- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
"பப்லு.. பப்லு.."
"இங்கதான் இருக்கியா..! என் கண்ணுக்கு நீ தெரியவே மாட்டேங்கறியே..? நீ என் கண்ணுக்கு தெரியலைன்னாலும் நான் உங்கிட்ட பேசத்தான் செய்வேன்.. எப்பவும் என்னுடைய இன்விசிபிள் ஃபிரண்ட் நீ தான்.."
"ஓஓ..! அப்ப டாக்டர் உன்னோட ஃபிரண்டு இல்லையானு கேக்கறியா..?"
"இப்பதான் கொஞ்சமா ஃபிரண்ட் ஆகியிருக்கார்.. ஒரு பத்து பர்சன்ட்..! அதுக்குள்ள எல்லா விஷயங்களையும் அவர நம்பி எப்படி வெளிப்படையோ சொல்ல முடியும் நீயே சொல்லு..!"
"ஆனா டாக்டர் ரொம்ப நல்லவர்.. எனக்காக சத்யா கிட்ட சண்டை போட்டு.. இந்த வீட்ல கொண்டு வந்து தங்க வச்சு.. வேண்டிய துணிமணியெல்லாம் வாங்கி கொடுத்து.. சாப்பிட வச்சு.. ரொம்பவே மெனக்கெடறார் இல்ல..? எனக்காக யாருமே இப்படி செஞ்சதில்லையே பப்லு..! நீ கூட வார்த்தையிலதான் ஆறுதல் சொல்லுவே.. தப்பு செஞ்சா கண்டிச்சு பேசுவ..! ஆனா என்னைக்காவது இப்படியெல்லாம் உதவி செஞ்சிருக்கியா..? அவர் செய்யறாரே..! அன்னைக்கு ஃபோன் பண்ணி கூப்பிட்டதும் எனக்காக உடனே வந்து நின்னாரே..! அந்த கல்பிரிட்ஸ் கூட சண்டையெல்லாம் போட்டு.. சத்யாவோட கையை எனக்காக குத்தி காயப்படுத்தி.. அவர் செஞ்ச ஒவ்வொரு விஷயத்திலும் எனக்கான ஸ்பெஷல் கேரிங்கை பார்க்க முடிஞ்சது.. ஒரு டாக்டர் தன்னோட பேஷன்ட்டுகாக இவ்வளவு செய்வாங்களா என்ன..?"
"அவரை நம்பலாம் தானே..! ஆனா என்ன பப்லு..? விக்ரமன் படத்துல வர்ற மாதிரி இந்த வீட்ல எல்லாருமே நல்லவங்களா இருக்காங்க.. அதுலயும் டாக்டர் சாரோட அம்மா.. அன்னைக்கு என்னடான்னா நான் ஈரமாக்கின படுக்கை விரிப்பை அருவருப்பே இல்லாம எடுத்துட்டு போய் துவைக்கறாங்க.. இன்னைக்கு என்னடான்னா சாப்பாடு ஊட்டி விடறாங்க.. நான் எத்தனையோ முறை ஒரு கேரிங் ஃபாதர் எப்படி இருக்கணும்னு என் ஆசை தீர கற்பனை பண்ணி பாத்திருக்கேன்.."
"ஆனா ஒரு கேரிங் லவ்வபில் மதர் இருந்திருந்தா இப்படித்தான் இருந்திருப்பாங்களோன்னு கற்பனை பண்ணி பாக்க வச்சுட்டாங்க..! சோ.. ஸ்வீட்.. பட் சோ சேட்.. இதெல்லாம் வேண்டாம்.. எதுக்கு இந்த தற்காலிக அன்பு..! நான் ஒரு கெஸ்ட்.. அதனால எல்லாரும் என்ன நல்லா கவனிச்சுக்கறாங்க.. என்ன இருந்தாலும் ஒரு தாய்க்கு அவங்க பெத்த குழந்தைகள்தானே ரொம்ப ஸ்பெஷல்.. அப்படித்தானே பப்லு.. ஒரு நாள் முழுக்க எனக்கு அம்மாவா இருக்கிற காம்பெட்டிஷன்ல நிச்சயமா இவங்களும் தோத்துதான் போக போறாங்க..!" தோள்களை குலுக்கினாள்..
"பப்லு..! உனக்கொரு விஷயம் தெரியுமா..?" தேம்பாவணி குலுங்கி சிரித்தாள்..
"என்ன வெறுப்பேத்தறதா நினைச்சுக்கிட்டு அப்பாவும் பொண்ணும் அப்படி ஒரு நடிப்பு.. ஆனா அந்த நடிப்பில் கூட ஒரு ரியாலிட்டி இருந்தது..! நடிக்கிறேன் பேர்வழின்னு உண்மையிலேயே பாசத்தை பொழிஞ்சுக்கறாங்க.. இந்த அன்பு பாசத்துக்கு முன்னாடி நடிப்பெல்லாம் தோத்துப் போயிடுமோ..?"
"யாரோட பேசிகிட்டு இருக்க..?" வருண் உள்ளே வந்தான்..
"இல்லையே..! யாரோடவும் பேசலையே..?" ஒரு கணம் தேம்பாவணி திணறினாள்..
"சத்தம் கேட்டதே..! உன் குரலை கேட்டுக்கிட்டே தானே உள்ள வரேன்.." என்றபடியே கட்டிலில் அவளுக்கு எதிர் பக்கம் அமர்ந்து கொண்டான்.
"அது சும்மா பாட்டு பாடினேன்..!"
"அப்படியா..? என்ன பாட்டு.."
இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
கடலலை போலே வந்து
கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது
போக கண்டேனே
இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்பவில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே
எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வாா்த்தை கேளு நின்று
இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் என்று
பாடி முடிக்கும் வரை புன்னகையோடு பார்த்திருந்தான் வருண்..
"ம்ம்.. குட்.. நல்லாவே பாடற..! ஏன் இவ்வளவு நேரம் தூங்காம முழிச்சிட்டு இருக்க.. மணி பத்தை தாண்டிடுச்சே..?"
"நீங்க வராம எப்படி தூங்கறது..! இந்த ரூம்ல தனியா இவ்வளவு நேரம் இருந்ததே பெருசு.. இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா உங்கள தேடி ஓடி வந்துருப்பேன்..!"
"அதான் நானே வந்துட்டேனே..! படு.. சீக்கிரம் தூங்கினாத்தான் காலையில சீக்கிரம் எழுந்துக்க முடியும்.. நாளைக்கு காலேஜ் வேற போகணும் இல்ல..!" என்றபடி படுத்திருந்தவளின் இடுப்பு வரைக்கும் போர்வையை போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தான்..
"டாக்டர் சார்..!"
ஒருவேளை காலேஜ்க்கே சத்யா வந்துட்டா..? அப்பா வந்துட்டாருன்னா..? மறுபடி என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா..?"
"வரமாட்டாங்க..!"
"எப்படி சொல்றீங்க.. ஏன் வர மாட்டாங்க ஒருவேளை வந்துட்டா என்ன பண்றது..!"
"நூறு சதவீதம் உறுதியா சொல்றேன்.. அவங்க வரமாட்டாங்க.. அப்படியே வந்தாலும் அவங்க தலைய பார்த்ததும் எனக்கு போன் பண்ணு.. அடுத்த நிமிஷம் நான் அங்க இருப்பேன்.. அப்படியெல்லாம் உன்னை விட்டு கொடுத்திட மாட்டேன்.."
"ம்ம்.. எ.. என்னது..?" தேம்பாவணிக்கு உறக்கத்தில் கண்கள் சொருகியது..
"ஐ மீன்.. அப்படியெல்லாம் உன்னை விட்டுட மாட்டேன்.. கண்டதையும் யோசிக்காம தூங்கு.."
"நீங்க எனக்காக நிறைய செய்யறீங்க..! பதிலுக்கு நான் உங்களுக்காக என்ன செய்யப் போறேன்னு ஒன்னும் புரியல.. தேங்க்ஸ் டாக்டர்..!"
"இப்ப நீ அமைதியா தூங்கினா அதுவே எனக்கு செய்யற பெரிய உபகாரம்தான்..!"
"நா..ன் தூங்கி..ன உட..னே எழுந்து போயிடு..வீங்க..ளா..!"
"பின்ன ராத்திரி முழுக்க இங்கயே உட்கார்ந்துருக்க முடியுமா..?" அவன் சிரித்தான்..
"இருங்களேன்.. நிம்மதியா தூங்குவேன்..!"
"தூங்கின பிறகு நான் இருக்கேனா இல்லையான்னு உனக்கென்ன தெரியப்போகுது.. டேப்லெட் போட்டியா தேம்பா..?"
"ம்.. ம்.. ம்ம்..!"
"டாக்டர் சார்..நா.. அந்த.. பப்லு.."
"தூங்குடா..!" தேம்பாவணி நெற்றியில் தன் கரத்தை வைத்து மென்மையாக அழுத்தினான்..
அதற்கு மேல் பேச்சில்லாமல் உறங்கிப் போயிருந்தாள் அவள்..
அவள் உறங்கிய பின்னும் சில நிமிடங்கள் பக்கத்திலேயே அமர்ந்து அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அலுப்பும் இல்லை.. சலிப்பும் இல்லை..!
குவிந்த உதடுகளோடு சீராக மூச்சுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தவளை கண்டு ஒரு புன்னகையை உதிர்த்தவன் மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்து சத்தம் வராமல் கதவை சாத்திவிட்டு தன் அறைக்கு வந்தான்..
அவனுக்காக காத்திருந்தாள் திலோத்தமா..
"நீ இன்னும் தூங்கலையா..?"
"எங்க போயிட்டு வர்றீங்க.." அவள் கேள்வியில் புருவங்களை நெறித்தான்..
"இந்த கேள்வி உனக்கு அவசியம்தானா..?"
"ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிச்சிட்டு இருக்கோம்.. ராத்திரி இவ்வளவு நேரம் ரூமுக்குள்ள வராம நீங்க வெளிய சுத்திக்கிட்டு இருந்தா உங்க வீட்டு ஆளுங்க கேள்வி கேட்க மாட்டாங்களா..?"
"ஆமா இதைத் தவிர மத்த எல்லா விஷயத்திலையும் கேள்வி கேட்காத அளவுக்குத்தான் நீ நடந்துக்கற அப்படித்தானே..?"
"முதல்ல எங்க போயிட்டு வரீங்கன்னு சொல்லுங்க.. நாளைக்கு யாராவது கேள்வி கேட்டா நான் பதில் சொல்லணும் இல்லையா..! எதுவும் தெரியாதுங்கற மாதிரி ஙேன்னு முழிக்க கூடாதே..!"
"தேம்பாவணி தூங்கிட்டாளான்னு செக் பண்ணிட்டு வந்தேன்.."
"அடடா ஒரு வயசு பொண்ணு மேல அப்படி என்ன அக்கறை உங்களுக்கு..?"
"மைன்ட் யுவர் வேர்ட்ஸ்..! அவ இந்த வீட்டு விருந்தாளி..! இந்த வீட்டு சூழ்நிலை கம்பர்டபிளா இருக்கா இல்லையான்னு செக் பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு.. ஏன்னா அவளை நான் தான் இங்க கூட்டிட்டு வந்தேன்..! உன் கண்ணுக்கு எல்லாம் தப்பா தெரிஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.. உனக்கு எல்லாத்தையும் விளக்க வேண்டிய அவசியமும் இல்லை.."
"அய்யோ நான் தப்பா நினைக்க என்ன இருக்கு..! சொல்லப்போனா என் கண்ணுக்கு எதுவும் தப்பா தெரியல.. ஏன்னா உங்களையும் அவளையும் சேர்த்து வச்சு பார்க்கும்போது அப்பா பொண்ணு மாதிரி இருக்கு.. சோ.. நான் மட்டும் இல்லை.. வேற யாருமே நீங்க அவ மேல காட்டுற அக்கறையை தப்பாவே எடுத்துக்க முடியாது..!" சொல்லிவிட்டு பழி தீர்த்துக் கொண்ட திருப்தியுடன் தன்னறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள் திலோத்தமா..!
"அப்பா பொண்ணா..?" சில கணங்கள் அப்படியே நின்றிருந்தவனுக்கு மீண்டும் சுதாரித்து தெளிவடைய ஒரு சில நிமிடங்கள் பிடித்தன..
"நெனச்சுக்க..! இப்ப என்ன அதனால..?" தோள் குலுக்கலுடன் கட்டிலில் விழுந்தான்..
திடீரென்று எழுந்து அமர்ந்து தாடையை தேய்த்தபடி எதிரே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான் வரூண்..!
She is deleberately provoking me..!
மோதியெழுந்த சினத்தோடு மீண்டும் படுக்கையில் விழுந்தான்..!
"ஏன்டா நான் கிழவினா முப்பத்தெட்டு முடிந்த நீ என்ன குமரனா..! காலா காலத்துல கல்யாணமாகி புள்ள பொறந்திருந்தா இந்நேரம் அது வயசுக்கு வந்திருக்கும்..!" வெண்மதி கேலி செய்ததை கூட புன்னகையோடு இயல்பாக எடுத்துக் கொண்டவனுக்கு திலோத்தமாவின் வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சை சுரண்டுகிறது..!
"என் பிள்ளைக்கு என்னடி..? மார்க்கண்டேயன்..! அவன பாத்தா யாராவது முப்பத்தெட்டு வயசுன்னு சொல்லிட முடியுமா..?"
வெண்மதிக்கு பதிலடியாக அன்று தாய் சொன்ன வார்த்தைகள் இன்று கொஞ்சம் இதமாய் நெஞ்சை வருடுகிறது..
வயது குறித்த கேலிச்சித்திரங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தருபவனா இந்த வருண்.. எதையும் டேக் இட் ஈஸி பாலிசியென கடாசிவிட்டு கடந்து செல்பவன்.. இன்று கொஞ்சம் டென்ஷனாகிவிட்டான்..! இயல்பு மாறுகிறதோ..
Varum Just be yourself.. நெஞ்சை தட்டிக் கொண்டான்..
எப்போதும் சோம்பலாக.. வெறுமையாகவே விடியும் காலை விழிப்பு இன்று புத்துணர்ச்சியோடு புலர்ந்ததாக உணர்ந்தாள் தேம்பாவணி..
"கு.. ட்.. மார்னிங் ப..ப்..லு..!" என்றெழுந்தவள் படுக்கை விரிப்பை பரிசோதித்து பார்க்க.. அது ஈரமில்லாமல் போனதில் கூடுதலாக உற்சாகம் தொற்றிக் கொண்டது..
"பாப்பா..!" என்றபடியே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் சாரதா..
"எழுந்துட்டியா..! இந்தா பல்லு விலக்கிட்டு வந்து சூடு ஆறுறதுக்குள்ள இந்த காப்பிய குடிச்சிடு" கோப்பையை மேஜை மீது வைத்து விட்டு அமர்ந்திருந்த அவள் தோரணையை பார்த்து.. "இன்னைக்கு ஏதாவது ஈரம் பண்ணி வைச்சிருக்கியா.. குடேன்.. தொவச்சு போட்டுடறேன்..!" கேலியாக அல்லாமல் ஒரு சின்ன குழந்தையிடம் கேட்பதை போல் உதடு குவித்து அக்கறையும் குறும்புமாய் கேட்க..! அந்தக் கனிவில் உருகிப் போனாள் தேம்பாவணி..
"இன்னைக்கு இல்ல..!" அவள் கண்களை சிமிட்டி உதட்டை துருத்திக் கொண்டு சொல்ல.. சின்ன சிரிப்போடு தேம்பாவணியின் கன்னத்தை கிள்ளி.. "வருண் உன்னை எழுப்பி விட சொன்னான்.. சீக்கிரமா தயாராகி வெளியே வருவியாம்.. உன்னை காலேஜ்ல விட்டுட்டு அவன் கிளினிக் போகனும்..! நேரமாச்சுனா கத்துவான்..! போ சீக்கிரம் பல்லை விலக்கிட்டு வந்து காப்பிய குடிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பு.." என்று விட்டு சாரதா அங்கிருந்து நகர்ந்து கொள்ள.. செங்கலும் சிமெண்ட்டுமாக உயிர்ப்பில்லாத நான்கு சுவற்றுக்குள் வாழ்ந்தவளுக்கு சாரதாவின் பேச்சிலும் பரிவிலும் கோவிலுக்குள் நுழைந்த தெய்வீக தன்மையை உணர்ந்த சிலிர்ப்பு..
நான்கு பெண்களும் பூஜை அறையில் இருந்தனர்.. வெண்மதி விளக்கேற்றிக் கொண்டிருக்க.. சாரதா பூஜை முடித்து தீபாராதனை காட்டினார்.. திலோத்தமா வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்..
தேவையற்ற தவிப்போ போராட்டமோ எதுவுமின்றி நிச்சலமான மனதோடு கை கூப்பி இறைவனை பிராத்தித்தாள் தேம்பாவணி..!
தீபத்தை கண்களில் ஒற்றிக் கொண்ட நேரம் சாரதா அவள் நெற்றியில் குங்குமம் இட்டு விட்டாள்..
நால்வரும் வெளியே வந்த பின்..
அவசரமாக தேம்பாவணியை பின்தொடர்ந்து சென்றாள் திலோத்தமா..
"என்ன என்ன.. ஏன் இப்படி விழுந்தடிச்சுகிட்டு பின்னாடி ஓடுற..!" வெண்மதி அவளை தடுத்து நிறுத்த..
"இல்ல அவ கைல எதையோ கொண்டு போன மாதிரி இருந்துச்சு..!" என்றவளின் பார்வை தேம்பாவணியை விட்டு அகலவில்லை..
"என்ன கொண்டு போயிருக்க போறா..! விபூதி குங்குமம்..! இல்லனா வாழைப்பழம் கல்கண்டு இப்படி ஏதாவது இருக்கும்.."
"இல்ல பூஜை ரூம்லருந்து ஏதோ காஸ்ட்லியான பொருளை தூக்கிட்டான்னு நினைக்கிறேன் திருடி தானே அவ..! அன்னிக்கு ஓட்டல்ல அவ செஞ்ச காரியம் உங்களுக்கு தெரியும் தானே..!"
"சும்மா இப்படி பேசாதே திலோத்தமா.. அவ நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி.. வருண் கேட்டா உன் மேல ரொம்ப கோவப்படுவான்..! ஆதாரமில்லாமல் ஒருத்தர் மேல குற்றம் சுமத்துறது ரொம்பவே தப்பு.."
"என்ன தப்பு.. இப்பவே அவளை கையும் களவுமா பிடிச்சு விசாரிச்சா என்னத்த திருடிட்டு போறான்னு தெரிஞ்சிட போகுது..!"
கண்களை விரித்து நீண்டதாய் பெருமூச்சு விட்ட வெண்மதி "அம்மா தாயே நீ இந்த பக்கம் போ.. அந்த புள்ளகிட்ட எதையாவது ஏடாகூடமாக கேட்டு தேவையில்லாத பஞ்சாயத்தை இழுத்து வைக்காதே..!" என்றாள் கொஞ்சம் காட்டமாக..
"என்னையவே குறை சொல்லுங்க.. வீட்ல ஒவ்வொரு பொருளா காணாம போகப்போகுது.. மொத்தமா எல்லாத்தையும் மூட்டை கட்டி தூக்கிட்டு போகப்போறா.. அப்ப தெரியும் அவ இலட்சணம்..!" திலோத்தமா புலம்பிக் கொண்டே இந்த பக்கம் சென்று விட.. தேம்பாவணி சென்ற திசையை பார்த்து நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டாள் வெண்மதி..
உணவு மேஜையில் தேம்பாவணியின் பக்கத்தில் அமர்ந்தான் வருண்..
"குட் மார்னிங் தேம்ஸ்.." என்றவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்து "என்ன இன்னைக்கு மங்களகரமா இருக்க..!" என்று புருவங்கள் நெறிய புன்னகைக்க..
அவன் கேள்விக்கோ அந்த பார்வைக்கோ.. பெரிதாக முக்கியத்துவம் தராமல்.. "நீங்க ஏன் காலையில என்ன வந்து பாக்கவே இல்ல.." என்றாள் கண்களோரம் சுருங்கி நின்ற சின்ன கோபத்துடன்..
"அதான் அம்மாவை அனுப்பி வச்சனே..!"
"நீங்க ஏன் வரலைன்னு கேட்டேன்.. காலையில நான் எழுந்திருக்கும் போது கண் முன்னாடி வந்து ஒரு குட் மார்னிங் சொல்லனும்னு உங்களுக்கு தோணலையா.."
கண்களை விரித்து.."ஓஓஓ.. இப்படி வேற இருக்குதா" என்றவன்..
"ஆல்ரைட்.. மேடம் நாளையிலிருந்து தூங்கி கண்ணு முழிச்சவுடனே நீங்க பாக்கற முதல் நாள் நானாத்தான் இருப்பேன் போதுமா..!" குனிந்து அவள் முகத்தை பார்க்க சமாதானமாகாதவள் போல் உதட்டை சுழித்துக்கொண்டு தலையசைத்தாள் தேம்பாவணி..
குரலை செருமிக் கொண்டு.. "தட்ட பாத்து சாப்பிடுங்க.." என்றபடி வருணின் தட்டில் இரண்டு பூரிகளை வைத்தாள் திலோத்தமா..
"ஐயோ பூரி வேண்டாமே..! நெஞ்சு கரிக்கும்.." என்றவன் தன் தட்டிலிருந்த பூரிகளை தேம்பாவணியின் தட்டுக்கு இடம் மாற்றி விட்டு அம்மா வேற ஏதாவது லைட்டா டிபன் ஐட்டம் செஞ்சிருக்கீங்களா..!" சாரதாவை பார்த்து கேட்க..
"குழந்தைகளுக்காக கொஞ்சமா இடியாப்பம் செஞ்சேன்.. அந்த கிண்ணத்தில் இருக்கு பாரு.. திலோத்தமா அவனுக்கு பரிமாறு.." என்றதும் திலோத்தமா அந்த கிண்ணத்தை எடுக்கப் போக.. அதை தானே எடுத்து பரிமாறிக் கொண்டான் அவன்..
"பூரி சாப்பிடுவதான..? இல்ல இடியாப்பம் வேணுமா.." என்றபடி அவள் பக்கமாக தலையை சாய்த்தான் வருண்..
"இல்ல எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும்.." என்றபடி பூரியை விள்ளல் பிட்டு பட்டாணி குருமாவில் நனைத்து வாயில் போட்டுக் கொண்டாள் தேம்பா..
"எவ்ளோ பேசினாலும் தீராத மாதிரி அப்படி இரண்டு பேரும் என்னதான் ரகசியமா பேசுவீங்க..!" வெண்மதி இடையில் குறுக்கிட..
"ரகசியமா பேசிக்க என்ன இருக்கு.. உங்க எல்லார் முன்னாடியும் வெளிப்படையதானே பேசறேன்.. வெண்மதி.. குதர்க்கமா எதையாவது யோசிக்காம தட்ட பாத்து சாப்பிடு..! வந்து நங்குனு ஓங்கி ஒன்னு தலையில வச்சேன்னு வை கபாலத்துக்குள்ள இருக்கற களிமண்ணெல்லாம் வாய் வழியா வெளியே வந்துடும்..!"
"அய்யே..! பேச்ச பாரு.. ஒரு டாக்டர் மாதிரியா பேசுற.. கபாலம் களிமண்ணுன்னு..!"
"உன் மண்டையில என்ன இருக்குதோ அதைத்தானே சொல்ல முடியும்..?"
"அப்பாஆஆ.. பாருங்க உங்க புள்ளய.. எப்ப பாரு எல்லார் முன்னாடியும் என்னை இன்ஸல்ட் பண்ணிக்கிட்டே இருக்கான்..!"
"நீ வாய வெச்சுகிட்டு சும்மா இருக்கணும்..!" பூரி குருமா ருசியில் பேசவே சலித்தார் ராஜேந்திரன்..
"வாயை மூடிக்கிட்டு சாப்பிடு.. ரெண்டுத்துக்கும் ஏழு கழுதை வயசாச்சு.. இன்னும் கூட சின்ன புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு..!" சாரதாவின் அதட்டலில் இருவரும் அமைதியாகிவிட.. தேம்பாவணி அக்கா தம்பியின் சண்டையை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..
தேம்பாவணியை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டான் வருண்..
அன்றே கடைக்கு சென்று நிறைய குட்டி குட்டி கலர் கலராய் கணபதியின் சிலை பொம்மைகளை வாங்கி வந்த வெண்மதி.. அதில் ஒன்றை ஏற்கனவே குட்டிச் சிலை காணாமல் போயிருந்த பூஜை அறையின் வெற்றிடத்தில் கொண்டு வந்து வைத்தாள்..
தொடரும்..

Last edited: