- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாதவியின் வயிற்றில் குழந்தை நன்றாக வளர்ந்து கொண்டே வருகிறது..
குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பித்த நாட்களில் கணவனும் மனைவியுமாக சிலிர்த்து பரவசமாகினர்.. இருவரும் தொட்டு தொட்டு குழந்தையோடு பேசி சிசுவோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அருமையான காலங்கள்..
ஆரம்பத்தில் புகைச்சலோடு புலம்பி கொண்டிருந்த ஜெயந்தி இப்போது கொஞ்சம் அடங்கி போயிருந்தாள்..
அக்கம் பக்கத்து ஆட்கள் வாசலில் அமர்த்தி கொண்டு புலம்புவதும்.. "என் மருமகள் என்னை பார்க்கறதே இல்ல.. என் மகன் என்னை கண்டுக்கறதே இல்லை.. என்று அழுது தீர்ப்பதும் அவளுக்கே அலுத்துவிட்டதோ.. அல்லது "விடு ஜெயந்தி.. உன் மருமதான.. நல்லா வாழ்ந்துட்டு போகட்டுமே..!! உன் மகன் அவன் பொண்டாட்டிய நல்லா வச்சிருந்தா புள்ளைங்க நல்லா வளர்த்துருக்கேன்னு உனக்குதானே பெருமை .. சின்னஞ்சிறுசுங்க வாழ்ந்துட்டு போகட்டுமே.. உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ.. அவ்வளவுதான.." அவர்கள் பதமாக அறிவுரை சொன்ன பாங்கோ என்னவென்று தெரியவில்லை.. இப்போதெல்லாம் அதிகமாக மாதவியை தூஷிப்பதில்லை..
ஒருவேளை கர்ப்பஸ்திரியை வசைபாடினால் தான் பெற்ற மகள் தலையில் அந்த பாவம் விழுந்து விடும் என்ற பயமா தெரியவில்லை..
கட்டில் ஓசையும் கொலுசொலி நாதமும் அறையைத் தாண்டி வெளியே கிங்கிணியாய் சிணுங்கி ஒலிப்பதில்.. வீட்டுக்கு பின்புறமுள்ள தாழ்வாரத்தில் வந்து படுத்து கொள்கிறாள் ஜெயந்தி..
சொல்லப்போனால் இதுதான் வசதியான இடம்.. ஆனால் பெரியவனும் சின்னவனும் மனைவியோடு தலையணை மந்திரங்களாக தன்னை பற்றி என்னென்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒட்டு கேட்க இந்த இடம் தோதுபடவில்லை என்பதால் கூடத்தில் படுத்துக் கொள்வது வழக்கமாகி போனது.. இப்போது அதற்கு அவசியம் ஏற்படவில்லை..
ஜெயந்தி கேட்பதை ஹரி வாங்கி கொடுக்கிறான்.. வீட்டுச் செலவுகளை அண்ணனோடு பகிர்ந்து கொள்கிறான்.. வீடு கட்டுவதற்கு பணம் கொடுக்கிறான்.. அதுவரை ஜெயந்திக்கு சிறு திருப்தி..
"என்ன பொண்டாட்டிக்கு மட்டும் தனியா மறைச்சு வாங்கிட்டு போற..?" ஜெயந்தி கண்களை சுருக்கினாள்..
"மறைச்சு வாங்கிட்டு போலயே..!! வெளிப்படையா எல்லோருக்கும் தெரியற மாதிரிதான் வாங்கிட்டு போறேன்.. இதுல எனக்கென்ன பயம்.." இயல்பாக சொன்னான் அவன்..
"நாங்க இத்தனை பேர் இருக்கோம்.. உன் அண்ணனுக்கு ஒரு சின்ன குழந்தை இருக்கான்.. நாங்க எல்லாம் மனுஷங்களா தெரியலையா..!! உனக்கு"
"அடடா நியாயம் தான்.. சம்படத்தில் அடைத்து வைச்சு திங்க ஆளில்லாம ஜிகுண்டு வாசம் பிடிச்சு கீழ கொட்டற நொறுக்கு தீனியை இனி வீணாக்காம காலி பண்ணுங்க.. அதையும் மீறி உங்களுக்கு தின்ன தேடுச்சுன்னா நான் வாங்கி தரேன்.." என்று சொல்லிவிட்டு சென்றான்.
"எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கான்.. இவன் என் பிள்ளையே இல்ல.. முனி அடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்.. கோவிலுக்கு கூட்டி போய் மந்திரிக்கணும்.." பற்களை கடித்தாள் ஜெயந்தி..
"என்னடிம்மா.. உங்க வீட்ல சீமந்தம் பண்ணுவாங்களா..?"
"பெரிய மருமகள ஊரையே கூட்டி வச்சு மண்டபத்துல சீமந்தம் செஞ்சாங்க.."
"ஏன் மகளுக்கு.. லட்ச ரூபாய் செலவு பண்ணி சீமந்தம் செஞ்சு பிரசவம் பார்த்து குழந்தைக்கு தங்க செயின் போட்டு.. பொண்ணுக்கு புடவையும் மாப்பிள்ளைக்கு பேண்ட் சட்டையும் எடுத்துக் கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.."
"உங்க வீட்ல என்ன செய்யப் போறாங்க..?" ஏழாவது மாதத்தின் தொடக்கத்தில் கேள்வி ஆரம்பித்துவிட்டது..
"எளிமையா 10 பேரை கூப்பிட்டு பூ முடிச்சு.. ஒன்பது வகை சாதம் செஞ்சு.. வீட்டுக்கு கூப்பிடுக்கறேன்.. இதுக்கே இருபதாயிரம் ஆகிடுமே..!!" அம்மா கவலைப்பட்டாள்.. ஆடம்பரமாக செய்ய மனதில் நிறைய ஆசை உண்டு.. இல்லாத கொடுமை..
அதே நேரத்தில் வீட்டுக்கு வருவோரும் ஒவ்வொரு சீமந்தம் எப்போது என்ற கேள்வி எழுப்ப.. சோர்ந்து போனாள் மாதவி..
"எனக்கு வளைகாப்பு செய்யும் போது.. கிட்டத்தட்ட ஒரு நூறு பேரை பத்திரிக்கை வச்சு அழைச்சிருந்தோம்.. மண்டபத்துல தான் செஞ்சாங்க.. பாப்புலர் கேட்டரிங் சர்வீஸ் ல இருந்து வெரைட்டி மீல்ஸ் அரேஞ்ச் பண்ணியிருந்தோம்.. அதுக்கே செலவு ஒரு லட்சத்தை தாண்டிருச்சு.. போதாக்குறைக்கு.. எனக்கு நகை பட்டு புடவை செலவு.. பேறுகாலம் பார்த்த செலவு புகுந்த வீட்டுக்கு புறப்படும்போது திரும்பவும் குழந்தைக்கு டிரஸ்.. நகை எனக்கு புடவை.. எங்க வீட்டுக்காரருக்கு மோதிரம்னு எல்லாம் சேர்த்து மூணு லட்சத்தை தாண்டி போயிடுச்சு.. உங்க வீட்ல என்ன செய்யப் போறாங்க மாதவி.." சரிதா தனது பிறந்த வீட்டு பெருமைகளை சொல்லி ஜாடை மடையாக குத்தி காட்டியதில் எரிச்சலானாள் மாதவி..
எட்டாவது மாதத்தின் தொடக்கத்தில்.. "சீமந்தம் எப்ப வைக்க போறாங்க.. உங்க வீட்லருந்து வந்து பேசப்போறது இல்லையா.. முறை தெரியாதா.. ஒன்பதாவது மாசத்துல வளைகாப்பு வச்சு பொண்ணை அழைச்சுக்கணும்னு உங்க அம்மாவுக்கு தெரியுமா தெரியாதா..?" ஜெயந்தி குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்..
மாதவி வெளியே சொல்ல முடியாமல் மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்தாள்..
வளைகாப்பு செய்ய முடியாத சூழ்நிலையில் மாதவியின் குடும்பம் திணறிக் கொண்டிருக்கும் போது.. சதா நச்சரிக்கும் இந்த மாமியாரின் வாயை அடைப்பது என்று தெரியவில்லை.. கீதா பத்து வட்டிக்கு கடன் வாங்க முடிவு செய்ய.. மாதவி கூடவே கூடாது என மறுத்து விட்டாள்..
"இங்க பாருடிம்மா.. என் புள்ள எல்லாத்தையும் எடுத்து செய்யறாங்கறதுக்காக இந்த செலவையும் அவன் தலை மேல வச்சிடாதே.. பாவம் இப்பதான் கடன உடன வாங்கி தொழில் ஆரம்பிச்சான்.. நல்லவன இளிச்சவாயனா நினைச்சு எல்லாரும் சேர்ந்து அவன் தலையில மிளகாய் அரைக்காதிங்க.. உனக்காக வளைகாப்பு செலவை ஏத்துக்கறேன்னு அந்த கடனையும் வேற அவன் சுமக்கணுமா.. தாலி கட்டுன புருஷனை கஷ்டப்படுத்தாம அவன் தலையில சுமையை ஏத்தி வைக்காம குடும்பம் நடத்தறவதான் நல்ல பொண்டாட்டி.. மாமியார் பூண்டுப்பல் உரித்துக் கொண்டே அன்று கூறிய வார்த்தைகள் நினைவில் வந்து போயின..
அந்த உயர்தர மருத்துவமனையில் செக்கப் முடித்து இருவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்..
ஸ்கேன் மருந்து செலவு என்று எல்லாம் சேர்த்து பத்தாயிரத்தை தாண்டியிருக்க தனது டெபிட் கார்டை எடுத்து நீட்டினான் ஹரி..
அவன் கரம் கோர்த்து தோளில் சாய்ந்து நின்றாள் மாதவி..
"உங்களுக்கு நிறைய செலவு வைக்கிறேன் இல்ல..?"
"பைத்தியமாடி உனக்கு.. உனக்கும் குழந்தைக்கும் செய்யறதுக்கு நான் கணக்கு பார்க்கறதே இல்ல.. ஏதாவது கேட்டுட போறேன்.. பேசாம நில்லு.." அவன் கோபம் கூட அழகாக தெரிந்தது..
பணக்கஷ்டம் இருந்த போதிலும் தனக்காக தாராளமாக செலவு செய்யும் கணவனின் தலையில் வளைகாப்பு செலவை வேறு ஏற்றி வைக்க முடியுமா..?
அனைவரையும் கஷ்டப்படுத்தி.. சம்பிரதாயத்திற்காக செய்யும் இந்த வளைகாப்பு தேவைதானா? என்று தோன்றியது..
மனதில் அவளுக்கும் ஆசைகள் உண்டு.. கைநிறைய வளையல்கள் போட்டு பட்டு புடவை கட்டி ஜடை தரித்து பூ வைத்து.. முழு அலங்காரத்துடன் கணவனின் புருவம் உயர்ந்த கண்பார்வையில் வெட்கப்பட்டு.. பெண்கள் சந்தனம் குங்குமம் இட்டு நலுங்கு வைத்து அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடி மனதில் நிறைவேறாத ஆசையாக அமிழ்ந்து கிடக்கிறது..
எதைத் தொட்டாலும் பணம் வேண்டும் எனும் பட்சத்தில் சுபகாரியங்களே வெறுத்துப் போய் விடுகிறது..
அன்று கணவனும் மனைவியும் இருவருமாக அமர்ந்து சாப்பிடும் போது ஜெயந்தி அந்த பேச்சை எடுத்தாள்..
"வீட்ல சொல்லிட்டியா மாதவி.. உங்கம்மா வளைகாப்பு விழா பத்தி வந்து பேசி எப்ப பேசுவாங்க..!! ஒன்பதாவது மாசம் நெருங்கிட்டே இருக்கே.. நீங்க சாவகாசமா பொறுமையா அலட்சியமா இருக்கறதை பார்த்தா குழந்தை பிறந்த பிறகு பேர்சூட்டு விழா கூட நடத்த மாட்டீங்க போலிருக்கு.." ஜெயந்தியின் குத்தல் பேச்சில் வெகுண்டெழுந்தாள் மாதவி..
"எப்ப பாரு வளைகாப்பு வளைகாப்புன்னு ஏன் என் உயிர வாங்கறீங்க.. எனக்கு வளைகாப்பும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்.." வார்த்தைகளை கொட்டி தீர்த்தவள் அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டாள்..
ஜெயந்தி ஆஆவென பார்த்தாள்..
"இப்ப நான் என்ன தப்பா சொல்லிப்புட்டேன்.. வளகாப்பு நடத்தறது இவளுக்கும் இவ குழந்தைக்கும் தானே நல்லது.. என்னமோ நான் என்னோட சுயநலத்துக்காக சொன்ன மாதிரி படபடன்னு பொரிஞ்சிட்டு போறா.." கன்னத்தில் கை வைத்து பேசிய தாயின் பேச்சை பொருட்படுத்தாமல் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான் ஹரி..
"அதானே அவன் முந்தானையை புடிச்சுகிட்டு போகலைனாதான் ஆச்சரியம்.." நொடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் ஜெயந்தி..
அறைக்குள் வந்து ஜன்னலின் வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மாதவி..
"ஏய்.. என்னடி இது..?" அதட்டலோடு உள்ளே வந்து நின்றான் ஹரி..
"என்ன.. உங்க அம்மாவை நான் எடுத்தெறிஞ்சு பேசினது தப்புன்னு சொல்ல போறீங்களா..? என்னை அடிக்கப் போறீங்களா..!!" அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது..
மெல்ல சிரித்து அவளருகே வந்து அமர்ந்தான். ஹரி..
"நான் ஒண்ணுமே சொல்லலைடி என்னதான் ஆச்சு உனக்கு.. ஏன் இவ்வளவு கோபம்.." குரல் கனிவை பூசிக் கொண்டது..
"எனக்கு வளைகாப்பு வேண்டாம்.."
"ஏன் வேண்டாம்..?"
"எனக்கு பிடிக்கல.."
"ஏன் பிடிக்கல..?"
"அதான் பிடிக்கலைன்னு சொல்றேன்ல.. எல்லாத்துக்கும் காரணம் சொல்லனுமா..?"
"என்ன பிரச்சனைன்னு சொன்னாதானடி தெரியும்..!!"
"ஐயா சாமி.. ஆள விடுங்க ஒரு பிரச்சனையும் இல்லை.. வளைகாப்பு வேண்டாம் ஒன்பதாம் மாசம் ஆரம்பத்துல என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிடுங்க அவ்வளவுதான்.." அழுகையை விழுங்கினாள்..
"வளைகாப்பு செய்யணும்னு பெரியவங்க ஆசைப்படுறாங்க அதை ஏன் தடுப்பானேன்.. எல்லாம் முறைப்படி நடக்கட்டுமே..!!" அமைதியாக சொன்னவனை கண்கள் சுருக்கி பார்த்தாள் மாதவி..
"வளைகாப்பு ரொம்ப கிராண்ட் ஃபங்சனா பண்ணனுமாம் உங்க அம்மா சொல்றாங்க.."
"நல்ல விஷயம் தானே..!! நம்ம குழந்தைக்காக தானே.. ராஜயோகத்தோட என் குழந்தை வளைகாப்பு விழாவை அனுபவிக்கட்டுமே.."
"சீமந்த விழா பிறந்த வீட்லதான் பண்ணனும்.. அதையும் உங்க அம்மா தான் சொன்னாங்க..!!"
"சரி இருக்கட்டும்.. நான் அத்தைகிட்ட பேசறேன்.. அவங்க சிறப்பா செஞ்சிடுவாங்க.. நீ கவலைப்படாதே..!! மனச போட்டு குழப்பிக்காம அமைதியா இரு.." அவள் தலையை தடவி கொடுத்து அங்கிருந்து சென்றிருந்தான்..
இவனுக்கு புரிகிறதா? புரியவில்லையா.. சீரும் சிறப்புமாக எடுத்துச் செய்யும் அளவிற்கு தன் பிறந்த வீட்டில் என்ன செல்வாக்கு இருக்கிறது..
இன்றைய தேதியில் குடும்பச் செலவு போக பத்தாயிரம் ரூபாயை தனியாக சேமிக்கவே எத்தனை பிரயத்தனப்பட வேண்டும்.. எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டு செல்கிறான்.. என் பிறந்தகம் எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்லை இவர்களுக்கு வளைகாப்பு விழா சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும்.. என்ன ஜென்மங்களோ..!! மாதவிக்கு தலை வலித்தது..
தொடரும்..