- Joined
- Jan 10, 2023
- Messages
- 46
- Thread Author
- #1
மாதவியின் புகுந்த வீட்டு ஆட்கள் பழைய வீட்டை இடித்து விட்டு விசாலமான புதிய அரண்மனை போன்ற வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.. வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.. இது தற்காலிகமாக சின்னஞ்சிறிய ஓட்டு வீட்டிற்குள் மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாள் மாதவி..
மாதவிக்கு அது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை.. அவள் குடும்பம் குடியிருக்கும் வீட்டை விட இந்த வீடு சற்று பெரியது.. ஆனால் குடும்பம் பெரியது என்பதால்.. வீடு நெருக்கடியாக தோன்றுகிறதோ என்னவோ..
வாழும் வீடு சிறியதோ பெரியதோ.. அங்கே வாழும் மனிதர்களின் மனம் விசாலமாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.. இங்கே குறுகிய மனம் படைத்த புகுந்த வீட்டு ஆட்களின் குணம் அன்றே தெரிந்து போனது..
மாதவியின் மாமனார் உயிரோடு இல்லை.. அவள் மாமியாரும்.. நாத்தனார் அக்ஷயாவும் அவள் குழந்தையும்.. கூடத்தில் படுத்துக் கொள்ள.. பெருமூச்சு விட்டாலும் கதவிடுக்குகளில் வழிந்து வெளியே கேட்கும்படி மிக நெருக்கமாக அறை மாதவி ஹரிச்சந்திராவின் படுக்கையறை..
இரவில்தான் கதவை மூட முடியும்.. பகலில் திறந்துதான் வைத்திருக்க வேண்டும்.. கொலுசொலி கூட மிகத் தெளிவாக கேட்கும் அளவிற்கு அருகிலேயே காதை கூர்மையாக்கி உற்றுக் கவனிப்பது போல் இந்த கூட்டம் படுத்திருக்குமா.. அல்லது அவளுக்கு அப்படி தோன்றுகிறதா தெரியவில்லை..
லேசாக முத்தமிட்டால் கூட வெளியில் படுத்திருப்பவர்கள் தலையை தூக்கிப் பார்க்கும் அளவிற்கு தான் வீட்டின் கட்டமைப்பு அமைந்திருக்கிறது.. இந்த விஷயத்தில் சபரிவாசனும் சரிதாவும் தப்பித்தார்கள்.. இந்த விஸ்தார அறைதான் வேண்டுமென கேட்டு வாங்கும் அளவிற்கு சரிதாவிற்கு அந்த வீட்டில் செல்வாக்கு நிறைந்திருக்கிறது..
புதுமண தம்பதிகள் என்பதற்காக மட்டுமே கடமைக்காக இவர்களுக்கு ஒரு அறை.. அவள் ஏறி அமர்ந்ததற்கே கட்டில் இரண்டு முறை ஆட்டம் கண்டு நின்றது.. இதில் மற்ற விஷயங்கள் எப்படியோ..? இதில் கணவனை வேறு வளைத்து போட வேண்டுமாம்.. எப்படி சாத்தியம்..
ஆனால் அந்த சிரமத்தை கூட அவளுக்கு வைக்காமல் வந்த நாளிலிருந்து மனைவியின் முகம் பார்க்காமல் விலகி படுத்துக் கொள்கிறான் ஹரிச்சந்திரா..
ஏன் இந்த விலகல் என்று அவள் தெரிந்து கொள்வதற்கான உரிமை கூட மறுக்கப்பட்டது..
காதலித்து திருமணம் முடித்திருந்தால் அவனை எழுப்பி அழகான மனைவி பக்கத்தில் இருக்கும் போது.. கண்ணிழந்தவன் போல் ஏன் இந்த உறக்கம் என்று உரிமையாக கேட்டு செல்லக் கோபம் கொண்டிருக்கலாம்.. இது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்து திருமணம்.. திருமணத்திற்கு முன்பு ஒருமுறை கூட அவனிடம் பேசியதில்லை.. ஏன் தாலி கட்டும் போது கூட அவள் தான் நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் கடமையே கண்ணெண அவள் கழுத்தில் தாலி கட்டுவதை பெரிய வேலையாக செய்து கொண்டிருந்தானே..!!
இந்த இரவுக்கு பெயர் முதலிரவு.. உண்மைதான் இருவரும் தனித்திருக்கும் முதல் இரவு..
அறைக்குள் வந்தான் ஹரி.. மாதவி எழுந்து நின்றாள்.. ஜன்னல் எதிரே புதர் மண்டி கிடந்த எருக்கஞ் செடிகளை வெறித்து பார்த்தபடி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகைத்தான்.. பிறகு ஓரமாக நின்றிருந்தவளை கடந்து கட்டிலின் ஒரு பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்..
அந்த அறையில் உள்ள பொருட்களோடு ஒரு பொருளாக மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் மாதவி..
லேசான புன்னகையோ அல்லது தூக்கம் வருதுமா.. என்ற ஒற்றை வார்த்தையோ கூட அவளை ஆறுதல் படுத்தி இருக்கும்.. மாதவி என்ற ஒருத்தி உருவமற்று காற்றில் கரைந்தது போல் அவன் நடவடிக்கை.. !!
படுத்தவுடன் உறங்கி இருந்தான்.. "ஹரிஇஇ.. லைட்டை போட்டுகிட்டு என்ன பேச்சு.. விளக்க அணைங்க.." வெளியிலிருந்து விவஸ்தை கெட்ட ஒரு குரல்..
என்னது.. அவன் பேசிக் கொண்டிருக்கிறானா..? இல்லாத ஒரு குரல் எங்கிருந்து இவர்களுக்கு கேட்டது.. விளக்கை அணைத்துவிட்டு வளையலும் கொலுசும் குலுங்க மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தவள் ஒன்றுமே புரியாமல் விடிய விடிய மனபாரத்தோடு விழித்திருந்தாள்..
காலையில் எழுந்தவன் தனது பீரோவிலிருந்து துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளிப்புற பாத்ரூமுக்கு குளிக்க சென்று விட்டான்..
அவன் சென்ற பத்தாவது நிமிடம் கதவு பலமாக தட்டப்பட்டு பிறகு ஜெயந்தி உள்ளே வந்தாள்..
மாமியாரை கண்டதும் கட்டிலிலிருந்து எழுந்து நின்றாள் மாதவி..
"என்னமா ஆம்பள குளிக்க போயிட்டான்.. நல்ல நேரம் பார்த்துதான் குளிக்க போகணும்னு ஏதாவது யோசனையில் இருக்கியா..? சாந்தி முகூர்த்தம் முடிஞ்சதும் விடியற் காலையில் ஆளுங்க பார்க்கும் முன்னே தலைக்கு குளிச்சிடனும்னு உங்க வீட்ல சொல்லி தரலையா.. ?" கணவனின் நடவடிக்கையில் நொந்து போயிருந்தவளுக்கு எத்தனை இதமான பேச்சு!!
"இல்ல அத்தை.. எங்க குளிக்க போகணும் தெரியல அதனாலதான்.." திணறினாள்.
"தெரியலைனா கேட்கணும்.. இப்படி மண்ணு மாதிரி உட்கார்ந்திருந்தா பாத்ரூம் உன் பக்கத்தில் வந்து நிக்குமா.. உன் மருமகளுக்கு இன்னும் பொழுது விடியலையான்னு வந்த சொந்தக்காரங்க கேக்கற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் சொல்லு.. மானம் போகுது.. இது ஒன்னும் உன் தாய் வீடு இல்லை.. குழந்தை மாதிரி ஒன்னு ஒன்னா எடுத்து சொல்லி கொடுக்கறதுக்கு .. புரிஞ்சு நடந்துக்கோ.. இங்க ஒரு பாத்ரூம்தான் இருக்கு எல்லாரும் விடிய காலையிலேயே எழுந்து குளிச்சாச்சு.. ஹரி குளிச்சிட்டு வந்த பிறகு நீ போய் குளி.. பாத்ரூம் வீட்டோட பின்பக்கம் இருக்கு.." காரச் சொற்களை வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் ஜெயந்தி..
குளித்து முடித்து வந்த பிறகு புது மருமகள் என்ற தயவு தாட்சயமெல்லாம் இல்லாமல் சமையற்கட்டே கதியாக கிடந்தாள் மாதவி.. நான்கு நாட்கள் வீடு தங்கியிருந்த மொத்த சொந்தக்காரர்களுக்கும் சமைத்து போட்டு முதுகெலும்பு உடைந்து போனது..
குறையிலும் ஒரு நிறையாக.. இரவில் தாம்பத்திய பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகவே போதிய ஓய்வு கிடைத்திருந்தது.. இது சந்தோஷமா வலியா தெரியவில்லை.. தன் கண்முன்னே தெரியும் கணவனின் முதுகை பார்த்த படி பரீட்சையில் விடை தெரியாத குழந்தை போல் கலக்கத்தோடு நெடும் இரவுகளில் விழித்திருப்பாள்..
நான்காவது நாள் தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தாள் மாதவி..
கீதாவையும் சரி கலகலவென்று பேசி சிரித்த அந்த இரண்டு குழந்தைகளையும் சரி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை ஹரிச்சந்திரா..
"மாப்பிள்ளை லட்டு வச்சுக்கோங்க.. மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கட்டுமா.." என்று பார்த்து பார்த்து பரிமாறிய மாமியாருக்கு இங்கே ஒரு மரியாதையும் இல்லை..
"போதும் எதுவும் வைக்காதீங்க.." விருப்பமே இல்லாமல் போட்ட சாதத்தை உண்டு விட்டு.. "இப்பவே கிளம்பி வந்தா உன்னை வீட்ல விட்டுட்டு நான் வெளியே போவேன் இல்லைனா நீ தனியாதான் வரணும்.." தரையைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் ஹரிச்சந்திரா.. அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூட பிடிக்கவில்லை அவனுக்கு.. எத்தனை எரிச்சல் எத்தனை கோபம்.. இவளிடம் பேச வேண்டியிருக்கிறதே என்ற கையாலாகாத வெறுப்பு.. இப்படி ஒரு மனநிலையில் இருப்பவர் எதற்காக என்னை திருமணம் செய்து கொண்டாராம்..? தன் குடும்பத்தினருக்கு தெரியாமல் கண்ணீரை மறைக்க அரும்பாடு பட்டாள்..
வெம்மையும் காந்தலும் அந்த தாய்க்கு புரியாமல் இல்லை.. "எல்லாம் போக போக சரியாகிவிடும்.. அனுசரிச்சு குடும்பம் நடத்து மாதவி.. மனச தளர விடாதே..!!" அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாள் கீதா..
"மாமா ஏன் சிரிக்கவே மாட்டேங்கறாரு" என்று ஏமாற்றத்தோடு கேட்ட இரண்டு சின்ன பெண்களையும்.. "மாமாவுக்கு வேலை டென்ஷன்.. ஒரு நாள் பொறுமையா வந்து உங்க கிட்ட நல்லா சிரிச்சு பேசுவாரு.. சரிதானே..!!" என்று சமாதானப்படுத்தினாள் கீதா..
"எங்களுக்கு அழகா ஒரு மாமா கிடைச்சிருக்காரு" என்று பள்ளிக்கூடம் எங்கும் தம்பட்டம் போட்ட குழந்தைகள் ஹரிச்சந்திராவின் நடவடிக்கையில் காற்று போன பலூன் போல் நொந்து போயினர்..
மனைவியின் முகம் பார்க்க பிடிக்காமல் தினம் இரவிலும் தாமதமாகத்தான் வீடு வந்தான் ஹரிச்சந்திரா.. இருவருக்கும் இடையில் நடக்கும் கூத்து அந்த வீட்டில் அத்தனை பேருக்கும் தெரிந்துதான் போயிருந்தது..
"கட்டுன புருஷனை கைக்குள்ள போட்டுக்க தெரியாதவ என்ன பொண்டாட்டி.. ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான்.. பதமா இதமா பேசி பழகி வழிக்கு கொண்டு வரணும்.."
"கல்யாணமான பிறகும் என் புள்ள நேரங்கழிச்சு வீடு வர்றான்னா என்ன அர்த்தம்.. உன்னால அவனுக்கு நிம்மதி இல்லைன்னு அர்த்தம்.. இப்படி என் புள்ள கெட்டு நாசமா போறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.." மாமியார் சப்பாத்தி மாவை போட்டு பலம் கொண்ட மட்டும் குத்திக்கொண்டு மருமகளை வார்த்தையால் குத்தினாள்..
ஹரிச்சந்திராவின் மூத்த அண்ணன் சபரிவாசனின் மனைவி சரிதா.. அந்த வீட்டின் மூத்த மருமகளுக்கு மாதவி உள்ளூற ஏச்சும் பேச்சும் வாங்குவதில் சந்தோஷம்தான்.. வேலைக்குப் போகும் மருமகள்.. வீடு கட்டுவதற்கு சொந்தமாக தன் அலுவலகத்தில் லோன் போட்டு எடுத்து கொடுத்து பொருளாதார ரீதியாக பெரும் உதவி செய்து கொண்டிருக்கிறாள் என்பதால் அவளுக்கு ஏக மரியாதை.. இருவருக்கும் திருமணமான இந்த ஆறு வருடத்தில் கிரிஷ் என்ற ஐந்து வயதில் ஆண் குழந்தையும் உண்டு.. பிள்ளையை மாமியாரின் பொறுப்பில் விட்டு வேலைக்கு செல்கிறாள்.. சபரிவாசன் பேங்க் மேனேஜர்.. இருவரும் சம்பாதிக்கும் பணம்.. வீட்டு செலவுக்கும் வீடு கட்டுவதற்கும் செலவழிந்து கொண்டிருக்கிறது.. இடம் சபரிவாசன் ஹரியின் தந்தை சரவண வடிவேலுவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.. அதனால் இந்த வீட்டில் ஹரிக்கும் பங்கு உண்டு.. வீடு கட்டும் செலவை இருவரும் சரிபாதியாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டு இருந்தாலும் எந்த வேலைக்கும் செல்லாத ஹரி வீட்டுச் செலவுக்கே காசு கொடுப்பதில்லை என்பதால் முழு பொறுப்பும் அண்ணன் தலையில் விழுந்து விட்டது.. இதில் சரிதாவுக்கு ஏக வருத்தம்.. வீட்டின் இளைய மகனை மட்டந் தட்ட முடியவில்லை.. அத்தைக்கு கோபம் வரும்.. நாத்தனாருக்கு மூக்கு சிவக்கும் என்பதால் என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாதவியை தாழ்த்திப் பேசி சந்தோஷப்படுகிறாள்..
ஹரிச்சந்திரா சொந்தமாக தொழில் தொடங்க போகிறேன் என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்.. என்ன தொழில்.. எப்போது தொடங்கப் போகிறான் எதுவும் தெரியாது அவன் மனைவியாகப் பட்டவளுக்கு.. வீட்டுக்கு ஒரு பைசா பணம் தராமல்.. தண்டச்சோறு தின்று கொண்டிருப்பவனின் மனைவிக்கு பெரிதாக என்ன மரியாதை கிடைத்து விடப் போகிறது..
அவனாவது அந்த வீட்டு வாரிசு என்ற உரிமையில்.. எல்லா சலுகைகளும் வளமாகவே அனுபவித்துக் கொள்கிறான் .. ஹரிச்சந்திராவிற்கு அவன் அன்னையிடம் ராஜ மரியாதைக்கு பஞ்சமில்லை.. அண்ணனும் அண்ணியும் ஒரு சில நேரங்களில் சுணங்குவார்கள்.. மற்றபடி அவன் ராஜாதான்.. ஆனால் அவளுக்கு..? ஒவ்வொரு பருக்கையும் எண்ணித்தான் உண்ண வேண்டியிருக்கிறது.. மாமியார் பேசும் பேச்சுகளில் தொண்டையில் முள் குத்துவது போல் சோறு இறங்க மறுக்கிறதே..!!
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவள் உணவுத்தட்டை எடுக்க வேண்டும்.. பசியின் கொடுமையில் இடையில் சாப்பிட அமர்ந்து விட்டால் மாமியாரிடமிருந்து தேவையில்லாத விஷக்கடிகளை பெற்றுக்கொள்ள நேரிடும்..
"அதுக்குள்ள சாப்பிட உட்கார்ந்தாச்சா..!! வீட்டுக்காக உழைக்கிறவங்க சாப்பிடட்டுமே.. உனக்கு என்ன அதுக்குள்ள அவசரம்.." உட்கார்ந்து சாப்பிடுவதற்காக அவள் எடுத்து வைத்த தட்டை மறுபடியும் எடுத்து அலமாரியில் தூக்கி வைத்த மாமியாரை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
இது போதாதென "அந்த பாத்திரத்தை எடுக்காதே.. இந்த குடத்தை ஏன் இப்படி நெளிச்சு வச்சிருக்க.. பாத்ரூமை சரியா சுத்தம் பண்ண தெரியாதா..? கிரிஷ் பாத்ரூம் போய்ட்டான் அவனுக்கு கழுவி விட்டுட்டு சாப்பிட உட்கார வேண்டியதுதானே? இப்படி நெளிஞ்சு போன பானை மாதிரி மூஞ்சிய வச்சிருந்தா என் பிள்ளை எப்படி உன் கிட்ட வருவான்.. சரிதா சாயங்காலம் அலுப்பா வருவா.. அவளுக்கு ஏதாவது டிபன் செஞ்சு வை.. அவ ஒண்ணும் மத்தவங்கள மாதிரி உட்கார்ந்து சோறு திங்கல.. உழைச்சு கொட்றா" என்று உட்கார விடாமல் செக்கு மாடு போல் சதா ஏதேனும் காந்தல் வார்த்தைகளுடன் வேலை ஏவப்பட்டு கொண்டே இருக்கிறது.. அப்போதும் நல்ல பேர் இல்லையே..!! பெரிய மருமகளை தூக்கி வைத்து தன்னை மட்டப்படுத்தி துன்பப் படுத்தும் நரகத்தின் வாசல் இந்த புகுந்த வீடு.
பழைய உற்சாகம் இழந்து களை இழந்து ஜீவன் இழந்து.. அகதி போல் ஆனாள் மாதவி..
"தின்னுட்டு தின்னுட்டு இப்படி உக்காந்துட்டே இருந்தா எப்படி..? சாயங்காலம் 5:00 மணிக்கு போய் பெரியவனோட குழந்தையை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரலாம் இல்ல.. கொஞ்சம் நடந்தா உடம்புல அனாமத்தா சேர்த்து வைச்சிருக்கிற கொழுப்புசதையாவது குறையும்." மாமியார் பேச்சில் பொறுத்து பொறுத்து பார்த்தவள் ஒரு கணத்தில் கொதித்து எழுந்தாள்..
"அத்தை.. குழந்தையை போய் கூட்டிட்டு வான்னு சொன்னா கூட்டிட்டு வர போறேன்.. அதுக்காக தேவையில்லாம ஏன் வார்த்தைகளை வெறுப்பா கொட்டறீங்க" மனம் வெறுத்து ஆற்றாமையோடு கேட்டது தான் பெரிய தப்பாகி போனது.. வாயை திறக்க கூடாதே..!!
ஜெயந்தி ஃபோனில் இங்கே வடித்த கண்ணீர் அங்கே மகளை துடிக்க செய்தது.. இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒட்டிக் கொண்ட கோந்து மிட்டாயை பிச்சி எடுப்பதாக புறப்பட்டு புகுந்த வீட்டிற்கு சென்ற மகள் குழந்தையோடு வந்து மீண்டும் டேரா போட்டு விட்டாள்..
அழுது புலம்பி.. "என்னை இப்படி ஒரு வார்த்தை கேட்டுட்டா.. ஒருத்தி நூறு சவரன் நகை போட்டு இந்த வீட்டுக்கு வந்ததோட நிக்காம வேலைக்கு வேற போய் மாங்கு மாங்குன்னு வேற உழைச்சிட்டு வர்றா.. வீட்ல சும்மா இருக்காம ஏதாவது வேலை செய்மா.. பெரியவளுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருன்னு சொன்னது பெரிய குத்தமா போயிடுச்சு.. என்ன பேச்சு பேசறா.. நான் தேவையில்லாம பேசறேனாம்" மகளிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் ஜெயந்தி..
"ஏன் அண்ணி.. ஒன்னும் இல்லாத பிச்சைக்கார குடும்பத்தில் பிறந்த உங்களை கோபுரத்தில் கொண்டு வந்து வச்சதுக்கு எங்க அம்மாவுக்கு நல்ல பரிசு கொடுக்கறீங்க.." மாமியார் போதாதென்று நாத்தனார் தேள் கொடுக்கு நாக்கால் கொட்டினாள்.
"அக்ஷயா வார்த்தையை அளந்து பேசு.. குண்டுமணி தங்கம் கூட வேண்டாம்னு சொன்னது நீங்கதானே.. பிச்சைக்கார குடும்பம்னு தெரிஞ்சு தானே பொண்ணு எடுத்தீங்க.. நாங்க ஒன்னும் உங்க கிட்ட வந்து கையேந்தி நிக்கலையே இப்ப வந்து குத்தி காட்டறது சரியே இல்லை..?" அழுகையோடு குரல் கமறியது.
"பாத்தியா.. பாத்தியா எப்படி பேசறான்னு.. கொஞ்சம் கூட அடக்கமே இல்லை.. காசு பணம் இல்லாட்டியும் குணமாவது இருக்கும்னு நினைச்சா.. வாய் வண்டலூர் வரைக்கும் நீளுதே.. இவளோட ஹரி எப்படி குப்பை கொட்ட போறான்னே தெரியல" மூக்கை சிந்தி அழுதாள் ஜெயந்தி..
"ஐயோ அத்தை நான் எதுவும் தப்பா பேசல.. நான் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லலையே.. எது சொன்னாலும் கொஞ்சம் தன்மையா சொல்லுங்கன்னு தான் சொன்னேன்.." கடைசியில் மாதவிதான் தணிந்து பேச வேண்டியதாய் போனது..
"இப்ப நான் என்ன தன்மையா சொல்லல.. என் பொண்ணு கிட்ட எப்படி பேசுவேனோ அதே மாதிரிதான் உன்கிட்டயும் பேசறேன்.. நாளும் பொழுதுமா உட்கார்ந்தே கிடக்கறியே.. ஏற்கனவே உன் புருஷன் உன்னை திரும்பி கூட பாக்கறது இல்ல.. இதுல தூங்கி தூங்கி எழுந்து ஊளைச்சதை போட்டு உப்பலா நின்னா.. அவன் வாழ்க்கையை வெறுத்து ஓடிடுவான்.. நல்லது சொன்னா இந்த காலத்து பொம்பளைங்களுக்கு கசக்குது.." மாமியாரின் பேச்சில் பணம் கசந்து போனாள் மாதவி..
"விடும்மா இத்தனை நாள் இவர்களை நம்பியா வாழ்ந்த.. உன் வேலையை நீயே செய்.. யார் எப்படி போனா உனக்கென்ன வந்துச்சு..!!" அக்ஷயா அம்மாவை ஏற்றி விட்டாள்..
"அக்ஷயா நீ வேற எதுக்கு அவங்கள ஏத்தி விடற.. நான் ஒரு வார்த்தை கூட தப்பா பேசல.. நீங்க ரெண்டு பேரும்தான் சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்கிறீங்க இந்த விஷயத்தை இத்தோட விட்டுடுங்க.." மனம் பொறுக்காமல் வார்த்தைகள் விழுந்தன..
"ஐயோ அம்மா நான்தான் உன்னை ஏத்தி விடறேனாம்.. பிரச்சினைகளை ஊதி பெருசாக்கிறதும் நான்தானாம்.. அப்ப என்னாலதான் இந்த வீட்ல பிரச்சனை வருது அப்படித்தானே அண்ணி.. சரி.. இனி நான் இந்த வீட்டுக்கு வரல.. வாழ வந்த நீங்களே சந்தோஷமா இருங்க.. அம்மா நான் கிளம்பறேன்.. இனி உன் பிரச்சனையை நீயே பாத்துக்கோ.. நான் இங்க வரமாட்டேன்.." அழுது கொண்டே பையோடு குழந்தையை இடுப்பில் தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் அக்ஷயா..
"அடிப்பாவி.. வீட்டுக்கு வந்த பொண்ண ஒரு வாய் சோறு தின்ன விடாம துரத்தி அனுப்பிட்டியே நீயெல்லாம் மனுஷியா..!! உன் குணத்துக்கு என் புள்ள மட்டுமல்ல எவனுமே உன் கூட வாழ முடியாது.. குடும்பத்தை வாழ வைப்பேன்னு உன்னை மருமகளா கொண்டு வந்தா இப்படி கூனியா எல்லாரையும் பிரிச்சு விடறியே..!! நீ நல்லா இருப்பியா? உன் குடும்பம் விளங்குமா.. என் பொண்ணை துரத்தி விட்டுட்டு நீ மட்டும் இந்த வீட்ல எப்படி வாழ்ந்திடறேன்னு நான் பாக்கறேன்.." பிரச்சனையை பூதாகரமாக ஊதி பெரிதாக்கி.. வீட்டுக்கு வந்த பெரிய மகன் மருமகளிடமும் சொல்லி.. புலம்பி.. அவர்களும் சேர்ந்து மாதவியை நிற்க வைத்து கேள்வி கேட்டு கடைசியில் இந்த விஷயம் அரிச்சந்திரா வரை சென்று.. சண்டை முற்றி அத்தனை பேர் முன்னிலையில் ஹரிச்சந்திரா தன் மனைவியை பளாரென்று அறைந்து விட்டான்..!!
"என் தங்கச்சி இங்க வருவா.. எத்தனை நாள் வேணும்னாலும் தங்குவா.. இது அவ வீடு.. அவளை கேள்வி கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை.. ஒழுங்கா ஏன் அம்மா சொல்றதை கேட்டு இங்க இருக்கிறதுன்னா இரு.. இல்லன்னா புறப்பட்டு உன் பொறந்த வீட்டுக்கு போயிட்டே இரு.." என்ன ஏதென்று விஷயத்தை தெரிந்து கொள்ளாமல் அவள் தரப்பு நியாயத்தை சொல்லவிடாமல்.. அத்தனை பேரின் முன்னிலையிலும் மாதவியை அவமானப்படுத்தி சென்றிருந்தான் ஹரிச்சந்திரா..
தொடரும்..