- Joined
- Jan 10, 2023
- Messages
- 68
- Thread Author
- #1
வீடு வந்தான் குரு.. எப்போதும் அதிரடியாய் வாசல்படியை மிதிக்கும் அவன் கால்கள் இன்று தயக்கத்தோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தன..
பிடரியை கோதியபடி தாடையை தேய்த்தபடி கண்களை அலையவிட்டு அவளைத்தான் தேடினான்..
"கிழவி அம்பு எங்கே..?" குறுக்கே போன வடிவிடம் விசாரிக்க..
"அம்பு தோட்டத்துல மிளகாய் பறிக்குது" என்றார் அவர்..
"என்ன கிழவி கிண்டலா..? அவளை அம்புன்னு நான் மட்டும்தான் கூப்பிடுவேன்.. நீ எப்படி கூப்பிடனும்..?" புருவங்களை உயர்த்திய பார்வையுடன் கேட்க..
"அது.. அன்பு.. அன்பு" என்றாள் வடிவு திக்கி திணறி..
"ஹான் ரைட்.. உங்களுக்கெல்லாம் அவ அன்பு தான்.. எனக்குதான் அம்பு.. புரியுதா.." தலையை அசைத்து கேட்க "என்னவோ.. உன் அன்பான அம்பு புழக்கடையில மிளகாய் பறிக்குது.. இப்ப சரியா சொல்லிட்டேனா.. ஆளை விடு ராசா.. உலை கொதிக்குது.." பாட்டி சொல்லிவிட்டு நழுவினாள்..
"உலை கொதிக்குதா..? சரிதான்" தலையின் பின்பக்கம் தட்டிக்கொண்டு.. ஒரு சங்கடமான புருவ நெளிப்புடன் அன்பரசியை காணச் சென்றான் அவன்..
குட்டி குட்டி விரல்களால் காய்ந்த மிளகாய் பழங்களை ஒரு கிண்ணத்திலும் பச்சை மிளகாய்களை மறு கிண்ணத்திலும் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தாள் அன்பரசி..
"அம்பே.." அழைத்துவிட்டு குரலை செருமினான் அவன்..
திரும்பிப் பார்த்தவளின் கண்களில் சிறு மலர்ச்சி.. அது வலியுறுத்தலின் பெயரில் வரவழைக்கப்பட்டதா அவனுக்கு புரியவில்லை..
"வந்துட்டீங்களா.. ஒரு பத்து நிமிஷம் பொறுங்க.. சாப்பாடு தயாராகிட்டு இருக்கு.."
"உன்கிட்ட வந்தாலே சாப்பாடு பத்தி கேட்கத்தான் வருவேனா என்ன..!!"
"ஐயோ சாரிங்க.. ஓஹ்.. அது வேணுமா.. கொஞ்சம் பொறுங்க கைய கழுவிட்டு வரேன்..!! வீட்டுக்குள்ள போகலாமா இல்ல இங்கேயே எங்கேயாவது மறைவா..?"
குரு அழுத்தமாக கண்களை மூடி திறந்தான்.. "என்னை கடுப்பேத்தாதே அம்பு.."
"கடுப்பேத்தற அளவு நான் என்னங்க செஞ்சேன்..?" அவளிடம் ஒன்று புரியாத பாவனை..
"இப்படி.. இப்படி.. என்னை வெறுப்பேத்த மாதிரி பேசுறது தான் எனக்கு பயங்கர கோபத்தை கிளப்புது..!!"
"வேற எப்படி பேச சொல்றீங்க.." மிளகாய் பறிப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்..
"எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசிடு அம்பு.. அதுதான் நமக்குள்ள நல்லது.." கண்களை உருட்டினான்..
வெறுமையாக சிரித்தாள் அன்பு.. "பேசிட்டா மட்டும்..!! என்ன பெருசா தீர்வு கிடைச்சிட போகுது.. இந்த வீட்ல ஆக்கி போடவும்.. உங்களை சந்தோஷப்படுத்தவும்.. உங்க துணிகளை துவைச்சுப் போடவும் மட்டும்தானே எனக்கு உரிமை உண்டு.. அதை தாண்டி நான் என்ன பேசிட முடியும்.."
"என்னடி கொழுப்பா நான் சொன்னதை திரும்பி எனக்கே சொல்றியா..?" அவன் கண்கள் அவள் கிண்ணத்திலிருந்த மிளகாய் பழம் போல் சிவந்தன..
"ஐயோ சாமி.. ஆளை விடுங்க.. நான் எதுவும் சொல்லல.. எதுவும் கேட்கல.. திருத்தறேன் பேர்வழின்னு உங்ககிட்ட எதையாவது சொல்லி என்னை சேதாரமாக்கிக்க நான் விரும்பல.. நீங்க இப்படியே இஷ்டப்படியே இருங்க.." அவள் விட்டேத்தியான பேச்சில்..
"நீ சொல்லலைன்னாலும் நான் என்னுடைய இஷ்டப்படி தான் இருப்பேன்.. ஆனா நீதான் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு ஒரு மார்க்கமா வம்பு பண்ற.. இந்த நக்கல் பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காத அம்பு.." ஓங்கி அறைஞ்சிடுவேன்.. அவன் கடுகடு பேச்சில் கண்களில் சோர்வுடன் பார்த்தாள் அன்பு..
"என்னங்க ஆச்சு உங்களுக்கு.. நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு இருக்கேன்.. தேடிவந்து வம்பு இழுக்கிறது நீங்க..!!"
மறுபடி மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு உன்னோட டிராமாவை ஆரம்பிக்க போற அப்படித்தானே..?"
"நான் எதுக்காக முகத்தை தூக்கி வச்சுக்கணும்.. எப்பவும் போல சிரிச்சுகிட்டே உங்க கூட சந்தோஷமா இருப்பேன் போதுமா.." பணிந்தவள் போல் பேசினாலும் அன்பரசியின் பேச்சில் திருப்தி இல்லை அவனுக்கு..
"நீங்க உள்ள போங்க.. நான் வந்துடறேன்.."
"நீ சொன்னா நான் கேட்கணுமா.. நான் இங்கதான் உட்காருவேன்..!!"
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான் அவன்..
"சரி உட்காருங்க" இயல்பாக செடியினில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தாள் அவள்..
"அவன் ஒன்னும் நல்லவன் கிடையாது.." குரு பேச்செடுக்க யாரைப் பற்றி சொல்கிறான் என புரியாமல் கண்களை படபடவென அடித்து நிமிர்ந்து வினோதமாக பார்த்தாள் அன்பு..
"குடிக்க காசு கேட்டு பெத்த தாயை அடிச்சு.. கீழ தள்ளி அவங்க இப்ப ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.. இந்த மாதிரி நாய்களை எல்லாம் சும்மா விட முடியுமா.. அதான்.. அடிச்ச கையை வெட்டி வீசி எறிஞ்சாதான் இந்த மாதிரி இன்னும் நாலு பேர் கிளம்பாம இருப்பானுங்க.." செடிகளில் கண்களை மேய விட்டபடி பற்களை கடித்து கோபமாக பேசிக் கொண்டிருந்தான் குரு..
"இப்ப எதுக்காக இதையெல்லாம் என்கிட்ட சொல்றீங்க.." என்றவளை அதே கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான்..
"ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன் இதுவரைக்கும் நீங்க செஞ்ச அடிதடி பஞ்சாயத்துக்கள்ல இந்த மாதிரி நியாயம் இருக்குதான்னு ஆராய்ஞ்சு பார்த்து இருக்கீங்களா..?" அவள் கேட்ட பிறகுதான் கண்களை உருட்டி யோசித்தவனுக்கு ஒரு விஷயம் பட்டென மூளையில் உரைத்தது..
ஆச்சார்யா சொல்லும் வேலைகளை செய்வான்.. நிச்சயமாக அவர் செய்யச் சொல்லும் காரியங்களில் நியாயம் இருக்கும்.. இவனாக எடுத்து முடிக்கும் பஞ்சாயத்துகளும் தேவையில்லாத வம்பு சண்டை என்றும் சொல்லிவிட முடியாது தான்.. ஆச்சார்யாவின் சொந்த ரத்தமாயிற்றே.. அவன் அடிதடிகளுக்கு பின்னே வலுவான காரணங்கள் இருக்கும்.. ஆனால் எதையும் இப்படி.. அப்படி என ஆராய்ந்து யாருக்கும் விளக்கம் சொன்னதாக நினைவில்லை..
"கோபம் வந்துச்சு.. அடிச்சேன் இவ்வளவுதான்" பெற்ற தகப்பனிடமும் இவ்வளவுதான் அவன் பதில்..
நிதானமாக ஒரு பிரச்சனையின் சாராம்சத்தை உணர்ந்து ஆத்திரத்தோடு அடித்ததாகவோ அதற்கு இன்னொருத்தரிடம் விளக்கம் கொடுத்ததாகவோ அவன் அகராதியில் கிடையாது.. இப்போது இவளுக்கு மட்டும் நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற வீராப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது..
"ஆமா யாருக்கும் இதுவரை இந்த மாதிரி விளக்கிச் சொன்னதில்ல.. உனக்கு மட்டும் நான் எதுக்குடி சொல்லணும்.."
"நான் கேட்கவே இல்லையே..?" அவள் கேலியாக சிரித்தாள்.. அந்த சிரிப்பில் அதீத கோபம் வந்துவிட.. எழுந்து சென்று அவள் கரம் பற்றி முரட்டுத்தனமாக இழுத்தான் அவன்..
"என்னடி.. நானும் பாக்கறேன்.. வந்ததிலிருந்து பிடி கொடுக்காம ஒரு மாதிரி நக்கலாவே பேசிட்டு இருக்க.." அவளை விடுவதாக இல்லை..
பெருமூச்சுவிட்டு அவனை அலுப்பாக பார்த்தாள் அன்பு..
"என்னங்க ஆச்சு உங்களுக்கு.. இப்ப நான் எப்படி பேசணும்னு நினைக்கிறீங்க..
சரி.. இதையெல்லாம் விட்டுடுங்க.. இந்த அடிதடி வெட்டு குத்து பஞ்சாயத்தெல்லாம் வேண்டாம்னு உங்க கால்ல விழுந்து கதறவா.."
"நீ என்ன கெஞ்சி கூத்தாடினாலும் உன் பேச்சை நான் கேட்க போறது இல்லயே.." அதற்கும் இதழ் வளைத்த நகைப்பு..
"அப்புறம் என்னதான் வேணும் உங்களுக்கு.. ஏன் என்னை வந்து தொல்லை பண்றீங்க.." அவள் இயல்பாகவே கேட்க..
"ஆஆஆஆ.." என்ற அவன் கர்ஜனையில் திடுக்கிட்டாள் அவள்.. "அது தான்டி தெரியல.. என்னமோ உன்கிட்ட எதிர்பார்க்கிறேன் அது என்னன்னு புரிய மாட்டேங்குது.. என்னய சாவடிக்கிற நீ.." தன் தலையை அழுந்தப் பற்றி கொண்டு அடிக்குரலில் உறுமினான்..
அந்த இளைஞனின் கையை முறுக்கிப் பிடித்த போது அவள் முகம் போன போக்கு.. மன வலியோடு சிவந்த அவள் கண்கள்.. இப்போது இயல்பாக இருப்பது போல் இந்த நடிப்பு.. ஒட்டாத பேச்சு.. அவனுக்குள் உறுத்துகிறது.. "தயவு செய்து எனக்காக மாறிடுங்க" என்று சொன்னதன் முதல்கட்ட மாற்றம்.. தன் மனம் தன் பேச்சைக் கேட்காமல் அவள் சொன்னதற்காக இளகுவதையோ.. வேறு வழிதனில் தடம் மாறுவதையோ தாங்க இயலாத காரணத்தால் வந்த மூர்க்கம்..
"உனக்காக நான் எதுக்குடி மாறனும்.. நீ சொல்றதை நான் எதுக்காக கேட்கணும்.. முதல்ல நான் சொல்றதை நீ கேட்பியா.. எனக்காக என்ன வேணா செய்வியா..?" இடுப்பில் கைவைத்து நின்றான்..
"என்ன செய்யணும்..?" அவன் பக்கம் திரும்பி உறுதியான பார்வையோடு திரும்பி நின்றாள் அன்பு..
"எனக்காக உயிரை கொடுப்பியா..?"
"நிச்சயமா தருவேன்..!!" அந்தக் கண்களின் அசாத்திய தைரியம் அவனை தடுமாற வைத்தது..
"ஹாஹா.. உயிரை கேட்க மாட்டேன்ன்னு தைரியம்.. பாக்கறேன்.. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வரும்போது உன் லட்சணத்தை பார்க்க தானே போறேன்..!!" அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்தது அவனை மேலும் பாதித்தது..
மூளையும் மனதும் சுத்திகரிக்கப்படுகிறதோ என்னவோ மிஞ்சியிருந்த கசடுகள் அவளுக்குத்தான் பாதிப்பை கொடுத்தன..
"நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு சொன்னியே..!! எங்கே இந்த மிளகாயை தின்னு பார்ப்போம்.." கோணல் சிரிப்போடு இளக்காரமாகத்தான் சொன்னான்..
"சரிதான் போடா.." என உள்ளே சென்று விடுவாள் என நினைப்பு.. அப்படித்தான் தன்னை மதிக்காமல் செல்ல வேண்டும் என்று ஆசை.. அவளை வென்று விட்டதாக ஒரு மிதப்பு வேண்டும்.. அவள் காலடியில் துடித்துக் கொண்டிருக்கும் தன் மனதிற்கு அவள் மறுப்பு ஒரு மருந்து அவ்வளவுதான்..
ஆனால் அவன் கேட்டு முடிப்பதற்குள் கொத்தாக மிளகாய் எடுத்து வாயில் திணித்துக் கொண்டாளே..!! அதிலும் அனைத்தும் காரம் கூடிய பச்சை மிளகாய்.. அவன் கண்களை பார்த்தபடி நிதானமாக மென்று தின்றாள்.. விழிகள் சிவந்து நீர் வழிந்தது.. ஸ்தம்பித்துப் போனான் குரு.. அந்த ஓரிரு கணங்களுக்குள் தொண்டைக்குள் எச்சில் விழுங்கி சொல்லில் அடங்காத துடிப்பிற்கு உள்ளானான்..
"ஏய்.. அம்பேஎஎஎ.." சத்தமாக கத்தியபடி அருகே வந்தவன்.. "என்னடி பண்ற.. பேச்சுக்கு சொன்னா உடனே மிளகாய் முழுங்கிடுவியா.. துப்புடி..!!" அவள் தாடையை இறுக பற்றிய படி வாயில் இருந்த மிளகாய் துணுக்குகளை வெளியே கொண்டு வர முயன்றான்.. அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் மிளகாய் மென்று விழுங்கி இருந்தாள் அன்பு.. மீண்டும் கொத்தாக சில மிளகாய்களை அவள் கையிலெடுக்க.. பட்டென மிளகாய்களையும் வேகமாக தட்டி விட்டிருந்தான் குரு..
"ஏய்.. ஏய் கிழவி.." பக்கத்து தெரு வரை கேட்கும் படி அவ்வளவு சத்தமாக கத்தியதில் அன்பரசியின் செவிப்பறை கிழிந்து போகாமல் இருந்தது தான் ஆச்சரியம்..
"ராசா.." பாட்டி வந்து எதிரே நின்றாள்..
"கைப்பிடி அளவு சர்க்கரை எடுத்துட்டு வா.. சீக்கிரம் போ மசமசன்னு நிக்காதே.." அவளை அவசரப்படுத்த வடிவு என்ன ஏதென்று புரியாமல் வேகமாக ஓடினாள்..
"நான் தான் சொன்னேனே.. நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்னு.." பேச முடியாத அளவிற்கு காந்தலோடு தவித்தாள்..
"அதுக்காக முட்டாள்த்தனமா நான் ஏதாவது ஒன்னு சொன்னா.. யோசிக்காம பைத்தியக்காரி மாதிரி அதை செய்வியா..!!" கண்கள் சிவந்து கடுங்கோபத்துடன் சீறினான் அவன்..
"உங்க மேல நான் வெச்சிருக்கிற அன்பை நிரூபிக்க இது ஒன்னு தான் வழின்னா நிச்சயமா நீங்க சொன்னதை நான் செய்வேன்..!! உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.." என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான் குரு.. நெஞ்சம் உருகியது..
கண்களில் தாரை தரையாக வழிந்த கண்ணீருடன்.. "நீங்க செய்யற அடிதடி சண்டை எனக்கு சுத்தமா பிடிக்கல.. ஆனா ஏன் செய்றீங்கன்னு இனி நான் கேட்க மாட்டேன்.. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு உங்க கூட வாழ்வேன்.. ஏன்னா.. நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்.. நான் இல்லாம நீங்க கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது.. என் புருஷன் ரவுடின்னு இந்த ஊரெல்லாம் கிண்டல் பண்ணும் போது என் நெஞ்செல்லாம் நடுங்குது.. அழுகையா வருது.. ஆனாலும் பரவாயில்லை.. உங்களுக்காக நான் சிரிப்பேன்.. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்.." மாலை மாலையாக வழிந்த கண்ணீருடன் குரல் தழுதழுத்து பேசியவளை தனது கரங்களை கிண்ணங்களாக்கி அவள் இரு கன்னங்களில் வைத்தபடி பேச்சற்று பார்த்துக் கொண்டிருந்தான் குரு..
"கல்யாணத்துக்கு முன்னாடி என் புருஷன் இப்படித்தான் இருக்கணும்னு எனக்குள் நிறைய ஆசைகள் இருந்தது.. அதையெல்லாம் குழி தோண்டி புதைச்சுட்டு உங்க கூட வாழ ஆரம்பிச்சிட்டேன்.. அதுக்காக உங்களை பொறுத்துக்கிட்டு வாழறேன்னு அர்த்தமில்லை.. உங்களை விரும்பி தான் சந்தோஷமா வாழறேன்.. உங்களை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு தான் வாழ்கிறேன்.. உங்களோட முரட்டு குணங்களை நான் விரும்பி ஏத்துக்கிட்ட மாதிரி.. இதோ மத்தவங்களை துடிக்க துடிக்க மூர்க்கத்தனமா போட்டு அடிச்சு அவங்களுக்கு தீராத வலியை கொடுக்கிற உங்களோட இன்னொரு பக்கத்தையும் ஏத்துக்க பழகிடுவேன்.. எனக்காக நீங்க எதையும் மாத்திக்க வேண்டாம்.. உங்களை நான் மாறச் சொல்லவும் மாட்டேன்.. நீங்க எப்பவும் போல இயல்பா இருங்க.." அவள் உதடெல்லாம் சிவந்து.. மூக்கிலிருந்தும் தண்ணீர் வடிய ஆரம்பிக்க தன் பெருவிரல் கொண்டு துடைத்தான் குரு.. என்ன உணர்கிறான் அவனுக்கே புரியவில்லை..
"நான் எதுக்காகடி உனக்காக என்னை மாத்திக்கணும்.." போன்ற வெட்டி வீராப்பு பேச்சு இப்போது தோன்ற வில்லை..
"என்ன ஆச்சு.. எதுக்காக சக்கரை.." ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை எடுத்து வந்திருந்தாள் வடிவு..
கொஞ்சமாக எடுத்து அன்பரசிக்கு கொடுக்க முயன்றான் அவன்..
"எனக்கு வேண்டாம் உங்களுக்காக எந்த வலியையும் நான் தாங்குவேன்னு நீங்க புரிஞ்சுக்கணும்.." அவள் முகத்தை திருப்பினாள்..
"ஏய்.. அடம் பிடிக்காத.. எனக்காக எந்த வலியையும் தாங்குவேன்னு ஏற்கனவே நீ நிறைய முறை நிரூபிச்சிட்டே.. இந்த சக்கரையை வாயில போட்டுக்க.." அவள் தலையை பற்றி சக்கரையை கொடுக்க முயன்றான்.. முடியவில்லை.. வாய் திறக்காமல் அவன் பிடிக்கு அசைந்து கொடுக்காமல் முரண்டு பிடித்தாள் அன்பரசி..
"சரிதான் போடி.." கையிலிருந்த சர்க்கரையை தன் வாயில் போட்டுக் கொண்டான்..
"கிழவி நீ இங்கிருந்து போ.. என் பொண்டாட்டி கிட்ட தனியா பேசணும்.." குரு சொன்னதை தொடர்ந்து.. "என்ன நடக்குது ஒண்ணுமே புரியலையே..!!" என்ற புலம்பலுடன் வடிவு அங்கிருந்து சென்றுவிட.. அடுத்த கணம் சர்க்கரை வாயுடன் அவள் இதழை அழுத்தமாக கவ்விக்கொண்டான் குருக்ஷேத்ரா..
தொடரும்..

Last edited: