• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
78
எங்கே போயிருப்பாள்.. வீட்டுக்குள்தான் எங்காவது சுற்றிக் கொண்டிருப்பாள் என்றுதான் நினைத்தான் குரு.. எழுந்து குளித்து வரும் பொருட்டு இடுப்பில் போர்வையை சுற்றிக் கொண்டே..

"ஏய் அம்பே.. குளிக்கனும்" என்று கத்தி அழைத்தான்.. இரவு நடந்த சம்பாஷனைகளும் பூசல்களும் நினைவில் இருக்கத்தான் செய்தன.. குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்ற எண்ணமோ.. அல்லது அவளை சமாதானப்படுத்த வேறு ஏதும் திட்டம் வைத்திருக்கிறானா தெரியவில்லை.. எதுவும் நடவாதது போல் சகஜமாக அவளை கத்தி கத்தி அழைத்துக் கொண்டிருந்தான்..

ஹான்.. வந்துட்டேன்.. ஐஞ்சு நிமிஷம் போன்ற பதில்கள் எங்கிருந்தும் எதிரொலிக்காமல் போனதில்.. "இவ ஒருத்தி கூப்பிட்ட குரலுக்கு வந்து நிக்கிறாளா..!!" பற்களை கடித்துக் கொண்டு தனது ஆடைகளை அவசரமாக தேடினான்..

கட்டிலுக்கு அடியில்.. அலமாரியின் மீது.. டீ பாய் பின்புறம் என்று தனித்தனியே ஒதுங்கியிருந்த ஆடைகளை தேடி கண்டறியும் அளவிற்கு பொறுமை இல்லை..

பீரோவை திறந்து துவைத்த துணிகளிலிருந்து தனக்கான உடையை எடுக்க கை நீட்டிய போதுதான் கவனித்தான்.. அன்பரசியின் உடைகள் ஒன்று கூட அங்கே இல்லை..

விழிகள் சுருக்கி யோசித்தவனுக்கு லேசாக ஏதோ பிடி படுவதாய்..!!

சட்டையை தோள்களுக்கு மேலேற்றி மாட்டியபடி வெளியே வந்தவன் வெளியே வந்தவுடன் வழக்கம்போல் காட்டு கத்தல்தான்..

"கிழவி.."

அப்பாஆஆ.. எல்லாரும் எங்க போய் தொலைஞ்சீங்க..!!" சட்டை பட்டன்களை அவசரமாக போட்டபடி கத்தினான்..

அவன் சீற்றமான குரலே விபரீதத்தை உணர்த்த என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு ஓடி வந்தனர் இருவரும்..

"என்ன.. என்னப்பா.. ஆச்சு.." இத்தனை நாட்களாக பெட்டி பாம்பாய் வீட்டை சுற்றி வந்த மகன் இன்று சீற்றத்துடன் பெருங்குரலெடுத்து கத்தியதில் பதட்டமடைந்தார் அவர்..

"அவ.. அவ எங்கே..?" பற்களை கடித்து ஓநாய் போல் உறுமியதில் இருவருக்குமே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை..

"இங்கதான் எங்கேயாவது இருப்பா..!! ஏண்டா இவ்வளவு டென்ஷன்.. முதல்ல நீ உட்காரு.." பாவம் ஆச்சார்யாவுக்கு விவரம் எதுவும் தெரியவில்லை.. ஆனால் வடிவு காலையிலேயே அன்பரசி தனது பையுடன் வீட்டை விட்டு சென்றதைக் கண்ட காரணத்தால் அமைதியாக தலை குனிந்து நின்றிருந்தாள்..

"ஏய் கிழவி.. உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது.. எங்க போனா அவ.. அலமாரியில அவ துணிமணிய காணோம்.. காலையில இருந்து ஆளையும் காணோம்.. மொத்தமா என்னைய விட்டுட்டு போயிட்டாளா..!! இப்ப வாயை திறந்து பேச போறியா.. இல்ல மொத்தமா எல்லாரும் வெட்டி சாய்ச்சுட்டு போயிட்டே இருக்கவா.." மகன் வார்த்தைகளில் வரைமுறையின்றி பேசிய பிறகுதான் காலையிலிருந்து பூஜை.. சமையல்.. கணவனின் அடிக்கடி அழைப்பு என அங்குமிங்குமாக ஓடும் அன்பரசியை தான் கண்ணால் பார்க்கவே இல்லை என்ற உண்மை மூளைக்கு உரைத்தது ஆச்சார்யாவிற்கு.. கேள்வியாக வடிவை பார்த்தார்..

"ஆமாங்கய்யா.. காலையில பையோட பாப்பா எங்கேயோ கிளம்பி போச்சு.. எங்க போறன்னு கேட்டேன்..
மனசு சரியில்ல அம்மா வீட்டுக்கு போறேன்.. யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.. காலையில மாமாவுக்கு நானே ஃபோன் செஞ்சு பேசுறேன்னு சொல்லுச்சு.. நான்தான் ஆட்டோ பிடிச்சுட்டு வந்து கொடுத்தேன்.." வடிவு குருவின் சிவந்த கண்களை பார்த்து மிரட்சியுடன் சொல்லவும்..

"அப்ப கூட புருஷன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும்னு அவளுக்கு தோணலை அப்படித்தானே.. போறவளை தடுத்து நிறுத்தி என்கிட்ட கொண்டு வந்து சேர்க்காம ஆட்டோ பிடிச்சு கொடுத்தியோ.. உன்னை வந்து வச்சுக்கிறேன்.." திமிறிக் கொண்டு சென்றவனை தடுத்து நிறுத்தினார் ஆச்சார்யா..

"தம்பி அவசரப்படாதே பொறுமையா இரு.. அம்மா வீட்ல ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு வரணும்னு தோணி இருக்கும்.. துணிமணிகளை எடுத்து வச்சுட்டு கிளம்பி இருப்பா.. இதை பெருசு படுத்தாதே..!!"

"அம்மா வீட்ல போய் தங்கிட்டு வரணும்னு தோணுச்சுன்னா புருஷன் கிட்ட சொல்லிட்டு போக மாட்டாளா..? எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ள இருக்கணும்னு சொல்லிட்டு இப்போ எல்லாத்தையும் ஊர்ஜிதப் படுத்த அப்பன் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாளா.. ஓங்கி நாலு அப்பு அப்பி முடிய பிடிச்சு இழுத்துட்டு வந்து வீட்டுக்குள்ள போட்டு கைய கால உடைச்சா அடுத்த முறை சொல்லாம போக இந்த தைரியம் வருமா.." சட்டையை மடித்துவிட்டு கொண்டு வாசப்படியை தாண்டி வேகமாக இறங்கி காரில் ஏறினான்.. அவன் கோபத்திற்கு ஏற்ப கார் சீறிபாய்ந்தது..

"என்ன வடிவம்மா.. இவன் இவ்வளவு கோபமா போறான்.. அங்க போய் ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு செய்யறதுக்குள்ள தடுத்து நிறுத்தணும்.. நான் போய் என்னன்னு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.." பதட்டத்தோடு செருப்பை மாட்டிக் கொண்டு வாசலை தாண்டி இரண்டடி கீழே எடுத்து வைப்பதற்குள் "ஐயா எங்க போகணும்".. காரோடு வந்து நின்றார் டிரைவர்..

"சதாசிவம் வீட்டுக்கு போப்பா.." என்றபடி முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார் அவர்.. கார் புறப்பட்டது..

சக்கரங்கள் மண்ணில் உரசி புழுதியை கிளப்ப கிரீச்சிட்டு நின்ற வாகனத்திலிருந்து இறங்கினான் குரு..

கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கீதாவும் சதாசிவமும் குரு அதிவேகத்தில் வருவதை கண்டதும் பிரச்சனையின் தொடர்ச்சி என்பதை உணர்ந்து கொண்டவர்களாய்.. "வாங்க மாப்பிள்ளை உட்காருங்க.." என்று மென்மையாக உபசரித்து அவன் ஆக்ரோஷத்தை குறைக்க முயல..

"எங்கே.. எங்கே.. உங்க பொண்ணு..?" அவன் பார்வை வீடு முழுக்க அலைபாய்ந்தது..

மாப்பிள்ளை அது..!!

"புருஷன் வீட்டை விட்டு வந்தவளுக்கு புத்தி சொல்லி திருப்பி அனுப்ப மாட்டீங்களா..?" கேட்டுக் கொண்டே அங்குமிங்குமாக அலைந்தவன்

பட்டென கதவு சாத்திக் கொண்ட பக்கம் திரும்பினான் குரு.. கண்களில் ஜிவ்வென பாய்ந்த சிவப்புடன் வேகமாக அந்த அறையை நோக்கி சென்றான்..

"ஏய்.. அம்பே.. கதவை திறடி.. சொல்லாம கொள்ளாம வந்துட்டா விட்டுடுவேன்னு நினைச்சியா..!! உன்கிட்ட பேசணும்.. மரியாதையா கதவை திறந்துடு.. இல்லன்னா உடைச்சுக்கிட்டு உள்ள வருவேன்.. என்னை பத்தி உனக்கு தெரியும்ல..!!" உள்ளிருந்து பதில் இல்லை கதவை திறக்கவும் இல்லை..

"மாப்பிள்ளை கொஞ்சம் நிதானமா இருங்க.. இப்படி உட்காருங்களேன் பேசுவோம்.. அன்புவை நான் வர சொல்றேன்.." சதாசிவத்தின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்ததா என்று கூட தெரியவில்லை..

"அம்பு இப்ப கதவை திறக்க போறியா இல்லையா.." ஓங்கி ஓங்கி அவன் தட்டிய தோரணையில் பழைய காலத்து கதவு உடைந்து விடும் நிலை..

"தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க.. இங்கிருந்து போயிடுங்க.." கதவு கிடுகிடுவென ஆட்டம் கண்ட நிலையில் இறுதியாக பேசியிருந்தாள் அன்பரசி..

"ஏய் கதவை திறடி.. முதல்ல உன் மூஞ்சிய காட்டு..!!"

"முடியாது.. நான் உங்களை பார்க்க விரும்பல..!!"

"என்ன..? பாக்க விரும்பலையா..!!" உள்ளிருந்து கிளர்ந்தெழுந்த உச்சகட்ட கோபத்தில் சுற்றும் முற்றும் வெறிகொண்டு எதையோ தேடியவன்.. வேகமாக சென்று அதை எடுத்து வந்திருந்தான்.. வீட்டு ரிப்பேர் வேலைக்காக ஓரமாக போடப்பட்டிருந்த கடப்பாரை..

"அம்பு கதவ தொற இல்லன்னா ஒடச்சிடுவேன்.."

சதாசிவம் கீதா இருவரும் வெலவெலத்துப் போயினர்..

"அன்பரசி கொஞ்சம் கதவை திறம்மா.. எதுவாயிருந்தாலும் அவர்கிட்ட மனம் விட்டு பேசு.." நரகாசுரன் போல் குரு நின்ற கோலம் கண்டு மிரண்டு போனவளாக வெளியிருந்து குரல் கொடுத்தாள் கீதா..

"முதல்ல அவரை அங்கிருந்து போக சொல்லுங்க.. எனக்கு அவரை பார்க்க வேண்டாம்.." அன்பரசி முரண்டு பிடித்தாள்..

சதக்.. கடப்பாரை கதவினுள் அதிவேகமாக இறங்கியது..

தடக்கென்று நின்று துடித்த இதயத்தோடு நெஞ்சை பற்றி கொண்டு எழுந்து நின்றாள் அன்பரசி.. முரடனின் குணம் தெரியும் தான் ஆனால் இப்படி கதவை குத்தி உடைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.. தான் வீட்டை விட்டு வந்ததால் வெறி பிடித்து விட்டதா இவனுக்கு.. இல்லையென்றாலும் இவன் ரவுடித்தனத்திற்கு என்ன குறைச்சல்..?

நேற்று அவன் பேசிய பேச்சுக்கு சரிதான் போடி என்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுவான் என்று தான் எண்ணியிருந்தாள்..

தன் பிரிவு அவனுக்கு பாடம் புகட்டட்டும் என்று வேறு மாதிரி நினைத்திருக்க இப்படி வீட்டுக்கு வந்து மூர்க்கத்தனமாக நடந்து கொள்வான் என நிச்சயம் எதிர்பார்க்கவில்லை..

மீண்டும்.. படக்கென்ற சத்தத்துடன் கதவில் கடப்பாரை உள்ளிறங்கியது..

"அய்யோ.. அன்பு.. கதவைத் திறடி..!!" கீதா வெளியில் நின்று அலறினாள்.. சதாசிவம் மருமகனை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க.. ஆச்சார்யா அங்கு வந்து சேர்ந்திருந்தார்..

மகன் நிதானம் இல்லாமல் கடப்பாறையோடு நின்று கொண்டிருப்பதை பார்த்து அவரும் விதிர்த்துப் போனார்..

"குரு நீ செய்யறது சரி இல்ல.. அந்த கடப்பாறையை கீழே போடு.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. அன்புவை நான் வர சொல்றேன்.."

"இது எனக்கும் அவளுக்கும் உள்ள பிரச்சனை.. நாங்களே பேசி தீர்த்துக்கிறோம்.. நீங்க யாரும் நடுவுல வர வேண்டாம் போய் ஓரமா நில்லுங்க.." கடைசி வார்த்தையில் அளவுக்கதிகமாக இறைந்தான்..

"அன்பு கதவைத் திறமா.. நாங்க இருக்கோம்.. பிரச்சனை வேற மாதிரி போகுது.. உன் முகத்தை பார்க்காம இவன் போக மாட்டான் போலிருக்கு.." ஆச்சார்யா கலவரத்தோடு வெளியிலிருந்து குரல் கொடுத்தார்..

அடுத்து கதவையே முற்றிலுமாக உடைக்கும் எண்ணத்தோடு குரு கடப்பாறையை ஓங்கி நிற்க தாழ்ப்பாள் திறக்கும் ஓசை.. கதவை திறந்திருந்தாள் அன்பு..

கடப்பாறையை அவன் தூக்கியெறிந்த வேகத்தில் அனைவரின் காதுகளும் அடைத்துக் கொண்டது.. உள்ளே நுழைந்து கதவை சாத்தி இருந்தான் அவன்..

எதிரே நின்றவளின் விழிகள் அவன்மீது உணர்ச்சி இல்லாமல் நிலைத்தது..

"என்னடி திமிரா.." பட்டென்று அவள் கன்னத்தில் ஒரு அறை..

"ஓடுகாலியா நீ.." மீண்டும் இந்த கன்னத்தில் ஒரு அடி.. அமைதியாக நின்றாள் அன்பு..

அடுத்த கணம் இழுத்து அணைத்து வன்மையாக முத்தம்.. எதற்குமே எதிர் வினை இல்லை அவளிடமிருந்து.. ஒரு கரத்தால் அவளை அணைத்து தன்னோடு இழுத்துக் கொண்டவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்..

"உன் மேல கொலவெறி ஆகுது.. என் மூஞ்சிய நிமிர்ந்து பாருடி.."

விலகி பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்தாள் அவள்..

"கட்டுன புருஷன் கிட்ட கூட சொல்லாம வீட்டு வாசப்படியை தாண்டற தைரியத்தை உனக்கு யாருடி கொடுத்தது.. அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேனா இல்ல சலிச்சு போயிட்டேனா.."

கண்களில் கண்ணீர் வராமல் இறுகிப் போனவளாக நின்றிருந்தாள் அவள்.. இப்போது எது பேசினாலும் தப்பாகி போகும் என நன்றாகவே அறிவாள் அன்பு..

"ஏய் வாயை திறந்து பேசுடி.. ராத்திரி வளவளன்னு வாய் ஓயாம பேசிக்கிட்டே இருந்த.. இப்ப என்ன எழவு வந்துச்சு உனக்கு..!!"

பதில் பேசாமல் தரை தாழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

"ஒன்னும் தெரியாத அமுக்குன்னி மாதிரி இருந்துகிட்டு என் உயிர வாங்குற நீ.. உன்னால என் நிம்மதி போச்சுடி.. உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன்.." பற்களை கடித்தான் குரு..

அதற்கும் அவளிடமிருந்து பதில் இல்லை..

"எதுவாயிருந்தாலும் நமக்குள்ளேயே இருக்கணும்னு சொல்லிட்டு இப்ப எல்லாரும் முன்னாடியும் என்னை கொடும காரனா காட்டி சீன் போடணும்.. அதானே வேணும் உனக்கு.."

"அம்பு வாயைத் திறந்து பேசு.. என்னை மிருகமாக்காதே..!!"

கண்களை துடைத்துக் கொண்டாள் அன்பரசி..

"வீட்டுக்கு போகலாம்.."

அவன் சண்டைக்கு தயாராகி நிற்க அவளோ ஒரே வார்த்தைகள் முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் முடித்து விட்டாள்.. கண்கள் சுருக்கி மனைவியை புரியாத பார்வை பார்த்தான் குரு..

கட்டிலுக்கடியில் இருந்த பெரிய பையை தூக்கி அவன் அருகே வைத்தாள்..

"இதை தூக்கிட்டு வாங்க..!!"

"ஏய் என்னடி கொழுப்பா?" உனக்கு நான் என்ன வேலைக்காரனா..?"

"அப்ப தூக்கிட்டு வராதீங்க.." கதவு தாழ்ப்பாளை திறந்து வெளியே வந்தாள்..

இரு பக்க கன்னங்களிலும் கைத்தடத்தின் சிவப்போடு.. உதடுகள் வீங்கி வெளியே வந்த மகளை கண்டு பெற்றோர்கள் துடித்து போயினர்..

"அய்யோ.. அன்பு.. என்னடி இது..? கடவுளே.." தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கீதா..

"இப்ப எதுக்காக அழற..? புருஷன் பொண்டாட்டி குள்ள ஆயிரம் இருக்கும்.. ஏதோ கோபம்.. அவர் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்.. இப்போ என்னை கூட்டிட்டு போக அவர் வந்திருக்காரு..!! தேவை இல்லாம நீ ஏன் மனசை போட்டு குழப்பிக்கிற.."

"என்ன அன்பு இப்படி அடிச்சிருக்காரு..!! இந்த மனுஷன் கூட நீ எப்படி குடும்பம் நடத்த போற.. வேண்டாம் அன்பு நீ இங்கேயே இருந்திரு..!! இதனால என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை" எனும் போதே அவள் பையை தூக்கிக் கொண்டு அங்கே வந்து நின்றான் குரு..

"இப்போ என்ன..? அவர் என்னை அடிச்சது தான் பிரச்சனையா..?" என்று குருவின் பக்கம் திரும்பியவள் பளாரென வைத்தாள் ஒரு அறை.. எதிர்பாராமல் விழுந்த அடியில் குரு கண்களை மூடி திறந்து கோபத்துடன் அவளை பார்க்க.. அடுத்த கன்னத்திலும் அடி இறங்கியது.. கோபத்தோடு தலைசாய்த்து அவளை முறைத்தானே அன்றி ஒரு வார்த்தை பேசவில்லை..

"ஆத்தாடி.. இதென்ன கூத்து.. சிங்கத்தை சீண்டி விட்டுட்டாளே.." என்று மூவரும் ஸ்தம்பித்து நின்று கொண்டிருக்க..

"இப்ப நான் கூட தான் அடிச்சேன்.. அமைதியாத்தானே நிக்கிறாரு.. நாங்க இன்னிக்கு அடிச்சுக்குவோம்.. நாளைக்கு சேர்ந்துக்குவோம்.. நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம்.." என்று மூன்று பேரிடமும் பொதுவாக சொன்ன மனைவியை புருவங்கள் ஏறி இறங்க பார்த்தான் குரு..

என்ன பிரச்சனை தெரியவில்லை.. பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த மகள் காரணம் எதுவும் சொல்லவில்லை.. ஆனால் இப்போது மனைவிதான் வேண்டும் என்று குரு வந்து நின்ற கோலமும்.. கணவனை விட்டுக் கொடுக்காத அன்பரசியின் பேச்சும் கீதாவின் மனதிற்குள் மெலிதாக நிம்மதியை ஊடுருவச் செய்தன.. அதிலும் ஊரையே புரட்டி எடுக்கும் தன் மருமகன் மகளிடம் அடி வாங்கி நிற்பதெல்லாம் சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய சம்பவங்கள் அல்லவா ..

ஆச்சார்யா கூட கண்முன் நிகழ்ந்த காட்சியை இப்போது வரை நம்ப முடியாமல் தான் நின்று கொண்டிருந்தார்..

சின்ன வயதில் கண்டிப்பதற்காக கை நீட்டிய போது "இந்த அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்கப்பா.." பொருந்தாத கோபத்துடன் விரல் நீட்டி எச்சரித்தவன் அவன்..

சற்று நேரத்திற்கு முன் கடப்பாரையோடு கண்களில் வெறிகொண்டு நின்றவன் இப்போது மனைவி கையால் அடி வாங்கி அமைதியாக நின்றான் என்று வடிவுக்கு தெரிந்தால் கோமாவிற்கு செல்வது உறுதி..

"மன்னிச்சிடு சதாசிவம்.. வீட்டு கதவை சரி செய்ய நாளைக்கே ஏற்பாடு செய்யறேன்" என்றார் ஆச்சார்யா..

"நீங்க ஏன் மாமா கஷ்டப்படுறீங்க.. உடைச்சது அவர்தானே.. அவரே ஆளுங்களோட வந்து கூட இருந்து மேற்பார்வை பார்த்து கதவை சரி செஞ்சு தரட்டும்.. அம்மா.. நான் போயிட்டு வரேன்.. அப்பா.. நான் வரேன்.." சொல்லிவிட்டு அன்பரசி முன்னால் நடந்து சென்று சுமோவில் ஏறிக்கொள்ள..

மனைவியின் போக்கில் தடுமாறி.. இறுகிய முகத்தோடு பையை முதுகுக்குப் பின்னே பிடித்தபடி நடந்து சென்றான் குரு..

தொடரும்..
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
137
Ennapa nadakuthu ingae..... Give and take policy pola........👌👌👌🤭🤭🤭🤭🤭......
Irandu perum oruvarukkoruvar vittu kodukamal irupathu 👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Member
Joined
Apr 7, 2023
Messages
51
😄😄😄😄😄😍😍😍😍😍😍
 
Member
Joined
Dec 23, 2023
Messages
29
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Member
Joined
Jan 11, 2023
Messages
30

Ivan Yenna ragam, iva Yenna ragam
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
116

Enna adi....
 
Member
Joined
Jan 29, 2023
Messages
55
🥺🙄😲🥺🙄😲🥺🙄😲👏🏻👏🏻👏🏻👏🏻🙀🙀🙀🙀
 
Member
Joined
Mar 12, 2024
Messages
26
Anbu's mom is good.. Mom's love and care at critical situations are always appreciable.. Happa.. Good slaps.. Super sister.. Ippo dhan konjam aarudhal ah iruku..

Nice writing, sister.. Too much work today and a little bit tired too.. Reading your story gives much relaxation.. Your writings have some special effects.. Thank you...
 
Last edited:
Active member
Joined
Jan 18, 2023
Messages
116
Wow super illa......sema ambeeee nee vacha paru Ara .......sigathaiye sachuputta doi....❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
116
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Top