• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 19

Active member
Joined
Jul 31, 2024
Messages
49
துணிகளை அலசிக் கொண்டிருந்தாள் அன்பு.. சட்டென சேலை விலகிய இடுப்பை யாரோ இறுக்கிப் பிடிக்க.. "அம்மாஆஆ.." அலறி நெஞ்சில் கைவைத்தாள்.. எதிரே அவள் கணவன் குருக்ஷேத்ரா ..

"என்னடி எப்ப அங்கே தொட்டாலும் இப்படி கத்தறே..?"

"ஏன் தொட்டுத் தொட்டு உணர்ச்சி இல்லாம மரத்துப் போயிடுமா என்ன.." மீண்டும் குனிந்து அவன் சட்டையை அழுக்கு போக கும்மினாள்..

"மரத்துப்போகாது.. பழகிப் போயிடும்ல.. இடுப்பைத் தொட்டாலே இப்படி பாம்பாட்டம் நெளிஞ்சா..?"

"நெளிஞ்சா.. என்ன..?" நிமிர்ந்து நின்று ஒரு கையை இடுப்பில் கை வைத்து முறைத்த பார்வையுடன் கேட்டாள்..
"நெளிஞ்சா.. அதுவும்.. ஒரு மாதிரி போதை ஆகுது இல்ல.. புது பொண்ணு மாதிரி தொட்டவுடனே சிணுங்கற.. நான் தான் சரியா பழக்கலையோ..!!" ஒற்றை புருவம் உயர்த்தி தலை சாய்த்தான்..

"போதும்.. நாம வெளியே நிக்கிறோம்.." மீண்டும் குனிந்து வேலையில் கவனம் செலுத்த அவள் இடுப்பை கண்சுருக்கி குறுகுறுவென பார்த்தபடி அருகில் வந்தான் குரு..

"என்ன பார்வை இது..? அவள் நிமிர்ந்து இடுப்பு சேலையை இழுத்து விட்டு கொள்ள..

"ஏய்.. இருடி எக்ஸ்ட்ராவா ஒரு மடிப்பு கூடிப் போயிருக்கு.. சதை போட்டுடுச்சா என்ன..?" அவள் இடுப்பில் லேசாக தட்டி கண்களை சிமிட்டியபடி பெரும் சந்தேகத்தைக் கேட்க..

"இப்ப என் இடுப்பில ஆராய்ச்சி பண்றது தான் பெரிய வேலை இல்ல..?" அன்பு முறைத்தாள்..

"பின்னே.. அதைவிட வேற என்ன வேலை..!! வேணும்னா உனக்கு உதவி செய்யவா.." அவளை அணைத்தபடி அந்த துணியை துவைத்தான்..

"ஐயோ சாமி உங்க வேகத்துக்கு என்னால ஈடு கொடுக்க முடியாது.. நீங்க தனியாவே செய்ங்க நான் போறேன்.." அவனிடமிருந்து விலகி.. உள்ளே ஓடினாள்..

"ஹேய் அம்பு.. வாடி.. அடுத்து என்ன செய்யணும்னு சொல்லிட்டு போ.." அவன் குரல் அவளை எட்டவில்லையோ என்னவோ..

முறுக்கிப்பிழிந்து அடித்து துவைத்து என்னென்னவோ செய்ததில் சேலை நைந்து போனது.." அழுக்கு போக துவைச்சிட்டேன் என்று விரித்து பார்க்க சேலையில் ஆங்காங்கே கிழிசல்..

அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்த அன்பு சேலையின் நிலையை பார்த்து காப்பி லோட்டாவை அதிர்ச்சியில் பட்டென போட்டாள்..

"அய்யோ என் சேலை.." அன்பு அழாத குறை..

"அது.." அசடு வழிந்த பாவனையுடன் தலையை சொரிந்தவன்.. "என் ஸ்டைல துவைச்சேன்.. சேலை கிழிஞ்சு போச்சு.." அழகாக நாக்கை கடித்து வெண்ணை திருடிய தாடி வைத்த கண்ணன் போல் விழித்தான்.. அன்பரசிக்கு அவன் புது பாவனைகள் ரசனையூட்டின.. ஆன போதிலும் சேலை கிழிந்த கோபத்தை முகத்தில் காட்டி அவனை முறைத்தாள்..

"இப்ப என்ன சேலை தானே கிழிஞ்சு போச்சு.. இதுக்கு முன்னாடி எத்தனை சேலையை கிழிச்சிருக்கேன்.. நேத்து கூட உன் ஜாக்கெட்.."

"ஷூ.."

"இல்லடி உன்னோட உள்பாவாடை.."

"அய்யோ வாயை மூடுங்க..!! நான் எதுவுமே கேட்கல சாமி.. இங்கிருந்து போங்க மீதி துணியை நானே துவைச்சிக்கிறேன் .. இங்கே யாரும் கிழிஞ்சு போன கந்தலை உடுத்திக்க தயாரா இல்லை.."

"ஆமா உடுத்தின பிறகு கிழிச்சுருவோம்.." குரு சொல்லவும் புரியாமல் நிமிர்ந்து பார்த்தாள் அவள்..

"நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்" என்றாள்.. கண்களால் குறுகுறுத்தபடி..

"நான் செய்வேனே..!! நேத்து கூட உன்னோட.." அவன் துணிக் குவியலிலிருந்து அவன் எடுத்து காண்பித்த உள்ளாடையை வாங்கி தண்ணீருக்குள் போட்டவள் "அய்யோஓஓஓஓ.. போதும்.." என்றாள் கிசுகிசுப்பாக..

மீண்டும் அவள் துவைக்க ஆரம்பித்திருக்க பக்கத்தில் இருந்த கல்லில் அமர்ந்தவன்.. வேப்பங்காய்.. மாங்கொட்டை.. செடியிலிருந்து பறித்த எலுமிச்சை.. சிறு கல் என எதையாவது அவள் மீது தூக்கி எறிந்து வேலையை கெடுத்தான்..

"என்னதான் வேணும்.. உங்களுக்கு சும்மா இருக்க முடியலையா.." எரிச்சலானாள் அன்பு..

"முடியலையே..!!"

பெருமூச்சோடு அவனை முறைத்து விட்டு மீண்டும் வேலையை தொடர.. "நான் இப்படித்தான் சும்மா உட்கார்ந்து இருக்கணுமா..?" அடி குரலில் கரடு முரடாக அவன் குரல்..

வெளியே போக மனைவியிடம் அனுமதி கேட்க ஈகோ ஒப்புக் கொள்ளவில்லை..

"நான் அப்படி சொல்லவே இல்லையே.. உள்ள போய் உட்காருங்க.. டிவி பாருங்க ஃபோன்ல உங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசுங்க.." துணியை அலசிக்கொண்டே பதில் சொன்னாள்..

"அதெல்லாம் கஷ்டம்.. வேணும்னா உன்னை பார்க்கிறேன்.." என்றான் துளைக்கும் கூர்ந்த விழிகளோடு

'அதைத்தானே இவ்வளவு நேரமா செஞ்சுகிட்டு இருக்கீங்க.." மனதுக்குள் முணுமுணுத்தாள்..

பக்கத்திலிருந்த வாளியின் தண்ணீரை அவள் மீது தெளித்தான்.. புடவை ஜாக்கெட் நனைந்து போனது..

"அடடா.. என்னை வேலை செய்ய விட மாட்டீங்களா..?"

"மாட்டேன்.. எனக்கு உன்னை சீண்டி பாக்குறது தான் முக்கியமான வேலையே..!!"

"சும்மா இருந்தா இப்படி தான் எடக்க மடக்கா ஏதாவது தோணும் இதோ வர்றேன்.." உள்ளே சென்றவள் அருவாளை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்..

"போய் வெட்டுங்க.."

"என்ன..?" எழுந்து நின்றான் குரு..

"ப்ச்.. இதோ தோட்டத்தில் முரட்டுத்தனமா உங்கள மாதிரியே செடி கொடியெல்லாம் படர்ந்திருக்கே.. அதை போய் வெட்டுங்க.. நல்ல செடி எல்லாம் முள்ளு நடுவுல சிக்கி பாழ்பட்டு போகுது.."

"என்னடி என்ன பாத்தா தோட்டக்காரன் மாதிரி தெரியுதா..!!" சீறிக் கொண்டு வந்தான்..

"அதுவும் ஒரு வேலைதானே..!! ரவுடின்னு சொல்றதை விட தோட்டக்காரர்ன்னு சொல்றது எவ்வளவோ கவுரவம்.." அவள் சொல்லி முடித்த அடுத்த கணம் அருவாளை கீழே வேகமாக வீசியெறிந்தான் குரு.. அது நங்கென்று கல்லில் மோதி விழுந்தது..

கண்களில் அனலோடு அவன் வந்த கோலத்தை கண்டு விதிர்த்துப் போனாள் அன்பு..

மிக நெருக்கமாக நின்றவன் "நீ சொன்னா நான் செய்யணுமா..!! முடியாது போடி.." அவளை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்..

"அப்பப்பாஆஆ.. இவரோட ரொம்ப இம்சை.. ஒண்ணு என்னய சுத்தி சுத்தி வந்து தொல்லை கொடுக்க வேண்டியது.. இல்லன்னா தூர எங்கேயாவது போய் அடிதடி உதை வெட்டு குத்துன்னு யாரையாவது வதைக்க வேண்டியது.. முடியல என்னால.." புலம்பிக்கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருக்க மரத்தை வெட்டும் ஓசை தெளிவாக காதில் விழுந்தது..

துணியை கசக்குவதை நிறுத்திவிட்டு கண்கள் இடுங்க நிமிர்ந்து பார்த்தாள் அன்பு..

அடர்ந்த முள் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தான் குரு.. அவ்வப்போது கண்கள் அவளை முறைப்போடு தழுவிக் கொண்டிருந்தன.. அது முறைப்பு அல்ல.. விருப்பம் என்பதை சமீப நாட்களில் உணர்ந்து கொண்டு வருகிறாள்..

"பாத்துங்க.. முள்ளு குத்திட போகுது.." அவள் பதைபதைக்க..

"இந்த முள்ளு.. என்னை ஒன்னும் செஞ்சிடாது.." சுறுசுறுப்பாக மரரக்கிளையை வெட்டிக் கொண்டு அவன் சொன்ன போதிலும் பார்வை போன திசையில் அவசரமாக மார்புச் சேலையை இழுத்து விட்டுக் கொண்டவள் இந்த லொள்ளுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாள்..

இப்படித்தான் நான்கு நாட்களாக வீட்டிலேயே வாசம் செய்து அவளை படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறான் குரு..

"நீயே நொந்து போய் அலறி.. எப்பா சாமி போய் வேலையை பாருங்கன்னு என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லணும்.." அவன் சவால் விட.. அன்பரசி வாயை திறந்தாள் இல்லை..

"குரு.. நம்ம இரும்பு குடோன்ல ரெண்டு பயலுக வேலை செய்யாம அடிச்சுக்கிறானுங்களாம்.. கொஞ்சம் என்னன்னு பாத்துட்டு வர்றியா.."

"இல்லப்பா நான் போகல.. வேற யாரையாவது அனுப்புங்க.."

"ஓஹோ.. சரி நம்ம ராயப்பன் பையன் சத்யராஜ் ஏதோ காதல் பிரச்சினைல மாட்டி பொண்ணு வீட்டுக்காரன் எவனோ அடிச்சு ஆஸ்பத்திரியில் கிடக்கிறானாம்.. அவனோட அப்பன் வந்து ஒரே புலம்பல்.. நீ போய்.."

"நான் போகலப்பா.."

"என்னப்பா ஆச்சு உனக்கு..?" மகனை ஆச்சரியமாக பார்த்தார் ஆச்சார்யா..

சுவற்றில் சாய்ந்து நின்றவன்.. "ஹான்.. இன்னைக்கு நான் லீவு..!!" தெனாவட்டாக சொல்லிவிட்டு சென்றான்..

அன்பரசிக்கு நம்ப இயலாத வியப்பும் பரபரப்பும்..

"இன்னைக்கு பஞ்சாயத்து எதுவும் பார்க்க போகலையா..?"

"போகல.."

அருகே வந்து அவன் சட்டை பட்டன்களை பிய்த்து எடுத்தபடி கணவனை ஆசையாக பார்த்தாள் அவள்..

"எனக்காகவா..!!"

"அப்படியெல்லாம் சொல்லிட முடியாது.. உடம்பு ஒரு மாதிரி டயர்டா இருக்கு.." இரு கைகளை விரித்து சோம்பல் முறித்தவன்.. "வா.. வந்து கொஞ்சம் எனர்ஜி ஏத்தி விடு.." அவளை தூக்கி கட்டிலில் போட்டு மேலே விழுந்தான்..

இதோ நான்கு நாட்கள் ஆகிவிட்டது.. வீட்டையே சுற்றி சுற்றி.. அவளை சுற்றி சுற்றி வருகிறான் குரு..

ஆச்சார்யாவுக்கு மயக்கம் வராத குறை.. அவன் முரட்டுத்தனத்திற்கு தீனி போடவும் தேவையில்லாத வெட்டிப் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு சிக்கல்களில் தவிக்க கூடாது என்பதற்காகவும் தான் இந்த நியாயமான பஞ்சாயத்துகளை அவனிடம் தள்ளி விடுவது...

இந்த மாதிரி வேலைகளுக்கு போக விரும்பவில்லை என்று சொன்ன பிறகு அவர் மகிழ்ச்சிக்கு அளவேது..?

"சாதிச்சிட்ட மருமகளே.." நெஞ்சுக்குள் அன்பரசிக்கு சபாஷ் போட்டுக் கொண்டார்..

ஆனால் வெளி வேலைகளுக்கு செல்லாத புருஷனை வீட்டில் வைத்து சமாளிப்பது எவ்வளவு கடினம் என்று அன்பரசி புரிந்து கொண்டாள் இந்நேரத்தில்..

நடக்க பழகிய குழந்தையை சமாளிப்பது போல் அத்தனை மோசம் அவள் நிலை..

அவன் சந்தோஷமாகத்தான் இருந்தான்.. அவள் தான் நொந்து போனாள்.. அன்பரசியின் அருகாமை கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல்.. வலிய வந்து அவன் வலையில் மாட்டிக் கொண்ட முயல்குட்டி இவள்..

சமையல் மேடையில் அமர்ந்திருந்தவன் அவள் தாடையை பற்றி தன் பக்கம் இழுத்தான்.. குவிந்த உதடுகளோடு மலங்க மலங்க விழித்தாள் அன்பரசி..

"ஏதாவது ஒரு கட்டத்துல சலிச்சு போகணும் டி.. இப்படி இனிக்க இனிக்க ஒரு மார்க்கமா அழகா தெரிஞ்சா உன்னை விட்டு எங்க போறது சொல்லு..' அவள் இதழை கவ்வினான்..

"என்னங்க உங்களுக்கு போர் அடிக்கலையா..?"

"உன்னை தவிர
வேற எதுவும் தெரியலையேடி.." கட்டிலில் உடும்பு போல் அவள் மீது ஏறினான்.. கணவனின் அன்பும் அருகாமையும் நச்சரிப்பும் எந்த பெண்ணுக்கு கசக்கும்.. ஆனாலும் இப்படி வீட்டில் இருப்பது சாஸ்வதமில்லை.. ஏதாவது செய்ய வேண்டும்.. தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்..

தோட்டத்தை அழகாக மாற்றி விட்டான் குரு..

"என்னம்மா நடக்குது.. நம்ம குரு தானா இவன்.." வெகு நாட்களுக்குப் பிறகு ஆச்சார்யா புன்னகைத்தார்..

"எதையும் உடைச்சா மட்டும் பத்தாது.. அதை உருவாக்கணும்.. தேக்கு மர கதவை இப்படி உடைச்சு வச்சிருக்கீங்க.. என்னதான் நம்ம வீட்டு வாசலை மிதிக்க எவனுக்கும் தைரியம் இல்லைன்னாலும்.. கதவில்லாத வீட்ல பொம்பளைங்க எப்படி இருக்க முடியும்.. ஹான்" அன்பு அனத்தியதில்..

சரி ஏற்பாடு பண்றேன்..!! இட்லியை விழுங்கிக் கொண்டே சொன்னான்..

"என்ன ஏற்பாடு பண்றேன்..? நீங்களே கதவை மாட்டுங்க.." மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கதவை மாற்றினான்.. அப்பாவின் ஊஞ்சலை ரிப்பேர் செய்து சரிப்படுத்தினான்..

"ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க.. இதெல்லாம் சரியே இல்லை.." அவளிடம் முறைத்துக் கொண்டாலும் சொன்ன வேலைகளை தப்பாமல் செய்தான்..

"என்னங்க..?" அவள் குழையும் போதே தெரிந்து விட்டது ஏதோ கோரிக்கை வைக்கப் போகிறாள் என்று..

"அம்பே.. எதுவும் பேசாதே.. தொலைச்சிடுவேன்.. இப்பவாவது என் இஷ்டப்படி இருக்க விடு.." அவளுள் மயக்கத்தோடும் முனகலோடும் மூழ்கி இருந்தான்..

பிடித்த உணவை உண்ணும் போது விழிகள் மூடி அந்த சுவையை அனுபவிப்பதை போல் அவன் முகத்தில் தெரிந்த அசாத்திய உற்சாகத்தை கண்டு கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்..

"என்னங்க நம்ம அரிசி குடோன்ல ஏதோ தப்பு நடக்குதுன்னு என்னோட அப்பா சொன்னாரு.."

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. அவரை என் அப்பாகிட்ட பேச சொல்லு.." குருவின் வேகம் அதிகமாகியது..

"நீங்க ஏன் அங்கே போய் நம்ம குடோவுனை உன்னை மேற்பார்வை பார்க்க கூடாது.. முதலாளி வந்துட்டா அங்க இருக்குற ஆளுங்களுக்கு கொஞ்சம் பயம் வரும்.. வேலையும் சரியா நடக்கும் இல்ல..?"

"அம்மாஆஆஆஆ.." அவள்தான் கத்தினாள்.. அவன் தாக்குதல் அப்படி..

"நீ சொல்றதை கேட்டு நான் வேலைக்கு போகணும்.. உன் இஷ்டப்படியெல்லாம் பொம்மை மாதிரி ஆடணும்.. அதானே..?" சீற்றம் பேச்சில் மட்டுமல்ல..

"நான் அப்படி சொல்ல வரல.. உங்களுக்கு சொந்தமா அரிசி மில்.. இரும்பு பாக்டரி.. கடையும் கண்ணியும் இருக்கும்போது எதுக்காக வீட்டுல..!!"

"நான் வீட்ல தண்டசோறு திங்கறேன்னு சொல்லிக் காட்டறியாடி..!! வேல வெட்டியில்லாம என் கை காலை முடக்கி போட்டதே நீதானே..!!"

"ஆஆஆ.. இல்லைங்க.. நான்..!!"

"ஷு.. பேசாதே..!! இந்த மாதிரி நேரத்துல கெஞ்சி கொஞ்சி கேட்டு நினைச்சதை சாதிச்சுக்கறவ பேர் என்ன தெரியுமா..?"

உறைந்து சிலையானாள் அன்பு..

அடுத்தடுத்து அவன் முரட்டு தாக்குதல்களும் ஆசை வேட்கைகளும் அவளுள் எந்த சப்தங்களையும் எழுப்பவில்லை..

"இந்த உடம்பை வைச்சு எல்லாத்தையும் சாதிக்க முடியும்னு நினைக்காதே.. என்னை மாத்தணும்னு நினைச்சா நீதான் கஷ்டப் படுவ.. பார்த்து ஒழுங்கா இருந்துக்க.." விலகிப் படுத்தவன் அவள் பிடரியை பற்றி தன் பக்கம் இழுத்து வலிக்கும்படி அணைத்தான்.. அவள் விட்டத்தை பார்த்தபடி அமைதியாக படுத்திருக்க..

"இனி இந்த டிராமாவை நான் கண்டுக்கிறதா இல்ல.. கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா தான் போறே.." மனதுக்குள் முணுமுணுத்த படி அவளை பார்த்தவாறே படுத்திருந்தான் குரு..

மறுநாள் காலையில் அவன் கை வளைவுக்குள் அவள் புடவை மட்டுமே இருந்தது.. அன்பு பெட்டி படுக்கையோடு கிளம்பி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள்..

தொடரும்..
டேய் வம்பு உனக்கு வாய் ஜாஸ்தி தான் 😏😏😏😡😡😡😡😡😡😡😡
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
63
டேய் முன்னாடி போனா கடிக்கிற. பின்னாடி போனா உதைக்கிற. என்ன தான் செய்ம முடியும்.

அன்பு நீ எடுத்த அதிரடி முடிவு தான் சரி. அம்பேன்னுட்ட நாய்குட்டி மாதிரி வரப்போறான். 🤣🤣🤣🤣🤣🤣
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
62

தனியா கிடந்து சாவு டா மவனே என்ற பேச்சு பேசுற நீ 🙎🙎🙎
 
Active member
Joined
May 3, 2025
Messages
57
அடப்பாவி தேவைதான் உனக்கு.... இருந்தாலும் அவ சொன்னத பண்ண தானே போற நீ...

என்ன ஈகோ தடுக்குதா உனக்கு....
எதுவும் பண்ண மாட்டான்னு தானே இவளோ பேசுற குரு நீ....

துவைக்கிறங்கரா பேர்ல கல்லு உடைக்காம விட்டானே😅😅😅
 
Top