• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 21

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
74
எதிரே சாலை தெரியாதவாறு மழை அடித்து பெய்து கொண்டிருந்தது..‌ இதில் எதிரே வரும் வாகனங்களின் விளக்குகள் வேறு கண்ணை கூச.. வண்டி ஓட்டுவதே சிரமமாகிப் போனது அவனுக்கு..

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மறு கையால்.. போனில் அவளை அழைத்துக் கொண்டே இருந்தான் உதய் கிருஷ்ணா..

"ஃபோனை எடு பத்மினி..!!" பற்களை கடித்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்..

"எங்க போய் தேடுவது..?" அவள் சினேகிதிகள் விலாசம்.. சொந்த சகோதரன் வீடு.. அவள் வழக்கமாக எங்கே செல்வாள் எதுவும் தெரியாது..!! அதிலும் இந்த அடைமழையில் அவளை தேடுவது மிக்க சிரமமான வேலையாக இருக்கிறது..

ஒரு பக்கம் சாலையில் கவனம் வைத்து மறுபக்கம் ஃபோனில் அவள் எண்ணை டயல் செய்து கொண்டே இருந்தான் உதய்..

ஒரு வழியாக அழைப்பு ஏற்கப்பட்டது மறுமுனையில்..

"ஹலோ..!!"

சட்டென இதயத்தோடு ஒட்டிக்கொண்ட படபடப்போடு காரை ஓரங்கட்டியபடி..‌

"பத்மினி எங்க இருக்க..?" என்றான் சத்தமாக..

"ஏன் என்னாச்சு..?" அலட்சியமோ சோர்வோ ஏதோ ஒன்று அவள் குரல் இறங்கி போயிருந்தது..

"நீ ஓகே தானே..!!"

"ம்ம்.."

"அறிவு இருக்காடி உனக்கு.. போன் பண்ணி ஒரு வார்த்தை தகவல் சொல்ல மாட்டியா..!! உன்னை நினைச்சு அம்மா எவ்வளவு தவிச்சு போயிட்டாங்க தெரியுமா.." முதல் முறையாக டி போட்டு உரிமையாக அழைத்தது இருவருக்குமே உரைக்கவில்லை..

"இப்ப ஏன் இப்படி கத்தறீங்க.. நான் ஏறின பஸ் பிரேக் டவுன்.. மழை பெய்யுது.. பஸ் ஆட்டோ எதுவும் கிடைக்கல.. மழை நின்னவுடனே எப்படியாவது வந்து சேர்ந்திடறேன்.."

"மழை 12:00 மணிக்கு நின்னா என்ன செய்வ..? இப்ப எங்க இருக்க நீ..?"

"நான் பாத்துக்கறேன்.. விடுங்க.."

"இங்க பாரு.. அம்மா உன்னை நினைச்சு பயந்து போயிருக்காங்க.. உன்னை கொண்டு போய் அவங்க கண்ணு முன்னாடி நிறுத்தனும்.. எனக்கு அதுதான் முக்கியம்.."

"நான் அவங்களுக்கு போன் பண்ணி பேசிக்கறேன்.."

"வர்ற கோபத்துக்கு ஏதாவது சொல்லிட போறேன்.. நீ எங்க இருக்க.. அதை மட்டும் சொல்லு..?"

சில கணங்கள் மௌனத்திற்கு பின் தான் இருக்கும் இடத்தை தெரிவித்தாள் பத்மினி..

உடனடியாக காரை ஸ்டார்ட் செய்து அவள் சொன்ன இடத்திற்கு விரைந்தான் உதய் கிருஷ்ணா..

ஒரு டீக்கடையின் ஓரத்தில்.. ஒரு ஆள் நிற்கும்படியான கூரையின் அடியில் சுவற்றோடு ஒட்டியபடி நின்று கொண்டிருந்தாள் பத்மினி..

அந்த இடத்தை அடையும் முன்பே அவளை கண்டு கொண்டவன் மீண்டும் அலைபேசியில் அவளை அழைத்திருந்தான்..

"ஹலோ சார்.."

"பத்மினி நான் குடை எடுத்துட்டு வரேன்.. நீ வர வேண்டாம்.."

"இல்ல பரவாயில்ல சார்.. நானே.." என்பதற்குள் அழைப்பை துண்டித்திருந்தான்..

காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றவன் ஒரே குடையின் கீழ் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..‌

குடையின் விளிம்பிலிருந்து வழிந்த நீர் துளிகள் அவள் தோளின் மீது படாமலிருக்க.. ஒரு கையில் குடையை பிடித்த படி பத்மினியை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஒரு பொட்டு மழைத்துளியும் அவள் மீது விழாமல் காரில் ஏற்றி அமர வைத்தவன்.. மறுபக்கம் வந்து தானும் ஏறிக்கொண்டான்..

"நீங்க நனைஞ்சிட்டீங்களே..!!"

பதில் சொல்லாமல் ஈரத் தலையை கோதியபடி அவளைப் பார்த்தான்.. அழுத்தமான பார்வை..

"ஏன் அப்படி பாக்கறீங்க..?" கண்களை சுருக்கினாள் பத்மினி..

"ஹ்ம்ம்.. உன் மேல அவ்ளோ ஆசை..!! பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு..?" கேலியைத் தொடர்ந்து கோபத்தோடு கேட்டான்..

"என்ன வேணும் உங்களுக்கு..?"

"எதுக்காக அவ்வளவு நேரம் ஆபீஸ்ல உக்காந்து ஒர்க் பண்ணனும்..?"

"சொன்ன வேலையை முடிச்சு கொடுக்க வேண்டியது என் கடமை அதைத்தான் செஞ்சேன்.."

"என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணி இருக்கணும்.."

"எதுக்காக மறுபடியும் உங்ககிட்ட திட்டு வாங்கறதுக்கா..?"

"சரி அம்மா கிட்டயாவது லேட் ஆகும்னு சொல்லி இருக்கலாம்ல.."

"சீக்கிரம் போயிடலாம்னு நினைச்சேன்.."

"பாவம் அவங்க ரொம்ப பயந்துட்டாங்க..!!"

"இப்ப அவங்களுக்காகத்தான் வந்தீங்களா..?"

"ஆமா அதான் சொன்னேனே..?" என்றவன் அவள் மீது தேகத்தை சாய்த்து பின்பக்க இருக்கையிலிருந்து பூத்துண்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்..

"துடைச்சுக்கோ..!! இல்லைனா சளி பிடிக்கும்.."

"நான் நனையவே இல்லையே..? நீங்கதான் நனைஞ்சு போயிருக்கீங்க.. தொடச்சிக்கோங்க.." என்றவளை இன்னும் அகலமாக முறைத்து..

"ஏய் டீக்கடையில் நிக்கும் போதே பாதி நனைஞ்சுட்டே.. இங்க பாரு.." என்றவன் அவள் கைப்பற்றி இழுத்து முகம் கழுத்து..கை.. சேலை தொடாத வயிறு என அனைத்து இடங்களிலும் அழுத்தமாக பூத்துண்டை ஒற்றி எடுத்தான்..

"ப்ச்.. என்ன பண்றீங்க என்னை விடுங்க" என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்.. எதையோ உணர்ந்து நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள்..

"ஏன் உங்க இதயம் இவ்வளவு வேகமா துடிக்குது.. பதட்டமா இருக்கீங்களா.." என்றாள் கண்கள் சுருக்கி..

"இல்லையே..!!" ஒன்றும் புரியாதவனாக பூத்துண்டை பின் இருக்கையில் தூக்கிப் போட்டான் உதய்..

"அம்மாதான் பதட்டமா பயந்து போய் இருக்காங்கன்னு சொன்னேன்.. நான் கூலாதான் இருக்கேன்.. நீ என்ன சின்ன குழந்தையா..? தொலைஞ்சு போறதுக்கு.. எவ்வளவு நேரம் ஆனாலும் வீடு வந்து சேர்ந்திடுவேன்னு எனக்கு தெரியும்.. " என்றபடியே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்..

"ஐ வான்ன கிஸ் யூ.. கேன் ஐ?.." ஆழ்ந்த பார்வையோடு அவளை நெருங்கவும்.. நோ.. என்று கண்களை உருட்டி பின்னால் நகர்ந்தாள் பத்மினி..

"ரொம்ப நாளாச்சு பத்மினி.." அவன் மயக்கம் தீரவே இல்லை..!!

"சார் காரை எடுங்க.. எனக்கு தலை வலிக்குது.."

"எனக்கு புரியல பத்மினி.. ஐ ஃபீல் டு ஹக் யூ.. ஜஸ்ட் ஒன் மினிட்.."

"சார் ப்ளீஸ்" என்று அவள் மறுப்பதற்கு முன்பாகவே.. இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் உதய் கிருஷ்ணா..

பத்மினியை அணைத்திருந்த அந்த நேரத்தில்.. அவன் இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக சீரடைவதை உணர முடிந்தது அவளால்.. இறுக்கமான அணைப்பும் அவன் சீறலான மூச்சும் பத்மினியை மறுப்பின்றி அவனுக்குள் அடங்கியிருக்க செய்தது..

அணைத்தபடியே அவள் முகத்தை ஏறிட்டவன்.. "ஜஸ்ட் ஒன் கிஸ்.." என்று ஆழ்ந்த குரலில் தகவலாக சொல்லியபடி மிக மென்மையாக அவள் இதழில் தன் உதட்டை ஒற்றி எடுத்துவிட்டு பிறகு விலகினான்..

இருவருமாக வீடு வந்து சேர்ந்திருந்த நேரத்தில்.. கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ரமணியம்மா..

தலையின் ஈரத்தை தன் விரல்களால் துவட்டிக்கொண்டே முன்னால் வந்த உதய் கிருஷ்ணாவை விடுத்து.. அவனைப் பின்தொடர்ந்து வந்த மருமகளை பரிதவிப்போடு அணைத்துக் கொண்டார் அவர்..

"ஐயோ பத்மினி வந்துட்டியா..!! எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா..?" ஒரு வார்த்தை ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல.. கண்கள் கலங்கி கிட்டத்தட்ட அழாத குறை..

"இல்லம்மா.. சீக்கிரம் வந்துடலாம்னு நினைச்சேன்.. ஃபோனை வேற மழையில எடுக்க முடியல.. நீங்கதான் ரொம்ப பயந்து போயிட்டீங்கன்னு சொன்னாரு.. சாரிம்மா.."

"சரி அதை விடு.. நல்லபடியா வந்து சேர்ந்துட்டியே.. அது போதும்.." என்ற நிம்மதியோடு அவளை பார்த்தவரின் பார்வை கேள்வியாக தன் மகனை நோக்கி திரும்பியது..

"நீ எப்படா கிளம்பி போன..!! நீ பேசிய தோரணையை பார்த்து.. நான்தான் ஏதாவது முயற்சி எடுக்கணும்னு நினைச்சேன்.. ரூமுக்குள்ள போனவன் எப்ப வெளிய போன.. ஒண்ணுமே தெரியலையே.. என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாமே..!!"

"வேற என்ன செய்யறது..!! மருமகளை காணும்னு பயந்து.. டென்ஷன் ஆகி என்னையும் ஒரு வழி பண்ணிட்டீங்க..!! உங்க தொல்லை தாங்காமதான் நான் போய் அவளை போய் அழைச்சிட்டு வர வேண்டியதா போச்சு.. நான் போகலைன்னாலும் இன்னும் அரை மணி நேரத்துல அவளே வந்து சேர்ந்திருப்பா.. அதுக்குள்ள இத்தனை ஆர்ப்பாட்டம்..!!" ரமணியம்மாவை முறைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான் உதய்..

"அவளே வந்திருப்பான்னா நீ எதுக்குடா கூப்பிட போன.." ரமணியம்மாவின் கேள்வி அவன் முதுகை தொட்டு தோல்வியோடு மீண்டது..

அறைக்குள் வந்த பிறகு குளியலறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவளை கூர்ந்து பார்த்தான் உதய் கிருஷ்ணா..

"இப்ப ஏன் அப்படி பாக்கறீங்க..?"

"ஏன் ஒரு மாதிரி டல்லா தெரியுற..?"

"பரவாயில்லையே இதெல்லாம் கூட கண்டுபிடிக்க தெரியுமா உங்களுக்கு..!!"

"கேட்டதுக்கு பதில் சொல்லு.."

"எனக்கு தெரியல.. காலையிலிருந்து ஒரு மாதிரி வயித்த வலிக்குது.. எதுவும் சாப்பிட முடியல.. ஒரு மாதிரி வயிறு இறுக்கி பிடிச்சு கனமா இருக்கிற மாதிரி தெரியுது.."

"இதை ஏன் காலையிலேயே நீ என்கிட்ட சொல்லல.." அதைக் கூட பற்களை கடித்து கோபமாகத்தான் கேட்டான்..

"சொல்ற நிலைமையிலா நீங்க என்னை வெச்சிருந்திங்க..?"

"சாரி பத்மினி.. நான் வேலை விஷயத்தில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.. இம்பார்ட்டண்ட் வொர்க்.. உனக்கு தான் அதோட சீரியஸ்னஸ் தெரியுமே..?" இவ்வளவு விரைப்பாக யாராலும் மன்னிப்பு கேட்க முடியாது..

"நான் உங்களை எதுவுமே சொல்லலையே.." என்று துவண்டு போனவளாக கட்டிலில் அமர்ந்து விட்டாள்.. அவளை கூர்ந்து பார்த்தான் உதய்..

"ஹாஸ்பிடல் போகலாமா..!!"

"வேணாம் சார் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்.." என்றவள் வாயை பொத்திக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.. குடலே வெளியே வந்து விடுமளவிற்கு வாந்தி..‌

முகத்தை துடைத்துக் கொண்டு சோர்வாக வெளியே வந்தவளிடம்..

"ஸ்டமக் அப்செட் ஆகியிருக்கும் நினைக்கிறேன்.. டாக்டர்கிட்ட போனால்தான் சரியாகும்.. வா போகலாம்.." என்றான்..

"வேண்டாம் சார் என்னை விடுங்க.. தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்.." என்றாள் பலவீனமான குரலோடு..

"உன்னை இப்படி பார்த்தா அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க.. கிளம்பு போகலாம்.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்..

"என்னால இப்ப எங்கேயும் வர முடியாது.." என்றவள் அப்படியே படுத்து விட்டாள்..

சில கணங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்த உதய் கிருஷ்ணா.. அடுத்த கணம் அப்பார்ட்மெண்ட் செகரட்டரிக்கு அழைத்திருந்தான்..

"அப்பார்ட்மெண்ட்ல யாராவது டாக்டர் இருக்காங்களா..?" என்று கேட்டு அவர் எண்ணை பெற்றுக்கொண்டு மருத்துவருக்கு அழைத்தான்..

அடுத்த அரை மணி நேரத்திற்குள் சிநேக புன்னகையுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பெண் மருத்துவர்.. ரமணியம்மாவை பார்த்து புன்னகைத்தார்..

"நீலவேணி பொண்ணு ஹேமாதானே..!!" ரமணியம்மா சிரித்துக் கொண்டே கேட்க..

"ஆமா நீங்க ரமணியம்மா தானே..?" என்றார் அவர்..

"என்னை தெரியுமா உனக்கு..?" ரமணி அம்மாவின் விழிகள் விரிந்தன..

"அம்மா உங்களைப் பற்றி நிறைய பேசுவாங்க..!! அவங்களுக்கு கிடைச்ச புது வாக்கிங் பார்ட்னர் ஆச்சே.. ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங் பண்ற மாதிரி தெரியலையே..!!" ஹேமா கண்கள் சுருக்கி ரமணியம்மாவை குறுகுறுவென்று பார்க்க..

"அது.. அது ஒன்னும் இல்லை அப்பப்ப கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுவோம்.. மத்தபடி முழுநேரம் நடை பயிற்சிதான்.." என்று அசடு வழிந்தார் அவர்..

"சரிதான் நம்பிட்டேன்.." ஹேமா ஒரு மார்க்கமாக தலையசைக்க.. அவர்கள் சம்பாஷனையில் பொறுமை இல்லாமல்..

"டாக்டர்.. கொஞ்சம் சீக்கிரம் வந்து செக் பண்றீங்களா..?" சுடுதண்ணீரை காலில் ஊற்றியது போல் அவசரத்தில் நின்றான் அவன்..

"உங்க மகனா..?" ரமணியம்மாவிடம் கேட்டாள் ஹேமா..

"எஸ் ஈஸ் மை சன் உதய் கிருஷ்ணா.." பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தி வைத்தார் ஓய்வு பெற்ற ஆசிரியையான ரமணியம்மா..

"ஹலோ சார்.. நைஸ் டு மீட் யு.." ஹேமா கை நீட்ட.. ஏறி இறங்கிய புருவங்களோடு.. ஒரு சலிப்பை முகத்தில் காட்டி அவளோடு கை குலுக்கினான் உதய்..

இருவருமாக அறைக்குள் நுழைந்தனர்.. வதங்கிய கொடியாக படுத்திருந்தாள் பத்மினி..

"உங்க வைஃபா..?" ஹேமாவின் கேள்விக்கு ஆமாம் என்ற தலையசைத்தான் அவன்..

"அதான் இப்படி பரிதவிக்கிறீங்க..!!" என்று சிரித்தபடி பத்மினியை பரிசோதித்தார் அவர்..

அவர் கேட்ட கேள்விக்கு முனகலாக பதில் சொன்னாள் பத்மினி..

"ஃபுட் பாய்சன் ஆகி இருக்கலாம்..!! ரெண்டு மூணு முறை வாந்தி எடுத்தா பரவாயில்லை.. விட்டுடுங்க.. உடம்புல இருக்குற நஞ்சு வெளியே வரட்டும்..‌ எல்லாத்துக்கும் உடனடியாக மருந்து எடுக்கிறது நல்லதுக்கு இல்ல..!! நம்ம உடம்பு என்ன சொல்லுதுன்னு கேட்டு ரெஸ்பான்ட் செஞ்சாலே போதும்.. பாதி பிரச்சனை தீர்ந்திடும்.."

"மாத்திரை கொடுக்கிறேன்.. வாந்தி வயிற்றுப்போக்கு அதிகமா இருந்ததுன்னா மட்டும் கொடுங்க.. ஹெவியா எதுவும் சாப்பிட வேண்டாம்.. கஞ்சி.. மோர் சாதம்.. பால் பிரெட்.. இந்த மாதிரி லைட்டா ஏதாவது குடுங்க.."

"டாக்டர் ஃபீஸ்..?"

"வேண்டாம் நாமதான் ஃபேமிலி பிரெண்ட்ஸ் ஆகிடோமே..!! நீங்க உங்க குடும்பத்தோட ஒரு நாள் எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வரணும் ரமணியம்மா.." ஹேமா ரமணியம்மாவை கட்டியணைத்து விடைபெற்று சென்றிவிட.. புன்னகையோடு டாட்டா காட்டிக் கொண்டிருந்த தன் தாயை வினோதமாக பார்த்தான் உதய் கிருஷ்ணா.. பக்கத்து வீட்டு மனிதர்களின் குரல் கேட்டாலே தன் கூட்டுக்குள் பதுங்கிக் கொள்பவர் ஆயிற்றே இவர்..!!

இத்தனை இயல்பாக தன் தாய் இன்னொரு பெண்ணிடம் சிரித்து பேசுவதை இன்றுதான் காண்கிறான்.. சமீபகாலமாக அவரிம் கண்டு கொண்டிருக்கும் புதுப்பொலிவு.. எப்போதும் உதட்டில் தேங்கி நிற்கும் சிரிப்பு.. இது தன்னுடைய அன்னைதானா என்ற ஐயத்தை அவ்வப்போது ஏற்படுத்திவிடுகிறது.. இதில் புதிதாக ஒரு பெண்ணிடம் கலகலத்து பேசும் தாய் நம்ப முடியாத புது அதிசயமாக தெரிகிறாள்..

அவசரமாக சமையலறை சென்றான்..

"என்னடா செய்யப் போற..?"

"கஞ்சி வைக்கப் போறேன்..!!" என்ற மகனை விழி விரித்து பார்த்தார் ரமணியம்மா..

"ப்ச்.. ஏன் அப்படி பாக்கறீங்க..?"

"இல்ல அந்த பொண்ணுக்கு ஏதோ வயத்துக்கு ஒத்துக்கலைன்னு சொன்னாங்களே.. நீ சமைக்கிறத சாப்பிட்டு உடம்பு இன்னும் மோசமாகிட்டா..?" என்ற தாயை படக்கென திரும்பி முறைத்தான் உதய்..

ரமணி அவன் பக்கம் திரும்பவில்லையே.. அத்தோடு அங்கிருந்து விடு ஜூட்..

"பத்மினி.. அம்மா இந்த கஞ்சியை சாப்பிட சொன்னாங்க..?"

"பத்மினி.. அம்மா இந்த மாத்திரையை போட சொன்னாங்க.. அப்பதான் உடம்பு சரியாகுமாம்.."

"இப்ப எதுக்காக லீவ் போட்டீங்க..!!"

"அம்மாவுக்காக.."

"உனக்கு உடம்பு சரியில்ல.. அம்மாவை யார் பாத்துக்கறது.. வீட்டு வேலை அப்படியே தேங்கி போச்சுது.. வீட்டை சுத்தம் செஞ்சுட்டு மத்த வேலைகளையும் முடிச்சிடலாம்னு.." என்று அவன் சொன்ன பிறகு பத்மினி எதுவும் பேசவில்லை..

"குளிச்சிட்டு ஈரத் தலையோடு இருக்க கூடாதாம்.. ஏற்கனவே உனக்கு உடம்பு வேற சரியில்லை.."

"இதையும் உங்க அம்மாதான் சொன்னாங்களா..?" என்றாள் எரிச்சலாக..

"ஆமா.. இல்லைனா எனக்கெப்படி தெரியும்.." என்றவனை சலிப்போடு ஏறிட்டு பெருமூச்சு விட்டாள் பத்மினி..

"கொஞ்சம் சாப்பிடு பத்மினி.. வெறும் வயிறோடு இருக்கக் கூடாது.. இதை நீதானே எனக்கு சொன்னே..?"

"ஐயோ என்னை விட்டுடுங்க சார் எனக்கு பசிக்கவே இல்ல..!!"

"இன்னும் கொஞ்சம்தான்.." அவள் வாய்க்கு நேரே உணவை எடுத்துச் சென்றான்..

கண்கள் மூடி திறந்து அவனைப் பார்த்தாள் பத்மினி.. "உங்களுக்குத்தான் இதெல்லாம் பழக்கம் இல்லையே.. அப்புறம் எதுக்காக கஷ்டப்படறீங்க.."

நான் கஷ்டப்படுறன்னு உனக்கு யார் சொன்னா..? நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ விருப்பமில்லாம வேற வழியில்லாமத்தான் எனக்கு பணிவிடை செஞ்சியா..?"

"அது அக்கறை.. இது நீங்க உங்க அம்மாவுக்காக செய்யறது.. அவங்க வற்புறுத்தலுக்காக செய்யறது.. அதனாலதான் அப்படி சொன்னேன்.."

உதய் கிருஷ்ணா எதுவும் பேசாமல் மீண்டும் உணவை அவள் வாயில் ஊட்ட முயல.. ஓங்கரித்து வயிற்றுக்குள் போன மொத்தத்தையும் வெளியே தள்ளினாள் பத்மினி..

அவன் சட்டையெல்லாம் நாசமாகிப்போனதில்.. வெலவெலத்து போனாள்..

"சாரிங்க நான் வேணும்னு பண்ணல.. சத்தியமா இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.. நீங்க ஊட்டினதும் என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல.. நான் நான் வாஷ் பண்ணி தந்துடறேன்.." குரல் நடுங்கியது அவளுக்கு..

ஒரு கணம் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பற்களை நரநெறவென கடித்தான்.. கோபத்தில் தாடை இறுகுவது தெரிந்தது..

"பத்மினி.. பத்மினி.." என்று மீண்டும் மீண்டும் அழைத்தவன்.. அவள் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தில் பத்மினி என்று ஓங்கிய குரலோடு அழைத்திருந்தான்.. அவள் வாய் மூடிக்கொண்டது..

"இப்படி பயந்து நடுங்கி என்னை கொடூரமான மனுஷனா போர்ட்ரேட் பண்ணாதே..!! உடம்பு சரியில்லாத பொண்ணு மேல கோபத்தை காட்டக்கூடிய அளவுக்கு அவ்வளவு கேவலமானவன் இல்லை நான்.." என்று அவளை முறைத்தவன் உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்..

"போய் ஃபிரஷ் ஆகிட்டு வா.." என்று அவளையும் உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியே வருவதற்குள் தரையை சுத்தம் செய்திருந்தான்..

"சாரிங்க.."

"ஷட்டப் பத்மினி.." அவளை முறைத்தவன்.. "நீ படுத்துக்கோ.." என்றபடி தலையணையை நேராக வைத்து அவள் படுக்க வழிவகை செய்தான்..

"நாளைக்கு நீங்க ஆபீஸ் போகணும் தானே..?"

"இல்ல நாளைக்கு ஒரு நாள் வீட்ல இருந்து அம்மா உன்னை பார்த்துக்க சொன்னாங்க.."

"போதும் நிறுத்துங்க.." பத்மினி அடிக்குரலில் கத்த அதிர்ந்து போனவனாய் நின்றான் உதய் கிருஷ்ணா..

"அம்மா பாத்துக்க சொன்னாங்க அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க.. அம்மா செய்ய சொன்னாங்க.. ஏன் அம்மா சொன்னா தான் செய்வீங்களா..? உங்களுக்கா எதுவும் தோணாதா.. இல்ல உங்க அக்கறைக்கு நான் தகுதி இல்லாதவன்னு நினைக்கிறீங்களா..!! "

"ஒவ்வொரு முறையும் உங்க மனசுலருந்து எனக்காக செய்றீங்கன்னு நெனச்சுக்குவேன்.. ஆனா அம்மா சொன்னாங்க ன்னு ஒரு வார்த்தை சொல்லும்போது என் மனசு எவ்வளவு துடிக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா..!! அன்பும் அக்கறையும் யார் சொல்லியும் வரக்கூடாது.. தானா வரணும்.. உங்களுக்கு வரல.. பரவாயில்லை விட்டுடுங்க.. ஆனா அம்மாவுக்காக எதுவும் செய்யாதீங்க..!! ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள் பத்மினி..

"அ..அம்மா..‌சொல்லல.. நான்தான்.. !!" அவன் குரல் துண்டு துண்டாக வார்த்தைகளை உடைத்தான் அவன்.. நிமிர்ந்து பார்த்தாள் பத்மினி..

"அதை வெளிப்படையா சொல்றதுல உங்களுக்கு என்ன சார் அவ்வளவு ஈகோ.. உங்களோட அன்புக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள்னு நினைச்சுட்டீங்க அப்படித்தானே.."

"இல்லை" என்று தலையசைத்தான் அவன்..

"உடம்பு சரியில்லாத இந்த நேரத்துல நீங்க என்னை எப்படியெல்லாம் பாத்துக்கிட்டீங்க.. மனசு மொத்தமா உருகிப் போச்சு.. ஒரு வார்த்தை இதெல்லாம் உனக்காக தான் செய்யறேன்.. உன் மேல எனக்கு ரொம்ப அக்கறை உண்டுன்னு சொன்னா நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.. ஏன் சார் யாருமே எனக்கு அந்த சந்தோஷத்தை கொடுக்க மாட்டேங்கிறீங்க.." பலவீனமாக நெஞ்சை பிடித்துக் கொண்டு அழுதாள்..

"நீங்களா நினைச்சா நெருங்கி வரீங்க.. திடீர்னு விலகி போறீங்க.. உடம்பு சரியில்லைன்னு இப்ப என்னை பாத்துக்கறீங்க.. அப்புறம் ஏதோ ஒரு காரணத்துக்காக விலகிப் போயிடுவீங்க.. வேண்டாம்னா தள்ளி போகத்தானே அம்மாவை முன் வைச்சு இந்த நாடகம்..

உதய்.. கண்கள் சுருக்கி ஏதோ சொல்ல வந்தவனாக.. அதை சொல்ல முடியாதவனாக அமைதியாக நின்றான்..

கண்களை துடைத்துக் கொண்டு தீர்க்கமாக அவனைப் பார்த்தாள் பத்மினி..

"முதல்ல ஒரு உண்மையை சொல்லுங்க.. உங்களுக்கு நான் யாரு.. தோழியா காதலியா மனைவியா.. இல்ல வேற மாதிரி.."

"எனக்கு தெரியலை பத்மினி.." இயலாமையோடு நின்றான் உதய்.. அமைதியாக இதழ் கடித்து அவனைப் பார்த்தாள் பத்மினி..

"ப்ளீஸ் சார்.. உங்களை கெஞ்சி கேட்கிறேன்.. என்னை அன்புக்கு ஏங்க வைக்காதீங்க..என.. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு" இதைச் சொல்லும்போதே அழுகை பீறிட்டது..

"நீங்க வேணா கல்லா இருக்கலாம்.. ஆனா நான் உணர்ச்சியும் ஆசைகளும் கொண்ட ஒரு மனுஷி.. ரொம்ப கஷ்டமா இருக்கு.." உதட்டை மடக்கி அழுகையை அடக்கினாள்..

"என் வேதனை உங்களுக்கு புரியாது.. உங்களால முடியலன்னா விலகியே இருங்க.. பரவாயில்லை.. ஆனா நெருங்கி வந்து.." என்று நிறுத்தி கண்கள் மூடி ஊமையாக அழுதாள்.. ஒரு பெண்ணின் வெளியே சொல்ல முடியாத ஏக்கங்கள்.. உள்ளுக்குள் அழத்தான் முடிகிறது..

தளர்ந்து போனவளாக கட்டிலில் படுத்துக் கொண்டாள்..

"என்னை ஹக் பண்ணிக்கோங்க உதய்.. உங்களுக்கு பிடிக்கலைனாலும்.. ஒரு மரக்கட்டையா நினைச்சு என்னை ஹக் பண்ணிக்கோங்க.. என்னால தாங்க முடியல.. உள்ளுக்குள்ள என்னென்னமோ வெடிக்குது.. ப்ளீஸ்.. பிளீஸ் உதய்.." அவளால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.. மனதிற்குள் இப்படி மானசீகமாக மன்றாடி அழுதாள்..

அடுத்த கணம் அவள் கைப்பற்றி இழுத்து தன் நெஞ்சு கூட்டுக்குள் புதைத்துக் கொண்டான் உதய் கிருஷ்ணா..

வேண்டுதல் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது என்றால் அது கனவாகத்தான் இருக்க வேண்டும்.. கண்களை திறந்து பார்த்தாள் பத்மினி..

கனவல்ல நிஜம்.. உண்மையில் அவன் அரவணைப்புக்குள் தான் இருந்தாள்.. அதே கதகதப்பு.. அவளுக்கு பிடித்தமான அவன் ஆண் வாசனை..!!

அவள் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தான் உதய்..

"நீ என்னோட தோழியா காதலியா மனைவியா.. இல்ல வேற மாதிரியா எனக்கு இதுவும் தெரியல.. ஆனா உன்னை ரொம்ப பிடிக்குது.. உன்னை எப்பவும் என் பக்கத்துல வச்சுக்கணும்னு தோணுது.. நீ எனக்கு வேணும் பத்மினி.. நீ எனக்கு வேணுமடி" ஆழ்ந்த குரலோடு அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்..

"எதைப் பற்றியும் யோசிக்காம எந்த கேள்வியும் கேட்காம.. இந்த நிமிஷத்தை மட்டும் அனுபவிக்கலாம்.. துங்கு பத்மினி.." என்றான் அவள் நெற்றியில் தன் தாடையை பதித்து இதமாக.. பத்மினி ஆழ்கடல் போல் அமைதியாக உறங்கியிருந்தாள்..

தனக்கு பத்மினி யார் என்ற உண்மையை உணர்வாக அவன்தான் சொல்ல வேண்டும்..

சொல்வதற்கான சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.. உருவாக்கப்பட வேண்டும்..!!

மூலை முடுக்குகளில் ஆங்காங்கே ஒளிந்திருந்த ஆசைகள் எழுதப்பட்ட காகித துணுக்குகள்.. காற்றின் அசைவில் தலையை நீட்டி எட்டிப் பார்த்து சிரித்தன..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Sep 9, 2023
Messages
33
Nice ♥️ 🎊 ♥️ 🎊 ♥️ 🎊 ♥️
 
Member
Joined
Jan 21, 2024
Messages
54
ரொம்ப சூப்பர். பத்மினி உணர்வு களை எவ்வளவு அழகா சொல்றீங்க.
 
Member
Joined
Jun 5, 2023
Messages
26
Ne ratchasima Sana un ezhuthala yengala mirala veikura love 😘
 
Last edited:
Member
Joined
Dec 23, 2023
Messages
62
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
New member
Joined
Jul 19, 2024
Messages
22

Super semma
 
Member
Joined
Aug 8, 2024
Messages
25
Nice.. You nailed it sister.. The feel that husband and wife living in the same place without love or any consummation is really cruel.. That too, sharing the same bed without speaking anything is very difficult..

I could understand Udhay's hesitation.. It is not an easy thing to change our nature immediately, but gradually it is possible..

Sister.. You are giving Ramaniyamma her dialogues with humor and all are counters.. Nice.. It is enjoyable..

Nice episode, sister.. I needed it actually.. It gave a special break in the middle of stressful work from the morning.. Thank you...
 
Joined
Jul 31, 2024
Messages
46

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top