- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
என்ன உருக்கமான வசனங்கள்.. அவள் அன்று கண்ட காட்சிக்கும் இன்று பேசும் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லை..
ரோஷினியும் இவனும் கணவன் மனைவி போல் பைக்கில் ஜோடியாக சென்ற காட்சி நெஞ்சில் தேங்கி நிற்கிறது..
சதிவலையிலும் பாச வலையிலும் தன்னை சிக்க வைத்து நிர்ப்பந்தத்தில் தள்ளும் இந்த சொந்தங்களை உதறி தள்ளிவிட்டு உலகின் எங்கோ ஒரு மூலைக்கு சென்று விட மனம் துடிக்கிறது..
சஞ்சலங்களுக்கு மத்தியில் அணிந்திருந்த இறுக்கமான உள்ளாடை வேறு நெஞ்சை அறுப்பதாக உணர்ந்தவள்.. உடைமாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்..
அதற்குள் உணவு வாங்கிக் கொண்டு வந்திருந்தான் ஹரி..
"டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டியா..? சரி வா சாப்பிடலாம்.." என்று அவளை இழுத்து தரையில் அமர வைத்து.. உணவுகளை பிரித்து தட்டில் போட்டு அவள் வாயினருகே கொண்டு சென்றான்..
"தப்பு செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பின்னும் எப்படி இவனால் இயல்பாக இருப்பதைப் போல் நடிக்க முடிகிறது.. ஓஹோ அனைத்திற்கும் தகுந்த காரணங்களை கூறிவிட்டதாலா..? இனியும் ஏமாறும் முட்டாளா நான்? மனம் கூக்குரலிடுகின்றது..
"ரெண்டு உயிரா இருக்க மாதவி.. வயித்தில குழந்தையோட இப்படி மனசை போட்டு வாட்டிகிட்டு சாப்பிடாம இருக்கிறது நல்லதுக்கு இல்ல.. உனக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும் இருக்கலாம் ஆனால் வேலைக்கு சாப்பிடணும்.. ம்ம்.. சாப்பிடு.." ஊட்ட முயன்றான் ஹரி..
"நானே சாப்பிட்டுக்கறேன்.. இனி யாரையும் எதிர்பார்க்காம.. என் வேலைகளை நானே செய்ய பழகிக்கணும்.. அதுதான் எனக்கு நல்லது.." அவனிடமிருந்து உணவு தட்டை வாங்கி உண்ண ஆரம்பித்தாள் மாதவி..
பக்கத்தில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.. ஏதோ சொல்ல முயன்றான்.. ஆனால் மாதவி பிடி கொடுக்கவில்லை..
மறுபடி பழைய நிலை திரும்புகிறது.. முன்பைப் போல் மாதவி முகம் கொடுத்து பேசுவதில்லை.. அவன் அன்பை பணிவிடைகளை ஏற்க மறுத்து தள்ளித்தான் நிற்க முயல்கிறாள்.. ஆனால் அவன் விடுவதில்லை..
மாதவி மாதவி என்று உருகுகிறான்.. போலி அன்பை காட்டி தன்னை ஏமாற்றி அடிபணிய வைப்பதாக நினைக்கிறாள்..
"எனக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. என்னை விட்டுடுங்க.." விலகி நின்றாலும்.. மீண்டும் மீண்டும் தன்னிடமே வந்து நிற்கும் அவன் அன்பான மிரட்டல்களை புறக்கணிக்க முடிவதில்லை..
மீண்டும் இரவுகள் மோகத்தில் தீப்பற்றி எறிய துவங்கி இருக்கின்றன..
காது மடலை கவ்வி முத்தமிட்டு கழுத்தோரம் குட்டி குட்டி முத்தங்களாய் ஊர்ந்து.. முதுகு காட்டி படுத்திருப்பவளை தன் பக்கம் திருப்பி.. இதழை கவ்வும் முன்னே சொல்ல நினைக்கிறாள்.. வேண்டாம் என்று.. ஆனால் முடிவதில்லை..
ஆடைகள் விடுதலை பெறும் முன்னே அவசரமாக மறுக்க நினைக்கிறாள்.. அப்போதும் முடிவதில்லை..
ஏதோ விட்டு பிரிந்த குழந்தைகளிடம் கொஞ்சுவதைப் போல்.. தன் செழுமைகளில் முத்தமிட்டு.. உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சு செத்தே போனேன்.. என்று ஆக்ரோஷமாக கவ்வி சுவைக்கும் தருணங்களில்.. உடல் சுகம் தான் உனது நோக்கமா? என்று கேட்க நினைக்கிறாள்.. கேட்க முடியவில்லை..
பெண்ணவளின் மர்ம பொக்கிஷங்களில்.. பக்தனாக மாறி சேவை செய்யும்போதும் பித்தனாக மாறி.. காதல் செய்யும்போதும் உன் கைப் பாவையா நான்? என்று சீற நினைக்கிறாள்.. முடிவதில்லை..
தாமரை இலை தண்ணீர் போல் அவன் நெருங்குவதும் இவள் விலகுவதும் இருவரும் இணைவதும்.. பகலில் பிரிவதுமாக வாழ்க்கை மேம்போக்காக சென்று கொண்டிருக்கிறது..
கோபச் சுவடாக மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் ஆடவனின் காதலிலும் காமத்திலும் காற்றில் கற்பூரமாக கரைந்து போகின்றன..
"வர்றியா மாதவி.. உன் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம் உனக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்குமே..!! பசங்க கூட உன்னை அழைச்சிட்டு வர சொல்லி தொந்தரவு பண்றாங்க..!!" கேட்டவனை விசித்திரமாக பார்த்தாள்..
"அது என் வீடா? உன் வீடா..? அங்கேயும் நான் ஆதிக்கம்தானா..?" தவறுகளை மறைத்து உன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ள எல்லோரையும் கைக்குள் போட்டுக் கொண்டாய்.. மனம் வெம்பி தவிக்கிறது..
அம்மா வீட்டிற்கு சென்றால் இவனோடு சிரித்து சிறந்த தம்பதிகள் போல் வாழ்வதாய் இழைய வேண்டும்.. இப்போது தானிருக்கும் மனநிலையில் இதெல்லாம் முடியாத காரியம்..
"நான் வரல.. என்னால எங்கேயும் அலைய முடியாது.." என்று முகத்திலறைந்தார் போல் மறுத்துவிட்டாள்.. முகம் கசங்கி போனான் ஹரி..
அடுத்த சில நாட்களில் அவளை அலைபேசியில் அழைத்திருந்தான்..
"மாதும்மா.. உனக்காக கொஞ்சம் புடவை எடுத்திருந்தேன்.."
"ப்ச்.. இப்ப எதுக்காக அதெல்லாம் செய்யறீங்க நான்தான் எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேன்ல.." அவள் குரலில் எரிச்சல் பரவியது..
"அதில்லடி.. உடம்பை உருத்தாம.. வெளியே எங்கேயாவது போனா கட்டிக்கிற மாதிரி நாலு காட்டன் புடவை வாங்கினேன்.. அதுக்கெல்லாம் பிளவுஸ் தைக்க உன் அம்மாகிட்ட புடவைகளை கொடுக்க வந்தேன்.. பழக்க தோஷத்தில் பழைய அளவுல கட் பண்ணிட போறாங்க.. உன் அளவு 34 லிருந்து 36 ஆஹ் மாறி போயிடுச்சுன்னு அவங்க கிட்ட சொல்லு.."
அந்நிலையிலும் வெட்கம் பிடுங்கித் தின்ன "சரி நான் சொல்லிக்கிறேன்..!!" என்றாள்..
"இப்பவே போன் பண்ணி சொல்லு அப்புறம் துணி கட் பண்ணி வச்சுட்டாங்கனா.. ஒன்னும் பண்ண முடியாது.. வேணும்னா நானே சொல்லிடட்டுமா..?"
"ஐயோ வேண்டாம்.. நானே போன் பண்ணி சொல்லிக்கிறேன்.. நீங்க வீடு வந்து சேருங்க..!!" எரிச்சலாக சொன்னவள் அவன் இம்சை தாளாமல் சங்கடத்துடன் தன் அன்னைக்கு போன் எடுத்தாள்..
மாதம் ஒரு முறை மருத்துவமனைக்கு செக்கப் தவறாமல் அழைத்துச் செல்கிறான்.. நான்காம் மாத கருவை.. ஸ்கேனில் பார்த்தவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு.. நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான்..
அன்றொரு நாள்..
"நான் ஏதாவது வேலைக்கு போகட்டுமா..?"
"ஏன்.. கர்ப்ப காலத்தில் ஓய்வு முக்கியம்னு உனக்கு தெரியாதா.. குழந்தை முக்கியம் இல்லையா..?" அவன் கண்களில் தீவிரம்..
"அப்படி இல்ல.. அடுத்தவங்க காசுல உட்கார்ந்து சாப்பிட ஒரு மாதிரி இருக்கு.. ஏற்கனவே ஓசிச் சோறுன்னு உங்க அம்மா என்னை மதிக்கிறதே இல்லை.. ஆரம்பத்துல உங்ககிட்ட வேலைக்கு போக அனுமதி கேட்டேன்.. பொம்பள வேலைக்கு போய் என் பொழுது விடியதுன்னு உலகம் என்னை கேவலமா பேசணுமான்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டீங்க..!! இப்ப அந்த மாதிரி பேச மாட்டீங்கன்னு நம்புறேன்.."
"அடடா இந்த ஒரு விஷயத்துலயாவது என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கே. அதுவரைக்கும் சந்தோஷம்.." அவன் பார்வையில் குறுகுறுப்பு..
"அப்ப நான் வேலைக்கு போகலாமா..?" மாதவியின் கண்கள் மலர்ந்தன..
"இப்பவும் வேண்டாம்னுதான் சொல்லுவேன்.. உன் உடம்பு ஆரோக்கியம் குழந்தையோட வளர்ச்சி எனக்கு ரொம்ப முக்கியம்.. நல்லா ஓய்வெடுத்துக்க.. குழந்தை பெத்துக்க.. அதன்பிறகு என்ன செய்யறதுன்னு யோசிப்போம்.. அப்போவும் உன்னை வேலைக்கு போக சொல்ல மாட்டேன்.. வீட்ல இருந்த மாதிரியே ஏதாவது பண்ணு.."
"வீட்ல என்ன பண்ண முடியும் வடகம் போட்டு தெருத்தெருவா விக்க சொல்றீங்களா..?" என்றாள் கடுப்போடு
"ம்ம்.. அதுவும் ஒரு பிசினஸ்தானே.. ஆனா நான் அதைப் பத்தி சொல்ல வரல.. டெக்னாலஜி எவ்வளவு முன்னேறிடுச்சு.. நிறைய வெப்சைட்ஸ் இருக்கு.. கதை எழுது.. கவிதை எழுது.. இல்லைனா ஆன்லைன் டியூஷன்.. இருக்கவே இருக்கு youtube.. சமையல் வீடியோ தையல் வீடியோ.. மோட்டிவேஷன்ஸ்.. உலகமே நம்ம கையில இருக்கும்போது எதுக்காக வேலைக்கு போகணும்.. இல்ல இதெல்லாம் வேண்டாம்னா கூட.. வொர்க் ஃபிரம் ஹோம் ஏதாவது அரேஞ்ச் பண்ணி தரேன்.. ஃப்ரீ லான்சர் மாதிரி பண்ணிக்கலாம்.. உடம்பை வருத்திக்காதே..!! இதையும் மீறி நான் வேலைக்குதான் போவேன் நீ சொன்னா.. கொஞ்ச நாள் போகட்டும் குழந்தை நல்லா வளரட்டும்.. தாய்ப்பால் நிறுத்தின பிறகு உனக்கு என்ன தோணுதோ அதை செய்.. அதுவரைக்கும் நான் சொல்றதை நீ கேளு.. கேட்டு தான் ஆகணும்.." என்றான் உறுதியான குரலில்..
"ஓஹோ அதுவரைக்கும் நான் ஓசி சோறாதான் இருக்கணும் இல்ல? என்றாள் சலிப்பும் வெறுப்புமாக..
"ஏன் உனக்கு இத்தனை இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ்.. என்கிட்ட எதுக்காக கணக்கு பார்க்கற.. நீ வேற நான் வேற இல்லை.. என்னோடது எல்லாம் உன்னோடது..!!"
"அன்னைக்கு உங்க அம்மா என்னை ஓசி சோறுன்னு சொல்லும்போது நீங்க இப்படி சொல்லலையே?.. அமைதியாத்தானே இருந்தீங்க.."
"அன்னைக்கு நடந்த கதையை இன்னைக்கு பேசாதே..!! இப்போ இந்த நிமிஷம் நான் எப்படி இருக்கேன் அதை மட்டும் பாரு.."
"நீங்கதான் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறி போய்டறீங்களே.. உங்களை நம்ப முடியல.. அதனாலதானே வேலைக்கு போகட்டுமான்னு கேட்டேன்.." மாதவி கடுகடுத்தாள்..
"இப்ப நீ வேலைக்கு போகக்கூடாது.. அவ்வளவுதான்.."
"ஆஹா பழைய ஆதிக்கம் தலை தூக்குதே..!!" அவள் கண்களில் கேலி..
நெருங்கி வந்து அவள் இதழோடு இதழ் சேர்த்து வன்மையாக முத்தமிட்டான்..
"சொன்னா கேளுடி.. டார்ச்சர் பண்ணாதே.. பிரக்னன்சி ஹார்மோன்ஸ் உன்னை பாடா படுத்துது.. அதனாலதான் வாய்க்கு வந்தபடி பேசுற.. கொஞ்சம் மனசை அமைதியா வச்சுக்க.. அதுதான் உனக்கும் நம்ம குழந்தைக்கு நல்லது.." அவளை இறுக அனைத்து விடுவித்து வெளியே சென்றான்.. கணவனை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நின்றாள் மாதவி..
மீண்டும் ஒரு நாள் வராமலா போய்விடும்.. தன் கணவனையும் அவன் கள்ள காதலியையும் ஜோடியாக சேர்த்து கையும் களவுமாக பிடிக்க போகும் அந்த நாள்.. ஆவலுடன் காத்திருக்கிறாள்.. அன்று அவளின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும் என்ற நம்புகிறாள்..
எதை அனுதினமும் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவே நம்மை தேடி வரும் என்பதைப் போல ரோஷினி ஒருநாள் அவளை அழைத்துப் பேசினாள்..
மாதவிக்கு தலை சுற்றாத குறை..
தொடரும்..