- Joined
- Jan 10, 2023
- Messages
- 93
- Thread Author
- #1
மாடி இறங்கி வந்தவள் கோலம் அழியாமல் அப்படியே இருப்பதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நகர்ந்திருந்தாள்..
இன்றோடு நான்காவது நாள்.. கோலம் பளிச்சென அப்படியே இருக்கிறது.. என்ன மாயம் நிகழ்ந்ததென்று தெரியவில்லையே..!!
முதல் நாள் கோலத்தை பார்த்து கண்கள் சுருங்கி யோசனையோடு அவள் வாயிலை கடக்க.. "டாக்டர் இன்னைக்கு கோலத்தை அழிக்கவே இல்லை தெரியுமா..?" உற்சாகமாக சொன்னார் செக்யூரிட்டி..
சூர்ய தேவ்வை சந்தித்து மன்னிப்பு கேட்க நினைத்தாள்.. என்னதான் இருவருக்குமிடையில் கிலேசங்கள் இருந்த போதிலும் தனக்குள் தகித்து கிடந்த ஆத்திரத்தை அவரிடம் காட்டி இருக்கக் கூடாது.. பெரிய தவறு என்று மனசாட்சி முரண்டியது..
"அப்படின்னா அவர் மட்டும் உன்னை ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசலாமா..?" என்று வாதம் செய்த இன்னொரு மனதிற்கு பதில் அளிக்க முடியாமல் சோர்ந்து போனவள் அந்த கேள்வியை ஓரங்கட்டினாள்..
"அவர் எப்படியோ இருந்து விட்டு போகட்டும்.. நான் நிதானமாக பேசியிருக்க வேண்டும்.." போனை தூக்கி போட்டு உடைத்து.. யார் மீதோ கொண்ட கோபத்தை அவர் மீது காட்டியது தவறுதானே..? என்ன கமலி இப்படி பண்ணிட்ட..? தன்மீதே சங்கடம் உண்டானது..
மாயாவிடம் இது பற்றி பேசி இருக்கவில்லை.. அசோக் பொருட்டு தான் அழுதது தெரிந்தால் பாவம் அவளும் வேதனைப்படுவாள்.. அதிலும் டாக்டர் மீது கோபத்தை காட்டியது தெரிந்தால் வருத்தப்படுவாள்.. தன் செல்வாக்கை பயன்படுத்தி வேலை வாங்கிக் கொடுத்து தங்க ஏற்பாடு செய்து தந்த தங்கத் தோழிக்கு அந்த சங்கடத்தை தரக் கூடாதென விஷயத்தை மறைத்து விட்டாள்.. உடைந்த ஃபோனுக்கு பதிலாக புது ஃபோன் கூட வாங்கி இருந்தாள்..
கமலி பிரம்ம பிரயத்தன பட்டு தன்னை இயல்பு நிலைக்கு திருப்பிக் கொள்வதற்குள் மூன்று நாட்கள் முடிவடைந்திருந்தன..
தலைமை மருத்துவரிடம் தான் நடந்து கொண்டதற்காக வருந்தி மன்னிப்பு கேட்க தான் நினைத்தாள்..
ஆனால் மூன்று நாட்களாக மருத்துவமனையில் சூர்ய தேவ்வை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை..
அவன் மட்டும் சிசிடிவி மூலம் திரையில் அவள் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்...
நான்காம் நாள் கமலியை தன்னறைக்கு அழைத்திருந்தான் சூர்யதேவ்..
எப்போதும் போல் அவசரமாக ஓடி வராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வந்து நின்றவளை தீர்க்கமாக கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன அவன் விழிகள்..
தலைநிமிர்ந்து அவனை பார்க்கவே சங்கடப்பட்டாள் கமலி..
"கமலினி..!!" தெளிவான குரலில் அழைத்தான்..
விழிகளை நிமிர்த்தி அவனை பார்த்தாள்..
"நீங்க ஓகே தானே..?" சூர்ய தேவ் விழிகள் அவளை கூர்மையாக ஆராய்ந்தன..
"எஸ் டாக்டர்.." என்றாள் மெல்லிய குரலில்..
"ஆர் யூ ஷ்யூர்..?" அவன் அழைத்து கேட்க.. நீண்ட பெருமூச்சோடு..
"எஸ்.. நான் நல்லா இருக்கேன்.." என்றாள் அவள்..
மௌனமாக தலையசைத்துக் கொண்டான் சூர்ய தேவ்..
"டாக்டர்.." என்று அவள் ஆரம்பிக்க.. மீண்டும் அவள் முகத்தை நோக்கினான்..
"ஐ அம் எக்ஸ்ட்ரிமிலி சாரி.. நான் அன்னைக்கு உங்ககிட்ட அப்படி நடந்திருக்க கூடாது.. வேற ஏதோ ஒரு டென்ஷனை உங்க மேல.." என்று முடிப்பதற்குள்..
"ரூம் நம்பர் 23 ல இருக்கிற பேஷண்ட்டுக்கு டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்ணிட்டீங்களா..?" என்று தெளிவான குரலில் கேட்டிருந்தான் அவன்..
ஒரு கணம் விழித்த கமலி.. "எஸ் டாக்டர் பிரிப்பேரிங்.." என்றாள் சற்று தடுமாற்றத்துடன்..
"ஓகே சீக்கிரம் ஆகட்டும்.. இன்னைக்கு ஈவினிங் அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க.." என்று விட்டு தன் மடிக்கணினி திரையில் மூழ்கினான் சூர்யதேவ்..
அதற்கு மேல் பேச வாய்ப்பில்லாது போகவே அங்கிருந்து நகர்ந்தாள் கமலி..
அன்று விடுமுறை.. வாய் நமநமவென்று எதையோ திங்க தேடியதில்.. முட்டை வாழைப்பழம் ரவை மைதா சக்கரையை வைத்து வாழைப்பழ பணியாரம் தயார் செய்திருந்தாள்.. சுவை மொட்டுக்கள் உமிழ் நீரை தூதாக அனுப்பி.. இந்த பக்கம் நாலு பணியாரத்தை தள்ளறது..? என்று உண்ண துடித்துக் கொண்டிருக்க.. ஆசைகளை தாண்டி சூர்யதேவ்வை சுற்றி வட்டமிட்டது அவள் மனம்..
சூர்ய தேவ் பற்றி வருண் சொன்ன வார்த்தைகள் அவ்வப்போது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறதே.. அப்போதெல்லாம் அவன் மீது அனுதாபம் சுரக்கும்.. மனம் இளகும்..
தேடி தேடி எனக்கான சந்தோஷங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே இந்த தனிமை என்னை நெருப்பாய் சுடுகிறதே..
எந்த சுவாரஸ்யமும் இல்லாத ஒரே மாதிரியான இயந்திர கதியான வாழ்க்கையும்.. இருளும் தனிமையும்.. அவர் மனதை எந்த அளவில் பாதிப்படைய வைத்திருக்கும்.. அடிக்கடி அவன் நிலையிலிருந்து யோசித்துப் பார்க்கிறாள்..
மருத்துவமனையில் டாக்டராக இருந்து விட்டுப் போகட்டும்.. நான் இங்கே இருக்கும் வரை.. ஏன் சின்னதாக ஒரு தோழமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது..!! ஒரு முயற்சி..? நான்கு நாட்களாய் கோலத்தை அழிக்காமல் சென்ற அவன் மாறுபட்ட நடவடிக்கை கமலியின் மனதிற்குள் டாக்டரோடு நட்புறவு பாராட்டும் எண்ணத்திற்கான அடித்தளத்தை அமைத்து தந்திருந்தது..
அவமானப்படுத்தினால்..?
படுத்தட்டுமே..!! நீ பார்க்காத அவமானமா கமலி..? வருண் என்ன சொன்னார்.. ஒரு நர்சாக சூர்ய தேவ் என்ற மனிதனை கையாள முயற்சி செய்யுங்கள் என்று சொன்னாரே..? நோயாளி உதாசீனப்படுத்தினாலும் அவர்கள் கோப தாபங்களை பொருட்படுத்தாது பணிவிடை செய்ய வேண்டியது மட்டுமே ஒரு செவிலியரின் கடமை..
அப்படித்தான் இங்கேயும்.. டாக்டரை நோயாளியாக பார்க்காமல் நண்பனாக பார்க்க முயற்சி செய்..!! இங்கிருந்து செல்வதற்குள் சின்ன சின்ன மாற்றங்களை அவரிடம் கொண்டு வந்தால் போதும்.. வேறு மாதிரியான அழகான உலகத்தை பார்க்கத் துடிக்கும் ஆர்வம் தானாகவே அவரிடம் வந்து விடாதா.. ?
பொன்னிறமாக எண்ணெயில் குளித்திருந்த வாழைப்பழ பணியாரத்தை உதடு கடித்து யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் அதிலிருந்து சிலதை எடுத்து டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு கீழே இறங்கினாள்..
வேண்டாம் கமலி.. கதவை சடாரென அடித்து சாத்தப் போகிறார் எதற்காக இவ்வளவு மெனக்கிடுகிறாய்.. மனசாட்சி கேலி செய்தது..
சாத்தட்டும்.. அப்போதும் விடாமுயற்சியுடன் வேறு உணவு வகைகளோடு மீண்டும் மீண்டும் கதவை தட்டுவேன்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. தன் மனதை தட்டிக் கொடுத்த படி.. வழக்கம் போல் துள்ளி குதித்து கீழே இறங்கினாள்..
தயக்கமும் பயமும் முட்டி தள்ள.. அதையும் மீறி தோள் கொடுத்து வந்த தைரியத்தோடு.. ஆழ்ந்த மூச்சுவிட்டு கதவை தட்டினாள்..
"கம்மிங்.." கணீர் குரலில் இதயத்துடிப்பின் வேகம் கூடியது..
கதவை திறந்தான் சூர்ய தேவ்..
வழக்கம்போல் கோபப்பார்வை இல்லை.. எந்தவித உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காத நிர்மலமான விழிகள் அவளைக் கூர்ந்து நோக்கின..
"எஸ் டெல் மீ..?" முகம் இறுகி தெரிந்தாலும் வார்த்தைகளில் அத்தனை கடுமை இல்லை..
"அ..து.. வாழைப்பழ பணியாரம் செஞ்சேன்.. நான் மட்டும் தனியா சாப்பிட மனசு வரல.. அக்கம் பக்கத்து குழந்தைகளையும் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க.." அவள் இழுத்து இழுத்து சொல்ல.. மேற்கொண்டு சொல் என்பதை போல் கால்களை லேசாக அகட்டி நின்று மார்பின் முன்னே கைகளை மடக்கி கட்டியபடி அவளை பார்த்திருந்தான்..
அவனின் அகண்ட மார்பு கொஞ்சமாக கதவு திறந்திருந்த வாசலை முழுதாக மறைந்திருந்தது.. வீட்டின் உட்புற அமைப்பை இப்போதும் அவளால் பார்க்க இயலவில்லை..
உங்களுக்கும் எடுத்துட்டு வந்தேன்.. என்று திருதிருவென விழித்தாள்..
"புரியுது.. முறைக்கறீங்க.. முகத்தில் அடிச்ச மாதிரி கதவை சாத்திடாதீங்க.. மனசு வலிக்கும்.. நானே போயிடறேன்.." என்றபடி படிக்கட்டுகளில் இறங்கியவள்.. ஒரு கணம் நின்று திரும்பி அவனை பார்த்தாள்.. அப்போதும் சூர்ய தேவ் தோரணை மாறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்..
"போகட்டுமா..?"
"குடுத்துட்டு போயிடவா..?" விழிகளை அகலமாக விரித்து சிறுபிள்ளைத்தனமாக கெஞ்சல் சாயலில் அவள் கேட்க..
அழுத்தமாக விழிகளை மூடி திறந்தவன்.. கரத்தை அவள் பக்கமாக நீட்டினான்..
சட்டென முகம் மலர்ந்து அவனிடம் ஓடி வந்தாள் கமலி.. டிபன் பாக்ஸை அவனிடம் தந்துவிட்டு "தேங்க்ஸ்.." என்று புன்னகையோடு சொன்னவள் படிகளில் இறங்கி தன் போர்ஷனுக்கு மாடியேறி இருந்தாள்.. அவள் செல்லும் வரை அங்கேயே நின்றவன் டிபன் பாக்ஸை பெரிய அதிசயமாக முன்னும் பின்னமாக திருப்பி பார்த்துவிட்டு உள்ளே சென்று சத்தம் வராமல் கதவை அடைத்துக் கொண்டான்..
தனக்கு டியூட்டி போடப்பட்டிருந்த பிரிவில்.. தாயும் சேயுமாக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள் கமலி..
"குழந்தையை குளிக்க வைத்து எடுத்துட்டு வரட்டுமா..?" என்று கேட்டபடி ஆவலோடு தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை எட்டிப் பார்த்து பிஞ்சு முகத்தை ரசித்தாள்..
பெண் குழந்தை.. பூக்களை மட்டுமே கொண்டு வடிவமைத்ததை போல் அத்தனை அழகு அந்த குட்டி தேவதை..
குழந்தையை கண்ணார ரசித்திருந்தவள் பிள்ளையின் மீது போர்த்தியிருந்த பூ துண்டை கண்டு முகம் சுருக்கினாள்..
"பேபியை டவல் வச்சு கவர் பண்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்த மாதிரி ஸ்டிக்கர்ஸ் எல்லாம் கவனமா எடுத்துடனும்.." என்று புத்தம் புதிய பூத்துண்டின் மீது ஒட்டப்பட்டிருந்த அந்த ஸ்டிக்கரை எடுத்து குப்பை கூடையில் போட்டாள்..
குழந்தையின் தாய் ஸ்வேதா அவள் பேச்சை கவனிக்காமல்.. நிலை குத்திய பார்வையுடன் எங்கோ வெறித்திருந்தாள்..
"ஸ்வேதா..!!" கமலி அழைக்க மெதுவாக அவள் பக்கம் திரும்பினாள்..
"ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. உங்க ஹெல்த் ஓகேதானே.. பெயின் ஏதாவது இருக்கா.. டாக்டரை கூப்பிடட்டுமா..?" அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க.. ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தாள் ஸ்வேதா..
"அப்புறம் என்ன ஆச்சு..!! எவ்வளவு சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் தெரியுமா இது.. அழகான இளவரசி பிறந்திருக்கா..!! பெண் குழந்தைகள் பிறக்க பாக்கியம் செஞ்சிருக்கணும்.." குழந்தையின் மீது வாஞ்சையோடு நிலைத்தது அவள் விழிகள்..
"பெண் குழந்தைகள் பிறக்க புண்ணியம் பண்ணி இருக்கணும்னு உங்களுக்கு தெரியுது.. ஆனா என் புருஷனுக்கும் மாமியாருக்கும் தெரியலையே..?" என்றவளை புருவம் சுருக்கி கேள்வியாக பார்த்தாள் கமலி..
"ஆமா..!! முத குழந்தையும் பொண்ணுதான்.. இரண்டாவதும் பெண்ணா பிறந்ததால என் கணவர் வீட்டில் இருந்து யாரும் இன்னும் வந்து பார்க்கல.." அந்தப் பெண் கண்ணீர் வடித்தாள்..
"என்ன சொல்றீங்க இந்த காலத்துல கூட இப்படி நடக்குதா என்ன..?"
ஸ்வேதா விரக்தியாக சிரித்தாள்.. "எந்த காலத்திலும் எந்த பிரச்சனை ஓயாது போலிருக்கு.. அவர் சொத்துக்களை கட்டி காப்பாத்த ஆண் வாரிசு தான் வேணுமாம்.. இரண்டாவது குழந்தை ஆணா பிறக்கும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தார்.. பெண் குழந்தை பிறந்ததுல ரொம்ப ஏமாற்றம்.. நான் ரொம்ப பலவீனமா இருக்கேன்.. இனி குழந்தை பெத்துக்கிறது நல்லதுக்கு இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரே..!! அதனால என் கணவர் என்கிட்ட ரெண்டு நாளா பேசல.. என்னை வந்து பார்க்கல.." ஸ்வேதா அழுகையை விழுங்கினாள்.. கமலிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
"உங்க கணவருக்கு போன் போட்டு தாங்க..!!"
"அவர் எடுக்க மாட்டார்.." அந்தப் பெண் விரக்தியாக சொல்ல.. தன் அலைபேசியை எடுத்தாள் கமலி..
"அவர் நம்பர் சொல்லுங்க.." என்று கேட்க ஸ்வேதா கணவனின் எண்ணை சொல்ல தயங்கினாள்..
"கவலை படாதீங்க.. என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.. நம்பர் சொல்லுங்க" என்று கேட்ட பிறகு தன் கணவனின் பத்து இலக்க எண்ணை சொல்ல சொல்ல.. டைப் செய்து கொண்டு அந்த எண்ணை அழைத்தாள் கமலி..
"டியூட்டி நேரத்துல இவ யார்கிட்ட பேசிட்டு இருக்கா..?" சிசிடிவி யில் பார்த்துவிட்டு அந்த அறையை நோக்கி நடந்தான் சூர்ய தேவ்..
"ஹ.. ஹலோ.."
"நான் உங்க வைஃப் அட்மிட் பண்ணி இருக்குற ஹாஸ்பிடலோட நர்ஸ் கமலி பேசுறேன்.."
அந்த பக்கம் அலட்சியமாக "சொல்லுங்க சிஸ்டர்" என்றொரு குரல்..
"உங்க மனைவிக்கு டெலிவரி ஆகி மூணு நாள் ஆகிடுச்சு.. நீங்க இன்னும் வந்து பாக்கலையே சார்..?"
"அதான் அவ பிறந்த வீட்டு ஆளுங்க இருக்காங்களே.. அட்டென்டர் ஒருத்தர் இருந்தா போதாதா..? எனக்கு நிறைய வேலை இருக்குதே சிஸ்டர்.. நார்மல் டெலிவரி தானே..!!" அவன் அலட்சியமாக சொன்னான்..
"ஆமா சார்.. ஆனா குழந்தை பெத்து பலவீனமாக இருக்கிற உங்க மனைவிக்கு நீங்க மாறல் சப்போர்ட் கொடுக்க வேண்டியது முக்கியம் இல்லையா..?
அந்தப் பக்கம் டென்ஷனாக பெருமூச்சு.. "சிஸ்டர் இப்ப நீங்க என்ன தெரிஞ்சுக்கணும்.. ஸ்வேதா என்னை பத்தி ஏதாவது சொல்லி புலம்பினாளா..? இது எங்க குடும்ப விஷயம் நீங்க தலையிட வேண்டாம்.."
"இருக்கலாம் சார்.. ஆனா இந்த ஹாஸ்பிடல் நர்ஸ்சா எனக்கு அவங்க ஹெல்த் ரொம்ப முக்கியம்.. அவங்க அழுது புலம்பி கவலைக்கிடமான நிலையில் இருக்கும்போது பாத்துட்டு என்னால எப்படி சும்மா இருக்க முடியும்.. உடம்புல பிரச்சனைனா மருந்து மாத்திரை கொடுத்து நாங்க சரி பண்ணிடுவோம்.. அவங்களுக்கு மனசுல பிரச்சனை.. அதுவும் உங்க மூலமா.."
"அதிக பிரசங்கித்தனமா பேசுறீங்க சிஸ்டர்.. உங்க வேலைய பாருங்க.. நான் உங்க சீஃப் டாக்டர்கிட்ட பேசிக்கறேன்.."
"பயமுறுத்தறீங்களா.. முதல்ல என்கிட்ட பேசுங்க சார்..!! இல்லைன்னா உடனடியாக புறப்பட்டு உங்க மனைவியை பார்க்க ஹாஸ்பிடல் வாங்க.."
"அது முடியாது.."
"என்ன சார் உங்க பிரச்சனை..? இரண்டாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துடுச்சு.. அதுதானே உங்க பிராப்ளம்.."
அந்தப் பக்கம் அமைதி..
"எந்த காலத்துல சார் இருக்கீங்க.. பெண்கள் இப்ப எல்லா துறையிலும் சாதிக்கறாங்க.. பெண் குழந்தைகள் பிறக்கிறதை வரமா நினைச்சு எத்தனையோ தம்பதிகள் ஏங்கித் தவிக்கிறாங்க நீங்க என்னடான்னா.."
"அதுக்காக ஆணும் பெண்ணும் சமமாகிட முடியுமா.. வளர்க்கத் துப்பில்லாம நான் ஆண் குழந்தைக்கு ஆசைப்படலை சிஸ்டர்.. என்கிட்ட இருக்கிற பணத்துக்கு 100 குழந்தைகளை பெற்று வளர்க்க என்னால முடியும்.. ஆனாலும் என் மொத்த சொத்துக்கும் வாரிசு வேணும்.. ஒரு ஆம்பள பிள்ளையால் மட்டும் தான் என் சொத்துக்களை கட்டி காப்பாத்த முடியும்.. இன்னொருத்தர் வீட்டுக்கு போற பொம்பள பிள்ளைகளால சொத்து சிதறி சின்னா பின்னமாதான் போகும்.."
"தொழில்துறைகளை சாதிச்ச எத்தனையோ பெண்களை முன்னுதாரணமாக காட்டினாலும் உங்களுக்கு புரியுமா என்னன்னு எனக்கு தெரியல.. ஆம்பள பிள்ளையா பொறந்தாலும் திறமை இருந்தா மட்டும் தான் உங்க சொத்துக்களை கட்டி காப்பாத்த முடியும்.. ஆனா பொம்பள புள்ள பிறந்தாலே போதும்.. அவ பொறுப்பா உங்களையும் பாத்துக்குவா.. உங்க குடும்பத்தையும் பாத்துக்குவா.. ஒன்னுக்கு ரெண்டு பெண் தேவதைகளை பெத்து வச்சுக்கிட்டு நீங்க இப்படி பேசுறது வேடிக்கையா இருக்கு சார்.."
"என்ன சிஸ்டர் எனக்கே அறிவுரை சொல்றீங்களா.. என்னதான் பெண்களை ஆம்பள மாதிரி வளர்த்தாலும் பொண்ணு பொண்ணுதான்.."
"பெண் குழந்தைகளை எதுக்கு சார் ஆம்பள மாதிரி வளர்க்கணும்.. பெண் குழந்தைகளை அவங்க இயல்பிலேயே வளருங்க.. அவங்களுக்கு தைரியத்தையும் தனிச்சு நிக்கற தன்னம்பிக்கையையும் ஊட்டி வளருங்க.. உங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் பெருசா சாதிப்பாங்க.."
எதிர்முனையில் அமைதி.. அது எரிச்சலோ அவள் பேச்சை ஆமோதிப்பதன் அடையாளமோ தெரியவில்லை..
"எங்க அப்பா என்னை வெறுத்தாலும் பரவாயில்லை.. நான் வளர்ந்து என்னோட அப்பாவுக்கு உறுதுணையா இருப்பேன்.. அப்படின்னு உங்க பொண்ணு குட்டி குட்டி கண்ணை உருட்டி சொல்ற மாதிரி எனக்கு தோணுது.. உங்க மனைவி சொன்னாங்க குழந்தை அப்படியே உங்க ஜாடைன்னு.. உங்க அடையாளத்தை நீங்களே வெறுக்கறீங்களா.. ஆச்சரியமா இருக்கு.."
எதிர்முனையில் நீண்ட அமைதி.. இதுபோன்ற வார்த்தைகள் தந்தையானவனை உருக வைக்கும்.. அவள் அறிவாள்..
"பொதுவா ஆண்களுக்கு பெண் குழந்தை தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.. பெண் குழந்தை ஆம்பளைங்களுக்கு இன்னொரு அம்மா.. உங்களுக்கு ரெண்டு அம்மா கிடைச்சிருக்காங்க.. அன்பு இரட்டிப்பாக கிடைச்சிருக்கு.. அப்பாவை குழந்தையா நினைச்சு தலைவாரி குடுமி போட்டு முகத்துக்கு பவுடர் போட்டு.. சாப்பாடு ஊட்டி விடுற மகளோட பாசத்தை நீங்களும் அனுபவிச்சுருப்பீங்க.. இன்னொரு இளவரசி உங்களை தன் மகனா தாங்க பிறந்து வந்திருக்கா.."
"நீங்க இப்ப வெறுத்தாலும் குழந்தையோட முகம் பார்க்க பார்க்க உங்களுக்கு அவளை பிடிச்சு போய்டும்.. ஏன்னா உங்க குழந்தை அவ்வளவு அழகு.. ஆனா ஏதோ ஒரு கட்டத்துல பிறந்த உடனே தன் அப்பாவால வெறுக்க பட்டோங்கற உண்மை அந்த குழந்தைக்கு தெரிஞ்சா..?"
"சிஸ்டர்?"
"நீங்க ஆண் குழந்தை வேணும்னு ஆசைப்பட்டதுல தப்பு இல்ல.. ஆனா பெண் குழந்தை பிறந்த பிறகு அதை வெறுக்கறீங்க பாருங்க அதுதான் பெரிய தப்பு.. உங்க கனவுகளை அவளால நிறைவேத்த முடியாதுன்னு ஒதுக்கி தள்ளாம.. உங்க கனவுகளோடு சேர்த்து அவள் கனவுகளையும் நிறைவேத்திக்கற அளவு லட்சிய பெண்மணியா வளருங்க சார்..!! அப்ப புரியும் பெருசா சாதிச்சது நீங்கதான்னு.."
"எனக்கு தெரியுது.. நான் நிறைய பேசிட்டேன்.. ஆனா மனசு கேக்கல.. மன்னிச்சிடுங்க சார்..!! உங்க மனைவி அழுதுட்டே இருக்காங்க.. இந்த நேரத்துல அவங்க இப்படி அழறது நல்லதுக்கு இல்ல.."
"நான் கிளம்பி வரேன் சிஸ்டர்.. வந்து என்னோட குழந்தையை பாக்கறேன்.." அந்த ஆண் சொல்லவும் கமலி மலர்ந்து புன்னகைத்தாள்..
"ரொம்ப நன்றி சார்.." கமலியின் கண்கள் கலங்கியது..
"ஃபோன கொஞ்சம் ஸ்வேதா கிட்ட குடுக்கறீங்களா..?" அவர் கேட்க அலைபேசியை ஸ்வேதாவிடம் கொடுத்தாள் கமலினி..
ஐந்து நிமிடங்களாக என்ன பேசினார்களோ தெரியவில்லை.. ஸ்வேதாவின் இதழில் புன்னகை.. கண்களில் கண்ணீர்.. பரவசப்பட்டாள் சந்தோஷித்தாள்.. வெட்கப்பட்டாள்.. இன்னும் என்னென்னவோ உணர்வுகள்.. அலைபேசியை அணைத்துவிட்டு கமலியை நன்றி உணர்வோடு பார்த்தாள்..
"நான் உங்களை ஒரு முறை கட்டிப் பிடிச்சுக்கட்டுமா.." அந்தப் பெண் உதடு கடித்து கண்ணீரோடு கேட்க.. புன்னகையோடு ஆதுரமாக அவளை அணைத்துக் கொண்டாள் கமலி..
அவள் தலையை தடவி கொடுத்து.. "அழாதீங்க எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வுண்டு.." என்றவள் குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வர அங்கே பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து சுவற்றில் சாய்ந்தபடி சூர்யதேவ்..
சப்த நாடியும் ஒடுங்கிப் போனது..!!
"போச்சு.. நேத்து கொஞ்சம் நல்ல மாதிரியா நடந்துகிட்டார்.. இன்னைக்கு அதுக்கு கெடுத்துக்கிட்டாச்சு.."
"வேலை போக போறது உறுதி..!!" மனதுக்குள் இந்த மாதிரியான பய எண்ணங்கள் ஓடிய போதும் வெளியில் அச்சத்தை காட்டாமல் பிள்ளையோடு தைரியமாக நின்று கொண்டிருந்தாள் கமலினி..
அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்தவன்.. "குட் ஜாப்.." என்று சொல்லிவிட்டு செல்ல..
கமலிக்கு மயக்கம் வராத குறை..
தொடரும்..

Last edited: