• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 24

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
59
அடுத்த சில நாட்களில்..

கண்களில் சீற்றத்துடன் அவள் முன்பு நின்று கொண்டிருந்தான் ஹரி..

பருந்தை கண்டு நடுங்கும் பறவைக் குஞ்சாக அவன் முன்பு மிரட்சியோடு நின்று கொண்டிருந்தாள் அவள்‌.

"இப்ப எதுக்காக ரங்கநாயகி அக்காகிட்ட நீ இரண்டு லட்ச ரூபாய் கடன் கேட்டுருக்க..? கடுமை பரவிய
குரலில் கேட்டான்..

அது.. என்று எச்சில் விழுங்கி நின்றாள் மாதவி..

'பதில் சொல்லுடி.." ஹரியின் குரல் கனத்து அச்சுறுத்தியது..

"சீமந்த விழாவிற்காக கேட்டிருந்தேன்.." திக்கி திணறின வார்த்தைகள்..

"ஓஹோ கடன் வாங்கி உங்களுக்கு நீங்களே வளைகாப்பு நடத்திக்கிறீங்களோ..?" அவன் குரலில் ஏளனமும் கோபமும்..

"என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க ஹரி..!! வளைகாப்பு வேண்டாம் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்..‌ யாருமே கேட்கலையே.. ஊரையே கூப்பிட்டு சீரும் சிறப்புமா மண்டபம் வைச்சு வளைகாப்பு விழா நடத்தற அளவுக்கு எங்க வீட்ல வசதி இல்ல.. அது உங்களுக்கும் தெரியும்.. உங்க அம்மாவுக்கும் தெரியும்.. அப்படியும் எதுக்காக எங்களை இப்படி வறுத்தெடுக்கறீங்க.. நடத்தியே ஆகணும்னு எல்லாருமா சேர்ந்து அழுத்தும் போது நாங்க வேற என்ன செய்ய முடியும்.. அம்மாவுக்காகதான் ரெண்டு லட்சம் கடன் கேட்டுருந்தேன்.."

"ஏன் எனக்கென்ன கை கால் விளங்காம போச்சா..!! உன் வளைகாப்பை எடுத்து நடத்த முடியாத அளவுக்கு வக்கில்லாதவனா போயிட்டேனா..? பக்கத்து வீட்டு அக்கா கிட்ட ரெண்டு லட்சம் கேட்கிற அளவுக்கு நான் உனக்கு அந்நியமா போயிட்டேன் அப்படித்தானே..?" அவன் குரல் வலியை பிரதிபலித்தது..

"என்ன பேசறீங்க.. உங்ககிட்ட மட்டும் அவ்வளவு பணம் எங்கிருந்து வரும்..!! ஏற்கனவே என் குடும்பத்துக்கு ஏகப்பட்ட உதவி செய்யறீங்க.. பத்தா குறைக்கு இந்த பிரசவச் செலவு.. எவ்வளவுதான் உங்களை கசக்கி பிழிய முடியும்..?"

"ஏய் அது என் பிரச்சனைடி.. உனக்காக என் குழந்தைக்காகன்னு வரும்போது என் தலையை அடமானம் வச்சாவது காசு புரட்டிக்கொண்டு வருவேன்.. உங்களுக்காக செய்யாம வேற யாருக்காக செய்யப் போறேன்.." அவன் மனதுக்கு நெருக்கமான வார்த்தைகளில் சிலிர்த்தாள் மாதவி..

'அதுக்கில்லைங்க..!!"

"பேசாதே.. எப்ப எனக்கு தெரியாம கடன் வாங்க முடிவு பண்ணிட்டியோ அப்பவே முழுசா என்னை கொன்னுட்ட.."

"ஹரி..?"

"உனக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்யறவன் உன் விழாவை பத்தி முன்னாடியே யோசிச்சு வச்சிருக்க மாட்டேனா..!! எப்பதான் நீ என்னை நம்புவ மாதவி..?" தலை சாய்த்து விழிகள் படபடக்க கேட்ட போதிலும்.. கீழுதட்டை நாவால் நனைத்தபடி அவன் நின்றிருந்த தோரணை மனதை என்னவோ செய்தது..

"ஐயோ உங்களை நம்பாம இல்ல.. ஆனா.."

"ஆனா என்னடி..? என் வளைகாப்பை நீங்கதான் எடுத்து நடத்தணும்னு புருஷன்கிட்ட உரிமையா கேக்க உனக்கு ஈகோ தடுக்குது அதானே..?"

"எனக்கென்னங்க ஈகோ..‌ அதுவும் உங்ககிட்ட..?"

"அப்புறம் ஏன் என்கிட்ட எதையும் மனசு விட்டு பேச மாட்டேங்கற..? உன் தேவைகளை வாய் விட்டு கேட்க உனக்கென்னடி அவ்வளவு தயக்கம்.. உன் வீட்ல கொழுத்த பணம் இருந்திருந்தாலும் இந்த வளைகாப்பு வைபவத்தை நான்தான் எடுத்து நடத்தியிருப்பேன்.. என் புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் நான்தான் செய்வேன்..‌ குறுக்க வந்து தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.."

மாதவி இமைதட்டி விழித்தாள்..

"இதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. இனி ஒரு முறை அடுத்தவங்க கிட்ட பணம் கேக்கறதுக்கு முன்னாடி.. உனக்கு நான் வேணுமா வேணாமா முடிவு பண்ணிக்க.." அடிக்குரலில் சீறினான்..

"ஹரி இஇஇ.." கதறலோடு அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டாள் மாதவி..

"மன்னிச்சிடுங்க..‌ ஏதோ குழப்பத்துல தெரியாம பண்ணிட்டேன்.. சத்தியமா உங்களை வேத்து ஆளா நினைக்கல.. உங்க அம்மா அடிக்கடி டென்ஷன் பண்ணிட்டு இருந்தாங்க.. நீங்க பயங்கர பண முடையில இருக்கிறதாகவும்.. உங்க தலையில இன்னொரு பாரத்தை சுமத்த கூடாதுன்னு மறைமுகமாக குத்தி காட்டிக்கிட்டே இருந்தாங்க.."

"அதனால மேடம் எனக்கு கஷ்டம் தரக்கூடாதுன்னு விலகி நின்னுட்டீங்களோ.. நான் சொன்னேனாடி உன்கிட்ட பண நஷ்டம்னு.. எதுவாயிருந்தாலும் என் மூஞ்சிய பார்த்து நேரடியா பேசு.. என் பாசத்தை பல விதங்களில் புரிய வைக்க உன்னையே சுத்தி சுத்தி வரேன் ஆனா நீ.. என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம..‌ தள்ளி வைக்கிற மாதிரி செய்ற காரியமெல்லாம் என்னை ரொம்ப புண்படுத்தது டி.."

"அப்படி சொல்லாதீங்க ஹரி.. இனிமே சத்தியமா இப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன்..‌ எதுவாயிருந்தாலும் உங்ககிட்ட தான் கேட்பேன் போதுமா.."

பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டான் ஹரி.. அவன் சிறுபிள்ளைத்தனமான கோபத்தை பார்க்க சிரிப்பாக வந்தது மாதவிக்கு..

ஹரியின் முகத்தை திருப்பி கன்னத்தில் முத்தமிட்டாள்.. சிரிக்காமல் அவளைப் பார்த்து முறைத்தான்.. மறு கன்னத்தில் முத்தமிட்டாள்.. நெற்றியில் முத்தமிட்டாள்.. உதட்டுக்கு கீழே முத்தமிட்டாள்..

"இந்த உதடு மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு.. பாத்தியா பாத்தியா.. என்கிட்ட உரிமை எடுத்துக்க நீ தயங்கற..‌ போ.. எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்று கோபித்துக் கொண்டு நகரப் போனவனை கழுத்தில் கைப்போட்டு இழுத்து இதழோடு இதழ் இணைத்தாள்.. ஆரம்பம் அவளுடையது.. ஆவேச முத்தக் கலையின் அடுத்த படிநிலைகள் அனைத்தும் அவனுடையதாகிப் போயின.. பூச்சியை கண்டதும் கவ்வியிழுத்து மூடிக்கொள்ளும் நெப்பந்தன்ந்தஸ் தாவரம் போல் உதடுபட்டதும் உணர்ச்சிகள் பெருகி மொத்தமாக அவளை தனக்குள் சுருட்டி இழுத்துக் கொண்டான் ஆடவன்..

வளைகாப்பு விழாவை வெகு விமரிசையாக.. ஆடம்பரமாக நடத்தி முடித்திருந்தான் ஹரி.. பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செய்தது அவன்தான் எனினும் அனைத்து மாதவியின் தாய் கீதா வழியாகவே செய்யப்பட்டது..

பிறந்த வீட்டிலிருந்து இந்த நற்காரியத்தை எடுத்து செய்வது போல் மற்றவர்களுக்கு பார்வை படுத்தப்பட்டது..‌ அதன் பின்புலத்தில் ஹரி மறைந்திருந்ததை மாதவியைத் தவிர வேறு யாரும் அறியவில்லை..‌

"மண்டபம் எடுத்து விழாவை அமர்களப் படுத்திட்டீங்க.. எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது சம்பந்தியம்மா.. கருப்பு பணம் ஏதாவது பதுக்கி வச்சிருந்தீங்களா..?" ஜெயந்தி கீதாவிடம் கிண்டலாக போட்டு வாங்கினாள்..

"அச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சம்பந்தி.. மாதவியோட கல்யாணத்துக்காக சேர்த்து வெச்சது..‌ கல்யாணம் தான் ஒத்த ரூபா செலவில்லாம.. நீங்களே எல்லாத்தையும் எடுத்து நடத்திட்டிங்களே.. அந்த பணத்தை வைச்சுதான் வளகாப்பு முடிச்சேன்.." என்று ஹரி சொல்லிக் கொடுத்த பொய்யை சந்தேகம் வராமல் அழகாகச் சொன்னாள் கீதா..

ஜெயந்திக்கு சொந்தக்காரர்கள் மத்தியில் பெருமையாக பேசப்பட்ட சந்தோஷம் ஒருபுறம் என்றால்.. மாதவியின் வறுமையை சுட்டிக் காட்டி மட்டம் தட்ட முடியவில்லை என்ற வருத்தம் மறுபுறம்..

நாவல்பழ நிற பட்டுப்புடவையும் பச்சை நிற ஆரி வர்க் ரவிக்கையும்.. ஜடை முடித்து பூ அலங்காரமும்.. பழைய நகைகளோடு ஹரி செய்து போட்ட புது நகைகளும்.. கைநிறைய கண்ணாடி வளையல்களோடு தண்டு தண்டாய் 10 தங்க வளையல்களுமாக.. ஜெகஜோதியாய்.. ஏற்றிய சுடராய் ஜொலித்தாள் மாதவி..

"நிறைய நகை செஞ்சு போட்டிருக்கீங்க ஹரி.. இந்த பணத்தை வியாபாரத்துக்கு பயன்படுத்திக்கலாமே.." மாதவி ஒருமுறை வருத்தப் பட்டாள்..

"என் பொண்டாட்டியை வைரத்தால் இழைப்பேன்டி.. யாரு கேட்பா.." ஆண்மை ததும்பிய குரலோடு கண் சிமிட்டினான் அவன்..

"ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி என் செல்ல கண்மணி..‌ இன்னைக்கு ராத்திரி கண்டிப்பா நோ.. சொல்லவே கூடாது.." அவள் காதோரம் கிசுகிசுப்பு யாருக்கும் தெரியாமல் முத்தமிட்டான்..

அவனே நோ சொன்னாலும் அவள் விடுவதா இல்லை.. அப்படிப்பட்ட ஆர்ப்பரிக்கும் மனநிலையில்தான் இருந்தாள் மாதவி.. தாம்பத்தியத்தின் கர்ப்ப கால நிலைகள் யாவும் ஹரி சொல்லி தந்திருக்க தடைகளின்றி இல்லறம் தொடருகிறது இப்போதும்..

திருமணத்தன்று கால் கிலோ இஞ்சியை பச்சையாக தின்றவன் போல் கடுகடுத்து நின்றவன் இன்று முகம் கொள்ளா புன்னகையுடன் வளைய வந்ததில்..‌ ஜெயந்தி வழி உறவினர்களுக்கு பெரும் ஆச்சரியம்..

இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து திருஷ்டி எடுத்த பிறகு மாதவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் கீதா..

"இதைவிட வசதியா பெரிய வீடு பாக்கட்டுமா..!! குழந்தை பிறந்தால் இந்த வீடு தோதுப்படுமா..‌ சீம ஓடு ரொம்ப அனலா இருக்குமே..!! ஏசி மாட்டவும் வழி இல்லையே.." நீர் கோர்த்திருந்த அவள் பாதங்களை பிடித்து விட்டபடி வீட்டைச் சுற்றிப் பார்த்து கவலை பட்டான் ஹரி..

"12 வருஷத்துக்கு மேலாக இந்த வீட்ல இருக்கோம்.. திடீர்னு காலி செஞ்சுட்டு வேற வீட்டுக்கு போனா எவ்வளவு வசதியிருந்தாலும் ஏதோ வெறுமையா.. மனசு அந்நியமா தோணும்.."

"ஓட்டு வீடுதான்.. ஆனா வெளிய நிறைய மரங்கள் இருக்கே.. ஜன்னல் வழியா காத்து சில்லுனு வீசுதே..!!" அவனை சமாதானப் படுத்தினாள் மாதவி..

"இருந்தாலும் நம்ம குழந்தைக்கு சௌகரியமா இருக்கணுமே..!!"

"அம்மாவே சந்தோஷமா இருக்கும்போது குழந்தைக்கு என்ன அசவுகரியம் வந்திட போகுது..‌ உங்க குழந்தையை நான் பார்த்துக்க மாட்டேனா..!! கவலைப்படாமல் இருங்க.."

"என்ன கவலைப் படாமல் இருங்க..? நீ இல்லாம நான் எப்படி தனியா அங்கே ராத்தங்க முடியும்.."

"அடடா.. என்னமோ பிறந்ததிலிருந்து நான் உங்க கூடவே இருக்கிற மாதிரி பேசுறீங்க.. இத்தனை நாள் நீங்க வாழ்ந்து வளர்ந்த வீடு தானே..!! ரெண்டு மூணு மாசத்துல ஒன்னும் ஆகிடாது.. சீக்கிரம் வந்துருவேன் போடா..!!" கணவனின் கன்னத்தில் குத்தினாள்..

"நான் வேணா இந்த வயர் கட்டில வெளியே போட்டு படுத்துக்கட்டுமா உங்களுக்கு பாதுகாப்பா..?" சின்ன குழந்தை போல் கேட்டவனை இமைக்காமல் பார்த்தாள் மாதவி..

வேண்டாம் என்று மறுத்து அவன் முகம் மாற வைக்க மனமில்லை.. எங்கே சிறு பிள்ளைகளின் மத்தியில் ஒட்டலும் உரசலுமாக.. சங்கடப்படுத்துவானோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தாள்..

ஆனால் இந்த வீட்டில் நீ இருக்கிறாய் என்ற எண்ணமே போதும்.. அந்த இனிய நினைவுகளோடு.. தள்ளி நின்று உன்னை பார்த்தாலும் சுகமே..!! என்பதைப் போல் கட்டிலை வெளியே எடுத்து போட்டு வானத்தை பார்த்தபடி படித்துக் கொண்டான் ஹரி..

'ஹரி உங்களுக்கு வசதியா இல்லனா வீட்டுக்கு போயிடுங்க.. நீங்க இப்படி வெளிய படுக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." பக்கத்திலேயே இருந்தவனுக்கு ஃபோன் செய்து கவலைப்பட்டாள் மாதவி..

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி.. நான் ரொம்ப வசதியா சந்தோஷமா இருக்கேன்.. அப்படியே ஜன்னல் வழியா எட்டி பார்த்து ஒரு முத்தா கொடு.. கண்ண மூடி தூங்கிடுவேன்.." இரவுக்கு நெருக்கமான கிசுகிசுப்பான குரலில் அவன் சொல்ல.. வெட்கத்தோடு சிரித்தாள் அவள்..

இதோ நல்லபடியாக குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்து விட்டாள்..

பெண் குழந்தை.. புண்ணியாஜனம் முடிந்து குழந்தைக்கு வேதாந்திக்கா என்ற பெயரிடப்பட்டது..

மாதவி மூன்று மாதங்கள் பிறந்த வீட்டிலிருந்த காலங்களில்.. ஹரியின் அண்ணன் கட்டிக் கொண்டிருந்த வீட்டு வேலைகள் முழுமையடைந்து கிரகப்பிரவேசம் முடித்து புது வீட்டில் குடியேறி இருந்தனர் சரிதா சபரி வாசன் தம்பதியினர்..

ஜெயந்தியையும் தன்னோடு அழைத்துச் சென்று விட்டனர்.. ஹரி புது வீட்டிற்கு வர மறுத்துவிட்டான்..

"நான் நடத்திட்டு வர டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு பிசினஸ் தர்ற ஒரு பெரிய விஐபி.. தனியா ரெண்டு மூணு அப்பார்ட்மெண்ட் வாங்கி போட்டுருக்காராம்.. என்னை ஒரு அப்பார்ட்மெண்ட் லீசுக்கு எடுத்துக்க சொன்னார்.. நானும் மாதவியும் அங்க குடியரலாம்னு பார்க்கறோம்.." என்று சொல்லிவிட்டான்..

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர அபார்ட்மெண்ட்.. பால் காய்ச்சும் போது ஜெயந்தியும் சரிதாவும் வந்திருந்தனர்.. கிட்டத்தட்ட அவர்கள் கட்டிய புது வீட்டை விட பெரியதாக இருந்தது இந்த அப்பார்ட்மெண்ட்.. லீஸ் ஒப்பந்தப்படி இரண்டு மூன்று வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்த வீடுதான் என்றாலும் சபரி வாசனுக்கும் சரிதாவிற்கும் அந்த நாகரீக வீட்டை கண்டு உள்ளே புகைச்சல்.. ஜெயந்தியும் கூட "இந்த பொண்ணு காலடியில இப்படி விழுந்து சேவை செய்யறானே.." என்று உள்ளூர பொறாமை குறையவில்லை..

மாதவியும் ஹரியும் குட்டி பாப்பாவுமாக அந்த உயர்தர அப்பார்ட்மெண்டில் குடியேறிவிட்டனர்..

தங்களோடு வந்து வசிக்கும்படி கீதாவையும் ருத்ரா பவித்ராவையும் மாதவியும் ஹரியும் எவ்வளவோ வலியுறுத்தி அழைத்துப் பார்த்தும் கீதா வேண்டாம் என திட்டவட்டமாக மறுத்து விட்டாள்..

"நீ வந்து போக அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கட்டும்.. நாங்களும் உங்களோடவே தங்கிட்டா அது சரி வராது..‌ என் வீட்டில் இருக்கிறது தான் எனக்கு நிம்மதி" என்று சொல்லிவிட..‌ மாதவியால் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை..

ஆனால் ஹரியும் மாதவியும் சேர்ந்து அந்த தெருவிலேயே ஒரு நல்ல வீடாக பார்த்து மூவரையும் குடி வைத்தனர்..

ஹரியின் உதவியோடு மேலும் இரண்டு தையல் மிஷின்கள் வாங்கி போட்டு இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி தனது தொழிலை விருத்தி செய்து கொண்டாள் கீதா..

மாதவி புதிதாக youtube சேனல் ஒன்றை தொடங்கி விட்டாள்.. மாது திரெட்ஸ்.. வீணாகும் துணிமணிகளிலிருந்து அழகிய ஆடைகளை உருவாக்குவது எப்படி என்ற வீடியோக்களை பதிவேற்றி அமோக வரவேற்பு பெற்றது அவள் youtube சேனல்..

சாதாரண ரேஷன் புடவையை பலவித வண்ண பூக்கள் வரைந்து சரிகை வைத்து தைத்து.. ஆங்காங்கே ஜமிக்கி ஒட்டி 200 ரூபாய் செலவில் அட்டகாசமான பிரிண்டட் காட்டன் புடவையாக மாற்றிய முதல் வீடியோவிற்கு அத்தனை வரவேற்பு..

அதற்கடுத்து வீணான துணிமணிகளில் பேன்சி பைகள் செய்வது..‌ புது மாடலில் சில்க் த்ரெட் வளையல்கள்.. சாதாரண எளிமையான ஜாக்கெட்டை டிசைனர் பிளவுஸ் மாற்றுவது.. குழந்தைகளுக்கான ஃபிரில் கவுன் குறைந்த செலவில் தைப்பது என பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து மாதந்தோறும் கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறாள்..

பணத்தேவை என்பதை விட மனதிருப்தி.. அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறது.. சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை கூடி வருவதை தினம் கணவனிடம் சொல்லி மகிழ்கிறாள்..

youtube வீடியோ பதிவேற்றங்களில் டெக்னிக்கல் விஷயங்களில் நிறைய தடுமாற்றங்கள் இருந்த போதிலும் இப்போது ஹரியின் உதவியுடன்.. பல வேலைகளை திறம்பட கற்றுக் கொண்டு விட்டாள்..

கேமரா ஸ்டாண்ட் மைக் என அனைத்தையும்.. தேர்ந்தெடுத்து வாங்கி அவளை தன் காணொளிகளை பதிவு செய்து கொள்கிறாள்..

கேப்ஷன்.. தம்நெயில்.. என அனைத்தையும் செட் செய்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும் அவள் தான்..

இதெல்லாம் எனக்கொன்னும் தெரியாது என்று மனைவியின் முன்னேற்றங்களை கண்டுகொள்ளாமல் செல்லும் ஆளில்லை அவன்.. ஒவ்வொரு வீடியோவையும் முழுதாக பார்த்து அதில் நிறை குறைகளை எடுத்துச் செல்வான்.. அவள் உழைப்பை பாராட்டுவான்.. தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வான்.. மனம் நிறைந்து போகும் மாதவிக்கு..

வேலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் இருவருமாக வேதாந்திகாவை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்..

எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது.. அந்த நாள் வரும் வரையில்..!!

அன்று கண் முன் நடந்த சம்பவங்களில் மிரண்டு போனாள் மாதவி..

தொடரும்..
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
104
🥳🥳🥳🥳🥳🥳🥳😛😛😛😛😛😛😛🥳💜💜💜💜💚💚💛🩷🩷💛💜❤️💚💛🩷💜❤️💜💚💛🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷💛💚❤️❤️💜💚💛💛🩷🩷🩷🩷
 
Joined
Jul 31, 2024
Messages
32

அதான பாத்தேன் என்னடா சைக்கிள் சைலண்ட் போதேனு இதோ டயர் வெடிச்சிதா இல்ல சைக்கிளயே அடிச்சி தூக்கிட்டாங்களா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top