- Joined
- Jan 10, 2023
- Messages
- 125
- Thread Author
- #1
மாடிப்படி சுவற்றில் நின்று காக்கைகளும் குருவிகளும் விடிந்து விட்டதை தனது குரலின் மூலம் அலாரம் அடித்து அறிவித்துக் கொண்டிருக்க.. விழிக்கும் போதே புன்னகையோடு கண் திறந்தான் தர்மன்..
கனவுகளில் கடவுளைக் கண்டு உறக்கத்தில் புன்னகைக்கும் குழந்தைகளை போல்.. பாரங்கள் நீங்கி இதமான மனநிலையோடு இரவில் உறங்கியிருந்தவனின் காலைப்பொழுதும் அழகாக புலர்ந்திருந்தது..
சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தான்.. குளித்து முடித்து தலையில் துண்டை சுற்றியபடி நைட்டியோடு அவனைத் தாண்டி வேகமாக உள்ளே சென்றாள் சுப்ரியா..
ஈர உடையோடு குளியலறையிலிருந்து வெளியே வருபவளுக்கு எந்த சங்கடமும் வந்து விடக்கூடாது என வழக்கம்போல அவள் தன்னை கடக்கும் வரை தலை குனிந்து அமர்ந்திருந்தவனுக்கு சோப்பு வாசனை நாசியில் கமகமத்தது..
லைஃப் பாய் சோப்பை தவிர வேறு எதையும் அறிந்ததில்லை..
இப்போது சந்தன மணம் புதிதாய் வீட்டில் குடியேறி இருக்கிறது..
அன்றொரு நாள் அவள் குளித்துவிட்டு படுத்திருந்தவனை கடந்து செல்லும் போது விழிகள் மூடியிருந்த நிலையிலும் "வாசனை நல்லா இருக்கே.. ம்ம்ம்.." என தனக்குள் சிரித்துக் கொண்டான்..
ஒருவேளை அதிகாலையில் எழுந்து கொண்டாலும் சுப்ரியா குளித்துவிட்டு வீட்டுக்குள் சென்ற அடுத்த அரை மணி நேரம் வரையிலும் அவன் உள்ளே செல்வதில்லை..
அதேபோல் இன்றும் இருபது நிமிடங்களாய் கன்னத்தில் கை வைத்து இரை தேடி சத்தம் போடும் காக்கைகளையும்.. குட் மார்னிங் சொல்லும் அணில்களையும்.. எங்கோ குரல் எழுப்பி கானம்ஸபாடும் குயிலையும் வேலை வெட்டியில்லாமல் ரசித்துக் கொண்டிருந்தவன் அந்த குறிப்பிட்ட நேரம் கடந்ததும் போர்வையை மடித்து தலையணையை பாயில் வைத்து சுற்றிக்கொண்டு தைலத்தை மறு கையில் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான்..
கண்ணாடியை பார்த்து பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள் சுப்ரியா..
"குட் மார்னிங்.." ஸ்விட்ச் போட்டதை போல் பளீரென புன்னகைத்து அவள் முன்பு நின்றான்..
வழக்கத்திற்கு மாறான அவன் உற்சாக குரலில் கண்கள் விரித்து ஆச்சரியமாக பார்த்தாள் சுப்ரியா..
"குட் மார்னிங்..!"
"என்ன..? இன்னைக்கு கொஞ்சம் லேட்டா எழுந்தாப்ல தெரியுது.." தலையிலிருந்த பூத்துண்டை அவிழ்த்து கூந்தலை மென்மையாக துவட்டிக் கொண்டிருந்தாள்..
மாசு மருவற்ற வெண்ணிற பளிங்கு சருமம்.. குளித்துவிட்டு வந்ததில் கூடுதல் நிறத்தோடு சந்தனமாய் ஜொலிக்கும் முகம்.. பார்த்துக் கொண்டே இருக்க சொல்லியது.
தன்னை மறந்து அவள் வட்ட முகத்தையும்.. தாய்மையின் பூரிப்பில் பளபளப்பாய் உப்பியிருந்த கதுப்பு கன்னங்களையும்.. கேரளத்து பெண்கள் போல் அடர்த்தியாய் வளைந்திருந்த புருவங்களையும்.. எடுப்பான மூக்கையும் நெற்றி பொட்டையும் இதழ்களையும் என ஒவ்வொன்றையும் தனித்தனியாய் அவன் கண்கள் ரசித்துக் கொண்டிருந்தன..
"ஆமா ராத்திரி நல்ல தூக்கம்..! நேத்து கொஞ்சம் மனசு சரியில்ல.. வேலை பார்க்கும் போது நிறைய குளறுபடி பண்ணிட்டேன்.. அதான் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு பத்து மணிக்கு ஷிப்ட்க்கு வந்தா போதும்னு சொல்லிட்டாங்க.. என்றவனின் பார்வை நெற்றியிலிருந்து கன்னம் தொட்ட கற்றை கூந்தலில் வைரமாய் உருண்டோடிய நீர்த் துளியின் மீது நிலைத்து நின்றது..
ஒற்றை புல்லில் மணிமகுடமாய் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் பனித்துளி காற்றின் அசைவில் உருண்டோடுவதைப் போல் அந்த நீர் துளி செல்லும் இடமெல்லாம் அவன் கண்கள் சுவாரசியமாய் அலை பாய்ந்தது..
கன்னத்திலிருந்து கீழே இறங்கி கழுத்தை தொட்டு.. மேனியில் வழுக்கிக் கொண்டு இறக்கிய நீர்த் துளி சென்றடைந்து முக்தி பெற்ற இடத்தை கண்டதும் சட்டென சுதாரித்து எச்சில் விழுங்கினான் தர்மன்..
"தப்பு தப்பு.. இப்படி பார்த்திருக்கக் கூடாது..! ஐயோ வேணும்னு பாக்கல.. தெரியாம ஏதோ விளையாட்டா.." அவனுக்குள் அத்தனை பதட்டம்..
"விளையாட்டா அங்க பாப்பியா நீ.. ராஸ்கல் தொலைச்சிடுவேன்.."
அவனுக்குள் நூறு முறை கடிந்து கொண்டு.. சுப்ரியாவிடம் மானசீகமாக ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டான்..
"காபி கலக்கட்டுமா..?"
"வேண்டாங்க நான் குளிக்கணும்..!" முதுகு காட்டி நின்று கொண்டான்..
"என்ன மறுபடி மரியாதை தல தூக்குது.." சுப்ரியா ஒன்றும் புரியாமல் விழித்தாள்..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க.." தலையை சொரிந்தபடி தடுமாற்றத்தோடு அங்கிருந்த நகர்ந்தான்..
"அழகா சுப்புன்னு கூப்டுட்டு இருந்தீங்க.. இப்ப திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு..! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நடந்துக்கறீங்க.. தர்மன் நில்லுங்க..!"
அவசரமாக கைக்கு கிடைத்த உடைகளை எடுத்துக்கொண்டு அவன் வாசற்படியை தாண்ட..
"யோவ்..!" எனக் கத்திக்கொண்டு அவன் முன்னால் வந்து நின்றாள் சுப்ரியா..
அப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை தர்மன்..
"என்னப்பா ஆச்சு..! மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சா..? திடீர்னு அன்பா பேசுறீங்க.. திடீர்னு கோவமா கத்தறீங்க.. இப்படி பண்ணாதீங்க.. மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா..!" உதட்டைப் பிதுக்கி கொஞ்சலாக அவள் பேசிய தோரணையில் மனம் உண்மையிலேயே உருகி போயிற்று..
"ஐயோ.. உன் மேல எனக்கென்ன கோபம் சுப்பு..! திடீர்னு நான் பாட்டுக்கு உள்ள வந்துட்டேன்.. நீ எப்படி பீல் பண்ணுவியோ தெரியல.. அதான் ஒரு மாதிரி சங்கடமா போச்சு.." தரையிலும் சுற்றுவட்டாரத்திலும் மேய்ந்ததேயன்றி அவளை நேரடியாக காண தயங்கியது தர்மனின் விழிகள்..
"உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. கதவைத் திறந்து வச்சிருக்கேன்னா நீங்க தாராளமா உள்ள வரலாம்னு அர்த்தம்.. புரிஞ்சுதா தர்மன் சார்.." அவள் தலையோடு சேர்ந்து அந்த கற்றை முடியும் அழகாய் அசைந்தாடியது..
"புரிஞ்சது" என்றான் அவன்..
"சரி பிரஷ் பண்ணிட்டு வாங்க.. சூடா காஃபி குடிக்கலாம்..!"
"வேண்டாம் சுப்பு.. குளிச்சிட்டு வரேன்.. ஏதாவது சமைச்சு வை..!"
"சமைக்கிறதுக்கு வீட்ல ஒன்னும் இல்ல.. மளிகை சாமான் காய்கறி எல்லாம் தீந்து போச்சு.."
"முழுசா காலியாகற வரை ஒன்னுமே சொல்ல மாட்டியா..! நேத்தே சொல்லி இருந்தா எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து போட்டுருப்பேன்ல.."
"நேத்துதான் சார் என்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல தள்ளுற பிளான்ல இருந்தீங்களே.. அப்ப இருந்த மனநிலையில இதெல்லாம் ஞாபகத்திலேயே இல்லை.. இப்ப எல்லாத்தையும் போய் வாங்கிட்டு வந்து சமைக்கறதுக்குள்ள நேரமாகிடும்.. அதுக்குத்தான் என்னதான் சொல்றேன்.. போய் பிரஷ் பண்ணிட்டு வந்தீங்கன்னா காபி கலந்து தரேன்.. அப்புறம் என்னென்ன தேவைன்னு லிஸ்ட் போட்டு எழுதி வாங்கிக்கலாம்.."
"இப்பவே எழுதிக் கொடு.. உடனே போய் வாங்கிட்டு வரேன்" என்றான் பிடிவாதமாக..
"வெறும் வயித்தோட எவ்வளவு நேரம் இருப்பீங்க.. ஏன் உங்களுக்கு காபி பிடிக்காதா வேணும்னா டீ போட்டு தரட்டுமா..?"
"காபி பிடிக்காதா..? ஹாஸ்பிடல் கேண்டின்ல ஒரு நாளைக்கு பத்து முறை காபி குடிப்பேன்.. மத்தவங்க வெளிய போய் தம் அடிப்பானுங்க.. எனக்கு அந்த பழக்கமெல்லாம் இல்லை.. நமக்கு காபி டீ தான் போதை.."
"அப்புறம் என்னங்க..?"
பிடரியை வருடியபடி
"எனக்கு ஏதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு போச்சுன்னா மொத்தமா அதுக்கு அடிமையாகிடுவேன்.. ஏற்கனவே உன் சமையலுக்கு அடிமையாகிட்டேன்.. இப்ப சுத்தமா வெளியில சாப்பிடறதில்ல.. இதுல காபி வேற வீட்ல போட்டு கொடுத்து பழகிட்டா அப்புறம் நேரங் கெட்ட நேரத்தில் உன்னை காபி போட்டு குடுன்னு தொந்தரவு பண்ணுவேன்.. நீ வேற புள்ளத்தாச்சி பொண்ணு.. உன்னை அடிக்கடி கஷ்டப்படுத்த கூடாதில்ல.. அதுக்காக தான் சொல்றேன்.." என்று சங்கடத்தோடு அவளை பார்க்க..
"அடேங்கப்பா ஒரு காபிக்கு இந்த அக்க போறா.." இடுப்பில் கைவைத்து அவனை அயர்வாக பார்த்தாள் சுப்ரியா..
"காபி டீ போடறது ஒன்னும் மலையை கட்டி இழுக்கற மாதிரி அவ்ளோ பெரிய வேலை இல்லைங்க.. அஞ்சே நிமிஷம்.. உங்களுக்கு எப்ப காபி குடிக்கணும்னு தோணுதோ சொல்லுங்க நான் போட்டு தரேன்.. அதுக்காக ஏன் இவ்வளவு யோசிக்கறீங்க..!" தலையை உலுக்கிக் கொண்டு அவள் உள்ளே செல்ல போக..
"நான் உனக்காகதான் யோசிக்கறேன் சுப்பு.." தர்மனின் வார்த்தைகள் இடை நிறுத்தியதில் திரும்பி நின்று அவனை ஆழமாய் ஊடுருவி பார்த்தாள் சுப்ரியா..
தடுமாறி தத்தளிக்கும் மனதை தட்டி எழுப்பி சுதாரித்துக் கொண்டவள்..
"சரி ஒருவேளை என்னால காபி போட முடியலன்னா எப்படி போடறதுன்னு உங்களுக்கு என்று சொல்லி தரேன்.. நீங்களே போட்டுக்கோங்க ஓகே தானே..?" என்றாள் புன்னகைத்து..
"நானே காபி போட்டு குடிக்கறதுக்கு அதோ அந்த மாட்டுக்கு வைக்கிற கழனி தண்ணிய அள்ளி குடிச்சிட்டு போயிடுவேன்.." அவன் பாவமாய் சொல்ல.. குபீரென சிரித்து விட்டாள் சுப்ரியா..
அதிலும் அந்த கீழ் வீட்டு பசு மாடு கழநீர் தொட்டியிலிருந்து நாக்கால் அள்ளி நீரை பருகும் தோரணையை பார்த்து இன்னும் சிரிப்பு..
"போங்க சார்.. பேசிக்கிட்டே இருக்காதீங்க.. நான் போய் காபி கலக்கறேன்.." சிரித்துக் கொண்டே அவள் உள்ளே சென்றுவிட..
"இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நின்னு சிரிச்சிருக்க கூடாது..? அதுக்குள்ள என்ன அவசரம்.!" முனங்களோடு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபடி தலையை கோதிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் தர்மன்..
மாடிப்படியின் சுவற்றின் எதிரெதிர் பக்கங்களில் சாய்ந்து நின்றபடி காபி குடித்துக் கொண்டிருந்தனர் சுப்ரியாவும் தர்மனும்..
"நேத்தே உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன்.. பசியோட சாப்பிட்டீங்க அப்புறம் அலுப்போட வந்து தூங்கிட்டிங்க அதனால கேட்க வந்த விஷயத்தை மறந்துட்டேன்.." என்று ஆரம்பித்தாள் சுப்ரியா..
"ஆமா சுப்பு நேத்து காலையில இருந்து கிட்டத்தட்ட பைத்தியம் புடிச்ச நிலையில இருந்தேன்.. நீ போக மாட்டேன்னு சொன்ன பிறகுதான் மனசே நிம்மதியாச்சு.." என்று இழுத்து மூச்சு விட விழிகளை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தாள் அவள்..
என் அருகாமை உங்களுக்கு நிம்மதியை தருகிறதா தர்மன்..? என்ற கேள்வி அந்த விழிகளில்.. நெஞ்சுக்குள் புத்தம் புதிதாய் பூ பூத்த உணர்வு..
"உண்மையிலேயே அப்புறம் தான் பசி கண்ணுக்கு தெரிஞ்சது.. சாப்பிட்ட உடனே அப்படி ஒரு தூக்கம் வந்துச்சு.. சரி என்ன கேட்கணும் உனக்கு..?" என்று விட்டு காபியை ஒரு மிடறு விழுங்கினான்..
"இல்ல என்னை இங்கிருந்து சீக்கிரமா பேக் பண்ணி அனுப்பிடுவேன்னு உங்க கேர்ள் பிரண்டு கிட்ட சொல்லி இருந்தீங்களே.. இப்ப நான் இங்கேயே தங்க போறது தெரிஞ்சா அவங்க உங்கள திட்ட மாட்டாங்களா.. என்னால உங்க ரெண்டு பேருக்குள்ள எதுக்கு பிரச்சனை..?" என்று விட்டு ஆர்வமாக அவன் முகத்தை பார்த்தாள்..
தர்மன் இதமாய் சிரித்தான்..
"உனக்கு என் செல்லத்தை பார்க்கணுமா..!"
சுப்ரியாவிற்குள் மொட்டு விட்ட பூக்கள் மீண்டும் சுருங்கி இனம் புரியாத ஏமாற்றத்தை தந்தது..
பதில் சொல்லாமல் காபியை குடித்தபடி அமைதியாக இருந்தாள்..
"என் செல்லம் இந்த விஷயத்துல தலையிட மாட்டா.. நான் என்ன சொன்னாலும் கேட்டுக்குவா.. ஒரு நாள் அவள பார்க்கும்போது நீயே புரிஞ்சுக்குவ..!" தர்மன் சொல்லச் சொல்ல சுப்ரியாவின் கண்கள் ஒளியிழந்து மங்கிப் போனது..
லிஸ்ட் போட்டு எழுதி கொடுத்ததை தர்மன் வாங்கி வந்தான்..
வழக்கம்போல் அவன் புலம்பல் ஓயவில்லை..
"நம்மள மாதிரி மிடில் கிளாஸ் ஆளுங்க காய்கறி பக்கம் போகவே முடியாது போலிருக்கே.. எல்லாம் யானை விலை குதிரை விலை விக்குது.. கேரட் விக்கிறானா.. இல்ல தங்கம் விக்கிறானா..?
"இது பேர் என்ன வெள்ளரிக்காயா..?"
"இல்ல புடலங்காய் அதை இப்படி வைங்க.." அவன் கையிலிருந்து புடலங்காயை பறித்து ஓரமாக வைத்தாள்.
முட்டைகோஸ் எழுதி தந்தியே..? கோஸ் மட்டும் தான் இருக்கு முட்டைய காணோம்.. ஏமாத்திட்டான்னு நினைக்கறேன்.. போய் என்னன்னு கேட்டுட்டு வரவா..
இது பேரே முட்டைகோஸ்தாங்க..! இது தக்காளி வெங்காயம்.. அது பீட்ரூட்.. இது பேர்..
போதும் லிஸ்ட் பார்த்து செக் பண்ணி வாங்கிட்டு வந்தது நான்தான்.. ஏதோ ஒன்னு ரெண்டு காய்கறி பேரு மறந்து போச்சு.. அதுக்காக ஓவரா கிண்டல் பண்ண கூடாது..
பாரு போனவாட்டி ஆயிரம் இந்த வாட்டி இரண்டாயிரம் பில் போட்டு தந்துருக்கான்.. எனக்கென்னமோ அவன் என்னை ஏமாத்தறான்னு தோணுது.. அடுத்தவாட்டி வேற கடையில வாங்கி பார்க்கனும்..
முன்பொரு முறை இப்படி அவன் புலம்பும்போது மனதில் ஏற்பட்ட உறுத்தல்கள் இப்போது இல்லை..
அமைதியாக சிரித்துக் கொண்டே அவன் சொன்னதை கேட்டபடி காய்கறிகளை பிரித்து வைத்து கொண்டிருந்தாள்..
கடை மாவில் முறுகலாய் தோசை வார்த்து தேசியக்கொடி போல் மூன்று வண்ணங்களில் வெங்காய சட்னி தேங்காய் சட்னி புதினா சட்னி என அட்டகாசமாய் அலங்கரித்து காலை சிற்றுண்டி பரிமாறினாள்..
சமையலறையில் நின்று அவள் சுடச்சுட தோசை சுட்டு போட தட்டு காலியாவதும் தோசை உள்ளே போவதும் தெரியாமல் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தான் தர்மன்..
"இந்த கடை மாவுல நீ தோசை சுட்டா மட்டும் எப்படி வட்டமா வருது.. ஒரே ஒரு நாள் ட்ரை பண்ணி பார்த்தேன்.. கடாயோட தோசை ஒட்டிக்கிட்டு அப்புறம் கத்தியிலதான் சுரண்டி எடுத்து தின்னேன்.." சிரிக்காமல் சொன்னான்..
"இது கடாய் இல்லை.. தோசை கல்லு.." சுப்ரியா சிரித்தாள்..
"ஏதோ ஒன்னு..! வெங்காயமே போடல.. ஆனா தோசையில வறுத்த வெங்காய வாசனை வருது.."
"தோசை நல்லா வரணும்னு கல்லுல வெங்காயம் தேய்க்கறோம்ல.. அந்த வாசனையா இருக்கும்.."
"எதுக்காக தொட்டுக்க இத்தனை பண்ணி வச்சிருக்க..! கஷ்டப் படுத்திக்காத சுப்பு.."
"புதினா கட்டு ரொம்ப நாளா ஃப்ரிட்ஜில இருந்துச்சு அப்படியே விட்டா வாடிப் போயிடும்.. கொஞ்சமா எனக்கு துவையல் எடுத்து வச்சுட்டு மீதியை தாளிச்சு சட்னி பண்ணிட்டேன்.. தேங்காயும் அப்படித்தான்.. ஏதோ ஒரு நினைப்புல கவனிக்காம விட்டுட்டேன்.. பிரிட்ஜ்ல அரை மூடி தேங்காய் அப்படியே இருந்தது. விட்டா காஞ்சி போய் கொப்பரை தேங்காயா போய்டும்.. இருந்த அரை மூடி தேங்காயில சட்னி அரைச்சாச்சு."
"அப்ப இந்த வெங்காய சட்னி..?"
"கொஞ்சம் தக்காளி சேர்த்து எனக்காக புளிப்பா அரைச்சுக்கிட்டேன்.. தப்பா..? பொருளை வீணாக்கறேன்னு தோணுதா..!" குரல் உள்ளிறங்க அவனை பரிதாபமாய் பார்த்தாள் சுப்ரியா..
"இந்த மாதிரி கேக்கறதை நிறுத்து சுப்பு.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன் உனக்கு என்ன தோணுதோ செய்.. பிடிச்சதை சமைச்சு சாப்பிடுன்னு..! அதுக்கு மேல திரும்பத் திரும்ப என்னை ரொம்ப சங்கடப் படுத்தற.. ஆனா ஒரு விஷயம்.. தயவு செஞ்சு என்னை மட்டும் சமைக்க சொல்லிடாத..! அப்புறம் வாழ்க்கையே வெறுத்து வீட்டை விட்டு ஓடிப் போயிடுவ..!" என்று சிரித்தான்..
பெரிய ஏப்பத்தோடு குழாயை திறந்து கைகழுவி கொண்டவன்.. "இப்படி வயிறு முட்ட சாப்பிட்டா தூங்கத்தான் தோணும் நான் போய் எப்படி ஹாஸ்பிடல்ல வேலை செய்யறது.." என்றபடி அவளை பார்க்க..
"காலையிலிருந்து ராத்திரி வரை நின்னுக்கிட்டே இருக்கீங்க.. உடம்புல தெம்பு வேண்டாமா..! இப்ப சாப்பிட்டதெல்லாம் 10:00 மணிக்குள்ள ஜீரணிச்சுடும்.. மறுபடி 12 மணிக்கு பசிக்க ஆரம்பிச்சுரும்.." என்றாள் அக்கறை பூசிய குரலில்..
"பத்து தோசை தின்னுருக்கேன்.."
"அட.. உங்கள நீங்களே கண்ணு வைக்காதீங்க.. எல்லாம் பேப்பர் மாதிரி மெல்லிசா சுட்டு போட்டேன்.. மொத்தமா பாத்தா மூணு நாலு தோசைக்கு காணது.."
தர்மன் கண்கள் நிறைந்து அவளைப் பார்த்தான்..
"தேங்க்ஸ் சுப்பு..! புதுசா வீட்டுக்கே ஒரு களை வந்த மாதிரி இருக்கு.. இந்த ஏரியால எல்லார் வீட்லயும் தீபாவளி பொங்கல் ஏதாவது பண்டிகைனா வீடே ஒரு புது பொலிவோட தெரியும்.. இப்ப என் வீடும் அப்படித்தான் இருக்குது.. உயிரோட்டமா ஒரு பொண்ணோட நடமாட்டம்.. உன் பேச்சு வளையல் சத்தம் உன் வாசனை.. மனசுக்குள்ள அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. முன்னாடி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே தோணாது.. ஆனா இப்போ எப்படா வீட்டுக்கு வருவோம்னு மனசு பரபரக்குது.. நான் சரியா பேசுறேனா தெரியல ஒருவேளை தப்பா இருந்தாலும் சரியான அர்த்தத்தில் எடுத்துக்கோயேன்..!"
அவன் இதழ் கடித்து படபடப்போடு அவளை பார்க்க.. கண்கலங்கி நெகிழ்ந்து போயிருந்தாள் சுப்ரியா..
தொடரும்..

Last edited: