• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 22

Active member
Joined
Jul 31, 2024
Messages
49
"மாமா அவர் இன்னும் சாப்பிட வரலையே.. இப்ப எங்க இருக்காரு..!!" காலையில் அரிசி மில்லுக்கு செல்வதாக சொல்லி விட்டு சென்ற குரு இப்போது எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆவல்.. தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு சென்றிருக்கிறானா அல்லது அவன் வாய் விட்டு சொன்னது போல் தன் ரவுடித்தனத்தை பறைசாற்ற அங்கே சென்றிருக்கிறானா..? இருவரும் ஊடலில் இருப்பதால் ஃபோன் அடித்து பேச ஏதோ தயக்கம்..

"அரிசி மில்லுக்குதான் போனான்.. ஆனா அங்க தான் இருக்கானா தெரியல.. மில்லுல எவனும் போன் எடுத்து பேச மாட்டேங்கிறான்.. குருவை பார்த்து பயப்படறானுங்களா தெரியல.. உன் அப்பாவும் கூட ஃபோன் எடுக்கலையே.. நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.." ஆச்சார்யா ஊஞ்சலிலிருந்து எழுந்தார்..

"இல்ல மாமா வேண்டாம்.. மதிய சாப்பாடு ஆச்சு.. நானே கொண்டு போய் கொடுத்திட்டு அப்படியே பாத்துட்டு வந்துடவா..?"

"நீ எதுக்கும்மா தேவை இல்லாம அலையனும்.. பசங்க யார்கிட்டயாவது கொடுத்து விடலாம்.."

"வேண்டாம் மாமா.. நானே போறேன்.." டிபன் கேரியரோடு புறப்பட்ட மருமகளை காரில் அனுப்பி வைத்தார் ஆச்சார்யா..

அரிசி மண்டியில் அவள் காரிலிருந்து இறங்கிய நேரம் தூரத்தில் ஆங்காங்கே நெற்குவியலுக்கு இடையே ஒருவன் சட்டைக் காலரைப் பற்றி அந்தரத்தில் தூக்கி இருந்தான் குரு..

"போச்சு.. இங்க வந்தும் ஆரம்பிச்சாச்சா..!! இவர் திருந்தவே மாட்டார்.. எனக்காக வரல.. சொன்ன மாதிரி தன் முரட்டுத்தனத்துக்கு மூர்க்கத்தனத்திற்கும் புது விதமா தீனி போட்டுக்க இங்க வந்துருக்கார்.." மனதுக்குள் நொந்தவாறு காரில் ஏறி திரும்பி செல்ல எத்தனித்த நேரத்தில்.. பார்வை மீண்டும் அவனை இயலாமையோடும் ஏக்கத்தோடும் தழுவியது..

அங்கிருந்து அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் கைப்பிடியில் திணறிகொண்டிருந்தவன்.. பிடி இளகியதில் நழுவி கீழே தொப்பென விழுந்தான்..

"என்னை பார்த்த உடனே ஏன் இந்த நடிப்பு.. தூக்கி போட்டு மிதிக்க வேண்டியது தானே..!!" ஆற்றாமை பொங்கினாலும் அவன் செயலில் பொய் இருப்பதாக தெரியவில்லையே..!!

நடிக்கக்கூடிய ஆளா அவன்.. என் இஷ்டப்படி தான் செய்வேன்.. என்று தன் பெண்மையை ஆண்டு கொண்டே சொன்னவன் அல்லவா..?

அவளைப் பார்த்துக் கொண்டே மர மேஜையில் குதித்து ஏறி அமர்ந்தான் குரு..

"இதுவே கடைசி முறையாக இருக்கணும் இன்னொரு வாட்டி இப்படி நடந்துச்சு கொன்னு புதைச்சுட்டு போயிட்டே இருப்பேன்.." கீழே கிடந்தவனிடம் சினத்துடன் கொந்தளித்தான்..

"அம்மா அன்பரசி..!!" சதாசிவம் மகளிடம் வேகமாக நடந்து வந்தார்..

"என்னப்பா என்ன நடக்குது..? மாமா போன் செஞ்சாராம்.. நீங்க யாருமே போன் எடுக்கலையாமே..!! ஏதாவது பிரச்சனையா..? இங்க வந்து அட்டகாசம் செய்யறாரா இவர்.. உங்க கிட்ட ஒன்னும் வம்பு செய்யலையே..?" பதை பதைப்புடன் வினவினாள் அன்பரசி..

"என்னம்மா நீயே இப்படியெல்லாம் பேசலாமா.. இப்பதான் வேலை எல்லாம் ஒழுங்கா நடந்துட்டு இருக்கு.." அவர் சொன்னவிதம் அன்பரசிக்கு புரியல்லை..

"அரிசி மூட்டை எடையில் குளறுபடி பண்ணி கல்யாணம் காட்சின்னு நம்பி வந்து வாங்கின ஏழை மக்களுக்கு கூடுதல் விலை வைச்சு வித்து அவங்க வயித்துல அடிச்ச பாவி பசங்களுக்கு இன்னைக்கு தான் ஒரு முடிவு காலம் வந்திருக்கு.."

"ஸ்கூல் சத்துணவுக்கு கொடுக்கிற அரிசி மூட்டையில கூட இப்படித்தான் குளறுப்படி.. 20 கிலோ அரிசி மூட்டையை 25 கிலோன்னு வச்சி விக்கிறது.. திருடின அரிசி மூட்டையை ரகசியமா பதுக்கி வேற பேக்டரிகளுக்கு லாரியில கடத்துறானுங்க.."

"முதலாளி கிட்ட இதைப் பத்தி சொல்லி பார்த்தேன்.. அவர் வந்த நேரத்தில் சரியான எடை கொண்ட மூட்டைகளை அடுக்கி வச்சு.. ஆதாரங்களை மறைச்சு அவர் கண்ண கட்டி ஏமாத்திட்டானுங்க.. என்னையும் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டி உண்மையை சொல்ல விடாம வாயை அடைச்சுட்டானுங்க.."

"அடக்கடவுளே நம்ம மில்லிலேயே வேலை செஞ்சுட்டு நமக்கே துரோகம் செய்வாங்களா..?" அன்பரசியால் நம்ப முடியவில்லை..

"இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்தானுங்கம்மா.. நிலைமை கை மீறி போய்டுச்சு.. மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. அதனால தான் உன்கிட்ட அன்னைக்கு வேதனையோட மறைமுகமா இங்க பிரச்சனை இருக்குன்னு சொல்லி வச்சேன்.."

"ஆனா மாப்பிள்ளை வந்த பிறகு பாரு அவங்களையெல்லாம் கையும் களவுமாக பிடிச்சு அடிச்சு உண்மையை வாங்கிட்டாரு.. அத்தனை பசங்களும் அலறிக்கிட்டு கால்ல விழுந்தானுங்க .. போலீஸ் வந்து அத்தனை பேரையும் இப்பதான் இழுத்துட்டு போச்சு.. இதோ நம்ம கிட்டயே வேலை செய்ற திவாகர்.. இவன் கூட துரோகியா இருந்திருக்கான் பாரேன்.. அவன் புள்ள குட்டிக்காரங்கிறதுனால அடிச்சதோட பாவம் பாத்து விட்டுட்டார்.. போலீஸ்ல பிடிச்சு கொடுக்கல.."

"ஹ்ம்ம்.. ஆமா உங்க மாப்பிள்ளைக்கு அடிக்கவும் உதைக்கவும் சொல்லியா கொடுக்கணும்.." முகம் சுளித்தவள்..

"இந்தாங்க உங்க மாப்பிள்ளைக்கு சாப்பாடு.. அவர்கிட்ட கொடுத்துடுங்க.. ஆமா நீங்க சாப்பிட போகலையா அப்பா..?" என்று வினவினாள்..

"இல்லைம்மா.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல கிளம்பி வீட்டுக்கு போயிடுவேன். நீயும் வாயேன் அப்படியே அம்மாவை பார்த்த மாதிரி இருக்கும்ல.."

"இருக்கட்டும் பா.. இன்னொரு நாளைக்கு வரேன்.. வீட்ல நிறைய வேலை இருக்கு.. கார்ல வாங்கப்பா.. நம்ம வீட்ல இறங்கிக்கலாம்.."

"வேண்டாம்மா.. இப்ப நான் ஒரு சாதாரண வேலையாள்.. கார்ல வந்தா அவ்வளவு சரியா இருக்காது.."

"அதில்லப்பா.."

"வற்புறுத்தாதடா.. நீ கிளம்பு.." தந்தை சொன்ன பிறகு வேறு வழி இல்லாமல் காரில் ஏறி அமர்ந்தவள் கண்ணாடியை ஏற்றும் முன் அவனைப் பார்த்தாள்..

ஒரு காலை கீழே ஊன்றி மறு காலை தொங்கவிட்டவாறு மேஜையில் அமர்ந்து அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான் குரு..

"டேய் முரளி இங்க வாடா.." தூரம் நின்றவனை கைநீட்டி அழைக்க அவன் "அண்ணா" என்று ஓடி வந்தான்..

"செல்வி ஸ்டோருக்கு அனுப்ப வேண்டிய ரெண்டு டன் அரிசி மூட்டை அனுப்பியாச்சா..?"

"இல்லண்ணா இனிமேதான்..!!" அவன் நடுங்கினான்..

பளாரென ஒரு அறை.. கண்முன் பூச்சி பறந்தது அவனுக்கு.. தூரத்தில் காரில் ஏறி அமர்ந்திருந்தவளுக்கு அவன் பேசுவது கேட்கவில்லை.. அடாவடியாக அடிப்பது மட்டுமே கண்ணுக்கு தெரிய.. உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்..

அதுதானே அவனுக்கும் வேண்டும்.. இதழோரம் நகைப்பை மறைத்துக் கொண்டு..

"எப்ப சொன்ன வேலை இது.. இன்னும் செய்யாம என்னடா பண்றீங்க..!! சரியா சொன்ன டைம்க்கு சரக்கை கொண்டு போய் இறக்கணும்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா..?" அவன் நாக்கை கடித்து கனத்த குரலில் கத்தவும்..

"இதோ.. இதோ.. போறேன் அண்ணே.." முரளி ஓடி இருந்தான்..

"காரை எடுங்க அண்ணா.." டிரைவரிடம் சொல்லிவிட்டு கார் கண்ணாடியை ஏற்றும்வரை அவனைப் பார்த்து முறைத்தாள் அன்பரசி.. அவனும்தான் முறைத்தான்.. முறைப்பு என்பது வெறும் சாக்கு தான்.. இது ஆளை தின்னும் பார்வை.. ஆழ்ந்த பார்வை.. கோபமும் உண்டு தாபமும் உண்டு..

சதாசிவம் டிபன் கேரியரை அந்த மேஜையில் வைப்பதோடு கார் வாயில் கதவை தாண்டி திரும்பி இருந்தது..

"எப்படியோ சாப்பாடு கொடுத்தாச்சு.. அவர் என்ன செய்கிறாருன்னு பார்த்தாச்சு.. ஆனா எனக்காக தான் இங்க வந்தாரா.. வந்தா பொறுப்பா வேலை செய்யணும்.. இங்கேயும் அடிதடி.."

"என்னடி பேசுற.. சொந்த இடத்துல நடக்கிற பிரச்சனைகளை அப்புறம் யார் தான் தட்டி கேட்கிறது.."

"ஹான் அதுவும் சரிதான்..!!"

"உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவர் இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்..!! தப்பு செய்றவங்களை தண்டிச்சு போலீஸ்ல பிடிச்சு கொடுத்து.. ரொம்ப வருஷமா வேலை செய்றவனை கண்டித்து மன்னிச்சு விட்டுருக்காரு இதை விட என்னடி வேணும்.."

"சரிதான் நீ கூட இப்பல்லாம் அவருக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்ற.."

"ஆரம்பத்தில் இருந்தே நான் அவர் கட்சி தான்.."

"என் கூடவே இருந்துகிட்டு எனக்கே துரோகம் செய்யறல நீ.. "

"ரொம்ப நடிக்காதடி.. கோபம் சண்டைன்னு சொல்லிட்டு நீங்க செய்ற வேலை எங்களுக்கு தெரியாதா என்ன.. நானாவது நல்லது கெட்டது சொல்லி உன்னை வழிநடத்துறேன்.. ஆனா நீ..?"

"போதும்.. போதும்.. நிறுத்து.."

"அடிச்சுப்பாங்களாம்.. கடிச்சுப்பாங்களாம்.. சண்டை போட்டுப்பாங்களாம்.. பேசிக்க மாட்டாங்களாம்.. ஆனா அது மட்டும்..!!"

"ஐயோ ஆளை விடு சாமி..!!"

இப்படித்தான் உள்ளுக்குள் கேள்வியும் பதிலுமாக அவள்.. செயினை கடித்தபடி சிரிப்பதும் வெட்கப்படுவதுமாக அன்பு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.. நல்லவேளை ஓட்டுனர் சாலையில் கவனமாக இருந்தார்..இல்லையேல் அவருக்கும் பைத்தியம் பிடித்திருக்கும்..

வீடு வந்து அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் ஆச்சார்யாவிடம் ஒப்பித்தாள் அன்பரசி..

மகன் அடிதடி வித்தைகளில் ஊறியவன் தான் என்றாலும் தப்பு செய்தவர்களை தரமாக பிரித்து தண்டித்து காவலர்களிடம் ஒப்படைத்ததெல்லாம் எவ்வளவு பொறுப்பான செயல்.. நம்ப இயலாத ஆச்சரியம் அவரிடம்..

"குரு கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வர்றான் இல்லையா..?" சந்தோஷமாக கேட்டார் ஆச்சார்யா..

"அப்படி இருந்தா சந்தோஷம்தான்.. உங்க பையனை அவ்வளவு எளிதாக கணிச்சிட முடியாது மாமா.. இன்னைக்கு ஒரு மாதிரி இருப்பார்.. நாளைக்கு நாம எதிர்பார்க்காத வேறு ஒரு பரிமாணத்தில் மாறிடுவார்.. அப்புறம் ஏமாற்றம் நமக்கு தான்.." பெருமூச்சு விட்டாள்..

"நீயே இப்படி சொன்னா எப்படிமா.. நீ வந்த பிறகு அவகிட்ட எவ்வளவு மாற்றங்கள் தெரியுமா..?" ஆச்சார்யா சிலாகித்தார்..

"முழுசா மாறி வரணும் மாமா அப்பதான் எனக்கு திருப்தி.."

"முரட்டுத்தனம் அவன் ரத்தத்தில் ஊறுன விஷயம் அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது அன்பரசி.."

"எனக்கும் அது புரியுது.. தப்பை தட்டி கேட்கட்டும்.. நான் வேண்டாம்னு சொல்லல.. லேசா மிரட்டிட்டு விட்டா பரவாயில்லை.. ஆனா இப்படி உயிர் போகிற அளவு அடிக்கிறதெல்லாம் பார்க்கும்போது நெஞ்செல்லாம் நடுங்குது.. அன்னைக்கு வீதியில் ஒருத்தரோட கையை வெட்ட போயிட்டாரு.. ஒருவேளை வெட்டி இருந்தா அந்த பாவம் நம்மள சும்மா விடுமா.. அவரால பாதிக்கப்பட்ட குடும்பங்களோட அலறல் சத்தம் என் காதுல கேட்டுகிட்டே இருக்கிற மாதிரி இருக்கு மாமா.." அவள் முகம் வெளிறிப் போயிருந்தது..

"அவனால எந்த குடும்பமும் பாதிக்கப்படாது அன்பரசி.. கண்மூடித்தனமா ஆளுங்களை அடிச்சு கைய கால உடைக்கறவன் தான்.. ஆனா அவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா இருப்பாங்க.. நல்லவங்க யாரும் நம்ம குருவால பாதிக்கப்பட்டது இல்லையே..!!"

"இருக்கட்டும் மாமா.. தப்பு செஞ்சவங்களுக்கு மட்டும் குடும்பம் இல்லையா என்ன.. வலிக்க வலிக்க ஒருத்தரை தண்டிக்கிறது எந்த விதத்தில் நியாயம்.. இப்பவும் அதையே தான் சொல்றேன் தப்பை தட்டி கேக்கட்டும்.. போலீஸ்ல பிடிச்சு கொடுக்கட்டும்.. நான் வேண்டாம்னு சொல்லல.. ஆனா இவர் மூர்க்க தனத்துக்கு தீனி போட்டுக்கிற மாதிரி ஆளுங்களை தேடி தேடி போய் அடிக்கிறதெல்லாம் சரியே இல்லை.. இப்ப கெட்டவங்களை அடிப்பாரு.. ஆளுங்களே கிடைக்கலைன்னா.. அவரோட வெறியை தீர்த்துக்க நல்லவங்களை அடிப்பாரா..? இந்த மாதிரி ஆளுங்களை அடிக்கும் போது அவர் கண்ணுல தெரியுமே ஒரு கொலைவெறி.. அப்பப்பா நினைச்சு பார்க்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது மாமா.." சொல்லும்போதே அவள் முகத்தில் பய ரேகைகள்..

"பயப்படாதே அன்பரசி.. குரு முன்னுக்கு இப்ப எவ்வளவோ மாறிட்டான்.. போகப் போக இன்னும் அவனுக்குள் நிறைய நல்ல மாற்றங்கள் வரும்னு தோணுது.. பொறுமையா இரும்மா.." ஆச்சார்யா சொன்ன பிறகு யோசித்துப் பார்த்தாள் அன்பு.. முன்பை விட இப்போது நிறைய மாறி இருக்கிறான் தான்.. ஆனால் மீண்டும் அந்த பழைய நிலைக்கு செல்லாமல் இருக்க வேண்டுமே.. அதுதானே அவள் பயம்..

மாலை வேளையில் விளக்கேற்றி தெய்வத்திடம் குருவிற்காக மனதாரப் பிரார்த்தித்தாள் அன்பரசி..

கதிரேசன் மட்டும் கேரியருடன் வந்திருந்தான்..

"அண்ணி.. இந்தாங்க.."

கேரியரை வாங்கியவள் முகத்தில் அதிர்ச்சி.. எடை மாறாமல் அதே கனத்துடன் இருந்தது டிபன் பாக்ஸ்..

"அவர் சாப்பிடலையா..?"

"எனக்கு தெரியல அண்ணி.. மேஜை மேல இந்த கேரியர் இருந்தது.. எடுத்துட்டு போய் வீட்ல கொடுன்னு சொன்னாரு கொடுத்துட்டேன்.." அவன் சென்று விட்டான்..

பதட்டத்துடன் அடுத்து அப்பாவிற்கு அழைத்தாள்..

"அப்பா.."

"சொல்லும்மா.."

"சாப்பாடு கொடுத்துட்டு போனேனே.. அவர் சாப்பிடலையா.."

மேஜையில் வச்சுட்டு போங்கன்னு சொன்னார்.. "நான் வந்து பார்க்கும்போது அதே இடத்தில்தான் கேரியர் இருந்துச்சு.. அவர் தொட்டு கூட பாக்கலை.. என்ன மாப்பிள்ளை சாப்பிடலயான்னு கேட்டேன்.. ஒரு பார்வை தான் பார்த்தார் அதுக்கு மேல என்னால பேச முடியல.." சதாசிவம் அழைப்பை துண்டித்த பிறகு அவசரமாக குருவிற்கு அழைத்தாள்..

நான்கு முறை அழைத்த பிறகும் அழைப்பு ஏற்கப்படவில்லை..

ஐந்தாம் முறை..

"என்னடி வேணும் உனக்கு.." அதிகபட்ச டெசிபலில் அவள் செவிப்பறையை தாக்கினான்..

"ஏன் சாப்பிடல..?"

"நீ வச்சுட்டு போனா நான் சாப்பிடனுமா..?"

"அப்போ என்ன செய்யணும்.. !!"

"நீ ஒன்னும் செய்ய வேண்டாம்.. போனை வை.."

"வீட்டுக்கு வாங்க.."

"வீட்டுக்கு வந்தா மட்டும் மடியில உட்கார வச்சு சோறு ஊட்டுவியா..?" இப்படி கேட்டதும் அன்பரசிக்கு சிரிப்பு வந்தது..

"வாங்க.. ஊட்டறேன்.."

"வர முடியாது.." அழைப்பை துண்டித்து விட்டான்..

"இருந்தாலும் இந்த காட்டானுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது.." முணுமுணுப்போடு பழங்கஞ்சியை மாட்டுத் தொட்டியில் ஊற்றியவள் ஏதோ நிழல் கண்டு திரும்பி பார்க்க.. அங்கே கன்றுகுட்டியை தடவியபடி அமந்திருந்தான் குரு..

எப்போது வந்தார் இவர் என்ற ஆச்சர்யத்துடன் "நீங்க என்ன செய்றீங்க..?" அருகே வந்து கண்கள் இடுங்க கேட்டவளை நிமிர்ந்து விரைப்பாக பார்த்தவன்..

"ஹான்.. அன்னிக்கு நீதானே இந்த கன்னுகுட்டியை தடவிக் கொடுத்த.. அதான் நானும்.." வார்த்தைகளை நிறுத்திவிட்டு அவளைப் போலவே அந்த கன்றுக்குட்டியை தடவி கொடுக்க அன்பு இதழில் புன்னகை..

செவலை நிற கன்றுக் குட்டி மூக்கால் அவன் சட்டையை உரசியது..

குரு பிறந்ததிலிருந்து இத்தனை நாட்களாக இந்த மாட்டுத் தொழுவம் பக்கம் வந்ததே கிடையாது என்பதால் அங்க வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிசயத்திலும் அதிசயமாக இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்..

"சும்மா.. சொல்ல கூடாது.. உன்ன மாதிரியே அழகா இருக்கு.." அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை..

"எதை பார்த்தாலும் நான்தானா..!!"

"ஆமா.. எனக்கு எதைப் பார்த்தாலும் நீ தான் தெரியற.. சொல்லிடுவேன் ஆனா அத்தனையும் விரசமா இருக்கும் பரவாயில்லையா..?"

சுற்றிலும் ஆட்கள் இருப்பதை பார்த்துவிட்டு "நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. நான் போறேன்.." அவள் திரும்பி நடக்க பின்பக்கம் கல் ஒன்று வந்து விழுந்தது..

முகத்தை சுருக்கி நின்று அவனைப் பார்த்தாள்..

"இந்த மாதிரி வாயில்லாத ஜீவன்கள் கிட்ட பிரியம் காட்டுறது கூட மனசுக்கு ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.."

கன்று குட்டியின் கழுத்தை வளைத்து அதன் நெற்றியில் அவள் முத்தமிடுவது போல முத்தமிட்டான்.. எப்போதும் அவளையே சுற்றித் திரிபவனுக்கு அவள் செயல்களை உள்வாங்கி அப்படியே செய்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.. ஆனால் இந்த பிரியம்..?

அன்பரசிக்கு மயக்கம் வராத குறை..

தொடரும்..
அம்பே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣வம்பு நீங்க ரெண்டு பேரும் பண்றது மனசாட்சி மாதிரி தான் எனக்கும் பெரிய 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍சந்தேகம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
63
டேய் குரு நீ செய்யறத பார்த்தா எனக்கு அட்டாக் வந்திரும் போல. எவ்வளவு மாற்றம் உன்னிடம். 👌👌👌👌👌👌👌👌👌
 
Well-known member
Joined
Nov 20, 2024

ரவுடி பயலுக்கு அம்பே பைத்தியம் முத்தி போச்சு டோய் 🤪🤪🤪
 
Active member
Joined
May 3, 2025
Messages
58
டேய் ராசா அந்த கன்னுக்குட்டி தாங்காது உன்னோட இரும்பு பிடிக்கு...அன்பு மட்டும் தா தாக்கி பிடிப்பா...

எங்க ஆரம்பிச்சலும் முடிச்சாலும் அம்பே தான் குரு உனக்கு.... ஆன அது லவ் nu மட்டும் புரிய மாட்டேங்குது...
ஆனாலும் மாத்திடா குரு உன்ன...
 
Top