்சா.. என்ன முடிஞ்சு போச்சு.. நம்ம வாழ்ந்த வாழ்க்கை..!! அதை அவ்வளவு சீக்கிரமாக உன்னால மறந்துட முடியுமா.." அவன் குரல் உருகியது.. அவனுக்கு கமலியும் வேண்டும் அவன் இரண்டாவது மனைவியும் வேண்டும்..

"அதான் நீங்க மறந்துட்டீங்களே..!! நான் மட்டும் ஞாபகம் வச்சிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு..?" என்றாள் அவள் விட்டேத்தியாக..

"நான் மறந்துட்டேன்னு யார் சொன்னா கமலி.. இப்பவும் நான் உனக்காக மட்டும் தான் யோசிக்கறேன்.. குறைந்தபட்சம் ஒரு நண்பனாகவாச்சும் என்னை ஏத்துக்கோ.. என்னை விட்டு உன்னால வாழவே முடியாது.. உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவன் நான்.. நீ என்னால வேதனையில் தவிக்கிறதை பார்த்துட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு..!!" அவள் பலவீனமான பக்கங்களில் சாட்டையை விலாசினான்.. அவள் துடிக்கவில்லை.. அலட்சியமாக சிரித்தாள்.. இந்த பேச்சில் அவன் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வெறி தலை தூக்கியது..

"பகல் கனவு காணுறீங்க மிஸ்டர் அஷோக்.. நான் சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்.. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க..!!" அவள் திடமான குரலில் சொல்ல..

"என்னங்க.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க.." அலைபேசிக்கு அந்தப் பக்கம் ஒரு பெண் குரல்..

"டாடா.." என்று ஒரு பெண் குழந்தையின் குரலும்..

"இருடா செல்லம் டாடி ஃபோன்ல பேசிட்டு இருக்கேன் இல்ல.. டிஸ்டர்ப் பண்ணாதீங்கடி பட்டு.." அஷோக் தன் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்..

மழலையோடு பாப்பா அவனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தது..

"பாப்பா உங்களை விடவே மாட்டேங்குறா.. நான் என்ன செய்ய முடியும்.." அவன் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரியின் குற்ற உணர்ச்சியில்லாத சந்தோஷக் குரல்..

அரும்பாடு பட்டு ஒன்று சேர்த்து ஒட்ட வைத்திருந்த இதயம் மீண்டும் பலத்த சேதாரத்துடன் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது..

தன் மனதை புண்படுத்துவதற்காகவே அஷோக் இப்படி செய்கிறான் என்று புரிந்து போனது.. தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதாக காட்டிக் கொள்வதில்.. தன் வேதனையை கிளறுவதில் அப்படி ஒரு அலாதி ஆனந்தம்.. விவாகரத்து கேட்டது நீதானே என்ற குற்றச்சாட்டை கையில் வைத்திருக்கிறான்..

அவன் என்னை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.. விவாகரத்திற்கான முதல் படி அவனுடையதாக இருந்திருக்க வேண்டும்.. அவன்தான் என்னை காலால் எட்டி உதைத்திருக்க வேண்டும்..

ஆனால் அதற்கு நேர் மாறாக நான் அவனை வேண்டாம் என்று நிராகரித்து தலை நிமிர்வோடு விலகிச் சென்றதில்.. ஆண் என்ற அகம்பாவம் அடி வாங்கியதில்.. இப்படி ஃபோன் போட்டு அவள் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்..

இத்தனை நேரம் தெளிவாக பேசியவள் இந்த நொடியில் துவண்டு போனாள்.. இதயத்தை யாரோ அடித்து நொறுக்கியதை போல் அப்படி ஒரு வலி.. அசோக் மீது காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை..‌

ஆனால் எதிர் முனையில்.. துரோகத்தில் விளைந்த சந்தோஷங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறன..

இதோ அவன் மடியில் சிரித்துக் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த மழலை ராஜேஸ்வரியின் வயிற்றிலிருந்த போதே தன் இதயத்திலிருந்து பெற்றெடுத்த குழந்தையாக மானசீகமாக ஸ்வீகாரம் செய்திருந்தவள்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பிள்ளையின் வரவுக்காய் காத்திருந்தாள்..

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே..!! அவள் இருந்த இடத்தில் இன்னொருத்தி.. தன் குழந்தை என்று மனதளவில் தயார்படுத்தி வைத்திருந்த அந்த குழந்தை அவர்களுக்கு சொந்தம்.. நான் மட்டும் குறையுள்ளவள்.. "அதான் என்னை ஒதுக்கிட்டாங்க.. எத்தனையோ பேரை தன் திடமான வார்த்தைகளால் தாங்கி பிடித்தவளால் இந்த நொடி எவ்வளவு முயன்றும் தன்னை மீட்டுக்கொள்ள இயலவில்லை..

அழைப்பை துண்டித்து விட்டாள்.. அஷோக் எதற்காக அழைத்திருந்தானோ அந்த காரியம் வெற்றி கரமாக முடிந்திருந்தது..

கண்ணீரும் சின்ன சின்ன விம்மலுமாய் ஆரம்பித்த அழுகை எங்கே உடைந்து பீறிட்டதோ அவள் அறியாள்.. சில நேரங்களில் வாய் விட்டு அழத்தான் வேண்டும் நிலையில் இதயம் வெடித்து விடும்..

அழுதாள்.. அழுதாள்.. அழுது கொண்டே இருந்தாள்..

முன்னூறு நாள் கர்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளும் நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடு வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்..
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெரும் சுகம் நீயே..

பாடல் ஆட்டோ பிளே மூலமாக இளையராஜாவிடமிருந்து டிராக் மாறி தேவாவிடம் தாவியது..

எப்போதும் மரியாதையுடன் பேசும் குரல் இப்போது ஒருமையில் தாவியிருந்தது..

"இன்னும் என்ன செய்யணும் சார்.. நாம் வேணும்னா செத்துப்போகட்டுமா.. !! என்னால உங்களுக்கு இனி எந்த தொல்லையும் இருக்காது.." சம்பந்தமே இல்லாமல் ஆற்றாமையோடு வெடித்தன வார்த்தைகள்..‌

மருத்துவமனையில் அவன் கண்காணித்தவரை அவள் வேலைகளை சரியாக செய்தாள்.. ஒரு குறை கண்டுபிடிக்க முடியவில்லை..!!

அடிக்கடி கசிந்த விழிகளை துடைத்துக் கொண்டு.. கோலத்துக்கு கலர் பொடிகளை தூவி கொண்டிருந்தாள்.. கருப்படித்துப் போயிருக்கும் அவள் உடைந்த இதயத்தையும் புதுப்பிக்க முயற்சியாக இருக்கலாம்..

ஹோல்ஸ் பைப்பை எடுத்து வந்து கோலத்தின் மேல் வைத்தவன்.. என்ன நினைத்தானோ.. தண்ணீர் வரும் பகுதியை விரல்களால் மூடிக்கொண்டான்.. அந்த ரங்கோலி கோலத்தையும் வர்ணஜாலங்களையும் உற்றுப் பார்த்தான்..

அவள் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு..

செக்யூரிட்டி காணாத அதிசயத்தை கண்டது போல் அகலமாக விழிகளை விரித்து அந்தக் கோலத்தையும்.. வாயிலை கடந்து சென்ற வனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்..

தொடரும்..சூர்யா இப்படியே அமைதியா போயிடு... அவளும் கம்முனு போவா...
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
67
சூர்யா இப்படியே அமைதியா போயிடு அவளும் கம்முனு போவா...
 
Member
Joined
Jul 19, 2024
Messages
61

Neraiya matram suryavin manathil
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76

"நான் சந்தோஷமாவே இருக்க கூடாது.. உங்க எல்லாருக்குமே அதுதானே வேணும்.. சரி பாட்டு கேக்கல..?"

"பா..ட்டு கேக்கல.." அடி வயிற்றில் இருந்து கத்தினாள்..

அழுகையில் பிதுங்கிய உதடுகளை அரும்பாடு பட்டு இறுக்கி மூடிக்கொண்டவள்..

“பாட்டு கேக்கல சார்.. இனிமே எப்பவுமே கேக்க மாட்டேன்.. நீங்க சந்தோஷமாவே இருங்க.. அடுப்படி திண்டில் வைத்திருந்த அலைபேசியை கொண்டு வந்து.. அவன் முன்னால் வேகமாக வீசி எறிந்தாள்..

மூலைக்கொரு துண்டாக உடைந்து சிதறியது அவள் அலைபேசி..

சூர்ய தேவ் விதிர்த்து போய் நின்றிருந்தான்..

அவளிடமிருந்து வெளிப்பட்ட அளவு கடந்த ஆத்திரம் அந்த ஆத்திரத்தை மீறி கசிந்த கண்ணீர்.. அவனை ஏதோ செய்தது..

"இன்னும் என்ன செய்யணும் சார்.. நாம வேணும்னா செத்துப்போகட்டுமா.. !! என்னால உங்களுக்கு இனி எந்த தொல்லையும் இருக்காது.." சம்பந்தமே இல்லாமல் ஆற்றாமையோடு வெடித்தன வார்த்தைகள்..

தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றான் சூர்ய தேவ்..

யோசனையோடு வீட்டுக்கு வந்தவன் அந்த அழுத முகத்தை மறக்கத்தான் முடியவில்லை.. பல பேரை சிரிக்க வைத்த முகம் அது.. இன்று அழுதது.. அவன் மனதில் ஏதோ ஒரு மூளையில் இனம் புரியாத சஞ்சலம்..

அடுத்தடுத்த நாட்களில் வாசல் கோலமின்றி வெறுமையாக வறண்டு கிடந்தது..

ஜாகிங் செல்லும்போது ஒரு கணம் நின்று அந்த இடத்தை பார்த்தவன் பிறகு அதை கடந்து சென்றிருந்தான்...

அடுத்த மூன்று நாட்களும் வெறும் வாசல்.. இன்னைக்கும் கோலம் போடல என்று பரிதாபமாய் அவனைப் பார்த்து புகார் அளிப்பதாய் தோன்றியது..

"இதுக்கெல்லாம் பெருசா முக்கியத்துவம் கொடுக்காத சூர்ய தேவ்.. யார் எப்படி போனா உனக்கென்ன..?" மனதை தட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டான்..

மருத்துவமனையில் அவன் கண்காணித்தவரை அவள் வேலைகளை சரியாக செய்தாள்.. ஒரு குறை கண்டுபிடிக்க முடியவில்லை..!!

மறுநாள் காலை.. ஏதோ ஒரு உந்துதலில் ஜன்னலை திறந்தான்..

சோகச் சாயலோடு.. முடி கற்றைகள் முகத்தில் விழா ஒதுக்கிய படி.. கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கமலி..

அவன் இதயத்தில் ஜிவ்வென்று ஏதோ ஒன்று உச்சத்திற்கு ஏறி நின்றது..

கசிந்த விழிகளை துடைத்துக் கொண்டு.. கோலத்துக்கு கலர் பொடிகளை தூவி கொண்டிருந்தாள்.. கருப்படித்துப் போயிருக்கும் அவள் உடைந்த இதயத்தையும் புதுப்பிக்க முயற்சி செய்யலாம்.

கோலம் போட்டுக் கொண்டிருந்த ஓவியப் பெண்ணை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

எழுந்து நின்று ஆழ்ந்த மூச்சோடு அந்தக் கோலத்தை தலை சாய்த்து பார்த்தாள்.. பிறகு மாடியேறி சென்று விட்டாள்..

அவள் சென்ற பிறகு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் சூர்ய தேவ்..

"இவ இஷ்டத்துக்கு வந்து கோலம் போட்டுட்டு போகத்தான் நான் வீடு கட்டி வச்சிருக்கேனா..?" அவனுள் இருந்த வழக்கமான சாத்தான் தலை தூக்கியது..

ஹோல்ஸ் பைப்பை எடுத்து வந்து கோலத்தின் மேல் வைத்தவன்.. என்ன நினைத்தானோ.. தண்ணீர் வரும் பகுதியை விரல்களால் மூடிக்கொண்டான்.. அந்த ரங்கோலி கோலத்தையும் வர்ணஜாலங்களையும் உற்றுப் பார்த்தான்..

அவள் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அவனுக்கு..

அமைதியாக ஹோல்ஸ் பைப்பை தூக்கி ஓரம் போட்டுவிட்டு.. அவள் வரைந்த கோலத்தை மிதிக்காமல் அதை பார்த்துக் கொண்டே பக்கவாட்டில் நடந்து கேட்டை கடந்து சென்றிருந்தான்..

செக்யூரிட்டி காணாத அதிசயத்தை கண்டது போல் அகலமாக விழிகளை விரித்து அந்த கோலத்தையும்.. வாயிலை கடந்து சென்ற வனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்..

தொடரும்..
அறுமை சனா.. e
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
81

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் ஆம் கமலி என்னும் மெல்லிய பூ சூர்யா என்னும் இந்த கல்லை, இல்லை இல்லை கற்பாறையை கரைத்து கொண்டு இருக்கிறாள் 🫠🫠🫠
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
Kamali குட்ட குட்ட குனியும் பெண்ணல்ல..இதை அவள் சீக்கிரமே நிருபிப்பாள் அவள்...... அதை பார்த்து இப்போ எப்படி கமலி உடைந்து போனாலோ... அதே போல் நீயும் அதே நாள் உடைந்து போவ அசோக்...... அந்த நாளுக்காக இப்போ இருந்தே நான் வெயிட்டிங்....😡😡😡😡😡😡
சூர்யாவும் மெல்ல மெல்ல மாறி வருகிறான் கமலியால் .....,👌👌👌👌 improvement.......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இந்த சூர்யா என்னும் மருத்துவ நின் முத்தம் கமலிக்கு தான் .... கமளிக்கு மட்டும் தான்.....,😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
 
Member
Joined
Sep 9, 2023
Messages
66
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Joined
Sep 18, 2024
Messages
40
கை வைத்தியம் பல செய்தாலும் மருந்து மாத்திரைகள் உட் கொண்டாலும் குணமாகாத காய்ச்சல் மருத்துவமனை வாசலை எட்டியவுடன் தெறித்து ஓடிவிடும் மாயங்கள் நிகழ்வதுண்டு..

மருத்துவரிடம் சென்றால் நிச்சயம் குணமாகிவிடும் என்ற நம்பிக்கைதான் சூட்சமம்..

வருண் மீது சூர்ய தேவ் கொண்ட அந்த நம்பிக்கைதான் கமலியின் பக்கம் அவனை செவி சாய்க்க வைத்திருக்கிறது..

சினிமாவில் உணர்ச்சிகரமான காட்சிகளின் போது நம்மையும் அறியாமல் மயிர் கூச்செரிவதை போல் அவள் பேசியதை கேட்டு அவனுக்குள் ஏதோ சின்ன சின்ன மாற்றங்கள்.. அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டுமளவிற்கு அவன் ஒன்றும் பெருந்தன்மையானவன் அல்லவே..!!

அவளை தன்னறைக்கு அழைத்தான்..

"என்ன மேடம்.. உங்க இஷ்டத்துக்கு ஏதேதோ ஹோப் குடுத்து அந்த பொண்ண தவறான பாதையில கூட்டிட்டு போறீங்களோனு எனக்கு தோணுது.." என்றான் நக்கலாக..

"என்ன சொல்றீங்க டாக்டர்.. ஒண்ணுமே புரியலையே..?" கமலியின் கேள்வியில் அவன் முகம் மாறியது..

"என்ன புரியல..? நான் வாய்ப்பில்லைன்னு ரிப்போர்ட் தந்த பிறகும் அதிசயம் நடக்கும்னு சொன்னா என்ன அர்த்தம்.. சோ நீங்க அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கும்னு சொல்றீங்க அப்படித்தானே.. மெடிக்கல் ஃபீல்டுல இருந்துகிட்டு ஒரு டாக்டரோட ஸ்டேட்மெண்ட் தப்புன்னு சொல்றது குற்றம்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா.. இதுக்காக நான் உங்களை பனிஷ் பண்ணலாம்.." அவன் புருவங்களை உயர்த்தினான்..

"உங்க ரிப்போர்ட் தப்புன்னு நான் எப்ப சொன்னேன் டாக்டர்..!!"

"அடடா சூப்பர்.. நல்லாவே பேச்சை மாத்தறீங்க.." நக்கலாக உதடு வளைத்தான்..

"சாரி டாக்டர் மாத்தி பேசும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்ல.. அதிசயம் நடக்கும்ன்னு சொன்னேன்.. அது குழந்தை பிறப்பா தான் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. அந்த பொண்ணோட வாழ்க்கையில் சந்தோஷத்தை நிகழ்த்தக்கூடிய வேறு ஏதாவது தருணமா கூட இருக்கலாம்.."

"ஓஹோ நீங்க அப்படித்தான் சொல்ல வந்தீங்களா..?" கேலியாக புருவம் உயர்த்தினான்..

"குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.. அந்த அர்த்ததிலும் சேர்த்துதான் சொன்னேன்.." இயல்பாக தோள்களை ஏற்றி இறக்கினாள்..

"சோ.. ஹாஸ்பிடல் ரிப்போர்ட் தப்பு.. என்னோட ட்ரீட்மென்ட் பொய்.. நான் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்ன ஸ்ட்ரீட்மென்ட் கம்ப்ளீட்லி ராங் அப்படித்தானே சொல்ல வரீங்க..?"

"இல்லையே டாக்டர்.. இன்னைக்கு நீங்க கொடுத்த ஸ்டேட்மென்ட் ரிப்போர்ட் எல்லாமே சரியா இருக்கலாம்.. ஆனா நாளைக்கு அந்த பெண்ணோட கர்ப்ப பையில மாற்றங்கள் ஏற்படலாம் இல்லையா..!! மாற்றம் ஒன்றுதானே டாக்டர் மாறாதது.."

"வாட் ரப்பிஷ் அது எப்படி நடக்கும்..?" மார்பின் முன் கைகளை மடித்து கட்டிய படி அவன் நக்கலாக கேட்க..

"ஏன் நடக்காது டாக்டர்.. கீழ்கோர்ட்ல தோத்துப்போன ஒரு கேஸ்.. சுப்ரீம் கோர்ட்ல மறுபடியும் ரீ அப்பீல் பண்ணி ஜெயிக்கிறது இல்லையா.. அதுக்காக கீழ் கோர்ட் தீர்ப்பு தப்புன்னு ஆகிடாது.. அந்த நேரத்துல வாதி பிரதிவாதிக்கிடையில் வைக்கப்பட்ட ஆதாரங்கள்.. சாட்சி.. வக்கீல் ஆர்கியுமென்ட்.. எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு தீர்ப்பை கொடுக்க வைச்சிருக்கலாம்.."

"அந்த மாதிரிதான்.. நாம கீழ் கோர்ட்.. அவங்க உடம்பை அப்படியே பரிசோதனை செய்து உண்மை நிலவரத்தை சொல்றோம்.. ஆனா மேல் கோர்ட்டுனு ஒன்னு இருக்கு.. அந்த கடவுள் என்னை எழுதி வச்சிருக்கானோ அதுதான் தீர்ப்பு.."

"நீங்க நர்ஸ்.. சாமியாரினி மாதிரி பேசுறீங்க.. அறிவியலை மீறி எந்த அதிசயமும் நடந்திடாது.. இனிமே இந்த மாதிரி ஃபேக் ஹோப் கொடுக்கிறதை நிறுத்துங்க.. திரும்ப இது ரிப்பீடாச்சுன்னா.. நீங்க மருத்துவத்துக்கு எதிராக கொள்கை பரப்புறிங்கன்னு மெடிக்கல் அசோசியேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது வரும்.. புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.." என்றான் அழுத்தமாக..

"சாரி டாக்டர்.. நான் சரியாத்தான் இருக்கேன்.. உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க..!! நான் தப்பு செய்றேன்னு தோணுச்சுன்னா.. என்னை வேலையை விட்டு நீக்கிடலாம்.." நிமிர்வாகச் சொன்னாள் கமலி..

முதன்முறையாக ஒருத்தி தைரியமாக எதிர்த்து பேசுகிறாள்..

சுத்தமாக பிடிக்கவில்லை.. கொஞ்சம் பிடிக்கிறது..

"நீங்க தப்பு மட்டும் தான் செய்யறீங்க கமலி.."

"லாஸ்ட் வீக் ஒரு அபார்ஷன் கேஸ்.. அவங்க கிட்ட என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா..?" பேப்பர் வெயிட்டை உருட்டியபடி கேட்டான்..

"ஓஹ்.. நல்லாவே ஞாபகம் இருக்கு.." என்ற கமலி அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள்..

முதல் குழந்தை ஒன்றே போதும் என்ற நிலையில்.. அந்தப் பெண் கருக்கலைப்பிற்காக வந்திருந்தாள்..

"இங்க பாருங்கம்மா.. அபார்ஷன் பண்ணிக்கறது உங்க உரிமை.. நான் தலையிடல.. ஆனா குழந்தை இல்லாம எத்தனையோ தம்பதிகள் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்ன்னு அலைஞ்சிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா வயித்துல வளர்ற குழந்தையை வேண்டாம்னு சொல்றீங்க.. ஒரு உயிரை வேண்டாம்னு கொல்றது தப்புனு உங்களுக்கு தோணலையா..!!" கமலி தயக்கத்தோடு ஆரம்பித்தாள்..

அந்தப் பெண் திரு திருவென விழித்தாள்.. ஏற்கனவே அவளுக்குள் குற்ற உணர்ச்சி.. இதில் கமலி வேறு அவள் அடிமன குறுகுறுப்பை கிளறி விட்டதில் திணறலோடு..

"அபார்ஷன் ஒண்ணும் தப்பில்லையே.. பெத்து அந்த குழந்தையையும் சரியா வளர்க்க முடியாமல் போறதுக்கு.. பெத்துக்காம இருக்கிறது பெட்டர் இல்லையா.. எங்களுக்கு இந்த ஒரு குழந்தையை போதும்னு முடிவு பண்ணிட்டோம்.." என்றாள் அவள்..

"அப்ப நீங்க அதுக்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.. 12 வீக்ஸ் கிட்ட ஆகிட்டது.. கை கால் எல்லாம் முழுசா வளர்ந்த ஒரு குட்டி சிசு.. ரொம்ப லேட்டா வந்திருக்கீங்க.. நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன் பதில் சொல்றீங்களா..?"

"கே.. கேளுங்க சிஸ்டர்.."

"உங்க. முத குழந்தைக்கு எத்தனை வயசு.."

"ஐஞ்சு..!!"

"உங்களுக்கு ரெண்டு குழந்தைல ஒரு குழந்தை தான் வேணும்னா.. வயித்துல இருக்கற குழந்தையை அழிக்காம உங்க மூத்த குழந்தையை.."

"ஐயோ சிஸ்டர் வேண்டாம் அப்படியெல்லாம் சொல்லாதீங்க.." அந்தப் பெண்ணின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீரை சுரந்தது..

கமலி வெறுமையாய் புன்னகைத்தாள்..

"உங்க முதல் குழந்தை மேல இருக்கிற அட்டாச்மென்ட் ஏன் வயித்துல இருக்கற இந்த குழந்தை மேல இல்லாம போச்சு.. இதுவும் உங்க குழந்தை தானேம்மா.. உங்களை நம்பி தானே.. சின்ன சின்ன கனவுகளுடன் உங்க வயித்துல வளர்ந்துட்டு இருக்குது.. அந்த குழந்தையை அழிக்கறது அந்த சின்ன உயிருக்கு நீங்க செய்யற துரோகம் இல்லையா..?"

கண்ணீரோடு நிமிர்ந்தாள் அந்த பெண்..

"குழந்தை இல்லாம ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலா அலையற தம்பதிகளை பார்த்தா இப்படி ஒரு காரியத்தை செய்ய உங்களுக்கு துணிவு வராது.." என்றாள் துக்கம் தொண்டைக்குள் அடைக்க..

அந்த பெண் கண்ணீரை துடைத்துக் கொண்டு கமலியை பார்த்தாள்..

"வளர்க்க சிரமம்னு சொல்றீங்க..
அத்தனை கஷ்டங்களையும் தாங்கி குழந்தைகளை வளக்கறவங்கதானே பெத்தவங்க.. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்.. அப்புறம் உங்க இஷ்டம்.." கமலி சொல்லிவிட்டு செல்ல அந்தப் பெண் அப்படியே யுடர்ன் எடுத்து வீட்டுக்கு சென்று விட்டாள்..

அந்தப் பெண்ணின் கணவர் நம் மருத்துவர் சூர்ய தேவ்வுக்கு அழைத்து.. "நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன் கேக்கல.. நீங்க என்ன சொன்னீங்களோ தெரியல.. என் வைஃப் இந்த குழந்தையை பெத்துக்க சம்மதிச்சுட்டா.. தேங்க்யூ சோ மச் டாக்டர்" என்று.. அலைபேசியிலேயே முத்தமிடாத குறையாக நன்றி சொல்ல.. காரண கர்த்தா யார் என்று அவனுக்கு புரிந்து போனது.. அன்றைய நாளில் அது பற்றி அவன் பேசவில்லை.. இப்போது அந்த வழக்கையும் எழுத்து நடுவில் வைத்திருந்தான்.‌.

"டாக்டர் நான் நல்லது தான் செஞ்சேன்.."

"திருமணமான ஒரு பொண்ணுக்கு அவங்க விருப்பப்படி குழந்தை வேண்டாம்னா அபார்ஷன் பண்ணிக்க எல்லா உரிமையும் உண்டு.. அதுல தலையிட நீங்க யாரு..?" அவளை மடக்கினான் மருத்துவன்..

"நான் அவங்களை அபார்ட் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லல.. அதுல இருக்கிற நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லி யோசிக்க சொன்னேன்.."

"அவங்கள யோசிக்க சொல்ல நீங்க யாரு.. முடிவெடுத்த பிறகுதானே இங்க வந்தாங்க..!! பேஷன்ட்டை மேனிபுலேட் பண்ணி வேறு மாதிரியா திசை திருப்பி விடுறது தப்பு தெரியுமா..?"

கமலி அமைதியாக நின்றாள்.. இவனிடம் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை..

"ஹாஸ்பிடல் ரூல்ஸ்க்கு எதிரா பல விஷயங்கள் செய்யறீங்க.. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.. இதுக்கு அப்புறமா நீங்க ஒழுங்கா இல்லைனா உங்க மேல ஆக்சன் எடுக்க வேண்டியது வரும் யூ மே கோ நவ்..!!" என்றான் கடுமையான குரலில்..

அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் கமலி..

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவனை தன் பக்கம் முழு முற்றாக திருப்பிக் கொண்டிருக்கிறாள் கமலி..

அழகினால் அல்ல கவர்ச்சியால் அல்ல.. தன் செயல்களால்.. நன்னடத்தையால்.. அவள் செயல்கள் அவன் விதிகளுக்கு அப்பாற்பட்டு எரிச்சலை தந்தாலும் அதில் விளையும் நன்மைகள்.. அவன் கருத்தைக் கவர்கின்றன..

"அமைதியா இரு சூர்யா.. இவ எந்த எல்லை வரை போறான்னு பார்க்கலாம்.. கோ வித் த ஃப்ளோ.." தன் இதயத்தில் கை வைத்து தட்டிக் கொண்டான்..

"எத்தனை முறை கோலத்தை அழித்துவிடுகிறேனே.. இவளுக்கு சூடு சொரணை ரோஷம் இதெல்லாம் இருக்குமா.. இருக்காதா..?" சூர்ய தேவ்வுக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறுகிறது..

அதிலும் சில நேரங்களில் மான்களும் மயில்களுமாய் அச்சடித்தாற் போல் வரைந்து வண்ணம் தீட்டி வைத்திருக்கையில் தண்ணீரை ஊற்றி வர்ண கோலங்களை கலைக்க சங்கடமாய் போகிறது.. அந்த சங்கடமும் தயக்கமும் தான் அவள் வெற்றியோ..?

ஆனாலும் மனசாட்சி இல்லாமல் என் வீடு என் இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்ற மமமதையில் அந்த கோலத்தையும் கலைத்து விட்டுதான் செல்கிறான்..

வேலைக்கு செல்ல படியிறங்கி வரும் போது தண்ணீர் மட்டும் வழிந்தோடும் அந்த வாசலை பார்ப்பவள்..

"இந்த ஆளுக்கு மனசு இரும்பிலதான் செஞ்சிருக்கணும்.. இல்லைனா இப்படி ஒரு கோலத்தை அழிக்க மனசு வருமா.. அழகை ரசிக்க தெரியாத இவருக்கெல்லாம் நிச்சயமா சொர்க்கத்துல இடம் கிடைக்காது.." என்று சபித்துவிட்டு அவன் வீட்டை கடந்து செல்வாள்..

"அந்த மனுஷன் தான் கோலம் போட்டாலே அழிச்சு விடுறாருன்னு சொல்ற.. அப்புறம் எதுக்குடி வேலை மெனக்கிட்டு இடுப்பு ஒடிய கோலம் போடுற..?" மாயா அங்கலாய்ப்பாள்..

"கோலம் போடுறது எனக்கு ரிலாக்சேஷன்.. கீழதான் பெரிய வாசல் இருக்கு.. அப்படியே அழகா ரங்கோலி வரைஞ்சு தூரத்திலருந்து பார்க்கும்போது மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாரு..!! அதுக்காக எவ்வளவு வேணா கஷ்டப்படலாம்னு தோணுது.. என்னோட சந்தோஷத்துக்காக கோலம் போடுறேன்.. அவர் சந்தோஷத்துக்கு கலைச்சிட்டு போகட்டுமே..!!" மாயாவிடம் இப்படி சொல்லி அந்த பேச்சை கத்தரித்து விடுவாள்..

அன்று இரவு உணவுக்காய் சமைத்துக் கொண்டிருந்தாள்..

"ஒரு கரண்டி தோசை மாவு தான் இருக்கிறது.. அத்தோடு ஒரு கரண்டி ரவையை சேர்த்து.. சரியான பதத்தில் தோசை கல்லில் ஊற்றி.. பொடிப்பொடியாய் நறுக்கிய வெங்காயத்தை தூவி பொன்னிறமாக வார்த்து எடுத்தால்.. ம்ம்.. முறுகல் வாசனையோடு சுவையை நெஞ்சுக்குள் நினைத்து சிலாகித்தவள்..‌ காம்பினேஷன் தேங்காய் சட்னி.. வாவ்.. என்று தேங்காயை கீறி துண்டுகள் போட ஆரம்பித்தாள்..

செல்போனில்..

நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே

நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கேசென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்..

பாடலை ஓட விட்டு அதற்கேற்றார் போல் நடனமாடிக் கொண்டே சமையலுக்கு தயாரித்து கொண்டிருந்தாள்..

பாடல் நின்று அழைப்பு வர.. எரிச்சலானவள்.. "இந்த மாயாவுக்கு வேற வேலையே இல்ல.." என்ற சலிப்போடு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

"ஹலோ கமலி.."

அஷோக் குரல்..

இதயம் ஒரு கணம் நின்று துடிக்க பின் மண்டையில் சூடேறியது.. சொல்லப்போனால் கிட்டத்தட்ட இத்தனை நாட்களில் அவனை மறந்து போயிருந்தாள்.. சூர்ய தேவ்வோடு சண்டை.. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்.. மருத்துவமனை.. கடமை.. இளையராஜா பாடல்.. என அத்தனையும் அவளை சுழட்டியடித்ததில் அஷோக் என்பவனின் நினைவு வராமல் போனது..

"எப்படி இருக்க கமலி..?"

இதயத்துடிப்பின் வேகம் கூடியது.. தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவள் அழைப்பை துண்டிப்பதற்காக முயன்ற வேளையில்..

"ஃபோனை வச்சுடாத கமலி..!! எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான் அவன்..

"எனக்கு உங்ககிட்ட பேச ஒன்னும் இல்ல.. அதான் எல்லாமே முடிஞ்சு போச்சே.. நான் ஃபோனை வைக்கறேன்.." என்றது கமலியின் சீரான குரல்..

"முடிஞ்சு போச்சா.. என்ன முடிஞ்சு போச்சு.. நம்ம வாழ்ந்த வாழ்க்கை..!! அதை அவ்வளவு சீக்கிரமாக உன்னால மறந்துட முடியுமா.." அவன் குரல் உருகியது.. அவனுக்கு கமலியும் வேண்டும் அவன் இரண்டாவது மனைவியும் வேண்டும்..

"அதான் நீங்க மறந்துட்டீங்களே..!! நான் மட்டும் ஞாபகம் வச்சிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு..?" என்றாள் அவள் விட்டேத்தியாக..

"நான் மறந்துட்டேன்னு யார் சொன்னா கமலி.. இப்பவும் நான் உனக்காக மட்டும் தான் யோசிக்கறேன்.. குறைந்தபட்சம் ஒரு நண்பனாகவாச்சும் என்னை ஏத்துக்கோ.. என்னை விட்டு உன்னால வாழவே முடியாது.. உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவன் நான்.. நீ என்னால வேதனையில் தவிக்கிறதை பார்த்துட்டு நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு..!!" அவள் பலவீனமான பக்கங்களில் சாட்டையை விலாசினான்.. அவள் துடிக்கவில்லை.. அலட்சியமாக சிரித்தாள்.. இந்த பேச்சில் அவன் முன்பு சந்தோஷமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வெறி தலை தூக்கியது..

"பகல் கனவு காணுறீங்க மிஸ்டர் அஷோக்.. நான் சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்.. நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க தேவையில்லாம என் விஷயத்துல தலையிடாதீங்க..!!" அவள் திடமான குரலில் சொல்ல..

"என்னங்க.. யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க.." அலைபேசிக்கு அந்தப் பக்கம் ஒரு பெண் குரல்..

"டாடா.." என்று ஒரு பெண் குழந்தையின் குரலும்..

"இருடா செல்லம்.. டாடி ஃபோன்ல பேசிட்டு இருக்கேன் இல்ல.. டிஸ்டர்ப் பண்ணாதீங்கடி பட்டு.." அஷோக் தன் குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்..

மழலையோடு பாப்பா அவனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க இங்கே உயிர் துடித்து கருகினாள் கமலி..

"பாப்பா உங்களை விடவே மாட்டேங்கறா.. நான் என்ன செய்ய முடியும்.." அவன் இரண்டாம் மனைவி ராஜேஸ்வரியின் குற்ற உணர்ச்சியில்லாத சந்தோஷக் குரல்..

அரும்பாடு பட்டு ஒன்று சேர்த்து ஒட்ட வைத்திருந்த இதயம் மீண்டும் பலத்த சேதாரத்துடன் சுக்கல் சுக்கலாக உடைந்து போனது..

தன் மனதை புண்படுத்துவதற்காகவே அஷோக் இப்படி செய்கிறான் என்று புரிந்து போனது.. தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வதாக காட்டிக் கொள்வதில்.. தன் வேதனையை கிளறுவதில் அப்படி ஒரு அலாதி ஆனந்தம்.. விவாகரத்து கேட்டது நீதானே என்ற குற்றச்சாட்டை கையில் வைத்திருக்கிறான்..

அவன் என்னை தூக்கி எறிந்திருக்க வேண்டும்.. விவாகரத்திற்கான முதல் படி அவனுடையதாக இருந்திருக்க வேண்டும்.. அவன்தான் என்னை காலால் எட்டி உதைத்திருக்க வேண்டும்..

ஆனால் அதற்கு நேர் மாறாக நான் அவனை வேண்டாம் என்று நிராகரித்து தலை நிமிர்வோடு விலகிச் சென்றதில்.. ஆண் என்ற அகம்பாவம் அடி வாங்கியதில்.. இப்படி ஃபோன் போட்டு அவள் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்..

இத்தனை நேரம் தெளிவாக பேசியவள் இந்த நொடியில் துவண்டு போனாள்.. இதயத்தை யாரோ அடித்து நொறுக்கியதை போல் அப்படி ஒரு வலி.. அசோக் மீது காதலும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை..‌

ஆனால் எதிர் முனையில்.. துரோகத்தில் விளைந்த சந்தோஷங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறன..

இதோ அவன் மடியில் சிரித்துக் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த மழலை ராஜேஸ்வரியின் வயிற்றிலிருந்த போதே தன் இதயத்திலிருந்து பெற்றெடுத்த குழந்தையாக மானசீகமாக ஸ்வீகாரம் செய்து.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பிள்ளையின் வரவுக்காய் காத்திருந்தாள் கமலி..

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதே..!! அவள் இருந்த இடத்தில் இன்னொருத்தி.. என் பிள்ளை என்று பெறாத தாயாக அவளால் உரிமை கொண்டாடப்பட்ட அந்த குழந்தை இனி அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தம்.. நான் மட்டும் குறையுள்ளவள்.. "அதான் என்னை ஒதுக்கிட்டாங்க.. எத்தனையோ பேரை தன் திடமான வார்த்தைகளால் தாங்கி பிடித்தவளால் இந்த நொடி எவ்வளவு முயன்றும் தன்னை மீட்டுக்கொள்ள இயலவில்லை..

அழைப்பை துண்டித்து விட்டாள்.. அஷோக் எதற்காக அழைத்திருந்தானோ அந்த காரியம் வெற்றி கரமாக முடிந்திருந்தது..

கண்ணீரும் சின்ன சின்ன விம்மலுமாய் ஆரம்பித்த அழுகை எங்கே உடைந்து பீறிட்டதோ அவள் அறியாள்.. சில நேரங்களில் வாய் விட்டு அழத்தான் வேண்டும் நிலையில் இதயம் வெடித்து விடும்..

அழுதாள்.. அழுதாள்.. அழுது கொண்டே இருந்தாள்..

முன்னூறு நாள் கர்பத்திலே
வாராத பெண் நீயடி
எந்நாளும் நான் பொம்மை தான்
என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம்பாடியாய்
பண்பாடு வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய்
பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்..
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்

பெறாமலே பெரும் சுகம் நீயே..

பாடல் ஆட்டோ பிளே மூலமாக இளையராஜாவிடமிருந்து டிராக் மாறி தேவாவிடம் தாவியது..

அழுகையை நிறுத்திவிட்டு செல்போன் பக்கம் பார்த்தாள் கமலி..

பெண் குழந்தை ஆசையில் தன் கணவனின் உயிரை சுமக்கும் ராஜேஸ்வரியின் வயிற்றில் கை வைத்து ஒவ்வொரு முறை அவள் சிலிர்க்கும் போதும் மனதிற்குள் தோன்றும் பாடல் வரிகள் இவை..

ஒரு கணம் மட்டுமே நின்ற அழுகை மீண்டும் வெடித்தது.. சிறு குழந்தையாய் தேற்ற ஆளின்றி தனியறையில் அழுது கொண்டிருந்தாள் அவள்..

"ஹலோ கதவை திறங்க..!! இவ்வளவு சவுண்டா பாட்டு வச்சிருக்கீங்க.. எனக்கு மண்டையே வெடிக்குது.. ஏய் இப்ப கதவை திறக்க போறியா இல்லையா..?"

எப்போதும் மரியாதையுடன் பேசும் குரல் இப்போது ஒருமைக்கு தாவியிருந்தது..

ஏற்கனவே உச்சகட்ட விரக்தியில் இருந்தவள்.. கண்களை துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு வந்து கதவை திறந்தாள்..

"அறிவில்லையா உனக்கு.. அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருக்காங்க ஞாபகம் இருக்கா இல்லையா.." பற்களை கடித்து ஆத்திரத்தோடு ஆரம்பித்தவன் அவள் அழுது அழுது ஓய்ந்த விழிகளை பார்த்து ஒருகணம் பேச்சற்று போனான்..

"என்ன.. என்ன வேணும் உங்களுக்கு..?" அவள் விம்மினாள்..

"நான் சந்தோஷமாவே இருக்க கூடாது.. உங்க எல்லாருக்குமே அதுதானே வேணும்.. சரி பாட்டு கேக்கல.."

"பா..ட்டு கேக்கல.." அடி வயிற்றிலிருந்து கத்தினாள்..

அழுகையில் பிதுங்கிய உதடுகளை அரும்பாடு பட்டு இறுக்கி மூடிக்கொண்டவள்..

"பாட்டு கேக்கல சார்.. இனிமே எப்பவுமே கேக்க மாட்டேன்.. நீங்க சந்தோஷமாவே இருங்க.. அடுப்படி திண்டில் வைத்திருந்த அலைபேசியை கொண்டு வந்து.. அவன் முன்னால் வேகமாக வீசி எறிந்தாள்..

மூலைக்கொரு துண்டாக உடைந்து சிதறியது அவள் அலைபேசி..

சூர்ய தேவ் விதிர்த்து போய் நின்றிருந்தான்..

அவளிடமிருந்து வெளிப்பட்ட அளவு கடந்த ஆத்திரம் அந்த ஆத்திரத்தை மீறி கசிந்த கண்ணீர்.. அவனை ஏதோ செய்தது..

"இன்னும் என்ன செய்யணும் சார்.. நான் வேணும்னா செத்துப்போகட்டுமா.. !! என்னால உங்களுக்கு இனி எந்த தொல்லையும் இருக்காது.." சம்பந்தமே இல்லாமல் ஆற்றாமையோடு வெடித்தன வார்த்தைகள்..‌

தொண்டைக்குள் எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான் சூர்ய தேவ்..

யோசனையோடு வீட்டுக்கு வந்தவன் அந்த அழுத முகத்தை மறக்கத்தான் நினைத்தான் முடியவில்லை.. பல பேரை சிரிக்க வைத்த முகம் அது.. இன்று அழுது கொண்டிருக்கிறது.. அவன் மனதில் ஏதோ ஒரு மூலையில் இனம் புரியாத சஞ்சலம்..

அடுத்தடுத்த நாட்களில் வாசல் கோலமின்றி வெறுமையாக வறண்டு கிடந்தது..

ஜாகிங் செல்லும்போது ஒரு கணம் நின்று அந்த இடத்தை பார்த்தவன் பிறகு அதை கடந்து சென்றிருந்தான்...

அடுத்த மூன்று நாட்களும் வெறும் வாசல்.. இன்னைக்கும் கோலம் போடல என்று பரிதாபமாய் அவனை பார்த்து புகார் அளிப்பதாய் தோன்றியது..

"இதுக்கெல்லாம் பெருசா முக்கியத்துவம் கொடுக்காத சூர்ய தேவ்.. யார் எப்படி போனா உனக்கென்ன..?" மனதை தட்டி தன்னை சமன்படுத்திக் கொண்டான்..

மருத்துவமனையில் அவன் கண்காணித்தவரை கமலி தன் வேலைகளை சரியாக செய்தாள்.. ஒரு குறை கண்டுபிடிக்க முடியவில்லை..!!

மறுநாள் காலையில்.. ஏதோ ஒரு உந்துதலில் ஜன்னலை திறந்தான்..

சோகச் சாயலோடு.. முடி கற்றைகள் முகத்தில் விழ அதை ஒதுக்கிய படி.. கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கமலி..

அவன் இதயத்தில் ஜிவ்வென்று ஏதோ ஒன்று உச்சத்திற்கு ஏறி நின்றது..

அடிக்கடி கசிந்த விழிகளை துடைத்துக் கொண்டு.. கோலத்துக்கு கலர் பொடிகளை தூவி கொண்டிருந்தாள்.. கருப்படித்துப் போயிருக்கும் அவள் உடைந்த இதயத்தையும் புதுப்பிக்கும் முயற்சியாக இருக்கலாம்..

கோலம் போட்டுக் கொண்டிருந்த ஓவியப் பெண்ணை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சூர்ய தேவ்..

எழுந்து நின்று ஆழ்ந்த மூச்சோடு அந்தக் கோலத்தை தலை சாய்த்து பார்த்தாள்.. பிறகு மாடியேறி சென்று விட்டாள்..

அவள் சென்ற பிறகு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் சூர்ய தேவ்..

"இவ இஷ்டத்துக்கு வந்து கோலம் போட்டுட்டு போகத்தான் நான் வீடு கட்டி வச்சிருக்கேனா..?" அவனுள்ளிருந்த வழக்கமான சாத்தான் தலை தூக்கியது..

ஹோல்ஸ் பைப்பை எடுத்து வந்து கோலத்தின் மேல் வைத்தவன்.. என்ன நினைத்தானோ.. தண்ணீர் வரும் பகுதியை விரல்களால் மூடிக்கொண்டான்.. அந்த ரங்கோலி கோலத்தையும் வர்ணஜாலங்களையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்..

வண்ணங்களை மீறி அவள் அழுதமுகம் ஓவியக் கோலமாய் கண்முன் விரிந்து நின்றது..

அமைதியாக ஹோல்ஸ் பைப்பை தூக்கி ஓரம் போட்டுவிட்டு.. அவள் வரைந்த கோலத்தை மிதிக்காமல் அதை பார்த்துக் கொண்டே பக்கவாட்டில் நடந்து கேட்டை கடந்து சென்றிருந்தான்..

செக்யூரிட்டி காணாத அதிசயத்தை கண்டது போல் அகலமாக விழிகளை விரித்து அந்தக் கோலத்தையும்.. வாயிலை கடந்து சென்றவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்..

தொடரும்..
Arumai..... 💖💖💖
 
Top