• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
59
மனைவி நிச்சயமாக தன் பிறந்த வீட்டிற்குத்தான் சென்றிருக்க கூடும் என்று யூகத்தோடுதான் நேரடியாகவே அங்கே சென்று அவளை அழைத்து வந்திருந்தான் ஹரி..

வழக்கம் போல் ஜெயந்தியால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..

"என்னடா மகனே இவள போய் கூட்டிட்டு வர்றே.." வீட்டை கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்த தாயாரின் கேள்வி ஹரியை ஆத்திரமூட்டியது..

"என்னமா கேள்வி இது.. வேற யாரை கூட்டிட்டு வருவேன்னு எதிர்பார்த்திங்க..? லேசான கடுமையும்.. கோபமும் அவன் குரலில் எட்டிப் பார்த்ததில் தன்னை மறந்து ஏதோ ஒரு வேகத்தில் கேட்டு விட்டதை உணர்ந்து ஜெயந்தி சுதாரித்தாள்..

"பின்ன வேற எப்படி கேக்க சொல்ற.. வீட்ல மாமியார் இருக்கான்னு ஒரு மரியாதை தெரியுதா இவளுக்கு.. சொல்லாம கொள்ளாம இவ பாட்டுக்கு கிளம்பி பொறந்த வீட்டுக்கு போயிட்டா..!!"

"உன் மருமக எங்க..? வீட்ல இல்லையா.. எங்க போயிருக்கான்னு கேக்கறவங்களுக்கு ஒன்னும் தெரியாம நான் என்ன பதில் சொல்ல முடியும்.. என்ன உன் மருமக உன்னிடம் சொல்லிட்டு கூட போக மாட்டாளா..? கால் காசுக்கு கூட மதிக்காத இவளா உனக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த போறான்னு கோடி தெரு பாட்டிவரைக்கும் என்னை கேலி செஞ்சு சிரிச்சிட்டு போகுது.."

"கடைசில பக்கத்து வீட்டு ரங்கநாயகி சொல்லித்தான் தெரியுது இவ.. அம்மா வீட்டுக்கு போயிருக்கான்னு.. வீட்ல இருக்கற மருமக எங்க போயிருக்கான்னு பக்கத்து வீட்டுக்காரிய கேட்டு நான் தெரிஞ்சுக்கணுமா.. இதைவிட வேறென்ன அவமானம் இருக்கு எனக்கு.."

"ஏன் அவ சொல்லலைன்னா என்ன? நீங்க போன் போட்டு கேட்க வேண்டியதுதானே..?" ஹரி கோபத்தோடு சிடுசிடுத்தான்..

"ஹான்..‌ ஏன் கேக்க மாட்ட?.. நான் போன் போட்டு மகாராணி எங்க இருக்காங்கன்னு விசாரிக்கணுமோ.. ஏன் அவங்க சொல்லிட்டு போக மாட்டாங்களா.. அது சரி நீ எனக்கு மரியாதை கொடுத்து பேசினாதானே அவளும் மரியாதை கொடுத்து தகவல் சொல்லுவா..!! பெத்த புள்ளை நீயே என்னை மதிக்கறதில்லை.. நேத்து வந்த சிறுக்கி அவ எப்படி மரியாதை கொடுத்து சொல்லிட்டு போவா..?" ஜெயந்தி மூக்கை சிந்தினாள்..

மாதவிக்கு ஆச்சரியமாக இருந்தது.. மறைவில் வாய்க்கு வந்தபடி என்னென்ன பேச்சு பேசி விட்டு இப்போது உலகமகா உன்னதமானவர் போல் எத்தனை அழகாக நியாயத்தை தன் பக்கம் திருப்புகிறார்..

"வந்ததும் வராதுமா பஞ்சாயத்தை ஆரம்பிச்சிட்டீங்களா..? முதல்ல அழறதை நிறுத்துங்க.. இப்ப யாரு உங்களுக்கு மரியாதை கொடுக்கல.. நீங்க மத்தவங்களை எப்படி நடத்தறீங்களோ அதே மாதிரி தான் உங்களையும் மத்தவங்க மதிப்பாங்க.. என்னைக்காவது மாதவி கிட்ட நீங்க அன்பு காட்டி பாசமா ஒரு வார்த்தை பேசி இருக்கீங்களா? கர்ப்பமா இருக்காளே.. அக்கறையா கூப்பிட்டு உக்கார வைச்சு ஒரு வாய் சோறு போட்டுருப்பீங்களா.. அப்படி செஞ்சிருந்தா தாய்க்கு தாயாக மதிச்சு அவளும் உங்ககிட்ட சொல்லிட்டு போயிருப்பா.."

"நீங்க தான் அவளை ஒரு மனுஷியாவே மதிக்கிறது இல்லையே.. உங்க கிட்ட பேசி வயித்துல குழந்தையை சுமந்துட்டு இருக்கற இந்த நேரத்துல தேவையில்லாம மனசை புண்படுத்திக்க வேண்டாம்ன்னு சொல்லாம கிளம்பி போயிருப்பா.. அவளை அம்மா வீட்ல போய் தங்கி இருக்க சொன்னது நான்தான்.. தாலி கட்டின புருஷன் என்கிட்ட தகவல் சொல்லிட்டு போனா போதாதா..?" ஹரி மறுபடி மாறிப் போயிருப்பான்.. மாதவியை விட்டு காட்டுவான் என்று எதிர்பார்த்த ஜெயந்திக்கோ பெருத்த ஏமாற்றம்..

"எனக்கு தெரியும்டா.. நீ உன் பொண்டாட்டி பக்கம் தான் பேசுவ.. அதனாலதான் உன்கிட்ட எதுவுமே நியாயம் கேட்கிறதில்ல.. என் புள்ள என்னை விட்டு போய் ரொம்ப நாளாச்சு.. நான் அனாதை ஆகிட்டேன்.. என் புருஷன் போன அன்னைக்கே நானும் போய் சேர்ந்திருக்கணும்.. மூணு பிள்ளை பெத்தும் ஒண்ணுத்துக்கும் நாதியில்லாம இப்படி லோல் பட்டு நடுத் தெருவில பிச்சைதான் எடுக்கனும்னு என் தலையில எழுதியிருக்குது போல.." கேவலுடன் மூக்கை சிந்தினாள்..

தலைவலியோடு நெற்றியை நீவிக்கொண்டான் ஹரி.. மனைவியை சமாதானப்படுத்தி சரசமாடும் மனநிலையோடு ஆனந்தமாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு.. ஜெயந்தியின் அர்த்தமற்ற பேச்சுக்கள் வெகுவாக எரிச்சல் படுத்தின..

தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை என்றுமே எழுப்ப முடியாது.. கடவுளே வந்து சொன்னாலும் சில விஷயங்களை இவர்கள் ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள் புரிந்துகொள்ளவும் மாட்டார்கள்.. பேசுவது வீண்..

"மாதவி வா போகலாம்.." அவளை முதுகோடு அணைத்து அழைத்துச் செல்ல முயன்றான்..

அவனிடமிருந்து விலகி மாமியாரை முறைத்தாள் மாதவி..

"சும்மா டிராமா போடாதீங்க.. நீங்க பேசினதை நானும் கேட்டேன்.. என் புருஷன் என்னை விட்டுட்டு அந்த ரோஷினியோட போறதுதான் நல்லதுன்னு நீங்களும் உங்க பெரிய மருமகளும் பேசிக்கல..

"வக்கத்த சிறுக்கி இவளுக்கு இப்படி ஒரு சுகபோக வாழ்க்கையா.. என் வயிறெல்லாம் எரியுதுன்னு நீங்க சொல்லல..‌ என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா இவர் இல்லை.. இந்த மாதிரி கேடுகெட்டவளோட என் புள்ள வாழறதுக்கு ரோஷினி கூட போய் சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டும்.. அப்படின்னு நீங்க சொல்லல.." மாதவி ஆக்ரோஷமாக கேள்வி கேட்க ஜெயந்தி விதிர்த்து போனாள்..

"நா..நான் எப்ப அப்படி சொன்னேன்..? ஐயோ ஹரி இவ பொய் சொல்றா.. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என் மேல பழி சுமத்த பாக்கறா..!!"

"நான் பொய் சொல்றேனா இல்ல நீங்க பொய் சொல்றீங்களா..? ஹரி என்னை விட்டு போயிடுவாரு.. அந்த குற்ற உணர்ச்சிக்கு பரிகாரம்தான் இந்த நகை பணம்.. அக்கறை கவனிப்பு.. அப்படின்னு நீங்க சொல்லல?.. உங்க பிள்ளை என் கூட சந்தோஷமா வாழாததுக்கு காரணம் என்னோட கேவலமான நடத்தைதான்னு நீங்க என் மேல பழி சுமத்தல.. எப்படி மனசாட்சியே இல்லாம மாத்தி பேச முடியுது உங்களால..?" மாதவியின் விழிகள் ஜெயந்தியை நெருப்பாக தீண்டியது.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து விட்டாள்.. எப்போதும் போலான குத்திக் காட்டும் பேச்சு என்றால் பேசாமல் கடந்து போயிருப்பாள்.. ஹரி ரோஷினியுடன் போவதுதான் சரி.. இவள் புத்திக்கு சின்னாபின்னமாகி சீரழிய வேண்டும் என்பதை போன்ற ஜெயந்தியின் கேடுகெட்ட வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்த எரிமலை இன்று அடங்காமல் வெடித்து விட்டது..

"ஐயோ ஹரி உன் முன்னாடியே பெத்த தாயை வாய்க்கு வந்தபடி பேசறாளே..? பொய் சொல்றேங்கிறா மனசாட்சி இல்லைங்கிறா..‌ நீ ரோஷினி கூட பழகுனா நான் எதுக்குடா சந்தோஷப்பட போறேன்.. அப்படி சந்தோஷப்படுறவ.. பணங்காசு கூட தேவையில்லை குணம் இருந்தா போதும்னு இவளை ஏன் தேடி கண்டுபிடிச்சு உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கப் போறேன்.." ஜெயந்தி அழுது மாய்மாலம் காட்டினாள்.. ஹரி முகம் இறுகி மரக்கட்டை போல் நின்றிருந்தான்..

"ஆமா கல்யாணம் செஞ்சு வச்சீங்க.. ஆனா அதுல உங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்ல.. இதோ இப்படி குத்திக் காட்டவும் காலில் போட்டு தேய்க்கவும்.. பொம்மை மாதிரி ஆட்டுவிக்கவும்.. உங்க புள்ள தப்பு செஞ்சா அதை பெருசு பண்ணாம இருக்கவும்தானே என்ன மாதிரி ஏழை பொண்ணா தேடி கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சீங்க.."
"என்னடா ஹரி இப்படியெல்லாம் பேசுறா.. பாத்துட்டு சும்மா நிக்கறே..? என்னமோ இவ வாழ்க்கையை நான்தான் கெடுத்த மாதிரி பேசுறா.. பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் இடையில.. நீங்களா சண்டை போட்டீங்க நீங்களா சேர்ந்துக்கிட்டீங்க.. நான் என்னடா செஞ்சேன்.."

"ஒரு நல்ல தாயாக இருந்திருந்தா.. உங்க பிள்ளை இன்னொரு பொண்ணோட தொடர்பு வச்சிருக்காருனு தெரிஞ்சவுடனே கூப்பிட்டு கண்டிச்சிருக்கணும்.. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு துரோகம் பண்ணிட்டு.. பணத்துக்காக எவகூட வேணா போய் வாழட்டும்னு கேவலமா பேசக்கூடாது.." மாதவியின் வார்த்தைகளில் ஹரி அதிர்ந்து திரும்பி அவளை பார்த்தான்..‌

"ஐயோ ஹரி உன் பொண்டாட்டி என்னை ரொம்ப கேவலமா பேசுறா இதுக்கு மேல என்னால தாங்க முடியல.. நெஞ்சு வலி வர்ற மாதிரி இருக்கு..!!" என்று சூழ்நிலையை சமாளிக்க நெஞ்சை பிடித்துக் கொண்டு அங்கிருந்த திண்டின் மீது அமர்ந்தாள் ஜெயந்தி..

ஹரி தாயை கண்டுகொள்ளவில்லை.. மனைவியின் தோள் பற்றி தன் பக்கம் திருப்பினான்..

"மாதவி நீ என்ன சொல்ல வர்றே..?" என்றான் அழுத்தமாக..

மாதவி தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.. நீங்களும் ரோஷிணியும் ஜோடியா பைக்ல போனதை நான் பாத்துட்டேன்னு சொல்றேன்.. இன்னொருதத்தர் மனைவி கூட நீங்க உங்க பழைய காதல் உறவை புதுப்பிச்சுக்கிட்டதுல உங்க அம்மாவுக்கு ஏக சந்தோஷம்ன்னு சொல்றேன் உங்களுக்கு புரியலையா..?" பார்வையிலும் பேச்சிலும் சீற்றம் தெரிந்தது.. ஹரி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"என்ன ஹரி.. உங்க அம்மாவை மாதிரி நீங்களும் நான் பார்த்ததெல்லாம் பொய்.. அது என்னோட மன பிரமைனு சொல்ல போறீங்களா..? உனக்கு நான் துரோகம் செய்வேனா.. உன் வாழ்க்கைக்கு நான் கெடுப்பேனா அப்படின்னு உங்க அம்மா மாதிரி வசனம் பேச போறீங்களா..?" பேச்சில் கிண்டல் தெரிந்தாலும் அளவுக்கு மீறிய வலி அவள் வார்த்தைகளில்..

ஹரி பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றதென்னவோ ஒரு சில கணங்கள் தான்..

"உண்மையை சொல்லுங்க ஹரி.. நீங்க அவ கூட போனது உண்மைதானே..?" மாதவியின் கண்களில் நீர் திரண்டது..

விழிகளை மூடி திறந்து அவளைப் பார்த்தான் ஹரி..

"உண்மைதான்.. நீ பார்த்தது உண்மைதான்.. நான் அவ கூடதான் பைக்ல போனேன்.." ஹரி சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட.. மாதவியின் உயிர் தனியே பிரிந்து என்றது.. ஜெயந்தியும் இந்நேரம் ஸ்தம்பித்து போயிருந்தாள்..

இத்தனை நேரமும் மனைவிக்காக வாதாடியவன்.. இப்போது ஆமாம் இன்னொரு பெண்ணுடன் நீ என்னை பார்த்தது நிஜம்தான் என்று சொன்னால்.. குழப்பமும் திகைப்பும் வரத்தானே செய்யும்..

வெகுநேரம் அங்கேயே நின்றிருந்தாள் மாதவி.. அதுக்கு மேல்தான் அங்கு நின்றால் மருமகள் தன்னை வறுத்து வாயில் போட்டுக் கொள்வாள் என்ற பயத்தில் அங்கிருந்து வெளியேறி வெளி வேலைகளை கவனிக்க சென்று விட்டாள் ஜெயந்தி..

மாதவி எவ்வளவு நேரம் அங்கே நின்றாள்.. எப்போது உள்ளே சென்றாள் அவளுக்கே தெரியவில்லை.. ஒருவேளை ஹரி வந்து உள்ளே அழைத்துச் சென்றிருக்க கூடும்‌‌.. அதைக் கூட உணர முடியாத நிலை..

கட்டிலில் அமர்ந்து நிலை குத்திய விழிகளுடன் எதிர் திசையை பார்த்திருந்தாள்.. இப்போது அவளுக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்..

அவள்தான் வேண்டும் என்றால் பின்பு எதற்காக இந்த நாடகம்..?

அதை நேரடியாக அவனிடம் கேட்கவும் செய்திருந்தாள்..

அவள் பக்கத்தில் அமர்ந்தான் ஹரி.. எழுந்து தள்ளி நின்று கொண்டாள்..

"நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..!! உங்களுக்கு உங்க பழைய காதலிதான் வேணும்னா நீங்க தாராளமாக அவகூட போகலாம்.. நான் தடுக்கவே இல்லை.. ஆனா எதுக்காக நடுவுல இந்த நாடகம்.. விலகிப் போகணும்னு நினைப்பிருந்தா என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து எதுக்காக என் மனதை கலைச்சீங்க..!!"

"மாதவி உன் மனச கலைக்கல.. உன் கூட நான் வாழ விரும்பறேன் இதுதான் உண்மை..!!"

"இன்னும் எவ்வளவுதான் என்னை ஏமாத்துவீங்க ஹரி.." கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது..

"என் கண்மணி" அவள் கண்ணீரை துடைக்க கரம் உயர்த்தினான்..

"அப்படி கூப்பிடாதிங்க.." கொதித்தாள் மாதவி..

"நான் ரோஷினி கூட போனது உண்மைதான்.. ஆனா நீ நினைக்கிற மாதிரி காரணம் இல்ல.."

"வேற என்ன உன்னதமான காரணம் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கிறேன்.."

"மாதவி கல்யாணத்துக்கு பிறகு ரோஷினியை பார்த்ததும் என் மனசு சலனப்பட்டது உண்மைதான்.. ஆனா ஒரு கட்டத்துல நீதான் என்னோட உலகம்னு புரிஞ்சுகிட்ட பிறகு நான் ரோஷினிகிட்டருந்து முழுமையா விலகிட்டேன்.. அதுக்கப்புறம் நான் அவளை பார்க்க கூட இல்லை.."

"ஆனா திடீர்னு ஒரு நாள் அவ என்னை தேடி வந்தா.. இத்தனை நாள் தன்னோட மாமியார் வீட்டுக்கு போயிருந்ததாகவும்.. நான் இல்லாம அவளால வாழ முடியாது.. எங்கேயாவது ஓடிப்போய் கண்ணுக்கு மறைவா சந்தோஷமா வாழலாம்னு சொன்னா.."

"ஓஹோ அதுக்கு சார் என்ன சொன்னீங்க..?"

ஆழ்ந்த பெருமூச்சுடன் அவளை பார்த்தான் ஹரி..

"நான் உன்னை காதலிக்கிறதா சொன்னேன்.. என் மனைவிக்கு துரோகம் பண்ண முடியாதுன்னு சொன்னேன்.. என் மனசுல என் பொண்டாட்டியை தவிர வேற யாருக்கும் இடம் இல்லைன்னு அழுத்தம் திருத்தமா சொல்லிட்டேன்.."

"ஹாஹாஹா.." பயங்கரமாக வெடித்து சிரித்தாள் மாதவி.. அவள் சிரிப்பில் வித்யாசத்தை உணர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி..

"நல்ல காமெடிங்க.."

"மாதவி நான் உண்மையை சொல்லிட்டு இருக்கேன்.."

"நம்பிட்டேன்.. அப்புறம்.. உங்க மனைவி மேல நீங்க வச்சிருந்த காதலை விலாவாரியா எடுத்துச் சொல்ல பார்க் பீச்சுன்னு சுத்துனீங்களா.. அதுவும் பைக்ல ஜோடி போட்டுக்கிட்டு.." மார்பின் குறுக்கே கையை கட்டி ஏளன புன்னகையோடு கேட்டாள் மாதவி.

"மாதவி.. அவ புருஷனை விட்டுட்டு என் கூட வாழ வர்றேன்னு சொன்னா.. அது தப்பு.. உனக்கு உண்மையா இருக்கிற புருஷனுக்கு நீயும் விசுவாசமா இருக்கணும்னு அறிவுரை சொன்னேன்.. அவரோட அன்புக்கும் பாசத்துக்கும் துரோகம் பண்ணாதேன்னு எடுத்து சொன்னேன்.. இங்க இருக்கிறதை விட நீ உன் வீட்டுக்காரரோட வெளிநாட்டில் இருப்பது தான் உனக்கு நல்லதுன்னு சொல்லி புரியவைச்சு அவளுக்கு பாஸ்போர்ட் விசா பிரச்சனையை கிளியர் பண்ண உதவி செஞ்சேன்.."

"அடடா அப்புறம்..?"

சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி..

"நீ என்னை நம்பலன்னு தெரியுது மாதவி.."

"அய்யோ உங்கள நம்பாம எப்படி.. உங்க தோள் மேல கை போட்டு அவ சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வர்றதை பார்த்த பிறகும் உங்களை நம்பாமல் போவேனா..!! கண்டிப்பா நீங்க அறிவுரை சொல்லி இருப்பீங்க அதைக் கேட்டு அவளும் திருந்தி இருப்பா..? நான் ஒரு முட்டாள்தானே இதை எல்லாம் நம்பித்தான் ஆகணும்.."

"கண்ணால பாக்கற எதுவும் உண்மை இல்ல மாதவி..‌ அவ என்ன செடியூஸ் பண்ண ட்ரை பண்ணினது உண்மைதான்..‌ ஆனா நான் அவளுக்கு மயங்கல..‌ சத்தியமா அவ புருஷனோட அன்பை அவளுக்கு புரிய வச்சேன்.. முறையில்லாத மோகம் தீராத பாவத்தில் கொண்டு போய் விடும்னு அவளுக்கு எடுத்து சொன்னேன்.. எனக்கு ஒரு சதவீதம் கூட அவள் மேல எந்த நாட்டமும் இல்லைனு தெரிஞ்சுக்கிட்டு அவளே விலகிட்டா.. தன் மேல உயிரையே வச்சு தன்னை நம்பி ஊருக்கு அனுப்பி வைச்சிருக்கிற புருஷன்தான் தனக்கு சாஸ்வதம்னு புரிஞ்சுகிட்டா.." பொறுமையாக நிதானமான குரலில் எடுத்துச் சொன்னான் ஹரி..

"அப்போ உங்க பழைய காதலி மேல உங்களுக்கு எந்த மயக்கமும் இல்லைன்னு சொல்றீங்க அப்படித்தானே..!!"

"அதுதான் உண்மை மாதவி.. எனக்கு உன் மேல மயக்கம்..‌"

மாதவி சிரித்தாள்.. இந்த மாதிரியெல்லாம் பேசி என்னை வழிக்கு கொண்டு வந்துட்டா மறுபடி உங்க கூட வாழ்வேன்னு எண்ணம்.. . அவளையும் சேர்த்து வச்சுக்கிட்டு இரண்டு பேர் கூட வாழலாம்னு கனவு காண்றீங்க!! நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் ஹரி.. நான் கண்ணகி இல்லை.."

"நானும் கோவலன் இல்லை மாதவி..‌ என் மனசும் உடம்பும் சுத்தமா இருக்கு..‌ இரண்டுமே உனக்கு மட்டும் தான் சொந்தம்.. நான் என்ன செஞ்சா நீ நம்புவே..?"

"நிறைய நிறைய அடிபட்டுட்டே இருக்கேன் ஹரி.. என்னால எதையும் ஈசியா நம்பி ஏத்துக்க முடியல.. நீங்க எனக்கு கொடுத்த காயங்கள் ஏராளம்.. எதிர்காலத்தை பத்தின நான் பயம் என்னை அழுத்துது.. இப்ப நான் தனியாள் இல்ல.. உங்க குழந்தையை வயித்துல சுமக்கிறேன்.."

"உன்னையும் நம்ம குழந்தையும் நான் பத்திரமாக பார்த்துக்குவேன் மாதவி..‌ உங்க ரெண்டு பேரையும் நான் நெஞ்சுல சுமக்கறேன்.. புரியலயா உனக்கு.."

மாதவி அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்தாள்..

"என்னை நம்பு மாதவி.. உன் நம்பிக்கைதான்.. எனக்கு பலம்.."

"நம்பிக்கை தானா வரணும் ஹரி.. புகுத்த கூடாது.. உங்களையும் ரோஷினியையும் ஜோடியா பார்த்து திகிலடைஞ்சு போயிருக்கேன்.. நீங்க எப்ப என்ன செய்வீங்களோன்னு நினைச்சு மனசெல்லாம் ஒரே பயமா இருக்கு.. திடீர்னு என்னை வெறுத்தீங்க.. திடீர்னு அளவுக்கதிகமாக காதலிக்க ஆரம்பிச்சீங்க.. இப்ப மறுபடியும் திடீர்னு ரோஷினி கூட பழகறீங்க.. எல்லாமே என் வாழ்க்கையில் திடீர் திடீர்னு நடக்குது.. நடக்கறதை அப்படியே நம்பி ஏத்துக்கற அளவுக்கு எனக்கு மனப்பக்குவம் இல்லை.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. எது உண்மை எது பொய்ன்னு யோசிச்சு முடிவெடுக்க எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை.. எனக்கும் என் வயித்துல இருக்கற குழந்தைக்கு மன நிம்மதி வேணும்.. என்னை அப்படியே விட்டுடுங்க..‌" விரக்தி அவள் வார்த்தைகளில்..

"எதுக்காக கால அவகாசம் வேணும் மாதவி..? என்னை விட்டுட்டு போறதுக்கா.. அப்படி ஒரு விஷயம் என்னைக்குமே நடக்காது.. நீ என்னுடைய சொத்து..‌ உன்னை எப்பவும் யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நினைவு வச்சுக்கோ.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்..

"அம்மா எப்படியும் சமைச்சிருக்க மாட்டாங்க.. நான் உனக்காக சாப்பாடு வாங்கிட்டு வரேன்.. நாளையிலிருந்து நாம தனியா சமைச்சுக்கலாம்.." சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றான் ஹரி..

ஹரி சொன்ன அனைத்தும் உண்மை.. அவன் காதல் கண்களில் தெரியவில்லையா.. வார்த்தைகளில் புரியவில்லையா.. நம்பு மாதவி என்கிறது மனம்..

உன்னை ஏமாற்றுகிறான்.. குழி தோண்டுகிறான்.. இத்தனை பட்ட பின்பும் அறிவு வரவில்லையா.. நம்பாதே மாதவி என்கிறது மூளை..

கவலையும் கஷ்டங்களும் மனதை குழப்பி பலவிதமாக யோசிக்கச் சொல்லும்..

அமைதி மட்டுமே உண்மையை உணர்த்தும்..

ஆழ்ந்து உள்வாங்க வேண்டும்..

உள்ளுணர்வு உள்ளதை சொல்லும்..

அன்று ஹரியை புரிந்து கொள்வாள் மாதவி..

புரிந்து கொள்ளும்போது மீண்டும் எல்லாமும் பிழையாகிப் போகும்..

தொடரும்..
 
New member
Joined
Sep 10, 2024
Messages
24
Adangappa mudiyalla samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😃
 
Joined
Jul 10, 2024
Messages
42
என்ன கடைசியில பொசுக்குன்னு ஒரு குண்டை💣💣💣💣💣💣💣💣 தூக்கி போட்டுட்டீங்க. இனி அடுத்த எபி வரும் வரை தலைவலி தான். போங்க சனா டியர் எங்களை இப்படி காய விடக்கூடாது.🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

மாதவி மனம் இரண்டுங்கெட்டான் நிலையில் குழப்பம் அடைந்துவிட்டது. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ அவள் மனம் தெளிவடைந்தால் மட்டுமே ஹரியின் உண்மை காதலை உணரமுடியும்.

ஏன்டா ஹரி நீ பண்ற எல்லாமே ஏடாகூடமா இருந்தா மாதவியும் என்ன பண்ணுவா. உங்க அம்மாவே குழம்பி நிக்கும் போது அவள் நிலை அதைவிட மோசம் தான். பாவம்
 
Member
Joined
Sep 14, 2023
Messages
120
ஹரியின் மாற்றத்திற்கான காரணம் தெரிந்தால் மாதவி ஹரியை நம்புவாளா......😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
 
Member
Joined
Jan 29, 2023
Messages
40
💝💖💝💖💝💖💝💖🥺🙄🥺🙄🥺🙄
 
Member
Joined
Aug 8, 2024
Messages
3
"நம்பிக்கை தானா வரணும் . . . புகுத்த கூடாது" - well said.

Word choices are worth mentioning. Nice episode. Thank you...
 
Member
Joined
Jan 11, 2023
Messages
31

No comments
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
104
Aga potham ava kasta padanum avalo thana....jayanthi.....💜💜💜🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😛😛😛😛🥰🥰🥰
 
Joined
Jul 31, 2024
Messages
32

தொடர்ந்து அடி வாங்கும் போது நம்பிக்கை வரது கஷ்டம் பாக்கலாம் ஆனா இந்த மாதிரி உத்தம மாமியார்கள் தான் உலகத்தில் அதிகம் போல 😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏😏
 
Top