• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 19

New member
Joined
Jan 21, 2024
Messages
10
வாசலில் சூர்யதேவ்வின் கார் வந்து நின்று ஹாரன் அடித்துக்கொண்டே இருக்க செக்யூரிட்டி மூர்த்தி எங்கிருந்தோ ஓடி வந்து கதவை திறந்தார்..

ஏதோ சொல்ல வாயெடுத்து வாசலை பார்த்தவாறு தயங்கியபடி அவர் நிற்க.. வீட்டை நோக்கி முன்புறம் நகர்ந்த கார் அப்படியே நின்றுவிட்டது... அதற்கு மேல் உள்ளே செல்ல இடமில்லை..

கார் நிறுத்த வேண்டிய இடத்திலும் அதற்கு முன்புற வாசலிலும் பெரிய பெரிய கோலங்களாக போடப்பட்டிருக்க.. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோலங்களில் மதில் சுவரில் வீட்டு வாசலில் என ஆங்காங்கே விளக்கேற்றி வைத்து.. களையிழந்து போயிருந்த அந்த பழைய வீட்டிற்கு புத்துயிரை தந்திருந்தாள் கமலினி..

தோட்டத்து செடிகள் கூட விளக்கு தீபங்களோடு பேசிக் கொண்டிருந்தன..

அவளோடு சேர்ந்து புத்தம் புது பட்டு பாவாடை சட்டை அணிந்த இரண்டு பெண் பிள்ளைகள் காருக்கு முன்பான கோலத்தில்.. விளக்குகளை சுற்றி வைத்து சங்கிலி தொடராக தீபச்சுடரோடு திரிகளை இணைத்து விளக்கேற்றிக் கொண்டிருந்தனர்.. கண்களுக்கு குளிர்ச்சியான அந்த காட்சியில் இதழுக்கும் தெரியாத புன்னகையோடு காருக்குள் அமர்ந்திருந்தவனின் பார்வை அவசரமாக அவள் மேல் பாய்ந்தது..

மெல்லிய ஜரிகையோடு கூடிய கிளி பச்சை வண்ண பட்டுப்புடவையில் அவளைப் பார்த்ததும் ஒரு கணம் மூச்சு நின்று மீண்டும் சீராகியது.. அதிகாலையில் திருட்டுத்தனமாக எட்டி எட்டி பார்த்தபடி தன் பூச்சென்டு விரல்களால் மல்லிகை அரும்புகளை பறித்துக் கொண்டு குடுகுடுவென்று மாடிக்கு ஓடியவளை டாக்டர் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்..

அப்படி பறித்து நெருக்கமாக தொடுத்த மல்லிகை சரம் அவள் பின்னலை அலங்கரித்து தோளின் முன்புறம் வழிந்தது..

செக்யூரிட்டி கார்கதவின் பக்கம் வர கண்ணாடியை இறக்கினான்..

"சார் நான் வேணும்னா.. இந்த இடத்தை கிளீன் பண்ணிட சொல்லட்டுமா.. நான் என்ன சொன்னாலும் இந்த பொண்ணு கேக்கறதில்ல.." என்று பதட்டத்தோடு சொன்னவரை ஒரு பார்வை பார்த்தான்..

காரை பின்புறம் எடுத்து வெளியே வந்தவன் அவன் வீட்டை ஒட்டி சாலையிலேயே தன் வாகனத்தை நிறுத்திக் கொண்டான்..

"டாக்டர் ஏதோ போனா போகுதுன்னு பொறுத்துட்டு போறாரு.. இருந்தாலும் இந்த பொண்ணு.. அவர் அமைதியா இருக்கறதை பயன்படுத்திக்கிட்டு ரொம்பத்தான் அராஜகம் பண்ணுது.." சூரிய தேவ் கோபத்தின் பொருட்டு ஒரு பக்கம் செக்யூரிட்டி அங்கலாயித்தாலும் இன்னொரு பக்கம்.. ஒரு பெண்ணின் உயிர்ப்பான செயல்களில் அந்த வீடு அழகோடு மிளிர்வதை காண்பதில் அவருக்கும் சந்தோஷப் படவும் செய்தார்..

அழுத்தமான அலட்சியமான நடையோடு உள்ளே வந்தான் சூர்ய தேவ்..

"அக்கா அந்த அங்கிள் வந்துட்டாரு.. கண்டிப்பா திட்ட போறாரு.." அவளோடு விளக்கேற்றிக் கொண்டிருந்த இரு குட்டிப் பெண்களில் ஒருத்தி நிமிர்ந்து பார்க்காமல் கமலியிடம் கிசுகிசுத்ததாள்..

"அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டார்.. அப்படியே சொன்னாலும் நான் பாத்துக்கறேன்.." என்றவள் விளக்கேற்றி வைத்திருந்த கோலத்தின் முன்பு வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க.. தலை குனிந்து அவளை விழுங்குவது போல் பார்த்தான் சூர்ய தேவ்..

"சிரிச்சா பதிலுக்கு சிரிக்கணுன்னு கூட தெரியலையே இவருக்கு..!! சரியான விடியா மூஞ்சி டாக்டர்.." மனதில் அவனை வசை பாடிக் கொண்டே.. அவன் ஏதாவது கேட்டால் பதில் சொல்லிக் கொள்ளலாம் என்ற அலட்சியத்தோடு விளக்குகளில் கவனம் செலுத்தினாள் கமலி..

ஓரிரு நொடிகள் மட்டுமே அங்கு நின்றவன் அங்கிருந்து நகர்ந்து மெதுவாக நடந்தபடி வண்ணக் கோலங்களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் தீபங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் சென்று விட்டான்..

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவள்.. "நான் சொன்னேன் இல்ல அவர் திட்ட மாட்டாருன்னு.." பிள்ளைகளிடம் கண்சிமிட்டி சொல்ல..

"ஆமாம் அக்கா.. முன்னாடியெல்லாம் நாங்க கேட்டை தொட்டா கூட இந்த அங்கிள் ரொம்ப கோவப்படுவார்.. செக்யூரிட்டி எங்களை பயங்கரமா திட்டுவாரு.. இப்ப மட்டும் எப்படி அமைதியா போறார் தெரியலையே.." அஸ்விதா என்ற குட்டி பெண் சந்தேகத்தைக் கேட்க..

"அ..து நாம ஏத்தி வச்ச தீபங்களோட அழகுல மயங்கி பேச்சே வந்திருக்காது.. தீப ஒளி மனசுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்கும்ன்னு சொல்லுவாங்க.. அது உண்மைதான் போலிருக்கு..!! இவ்வளவு தீபங்களை பார்த்ததும் டாக்டரோட கோபம் பறந்து போயிருக்கும்.." என்று சிரித்தாள் கமலினி..

"அப்ப தினமும் தீபம் ஏத்தி வைக்கலாம்.. டாக்டர்கள் நம்ம யாரையும் திட்டவே மாட்டாரு.. நாங்களும் தினமும் உங்க வீட்டுக்கு வந்து விளையாடுவோம்.." என்று சின்னவள் ஒருத்தி சொல்ல மூன்று பேருமாக சிரித்தனர்..

உள்ளிருந்து ஜன்னல் திரையை விலக்கி அவளை பார்த்தான் சூர்ய தேவ்..

தீபங்களின் நடுவே தேவதையாய் குழந்தைகளோடு பேசியபடி விளக்கேற்றிக் கொண்டிருந்தாள் அவள்..

எப்போதும் வாசலில் மின்விளக்கு கூட உயிர்ப்பிக்கப்படாமல் இருளடைந்து போயிருக்கும் அந்த வீடு இன்று சகஜோதியாய் ஒளி வெள்ளத்தில் தங்க நிற சுடர்களோடு தகதகத்துக் கொண்டிருந்தது இன்று..

அந்த பக்கமாக போவோர் வருவார் கூட புதிதாக பொலிவடைந்திருந்த அந்த வீட்டை.. வித்தியாசமாக கண்கள் விரித்து பார்த்தபடி நடந்தனர்..

வேலை முடிந்ததென குழந்தைகளை அனுப்பி விட்டு செக்யூரிட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்..

அவர் புலம்புவதும்.. இவள் ஏதோ பதில் சொல்வதுமாக தெரிந்தது..

அவள் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்க.. ஜன்னல் திரையை மூடினான்..

என்றுமில்லாமல் புதியதாக கண்ணாடி வளையல் சத்தமும் கொலுசொலியும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது..

மாடிக்கு செல்லப் போகிறாள் என்றெண்ணி அங்கேயே நின்று கொண்டிருந்தான்..

வளையல் சத்தமும் கொலுசு சத்தமும் அவன் நெஞ்சை வருடி குறுகுறுக்க செய்தன.. கீழுதட்டை கடித்தபடி விழிகளை மூடி அந்த இருட்டறையில் நின்று கொண்டிருந்தான் சூர்யதேவ்..

இதுவரை தனிமை வெறுமை தவிர வேறெந்த உணர்வுகளையும் தந்திராத அந்த இருட்டு.. இன்று இனம் புரியாத கதகதப்போடு அவன் காது மடலை சூடேற்றிக் கொண்டிருந்தது..

மாடி பக்கம் கொலுசு சத்தம் கேட்கவில்லை..

கதவு தட்டும் ஓசை..!!

தொண்டைக் குழியில் ஏதோ துடிக்க.. புருவங்களை ஏற்றி இறக்கியவன்.. ஹ்ஹா.. என்று அகலமாக மூச்சுவிட்டு தலையை கோதியபடி வந்து கதவை திறந்தான்..

வாசலை பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்புற தோற்றத்தில் அவள் மல்லிகை சரம்தான் முதலில் அவன் கண்களில் விழுந்தது.. திருட்டு மல்லிகைக்கு வாசம் அதிகமோ..!!

கதவை திறந்த ஓரிரு நொடிகளுக்கு பின் அவன் பக்கம் திரும்பினான் கமலி‌‌..

பின்புறம் சூடியிருந்த வெண்ணிற மல்லிகை மொட்டுக்களுக்கு போட்டியாக வரிசை பற்களோடு பளீரென்று சிரித்தாள்..

"டாக்டர்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. உள்ள வரலாமா..?" அவள் சாதாரணமாகத்தான் கேட்டாள்..

அதீமென்மையான அவள் குரல் அனஸ்தீஷீயாவாக செவிகளின் வழியே இதயத்துக்குள் இறங்கி அவன் கருவிழிகளை சொக்க வைத்தது..

ம்ம்.. என்று விலகி வழிவிட்டான்..

இருளடைந்த வீட்டில் பார்வையில்லாதவன் போல் நடந்து அவனுக்கு பழக்கம்.. ஆனால் அவள் இரண்டடிகள் எடுத்து வைக்கும் முன்.. ஏதோ ஒரு பொருள் தடுக்கி.. ஆஆ.. என்று தடுமாறி கீழே விழப் பார்த்தாள்‌‌..

நிழலாக தெரிந்த கமலியின் உருவம் தள்ளாடுவதை கண்டதும் சூர்யாவின் கைகள் அவள் தோள்களை இறுக்கி பிடித்தன.. இதுவரை அனுபவித்திராத மென்மை அவன் கைகளுக்குள் குழைந்தது..

"பா.. பார்த்து..!!" அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை..

"ஏன் இவ்வளவு இருட்டா இருக்கு.. லைட் போடுங்க டாக்டர் சார்.." கமலி சொன்ன பிறகு சுவற்றிலிருந்து ஸ்விட்சை துழாவி விளக்கை உயிர்ப்பித்தான்..

உதட்டை கடித்த படி தன் தோள்களை தடவிக் கொண்டிருந்தாள் கமலி..

உணர்ச்சி வேகத்தில் அழுத்தி பிடித்து விட்டான்.. அது அவனுக்கே தெரியவில்லை.. அவளுக்கு வலிக்கிறது..

அதற்காக சாரி கூட கேட்கத் தோன்றாத நிலையில்.. அவள் அசூசையாக தன் தோள்களை தேய்த்துவிட்டு கொண்டிருப்பதை பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தான்..

"இப்பதான் முதல் முறையா உங்க வீட்டுக்குள்ள வரேன்.." கமலி சிரித்தாள்.. அவள் மெல்லிய குரல் அந்த வீட்டுக்குள் பட்டுப் படாமல் எதிரொலித்தது..

"வெளிப்பக்கமிருந்து பார்க்கும்போது ஒன்னும் தெரியல.. நல்ல பெரிய வீடு.." என்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

டக்கின் செய்திருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டிருந்தான்.. காலர் பட்டனையும் அதற்கு கீழிருந்த பட்டனையும் அவிழ்த்துவிட்டு.. லேசாக மார்பு தெரியும் படி பேண்ட் பாக்கெட்டில் கை நுழைந்து அவளை பின்தொடர்ந்து நடந்தவனை கண்டதும் ஒரு கணம் தடுமாறி.. புன்னகைத்த இதழ்கள் சட்டென்று மூடிக்கொள்ள முன்னோக்கி நடந்தாள் கமலி..

"டாக்டர்.. வீட்டை ஒருமுறை சுற்றி பார்க்கட்டுமா..?" சின்ன குழந்தையின் குதூகலத்துடன் கேட்க சரி என்று தலையசைத்து.. வீட்டின் மையத்தில் அப்படியே நின்றான் அவன்..

புடவை முந்தானையை மணிக்கட்டில் சுருட்டிக் கொண்டு.. முன்பக்கம் இரு கைகளை கோர்த்துக்கொண்டு.. வீட்டை சுற்றி வந்தாள் கமலி..

கீழே மூன்று அறைகள் இருந்தன.. கதவு சாத்தப்பட்டிருந்தது.. எந்த அறைக்குள்ளும் நுழையவில்லை அவள்.. இடது பக்கம் பெரிய சமையலறை.. அறைகளுக்கும் சமையல் அறைக்கும் நடுவே பெரிய கூடம்.. கூடத்தின் ஓரத்தில் சமையலறையை ஒட்டி அந்த காலத்து மர ஊஞ்சல் சங்கிலியோடு பிணைக்கப்பட்டு அது பயன்படுத்தப்படாமல் சுருட்டி மேலே மாட்டப்பட்டிருந்தது..

வெளியேறும் வாசலுக்கு நேர் எதிர்ப்புறமாக மாடிக்கு செல்லும் படிகள்..

"மேலேயும் இதே மாதிரி செட்அப்தானா டாக்டர்..?" கண்களை விரித்து அவள் கேட்க.. ஆம் என்பதை போல் தலையசைத்தான் அவன்..

"ஒஹோ.." என்றவள் மேலே செல்லாமல் அந்தக் கூடத்தையே சுற்றி வந்தாள்..

சூரியனின் ஆழ்ந்த கண்கள் கமலியை சுற்றி வந்தன..

மல்லிகை பூ வாசமும் பெண்வாசமும் அந்த வீட்டை நிறைத்து அவன் நெஞ்சுக்குள் ஊடுருவியது..

சீறலான மூச்சோடு.. தரையை பார்த்தபடி நடந்து வந்தவன் சோபாவின் அருகே நின்று கொண்டான்..

வீட்டை சுற்றி பார்த்துவிட்டு அவனருகே வந்து கொண்டிருந்தாள் கமலி..

தொண்டை குழிக்குள் எச்சில் கூட்டி விழுங்கியவன் அவள் தன்னை நோக்கி நெருங்கி வருவதை கண்கள் தெறித்து விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.. என்னவோ இந்த இரவு அவனை பாடாய்ப் படுத்துகிறது..

அதிசயத்தோடு ஆர்வமாக பெண்ணின் உடலியல் கூறுகளை பற்றி படித்தவன்.. ஒரு கட்டத்தில் பெண் அங்கங்களில் சலித்து போனான்.. ஆண்மையை தொலைத்தான்.. உணர்ச்சிகளை பறிகொடுத்தான்..

பெரிய மார்பு.. குறுகிய இடை.. விரிந்த பெல்விக் எலும்பை போர்த்திய சதைதிரட்சி.. என்பதை தாண்டி பெண்ணில் வியப்பதற்கு என்ன இருக்கிறது.. எல்லாம் இனப்பெருக்கத்திற்காக இயற்கை தந்த அமைப்பு.. அதைத் தாண்டி காதல் கொண்டு கிளர்ச்சி அடைய பெண்களிடம் பெரிதாக எதுவும் இருப்பதாய் அவனுக்கு தோன்றியது இல்லை..

ஆனால் இப்போது..?

புடவை கட்டிய நதி போல் வளைவுகளோடு ஒரு பெண் தன் முன்னே நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..

நீரோடையின் சலசலப்பு நெஞ்சில் கேட்கிறது.. அடி வயிற்றிலிருந்து இழுத்து பிடிப்பதாக ஏதோ ஒரு வலி.. பல வருடங்களாக பெண் வாசமே காணாத ஒருவன் போல்.. உலகின் எத்தனை கோடி மக்கள் தொகையில் அவள் ஒருத்தி மட்டுமே பெண் போல்.. ஒட்டுமொத்த உணர்வுகளை உள்ளடக்கியிருந்தது அவன் பார்வை..

இரண்டு மூன்றடிகள் தொலைவில் அடைந்து விடும் தூரத்தில் கமலி அவனை நெருங்கிக் கொண்டிருக்க.. சூரிய தேவ் பின்னால் நகர்ந்தான்.. கமலி அவனை நோக்கி வரவும் அவனும் அதே வேகத்தில் அவளைப் பார்த்துக் கொண்டே தடுமாற்றத்துடன் பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதி நின்றான்..

மோதி நின்ற சுவற்றை திரும்பி பார்த்து.. ஆழ்ந்த மூச்செடுத்தவன் அவளை பார்த்து விழிக்க.. தனக்காக வழிவிட்டு நிற்கிறார் என்ற எண்ணத்தோடு ஜன்னல் பக்கம் வந்து நின்று கொண்டாள் கமலி..

"ஏன்.. எல்லா இடத்துலயும் இவ்வளவு கனமான கருப்பு கலர் ஸ்கிரீன் போட்டுருக்கீங்க.. இதையெல்லாம் பார்க்கும் போது மனசுக்குள்ள எதிர்மறை எண்ணங்கள் தான் ஓடும்.. அப்புறம் அளவுக்கதிகமாக கோபம் வரும்.. எல்லார் மேலயும் எரிஞ்சு விழ தோணும்.. சிவப்பு.. பச்சை.. மஞ்சள்னு ஏதாவது கண்ணுக்கு குளிர்ச்சியா வேற கலர் மாத்தி போடலாம்.." என்றபடி ஜன்னல் திரையை விலக்கி விட்டாள்..

அவள் பக்கம் திரும்பி இடது பக்க தோளை சுவற்றில் சாய்த்து.. மார்பின் குறுக்கே கைகட்டியபடி தோரணையாக நின்று.. ஆழ்ந்த கண்களோடு அவளைப் பார்த்தான்..

நாக்கை கடித்துக் கொண்டு கண்களை குறுக்கியவள்.. "சாரி அதிக பிரசங்கித்தனமா ரொம்ப உரிமை எடுத்துக்கறேன்னு நினைக்கிறேன்.. சும்மா ஒரு சஜஷன்தான்.." என்றவள் அவன் பார்வையில்.. கோபப்பட்டு விட்டானோ என்று கலவரம் கொண்டு கீழூதட்டை ஈரப்படுத்தியவாறு தன் கண்களை திணறலோடு வெவ்வேறு திசைகளில் பயணிக்க விட்டாள்‌‌..

அப்போதும் அவன் பார்வை அவளை விட்டு அகலவில்லை.. கவ்வியெடுத்து விழுங்குவது போன்ற ஆழமான பார்வை.. என்ன விஷயமாக இங்கே வந்தாள் என்று அவன் கேட்கவில்லை.. அவளும் இதுவரை சொல்லி இருக்கவில்லை..

அவன் பார்வையின் அடர்த்தி தாங்காமல்..

"அது நான் எதுக்காக வந்தேன்னா.. இன்னைக்கு கார்த்திகை தீபம் இல்லையா..!! வடை பாயாசத்தோடு சமைச்சேன்.. பசங்க யாரும் சாப்பிட வரல.. அதான் என் கூட சாப்பிட வரீங்களான்னு கேட்க வந்தேன்.." என்று பதிலுக்காக தவிப்போடு அவன் முகத்தை பார்க்க.. பார்வையை மாற்றாமல் அவள் முகத்தில் விழிகளை பதித்திருந்தாள் சூர்ய தேவ்..

"சிங்காரம் அண்ணா இல்லாம ஹோட்டல்ல சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும்.. இன்னைக்கு ஒரு நாள் என் கூட வந்து சாப்பிடலாம் இல்லையா.. இவ்வளவு கூப்பிடுறனே..!!"

"ஏன் இப்படி முறைக்கிறீங்க.. திட்ட போறீங்களா..?"

ஆழ்ந்த மூச்செடுத்து விழிகளை மூடி திறந்தாள் கமலி..

"சரி உங்களுக்கு பிடிக்கலை போலிருக்கு..!!"

"நான் இங்கிருந்து போறதுக்குள்ள உங்க கிட்ட ஒரு நல்ல நட்புறவை வளர்த்துக்கணும்னு பார்க்கிறேன்.. உங்க பார்வையை பார்த்தா நிச்சயம் அதற்கு வழியில்லைன்னு நினைக்கிறேன்.."

"ம்ஹும்.." எதற்கும் பலனில்லாமல் போகவே..

"நான் போயிட்டு வரேன்.." என்று அவனை கடந்து செல்ல முற்பட்டாள்.. ஒரு பக்கம் சோபா இன்னொரு பக்கம் சுவற்றோடு நின்றிருந்த அவனுக்கும் இடையில் குறுகிய இடைவெளி மட்டுமே இருக்க.. அவ்வழியே சென்றவள் தெரியாமல் அவன் தோளோடு இடித்து விட.. ஆஜானுபாகுவான ஆண் அவள் கனம் தாங்காதவன் போல் தடுமாறி.. சுவற்றோடு மோதி நின்றான்..

அவள் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டாள்..

சாய்ந்த தோரணையில் ஒரு காலை மட்டும் மடக்கி சுவற்றில் பதித்து.. தலையை மட்டும் அவள் கொலுசொலி செல்லும் திசையில் திருப்பியவாறு விழிகள் மூடி நின்றிருந்தான்..

சமைத்து வைத்த உணவை மேஜையின் பரப்பி வைத்துவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள் வாசலை பார்த்தாள்..

வருவாரா..? ஒரு கணம் எதிர்பார்ப்பும் யோசனையுமாக அமர்ந்திருந்தாள்..

"அவர்தான் வரமாட்டேன்னு பார்வையாலேயே சொல்லிட்டாரே கமலி..‌ இன்னும் எதுக்காக காத்திருக்க..? பசி உயிர் போகுது.. போட்டு சாப்பிடு.." மனமும் வயிறும் அவசரப்படுத்த.. தட்டில் உணவை பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்..

"இருந்தாலும் இந்த டாக்டருக்கு இவ்வளவு அழுத்தம் கூடாது.. ஹாஸ்பிடல்ல வேலை பாக்கற நர்ஸோட ஃப்ரெண்ட்லியா இருந்தா இவர் கிரீடம் இறங்கிடுமா என்ன? அப்பப்பா எவ்வளவு ஈகோ.. இனிமே இந்த டாக்டர் கிட்ட நான் பேசவே மாட்டேன்..!!" கோபத்தில் உணவோடு சேர்த்து அவனையும் மென்று தின்றாள்..

அவள் உண்டு முடிக்கும்வரை டாக்டர் வரவில்லை..

செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டு.. கமலினி மாடியில் கண்கள் மூடி உறங்க முயன்றாள்.. உணவு உண்ண அழைப்பு விடுத்த தன் கோரிக்கையை நிராகரித்து தன்னை அவமானப்படுத்திய மருத்துவரை மறக்க முயன்றாள்.. அதில் வெற்றி கண்டு உறங்கியும் போயிருந்தாள்..

இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்

தெய்வீகமே உறவு..

இரவின் நிசப்தத்தில் மெல்லிய சத்தமாக.. மாடியிலிருந்து கீழ் நோக்கி விழுந்து அவன் காதுகளுக்குள் கசிந்தது இந்த பாடல்..

விளக்கை அணைத்து இருளோடு அமர்ந்திருந்தான் சூர்யதேவ்.. விடிய விடிய உறங்கவில்லை..

தொடரும்
Super super super super super super👌👌👌👌👌👌❤
 
Member
Joined
Oct 26, 2024
Messages
31
காதல் வந்தா பசி தூக்கம் எல்லாம் போய்டும்னு சொல்லுவாங்க என்ன டாக்டரே சரி தானே 🤭🤭🤭
சூர்யா கமலி மூலமா உன் வீட்டுக்கு உள்ளேயும் வெளியே மட்டும் இல்ல உன்னோட மனசுக்குள்ள யும் காதல் என்ற ஒரு ஒளி ஏத்தி வைக்க பட்டு இருக்கு அதை சீக்கிரம் நீ புரிஞ்சுக்க வேனும் 🥰🥰🥰❤️
சூர்யாக்கு புரியும் முன்ன கமலிக்கு தெரியணும், நட்புன்னு சொல்றாங்க, அப்பறம் எப்படி, இப்போ போய் சூர்யா சொன்னால் கூட கமலி மனநிலை எப்படி இருக்குமோ?..
 
New member
Joined
Sep 19, 2023
Messages
15
இவன் போற ரூட்டும் சரி இல்லையே?
சும்மாவே ஆடுவான், இப்போ காதோல் வேற வந்துடும் போல.......
இந்த கிறுக்கனை கண்ணு கொண்டு பார்க்க முடியாதே??
 
Joined
Mar 14, 2023
Messages
30

Nice update
 
Member
Joined
Jan 21, 2024
Messages
50
எப்படி பட் ட சூர்யாவையை மாத்திட்டாளே துளசி.
 
Joined
Jul 31, 2024
Messages
42

ஏம்மா கமலி நீ கார்த்திகை தீபம் னு வெளக்கு ஏத்தி ஆனா அத மருத்துவனுக்கு சிவராத்திரி யா மாத்திட்டியே தாயி 😝😝😝😝😝😝😝😝😝 சூர்யாகுள்ள காதல் வந்து பண்ற சூட்சும கோளாறுகள் சொல்லில்லடங்காது டோய் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣திருட்டு மல்லி மொரட்டு மருத்துவன் எப்புடி 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Top