• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 19

Active member
Joined
Jan 16, 2023
Messages
107
குழந்தை கீழே விழாமல் கைகளில் அள்ளிக் கொண்டவன் பிள்ளையை தன் முகத்திலிருந்து தொலைவில் தூக்கி பிடித்தவாறு.. கடினமான பித்தாகரஸ் தியரியை மூளையில் விளங்கிக் கொள்வது போல் கண்கள் சுருக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.. குழந்தை விழும்போதே கவனித்துவிட்டு "பாப்பா".. என்று சமையலறையிலிருந்து.. உள்ளே ஓடிவந்த உமா இந்த காட்சியில் பேரதிசயத்தை கண்டதைப் போல் விழி விரித்து நின்றிருந்தாள்..

அப்பா தன்னை தூக்கிக் கொண்டதில் அத்தனை சந்தோஷம் குழந்தைக்கு.. அவன் கைகளுக்குள் அகப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பலூன் போல் கை, கால்களை உதைத்து.. துள்ளி குதித்து.. புரியாத மொழிகளுடன் சத்தம் போட்டு சிரித்து.. அங்கிருந்த கற்சுவரும் மேஜை நாற்காலிகளும் கூட.. "அவன் கிடக்கிறான் கல்லுளிமங்கன்.. நீ என்கிட்ட வா செல்ல குட்டி!!" என்று கை நீட்டி குழந்தையை ஆசையோடு அள்ளிக் கொள்ளும்.. அவனோ.. தூக்கிக்கொண்ட பிள்ளையை அதே நிலையில் வைத்தவாறு கடின முகத்தோடு எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்..

தீர்க்கவே முடியாத சமன்பாடு அவன்.. முதலில் பிள்ளையின் மீதான அக்கறையில் பாய்ந்து தூக்கிக் கொண்டான் என ஒரு கணம் சந்தோஷப்பட்டு போன உமாவின் இதயம் அடுத்தடுத்த அவன் செயல்களில் காற்று போன பலூன் போல் பாதாளத்தை நோக்கி பாய்ந்து சென்று கொண்டிருந்தது..

குழந்தை ஆபத்திலிருந்த காரணத்தால் அவன் மூளையில் தோன்றிய ஒரு நொடி மின்னல் அது.. தரையில் தலை மோதி கீழே விழப் போகும் குழந்தையை காப்பாற்ற தந்தையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.. இந்த இடத்தில் ஒரு நாய்க்குட்டி இருந்திருந்தால் கூட தன் தலையை அடியில் கொடுத்தேனும் குழந்தையை பாதுகாத்திருக்கும்.. அதுபோல் அவனுக்கும் தன்னையறியாமல் ஒரு கணத்தில் தோன்றிய அந்த உணர்வு தான் குழந்தையை காப்பாற்ற வைத்திருக்கும்.. இதை பாசம் என்று தவறாக நினைப்பானேன்.. இதோ தூக்கிய குழந்தை "டா டா டா டா டா டா டா" என்று உற்சாகத்தோடு துள்ளி குதிக்கிறதே!!.. அதை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள தோன்றவில்லை.. கன்னங்கள் சிவக்கும் அளவிற்கு முத்தமிட ஆசை இல்லை.. இருவருக்கும் இடையில் முள்வேலி போட்டு கட்டி வைத்ததைப் போல் எவ்வளவு இறுக்கம்.. எவ்வளவு இடைவெளி..

சட்டென அவன் பார்வை உமாவின் மேல் பதிந்தது.. அடேங்கப்பா என்ன ஒரு கோபம்!!.. சடுதியில் முகம் மாறிவிட்டான்.. "என்னடி பாத்துட்டு இருக்க!!.. இங்க என்ன படமா காட்டுறாங்க.. வந்து வாங்கி தொலை!!".. கண்கள் சிவக்க பற்களால் நறநறத்தான்..

அந்த தொலை என்கிற வார்த்தை உமாவை ஆழமாக காயப்படுத்தியது.. தகாத வார்த்தைகள் தன்னை பேசினால் பொறுத்துக் கொள்வாள்.. குழந்தையின் மீது அவன் தீச்சொற்கள் விழுவதை தாங்கிக் கொள்ள இயலாது.. இதற்காகவே குழந்தை தெரியாமல் கூட அவனை நெருங்கி விடாதபடிக்கு மிக கவனமாக பார்த்துக் கொள்வாள்.. சில நேரங்களில் கவனம் தவறி போய் விடுகிறது..

இதயம் முழுக்க தீப்புண்களாக பரவிய வேதனையுடன் ஓடிவந்து குழந்தையை வாங்கிக் கொள்ள.. அவன் இரு கரங்களும் நடுங்குவதை கவனித்து விட்டாள் உமா.. இதென்ன அதிசயம்!!..

பெரிய பெரிய கனரக டயர்களையும்.. சுமக்கவே முடியாத கற்களையும்.. தலைக்கு மேல் தூக்கி.. எதிரிகளை பார்த்து கர்ஜிப்பது போல் காட்சிகளில் நடிப்பவன்.. பின் பக்கமிருந்து லாங் ஷாட்டில் காட்டப்படுகின்ற காட்சிதான் என்றாலும் உண்மையில் அந்த காட்சியில் பளு தூக்குபவன் அவன் தானே.. அப்படிப்பட்டவனுக்கு சிறு பிள்ளையை கையில் தாங்கியிருப்பதில் ஏன் இந்த கை நடுக்கம்..

அவசரமாக பிள்ளையை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள.. குட்டியோ மீண்டும் தன் அப்பாவிடம் தாவ முயன்றது.. "உன்னை சுமையாக நினைத்து ஒதுக்கும் தந்தை மேல் எதுக்குடி இவ்வளவு பாசம்".. பிள்ளை மேல் கோபத்தில் ஒரு அடி வைத்தாள்.. அடுத்த கணம் அமைதியாக அன்னையின் தோளில் சாய்ந்தாள் அம்மு..

"உன்னால.. உன்னாலதான்.. என்னை போய்".. என்று கண்கள் மூடி பற்களை கடித்தவன்.. "தொட்டு தூக்க வச்சிட்டியே!!.. உன்னை".. வார்த்தைகளை மென்று விழுங்கியவன் அடிப்பதற்கு கைகளை ஓங்கிக் கொண்டு வர அச்சத்தில் படபடத்த இதயத்தோடு குழந்தையை அணைத்துக் கொண்டு விழிகள் மூடி நின்றவளின் பாவம் கண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு முஷ்டிகள் இறுக விலகினான் தாண்டவன்..

கோபத்தை எங்கே காட்டுவதென தெரியாமல் கீழே தன் பக்கத்தில் நின்று முட்டிக் கொண்டிருந்த வாத்து பொம்மையை காலால் எட்டி உதைக்க அது சுவற்றில் மோதி படாரென உடைந்து பல துண்டுகளாக சிதறியது.. அவள் மனதை போல்.. திக்கென ஆனது உமாவிற்கு..

சட்டையை முழங்கை வரை ஏற்றி விட்டுக்கொண்டு அவளை முறைத்தவன் படு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்..

புயலடித்து ஓய்ந்ததை போல்.. குழந்தையோடு கட்டிலில் அமர்ந்தவளின் இதயம் தாங்கொண்ணா துயரத்தில் துடித்துக் கொண்டிருந்தது..

"என் குழந்தை என்ன அருவருவறுப்பான பொருளா.. எதற்காக இத்தனை கோபம்".. விழிகள் மூடிய போதிலும் கண்ணீர் அருவியாக கொட்டியது.. அவள் கரங்களிலிருந்து நழுவி கீழிறங்கிய குழந்தை.. தத்தி தத்தி நடந்து சென்று துண்டுகளாக சிதறி கிடந்த வாத்து பொம்மையிலிருந்து இரண்டு துண்டை கையில் அள்ளிக் கொண்டு வந்தது..

"ம்மா.. ம்மா.. டாடா.. ம்மா.. டாடா".. கையிலிருந்த பொம்மையை காட்டி.. உதடுகள் பிதுங்கி கண்ணீரோடு நின்ற பிள்ளையை கண்டு.. ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்திருந்தாள் உமா.. பொம்மை உடைந்து போனதால்தான் அம்மா அழுகிறாள் என்று நினைத்து அமுதினி பாப்பா அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.. இங்கே தனக்கும் தன் தந்தைக்கும் இடையேயான உறவு இப்படித்தான் உடைந்து போய் நிற்கிறது என குழந்தைக்கு புரியவில்லையே!!..

தாண்டவன் பிள்ளையை தூக்கிக் கொண்டான் என்று அவள் கொண்ட சந்தோஷத்தை அடுத்த கணமே இந்த பொம்மையை போல் உடைத்து நொறுக்கி விட்டான் அவன்.. இதற்கு மேல் கண்ணீர் ஸ்டாக் இல்லை என்று இதயம் போர்டு வைக்கும் அளவிற்கு அழுது தீர்த்தாள் உமா..

பெருங்கடலில் விடப்பட்ட மீன்குட்டியாக.. தனிமை கொடுத்த பயிற்சி மூலம் தன்னைத் தானே தேற்றிக்கொள்ள பழகி விட்டாள்.. வழக்கம் போல குழந்தையுடன் விளையாடுவது.. மாமியார் மாமனாரிடம் கதை பேசுவது.. பகலவன் ஷராவணியுடன் அரட்டை அடிப்பது.. மாலையில் தோட்டத்தில் உலவுவது.. அப்பா அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசுவது.. என முயன்று தன் கவனத்தை திசை திருப்பிக் கொண்டாள்..

"நாங்க இவ்வளவு சொல்லியும் கேட்கலயே!!.. இனி அடைக்கலம்னு அவ இந்த வீட்டு பக்கம் தலை வச்சி படுக்கவே கூடாது".. அண்ணன்களின் உத்தரவு.. தன் குழந்தைக்கு மட்டுமே அனுமதியும் உபசரிப்பும் சலுகைகளும்.. தனக்கு இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டனர்..

"புருஷன் மேல குறை சொல்லிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தா கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளவும் தயங்க மாட்டேன்".. ராகவன் சொன்னானாம்.. கேசவன் அதை ஆமோதித்தானாம்.. நேரில் வந்த போது கார்த்திகா தவறுதலாக உளறி விட்டு நாக்கை கடித்துக் கொண்டதில் விரக்தியாக சிரித்தாள் உமா..

"நீ அவங்களை அவமானப்படுத்திட்டதா நினைக்கிறாங்க உமா.. அதுக்காக பிரச்சனை வந்தா நீ இங்கேயே இருந்து கஷ்டப்படனும்னு அவசியம் இல்ல.. தாராளமா நம்ம வீட்டுக்கு வரலாம்".. கார்த்திகா சொன்ன வார்த்தைகள் வெறும் தேற்றுதலுக்காகவே!!..

திருமணத்திற்கு முன் பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருக்கும் மரியாதை திருமணத்திற்கு பின்.. வாழ்க்கை இழந்து அடைக்கலமாக செல்லும் வேளைகளில் இருப்பதில்லையே!!.. பிரசவ நேரத்தில் அங்கிருந்த மூன்று மாதங்களில் இந்த உண்மையை உணர்ந்து கொண்டிருந்தாள் உமா.. "நாங்கள் இருக்கிறோம் பார்த்துக் கொள்வோம்" என்று தைரியம் கொடுத்த போதிலும்.. அண்ணன் அண்ணிகளின் நடவடிக்கைகளில் அத்தனை மாற்றங்கள்.. அது தவறு என்று கூறி விட முடியாது.. அதுதான் எதார்த்தம்.. அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை முக்கியம். அவரவர் குடும்பம் முக்கியம்.. ஒரு நேரத்தில் உறவுகளை தாங்கி பிடிக்க சலிப்பு ஏற்படும் போது வார்த்தைகள் தடித்து போகின்றன.. அங்கு ஆரம்பிக்கிறது பிரச்சினை.. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை உமா.. ஒரு சில நியமனங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!!.. கருடன் மூலமாக கண்ணதாசன் சொன்னது இது..

ஒருவேளை தாங்க முடியாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நிச்சயம் பிறந்து வீட்டிற்கு செல்லக்கூடாது.. படிப்பிற்கு ஏற்ற வேலை தேடிக்கொண்டு தனியாகவே வாழ்ந்து விட வேண்டும்.. கணவன் சரியில்லை என்றால் பெண்ணுக்கு எங்குமே மரியாதை இல்லை என்று புரிந்து விட்டது.. தனிமையான நேரங்களில் எண்ணங்கள் மட்டுமே அவளுக்கு துணையாக.. அதிகம் யோசிக்கும் மனம் பக்குவப்படும்.. நிதானிக்கும்.. தெளிவாக யோசிக்கும்..

இரண்டு நாட்கள் தாண்டவன் வீட்டுக்கு வரவே இல்லை.. அதிசயத்திலும் பேரதிசயம்.. நீ வந்தால் என்ன வராமல் எக்கேடு கெட்டு தொலைந்தால் என்ன.. என்பதை போல் பெரிதாக பதட்டப்படாமல்.. அலைபேசியில் அழைத்து காரணம் விசாரிக்காமல் எப்போதும் போல இயல்பாகவே இருந்தாள் உமா..

இரவில் குழந்தையை அணைத்துக் கொண்டு தனியாக படுத்திருந்தாள்.. "துணைக்கு நான் வந்து படுத்துக்கவா" என்று கேட்ட மாமியாரையும் நாத்தனாரையும் நாசுக்காக வேண்டாம் என மறுத்துவிட்டாள்.. உமாவின் நெஞ்சுக்குள் அழகாக பதுங்கி இருந்தாள் அமுதினி.. தாண்டவன் அருகே இருந்தால் இதற்கும் போட்டி நடக்கும்.. ஒரு பக்கம் பிள்ளை மறுபக்கம் முட்டி மோதும் கணவன் என பெரிய இம்சையை சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை.. இரண்டு நாட்கள் நிம்மதியாக இருக்கிறாள்.. ஆனால் அவன் இல்லாமல் மார்புதான் கனத்து கிடைக்கிறது.. ஆவேசமாக நெருங்கும் அவனுக்கும் சேர்த்து இயற்கை வரமளிக்கிறதோ என்னவோ!!..

குழந்தை பிறந்த பிறகு இங்கு வந்திருந்த நாட்களை நோக்கி அவள் நினைவலைகள் தேவையின்றி பயணம் செய்தது..

அந்த நேரங்களில் ஒரு அதீத பதட்டத்துடன் மழையில் நனைந்த பூனை குட்டி போல் அவள் முதுகின் பின்னே பதுங்கிக் கொள்வான் தாண்டவன்.. இந்த பக்கம் கணவன் அந்த பக்கம் பிள்ளை..

"உன் பிள்ளையை உன் பக்கத்துல படுக்க வச்சுக்கோ.. நடுவுல கொண்டு வராதே!!.. எனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு".. என்று சொல்லியபோது அரிவாளை எடுத்து அவன் வாயில் வெட்ட வேண்டும் போல் வெறி..

ஆனால் அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்.. தன்னை மறந்து உருண்டு புரண்டு கட்டிலை ஆக்கிரமிக்க நினைக்கும் போர்வீரனைப் போல் அவன் செய்யும் அலம்பல்களில் அவனுக்கடியில் உமாவே பாதி நசுங்கிய நிலையில் இருப்பாள்.. இதில் பிஞ்சு குழந்தை அவன் விரல்கள் மோதினால் கூட தாங்காது..

ஆனாலும் அதென்ன உன் குழந்தை?.. வேண்டாம் எதையும் யோசிக்காதே உமா.. மன அமைதி முக்கியம்.. தன் எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொள்வாள்..

கொடூர பேய் கனவு கண்டு பயந்து ஒளிந்து கொள்ளும் குழந்தை போல் சில நேரங்களில் அவன் நடவடிக்கைகளில் அவளுக்கு எரிச்சல் தான் தோன்றும்.. குழந்தை பெற்ற ஆரம்ப நாட்களில் மட்டுமல்ல பல நேரங்களில் இது நடக்கும்..

முதுகில் முகத்தை புதைத்துக் கொண்டு.. அவள் இடையோடு கை போட்டு இழுத்து இறுக அணைத்துக் கொண்டு.. உதடுகள் துடிக்க படுத்து கிடப்பான்..

"எனக்கு.. எனக்கு.. பீரியட்ஸ் ஏன் இப்படி முட்டுறீங்க.. தள்ளி படுங்க".. அவள் எரிச்சலுக்கும் விலகலுக்கும் பதில் வராது.. மேலும் மேலும் அதிகமாக நெருங்கி அட்டையாக ஒட்டிக் கொள்ளும் வேளையில்.. அடி மனதிலிருந்து பீறிடும் இயல்பான நேசத்தின் விளைவாக மனைவியாக அவன் மீது சில துளிகள் அனுதாபம் பிறக்கும்..

அந்த மாதிரியான நேரங்களில் அவன் பதட்டம் உணர்ந்திருக்கிறாள்... அப்படி ஒரு பதட்டமும் நடுக்கமும் தான் அவனிடம் குழந்தையை தூக்கிய அந்நாளில் அவள் கண்டது.. ஆனால் தாண்டவனின் வித்தியாசமான நடவடிக்கைகளை பற்றி யோசிக்க இயலாத அளவில் மனதை பாதித்த சம்பவங்கள் வரிசை கட்டி நிற்கின்றனவே!!..

நிதானித்திருந்த இந்த தருணத்தில் அந்த பதட்டமும் நடுக்கமும் ஏன் என்று யோசிக்க சொன்னது மனது.. எதிலிருந்தோ தப்பித்துக் கொள்ள தன்னுள் புதையும் கணவன் இன்று எங்கிருந்து தப்பித்துக் கொள்ள இரண்டு நாட்களாக வீட்டுக்கு வரவில்லை?.. தாண்டவனின் தேகம் முழுக்க மர்ம முடிச்சுகள் தான்..

குழந்தையை அவன் கைகளில் தாங்கியிருந்தபோது கனிவை எதிர்பார்த்தாள் அந்த கண்களில்.. ஆனால் சில நொடிகள் அந்தக் கண்களில் வந்து போன அச்சம் அவளை குழப்பியது.. சிந்தனையோடு எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை..

நடு இரவில் அனத்தல்.. பக்கத்தில் அனலடிப்பது போல் உணர்வு.. திடுக்கென விழித்தவளின் பார்வை தாயுணர்வின் பதட்டத்தோடு குழந்தையின் மீது படிய.. அரைக்கண் போட்டு உஷ்ணம் மூச்சு காற்றோடு.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. என அனத்திக் கொண்டிருந்தது பாப்பா.. தொட்டுப் பார்க்க குட்டி தேகம் நெருப்பாய் கொதித்தது..

"அய்யோ.. கவனிக்காம இப்படி தூங்கிட்டேனே!!" என்று தலையில் அடித்துக் கொண்டவள்.. வேகமாக ஜுரத்திற்கான சிரப்பு எடுத்து வந்து டிராப்பரின் மூலம் குழந்தைக்கு சில சொட்டுகள் கொடுக்க.. உள்ளே போனதை விட வெளியே வந்ததுதான் அதிகம். அத்தனையும் வாந்தி..

காய்ச்சல் அதிகரித்தால் ஜன்னி கண்டு விடும் அபாயம்.. குழந்தையை தோளில் தூக்கிக் கொண்டு அவசரமாக மாமியார் வீட்டிற்கு ஓடினாள் உமா..

ரங்கநாயகிதான் கதவை திறந்தாள்.. "என்னம்மா.. என்ன.. ஆச்சு".. குழந்தையை தோளில் தாங்கி அழுது கொண்டே நிற்கும் உமாவை கண்டு பெரிதும் பதட்டப்பட்டாள்..

"அத்தை.. அத்தை.. குழந்தைக்கு காய்ச்சல் அடிக்குது.. ரொம்ப பயமா இருக்கு.. கண்ண திறக்க மாட்டேங்குறா.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்" நடுக்கத்தோடு வெளிவந்த வார்த்தைகளில்.. நேரம் தாமதியாது உடனே பகலவனை அழைத்திருந்தாள் ரங்கநாயகி..

பகலவன் கார் ஓட்ட.. உமாவோடு ரங்கநாயகியும் காரில் ஏறிக்கொண்டாள்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தது.. குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்.. என்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட இடிந்து போனாள் உமா.. கணவனுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்.. அழைப்பை ஏற்கவில்லை அவன்..

பிறந்த வீட்டு ஆட்கள்.. புகுந்த வீட்டு ஆட்கள் என மாறி மாறி வந்து பார்த்துக் கொண்டனர்.. யாரேனும் இருவர் அவளுடன் உறுதுணையாக நின்றனர்.. அத்தனை பேரை தாண்டி துணைவன் இல்லாததை பெருங்குறையாக கண்டது அவள் மனம்..

பெற்ற பிள்ளைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தாண்டவனின் அலட்சியத்தில் தாய்மை கொண்ட கட்டுக்கடங்காத கோபத்தில் வெறி பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.. பெரிய பாதிப்புகள் நிகழும் வரை அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் கோபமும் ஆதங்கமும் எரிமலைகளாக வெடிப்பதில்லையே!!..

"பிளேட்லெட் கவுன்ட்.. இன்க்ரீஸ் ஆகவே மாட்டேங்குது.. குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்கு.. இப்படியே போனா காய்ச்சல்ல மூளை பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.. எங்களால முடிஞ்ச டிரீட்மென்ட் கொடுக்கிறோம்.. மனதை திடப் படுத்திக்கோங்க" மருத்துவர் வந்து சொல்லிவிட்டு சென்றதில்..

"ஆஆஆஆ.. அய்யோ.. கடவுளே.. என் குழந்தை.. அம்மா!!".. நெஞ்சில் அடித்துக் கொண்டு தரையில் சரிந்து ஓவென்று கதறினாள் உமா..

மற்றவர்கள் இதயமும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் துடிதுடித்துக் கொண்டிருந்த போதிலும் அவளைத் தேற்றுவதே பெரும்பாடாகிப் போனது.. கண்ணீரோடு நிலைகுலைந்த ஓவியமாய் கதறிக் கொண்டிருந்த தங்கள் மகளை கண்டு தனஞ்செய்னும் அமுதாவும் ரத்தக்கண்ணீர் வடித்தனர்..

உமாவின் அழுகை குரல் அந்த இடத்தையே கலங்கடித்துக் கொண்டிருந்த நேரத்தில்.. சத்தமில்லாமல் வந்து நின்றான் தாண்டவன்..

அனைவரின் பார்வையும் வெறுப்போடு அவன் மீது படர்ந்திருக்க அழுகையை நிறுத்தி மெல்ல நிமிர்ந்தவளின் பார்வை கொலை வெறியோடு அவனை நோக்கியது..

நிலை குத்திய சீற்றப் பார்வையுடன் கோப அவதாரமாய் எழுந்தவள் அடிமேல் அடிவைத்து அவனை நெருங்கினாள்.. இறுகிய சிலையாக நின்று கொண்டிருந்தான் அவன்..

"இப்போ உனக்கு திருப்தி தானே.. என் குழந்தை உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கா.. இப்போ உனக்கு சந்தோஷம் தானே!!".. ஆவேசத்தோடு அடி மனதிலிருந்து கொப்பளித்தன வார்த்தைகள்.. உணர்வற்ற முகத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தாண்டவன்..

"குழந்தை வேண்டாம் வேண்டாம்.. எனக்கு பிடிக்கலைன்னு சொன்னியே?.. எந்த நேரத்துல உன் வாயால சொன்னியோ!!.. என் குழந்தை இல்லாமலே போக போறா.. இனி உனக்கு தொல்லை கொடுக்க மாட்டா.. சந்தோஷமா இரு"..

"எந்த நேரத்துல கேடுகெட்ட உன் கையால அவளை தொட்டு தூக்குனியோ.. அப்பவே அவளுக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சிடுச்சு.. இனி அப்பா.. அப்பான்னு.. சிரிச்சிகிட்டே வந்து உன்னை கட்டி பிடிக்க மாட்டா.. நீ.. நீ.. சந்தோசமா இரு"..

"டாடா.. டாடான்னு வாசல்ல நின்னு எதிர்பார்த்து என் குழந்தை இனி உன் நிம்மதியை குலைக்க மாட்டா.. நீ.. நீ.. சந்தோஷமா இரு".. நிதானமான அவள் வார்த்தைகளில் அனைவரும் முகங்களிலும் கலவரம்...

"சந்தோஷமா இரு.. சந்தோஷமாஆஆஆஆ.. இரு"..
சந்தோஷமா இரு.. அமைதியாக ஆரம்பித்து ஆங்காரமாக கத்தியவள் சரமாரியாக அவனை அடிக்க ஆரம்பித்திருந்தாள்.. யாரும் அவளை தடுக்கவில்லை..

"சந்தோஷமா இருடா.. எல்லாரையும் கொன்னுட்டு நீ மட்டும் சந்தோஷமா இருடா".. அவளின் ஆவேசமான தாக்குதலில் அவன் கன்னங்களில் நகக் கீறல்கள்.. அமைதியாக நின்றான் தாண்டவன்..

"உன் சந்தோஷத்துக்கு இடைஞ்சல்னு பெத்த பிள்ளையை வெறுத்து ஒதுக்கி வைச்சியே!!.. அவ இப்போ இல்லாமலே போக போறா.. சந்தோஷமா இருடா!!".. சந்தோஷமா இருடா கொலைகார பாவி!!..

"ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ"..

என்றவனின் ஆக்ரோஷமும் கதறலும் கண்டு ஸ்தம்பித்து நின்றாள் உமா.. அவனை தவிர அனைத்துமே அனைவருமே உறைந்து போன நிலையில்..

தாண்டவன் அழுகிறானா!!.. ஆம் உண்மைதான்.. அழுகிறான்.. இதுவரை காணாத கோலம்..

ஈரவிழிகளோடு நிமிர்ந்தான்.. "நான்.. நான்.. என் குழந்தை வேண்டாம்னு என்னிக்குமே நினைக்கல!!.. சத்தியமா குழந்தை வேண்டாம்ன்னு நினைக்கல".. அழுகை பீறிட்டது..

"அவ வாழனும்னு நினைச்சேன்.. அவ உயிரோடு இருக்கணும்னு நெனச்சேன்".. கண்ணீருடன் கூடிய அவன் கதறலில் ஒட்டு மொத்த குடும்பமும் சிலையாக நின்றது..

"இந்த.. இந்த.. சபிக்கப்பட்ட பிறவியோட மூச்சுக்காத்து கூட அவ மேல படக்கூடாதுன்னு நெனச்சேன்.. அதனாலதான் விலகி இருந்தேன்"..

"அதனாலதான்டி விலகி இருந்தேன்".. உமாவை ஆவேசமாக உலுக்கினான் உறுமலோடு..

"என் உயிரை வெறுத்து என் குழந்தையை விட்டு தள்ளி இருந்தேன்.. என் உயிருடி என் பாப்பா.. அவளைப் போய்.. நா.. நான் எப்படி?.. மண்டியிட்டு அமர்ந்து குலுங்கி அழுதவன் விழிகளில் என்றும் காணாத அதிசயமாக அருவியாக கண்ணீர்..

தொடரும்..
.
☹️☹️☹️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺enna da idhu twist......
 
New member
Joined
Aug 14, 2024
Messages
5
acho alugai alugaiai varuthe
pls sis innoru ud kodunga aluthutte thoonga mudiyathu plssssssssssssssssssssss
 
Member
Joined
Jul 19, 2024
Messages
17

Ithu yena pa puthu twist ah iruku apo periya visayam.yetho nadanthu iruku
 
New member
Joined
Sep 10, 2024
Messages
2

Happada ithuthan kallukkullum eramo... Something wrong for his life....
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
95
🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Member
Joined
Jun 27, 2024
Messages
28
!!!!!"Tearsssssssssssssssss."!!!!!.Waiting 4 next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Joined
Jul 31, 2024
Messages
24

😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭டார்லு குழந்தைக்கு ஏதாவது ஆச்சு 😠😠😠😠😠😠😠😠😠😠😠
 
Joined
Jul 10, 2024
Messages
28
தாண்டவன் அழறான். அதிர்ச்சியா இருக்கு. மனம்விட்டு எல்லாம் கூறுவானா பார்க்கலாம்.
 
Top