• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 18

Active member
Joined
Jan 18, 2023
Messages
113
💙🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈😞😏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😭😭😁😁😁🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞🌈🌈🌈🌈
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
126
ழே விழுந்தவனை "டேய் வருண்" என்று தூக்கி விட எழுந்தான் சூர்யதேவ்..

"வேண்டாம் சாமி.. நானே பார்த்துக்கறேன்.. நீ அங்கேயே நில்லு" என்றவன் எழுந்து இருக்கையில் அமர்ந்தான்..

பெருமூச்சோடு அவனை பார்த்தபடி "இப்ப சொல்லுப்பா..!! நீ ஏதோ சரியா சொன்ன.. அது என் காதுல தப்பா விழுந்துடுச்சு.." என்று செவியை கூர்மையாக்கினான்..

"தப்பா விழலடா.. நான்தான் தப்பா பாத்துட்டேன்.." நெற்றியை தேய்த்தபடி கடுப்பாக சொன்னான் சூர்ய தேவ்..

"இப்படி அரைகுறையா சொன்னா எனக்கென்ன புரியும்.. நடந்ததை விவரமா சொல்லு..?"

"இந்த அசிங்கத்தை விவரமா வேற சொல்லனுமாக்கும்.. தெய்வீகமா பார்க்க வேண்டிய அந்த பெண்ணை தெரு பொறுக்கி மாதிரி தப்பு தப்பா.. வரம்பு மீறி பார்த்து தொலைச்சுட்டேன்.."

"யூ மீன் சைட் அடிச்சிருக்க..?"

"இல்ல அதுக்கும் மேல..!! டேய் டாக்டர் தானே நீ.. இதுக்கு மேல தெளிவா சொல்லி புரிய வைக்கணுமா உனக்கு..?" எரிச்சலானான் சூர்யா..

"ஹேய்.. கங்கிராஜுலேஷன்ஸ் மேன் நீ வயசுக்கு வந்துட்ட" படி(Buddy)..!!" என்று கைநீட்டியவனை தீயாக முறைத்தான் நண்பன் அவன்..

அவன் பார்வையில் கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டான் வருண்..

"அது இல்லடா.. சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே..
ஒரு பொண்ணு கிட்ட இயல்பா தோன்ற வேண்டிய உணர்ச்சிகள் எதுவும் வரலைங்கிறது தானே உன் பிரச்சனை..!! இப்போ அந்த புள்ளைய வேற மாதிரி பார்த்துருக்கேனா என்ன அர்த்தம்.. உனக்குள்ள ஹார்மோன்கள் வேலை செய்யுதுன்னு அர்த்தம்.. உன் பிரச்சனை தீர்ந்ததுன்னு அர்த்தம்.."

"டேய் வாயில ஏதாவது வந்துட போகுது.. முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கிட்ட இந்த மாதிரி பீலிங்ஸ் வரலாமா..!! அது தப்பு இல்லையா..? இன்னைக்கு இவளை பாக்கணும்னு தோனின மாதிரி நாளைக்கு இன்னொருத்தியை பார்க்க தோணுச்சுன்னா..? ஓ மை காட்.. நான் காமக் கொடூரனா மாறிட்டு வரேன்னா?"

"ஏன்டா வாய் இருக்குன்னு என்ன வேணா பேசிடுவியா..? சரி.. நான் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்..
உன் பிரச்சனை என்ன அதை முதல்ல சொல்லு.."

விழிகளை மூடி திறந்து சலிப்போடு நெடுமூச்செறிந்தான்..

"என்னால எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு பெண்ணை காதலிக்க முடியும்.. ஆனா அந்த பொண்ணு கிட்ட எனக்கு காமம் சார்ந்த எந்த ஆர்வமும் இருக்காது.. ஐ மீன் ஒரு பெண்ணை பார்த்தா என்னோட உணர்வுகள் கிளர்ச்சி அடையாது.. ரொமான்டிக்கா பழக முடியாது.. செக்ஸ் வச்சுக்க முடியாது..!! பிகாஸ் ஐ அம் ஏசெக்ஸுவல்.."

"யூ ஆர் நாட் ஏசெக்ஸுவல் சூர்யா.. ஐ திங்க் யூ ஆர் டெமிசெக்சுவல்.."

"யூ மீன்..?"

"எஸ். உன் மனசுக்கு பிடிச்ச அந்த ஒருத்தர் கிட்ட மட்டும்தான் பாலியல் ஈர்ப்பு வரும்.. ஐ திங்க் கமலி உனக்குள்ள வந்துட்டா..!!"

"ச்சே.. வாட் நான்சென்ஸ்.. உன் கற்பனை மடத்தனமா இருக்கு.."

"கற்பனையா..?" வருண் சிரித்தான்..

"டேய்..‌ என்னைவிட நீ தெளிவா இருக்க சூர்யா.. ஆனா அதை வெளிப்படையா ஒத்துக்க ஏன் தயங்கறேன்னு எனக்கு தெரியல.."

"பயப்படறியா சூர்யா..?"

விருட்டென நிமிர்ந்தான் சூர்ய தேவ்..!!

"அம்மா கர்ப்பையிலிருந்து இந்த உலகத்துக்கு புதுசா வரும்போது குழந்தை பயந்து அழற மாதிரி.. புதுசு புதுசா உனக்குள்ள உருவாகிற இந்த உணர்ச்சிகள் பயத்தையும் பதட்டத்தையும் தருது. அதனாலதான் என்னை தேடி ஓடி வந்திருக்க.."

"எனக்கான ஒருத்தி கிட்ட இந்த மாதிரி உணர்வுகள் வந்திருந்தா நான் எதுக்காக உன்னை தேடி ஓடி வர போறேன்..‌ யாரோ ஒரு பொண்ணு.. அவளை நான் ஏன் அப்படி பாக்கணும்..?"

"சூர்யா.. ஏதோ ஒரு வகையில அந்த பொண்ணால நீ ஈர்க்கப்பட்டுருக்க..‌"

"அப்படியெல்லாம் இல்லைடா..!!"

"வெளிமனம் பொய் சொல்லும் ஆழ்மனம் உண்மை சொல்லும்.. உனக்குள்ள இந்த கேள்வியை கேட்டு பாரு.. என்ன பொண்ணையும் ஒரு பொருட்டா மதிக்காத நீ.. கமலியால எதுக்கு கோபப்படனும்.. ஏன் சலனபடனும்..‌ ஏன்னா மத்த பொண்ணுங்களை காட்டிலும் அவ உன் கண்ணுக்கு வித்தியாசமா தெரியுறா.. அப்படித்தானே..?"

குழப்பமாக தலையை பிடித்துக் கொண்டான் சூர்யதேவ்..

"சரிடா கன்பியூஸ் பண்ணிக்காதே..!! இப்பவும் அதே தான் சொல்றேன் கோ வித் த‌ ஃப்ளோ..!!"

எரிச்சலாக நிமிர்த்தான் சூர்ய தேவ்..

"இந்த நாசமா போன வார்த்தையால வந்த பிரச்சனை தாண்டா இவ்வளவும்..!! நடக்கிறது நடக்கட்டும் எல்லாம் அதன் போக்கிலேயே நகரட்டும்னு அவ செஞ்ச அசட்டுத்தனங்களை பொறுத்துக்கிட்டு.. அவ நடவடிக்கைகளை ஆழ்ந்து கவனிக்க போய்.. எல்லாமே தப்பா முடிஞ்சு போச்சு.." இதழ் குவித்து ஊதி புருவங்களை ஏற்றி இறக்கினான் சூர்யதேவ்..

"என்னமோ அவ தேச விரோத காரியத்தை செஞ்ச மாதிரியும் நான் உன்னை அனுசரிச்சு போக சொன்ன மாதிரியும் பேசற.. உனக்கு தப்பா தெரியற விஷயம் இந்த உலகத்தோட பார்வையில் எப்படி இருக்குன்னு ஆழ்ந்து கவனிக்க சொன்னேன்.. ஏதோ ஒரு வகையில் அவ செஞ்சதெல்லாம் உனக்கு பிடிச்சதனால மட்டும்தான் உன்னால அனுசரிச்சு போக முடியுது.. பிடிக்காத விஷயத்தை ஒருகட்டத்துக்கு மேல யாராலும் சகிச்சிக்க முடியாது சூர்யா.."

"இப்ப என்னை என்னதான் செய்ய சொல்ற..? நான் செஞ்சது தப்பு இல்லையா.."

"தப்பு சரின்னு எதையும் ஆராய வேண்டாம்.. நீ எப்பவும் போல இரு.. உன் மனசை ஃபாலோ பண்ணு.. உனக்கு என்ன தோணுதோ அதை செய்.. உணர்ச்சிகள் கொப்பளிச்சு ஒரு பொண்ணு மேல பாயற அளவுக்கு நீ ஒன்னும் காமக்கொடூரன் இல்ல.. கண்ணியமும் கட்டுப்பாடும் உனக்குள்ள உண்டு.. தவறானது எதையும் நீ செய்யப் போறது இல்ல.. முதல்ல உன்னை நீயே நம்பு.. முடிஞ்சா அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் பிரண்ட்லியா பழக முயற்சி பண்ணு.."

"நானா..? சான்சே இல்ல.. அவளை எனக்கு சுத்தமா பிடிக்காது.. ஏதோ அவளைப் பொறுத்துட்டு இருக்கேன்.."

இழுத்து பெருமூச்சு விட்டான் வருண்..!! இப்பவே கண்ணை கட்டுதே எனும் நிலைமை..

"சரி இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படியே அவளை பொறுத்துட்டே இரு.. இயல்பா ஒரு மனுஷனுக்குள்ள உண்டாகக்கூடிய சாதாரண எண்ணங்களும் உணர்ச்சிகளும்தானே இதெல்லாம்.. அதை பெருசு படுத்தி காம்ப்ளிகேட் பண்ணிக்கிற சூர்யா.."

"நான் ஒரு கேள்வி கேட்கவா வருண்.."

"ஓ எனக்கு கவுன்சிலிங்கா..? சரி கேளு.."

"ஒரு பெண்ணோட அழகை ரசிக்கிறது தப்பில்ல அப்படித்தானே..?"

"அப்படி கூட நீ ரசிக்கறது இல்லையே.."

"சரி.. உன் செகரட்டரிய நீ எப்படி பார்ப்ப.. அவர் அழகா இருக்கான்னு நினைக்கிறது வேற.. ஆனா அதுவே அவளை தலை முதல் கால் வரை வேற மாதிரி வக்கிரமா பார்த்து ரசிச்சா.."

"என்னடா பேச்சு இது.. கேட்கவே நாராசமா இருக்குது.."

"இருக்குதா..? இதே வேலையை நான் ஒரு பொண்ணு கிட்ட செஞ்சுட்டு வந்துருக்கேன்.. அவளை அப்படித்தான் பார்த்தேன்.. அப்ப எனக்கெப்படி இருக்கும்.."

"சூர்யா உன் கண்டிஷன் வேறடா.."

"என்னடா வேற கண்டிஷன்.. ஒரு ஆம்பள தனக்கு சொந்தமான பொண்டாட்டியை மட்டும் தான் அப்படி பாக்கணும்.. யாரோ ஒருத்தியை கண்ட மேனிக்கு ரசிச்சு பார்க்கிறது எப்படி ஒழுக்கமாகும்.."

"அடேய் நல்லவனே..‌ அந்த யாரோ ஒருத்திதான் உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கா.. அவ மேல உனக்கு தீராத ஆசைன்னு நான் சொல்றேன்.. உனக்கு புரியுதா இல்லையா..?"

எழுந்து நின்றான் சூர்ய தேவ்..

"திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டு இருந்தா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. ஃபிராடு பையலே தப்பு தப்பா கவுன்சிலிங் கொடுத்து எல்லாரையும் குழப்பி விடற நீ.. இனிமே உன் கிட்ட வந்தேன்னா கேளு..!!" அங்கிருந்த நோட்டு புத்தகத்தை அவன் மீது தூக்கி அடித்து விட்டு ஒரு முறைப்போடு வெளியேறி இருந்தான் சூர்ய தேவ்..

வாயை பிளந்து அவனை பார்த்தபடி இன்டர் காமில் தனது காரியதரிசிக்கு அழைத்தான்..

"நல்ல சைக்கியாட்ரிஸ்ட் யாருன்னு பார்த்து நம்பர் அனுப்பிவிடுமா..!!"

"டாக்டர்..?"

"அது ஒன்னும் இல்ல.. கொஞ்சம் ரெஃபரன்ஸ் தேவைப்படுது..‌!! எனக்கு படிச்சது எல்லாம் மறந்து போச்சுன்னு நினைக்கறேன்.."

"என்னாச்சு டாக்டர்?" மாலினி குழம்பினாள்..

"நீங்களே ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட் தான் டாக்டர்ன்னு ஒரு பேச்சுக்காவது சொல்லக்கூடாதா..?"

"ஐயோ என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க.. நீங்களே ஒரு சைக்கோ தான் டாக்டர்.."

"என்னம்மா சொன்ன..?"

"சாரி சாரி.. டாக்டர் நீங்களே ஒரு நல்ல மனோ தத்துவ நிபுணர்தான்.."

"அது சைக்காலஜிஸ்ட்மா நான் சைக்கியாட்ரிஸ்ட்.."

"நீங்க திடீர்னு இப்படி கேட்டதுல எனக்கு வாயெல்லாம் குளறுது டாக்டர்.."

"உனக்கு அவனே பரவாயில்ல.. ஃபோன வைம்மா..!! அப்புறம் சூரியதேவ்ன்னு ஒரு பையன் என்னை தேடி வந்தா.. டாக்டர் இந்த உலகத்திலேயே இல்லைன்னு சொல்லி அவனை திரும்பி அனுப்பிடு.. இந்த ஒரு உதவியை எனக்காக செய்வியாம்மா..?"

"என்ன டாக்டர் என்னென்னமோ பேசுறீங்க.. செய்யறேன் டாக்டர் செய்யறேன்.." போனை வைத்துவிட்டு கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான் வருண்..

"இங்க பாருங்க சார் நீங்க எங்க கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.. சீஃப் டாக்டர் கிட்ட பேசுங்க.. அவரை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது.. பில் கவுண்டரில் அமர்ந்திருந்த சுஹாசினி 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணிடம் எதையோ திட்டவட்டமாக விளக்கி கூறிக் கொண்டிருந்தாள்..

"என்னாச்சு சுஹாசினி..?" அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த கமலினி.. இருவரின் உரையாடலில் அங்கு வந்து நின்றாள்..

"ஆக்சுவலி.. இவரோட வைஃப் சாரதா.. அவங்களுக்கு டெலிவரியில எவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தது..? தாயும் சேயும் உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்.."

"விஷயத்தை சொல்லு சுகாசினி.." கமலினி எரிச்சலானாள்..

"கிட்டத்தட்ட கட்ட வேண்டிய தொகை ஒரு லட்சம் ரூபாய் வருது.. அவ்வளவு பணம் இல்லையாம்.. எதிர்பாராத செலவு.. இவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்னு என்கிட்ட வந்து சண்டை போடுறார்.. சீஃப் டாக்டர்கிட்ட பேச சொன்னாலும் கேட்க மாட்டேங்கறார்.. அவ்வளவு பணம் இல்லைன்னா கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்கணும் இங்க வந்து பணம் கட்ட முடியலன்னு சொன்னா நான் என்ன செய்யறது..?" சுகாசினி எரிச்சலாக படபடத்தாள்..

"அதைப் பத்தி நீ பேசக்கூடாது சுஹா..!! பணம் கட்ட சொல்றது மட்டும் தான் உன்னோட வேலை.. அதிகப்படியா பேசி அடுத்தவங்களை காயப்படுத்த உனக்கு உரிமை இல்ல.." கமலினியின் காரமான சொற்களில் சுஹாவின் முகம் கருத்து போனது..

"சார் நீங்க வேணா ஒரு முறை கிட்ட சீஃப் டாக்டர் கிட்ட பேசி பாருங்களேன்.. அவன் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்வார்" அந்த நபரிடம் தன்மையாகச் சொன்னாள் கமலினி..

"இல்ல சிஸ்டர் டாக்டர் கிட்ட பேசி பார்த்துட்டேன்.. முழு தொகையை கட்டி டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க.. இல்லனா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்னு சொல்றார்..!! இருந்த சேமிப்போடு சேர்த்து கடன் வாங்கினால் கூட முப்பது இல்லைனா நாப்பதுதான் தேரும்.. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்.. வீட்டு பக்கத்துல ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்திருந்தேன்.. இந்த பொண்ணு பிழைக்காது பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டாங்க.. பத்தோட பதினொன்னா தூக்கிப்போட்டு அவளையும் கவனிக்காம விட்டுருவாங்களோனு பயம்.. இந்த ஆஸ்பத்திரியில சிகிச்சை நல்லா இருக்கும் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமா இருந்தாலும்.. நல்லபடியா மருத்துவம் பார்த்து தாய் சேய் உயிரை காப்பாத்தி கையில குடுத்துடுவாங்கன்னு தெரிஞ்சவங்க சொன்னாங்க.. ஆஸ்பத்திரி பில் அதிகமா வரும்னு தெரியும்.. ஆனா லட்சக்கணக்குல வரும்னு நான் எதிர்பார்க்கலையே..? இப்ப என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியல.." அவன் அழுதான்..

"சரி கவலைப்படாதீங்க.. கொஞ்சம் அமைதியா உட்காருங்க.. நான் பேசிட்டு வரேன்..!!" அந்த ஏழை கணவனை அங்கேயே அமர சொல்லிவிட்டு சூர்ய தேவ் அறைக்குள் நுழைந்தாள் கமலி..

"என்ன விஷயம்..? டியூட்டி டைம்ல இங்கே என்ன பண்றீங்க கமலி.." நிமிராமல் கேள்வி கேட்டான்..

"சார் அந்த பேஷன்ட் சாரதா.. அவங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பில் போட்டுருக்காங்க.."

நிமிர்ந்து அவளை அழுத்தமாக பார்த்தான் சூர்ய தேவ்..‌

"சோ வாட்.. அந்த பொண்ணுக்கு டெலிவரியில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது.. மெடிசன்ஸ்.. டிரீட்மென்ட்னு எல்லாம் சேர்த்து ஒன் லாக் பில் போட்டுருப்பாங்க.. இப்ப என்ன அதுக்கு..?" சூர்ய தேவ் தோள்களை குலுக்கினான்..

"டாக்டர் அவங்க பாவம்.. அந்த பொண்ணோட கணவர் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி.. அவ்வளவு பணத்துக்கு அவங்க எங்க போவாங்க..?"

"ஏழைகளுக்கு ஏன் ஹாஸ்பிடல்ல என்ன வேலை..?" அலட்சியத்தோடு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்..

"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க.. இந்த உலகத்துல உயிர் வாழ எல்லோருக்கும் உரிமை உண்டு.. உயிரை காப்பாத்தறது மட்டுமில்ல.. புது உயிரையும் ஜனிக்க வைக்கற உன்னதமான பணியை செய்ற டாக்டர் நீங்க.. இப்படி பணத்துல குறிக்கோளா இருக்கிறது எனக்கு ரொம்ப வேதனையை தருது.." அவள் முகம் சுணங்கினாள்..

"உன் வேதனைக்காக நான் யாருக்கும் ஃப்ரீ சர்வீஸ் பண்ண முடியாது கமலினி.. நான் ஒன்னும் தர்மஸ்தாபனம் வச்சு நடத்தல.. இது பிரைவேட் ஹாஸ்பிடல்.. பீஸ் ஸ்ட்ரக்சர் எல்லாம் கிளியரா டிரான்ஸ்பரண்ட்டா இருக்கு.. நான் யார்கிட்டயும் அநியாயமா பணம் வசூலிக்கல.. பணம் கட்ட முடியாதவங்க கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு தான் போகணும்.."

"ப்ளீஸ் டாக்டர் அப்படி சொல்லாதீங்க.. தன் மனைவியையும் குழந்தையும் காப்பாத்தணுங்கற துடிப்போடு இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கார்.."

"அதான் காப்பாத்திட்டேனே.. அந்த துடிப்பை பணம் கட்டறதுல காட்ட சொல்லுங்க.."

"அவர்கிட்ட அவ்வளவு பணம் இல்ல டாக்டர்.."

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..? இங்க ஏழை பணக்காரங்க எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்தான்.. இங்க பாரு.. எனக்கும் பொறுப்பு இருக்கு.. மத்த ஹாஸ்பிடல் மாதிரி இங்கே பணம் கட்டினால் தான் டிரீட்மென்ட்ன்னு நான் எப்பவும் சொன்னதில்ல.. பணத்துக்காக சிகிச்சையை நிறுத்தி வச்சு நோயாளிகளை தவிக்க விடறதில்லை.. என் வேலையில் சரியாத்தான் இருக்கேன்.. முதல்ல தேவை இல்லாம இந்த பிரீ அட்வைஸ் குடுக்கறதை நிறுத்து.. பணத்தை ரெடியா எடுத்து வச்சுக்கிட்டுதான் தனியா ஒரு ஹாஸ்பிடலுக்குள்ள நுழையணும்.. ஒருத்தர் ரெண்டு பேருக்காக சலுகை தர முடியாது.."

"எப்பேர்பட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனமா இருந்தாலும் சாரிட்டிக்காக(Charity) ஒரு தொகை ஒதுக்கறது இல்லையா சார்.. அந்த மாதிரி பணம் இருக்கிறவங்க கிட்ட வாங்கிக்கோங்க.. இல்லாத இந்த மாதிரி ஏழைகளுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்க்கலாமே..!! அவங்க சந்தோஷமும் நிம்மதியும் உங்க புண்ணிய கணக்கில் சேருமா இல்லையா..?"

"நான் பாவியாவே இருந்துட்டு போறேன்.. எனக்கு எந்த புண்ணியமும் தேவையில்லை..!! என்னோட இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ல யாரும் என்கிட்டே வந்து இவ்ளோ நேரம் ஆர்கியூ செஞ்சதில்ல.. நான் உங்களை எத்தனையோ முறை வார்ன் பண்ணிட்டேன்.. நீங்க திருந்துற மாதிரி இல்ல.. ஒழுங்கா அந்த ஆள் கிட்ட பேசி பணத்தை கட்ட சொல்லுங்க.. இல்லைன்னா நான் வேற மாதிரி டீல் பண்ண வேண்டி வரும்.. கெட்‌ அவுட்.." அவன் கோபமாக கத்தினான்..‌

அரண்டு போனாள் கமலினி..

"கல்நெஞ்சக்காரன்.. சொகுசாவே வாழ்ந்துட்டவனுக்கு ஏழைகளோட வலி எங்கிருந்து தெரிய போகுது" மனதுக்குள் புலம்பியபடி அங்கிருந்து நகர்ந்தாள்..

அலைபேசியில் தனது வங்கி பரிவர்த்தனையின் சேமிப்பை சரி பார்த்தாள்.. முப்பதாயிரம் ரூபாய் இருந்தது..

அந்த நபர் முப்பதாயிரம் வைத்திருப்பதாக கூறினார்.. தன்னிடம் முப்பதாயிரம் இருக்கிறது.. இன்னும் 40,000 கிடைத்தால் போதும் மருத்துவமனை தொகையை கட்டிவிடலாம்.. என்ற எண்ணத்தோடு
உடனடியாக மாயாவிற்கு அழைத்தாள்..

"ஏய் மாயா உடனடியா ஒரு நாற்பதாயிரம் ரூபாய் அனுப்பி விடு.."

"எதுக்குடி அவ்வளவு பணம்..?"

"கேள்வி கேட்காம அனுப்புடி.."

"சரி.. அனுப்புறேன்.." என்றவள் அரை மணி நேரம் ஆன பிறகும் பணத்தை அனுப்பவில்லை..

"என்ன சிஸ்டர்.. டாக்டர் கிட்ட பேசினீங்களா..?" சாரதாவின் கணவர் வேறு பரிதாபமாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்..

"ஒரு நிமிஷம்" என்றவள்..
மீண்டும் அவள் எண்ணுக்கு அழைத்தாள் கமலி..

"என்னடி லூசு.. பணம் அனுப்ப சொன்னேனே மறந்துட்டியா..?"

"ஏய் சர்வர் எரர்னு வருதுடி.. இரு அனுப்பி விடறேன்" என்றவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பணத்தை அனுப்பி இருந்தாள்..

"வாங்க சார் போகலாம்" என்று அந்த நபரை அழைத்துக் கொண்டு பில் கவுண்டருக்கு வந்தாள் கமலி..

"சார் உங்க அக்கவுண்ட்ல முப்பதாயிரம் ரூபாய் இருக்குல்ல.."

"இருக்கு சிஸ்டர்.."

"பேங்க்ல போய் எடுத்துட்டு வரணுமா.. இல்ல கார்டு வச்சிருக்கீங்களா..?"

"டெபிட் கார்டு இருக்கு.."

"அதை இப்படி கொடுங்க' என்று வாங்கிக் கொண்டவள்.. சுஹாசினியிடம் தன் அட்டையையும் சேர்த்து தந்து என் சேமிப்பிலிருந்தும் பணம் எடுத்துக் கொள் என்று சொல்வதற்கு முன்..

"ஹான் கமலி.. டாக்டர் இப்பதான் போன் பண்ணினார்.. சொல்ல மறந்துட்டேன்.. நார்மல் டெலிவரின்னு கன்சிடர் பண்ணி.. முப்பதாயிரம் ரூபாய் பில் கட்ட சொன்னார்..!! இதோ பில் ரெடி.." என்று ரசீதை எடுத்து கவுண்டரில் வைக்க.. சோர்ந்து போயிருந்த அந்த ஆண் முகம் மலர்ந்து நன்றி உணர்வோடு கமலியை நோக்கினார்..

"ரொம்ப நன்றிம்மா..!! இந்த கடனை எப்படி தீர்க்க போறேன்னு தெரியல.. எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா.. என்ன செய்யறதுன்னு தெரியாம ஒரு நிமிஷம் அல்லாடி போய்ட்டேன்.‌. இந்த ஹாஸ்பிடல்ல சிகிச்சை எவ்வளவு நல்லா இருக்குமோ.. அதே மாதிரி பணம் கட்டறதுக்கான விதிமுறைகளும் கடுமையாக இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.."

"ஓரளவு பணம் ரெடி பண்ணி வச்சிருந்தேன்.. இவ்வளவு பெரிய தொகை வரும்னு எதிர்பார்க்கல ரொம்ப பயந்து போயிட்டேன்..
கடவுள் மாதிரி வந்து காப்பாத்துனீங்க.. நீங்க மட்டும் டாக்டர்கிட்ட எனக்காக பேசாம போயிருந்தா.. என்ன நடந்திருக்குமோ தெரியல.." கமலியின் முன்பு கரம் கூப்பினான்..

"ஐயோ நான் ஒன்னும் செய்யலங்க.. டாக்டர் தான்.." அவள் சொல்வதற்கு முன்பு..

"டாக்டர் கட்டணத்தை குறைச்சிருந்தாலும்.. நீங்கதானே அவர்கிட்ட எனக்காக பேசி இருப்பீங்க.. நீங்க செஞ்ச உதவியை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன்.. புள்ள குட்டிகளோட நீங்க நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும்.." அவன் வாழ்த்தி விட்டு செல்ல கமலியின் கண்களை நீர் தளும்பியது..

"டாக்டர்.." என்று மூச்சு வாங்க அவன் அறைக்கு ஓடி வந்தாள்..

ரவுண்ட்ஸ் போவதற்காக கோர்ட்டை மாட்டிக்கொண்டு எழுந்தவன் அவளை பார்த்து.. கண்கள் இடுங்க அப்படியே நின்றான்..

"தேங்க்யூ டாக்டர்.."

"எதுக்கு..?"

"அந்த சாரதா பேஷ்ன்ட்.. நான் சொன்னதுக்காக.. ஹாஸ்பிடல் பில் தொகை குறைச்சதுக்கு.."

மேஜையை தாண்டி நடந்து வந்தவன் பாக்கெட்டில் கை நுழைத்த படி அவள் எதிரே நின்றான்..

"நீ சொன்னதுக்காக செய்யல.. இது என்னோட ஹாஸ்பிடல்.. நீ பணம் தந்துதான் நான் கல்லா கட்டி லாபம் பாக்கணும்னு இல்ல.. உனக்கு சம்பளமே நான்தான் தரனும்.. இதுல நீ பணம் தந்து நான் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதனாலதான் போனா போகுதுன்னு அந்த தொகையை தள்ளுபடி பண்ணிட்டேன்..!! சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றவன் ஒருகணம் நின்று..

"அப்புறம் பதிலுக்கு கிடைக்கற இந்த புண்ணியம் புகழுரை எல்லாத்தையும் நீயே வைச்சுக்கோ.. எனக்கு வேண்டாம்.." என கண்சிமிட்டி விட்டு சென்றான்..

ஆங்.. டாக்டர் இப்ப என்ன செஞ்சாரு என்று யோசித்தவள் "அப்பப்பா.. இருந்தாலும் இந்த டாக்டருக்கு இத்தனை ஆணவம் ஆகாது..‌" என முகத்தை சுருக்கினாள்..

தொடரும்..
Nadathu.. Nadathu... Surya nee..
 
Top