- Joined
- Jan 10, 2023
- Messages
- 84
- Thread Author
- #1
"குட் மார்னிங் ஐயா, இன்னைக்கு சீக்கிரமாவே எழுந்துட்டீங்க போலிருக்கே..!"
தன்னறைக்குள் நுழைந்த முப்பதைத் தாண்டிய அந்த ஆண்மகனை திரும்பிப் பார்த்தார் கட்டிலில் படுத்திருந்த அந்த முதியவர்..
அவன் தர்மன்.. அந்த மருத்துவமனையின் வார்ட் பாய்.. நல்ல உயரம்.. அதற்கேற்ற உடல்வாகு.. நீலநிற சீருடை அணிந்திருந்தான்.. அந்த அரைக்கை சட்டையில் புஜங்கள் புடைத்து திமிறியதில்.. உண்மையில் இவன் வார்டுபாய்தானா என்ற சந்தேகம் புதிதாக பார்ப்பவர்களுக்கு நிச்சயம் எழ கூடும்..
சிரித்த முகம் கனிவான பேச்சு.. ஆண்மையான குரல்..! வசூல்ராஜா கமலை போல் பேசிப்பேசியே நோயாளிகளின் மனதை இலகுவாக்குவதால் அங்கே அட்மிட் செய்யப்பட்டிருக்கும் பல பேருக்கு இவன் தான் செல்லப்பிள்ளை..!
"வாடா தர்மா.. தூங்கினா தானே எழுந்துக்கறதுக்கு.. நைட் முழுக்க தூங்கவே இல்லை..!"
"இப்படி தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.. டாக்டர் வரும்போது உங்க பிரச்சனையை சொல்லுங்க.. தூங்கறதுக்கு மருந்து ஏதாவது எழுதி தருவார்.." என்றபடியே அவரை எழுப்பி அமர வைத்துவிட்டு வீல் சேரை இழுத்து வந்தான்.
"மருந்து தந்துட்டா மட்டும் என்னோட மன குறைய தீர்த்து வச்சிட முடியுமா என்ன..! பிரச்சனை உடம்பில இல்ல மனசுல.. எங்கேயோ போய் உக்காந்துகிட்டு லட்சம் லட்சமா ஆஸ்பத்திரிக்கு செலவழிக்கிறான் என் புள்ள.. ஒரே ஒருமுறை வந்து பார்த்தா என் நோயெல்லாம் தீந்து போயிடும்னு அவனுக்கு தெரியல பாரேன்..!" வறண்டு சிரித்தார் அவர்..
"தாங்கி பிடிக்க சொந்தங்கள் இருந்தும் உங்க புள்ள மாதிரி ஆட்களுக்கு பெத்தவங்களோட நேரம் செலவழிக்க மனசு இருக்கறதில்ல.. குடும்பமா வாழனும்னு ஆசைப்படுற என்ன மாதிரி ஆளுங்களுக்கு அப்படி ஒரு யோகம் கிடைக்கிறதில்ல..! கடவுளோட விளையாட்ட பாத்தீங்களா.." என்றபடியே அவரைத் தூக்கி வீல்சேரில் அமர வைத்தான் தர்மன்..
"அட என்ன தர்மா இப்படி சொல்லிட்ட..! ஏன் உனக்கு நாங்க இல்லையா.. ?"
"எங்க..? இன்னும் இரண்டு நாள்ல இங்கருந்து டிஸ்டார்ஜ் ஆகி போயிடுவீங்க..! அப்புறம் என்னையெல்லாம் எங்கிருந்து ஞாபகம் வச்சுக்க போறீங்க..?" என்றபடியே அவர் படுக்கை விரிப்பை மாற்றிவிட்டு தரையை சுத்தம் செய்தான்..
"வேணும்னா சொல்லு உனக்காக நான் இங்கேயே காலம் போற டேரா போடவும் தயார்.. எனக்கு ஓகே தான்..! பேச்சுத் துணைக்கும் பணிவிடை பார்க்கவும் நீ இருக்கும் போது எனக்கென்னடா கவலை.. வீட்டுக்கு போகணுங்கற ஆசையை விட்டு போச்சு.."
"அட நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..! இப்படி எல்லாரும் இங்கேயே தங்கிட்டா அப்புறம் புதுசா வர்றவங்களை எங்க அட்மிட் பண்றது..! நீங்க எல்லாரும் பூரண குணமடைஞ்சு இங்கிருந்து டிஸ்டார்ஜ் ஆகி போகணும்.. அப்பதான் நாங்க செஞ்ச வேலைக்கும்.. பணிவிடைக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும்.. இங்கிருந்து வெளியே போனாலும் நீங்க எப்ப வேணாலும் என்னை பார்க்க வரலாம்.. பேசலாம் பழகலாம்.. வீட்டு அட்ரஸ் கூட தரேன்.. வந்து என் கூடவே தங்கிடுங்க..! எனக்கு சந்தோசம் தான்.. சரி இப்போ பாத்ரூம் போகலாமா.." என்று வீல் சேரை தள்ளிக் கொண்டு கழிவறைக்கு சென்றவன் அவரை தூக்கி டாய்லெட் பவுலில் அமர வைத்து தேவையான உதவிகளை செய்து.. எல்லாம் முடிந்ததும் மீண்டும் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான்..
சுடு தண்ணீரில் ஈரத் துணியை பிழிந்து டவல் பாத் முடித்து.. உடைமாற்றிவிட்டு மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்ட அவருக்கான உணவை வாங்கி வந்து தந்து உண்ண வைத்தான்..
"ம்ம்.. எல்லாம் முடிஞ்சது.. நான் போய் நர்ஸை கூட்டிட்டு வரேன் மாத்திரை போடணுமே..!" அவன் அங்கிருந்து விலகும் நேரம்..
"தர்மா பேசாம நான் இங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிப்போகும் போது நீயும் என் கூடவே வந்துடறியா..?
என் ஒருத்தனை மட்டும் கவனிச்சுக்கிட்டு சொகுசா வாழலாம்டா.. உனக்கு எந்த கஷ்டமும் இல்லை..!" முதியவர் சற்றே நடுங்கும் குரலில் உருக்கமாக கேட்க..
இரு முழங்கால்களிலும் தன் கைகளை ஊன்றி அவரை நோக்கி குனிந்தவன்.. "நான் உங்களோட வந்துட்டா என்னை நம்பி இங்கிருக்கிறவங்களை யார் பாத்துக்கறது..! ஐயா.. எனக்கு சொகுசான வாழ்க்கை வேண்டாம்.. ஆத்ம திருப்திதான் வேணும்.. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் ரவுண்ட்ஸ் வருவார்.. நான் இப்படி நின்னு பேசிட்டு இருக்கறத பாத்தா என் வேலை காலியாகிடும்.. நீங்க ஓய்வெடுங்க.. நான் போய் நர்ஸை கூட்டிட்டு வரேன்.." என்று புன்னகை முகமாக அங்கிருந்து நகர்ந்தான் தர்மன்..
எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் சகிப்புத்தன்மையோடு நோயாளிகளை அணுகும் விதம் பாசமாக பழகும் அந்தக் கனிவு.. கலகலவென்ற அவன் பேச்சு.. நம்பிக்கை தரும் அவன் தோற்றம்.. என அனைவரின் மனதிலும் நல்லதொரு இடத்தை பிடித்திருக்கிறான் இந்த தர்மன்..
"என்ன தர்மா ஷிப்ட் முடிஞ்சிடுச்சு வீட்டுக்கு போகலையா..!" ரிசப்ஷனில் நின்று லெட்ஜர் புக்கை புரட்டிக் கொண்டிருந்த சுந்தரி கேட்க..
"வெங்கடேஷ் இன்னைக்கு லீவாம்.. ஷிப்ட் எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்காங்க.. வீட்டுக்கு போய் மட்டும் என்ன பண்ண போறேன்..! ஒண்ணு அடிச்சு போட்ட மாதிரி தூங்கணும்.. இல்லனா நாலு சுவத்தை வெறிக்க வெறிக்க பார்த்துட்டு உட்கார்ந்திருக்கணும்..! அதுக்கு ஹாஸ்பிடல்ல இருந்தாலாவது உன்ன மாதிரி அழகான பொண்ணுங்களை பாத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கலாமே..!" அந்த வளைந்த மேஜையில் கையை ஊற்றிக்கொண்டு அவளை பார்த்து கண்ணடித்தான்..
"ரொம்ப கொழுப்புதான் உனக்கு..! ப்ரொபோஸ் பண்ணும் போது முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப டயலாக் விடுற மேன் நீ..! போடா அங்குட்டு ஏதாவது சொல்லிட போறேன்.." அவள் முறைத்தாள்..
"ஏய் லூசு..! உன் எதிர்பார்ப்பு வேற என் வாழ்க்கை வேற..! மேலோட்டமா தெரியற என் குணத்தையும்.. தோற்ற கவர்ச்சியையும் வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறதெல்லாம் வேலைக்காகாத விஷயம்.. என் சந்தோஷத்துக்காக இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை ஒரு நாளும் கெடுக்க மாட்டேன்.. உனக்கும் எனக்கும் செட்டாகாது..! இதைதான் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கேன் நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கற.."
சுந்தரிக்கும் அவன் சொல்வது புரியத்தான் செய்தது.. அழகாக இருக்கிறான்.. அவன் செயல்களால் மற்றவர்களை கவர்வது போல் அவளையும் கவர்ந்திருந்தான்.. அவன் மீது ஈர்ப்பு கொண்டு சுந்தரி தன் விருப்பத்தை அவனிடம் வெளிப்படையாக சொல்லி இருக்க.. இருவருக்கும் பொருந்தாது என்பதை அவள் மனம் நோகாமல் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருந்தான் தர்மன்..! அவளுக்கும் எதார்த்தம் புரியவே அவன் சொன்னதை புரிந்து கொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.. ஆனாலும் அவன் மீதான அந்த ஈர்ப்பு இப்போதும் இருக்கிறது..
"இப்படி சொல்ல சொல்லத்தான் உன்னை ரொம்ப பிடிக்குது..! பரவாயில்ல உனக்கு கொடுத்து வைக்கல போ.. எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. அடுத்த மாசம் மேரேஜ் பிக்ஸ் பண்ணியாச்சு.." அவள் இயல்பாகச் சொல்ல.. புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்பட்டான் தர்மன்
"அடடா இந்த சந்தோஷமான விஷயத்தையில்ல முதல்ல சொல்லி இருக்கணும்..! அதை விட்டுட்டு தேவையில்லாம என்னென்னவோ பேசி மாமா மனச நோகடிக்கிறியே செல்லம்.." என்று கண் சிமிட்டி சிரிக்க..
"உதை வாங்க போற மரியாதையா ஓடிப் போயிடு..!" என்றாள் அவள் முறைப்புடன்..
"எப்படியோ.. வாழ்த்துக்கள்..! சந்தோஷமா இரு.." என்று கையை நீட்ட புன்னகையோடு கை குலுக்கினாள்..
என்னதான் தன்னை நெருங்கும் பெண்களை நாசுக்காக விலக்கி வைத்து அவர்களுக்காக தர்மன் யோசித்தாலும்..
"எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை தர்மா.. எனக்கு நீ மட்டும் போதும்.. உன்னை அந்த அளவுக்கு காதலிக்கறேன்.. நான் உன் மேல வச்சிருக்கற நேசத்துக்கு முன்னாடி இந்த பணம் வசதி.. குடும்ப கவுரவம் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. வசதியில்ல கம்மியான வருமானம் பத்துக்கு பத்தடியில ஒரு குட்டி வீடு.. இப்ப என்ன அதனால..! பணம் இல்லாம சந்தோஷமா வாழ முடியாதா.. நீ என்னை நல்லா பாத்துக்க மாட்டியா..!" இப்படி ஏதாவது ஒருத்தி அல்பமான காதல் வசனங்களை பேசி உண்மையான அன்போடு தன்னை தாங்கிக் கொள்ள மாட்டாளா என்ற ஏக்கம் அவனுக்குள் ஆழமாக உண்டு..
"தர்மா எமர்ஜென்சி கேஸ்.. ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு சீக்கிரம் வா..!" நர்ஸ் ஒருத்தி வந்து அழைத்துவிட்டு செல்ல.. நிலைமை உணர்ந்து வேகமாக ஓடினான் தர்மன்..
சுயநினைவின்றி கிடந்த அந்த நபரை கொண்டு வந்து இங்கு சேர்த்ததோடு எங்கள் கடமை முடிந்தது என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாசலிலேயே நின்றுவிட.. ஆம்புலன்ஸிலிருந்து அந்த நபரை தர்மனும் இன்னொருவனுமாக மாற்றி அவசர சிகிச்சை பிரிவு வரை வேகமாக நகர்த்தி கொண்டே சென்றனர்.. ஸ்ட்ரக்சர் பின்னால் புடவை தலைப்பால் வாயைப் பொத்தி அழுதபடியே ஓடி வந்தார் ஒரு பெண்.. வயதை ஒப்பிட்டு பார்க்கும்போது அந்த நடுத்தர வயது பெண் அந்த நபரின் மனைவியாக இருக்க கூடும் என்று யூகித்துக் கொண்டான் தர்மன்..
அவனைத் தொடர்ந்து செவிலியர்கள் அந்த நபருக்கு செயற்கை சுவாசம் தந்து மேற்கட்ட வேலைகளை தொடர.. மருத்துவர் ஒருவர் உள்ளே வந்து நோயாளியின் நிலைய பரிசோதித்தார்..! உயிரை காக்க முதலுதவி உடனடியாக தொடங்கப்பட்டது..!
அவன் வேலை முடிந்து விட.. அவசர சிகிச்சை பிரிவின் கதவை சாத்திக் கொண்டு வெளியே வந்த நேரம்.. அந்த வராண்டாவில் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார் அந்த பெண்..
"அவர் உங்க புருஷனா..?" மெல்ல பேச்சு கொடுத்தான் அவன்..
"ஆமா தம்பி திடீர்னு நெஞ்சு பிடிச்சுக்கிட்டு விழுந்துட்டாரு.. எனக்கு ஒண்ணுமே புரியல..! பக்கத்து வீட்டுக்காரங்கதான் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி வர வெச்சாங்க.. பசங்க எல்லாரும் வெளியூரில் இருக்காங்க.. அவர்தான் எனக்கு எல்லாமே..! அவருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா..?" அந்தப் பெண்மணி விசும்ப..
"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது..! இங்க இருக்கிற டாக்டர் ரொம்ப கைராசியானவங்க.. அப்படியே இல்லைனாலும் உங்களுக்காகவாது அவர் உயிர் பிழைச்சு வந்துருவாரு.. நம்பிக்கையோட இருங்க..!" என்றதும் அழுகையை நிறுத்திவிட்டு தர்மனை நன்றி பெருகோடு பார்த்தாள் அந்த பெண்மணி.. உடுப்புக்குள் இயந்திரத்தனமாக விரைத்து நிற்கும் ஊழியர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக ஒருவன்..
"ரொம்ப நன்றி தம்பி.. நீங்க இப்படி பேசினதே மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..!"
"உள்ள டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க.. டிரீட்மென்ட் முடிய நேரமாகும்.. எவ்வளவு நேரம் நின்னுட்டே இருக்க போறீங்க.. உட்காருங்க.. டீ காபி அதாவது வாங்கிட்டு வந்து தரட்டுமா.." கரகரப்பான குரல் எனினும் அனுசரனையாக வருடியது அவன் பேச்சு..
"எதுவும் சாப்பிடற நிலைமையில நான் இல்ல..!" என்றவரின் அழுகை இப்போது மட்டுபட்டிருந்தது..
பக்கத்தில் தைரியம் சொல்ல ஒருவர் இருந்தால் கூடுதலாக ஒரு நம்பிக்கை பிறக்குமல்லவா..!
"பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க.. இங்க நிறைய செலவாகுமே.. கையில ஏதாவது வெச்சிருக்கீங்களா..!"
"பேங்க்ல கொஞ்சம் பணம் போட்டு வச்சிருக்கோம்.. பத்தாமா போனா பிள்ளைங்க உதவி பண்ணுவாங்க அது பிரச்சனை இல்லப்பா..! அவர் பிழைச்சு வந்தா போதும்" அந்தப் பெண்மணி மூக்கை சிந்திக் கொண்டு சொல்ல
"சரி பாத்துக்கோங்க ஏதாவது உதவி வேணும்னா.. நான் இங்கதான் சுத்திட்டு இருப்பேன்.. என்னை கூப்பிடுங்க.. என் பேரு தர்மன்" என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
"தர்மா வளசரவாக்கம் பக்கத்துல ஏதோ ஆக்சிடென்ட்டாம்.. ஆம்புலன்ஸ் அனுப்பனும்.. டிரைவர் கூட நீயும் முருகனும் போங்க.. சீக்கிரம் கிளம்புங்க டிரைவர் வண்டி எடுத்தாச்சு..!" செவிலி பெண் மாலினி வந்து சொல்லிவிட்டு செல்ல..
"இதோ கிளம்பிட்டேன்.." என்றபடியே வாசலை நோக்கி ஓடியவன்.. மெட்டர்னிட்டி செக்ஷனில் அத்தனை பேர் பார்த்திருக்க தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் சத்தமான கதறலில் அப்படியே நின்று விட்டான்..
என்னவோ அந்த அழுகை அவன் மனதை பிசைந்தது..!
"ஒருவேளை அபார்ஷனா.. வயித்துல வளர்ற குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையோ.. இல்ல குழந்தையே பிறக்காதுன்னு சொல்லிட்டாங்களா..அதுக்கா இப்படி அழுவாங்க..?" ஏகப்பட்ட யோசனைகளுடன் அந்த பக்கமாக போன ஒரு செவிலியரை நிறுத்தி அவள் அழுகைக்கான காரணம் என்னவென்று என்று கேட்டான் அவன்..
"அதை ஏன் கேக்கற.. டெஸ்ட் ரிப்போர்ட்ல அந்த பொண்ணுக்கு எச்ஐவி பாசிட்டிவ்னு வந்திருக்கு..!
அதை ஒத்துக்க முடியாம கத்தி கலாட்டா பண்ணி ஒரே அழுகை..! எனக்கே பாக்க பாவமாத்தான் இருந்துச்சு..! பாக்க அப்பாவியாட்டம் தெரியுது.. இப்படி அழுது இல்லைன்னு சொன்னா மட்டும் ரிப்போர்ட்ல சொன்னது பொய்யின்னு ஆயிடுமா..! இந்த மாதிரி கேஸ் ரொம்ப ரேர்..! என் சர்வீஸ்ல நான் கூட பார்த்ததில்லை..! டாக்டர் வேற உள்ள வந்து அடுத்து என்ன செய்யறதுன்னு பேச சொல்லுங்க.. இல்லன்னா வெளியே போக சொல்லுங்க.. தேவையில்லாம எப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க..!"
"பாவம்ல.. எப்படிக்கா வந்திருக்கும்..!" அழுது கொண்டிருந்த பெண்ணின் மீது கண்களை பதித்த படி கவலையாக கேட்டான் தர்மன்..
"எனக்கென்னடா தெரியும்..! புருஷனுக்கு இருந்திருக்கலாம் இல்ல இந்த பொண்ணு மேல தப்பு இருந்திருக்கும்.. கவனக்குறைவா எச்ஐவி உள்ள ரத்தத்தை இந்த பொண்ணுக்கு ஏத்தியிருக்கலாம்.. இல்ல அவ புருஷனுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல தொற்று உள்ள ரத்தத்தை ஏத்தி அவ மூலமா இவளுக்கு வந்திருக்கலாம்..! ஏகப்பட்ட வழி இருக்கே..! அவங்களா சொன்னாதான் உண்டு..? என்னவோ இனி அந்த பொண்ணு பாடு திண்டாட்டம் தான்.." என்றபடியே அங்கிருந்து நகர்ந்து செல்ல.. தர்மனின் கண்கள் கூட இமைக்கவில்லை..
அத்தனை அழகாய் இருந்தாள் அந்தப் பெண்.. அழுதழுது அவள் முகம் சிவந்து போயிருந்து..
"சத்தியமா எனக்கு எதுவும் இல்லை எனக்கு நல்லா தெரியும்.. ப்ளீஸ், என்னை நம்புங்க.. இது தப்பான ரிப்போர்ட்.. இதுல இருக்கிறது உண்மை இல்லை.. நா.. நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ப்ளீஸ் நீங்க டாக்டர் கிட்ட சொல்லுங்க.." விம்மி வெடித்து கதறி அழுது கொண்டிருக்க.. நின்று கொண்டிருந்த அந்த ஆண்மகனின் முகத்தில் அத்தனை ஆத்திரம்..
"ஏய் மானத்தை வாங்காதே.. முதல்ல எழுந்திரு.. எதுவானாலும் டாக்டர்கிட்ட போய் பேசிக்கலாம்..! எல்லாரும் நம்மளத்தான் பாக்கறாங்க எழுந்திரு.." என்று அதட்டி அவள் அழுகையை அடக்குவதில்தான் குறியாக இருந்தானே தவிர..! அவள் துயரத்தில் பங்கு கொண்டு மனம் வருந்தி அந்தப் பெண்ணை தேற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை..
யார் எவரோ தெரியாது ஆனால் கன்னங்கள் சிவந்து அழுது கொண்டிருக்கும் அந்த பெண்ணை தேற்றி.. ஆறுதல் சொல்லி அவள் கண்ணீரை அடக்க பரபரத்தது தர்மனின் நெஞ்சம்..
"இன்னுமா இங்கே நிக்கற..! அங்க டிரைவர் உன்ன தான் தேடிக்கிட்டு இருக்கார்.. தாமதிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு உயிர் ஆபத்துல இருக்குன்னு தெரியாம என்னடா அங்க பராக்கு பாக்கற.. சீக்கிரம் போடா..!" சீனியர் நர்ஸ் ஒருத்தி வந்து கத்தியதும்.. "நானும் ஒரு உயிருக்காகத்தான் வருத்தப்படறேன்" என்று மனதோடு சொல்லிக் கொண்ட படி ஆம்புலன்ஸை நோக்கி ஓடினான் தர்மன்..
கத்தி கத்தி அழுது அங்கேயே மயங்கி சரிந்தவள் சுப்ரியா.. தலையிலடித்துக் கொண்டு வெறுப்போடு அவளை தூக்க முயற்சித்துக் கொண்டிருந்தவன் ராஜேஷ்..
தொடரும்..

Last edited: