நல்ல வேளையாக நீலநிற போர்வையை தேகத்தை நேர்த்தியாக மூடியிருந்ததால் சங்கடம் எதுவும் இல்லை.. பெண் மருத்துவர் என்றாலும் தன்னை அந்த கோலத்தில் பார்ப்பதை விரும்பவில்லை அன்பரசி..
மருத்துவர் மயங்கி அருகிலிருந்த நாற்காலியில் சாய்ந்த மேனிக்கு விழுந்திருந்திருக்க அவரை ஏதோ அரிய ஜந்துவை போல் பார்த்துக் கொண்டிருந்தான் குருக்ஷேத்ரா..
ஈவு இரக்கமில்லை.. பதட்டமில்லை அவனிடம்.. போர்வையை சுற்றிக் கொண்டு எழுந்தவள்.. "என்னங்க.. அவங்களை எழுப்பி உட்கார வைங்க.. இதோ வந்துடறேன்.." துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து உடை மாற்றி வெளியே வந்தவள் நிலைத்த பார்வையோடு அதிர்ந்துதான் போனாள்..
விமலா.. மயங்கிய அதே நிலையில் இருக்க.. எதிரே கட்டிலில் அமர்ந்து ஃபோனை துழாவிக் கொண்டிருந்தான் அவன்..
"என்னங்க..!!" அன்பரசி கத்திக் கொண்டே வரவும் நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் குரு..
"மயங்கி இருக்கிறவங்களை தண்ணி தெளிச்சு எழுப்ப சொன்னா அப்படியே அலட்சியமா உட்கார்ந்து இருக்கீங்க..?" என்றாள் கோபமாக..
"நமக்கு அடிச்சு போட்டு தான் பழக்கம்.. தண்ணி தெளிச்சு எழுப்பியெல்லாம் பழக்கம் இல்லை.." என்று சொன்னவனை பெருமூச்சோடு கடுப்பாக பார்த்தவள்.. "உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க என்னை சொல்லணும்.." என்றவாறு மேஜை மீதிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து லேசாக தண்ணீர் தெளித்து விமலாவை எழுப்ப முயன்றாள்..
"டாக்டர்.. டாக்டர்.. எழுந்திருங்க.." அவள் மென்மையாக எழுப்பிக் கொண்டிருக்கும் போதே..
"ஏய் டாக்டரே.. எழுந்திரு.. வந்த இடத்துல அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு.." கரகரப்பான குரலில் அமைதியை கெடுத்தான் அவன்..
"எதேய்.. தூங்..க..றேனா.." விமலாவின் முனகல்.. ஈனஸ்வரத்தில்..
"ஏய் டாக்டரு.. இப்ப எழுந்திருக்கிறியா.. இல்ல.."
"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா..!! அவங்க கழுத்துல கத்தியை வைச்சு மயக்கம் போட வச்சிட்டீங்களே..!! யார் ஆபத்தானவங்க யார் நல்லவங்கன்னு கூட உங்களுக்கு தெரியாதா..?" என்றாள் அவனிடம் சிடுசிடுப்பாக..
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. அவங்கள பார்த்து நீ எதுக்காக கத்தின.. உனக்கு ஆபத்துன்னா என்னால் வேற எதையும் யோசிக்க முடியாது.." விரைப்பாக சொன்னவனை திரும்பிப் பார்த்தாள் அன்பு..
மீண்டும் தண்ணீர் தெளித்து மருத்துவரின் கன்னம் தட்டினாள் அவள்..
"ஹ்ம்ம்.." லேசான முனகலோடு விழிகளை திறந்தார் மருத்துவர்..
மீண்டும் கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த அவன்தானா வந்து நிற்க வேண்டும்..
"அம்மாஆஆ.. அரக்கன்.." விமலா அலறி எழுந்து நிற்க..
"அய்யோ டாக்டர்.. ஏன் இப்படி பயப்படறீங்க..!! நீங்க பார்த்து வளர்ந்த பிள்ளை தானே அவன்.. அப்படி என்ன செஞ்சிடப் போறான்.." வடிவு காபியோடு உள்ளே வந்தாள்..
"நான் பார்த்து வளர்ந்த புள்ள மாதிரியா இருக்கான்.. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம என் கழுத்துலயே கத்திய வைக்கிறான்.. விட்டா ஒரே சீவா சீவியிருப்பான் போல.. ராட்சசன் அப்பப்பா.." தலையை உலுக்கினாள் விமலா..
அவளை முறைத்தவாரே "டாக்டர் பேசினதெல்லாம் போதும்.. அவளை செக் பண்ணு.." கரடு முரடாக சொன்னவனின் தோளில் தட்டினாள் அன்பரசி..
"வயசுல பெரியவங்க.. நோயை குணப்படுத்தி உயிரை காப்பாத்தற டாக்டர்.. மரியாதை கொடுத்து பேசுங்க.." அவள் செல்லமான அதட்டலில்
"என்ன மரியாதை கொடுக்கணும்..?" கண்களை சுருக்கினான் அவன்..
"இப்படி வா போ ன்னு சொல்லாதீங்க.. வாங்க போங்கன்னு மரியாதையா பேசுங்க.." என்றவளை வழக்கம்போல் முறைத்துப் பார்த்தவன் அதே வேகத்தோடு விமலாவின் பக்கம் திரும்ப ரத்தம் சுண்டி போனது மருத்துவருக்கு.. கையிலிருந்த காபி டம்ளர் கிடு கிடுவென நடுங்கியது.. நியாயமாக இப்போது அவருக்கு தான் சிகிச்சை தேவை..
"வாங்க.. போங்க.. உட்காருங்க.." வரிசையாகச் சொன்னான்..
"என்னது.." விமலா விழித்தார்..
"இவளை செக் பண்ணுங்க.." மனைவி சொல் கேட்டு மரியாதையோடு பேசியவனை இரவு நேரத்தில் சூரியன் உதித்ததை போல் அதிசயமாக பார்த்தனர் வடிவும் விமலாவும்..
"ஹ்ம்ம்.. நல்ல முன்னேற்றம் தான்.." ஒரு மார்க்கமாக தலையசைத்தார் விமலா..
"நீங்கதான் இவங்களை வர சொன்னீங்களா..?"
"ஆமா.."
"எதுக்கு.. நான் நல்லாத்தானே இருக்கேன் ?" கணவனிடம் கிசுகிசுத்தாள் அன்பரசி..
"ப்ச்.. என்னடி விளையாடறியா.. நீதானே நேத்து என்னை கொன்னுட்டான்.. கொடுமை படுத்திட்டான்.. கடிச்சு தின்னுட்டான்.. எதையோ காணல.. ன்னு கத்தி கூப்பாடு போட்ட.."
அன்பரசி.. "ஷ்ஷூ.. அமைதியா இருங்க.. ஐயோ வாய மூடுங்க" என்று வாய்க்குள் முணுமுணுத்ததையும்.. சைகையில் அவனை வாய் மூட சொன்னதையும் கண்டுகொள்ளாதவனாக சத்தமாக அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான் குரு.. வடிவு வாயை பொத்தி சிரித்து வெட்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட..
"அப்போ ரேப்பா..?" விமலாவின் விழிகள் மூக்கு கண்ணாடி வழியே பெரியதாக விரிந்தன..
"ஹான்.. கிட்டத்தட்ட அப்படித்தான்.. நிறைய சேதாரம்.. என்னன்னு செக் பண்ணுங்க.." என்றான் குரு.. சீரியஸான முக பாவனையுடன்..
"இல்ல.. இல்ல.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர் ஏதோ உளறாரு.." அவசரமாக மறுத்தாள் அன்பரசி..
"ஓஹோ.. தென் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் அப்படித்தானே..!!"
"ஆ.. ஆமா.. இல்ல.." நாலா பக்கமும் தலையைசைத்து வைத்தாள் அவள்..
"என்ன பேசிக்கிட்டே இருக்கீங்க.. இப்ப அவளுக்கு செக் பண்ண முடியுமா முடியாதா..?" குரு எரிச்சலோடு இரைந்தான்..
"நீ முதல்ல இங்கிருந்து போ ப்பா.. நான் அவளை செக் பண்றேன்.."
"ஏன் நான் இங்கே இருந்தா என்ன..?" அங்கிருந்த நாற்காலியில் சட்டமாக அமர்ந்து கொள்ள இரு பெண்களும் தலையில் அடித்துக் கொண்டனர்..
"என்னங்க தயவு செஞ்சு இங்கிருந்து போங்க..!!" அவள் சொன்ன அடுத்த நிமிடம் சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து நின்றவன்.. "சரி போறேன்.. இங்க ரத்தம் கட்டி செவந்து போய் இருக்கு.. அதையும் காட்டி மருந்து வாங்கி போட்டுக்கோ.." வயிற்றை நோக்கி நீண்ட விரல் திசைமாறி சுட்டிக்காட்டியதில்..
"இ.. இல்ல.. நானே காட்டிக்கிறேன்.." அன்பு அலறி பின் வாங்கினாள்.. கண்ணாடி விழிகளின் வழியே எக்ஸாக்ட் லொகேஷனை சரியாக பார்க்காத போதும் "விவஸ்தை இல்லாத காட்டான்" விமலா வாய்க்குள் முணுமுணுத்தாள்..
தலையை கோதியபடி அன்புவை விட்டு நகர மனமில்லாமல் அவளைப் பார்த்தபடியே பின்னால் நகர்ந்து சென்று அறையை விட்டு வெளியேறி இருந்தான் அவன்..
"அய்யோ எப்பா.. இப்படித்தான் இவனை சமாளிக்கிறியோ..!!" கதவை சாத்திவிட்டு வந்தார் விமலா..
"சரி உட்காரு என்ன ஏதுன்னு செக் பண்ணிடுவோம்.."
"ஐயோ டாக்டர்.. அவர்தான் சொல்றாருன்னா நீங்க கூட புரியாம பேசுறீங்களே..!! நான்தான் சொன்னேனே அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு.."
"செக் பண்ணாம போனா உன் புருஷன் என்னை உயிரோடு விடமாட்டான்.."
"கொஞ்ச நேரம் இப்படி உக்காந்துட்டு செக் பண்ணிட்டதா சொல்லிடுங்க.."
"அதுவும் சரிதான்.. ஏதோ சிவந்து போயிருக்குன்னு சொன்னானே.. இந்த ஆயின்மெண்ட் பூசிக்கோ.. வேற பயப்படுற மாதிரி எதுவும் இல்லைல.. அவன் உன்னை போர்ஸ் பண்ணினானா.. நீ சந்தோஷமா தானே இருக்க.. எந்த பிரச்சனையும் இல்லையே.." விமலாவின் வரிசையான கேள்விகளில் மெல்ல சிரித்து.. "நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டாக்டர்.. எந்த பிரச்சினையும் இல்லை.. அவரை என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிறார்.." என்றாள் அன்பரசி நிதானமாக..
டாக்டரின் முகத்தில் சிரிப்பு.. "எப்படியோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரிதான்..!!"
ஐந்து நிமிடங்கள் அவளோடு பேசிவிட்டு வெளியே வந்த வேளையில்.. "என்னாச்சு டாக்டர்.. அவ நல்லா தானே இருக்கா..!! ஒன்னும் பிரச்சனை இல்லையே.." இறுகிய முகமும் கண்களில் பதட்டமுமாக கேட்டவனை வினோதமாக பார்த்தாள் விமலா..
"அவ நல்லா தான் இருக்கா.. இருந்தாலும் மருந்து கொடுத்திருக்கேன்.. ஆமா தனக்கு பிரச்சனைன்னு அவ உன்கிட்ட சொன்னாளா.. நீ ஏன் அவசரப்பட்டு என்னை ஃபோன் பண்ணி வர சொன்ன..!!" ஒரு கையில் வெள்ளை கோட்டோடு மறு கையை இடுப்பில் வைத்து கண்களை சுருக்கினார் விமலா..
"அது.. அவதான் நேத்து ஐயோ அம்மானு அலறினா.. அதான் வர சொன்னேன்.." குரு ஒன்றும் புரியாதவனாக பிடரியை வருடியபடி யோசித்தான்...
"அட பாவமே.. விட்டா என்னைய பத்து மணி டாக்டராகிடுவாங்க போல.." தலையை உலுக்கிக் கொண்டு விமலா அங்கிருந்து நகர்ந்த வேளையில்..
"டாக்டரே" மீண்டும் அழைத்தான் அவன்..
"சொல்லுப்பா.."
"பல்லு பட்டு ஒரு மாதிரி நீலமா சிவந்து இல்ல கறுத்து போயிருக்கு.. ஏதாவது மருந்து இருக்கா..!!"
"எங்கே தம்பி..!!" விமலா அப்பாவியாக அவன் முகத்தை ஆராய்ந்தார்..
"யோவ் விவஸ்தை கெட்ட புருஷா.. உள்ள வாய்யா.." உள்ளிருந்து அன்பரசியின் குரல்..
"அடேங்கப்பா.. ரவுடிக்கேத்த ராங்கிதான் அவ.." விமலா வியப்போடு உதட்டைப் பிதுக்கினார்..
"அது..!!" குரு மீண்டும் எதையோ விளக்க முற்பட.. "நெத்தி காயத்தை தானே சொல்லுற.. அன்பரசி கிட்ட மருந்து கொடுத்திருக்கேன் அதையே வாங்கி பூசிக்கோ நான் கிளம்பறேன்.." ஆச்சாரியா அழைத்ததையும் காதில் வாங்காமல் விமலா ஓடிவிட்டார்..
ஆச்சார்யா குருவிடம் வந்தார்.. "என்னாச்சு தம்பி.. விமலா ஏன் வந்துட்டு போறாங்க..!!"
"அது.. நேத்து.." அவன் சொல்வதற்கு முன் "இல்ல மாமா.. அன்னைக்கு வந்து என்னை பார்த்துட்டு போனாங்கள்ல.. அதான் இப்போ என் உடல் நிலை எப்படி இருக்குன்னு சும்மா விசாரிக்க வந்தாங்க.." அன்பரசி முந்திக்கொண்டு அங்கே வந்து நின்றாள்..
"அப்ப சரி.." ஆச்சார்யா அங்கிருந்து சென்று விட.. கணவனை கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் அன்பு..
"இப்போ எதுக்குடி இப்படி இழுத்துட்டு வர்றே.." என்றபடி அவளை தன் பக்கம் இழுக்க மார்பில் மோதி நின்றாள் அன்பரசி..
"எதுக்காக டாக்டரை கூட்டிட்டு வந்தீங்க.."
"நீதானடி தூக்கத்துல வலிக்குது .. அழுதுடுவேன்ன்னு முனங்கிட்டு இருந்தே..!!"
"நான் எப்ப அழுதேன்.." அவள் மூக்கை சுருக்கினாள்..
அவள் பாவனையை கண்டு "அழகாதான் இருக்கு.." என்ற மன ஓட்டத்தோடு ஒரு மார்க்கமான பார்வையுடன் தலையசைத்து.. "தேவைதான் எனக்கு.. கஷ்டப்படறியேன்னு டாக்டரை கூட்டிட்டு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்.." அங்கிருந்து நகர போனவனை கைப்பற்றி இழுத்தாள் அன்பு..
"எனக்காகவா கூட்டிட்டு வந்தீங்க..!!" அன்பரசியின் கண்கள் மின்னியது..
"ஹ்ம்ம்..?" தோள்களை குலுகினான் குரு..
அவள் இதழில் புன்னகை.. "இனி நம்ம அந்தரங்க விஷயங்களை அடுத்தவங்ககிட்டே இப்படி சொல்ல கூடாது.. வலியோ சுகமோ.. நமக்குள்ள இருக்கட்டும்.. புரிஞ்சுதா.." ஆழ்ந்த விழிகளோடு அவன் முகம் பார்த்து கேட்க.. தரையைப் பார்த்து பின் தலையை கோதியபடி ஏதோ யோசித்தவன்..
"சரி..!!" என்றான் தோள்களை குலுக்கி..
அன்பு அவனை அணைத்துக் கொண்டாள்.. அவனும் இறுக அணைத்துக் கொண்டு கட்டிலில் சாய்க்க..
"என்ன.. என்ன.." அவனிடமிருந்து துடித்து விலகினாள் அவள்..
"இல்ல கட்டி புடிச்சியே அதான்..!!" மீண்டும் அவள் இதழில் முத்தமிட வந்தான்..
"கட்டிப் பிடிச்சாலே அது மட்டும்தான் அர்த்தமா..?" அவள் மூக்கு நுனியில் சிறு கோபம்..
"வேறென்ன..?" என்றவனின் கண்களில் புரியாத பாவனை..
"உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதை கட்டிப்பிடிச்சு வெளிப்படுத்தினேன்.."
"எனக்கும் கூட உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அதை நானும் வெளிப்படுத்தட்டுமா..!!
"எப்படி..?" கண்கள் விரித்தாள் அன்பரசி..
முத்தமிட்டு அவளை படுக்கையில் சாய்த்தவன்.. மேலே படர்ந்து தன் குதிங்காலால் அவள் சேலையை பாதத்திலிருந்து முட்டி வரை விலக்கி விட..
"அய்யோ" என விலகி எழுந்தவள் "இதை விட்டா உங்களுக்கு வேற ஒன்னும் தெரியாதா..?" சலிப்போடு இதழை துடைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்..
"ஏய்.. ஏய்ய்.. அன்பு.. நான் இன்னும் குளிக்கலை டி.." மேல் சட்டையை கழட்டி போட்டு அவன் கத்திய கத்தல் கதவோடு நின்று போனது .. பிறகென்ன அவள் செல்லும் திசையெல்லாம்.. பின் தொடர்ந்து சென்று.. அதிகாரத்திலும் தொண தொணப்பிலும் தன் காரியத்தை சாதித்துக் கொண்டான் குரு..
அன்பு பழையபடி மாறியிருந்தாள்.. அன்பையும் காதலையும் வாரி வழங்கினாள்.. குரு மாறிவிட்டானா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. வழக்கம்போல அடிதடி வெட்டு குத்து பஞ்சாயத்துகளுக்கு அவன் கூட்டாளிகள் வந்து அழைத்துச் சென்றனர்.. ஆச்சார்யா தீர்க்க முடியாத சில வேலைகளுக்கு அவனைத் தான் அனுப்பி வைத்தார்..
பழைய காலத்து ஜெகன் மோகினி படத்தில் அந்த மோகினியிடம் அரசன் தேன் குடித்த வண்டாக மயங்கி கிறங்கி கிடப்பது போல் அன்பரசியின் காதலுக்கு கட்டுப்பட்டு மயங்கி கிடந்தான் குரு.. அதற்காக சாதுவாகி விட்டான் என்று அர்த்தமல்ல.. நான்கு பிள்ளைகளை பெற்ற மகராசி கூட இப்படி சோர்ந்து போக மாட்டாள்.. அவன் ஒருவனை சமாளிப்பதற்குள் மாரத்தானில் ஓடி வந்தது போல் மூச்சு வாங்கி போகிறாள்.. எதற்கெடுத்தாலும் கோபம்.. சத்தம்.. அவ்வளவு கோபத்திலும் அவனை ஆசுவாசப்படுத்தி சமாளிக்க அன்பரசியால் முடிந்ததுதான் பேரதிசயம்..
அன்று.. அன்பரசியும் வடிவும் கோவிலுக்கு சென்று வரும் வழியில்.. பள்ளிக்கூடத்தின் அருகே ஒருவனை அடித்து அவன் கரத்தை இழுத்து வைத்து கொலைவெறியுடன் அரிவாளால் வெட்ட போனவன்.. ஆஆஆஆ.. என்ற அலறல் சத்தத்தோடு எதிரே நின்ற அன்பரசியை கண்டு அப்படியே ஓங்கிய கரத்தோடு நின்று விட்டான்..
அன்பரசி இதழ் கடித்து கண்ணீருடன் அந்த காட்சியை காண இயலாமல் தலை தாழ்ந்து அவனை கடந்து செல்லும் நோக்கத்தோடு வேகமாக நடந்து வந்து கொண்டிருக்க விழிகள் அவள் மீது நிலைத்து செயலிழந்து நின்றான் குரு .. அந்த நொடி நேர வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு குருவின் கைப்பிடியில் இருந்தவன் தப்பித்து ஓடியிருந்தான்..
"குரு.. அவன் ஓடிட்டான்.. அவனை பிடிடா.. வெட்டு.." தப்பித்து ஓடியவனின் பின்னால் ஓடியது குருவின் கூட்டம்..
"பாட்டி.. சீக்கிரம் வாங்க போகலாம்.." குருவை கடந்து அவள் பாட்டியோடு சென்றுவிட.. பேருந்து போல் அவளோடு நகர்ந்த பார்வையோடு கடந்து சென்ற பிறகும் திரும்பி நின்று அவள் முதுகை வெறித்தான் குரு..
தொடரும்