- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
மூத்த மகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக வெற்றிவேந்தன் பிறந்த போது அவன் தந்தை தாமோதரன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.. "அச்சில வார்த்த மாதிரி அவன் தாய் மாமனை உரிச்சு வைச்சிருக்கானே" என்று அவர் சேக்காளி ஒருவர் சொன்னபோது ஆரம்பித்தது சனி..
"ஆமா இவன் தோற்றத்துல அப்படியே காமாட்சியோட அண்ணன் விருதகிரியை உரிச்சி வச்சிருக்கானே.. முகவெட்டு கூட பரவாயில்ல ஆனா குணமும் அவன மாதிரியே போயிட்டா நான் என்ன செய்வேன்.." தாமோதரனின் நெஞ்சுக்குள் தேவையில்லாத கலக்கம் பரவியது..
காமாட்சியின் அண்ணன் விருதகிரி.. குடிப்பழக்கம் பெண்கள் சகவாசம்.. திருட்டுப் பழக்கம்.. என அத்தனை தீய குணங்களும் கொண்ட ஒரு அயோக்கியன்.. ஊரில் ஏதேனும் கலவரம் நடந்தால்.. பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை நிகழ்ந்தால் காவல்துறை முதலில் சந்தேகிப்பதும்.. வலை போட்டு பிடித்து இழுத்துச் செல்வதும் அவனைத்தான்.. ஊரில் நடக்கும் முக்கால்வாசி குற்றங்களுக்கு காரணகர்த்தா அவனாக தான் இருப்பான்.. ரவுடி முரட்டுத்தனமானவன் மூர்க்கன்.. காமாட்சிக்கு திருமணம் நடந்திருந்த சில மாதங்களில் பகை காரணமாக ஒருவனை வெட்டி கொன்றுவிட்டு ஆயுள் தண்டனை கைதியாக ஜெயிலில் இருக்கிறான்..
அவன் செய்த அத்தனை அட்டூழியங்களையும் தாமோதரனின் அப்பா கிரிதரன் அறிவார்.. கிரிதரும்.. காமாட்சியின் தந்தை முருகவேல் மாணிக்கமும் நெருங்கிய நண்பர்கள்.. சிறுவயதிலிருந்தே சிவகாமி விருதகிரியை அவருக்கு தெரியும்.. அதேபோல் தாமோதரனும் விருதகிரியை சின்னஞ்சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன்.. நண்பனுக்கு கொடுத்த வாக்கின்படி காமாட்சியை தாமோதரனுக்கு திருமணம் செய்து வைத்தார் கிரிதரன்..
ஆனால் நண்பனுக்கு அவர் கொடுத்த மற்றொரு வாக்கு விருதகிரியை திருத்தி காட்டுகிறேன் என்பது.. இறுதி வரை அதை நிறைவேற்ற இயலாமலேயே இறந்து போனார்..
கிரிதரனை பற்றி தாமோதரனுக்கு எந்தவித கவலையும் இல்லை.. அவன் ஜெயிலுக்கு போய் தொலைந்ததில் தங்கை முதற்கொண்டு அனைவருக்குமே நிம்மதி தான்.. அப்படி ஒரு அயோக்கியன் ஊரில் ஒரு காலத்தில் இருந்தான் என்பதே மறந்து போயிருந்த நிலையில் விருதகிரியை உரித்து வைத்திருக்கிறான் உன் மகன் என்று சொன்ன வார்த்தை தாமோதரனின் அடிநெஞ்சில் ஆழமாக பதிந்து போனது..
எந்த நிலையிலும் தன் மகன் விருதகிரியை போல் கெட்டு சீரழிந்து போய் விடக்கூடாது என்பதில் தீவிரம் காட்டியவர் சிறு வயதலிருந்தே அவனை கண்டித்து வளர்ப்பதில் தீவிர முனைப்பு காட்டினார்.. வித்யாதரனின் குழந்தைகளும் தாமோதரனின் மூத்த மகளும் செல்லமாக வளர்க்கப்பட்ட வீட்டில் நிலையில் மகனுக்கு இராணுவ சட்ட திட்டங்கள்தான்..
விருதகிரி என்னென்ன விரும்பி உண்ணுவானோ அதே உணவு வகைகள் தான் வெற்றிவேலின் பிரதான விருப்ப பட்டியலில் இடம் பிடித்திருந்தது.. சிறு வயதில் கிரிக்கெட் விளையாட விருதகிரி பேயாக பறப்பான்..இவனும் அப்படித்தான்.. இருவருக்குமே இளங்காலை சூரியனைப் போல் லேசாக சிவப்பேறிய கருவிழிகள்.. ஆனால் விருதகிரியின் பார்வை திருட்டு முழி.. வீசியெறியும் அனலாக இவன் விழிகளிலிருந்து வெளிப்படுவது தீட்சண்ய பார்வை என்பதை உணர தவறிப் போனார் தாமோதரன்..
வெற்றியின் சிறு வயது கள்ளத்தனங்களை கூட விகல்பமாக எடுத்துக் கொண்டு தீவிரவாதியை திருத்துவதை போல் கண்டிப்பை தாண்டி தண்டனைகளை கையில் எடுத்துக் கொண்டிருந்தார் தாமோதரன்..
"பரிட்சை பேப்பர்ல நீயே கையெழுத்து போட்டுக்குவியா.. பொய் சொல்லிட்டு விளையாட போவியா..!! மார்க் எப்படி இவ்வளவு குறைந்தது.. டீச்சர் ஏன் உன்னை பத்தி இவ்வளவு புகார் சொல்றாங்க.. நேத்து பள்ளிக்கூடத்தில் கெட்ட வார்த்தை பேசினியாமே.. பள்ளிக்கூடத்தில் சக மாணவனை அடிச்சிட்டியா..!!" என இயல்பாக வயது பிராயத்தில் செய்யக்கூடிய தவறுகளுக்கு.. கொதிக்கும் வெயிலில் நிற்க வைப்பது.. இருட்டு அறையில் தள்ளி கதற வைப்பது.. பெல்ட்டால் விலாசுவது.. பட்டினி போடுவது என கடுமையான தண்டனைகளாக கொடுத்து அவர் அறியாமலேயே வெற்றியை மூர்க்கமாக மாற்றிக் கொண்டிருந்தார்.. மனோபயத்தின் காரணமாக வெற்றி விருதகிரியாக தெரிந்தான் அவர் கண்களுக்கு..
விருதகிரியை போல் வெற்றிவேந்தன் தவறானவன் அல்லவே.. முரடன் ஆனால் அவன் செய்யும் அத்தனை காரியங்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும்.. ஆனால் விதி அவன் செயலை நியாயத்திற்கு எதிராக திருப்பி விடுவதுதான் பரிதாபத்திற்குரியது..
இன்று கூட திருவிழாவில் இரண்டு இளைஞர்களை அடித்தது.. வண்டியில் வந்திறங்கிய கரகாட்ட குழுவின் பெண்களில் ஒருத்தியை அசலூரிலிருந்து வந்த ரவுடி ஒருவன் கைப்பற்றி இழுத்து அசிங்கமாக பேச.. அந்தப் பெண் எதிர்த்து பேசியதில்.. அந்த ரவுடி தன் கூட்டாளிகளோடு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதை வெற்றிவேல் அவன் பாணியில் தட்டி கேட்டதால் வந்த பஞ்சாயத்து..
இதே போல் முன்னொரு சம்பவம்.. அவர்கள் ஊர் பள்ளிக்கூட மாணவியிடம் வாத்தியார் தவறாக நடந்து கொண்டு அவரை வெற்றி அடித்து நொறுக்கி.. அந்த வாத்தியார் பிளேட்டையே திருப்பி போட்டு வாக்குமூலம் கொடுத்ததும்.. அந்த மாணவி வீட்டுக்கு பயந்து பொய் சொல்லி பின்வாங்கியதும் வெற்றிவேல் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல காரணமாகிப் போனது.. இரண்டு நாட்களில் லாக்கப்பில் இருந்தவன் அந்தப் பெண்ணே வந்து உண்மை வாக்குமூலம் கொடுத்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டான்..
"ஹான்.. அந்தப் பெண்ணை மிரட்டி பேச வச்சிருப்பான்.. இல்லைன்னா இவனுக்கு பயந்து அந்த பொண்ணே வந்து பொய் வாக்குமூலம் கொடுத்திருக்கும்.." தாமோதரன் கடைசி வரை நம்பவில்லை..
"மத்த அம்மாக்கள் மாதிரி பையனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிற வேலை வச்சுக்கிட்ட அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.." தாமோதரன் தன் மனைவி காமாட்சியை மகனிடமிருந்து தள்ளி நிறுத்தி விட.. மாட்டை அடிப்பது போல் அடிக்கும் தந்தையிடமிருந்து தன்னைக் காப்பாற்றாத தாய் மீதும் பெரும் கோபம் அவனுக்கு..
மனைவி மகனை எண்ணி கண்ணீர் விட்டு கதறும் போதெல்லாம்.. "எல்லாம் படிச்சு முடிச்சு வேற வேலைக்கு போய் அவன் சொந்தக் கால்ல நிக்கிற வரைக்கும்தான்.. அப்புறம் அவன் விஷயத்தில் யார் தலையிட போறா..!! எல்லாம் அவன் நன்மைக்காக தான் செய்யறேன்.. வெசனப் படாத!!" என்று மனைவியை தேற்றுவார் தாமோதரன்..
ஆனால் அடிக்க அடிக்க இரும்பாக வலுப்பெற்று ஒரு கட்டத்தில் அவர் கைமீறி சென்று விட்டான் வெற்றிவேந்தன்..
அப்பா சொன்னதை நம்பிக்கொண்டு கண்டமேனிக்கு அறிவுரை சொல்லும் சித்தப்பா மீதும் கோபம்.. "அவனைப் பார்த்தாவது திருந்து.. உனக்கு பின்னாடி பொறந்தவன் தானே.. அவன் எப்படி இருக்கான் பாரு.. அது புள்ள.. என் தம்பி புண்ணியம் செஞ்சிருக்கான்.. நான் என்ன பாவம் செஞ்சேன் தெரியல..!!" என்று ஒவ்வொரு விஷயத்திற்கும் அகர வேந்தனை உயர்த்தி வைத்து இவனை மட்டம் தட்டி பேசியதால் தம்பி மீதும் கோபம் ..
"பாரு பாரு அந்த கேடுகெட்டவன் மாதிரியே முறைக்கிறான் பாரு.. அதே திருட்டு பார்வை.. அதே கோபம்.. அதே முரட்டுத்தனம் இவன் உருப்படவே மாட்டான்.. அடியே காமாட்சி நீ எத்தனை கோவிலுக்கு போய் பரிகாரம் செஞ்சாலும் இவன் ஜெயிலுக்கு போய் விளங்காமத்தான் போக போறான்.." இப்படியே பேசி பேசி அப்பா என்றாலே வெறுத்துப் போய்விட்டது வெற்றிக்கு..
பொறுமை எல்லை மீறி தந்தையை எதிர்த்து நிற்க ஆரம்பித்து விட்டான்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகனிடம் அடி வாங்கி கௌரவ குறைச்சல் ஆகி விடக் கூடாதே.. தள்ளி நின்று ஓரளவிற்கு அடங்கிப் போனார் தாமோதரன்..
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து அவர் பொறியியல் படிக்கச் சொல்ல அவனுக்கு பிடித்ததோ வேளாண்மை படிப்பு..
தாமோதரன் தான் எதிலும் தனித்து உயர்ந்து நிற்க வேண்டுமென்று எண்ணம் கொண்டவர்.. ஈகோ அதிகம்.. தன் தலைமுறைக்கு பிறகு தன் மகன் படித்து பட்டணத்தில் பெரிய உத்தியோகத்தில் வேலை பார்ப்பதே தனக்கு கௌரவம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க அவனோ வேளாண்மை சேர்ந்து விவசாயத்தில் புரட்சி செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தான்..
"அதெல்லாம் முடியாது.. நீ இன்ஜினியரிங் தான் படிக்கணும்.. விவசாயம் பார்த்துகிட்டு இந்த கிராமத்திலேயே முடங்கி கிடக்கலாம்னு நினைச்சியா..!! நாளைக்கு நான் சொல்ற காலேஜ்ல போய் இன்ஜினியரிங் குரூப் சேரனும் புரியுதா.." அவர் ஆணையிட..
"முடியவே முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக்கோங்க..!! நான் நம்ம ஊருக்கு பக்கத்துல இருக்கிற கவர்ன்மென்ட் காலேஜ்ல போய் அக்ரிகல்ச்சர் தான் படிக்கப் போறேன்.." என்று அவர் முன்பு நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக நின்றான்..
"உன் இஷ்டத்துக்கு படிக்கிறதா இருந்தா ஒரு பைசா கூட தர மாட்டேன்.."
"பரவாயில்ல வேலை செஞ்சு அந்த காசுல படிச்சிக்கிறேன்.." சொன்னதோடு நில்லாமல் பார்ட் டைம் வேலை பார்த்துக் கொண்டே வேளாண்மை கல்வி பயின்று தேர்ச்சி பெற்று வெளியே வந்து விட்டான்.. கல்லூரியிலும் அநியாயங்களை தட்டி கேட்கும் வீரனாக நின்றதில் அவனுக்கென்று ஒரு கூட்டம்..
கண்ணுக் கட்டிய தூரம் வரை தோப்பு துறவு என ஆள் வைத்து பண்ணயம் பார்க்குமளவிற்கு வசதி இருந்த போதிலும் தனக்காக சேர்த்துக் கொண்ட பணத்தில் காணி நிலம் வாங்கி விவசாயம் செய்து.. கொள்முதல் போக மிச்சப் பணத்தில் தன் சேமிப்பையும் செலவுகளையும் பார்த்துக் கொள்கிறான்..
"இப்படி ஒரு நல்ல பிள்ளையை போய் எப்ப பாரு கரிச்சு கொட்டறியே தாமோதரன்.. பெத்த புள்ளைய பகைச்சுக்காதே அம்புட்டுதான் நான் சொல்லுவேன்" என்று பலர் வந்து அறிவுரை சொன்னபோதிலும் அவர் மனம் ஆறவில்லையே..!!
காரணம் அகரவேந்தன் நன்றாக படித்து முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறான்.. அனைத்து விஷயங்களிலும் தான் மட்டுமே உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தாமோதரனுக்கு மகன் வாயிலாக தோற்றுப் போனதில் நெஞ்சம் கொதித்தது..
"எப்படியோ என் புள்ள பொறுப்பா படிச்சு கை நிறைய கௌரவமாக சம்பாதிக்கிறான்" என்று வித்யாதர் பெருமையாக சொல்லும் போதிலும் ஊரார் பலர் அவன் படிப்பை மெச்சிக் கொள்ளும் போதிலும் பெற்ற மகன் மீது ஆத்திரம் எகிறிப் போகிறது..
இடையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வெற்றுடம்பாய் மண்வெட்டியும் கையுமாக சேற்றை பூசிக்கொண்டு வயலில் வேலை செய்யும் மகன் மீது "நான் சொன்னதை நீ கேக்கலைல.. என் ஆசையை நீ நிறைவேற்றல.." என்ற ஈகோவில் வெறுப்பு கூடி போனது.. இந்த பூசல்களால் இருவரும் ஏழாம் பொருத்தமாக எதிரெதிர் திசையில் விலகி நிற்கின்றனர்..
வெற்றிவேந்தன் விருதகிரியை போல் முரடன் தான்.. ஆனால் கெட்டவன் அல்ல.. பலாப்பழத்திற்கு ஒப்பானவன்.. வெளியே கரடு முரடான மேற்புறம்.. உள்ளுக்குள் மென்மையான குழந்தை என்பதை அவள் மட்டுமே அறிவாள்..
தாய் தந்தையை இழந்த தங்கை மகள் செல்ல மீனாவையும் பாண்டியனையும் தாமோதரனும் வித்யாதரனும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் அவள் மட்டுமே அவன் உயிராகிப் போனாள்.. அவளை யாருக்கும் விட்டுத்தர மாட்டான் வெற்றி..
சின்ன வயதில் பொம்மை போல அவளை இறுக்கி அணைத்து.. "என் செல்லமா நான் யாருக்கும் தர மாட்டேன்.." என்று அடம்பிடித்து அதற்கும் அப்பனிடம் வெளுக்க வாங்கி கட்டிய கதையெல்லாம் உண்டு..
ஊரிலேயே பெரிய வீடு அது.. செட்டிநாடு முறையில் ஓட்டு வீட்டு அமைப்பில்.. முற்றம் வைத்து கட்டப்பட்ட பல அறைகள் கொண்ட வீடு.. கான்கிரீட் ஓடுகள் கொண்ட வடிவமைப்பு என்றாலும் மேல்மாடி மொட்டை மாடி என அனைத்து வசதிகளும் உண்டு..
கோவிலுக்கு சென்று வந்த பிறகு அன்று முழுக்க தாமோதரனின் அர்ச்சனையை கேட்க வெற்றிவேந்தன் வீட்டில் இல்லை.. அவன் வீட்டிற்கு வருவதே அரிது என்பதும் சில நேரங்களில் நல்லதாகி போகிறது..
தன் அத்தானை மாமா வாய்க்கு வந்தபடி பேசுவதை பொறுத்துக் கொள்ள இயலாமல் கண்கள் கலங்கிக் கொண்டு ஊஞ்சலின் கீழ் அவர் காலடியில் அமர்ந்திருந்தாள் செல்ல மீனா..
வழக்கமாக நடக்கும் கூத்து என்பதால் மற்றவர்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சினையாக தோன்றவில்லை.. ஒவ்வொரு முறையும் தன் மாமன் மகனுக்காக வருந்துபவள் இந்த மீனம்மா மட்டுமே..
"அத்தானையே ஏன் தப்பு சொல்றீங்க மாமா.. அந்த ரவுடி பயலுக என்ன செஞ்சாங்களோ..!!" என்றாள் அவனுக்காக பரிந்து..
"அவங்க என்ன வேணா செஞ்சுட்டு போகட்டும்.. எங்க பஞ்சாயத்து.. யாரை அடிக்கலாம்? யாரை வெட்டலாம் குத்தலாம்னு காத்துகிட்டு இருப்பானா இவன்.. அவனுங்க மேல என்ன தப்பு இருக்க போகுது.. இவன் தான் முதல்ல போய் வம்பிழுத்து இருப்பான்.. இதுவரை மத்த இடங்கள்ல என் கண்ணுக்கு மறைவா தான் சண்டை போட்டுக்கிட்டு திரிஞ்சான்.. இன்னிக்கு கோவில்ல ஒரு தலைவரா நான் நிக்கும் போது என் கண் முன்னாடியே பிரச்சனை பண்ணி இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிட்டான்.." என்று மீசை துடிக்க கத்தினார் தாமு..
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா.. தீர விசாரிச்சா தானே.."
"நீ வாய மூடு தங்கம்.. உனக்கு அவனை பத்தி தெரியாது.. நீ சின்ன பொண்ணு.. நம்பி ஏமாந்து போகாதே..!! முதல்ல வேலைக்காரி மாதிரி அவனுக்கு சேவகம் செய்யறது நிறுத்து.. மத்த விஷயத்துல பரவாயில்ல ஆனா உன்னை ஏதாவது காயப்படுத்தினா என்னால தாங்க முடியாது அப்புறம் பெத்த புள்ளனு கூட பாக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."
"என்ன மாமா பேசுறீங்க அத்தான் என்னை என்ன காயப்படுத்த போறாங்க.."
"அவனை நம்ப முடியாது தங்கம்.. அப்படியே அவன் தாய் மாமன் குணம்.. இனி திருந்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை.. வெளிப்பூச்சுக்கு இந்த விவசாயம்.. உள்ள என்ன என்ன செய்யறானோ.. ஏன் கஞ்சா கூட.."
"அட போதும் மாமா நிறுத்துங்க.. நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே போறீங்க.. அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை.. அவரைப் பற்றி தப்பா பேசாதீங்க.. உள்ள அத்தை கூப்பிடுறாங்க.. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்.." அதற்கு மேல் காது கொடுத்து கேட்க சகிக்காமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள் செல்லமீனா..
இரவு மணி பதினொன்றை தாண்டிய பிறகும் வெற்றிவேந்தன் வீட்டுக்கு வராததில் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் அவள்..
"ஏய் மீனா.. இங்கே வாடி.." காமாட்சி ரகசியமாக அழைத்தார்..
"என்ன அத்தை. நானே அத்தான் இன்னும் சாப்பிட வரலைன்னு கடுப்புல இருக்கேன் நீங்க வேற.." என்று முடிப்பதற்குள்.. அவள் கரத்தில் ஒரு தாயத்தை திணித்து..
"சாமிகிட்ட மந்திரிச்சு வாங்கிட்டு வந்தேன்.. கையில கட்டினா கோபம் தணிஞ்சு சாந்தமா இருப்பானாம்.. எப்படியாவது அவன் கையில கட்டி விட்டுடி.." அத்தையவள் கெஞ்சி கொண்டு நிற்க..
இடுப்பில் கை வைத்து கண்கள் சுருக்கி அத்தையை குறுகுறுவென பார்த்தாள் மீனா.. "ஏன் உங்க மகன் கையில நீங்களே கட்ட வேண்டியது தானே" என்றாள் கேலியாக..
"ஆமா அவன் என்னை அப்படியே பக்கத்துல விட்டுட்டாலும்.. கங்காரு குட்டி மாதிரி உன்னை தானே இடுப்புல தூக்கி வச்சு சுமக்கிறான்.. அம்மாவை விட இந்த அத்தை பொண்ணு அப்படி என்ன ஒசத்தியா போய்ட்டாளோ தெரியல.." உதடு சுழித்தவளின் கண்களில் கொஞ்சமாக பொறாமையும் நிறைய ஏக்கமும் எட்டிப் பார்பப்பதாய்..
"மாமா அத்தானை தண்டிக்கும்போது தூர நின்னு வேடிக்கை பார்த்தீங்கள்ல.. அவருக்கு அந்த கோபம்.."
"நான் என்னடி வேணும்னா செஞ்சேன்.. இந்த மனுஷனை மீறி நான் ஏதாவது செய்ய முடியுமா.." விழிகளில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் காமாட்சி..
"செய்யணும் அத்த.. அத்தானுக்காக நீங்க நின்னுருக்கணும்.. நீங்க பெத்த புள்ளை அவரு.. அப்பா கண்டிச்சாலும் அம்மா நீங்க அனுசரனையா இருந்திருக்க வேண்டாமா.. தப்பு பண்ணிட்டீங்க.. இப்ப அனுபவிக்கிறீங்க.. சரி விடுங்க.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்.. இந்த தாயத்தை அவர் கையில கட்டணும்.. அவ்வளவு தானே.. நான் கட்டி விடுறேன் கண்ணை துடைங்க.. அழாதீங்க.." என்று காமாட்சியின் விழிகளை துடைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வெற்றிவேந்தன் வீட்டுக்குள் நுழையும் அதிரடி காலடி ஓசையில் "அத்தான் வந்துட்டாரு" என்று முகம் மலர்ந்து ஓடினாள் செல்ல மீனா..
வாயிலை தாண்டும் முன் கை நீட்டி தடுத்தார் தாமோதரன்.. "தங்கம் என் பேச்சை மீறி நீ போகக்கூடாது அவ்வளவுதான்.." சொல்லிவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொள்ள.. திகைத்துப் போனவளாக நின்றிருந்தாள் செல்ல மீனா..
முற்றத்தில் கை கால் முகம் கழுவிக்கொண்டு உணவு மேஜையில் வந்து அமர்ந்தான் வெற்றிவேல்..
"செல்லம்மா.. செல்லம்மா.. பசிக்குதுடி.. எங்க போய் தொலைஞ்ச.." மேஜையில் தாளம் தட்டிக் கொண்டே தன் முரட்டு குரலால் அவளை அழைத்தான்.. காலையில் நடந்த சம்பவத்திற்கான கலக்கமோ வருத்தமோ அவன் முகத்தில் தென்படவில்லை..
"ஐயோ என் புள்ள பசியில கூப்பிடுறான்.. போய் சாப்பாடு போடுடி.." காமாட்சி கலங்கி நிற்க.. அவளோ செய்வதறியாது எகத்தாளமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த மாமனை பரிதவிப்போடு பார்த்தபடி நின்றிருந்தாள் மீனா ..
"செல்லம்மா.. ஏய் செல்லம்மா" பொறுமை விட்டு அடி குரலில் அழைக்க ஆரம்பித்திருந்தான்..
"அக்கா அவ கெடக்குறா.. மாமா வார்த்தைக்கு கட்டுப்பட்டு எப்படியாவது போகட்டும்.. நீங்க போய் சாப்பாடு போடுங்க.." சித்ரா சொன்னதை அடுத்து பெற்ற மனம் தாங்காமல் சமையலறையை விட்டு வெளியேறி உணவு மேடைக்கு வந்த காமாட்சி தட்டை எடுத்து வைத்து மகனுக்கு அவசரமாக பரிமாறவும் தலைகுனிந்து அமர்ந்திருந்தவன்..
விருட்டென எழுந்து அமர்ந்திருந்த நாற்காலியை சுவற்றில் வீசி எறிய.. மர நாற்காலி இரண்டாக உடைந்து போனது.. விதிர்த்துப் போனாள் தாயவள்..
"எவ்வளவு தைரியம் அவனுக்கு.." தாமோதரன் வீறு கொண்டெழுந்து நிற்க.. "மாமா நீங்க இருங்க நான் போய் பார்க்கிறேன்.." என்று அவரை தடுத்து விட்டு.. "எத்தனை முறை அனுபவப்பட்டாலும் இந்த அத்தைக்கு புத்தியே வராது" வாய்க்குள் முணுமுணுத்த படி வெளியே ஓடி வந்தாள் அவள்..
"அத்தான்.. அத்தான்.. போகாதீங்க தயவு செஞ்சு போகாதீங்க.. நான்.. நானே சாப்பாடு போடறேன் இப்படி உட்காருங்க.." குறுக்கே புகுந்து அவனை தடுத்து நிறுத்த நெஞ்சை நிமிர்த்தி நெடுஞ்சான் மரமாக முறைத்துக் கொண்டிருந்தான் அவன்..
"அத்தான் இப்படி உட்காருங்க.. நாற்காலி உடைந்து போயிருக்க அவனுக்கான நாற்காலி தவிர மற்ற நாற்காலிகளில் அமர மாட்டான் என்பதால் அவனை இழுத்து வந்து தரையில் அமர வைக்க முயன்றதில்.. மீனம்மாவின் இழுசைக்கு கட்டுப்பட்டு தரையில் வந்து அமர்ந்தான் அவன்..
சமையலறைக்கு சென்று அவனுக்காக தனியாக சமைத்து வைத்திருந்த உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து தட்டு வைத்து பரிமாறிவிட்டு ஊறுகாய் எடுத்து வருவதற்காக மீண்டும் சமையலறையை நோக்கிச் செல்ல அவள் தாவணியை பற்றி இழுத்தான் வெற்றி..
"அத்தான்.." தாவணியை தோளோடு பிடித்துக் கொண்டு அவள் பதறவும்..
"உட்காரு.." என்றான் இறுகிய குரலில்..
"ஊறுகாய் எடுத்துட்டு வரேன்.."
"தேவையில்லை உட்காரு.." அவன் அழுத்தமான குரலில் எதிர்பக்கம் அமரவும்.. "பக்கத்துல வந்து உட்காருடி.." என்று பற்களை கடித்தான்.. நகர்ந்து வந்து நெருக்கமாக அமரவும்.. அவள் தாவணியின் முனையை சுருட்டி கையில் வைத்துக் கொண்டு உணவருந்த ஆரம்பித்திருந்தான் வெற்றிவேந்தன்.. அவன் உணவருந்தி முடிக்கும் வரையில் கேட்டதை பரிமாறியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் மீனா..
உணவு அருந்தி கை கழுவி முடிக்கவும் துடைத்துக் கொள்ள தன் தாவணியை நீட்டினாள்.. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் ஈரமான கரத்தை தாவணியை இழுத்து துடைத்துக் கொண்டவன்.. "நான் வரேன்" என்று விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி நடக்க..
"அத்தான் அத்தான்" என்றபடி பின்னால் ஓடினாள் செல்ல மீனா..
சட்டென திரும்பி அவள் இடைப்பற்றி சுவரோரமாக சாய்த்து நிறுத்தினான் அவன்..
"என்னடி வேணும் உனக்கு..!!"
"இங்கேயே படுங்க அத்தான்.."
"உன் அறையில் வந்து படுத்துக்கவா..!!"
"ஆமா நீங்க படுத்ததே இல்ல பாரு..!! நான் அதை சொல்லல.. இது உங்க வீடு.. உங்க நீங்க இங்கேதான் இருக்கனும்.."
"ஒன்னும் தேவையில்லை அந்த வயசான சிங்கத்தையே மொத்த வீட்டையும் ஆளச் சொல்லு.. நான் போய் கழனியில் படுத்துகிறேன்.." என்றான் கடுமை தெறிக்க..
"அப்புறம் நடுராத்திரியில் வந்து என் தாவணிக்குள்ள ஒளிஞ்சிக்க மாட்டிங்களே.." அவள் கேள்வியில் முகம் மாறியது..
"ரொம்ப ஆசைப் படுற மாதிரி தெரியுது.." கீழ் கண் பார்வையோடு மீசையை முறுக்கினான்..
"ஆமா ரொம்ப தான் ஆசை.." என்றவள் இடையில் சொருகி வைத்திருந்த தாயத்தை எடுத்து கரம் பற்றி அவன் மணிக்கட்டில் கட்டி விட..
"என்னடி இது?" என்றான் அதட்டலாக..
"முனீஸ்வரன் சாமி பாதத்தில் வைத்து மந்திரிச்சு வாங்கின தாயத்து.. இனி உங்களுக்கு கோபமே வராது" என்றபடி தாயத்தை கட்டி முடித்தாள்..
"முனீஸ்வரனே கோபக்கார சாமி தானடி.." என்றான் அவன் கேலியாக..
"சும்மா ஏதாச்சும் பேசாதீங்க அத்தான்.. காலையில ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க.. எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னேன்.. உங்களுக்காக மாமா கிட்ட எவ்.. ம்ம்ம்ம்ம்.." வார்த்தைகளை அவன் விழுங்கிக் கொண்டான். இதழோடு இதழ் பொருத்தி..
சில நொடிகள் நீண்டு சென்ற வன் முத்தத்திற்கு பிறகு "ஏன் நான் கூப்பிட்ட உடனே வரல" என்றான் ஆழ்ந்த குரலில் அவள் உதட்டை விரலால் நிமிட்டியபடி..
"மாமாதான்.. உங்க.. ம்ம்ம்ம்" முடிப்பதற்குள் மீண்டும் முத்தம்..
"என்னை விட உன் மாமன் தான் உனக்கு முக்கியமா.." தொடர்ந்து முத்தங்கள்.. திணறினாள் மீனா.. வலி சுகம் கோபம் தாபம் அத்தனையும் அவளோடு மட்டுமே..
"அப்படி இல்ல.. அத்தான்.. வலிக்குது.. என்னை விடுங்க.." இதழை துடைத்துக் கொண்டு மார்பில் கரம் அழுத்தி அவனை தள்ள முயல.. நெஞ்சை அழுத்திய கரத்தை இறுக பற்றி சுவற்றோடு சேர்த்தவன்.. "இனிமே நான் கூப்பிட்ட உடனே வரணும் புரியுதா.." என்றான் அழுத்தமாக..
"ஹ்ம்ம்.. சரி.. வரேன்.." பூனைக்குட்டியாய் சிணுங்கிட ஆசை தீராமல் படபடக்கும் இருவிழிகளிலும் முத்தம் வைத்து விலகி நின்றான்..
"போ.."
"நீங்க போங்க அத்தான்.."
"நீ உள்ள போனதும் நான் போறேன்.. போடி.." என்று அங்கேயே நின்றான்..
பெரிய மனம் கொண்டு அவன் தந்த சிறு இடைவெளியில் ஒட்டி உரசி நகர்ந்து வீட்டுக்குள் சென்றவளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் அதன் பிறகு விலகி நடக்க.. இதழை துடைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவளின் எதிரே வந்தாள் வித்யாதரனின் இளைய மகள் முல்லை..
"நல்ல விருந்து சாப்பாடு போலிருக்கு.. சேதாரம் அதிகமா தெரியுதே.. ஒரே நாள்ல தின்னு தீர்த்தாச்சா.." என்று மீனாவின் உதட்டை பார்த்து கேலி செய்ய.. "ச்சீ.. போடி.." வெட்கத்துடன் அறைக்கு ஓடி வந்தவளுக்கு ஆனந்த திகைப்பில் விழிகள் விரிந்தன.. கட்டிலில் அவள் கேட்ட கண்ணாடி கலர் வளையல்கள் பெட்டி பெட்டியாக அடுக்கப் பட்டிருந்தது..
தொடரும்..

Last edited: