• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 15

Member
Joined
Feb 26, 2025
Messages
51
கடவுளே வருண் வந்திட்ட.... நல்ல வேளை தேம்ஸ் சரியான நேரத்தில் வருண் க்கு call பண்ணிட்ட..
சத்யா நாயே உனக்கு எல்லாம் நல்ல மோட்சமே கிடையாது டா... அந்த வீண் போன கேஷவ்யும் நீயும் சொத்துக்காக என்ன மாதிரி எல்லைக்கும் பிக கூடிய ஆளுங்கனு தெரிஞ்சி போச்சு...
 

Lee

New member
Joined
Jun 24, 2025
Messages
14
Eppa Varun vanthuta da konjam time la ennaku bp eriduchu Emma thenu eniyathu unmaiya solluma doctor ta
 
New member
Joined
Mar 14, 2023
Messages
23
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
109
Epo kapathinathu mukkiyam illa.... Ini ava avanga rendu per kitta irunthu epidi thapipa.....Varun epidi Ella neramum avala kapathu van....Sana ji ethavathu pathu pannunga
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
54
அட பரதேசி பயலே தேம்பா தங்கத்தை அசிங்கப்படுத்த பார்த்தியே. எடுபட்ட பயலே. 😡😡😡😡 🤬🤬🤬🤬🤬 வருண் அவனுக்கு இது பத்தாது. இன்னும் செமயா ஆப்பு வச்சிருக்கணும். 🤔🤔🤔🤔🤔🤔

நல்ல வேலை அந்த நேரத்துல வருணுக்கு கால் பண்ணுணியே தங்கம். நீயும் போன் எடுத்திட்ட வருண். இல்லைன்னா தேம்பாவோட நிலைமை. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 😱😱😱😱😱

இப்ப காப்பாத்திட்ட. இனி இவனுங்க கிட்ட இருந்து எப்படி எல்லா நேரமும் காப்பாத்த முடியும் வருண்.
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
130
இப்போ தான் நிம்மதியே.... வருண் தேம்ஸ் ஐ காப்பாற்றி விட்டான்....
ஆனால் இதன் விளைவு என்ன....
வெயிட்டிங் for next ud sisy....
 
Member
Joined
Feb 15, 2025
Messages
40
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
நீங்க பண்ற ஒவ்வொரு அநியாயத்துக்கும் தட்டி கேட்க ஒருத்தன் வருவான் டா அது புரியாம தான் அப்பாவிங்க வாழ்க்கைல உங்க இஷ்டம் போல ஆடுறீங்க அது உங்களுக்கே திருப்பி நடக்கும்போது வலிக்குதோ எருமைமாடுங்களா இன்னும் ஒரு காட்டெருமை எங்கேயோ மேய போயிருக்கு அது வேற வந்து என்ன பண்ண போகுதோ தெரியல
 
Member
Joined
Jan 11, 2023
Messages
25
உறங்கிக் கொண்டிருந்த தேம்பாவணியை பார்த்து கொண்டே சுற்றி வந்த சத்யா மேஜை மீதிருந்த அவள் கைபேசியை எடுத்து அழைப்பு தகவல்கள் குறுஞ்செய்தி என அனைத்தையும் ஒன்று விடாது துருவி பார்த்தான்..

எப்போதும் கால் ஹிஸ்டரி whatsapp மெசேஜ் கேலரி.. என அனைத்திலும் சத்யா கேஷவ் பார்க்க கூடாத தன் ரகசியங்களை தடயமில்லாமல் அழித்து விடும் பழக்கமிருந்ததால் வழக்கம்போல் தேம்பாவணி இன்றும் தப்பித்துக் கொண்டாள் ‌.

கேலரியில் சிரித்த மாதிரியாக ஒரு செல்பி எடுத்து வைத்த நாளில்.. "என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது..! அப்படி என்ன நடந்துச்சு ஸ்கூல்ல.. சரியில்லையே.. எவனை பாத்தே..? எவன் கூட போய் ஊர் மேஞ்சிட்டு வந்த..! இந்த அழகும் கலரும் இருக்கிறதுனாலதானே பசங்க பார்த்த உடனே பல்லு இளிச்சுக்கிட்டு பின்னாடி வரானுங்க..! இந்த மூஞ்சிய ஆசிட் ஊத்தி சிதைச்சிட்டா எவன் உன்ன திரும்பி பார்ப்பான்.. இன்னொரு தடவை இந்த மாதிரி பல்லு இளிச்சுகிட்டு போட்டோ போட்டா பெத்த பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன்..! கைய கால ஒடச்சி முடமாக்கி குப்பையில தூக்கி விசீடுவேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!"
மிரட்டியதோடு.. அவள் பிடரியை பற்றி நீளமான கூந்தலை கண்டமேனிக்கு கத்தரித்துவிட்டு கீழே தள்ளிவிட்டு சென்றதில் நரம்புகளில் நடுக்கமெடுக்க பயந்து போனவள் அதன்பிறகு ஆசைக்காக எடுத்துக் கொள்ளும் அத்தனை போட்டோக்களையும் அன்றே டெலிட் செய்து விடுவாள்..

யாரோ முரட்டுத்தனமாக தன்னை உலுக்கி எழுப்புவதை போல் கை காலெல்லாம் ஒரே வலி.. குரல் கூட எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் தோன்றியது..

கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விழுந்த பிறகு தான் விழிப்பு வந்தது.

அடித்து பதறி எழுந்தமர்ந்த போது எதிரே சத்யா நின்று கொண்டிருந்தான்..!

பதட்டத்துடன் பயத்துடன் படுக்கையில் சுற்றும் மற்றும் பரிசோதித்தாள்.. நல்ல வேளையாக படுக்கை விரிப்பை ஈரமாகவில்லை..

பிறகு ஏன் இவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான்.. கை கால் தடதடவென நடுங்க தொடங்கியது..

"வெளிய போகணும் சீக்கிரமா கிளம்பு..!"

"எ.. எங்க..?"

"ஓஹோ எங்க போகணும்னு கேக்கற அளவுக்கு மேடம்க்கு தைரியம் வந்திடுச்சா..! கொண்டு போய் சாக்கடையில் கூட தள்ளுவேன்.. கேள்வி கேட்கவே தகுதியில்லாத ஒரு புழு நீ.. அடச்சீ.. சீக்கிரம் எழுந்து கிளம்பு.."

சுயமரியாதை இல்லாத ஒரு அற்ப வாழ்க்கை.. மரியாதை போய் தொலைகிறது.. நிம்மதி..? சந்தோஷம்..? அதற்கும் வழி இல்லை..

ஏற்ற இறக்கங்கள் இல்லாத ஒரு சலிப்பான வாழ்க்கை.. அது கூட அவளைப் பொறுத்தவரை அமிர்தம் தான்..! அதுவும் கிடைக்கவில்லையே..

இரு ஆண்களின் மத்தியில் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாக ஏகப்பட்ட காயத் தழும்புகளோடு வதைபடும் சிறை வாழ்க்கை..

கட்டிலை விட்டு இறங்கும் நேரம்..‌"ஏய்.. இந்த டிரஸ் போட்டுக்கோ..!" என்று ஒரு உடையை அவள் மீது வீசினான் சத்யா..

எடுத்து உடையை திருப்பிப் பார்த்தவளுக்கு மாரடைப்பு வராத குறை..

"என்ன சத்யா இது..?"

"பாத்தா தெரியல.. டிரஸ்.. பைத்தியம் பிடிச்சா கண்ணு குருடாகிடுமா என்ன..?" கேலியாக உதடு வளைப்பு..

"இது டிரஸ்ன்னு எனக்கும் தெரியுது சத்யா.. ஆனா ரொம்ப சின்னதா இருக்கு.. இந்த மாதிரி டிரசெல்லாம் நான் போட மாட்டேன்.."

"பார்ட்டிக்கு போறோம்.. ஆறுகஜ புடவை சுத்திக்கிட்டு வந்து என் மானத்த வாங்க போறியா நீ..!"

"புடவையில வரப் போறேன்னு நான் சொல்லவே இல்லையே.. என்கிட்ட பார்ட்டிக்கு போட்டுக்கற மாதிரி டிரஸ் இருக்கு.. அதுல ஏதாவது ஒன்னு போட்டுக்கறேனே..!"

"உன்கிட்ட இருக்கிற டிரஸ் லட்சணமெல்லாம் எனக்கு தெரியும்.. நான் சொல்றதைதான் நீ கேட்கனும். தேவையில்லாம பேசின அடிச்சு பல்லை உடைச்சிடுவேன்.. பார்ட்டிக்கு வர்றவங்க எல்லாரும் பெரிய விஐபிஸ்.. அவங்க முன்னாடி என் மானத்த வாங்கிடாதே..! என் வைஃப் எப்படி இருக்கனும்னு அவங்களுக்குள்ள ஒரு பெரிய எதிர்பார்ப்பே இருக்கு.. அதுக்கேத்த மாதிரி தான் நீ நடந்துக்கணும்.."

"அவங்களுக்கு ஏத்த மாதிரி நான் ஏன் நடந்துக்கணும்.. நான் நானாவே இருக்கேன்.. என்னை விட்டுடு சத்யா.. இந்த டிரசெல்லாம் எனக்கு வேண்டாம்.. நான் எங்கேயும் வரல.. எனக்கு தூக்கம் வருது.."

"சரி நீ வர வேண்டாம்..! புருஷன் பொண்டாட்டியா பார்ட்டிக்கு போகலைன்னா பிசினஸ் காண்ட்ராக்ட் கேன்சல் ஆகலாம் பல கோடி நஷ்டமாகலாம்.. விஷயம் உங்க அப்பாவுக்கு போகலாம்.. உங்கப்பன் எதுல வேணா காம்ப்ரமைஸ் பண்ணிக்குவான்.. பிசினஸ்ல ஒரு ரூபாய் நஷ்டம் வந்தாலும்.. அதுக்கு காரணம் நீனு தெரிஞ்சா உன்னை துண்டு துண்டா வெட்டி போட கூட தயங்கமாட்டான்.. என்ன..? போன் பண்ணி உங்க பொண்ணு பார்ட்டிக்கு வர இஷ்டம் இல்லையாம்.. கொஞ்சம் இங்க வந்து என்னன்னு கேளுங்கன்னு சொல்லவா..!"

"இ..‌ இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம் சத்யா.. அப்பாவுக்கு போன் பண்ணிடாத.."

"அப்படின்னா எழுந்து சீக்கிரமா கிளம்பு..!"

விம்மித் தணிந்த நெஞ்சத்தோடு
அந்த உடையை எடுத்துக் கொண்டு அவசரமாக குளியலறையை நோக்கி ஓடினாள்..

நடுநிசியில் ஷவருக்கடியில் அழுதழுது ஒரு வழியாக குளித்து அந்த உடையை அணிந்து கொண்டு கண்ணாடி முன் வந்து நிற்க.. மேலே கால்வாசியும் கீழே முக்கால்வாசியும் காணாமல் போயிருக்க.. ஒரு ஸ்லீவ்லஸ் கருப்பு நிற ஒன் பீஸ் உடை அவள் முட்டிக்கு மேல் நின்றிருந்த அந்த ஆடையில் தன் உருவத்தை பார்க்க அவளுக்கே அருவருப்பாய் இருந்தது..

குறைந்தபட்சம் பின்பக்கமாவது முழுதாக மறையட்டும் என்று கூந்தலை விரித்து விட்டிருந்தாள்..

வெளியே சத்யா லிவிங் ஏரியாவில் அமர்ந்திருந்தான்..

அந்த உடையை அணிந்து கொண்டு நடக்கக்கூட முடியவில்லை..

"ப்ளீஸ் சத்யா வேற டிரஸ் போட்டுக்கறனே.. இது ரொம்ப எம்பேரசிங்கா இருக்கு.. இந்த மாதிரி டிரஸ்தான் போட்டுக்கிட்டு பார்ட்டிக்கு வரணும்னு ஏதாவது கட்டாயம் இருக்கா என்ன..? சத்யாவோட மனைவின்னு எல்லாரும் என்னை மரியாதையா பார்க்க வேண்டாமா..?"

சத்யா இகழ்ச்சியாக சிரித்தான்..

"ஆமா இவங்க பெரிய அன்னை தெரசா.. உன் மூஞ்சிக்கு மரியாதை ஒன்னுதான் கேடு..‌ சத்யாவோட பொண்டாட்டி பாக்க கவர்ச்சியா செம பிகரா இருக்கான்னு சொன்னா போதும்.. மத்தவங்ககிட்ட இவதான் என்னோட வைஃப்னு காட்டறதுக்காக வெச்சிருக்கிற ஷோ பீஸ் நீ.. மத்தபடி உன்னால எனக்கு எந்த யூஸ்ம் கிடையாது.. நேரமாச்சு கிளம்பனும்.." அவளை இழுத்துக் கொண்டு காரில் ஏறினான்..!

காரை நிறுத்தியதும் அந்த இடத்தை மிரட்சியோடு பார்த்தாள் தேம்பாவணி..

"எங்க வந்திருக்கோம் சத்யா..!"

"வரவேண்டிய இடத்துக்கு வந்திருக்கோம்.. இறங்கு..!" என அவன் இறங்கி காரை திறந்து கொண்டு இறங்கியவளை கிட்டத்தட்ட தரதரவென்று இழுத்துச் சென்றான்..

கதவைத் திறந்த பிறகு தான் தெரிந்தது அது ஒரு பார் க்ளப்..

"எ.. என்ன சத்யா இந்த இடத்துக்கு போய் என்னை கூட்டிட்டு வந்திருக்க.. எனக்கு இங்க வர விருப்பம் இல்லை.." அவள் திமிறினாள்..

"உன் விருப்பத்தை யார் கேட்டா..? வர்றியா.. உன் அப்பாவுக்கு ஃபோன் எடுக்கவா.." அவளை இழுத்துக் கொண்டு வந்து நீளமாக போடப்பட்டிருந்த அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் பக்கத்தில் சில பேர் மது.. போதை வஸ்துக்களின் உபயத்தில் வெவ்வேறு லோகங்களில் மிதந்து கொண்டிருந்தனர்..

சில பெண்கள் ஆடை அவிழ்வது கூட தெரியாமல் குடித்துவிட்டு மேற்கத்திய இசைக்கேற்ப கண்டமேனிக்கு ஆடிக் கொண்டிருந்தனர்.. இதுதான் வாய்ப்பென பக்கத்தில் நின்றிருந்த ஆண்கள் அவர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு தழுவி ‌ இசைக்கேற்ப வளைத்து நெளிக்க.. தேம்பாவணி கண்களை மூடி கொண்டாள்..

சத்யாவின் நண்பர்களென சில பேர் அவனோடு ஹைஃபை அடித்து பக்கத்தில் அமர்ந்து ஏதோ அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

இப்படி ஒரு கேவலமான இடத்துக்கு எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தானாம் இவன்..!

பேயும் பிசாசும் நிறைந்த நரகவாசலுக்குள் தள்ளியதை போல் அங்கு இரைச்சலாக எகிறிக் கொண்டிருந்த இசையின் ஒவ்வொரு பீட்டுக்கும் அவள் தேகம் வெட்டி வெட்டி அதிர்ந்தது..

"ஹாய்.. பேப்.." சத்யாவின் கும்பலில் ஒருவன் நெருங்கி அமர்ந்து தேம்பாவணியை அணைக்க வர.. அவளோ மருண்டு சத்யாவோடு நெருங்கி அமர்ந்து அவன் தோளை பிடித்து இழுத்தாள்..

"ப்ச்.. சும்மா உட்கார்" என்று அவளை அதட்டிவிட்டு கோப்பையை உயர்த்தி பிடித்து நண்பர்களோடு கூச்சலிட்டு கொண்டிருந்தான் அவன்..

பிறகு அங்கிருந்து மூவரோடு சேர்ந்து பாரில் சென்று அமர்ந்தான்..

"டேய் மச்சி யாருடா அது..! செம்மையா இருக்காளே..!'

'என்னோட வைஃப்..!"

"வாட்.. கடவுள் ஏன்டா இப்படி சதி பண்ணிட்டான்..! பொண்ணுங்க மேல இன்ட்ரஸ்ட் இல்லாத நீ ஏன்டா இப்படி ஒரு அழகான தேவதையை கல்யாணம் பண்ணிக்கிட்ட...?"

"ஜஸ்ட் ஃபார் சோசியல் இமேஜ்..!' தோள்களை குலுக்கினான் சத்யா..

"பசியோட இருக்கிறவன் தட்டுல காஞ்ச ரொட்டியை போட்டுட்டு பசியே எடுக்காதவனோட பிளேட்ல பிரியாணியை பங்கு வச்ச மாதிரி இருக்குது.. வயிறெல்லாம் எரியுதுடா மச்சி..!" என்றான் அவன்..

"இப்ப என்னடா பிரச்சனை..? அவ வேணுமா உனக்கு.."

"டேய் மச்சி என் தெய்வமே..!" அவனை கண்கள் விரித்து பார்த்தான் பக்கத்திலிருந்தவன்..

"எனக்கு அவளால எந்த யூசும் இல்லை.. உனக்கு வேணும்னா பயன்படுத்திக்க..!"

"வொர்க் அவுட் ஆகுமாடா..!"

"அது உன் திறமை..! வெயிட் பண்ணு இப்ப போய் நீ பேசினா கத்தி கலாட்டா பண்ணி ஊரையே ஒண்ணா கூட்டிடுவா. இதுக்கு நான் ஒரு வழி பண்றேன்.." என்றவன் பேரரை அழைத்து ஒரு ஜூஸ் கொண்டுவரச் சொல்லி அதில் போதை மருந்தை கலந்தான்..

"இந்தா இதை குடி.." என தேம்பாவணியிடம் நீட்டி வைக்க.. வேண்டவே வேண்டாம் என்று வேகமாக மறுத்தாள் அவள்..

"ஏய்..! இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இங்க தான் இருக்க போறோம்.. சும்மா சும்மா வந்து உன்னை கவனிச்சிக்க முடியாது.. இதை குடிச்சிட்டு அப்படி ஓரமா உட்கார்ந்து கிட.. போகும்போது அள்ளிகிட்டு போறேன்..! ம்ம்ம்.." என்று வாய்க்கு நேராகக் கொண்டு வர.. விட்டால் அபூர்வ சகோதரர்கள் ஸ்ரீபிரியாவிற்கு வாயைத் திறந்து விஷத்தை ஊற்றுவது போல் எங்கே தனக்கும் தந்து விடுவானோ என்ற பயத்தில் அதை வாங்கி பருக ஆரம்பித்தாள் தேம்பாவணி..

அவள் முகத்துக்கு நேராக செய்யக்கூடிய வில்லத்தனங்கள் அத்தனையும் தெரியும்.. ஆனால் முதுகுக்கு பின்னால் பின்னப்பட்ட இந்த சூழ்ச்சி வலை இதுவரை அறிமுகமில்லாத ஒன்று..

பாதி குடிக்கும் போதே வித்தியாசம் தெரிந்தது..! எங்கோ பறப்பது போல் உணர்வு.. தலை சுற்றிக் கொண்டு வந்தது..

"மீதியை குடிச்சிடு வனி மிச்சம் வைக்கக் கூடாது.." மிரட்டியபடி அவள் வாய்க்கு நேரே கண்ணாடி கோப்பையை வலுக்கட்டாயமாக எடுத்து செல்ல.. வேறு வழியில்லாமல் அதையும் குடிக்க வேண்டியதாய் போனது..

ஏ..‌ ஏன் இப்படி..! யோசிக்கக்கூட முடியவில்லை.. அந்த நேரத்தில் அவளுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்..

வ..‌வரூண்.. டாக்டர்..!

முனகிக்கொண்டே அவனுக்கு அழைப்பெடுக்க முயன்றாள்..

விழிகள் கலங்கி எழுத்துக்கள் மங்கலாக தெரிந்தன.. ஃபோனை பார்க்கவே முடியவில்லை.. கண்கள் உறுத்தியது.. இரு இமைகளும் இழுத்துக் கொண்டன..!

எப்படியோ வருணுக்கு அழைத்து விட்டாள்..

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வருண்..!

முழு ரிங் போனது..‌

"ராத்திரி பகல் பாராமல் எந்நேரமும் போன் வந்துகிட்டே இருக்கு.. அதை சைலன்ட்ல போட்டு வச்சுட்டு தூங்க வேண்டியது தானே.. இந்த மனுஷனால எல்லாருக்கும் தொல்ல.. நிம்மதியா தூங்க முடியுதா.." அவன் போனை எடுத்து சைலண்டில் போடுவதற்காக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் திலோத்தமா..

அதற்குள் கைபேசியை காதில் வைத்துக்கொண்டு வருண் அமர்ந்திருக்க.. "போனை எடுத்தாச்சா..! இனி ராக்கோழி மாதிரி முழிச்சுக்கிட்டே இருங்க.." உதட்டை சுழித்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்..

"தேம்ஸ்..! என்னடா இன்னும் தூங்கலையா.." அவன் கேள்விக்கு தேம்பாவணி ஏதோ பதில் சொன்னாள்.. ஆனால் எதுவும் தெளிவாக கேட்கவில்லை..

இரைச்சலும் சத்தமும் அவன் காதுகளை நிறைத்து எரிச்சலை தந்தது..

"தேம்ஸ்.. என்னமா.. எங்க இருக்க..! பதில் சொல்லு.. நீ பேசறது எதுவுமே புரியல.." அணிந்திருந்த டி ஷர்ட் டிராக் பேன்ட்டோடு வேகமாக வந்து காரை எடுத்தான்..

மறுபக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

யாரோ அவளை கைப்பற்றி இழுத்ததில் கைபேசி சோபாவுக்கு மறுபக்கம் சென்று விழுந்தது..

வருண் தனது ரெக்கார்டிங் செயலியில் போய் தேம்பாவணி பேசியதை திரும்பத் திரும்ப போட்டு கேட்டான்..

ஏதோ ஒரு பாரின் பெயரை உளறலாக சொல்லி வைத்திருக்க வேகமாக அந்த இடத்திற்கு காரை செலுத்தினான்..

யார் தன் கை பற்றி அழைத்துச் செல்கிறார்கள்.. எங்கு போகிறோம் என்றே தெரியாமல் இழுவிசைக்கு கட்டுப்பட்டு கைப்போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள் தேம்பாவணி..

தலையில் யாரோ கை வைக்கிறார்கள் கன்னத்தை தொடுகிறார்கள்.. இடையை அழுத்துகிறார்கள் எல்லாம் தெரிகிறது.. ஆனாலும் கையை தூக்க முடியாத அளவிற்கு இரும்பு குண்டு போல் உடம்பு கனத்தது..

சட்டென அந்த கரத்திடமிருந்து யாரோ தன்னை பிரித்து தன் தோள் மீது சாய்த்துக் கொண்ட உணர்வு..

நரகத்திற்குள் கடவுள் நுழைந்ததை போல் சாத்தான்கள் அலறுவதை போல்.. அவள் கற்பனைகள் தறிகெட்டன..

கண்களை திறக்க முடியாமல் நிமிர்ந்து பார்த்தாள் தேம்பாவணி..

"டா..க்..டர்.." என்றவரை தான் ஞாபகம்.. மயங்கி அவன் தோளில் சரியும்போது விலகியிருந்த ஆடையை சரி செய்து தன்மீது டீ ஷர்ட்டை அணிவிப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது அவளால்..

"யாருடா நீ.. பெரிய ஹீரோ மயிரா.. திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையற மாதிரி.. எங்க இருந்துடா வந்த..! பவுன்சர்ஸ் என்ன பண்றாங்க..?" கத்தியவனால் அதற்கு மேல் வாயை திறக்க முடியவில்லை..

"ஏய் முதல்ல அவளை விடு.. அவ யார் தெரியுமா..! ஷீ இஸ் மை வைஃப்.. யூ பிளடி.."

"அதனாலதான் இன்னொருத்தனோட கை புடிச்சு அனுப்பி வச்சியா..‌ யூ பா**ட்.. உனக்கெல்லாம் எதுக்குடா மீசை.. நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா.. உன் இஷ்டப்படி வாழறதுனா போய் தொலைய வேண்டியதுதானே.. எதுக்குடா இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய நாசமாக்கற நாயே..!" சத்யாவும் அடி வாங்கினான்..‌

"யூ சன் ஆஃப் பி**.. உன்ன சும்மா விடமாட்டேன்டா என் மேலேயே கைய வச்சுட்டல.. பெரிய தப்பு பண்ணிட்ட.. உன்னை என்ன பண்றேன்னு பாரு..!" அடிபட்ட நாயாக கதறிக் கொண்டிருந்தான் சத்யா..

தோள் மீது துவண்டு கிடந்தவளை ஒரு இருக்கையில் அமர வைத்து விட்டு திரும்பி வந்தான் வருண்..!

சட்டை அணிந்திராத அவன் வெற்று தேகம் உடற்பயிற்சியால் இறுகி போயிருக்க.. சிகப்பு நிற வெளிச்சம் அலை அலையாக அவன் மீது விழுந்து அந்த ஓங்கு தாங்கான உடற்கட்டின் வடிவத்தை வரி வரியாக எடுத்துக்காட்டி சத்யாவை கொஞ்சம் பின்னடைய செய்திருந்தது..

"ப்ளீஸ் என்ன விட்டுடு..!" பின்னால் நகர்ந்தவன் கால் தவறி கீழே விழ.. வருணின் பார்வை அவன் வலது கரத்திற்கு சென்றது..

தேம்பாவணியின் வீங்கி சிவந்து போயிருந்த பிஞ்சு கரம் அவன் கண்களுக்குள் தேங்கி நிற்க.. டேபிளில் கிடந்த போர்க்கை எடுத்து முழங்காலிட்டு அமர்ந்தவன்.. அவன் வலது கரத்தின் மணிக்கட்டில் தன் கையை வைத்து அழுத்தி அவன் உள்ளங்கையில் ஃபோர்க்கால் இரண்டு முறை ஆழமாக குத்தியெடுக்க.. அலறி துடித்தான் சத்யா..

"இனிமே அவ மேல உன் சுண்டுவிரல் பட்டா கூட ஏன்னு கேட்க நான் வருவேன்டா..!" வியர்வை சொட்ட சொட்ட முகம் சிவந்து ரௌத்திரமாக சொன்னான் வருண்..!

உள்ளங்கையில் ரத்தம் வழிய எழ கூட முடியாத நிலையில் அவமானத்தில் நொறுங்கி சத்யா அங்கேயே கிடக்க தேம்பாவணியை கையிலேந்திக் கொண்டு காரை நோக்கி சென்றான் வருண்..

தொடரும்..
Appada thappichitta
 
Top