• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 23

Member
Joined
Jan 11, 2023
Messages
23
அன்று நடந்த ஷுட்டிங்கில் உமா தாண்டவனை பார்ப்பதற்கு முன் தாண்டவன் உமா வை பார்த்து விட்டான் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியமல்லவா!! .. ஒருவர் மற்றொருவருக்காகவே படைக்கப்பட்டது தான் விதி என்றால்.. அவளுள் தோன்றிய மாற்றங்கள் போல் அவனுள்ளும் வித்தியாசமான விளைவுகள் ஊற்றெடுத்ததில் அதிசயம் ஒன்றுமில்லையே!!..

இது வரை அறியாத ரசாயன மாற்றம்.. அவள் மீது ஏதோ ஈர்ப்பு.. எங்கோ பார்த்த நினைவுகள்.. ஜென்ம ஜென்மமாய் பழகிய உணர்வுகள்.. அத்தனையும் சேர்ந்து அவனை சுழட்டி போட.. இனம்புரியாத படபடப்பில் ஒருவித அவஸ்தைக்கு உள்ளானான்..

இத்தனை வருட அவன் முரட்டுத்தனமான கடுமையான காட்டு பயணத்தில்.. மென்மையயான பூக்களின் வருடல் போன்ற இந்த அழகான உணர்வுகளை தாள முடியவில்லை.. போதும் இதற்கு மேல் திரும்பி பார்க்காதே!!.. அந்தப் பெண்ணை கொன்று விடாதே.. அவள் வாழ வேண்டியவள்.. சட்டென மூளைக்குள் மின்னதிர்வு போல் ஒலித்த அசரீரியில் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.. உண்மை விளங்கியது..

இனி தன் வாழ்க்கையில் துணை என்பதே இல்லை.. அதற்கு ஆசைப்படுவதும் தவறு.. அவள் மீது தன் பார்வைப்படுவதும் பாவம்.. இளகிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தலானான்.. உமாவின் பார்வை விடாமல் தன்னை விரட்டுவதை உணர்ந்தும்.. அந்த வயதுக்கே உரிய ஆசைகளை துறந்து.. தன் இளமையை இரும்பாக உறுதிப்படுத்த படாத பாடு பட்டான்..

தப்பித்து வெகுதூரம் ஓடிவந்த பின்பும் மறக்க முடியாத படிக்கு இமைகளுக்குள் வந்து நின்றாள் உமா.. அவள் நினைவுகள் சுகம் அவனுக்கு.. அவளுக்கு?.. சாபம்.. அடுத்தடுத்த நாட்களில் வலியோடு கூடிய சண்டை காட்சிகளில் நடித்து தன்னை காயப்படுத்திக் கொண்டான்.. அதீத வலி அந்தப் பெண்ணின் நினைவுகளை ஓரம் தள்ளும் என்று நினைத்தான்.. அதிலும் தோல்வி.. இங்கு ஒருவன் தன்னை எண்ணி உருகி கொண்டிருப்பது தெரியாமல்.. அவனோடு கனவுலகில் பயணித்து கொண்டிருந்தாள் உமா.. ஒரே அலைவரிசையில் இருவரது மனமும்.. ஆனால் அதுதான் ஆபத்து..

அன்று வீடு வந்த போதினில் எதிர்பட்ட தனஞ்செயன் சொன்ன செய்தியை கேட்டு பெரிதாக மாற்றங்கள் ஒன்று நிகழவில்லை அவனுள்.. ஏதோ ஒரு பெண் தானே!!.. தன்னை எண்ணி ஏன் வாழ்க்கை கெடுத்துக் கொள்ள வேண்டும்.. விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு வருவதில் என்ன நஷ்டம் என வந்து விடப் போகிறது என்றுதான் நினைத்தான்.. பல இடங்களில் படப்பிடிப்பிற்கு செல்லும் போது இப்படித்தான் சூட்டிங் பார்க்க வரும் பெண்கள் நாயகன் என்று நினைத்து.. அவனிடம் கையெழுத்து வாங்குவதுண்டு சில பெண்கள் அவன் தான் ஸ்டண்ட் மாஸ்டர் என்பது தெரிந்தே தன் காதலை சொல்வதும் உண்டு.. வேடிக்கை பார்க்க வரும் மக்களில் பெரும்பாலனோர் கவனம் அவன் மீது தான் பதிந்திருக்கும்.. சுற்றி நடப்பவை எதுவும் தாண்டவனின் பார்வையிலிருந்து தப்புவதில்லை!!..

அப்படித்தான் ஏதோ ஒரு பெண் தனக்காக காத்திருக்கிறாள் என்று நினைத்தான்.. தனஞ்செயன் வீட்டுக்கு சென்றவனுக்கு கண்முன்னே நின்றிருந்த உமாவை கண்டு பேரதிர்ச்சி..

தன் மனம் கவர்ந்தவள்.. கனவினில் தினம் வந்து அவனை தூங்க விடாமல் இம்சிப்பவள்.. என்னை விட்டு போடி என்று நினைவுகளை விரட்டி அடித்தாலும் ஓடி வந்து அணைத்துக் கொண்டு தும்பை பூவாக சிரிப்பவள்.. இவளை தான் வேண்டாம் என்று நிராகரிக்க வேண்டுமா!!.. விதி அவனைப் பார்த்து சிரித்தது.. காரியம் கைகூடி வருகிறது.. அனைத்தும் அவனுக்கு சாதகமாக நிற்கிறது.. ஆனாலும் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மிக அருகில் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கிறதே.. உமா வேண்டும்.. என மிகத் தீவிரமாக அடம்பிடித்து ஏங்கியது அவன் மனம்.. ஆனால் அவளுக்கு நான் வேண்டாம்.. இதுதானே அவன் நிலை..

கண்கள் கூட அவன் பேச்சைக் கேட்கவில்லையே!!.. இதில் மனம் எங்கிருந்து அவன் கட்டளைக்கு கீழ்ப்படியும்..

காதலும் வாழ்க்கையும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்லவா.. அந்நேரம் கர்ம சிரத்தையாக அறிவுரை சொல்லும் புத்தி.. ஒரு பூமர் அங்கிள் தான்..

அத்தனை தடைகளையும் தாண்டி அவள் வேண்டாம் என்று நிராகரித்து விடத்தான் நினைத்தான்..

ஆனால் "உங்களை நான் லவ் பண்றேன்.. நீங்க இல்லன்னா என்னால வாழவே முடியாது.. தயவு செஞ்சு என்னை வேண்டாம் ன்னு சொல்லிடாதீங்க" என்று கேக் புட்டிங் மீது வழுக்கிச் செல்லும் கேரமல் சிரப் என மிக அருகாமையில் ஒலித்த அவள் குரல் சக்தி வாய்ந்த போதை வஸ்துவாய் அவன் மூளையை செயலழிக்க வைத்தது..

அவள் காதல் ஒரு வகை என்றால் இவன் நேசம் வேறு வகை.. திருட்டு விழிகளால் அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் அவளை..

"நீங்க இல்லனா உயிர் வாழ மாட்டேன்".. உமாவின் வார்த்தைகள் சத்தியம்.. விட்டுச் செல்ல மனமில்லை.. தன்னை வெறுக்க வேண்டும் என்பதற்காகவே திருமண வாழ்க்கையில் அவளுக்காக காத்திருக்கும் சிலுவைகளை தெளிவாக எடுத்துரைத்தான்.. காதல் மயக்கத்தில் மதி இழந்தாள் மாது.. எப்பேர்ப்பட்ட பெண்ணும் ஏற்றுக்கொள்ள தயங்கும்.. எதிர்கால வாழ்க்கையில் மிஞ்சப் போகும் கசப்புகளை அவன் கோடிட்டு காட்டிய போதிலும் ஏதோ அல்வா தொண்டு ருசித்ததை போல் மனமுவந்து ஏற்றுக் கொண்டாள்..

அந்த நொடி அவளுள் முற்றிலுமாக சரணடைந்தான் தாண்டவன்.. அவனும் மனிதன் தானே!!.. அன்புக்கு எங்கும் காட்டுமிராண்டி அவன்.. தடம் புரளும் மனதை கட்டுப்படுத்த தெரியவில்லை.. இழுத்து அனைத்து ஆசை தீர முத்தமிட்டான்.. வாழ்க்கையின் தேவ நொடிகள் அது..

அவன் அகராதியில் அன்பு கொல்லும்.. வெறுப்பு வாழவைக்கும்.. வலிதான்.. அவளுக்கு மட்டுமல்ல.. அவனுக்கும்!!.. அவள் புரிந்து கொள்ள வேண்டாம்.. என் பக்கத்தில் இருக்கட்டும்!!..

அவள் கஷ்டப்படுவாள்.. மன வருத்தப்படுவாள்.. காயப்படுவாள்.. அதனால் தானே வேண்டாம் என்று சொல்கிறேன் கேட்க மறுக்கிறாளே!!.. விழியோடு விழிநோக்கும் என் கண்மணியை இதற்கு மேல் தள்ளி வைக்கவே முடியாது.. என்னவோ நடந்து விட்டு போகட்டும்.. என் சுயநலத்திற்கு அவளை பலி கொடுப்பதாகவே இருக்கட்டும்.. அவள் வாழ வேண்டும்.. ஒரு வேளை என் துரதிஷ்டம் உமாவை மரணத்தின் எல்லையில் கொண்டு சென்று நிறுத்தினால் நானும் அவளோடு சேர்ந்து.. மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பேன்!!..

"எதுக்குடா இந்த விபரீதம்!!"..

"எனக்கு உமி வேணும்.. என் கண்மணி வேணும்"..

"அவ செத்துடுவா"..

"எ.. எனக்கு உமி.. வேணும்"..

"சுயநலவாதி நீ ஒரு கொலைகாரன் டா பாவி"..

"எனக்கு உமி.. வேணும்.. உமி.. வேணும்.. உமி.. வேணும்".. மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லாமல் போனது.. காதல் ஜெய்த்தது.. இருவருமே வீழ்ந்தனர்..

திருமணமான பிறகும் தன் காதலை வெளிப்படுத்த முடியாத கோழை.. அவளை காயப்படுத்தும் அரக்கனாகவே இருந்தான்.. கற்பனையில் கூட அவளை காதலிக்க முடியாத துரதிஷ்டசாலி..

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தன் காதலை வெளிப்படுத்தினான். அவள் தான் புரிந்து கொள்ளவில்லை..
வாய் திறந்து பாராட்டினால் தான் அன்பின் வெளிப்பாடா!!.. மிச்சம் வைக்காமல் உண்ட உணவு அவன் காதலை சொல்லவில்லையா!!.. அருகாமையும் சதா சீண்டும் தொல்லைகளும் காதல் இல்லையா!!..

அவள் உறங்கும் நேரம் தூர நின்று ரசிப்பான்.. ஏதேனும் ஒரு இடத்தில் தன் காதல் வெளிப்பட்டு அவள் பார்வை தன்னிடம் திரும்பி விடக்கூடாது என்பதற்காக வார்த்தைகளால் புண்படுத்தி அவளை வெறுக்க வைத்தான்.. அழ வைத்தான்.. அதைவிட அதிகமாக அவன் உடைந்து போன வலி நிறைந்த பொழுதுகள் யாருக்கும் தெரிவதில்லை.. அவனுக்கு தெரியும்.. பிறந்த வீட்டில் மட்டுமல்ல.. புகுந்த வீட்டிலும் அவள் மகாராணிதான்.. உபசரிப்புகளுக்கும்.. அக்கறைக்கும் அன்பிக்கும் என்றுமே பஞ்சமில்லை என்றுதெரிந்து கொண்டுதான் விலகி நின்றான்..

தந்தையை காயப்படுத்திய அன்று ரங்கநாயகியை மரியாதை இல்லாமல் பேசிய நாளில் அவன் மனம் பட்ட பாடு இதயத்துக்குள் ரணமாக பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டது..

அன்று பிரக்னன்சி கிட் பார்த்து அவள் கர்ப்பமாய் இருப்பதை உறுதி செய்து கொண்டதில்.. தடுக்க தடுக்க பொங்கி பெருகிய சந்தோஷத்தில் நெஞ்சுவலி வராத குறை!!.. உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!!.. இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் நிச்சயம் அவனுக்கு என் மீது ஜென்ம பகை இருந்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் இந்த பாழாய் போன பூமியில் என்னை பிறக்க வைத்து பழிவாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது!!..

சட்டென மனதில் புற்றுநோய் செல்களாக அடுத்த கணமே தோன்றிய எண்ணம்.. ஒருவேளை இந்த குழந்தையால் உமாவிற்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டால்.. பிரசவத்தில் இறந்து போனால்!!.. அப்படியே பிறந்தாலும் மனைவியிடம் தன் அன்பை மறைக்க முடியும்.. என் ரத்தத்தில் உருவான பிஞ்சு குழந்தையின் மீது வெறுப்பை காண்பிக்க முடியுமா!!.. ஆயிரம் முறை செத்துப் பிழைக்க வேண்டுமே!!.. அதனால்தானே கலைக்க சொன்னேன்.. குழந்தையை காரணம் காட்டி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றபோது மனம் நிம்மதி அடைந்தது உண்மைதான்.. நிம்மதியாக வாழட்டும்.. என்ற உறுதியை இழுத்து பிடிப்பது முள் கம்பியை பற்றி இழுப்பது போல் அத்தனை வலியை கொடுத்தது..

முடியவில்லை.. உமா இல்லாத வாழ்க்கை சாத்தியமே இல்லை!!.. தன் சுயநலத்திற்காக இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சி தான் நான்.. கடவுள் எனக்கே எனக்காக உமாவை மட்டும் கொடுக்கட்டும்.. துணையை மகிழ்வித்து பார்ப்பது தான் வாழ்க்கை!!.. ஆனால் அவளும் இல்லாமல் நான் என்ன செய்வேன்.. எப்படி வாழ்வேன்!!.. திக்குத் தெரியாத காட்டில் விட்ட சின்னஞ்சிறு பறவை போல் அவன் மனம் படபடத்து கொண்டது.. உமா விஷயத்தில் எப்போதுமே கிறுக்குத் தனமாக யோசிக்கும் சைகோதான் நான்!!..

அன்று இரவே அவளை அழைத்து வந்தான்.. முடிந்தவரை தன் தேடலில் ஸ்பரிசங்களில் கோப வார்த்தைகளில்.. உரிமையான மிரட்டல்களில் காதலை புரிய வைக்க தான் முயன்று கொண்டிருந்தான்!!..

குழந்தைக்கு அப்பாவாக ஒரு முறை கூட பரிசோதனைக்கு சென்றதில்லை!!.. இதுதான் என் மீதான குற்றச்சாட்டு.. கட்டிலின் கீழே அமர்ந்திருந்தவன்.. வலது பக்கத்தில் குட்டியாக குழல் வடிவத்தில் பிரிந்த ஹேண்டிலை இழுத்தான்.. டிராயர் போல் திறந்து கொண்டது அது..

ஐந்து பைல்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க மொத்தமாக தட்டி விட்டான்.. பரிசோதனை பேப்பர்கள் காற்றில் பறந்தன.. அத்தனையும் உமாவின் கர்ப்ப கால பரிசோதனை முடிவுகள்.. குழந்தைக்கான ஸ்கேன் ரிப்போர்ட்கள்.. ஒரிஜினல் உமாவிடம் இருக்கிறது.. இது நகல்கள்.. மருத்துவமனை ஊழியருக்கு லஞ்சம் கொடுத்து வாங்கியது!!.. தனியாக அமர்ந்திருக்கும் போது ஸ்கேன் ரிப்போர்ட்டில் புதிதாக முளைத்த கைகளை மேலே தூக்கி குட்டியாக தெரியும் அந்த அரை வட்ட நிலாவை தலை சாய்த்து பார்ப்பதில் அத்தனை பரவசம்..

பிள்ளையின் அசைவை உணர்ந்த நாள்.. இறுதிநாள் வரையில் மறக்க முடியாத தங்க தருணங்கள்.. உமா உறங்கிய பிறகு.. அந்த அசைவு கொடுத்த பரவசத்தில்.. நடுநிசியில் தோட்டத்தில் கால் வலிக்க நடந்ததை.. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்ததை நிலவும் நட்சத்திரங்களும் மட்டுமே அறியும்.. அழ முடியாது.. அனுபவிக்க முடியாது.. ஆனபோதிலும் அந்த உணர்வுகளை ரகசியமாக இதயத்துக்குள் மறைத்து வைத்து அவ்வப்போது திருட்டுத்தனமாக எடுத்து பார்த்து பூரித்து நின்ற நாட்கள்..

குழந்தை பிறந்த அன்று மருத்துவமனை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து.. இதழ் கடித்து சமுத்திர அலைகளாக.. மேலெழும்பிய பரவச உணர்வை.. கையளவு இதயத்திற்குள் கட்டுப்படுத்தி.. நரம்புகள் வெடிக்க.. கால் கடுக்க பைத்தியக்காரன் போல் வெகுதூரம் இலக்கின்றி ஓடிய நிலையை யார் அறிவார்!!..

பிள்ளையை வெறுக்கவில்லை வெறுப்பது போல் நடிக்க வேண்டும்.. சினிமாக்காரனுக்கு நடிப்பு ஒன்றும் கடினமில்லை.. டாடா.. என்று ஓடிவரும் பிள்ளையை கண்டவுடன்.. அத்தனை வேலிகளையும் தகர்த்தெறிந்து ஆசையோடு அள்ளிக் கொள்ளத் தோன்றும்.. ஆனால் சரியாக அலாரம் அடிக்கும் எச்சரிக்கை உணர்வு.. மனதை கட்டுப் படுத்தும்.. ஓடி வரும் பிள்ளையை புறக்கணித்து விலகி செல்வதெல்லாம் மரண அவஸ்தை..

"வாழனும் என் பிள்ளை வாழனும்!!.. வளர்ந்த பிறகு அவளும் என்னை வெறுப்பா.. அந்த குட்டி கண்ணு.. என்னை பார்த்து முறைக்கும்.. இருக்கட்டும்".. சிரித்தான்.. என்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக வாழ வாழ்நாள் முழுக்க நான் பூசிக்கொள்ளும் கெட்டவன் என்ற அரிதாரம்..

"என் உமா.. உமி.. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பா!!"..

"லவ்வுனா லவ் அப்படி ஒரு லவ்வு".. என சிரித்தவன் தலைக்கு கைகளை கொடுத்து தரையில் படுத்தான்..

"அவ கண்ணு மூக்கு உதடு.. எல்லாமே அழகு.. சிரிக்கும் போது தெரிகிற தெத்துப் பல்லு.. அப்புறம் அந்த காது மடல் மச்சம்.. இன்னைக்கு பூரா பார்த்துகிட்டே இருக்கலாம்".. ரசனையோடு புன்னகைத்தான் தாண்டவன்..

"எவ்வளவு அடிபட்டாலும் திருட்டுத்தனமா என்னை ரசிப்பா பாரு!!.. அப்படியே ஜிவ்வுன்னு உடம்புல ஏறும்.. அந்தப் பார்வையும்.. எவ்வளவு புண்படுத்தினாலும் எனக்காக அவ பார்த்து பார்த்து செய்யற ஒவ்வொரு விஷயமும்தான்.. என் உமாவை என்ன சூழ்நிலையிலும் விட்டுட கூடாதுன்னு மனசை பிடிச்சு வைக்குது".. சட்டென ஒருக்களித்து பாற்கடல் பெருமாள் சயனிப்பது போல் படுத்தான்..

"உன்னோட அம்மாவும் லேசு பட்ட ஆள் இல்ல பாப்பா.. வெளியில தான் சும்மா பிடிக்காத மாதிரி நடிக்கிறா.. என்னை அவ்வளவு பிடிக்கும்.. எனக்கு பயந்து அவ வீட்டை விட்டு போகாம இருக்கான்னு நினைக்கிறியா!!.. அம்புட்டும் லவ்வு.. குழந்தை பெத்த மூணு மாசத்துல.. என்கூட வாடின்னு கூப்பிட்ட உடனே அப்பா அம்மா அண்ணன் எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு என் கூட வந்தாளே.. பயமா!!"..

"லவ்.. பாப்பா"..

"என்னை ரட்சிக்க வந்த தேவதை.. அந்த தேவதையை கஷ்டப்படுத்துற ராட்சசன் நான்.. விரக்தியாக சிரித்தான்..

"இனி உன் அம்மா என்கிட்ட வர மாட்டா.. என்னை விட்டுப் போய்டுவா!!.. நினைக்கும் போதே நரம்பெல்லாம் வெடிக்கிற மாதிரி இருக்கு!!.. கட்டாய காதல் எத்தனை நாளைக்கு செல்லுபடி ஆகும்"..

மீண்டும் மல்லாக்க படுத்தான்.. "நீங்க ரெண்டு பேரும்தான் என் ஜீவநாடி.. நீங்க இல்லாம நான் இல்ல.. சீக்கிரம் அப்பாகிட்ட வந்துடு பாப்பா.. இல்ல.. இல்ல.. அப்பா கிட்ட வர வேண்டாம்.. அப்பா கிட்ட இருந்து தள்ளி நில்லு.. ஆனா வந்துடு.. நீ.. நீ.. வரலைன்னா".. என்ற கண்கள் மூடியவன்..

"நானும் உன்கூடவே வந்துடுவேன்.. எனக்கு வேற என்ன செய்யறது தெரியல பாப்..பா.. நான் உன் மேல வச்சிருக்கிற அன்பை நிரூபிக்க இதைவிட சிறந்த வழி இருக்கிறதா தோணல".. நெஞ்சடைப்பது போல் உணர்வு.. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தானோ!!.. ஏதோ சுமை அழுத்தி எடுக்க களைப்பில் உறங்கி இருந்தான்.. சிலரின் வாழ்க்கை இப்படித்தான் பிழையாகி போகிறதோ!!..

"ஹலோ.. அண்ணா.. பாப்பா.. பாப்பா.. எதிர்முனையில் அழுகை!!.. எவ்வளவு முயற்சி பண்ணியும் பாப்பாவை காப்பாத்த முடியல அண்ணா!!".. கதறலைத் தொடர்ந்து அழைப்பு துண்டிக்கப்பட்டது..

"அசுரா க்ரெயின் வரும்போது சரியா மூவ் பண்ணிடு.. டைமிங் முக்கியம்".. தாண்டவனை விட இயக்குனர் படபடத்தார்..

டைரக்டர் ஆக்ஷன் சொல்ல கேமரா ரோலிங் ஆகி கொண்டிருக்க அவன் தலைக்கு மேல் கனரக கண்டெய்னரை தூக்கிப் பிடித்துக் கொண்டு தயாராக நின்றது கிரேன் ..

"அசுரா.. கண்டெய்னர் விழப்போகுது டக்குனு நகர்ந்திடு".. இயக்குனர் முதல் அங்கிருந்த யூனிட் ஆட்கள் வரை அனைவரும் கத்திக் கொண்டிருக்க உயிரற்ற சிலையாக நின்று கொண்டிருந்தான் அவன்..

"ட்ராப் பண்ணுங்க".. டைரக்டர் உத்தரவு கொடுத்து தாண்டவனை அங்கிருந்து விலகும் படி கட்டளைகளை பிறப்பிக்க அவன் அசைந்தான் இல்லை..

இனி வாழ்ந்து என்ன பலன்.. விழிகள் மூடி நின்றான்..

"மிஸ் யூ உமா.. லவ் யூ சோ மச்!!.. என்னை மன்னிச்சிருடி!!"..

கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் தலைக்கு மேல் நின்றிருந்த கண்டெய்னர் கீழே விழுந்த வேகத்தில் மணல் புயல் கிளம்பியது போல் புழுதி பறந்தது..

நடந்து முடிந்த விபரீதங்கள் அடுத்தடுத்த நொடிகளில் புரிய வர.. "ஓஹ் காட்".. "அய்யயோ".. "இப்படி ஆகிடுச்சே".. அலறலும் மரண ஓலமும் என அந்த இடமே கோரமாக காட்சி அளித்தது..

தொடரும்..
Mudiyala sis neenga ippadi kondu poitu happy ending kudupinganu theyrium. But moolaiku theyrinjum padikum podhum padharudhu.......
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
😭😭😭😭😭😭😭😭💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Member
Joined
Jul 19, 2024
Messages
17

Jul 10, 2024
Messages
28
பாவம் தாண்டவன். தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் அடக்குவது மிக கடினம். சனாம்மா பாவம் தவன். அவனை வச்சு செய்தது போதும். சிக்கீரம் நல்ல வழி பண்ணுங்க.
 
Joined
Jul 31, 2024
Messages
24

😔😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இப்படி வாழ்ந்து நாமும் செத்து நம்மை சார்ந்தவரையும் சாகடிப்பதைவிட நாம் சாவதே மேல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Top