- Joined
- Jan 10, 2023
- Messages
- 68
- Thread Author
- #1
வருண் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறான்.. அவர்களின் மீது அந்த வயதுக்குரிய ஈர்ப்பும் இருந்ததுண்டு.. இவள் தன் வாழ்க்கை துணையாய் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டு..! அதை மீறி ஒரு பெண்ணை அடைய வேண்டுமென்ற உறுதியான எண்ணம் அவனுக்குள் தோன்றியது இல்லை.. தோன்றுமளவிற்கு எந்த பெண்ணும் அவன் நெஞ்சில் ஆழமாய் வேரூன்றி நின்றதில்லை..
ஒரு மருத்துவனாய் பெண்கள் மீதும் திருமணத்தைப் பற்றியும் அவனுக்கொரு தீவிரமான எண்ணம் உண்டு.. அந்த எண்ணம் மட்டும்தான் இத்தனை நாட்களாய் திருமணத்தை தள்ளிப்போட்டு திலோத்தமாவை மனைவியாக நடிக்க அழைத்து வந்து இப்படியொரு தகிடுதத்தோம் வேலை செய்வதற்கான ஒரே காரணம்.. அந்த எண்ணத்தை அடியோடு நொறுக்கி.. என்ன ஆனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்குமளவிற்கு எந்த பெண்ணும் அவன் மனதை கொள்ளை கொண்டதில்லை..
இத்தனை வருடங்கள் கழித்து இப்போது அவனை ஒரு பெண் ஈர்த்திருக்கிறாள்.. மனநல மருத்துவன் தன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் தடுமாறி போவதென்னவோ உண்மை.. திருமணம் காதல் பற்றி அவன் போட்டு வைத்திருக்கும் வேலிகளை உடைத்தெறிந்து அவனுக்குள் நுழைந்தவள் தேம்பாவணி..
ஆனால் இப்போதும் அப்படி ஒரு பெண்ணை சேர இயலாமல் ஏதோ ஒரு தடை பெருஞ்சுவராக முன்னால் நிற்கிறது. அது பெரிய இடைவெளியிலான வயது வித்தியாசம்..!
அன்றைய கார் சம்பவத்தில் உதட்டுச் சாயம் பூசுகிறேன் பேர்வழியென நெருங்கி முத்தமிட துடித்த நொடி வரையில் தனக்குள் என்ன நிகழ்கிறது என்று புரிந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் கடந்திருந்தான்..
தன்னை மீறி கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் தள்ளாடிய போதுதான் தன் நிலையின் தீவிரம் புரிந்தது.
தேம்பாவணியின் மீது சமீப காலமாக தனக்கொரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு ஆரம்பத்திலேயே அதை வெட்டி வீசியெரியும் துடிப்பு..
தேம்பாவணியை குணப்படுத்தி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்..! ஒரு மருத்துவனாக உன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்து..அதுல மட்டும் தான் உன்னுடைய போக்கஸ் இருக்கணும் வருண்..! தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான்..
பெரிதாக பெண் வாசனையை அறியாத தன் வாலிபம்.. ஒரு பெண்ணின் நெருக்கத்தில் தடுமாறுகிறதோ..! ஹார்மோன் கோளாறு.. வயதுக்கான வேகம்.. மனதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன்னை சுற்றி முள்வேலியை இன்னும் வலுவாக போட்டுக்கொள்ள முயற்சித்தான்.. இது எந்த அளவிற்கு சாத்தியமாகப் போகிறதோ புரியவில்லை..
வெண்மதியின் அழைப்பின் பேரில் வருணின் தங்கை நிவேதாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்..
"வா.. நிவி.. இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சதா..?" புன்னகைத்தபடியே அவள் பக்கத்தில் அமர்ந்தான் வருண்..
"இல்லண்ணா.. பசங்களுக்கு லீவு கிடைக்கணுமே..! இவருக்கும் இங்க கொண்டு வந்து விடுறதுக்கு டைம் இருக்கனும் இல்லையா?" என்ற பிறகுதான் வருணின் பார்வை தங்கையின் கணவர் சுந்தர் பக்கம் திரும்பியது..
"எப்படி இருக்கீங்க சுந்தர்..! பிசினஸ் எல்லாம் எப்படி போகுது..! அடிக்கடி என் தங்கச்சிய கூட்டிட்டு வந்து கண்ணுல காட்டுங்க.." என்று அவனிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டான்..
"பாருடி.. என்னை மட்டும் எதுக்காக வந்த..? எப்ப திரும்பி போவேன்னு வந்த முதல் நாளே கேட்டுட்டான்..! உன்னைய மட்டும் அடிக்கடி கூட்டிட்டு வந்து காட்டனுமாம்.. இது என்ன அக்கா தங்கச்சிக்குள்ள ஓர வஞ்சன..!" வெண்மதி தங்கையிடம் கிசு கிசுப்பாக சொல்லி உதட்டை சுழித்துக்கொள்ள..
"நீ வாய வெச்சுகிட்டு சும்மா இருந்தா அவன் ஏன் உன்னை திரும்பி போக சொல்ல போறான்..!" என்றபடியே தேநீர் கோப்பைகள் அடங்கிய தட்டை கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டு கணவனின் அருகில் அமர்ந்து கொண்டார் சாரதா..
அதற்குள் நிவேதாவின் மகள் ஷாலு.. வருணின் மடியில் ஏறிக்கொள்ள.. அவளோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தான் அவன்..
"ஆமா என்னை எதுக்காக இங்க வர சொன்ன..?" நிவேதா அக்காவின் பக்கத்தில் வந்து ரகசியமாக கேட்க..
"சொல்றேன் இரு.. எத்தனை நாளைக்கு இங்க தங்க போற..!" என்று அவள் காதை கடித்தாள் வெண்மதி..
"தெரியல அக்கா.. உன் புருஷன் மாதிரி இல்லை இவரு.. என்னை விட்டு ரெண்டு நாள் கூட பிரிஞ்சிருக்க மாட்டார்.. பசங்களுக்கு நாலு நாள் லீவு..! அதுக்குள்ள திரும்பி போயாகணும்..!"
"அது போதுமே சீக்கிரம் உண்மையை கண்டுபிடிச்சிடலாம்..!"
"என்ன அக்காவும் தங்கையும் ரொம்ப நேரமா ரகசியமா ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க..?"
வருண் கண்களை கூர்மையாக்கி அவர்களை பார்க்க..
"ஒன்னும் இல்லையே..! பல நாள் பாக்கலையே அதான் குசலம் விசாரிக்கிறோம்.." என்று அசடு வழிந்தாள் வெண்மதி..
"சரி அத விடு.. எங்க இந்த சின்ன குட்டிய காணோம்.." வெண்மதி கண்களை சுற்றி தேட..
"யாரக்கா சொல்ற.. ஷாலு இங்க தானே இருக்கா..?" என்றாள் நிவேதா..
"அட ஷாலுவை சொல்லலடி..!"
"வேற யாரு.. நம்ம சாரு வா..?"
"அவ இல்ல.." என்று விட்டு வெண்மதி தனது உடம்பை திருப்பி அங்குமிங்குமாக தேடிக் கொண்டிருக்க..
அங்கிருந்த யாருக்குமே அவள் யாரைப் பற்றி சொல்கிறாள் என்று புரியவில்லை..
"அக்கா தேம்பாவணிய பத்தி சொல்றா.." என்று எடுத்துக் கொடுத்தவன் வருண்தான்..
"தேம்பாவணியா நீ சொன்னியே அந்த பொண்ணா அக்கா..?" மறுபடியும் காது கடித்தல்..
"ஆமாடி அவளைத்தான் தேடுறேன்.. இங்கே இருக்கிற யாருக்காவது நான் யாரை பத்தி பேசுறேன்னு புரிஞ்சுதா.. ஆனா கரெக்ட்டா அவன் பிடிச்சிட்டான் பாரு.."
"இதுல என்னக்கா இருக்கு.. யாரை கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொன்னதால ஒருவேளை அந்த பொண்ணா இருக்குமோன்னு அண்ணா கேட்டுருப்பார்.."
"போடி உனக்கு ஒண்ணுமே புரியல.. அவனோட ரூம் அங்க இருக்கு.. அந்தப் பொண்ணோட ரூம் இந்த பக்கம் இருக்கு.. வந்ததுல இருந்து அவன் கண்ணு எங்க போகுதுன்னு பாரு.."
"அட ஆமா..! அண்ணனோட கண்ணு ஏன் அடிக்கடி அந்த பக்கமா போயிட்டு வருது..!"
"அதைத்தான் நானும் கேட்கறேன்.. இங்க ஏதோ தப்பு நடக்குது.. ஒன்னும் புரியல.. எல்லாத்தையும் சரி பண்ணிட்டுதான் நான் ஊருக்கு கிளம்புவேன்.."
"இப்படி பாக்கறதைல்லாம் வச்சி எதுவும் தப்புன்னு சொல்லிட முடியாது.. அண்ணன் ஒரு டாக்டர்.. ரொம்ப தெளிவா யோசிக்க கூடியவர்.. கட்டுன பொண்டாட்டி குத்து கல்லாாட்டம் இருக்கும்போது இன்னொருத்தியை எதுக்காக திரும்பி பார்க்க போறார்.."
"ஆமா குத்து கல்லாட்டம்தான் இருக்கா..!" இரு பொருள்பட சொல்லி உதட்டை சுழித்து கொண்டாள் வெண்மதி..
"இருடி நான் போய் அந்த புள்ளைய கூட்டிட்டு வரேன்..!" வெண்மதி எழுந்து சென்றுவிட..
"அவ எங்கே..?" வருண் தங்கை அன்னையை மாறி மாறி பார்த்து கேட்க இருவரும்.. "இப்ப நீ யாரடா சொல்ற?" என்ற ரீதியில் விழித்தனர்..
பாவம் அவனுக்கு திலோத்தமா என்ற பெயர் கூட மறந்து போய்விட்டது..
தலையை சொரிந்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்..
மனைவி என்பவள் சபை நாகரிகத்திற்காவது ஊரிலிருந்து வந்திருக்கும் தன் தங்கையோடு சிறிது நேரம் பேசி உறவாட வேண்டுமல்லவா..! அதற்காக திலோத்தமா பற்றி விசாரிக்க போய்.. இப்போது கண்களை சுருக்கி யோசித்துக் கொண்டிருந்தான்..
சாரதாதான் பிறகு எடுத்துக் கொடுத்தார்..
"உன் அண்ணிய பத்தி சொல்றான்னு நினைக்கறேன்.." என்றதும்..
"ஓ.. உன் பொண்டாட்டிய பத்தி கேக்கறியா அண்ணா..?" என்றாள் நிவேதா..
இந்த வார்த்தைகளெல்லாம் அவன் வாயிலிருந்து உதிர்வது அரிது..
திலோ.. என்று கூட செல்லமாக அழைத்ததில்லை திலோத்தமா.. என முழுதாக அழைத்து முற்றுப்புள்ளி வைத்தால் தான் அவனுக்கு நிம்மதி..
உங்க அண்ணி என் பொண்டாட்டி.. உங்க மருமகள் இந்த மாதிரியான உறவாடல்கள் என்றுமே தோன்றியதில்லை அவனுக்குள்..!
உணர்வுபூர்வமான உறவாக இருந்திருந்தால் இயல்பாகவே இப்படி பேசக்கூடிய உரிமை வந்திருக்கும்..!
திலோத்தமாவை பல மைல் தொலைவு தள்ளி நிறுத்தியிருக்கும்போது.. அந்த பெயர் மட்டும் தான் அவன் வாயிலிருந்து வெளிப்படுகிறது..
தனது அறையின் கட்டிலில் நகத்தை கடித்தபடி அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
"ஏய்..! இங்க தனியா ஒக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க..?" வெண்மதியிடம் அதிகாரம் தூள் பறந்தது..
"ஏன்..! தனியா உக்கார கூடாதா.." கொஞ்சம் மிரட்சியாக விழித்தாள் தேம்பா..
"எழுந்து வா.. உன்ன என் தங்கச்சி பாக்கணுமாம்.."
"என்னை எதுக்கு பாக்கணும்..!"
"இந்த வீட்ல அழகா முயல் குட்டி மாதிரி ஒரு பொண்ணு அங்கேயும் இங்கயுமா ஓடிக்கிட்டு திரியும்.. இன்னைக்கு உன்ன பார்த்தவுடனே பயந்துகிட்டு புதருக்குள்ள போய் உட்கார்ந்துகிச்சு.. அப்படின்னு சொன்னேன்.. போய் கூட்டிட்டு வா அந்த முயல்குட்டியைன்னு அவதான் என்னை அனுப்பி விட்டா.."
"நான் யாரையும் பாக்க வர மாட்டேன்..!"
"ஏன்..?"
"எனக்கு மனுஷங்களை பார்த்தா அலர்ஜி.. அதுவும் கூட்டத்தை பார்த்தா அலர்ஜியோ அலர்ஜி.."
"பாருடா நாங்க என்ன சாம்பியா? உன்னை கடிச்சு ரத்தத்தை உறியறதுக்கு..!"
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் வரல.. நீங்களும் உங்க குடும்பமும் ஜாலியா பேச வேண்டியதுதானே? என்னை எதுக்காக கூப்பிடறீங்க.."
"நீ இந்த வீட்டு விருந்தாளி.. உன்னைய தனியா விட்டுட்டு நாங்க மட்டும் சிரிச்சு பேசிகிட்டு இருந்தா அது நல்லாவா இருக்கும் எழுந்து வா..!"
"வரமாட்டேன்.."
"வரமாட்டியா..? உன்னை எப்படி வரவைக்கிறதுனு எனக்கு தெரியும்.." இடுப்பில் சேலையை இழுத்து சொருகிக்கொண்டு கட்டிலின் பக்கத்தில் வந்த தேம்பாவணியின் கையை பிடித்து இழுத்தாள் வெண்மதி..
"அக்...கா விடு...ங்க..!"
"உன்னை அப்படியே விடறதில்ல எழுந்து வா.." என கையைப் பிடித்த தேம்பாவணியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள் வெண்மதி..
கூடத்தில் அமர்ந்திருக்கும் நிவேதாவிற்கு இவளை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.. எப்போதும் குழந்தைகளோடு குறுக்கா மறுக்கா ஓடிக் கொண்டிருக்கும் பெண்.. இப்படி அறைக்குள்ளே அடைந்து கிடப்பதில் வெண்மதிக்குள் என்னவோ ஒரு வெறுமை..!
நியாயமாக பார்த்தால் வந்த பெண்ணிடம் ஓரிரு வார்த்தை பேசி விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்ட நாத்தனார் திலோத்தமாவைத்தான் இப்படி இழுத்து வந்திருக்க வேண்டும்..!
என்னவோ தேம்பாவணி மீது வெண்மதிக்கும் சின்னதாய் ஒரு அப்சஷன்..!
தேம்பாவணியை இழுத்து வந்து கூடத்தில் நிற்கவைக்க.. ஷாலு விடம் பேசிக்கொண்டே வருணின் பார்வை தன் முன் நின்றவளின் மீது அழுத்தமாக படிந்தது..
நிவேதா தன் அக்காவின் பின்னால் ஒளிந்து எட்டிப் பார்த்த அந்த பெண்ணை தலை சாய்த்து பார்த்தாள்.. தேம்பாவணியின் அழகு அவளை வியக்க வைத்தது...
லேசாக சிரிக்க.. தேம்பாவணி தலையை நீட்டி நன்றாக அவளை பார்த்தாள்.. நிவேதாவின் கண்களில் தெரிந்த சினேக பாவனை தேம்பாவணிக்கு பிடித்திருந்தது..
"யாரும் உன்னை முழுங்கிட மாட்டாங்க.. இப்படி வா..!" வெண்மதி அவளை இழுத்து முன்னால் நிற்கவைக்க..
"வந்து இப்படி உட்காருங்க.." என்றாள் நிவேதா..
தேம்பாவணி நடந்து வந்து வருண் பக்கத்தில் அமர்ந்துகொள்ள..
"ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படறீங்க.. என்ன பாத்தா சிங்கம்புலி மாதிரி அவ்வளவு பயங்கரமாவா இருக்கு..! அவ்வளவு மோசமில்லைங்க நானு" நிவேதாவின் தோழமையான பேச்சில் இறுக்கம் தளர்ந்து இயல்பாகி புன்னகைத்தாள் தேம்பாவணி..
"அதெல்லாம் ஒரு பயமும் இல்லை.. சும்மா நடிக்கறா.. நீ மட்டும் இல்லைனா இந்நேரம் வாய் கிழிய பேசி என்னையே அலறவிடற ஆளுதான் இவ..!" வெண்மதி தேம்பாவணியை சீண்டி பார்க்க..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. கூட்டமா எல்லாரும் உட்கார்ந்து இருக்கோமே..! அதனால கொஞ்சம் பயந்துட்டா.. மத்தபடி இவளும் உன்ன மாதிரி ஜாலி டைப் தான் நிவி.." ஷாலுவை மடியில் வைத்துக் கொண்டு தேம்பாவணியின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தான் வருண்..
இதுவும் வெண்மதியின் பூதக்கண்ணாடி விழிகளிலிருந்து தப்பவில்லை..
சுந்தருக்கு வேலைகள் நிறைய இருந்ததால் அன்று இரவே தனது சொந்த ஊருக்கு புறப்பட்டிருந்தான்.. வருண்தான் தன் காரில் கொண்டு போய் ரயிலேற்றி விட்டு வந்தான்..
அன்று இரவு அனைவருமாய் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க..
நிவேதா தெரியாத்தனமாய் தேம்பாவணியின் தந்தையை பற்றி கேட்டதும்..
என் அப்பா அப்படி, என் அப்பா இப்படி.. என படையப்பா ரஜினி ரேஞ்சுக்கு கைகளை காற்றில் சுழற்றி அரை மணி நேரத்திற்கு விடாமல் சொற்பொழிவாற்றியதில்
நிவேதாவிற்கு தலை சுற்றியது..
"சரி போதும் போதும் நீ சாப்பிடு.." என்ற பிறகுதான் உணவில் கை வைத்தாள்..
"அப்பா அப்பப்பா.. மறுபடி அவ ஆரம்பிச்சுட்டா..! இப்ப நீங்க என்ன பண்றிங்க அள்ளி அள்ளி எனக்கு ஊட்டறீங்க..!" வெண்மதி ராஜேந்திரன் பக்கத்தில் வந்து சொல்ல..
"நீ தனியா போய் தின்னு.. எனக்கு பசிக்குது.." என தட்டை இன்னொரு பக்கமாய் வைத்துக்கொண்டு அவர் மட்டும் உண்டு கொண்டிருக்க வெண்மதியின் முகம் போன போக்கில் வருண் வெடித்து சிரித்தான்..!
"இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்ப பெருசா சிரிக்கற நீ..! ஊட்டலைனாலும் அப்பா அப்பாதான்.." முகத்தை வெட்டிக்கொண்டு "என்னை ஏண்டா பாக்கறீங்க ..தின்னு தொலைங்க.." பிள்ளைகளையும் திட்டிக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள் வெண்மதி..
குடும்பமே சந்தோஷமாக கலகலத்துக் கொண்டிருந்தது கொஞ்சமும் திலோத்தமாவிற்கு பிடிக்கவில்லை.. இவங்க குடும்பம் சந்தோஷமா இருக்க நான் உதவி செய்யணும்.. ஆனா நானும் என் பையனும் மட்டும் பிரிஞ்சிருக்கணுமா..! என்ற உள்ளூரப் புகைச்சல் அவளுக்கு..
இரவு வருணுக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
தனது அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தான் வருண்.. வழக்கம்போல அவளை உறங்க வைக்க அங்கே செல்லவில்லை..
"என்ன சொல்லு?" என்றான் இறுகிய குரலில்..
"நீங்க என்னை பார்க்க வரவே இல்லையே..!"
"வரலைனா என்ன..? தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே..!"
"உங்களை பார்க்காம தூக்கம் வராது.."அவள் சொன்னதும் கினுக்கென ஒரு நொடி வந்து போன தாபத்தை மீண்டும் புறந்தள்ளியவன்..
"இப்படி பழகாதே தேம்பா..! எப்படி இருந்தாலும் நீ தனியா தூங்கித்தான் ஆகணும்..! எப்பவும் நான் உன் கூட இருக்க முடியாது." என்றான் கொஞ்சம் மென்மையான குரலில்..
"ஏன்..!" அவள் குரல் தழுதழுப்பதை புரிந்து கொள்ள முடிந்தது..
"ஏன்னா அப்படித்தான்..!"
"ஃபிரெண்டுனு சொன்னீங்க..?"
"பிரண்ட்ஷிப்பா இருந்தாலும் ஒரு எல்லை இருக்கு.. அதுக்குள்ள நின்னுக்கணும்.."
"அதெல்லாம் முடியாது.. இப்பவே நீங்க வரணும்.."
"அடம் பிடிக்காதடி.. சொன்னா புரிஞ்சுக்கோ..!"
"ஏன் வரமாட்டீங்க சொல்லுங்க..?"
"ஏன்னா இப்ப நான் என் பொண்டாட்டி கூட இருக்கேன் போதுமா.. பேசாம ஃபோன ஓரமா வச்சுட்டு தூங்கு.." என்பதோடு அழைப்பை துண்டித்திருக்க..
கண்களை துடைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள் தேம்பாவணி..
இன்றைய நாள் முழுக்க வகுப்பில் எந்த பாடங்களையும் கவனிக்கவில்லை..
காரணம் உதட்டுச் சாயம் பூசியவன் உள்ளுக்குள் மென்மையாக ஊடுருவியிருந்தான்..!
சின்னதாய் தனக்குள் தோன்றிய சலனத்தை சிரிப்புடன் அனுபவித்துக் கொண்டிருந்தாள் போன நொடி வரை..
"என் பொண்டாட்டி கூட இருக்கேன்" என்ற வார்த்தையில் நிதர்சனம் புரிய.. உள்ளுக்குள் தோன்றிய எண்ணங்கள் உடனடியாக தீக்குளித்தன..
கண்ணீர் வழிய வழிய துடைத்துக் கொண்டே இருந்தாள்.. அடுத்த நொடியிலிருந்து மறுபடி அறைக்குள் பொருட்களெல்லாம் பயங்கர உருவமாக மாற.. தலையணையை தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் வருணின் அறைக்கு பக்கத்தில் நின்றாள்..
இந்த பக்கம் தேம்பாவணியின் அறைக்கு சென்று அவளை பார்த்து விட துடிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் மூடிய கதவில் தனது கரத்தை வைத்திருந்தான் வரூண்..
"நான் என் பொண்டாட்டியோட இருக்கேன்.." இந்த வார்த்தை மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்க.. நெஞ்சோடு அழுத்தி பிடித்துக் கொண்டிருந்த தலையணையோடு தலை குனிந்தபடி அங்கிருந்து சென்றிருந்தாள் தேம்பாவணி..
கதவை திறக்கும் ஓசையில்.. அடித்து பதறி எழுந்தாள் சாரதா..
"என்னங்க யாரோ நிக்கற மாதிரி தெரியுது லைட்டை போடுங்க..!" என்றதும் ராஜேந்திரன் அவசரமாக பக்கத்திலிருந்து மேஜை விளக்கை உயிர்ப்பித்தார்..
தலையணையை நெஞ்சோடு அணைத்தபடி தேம்பாவணி..
"என்னடா பாப்பா..?"
"தனியா தூங்க முடியல.. நான் உங்களோட படுத்துக்கலாமா..?"
"கேட்கணுமா வாடா..!" என்றதும் ராஜேந்திரன் "நான் அந்த சோபாவில் படுத்துக்கறேன்.. நீங்க ரெண்டு பேரும் தாராளமா படுங்க.." என்றபடி எழுந்து சென்று அந்த அறையின் சோபாவில் கால் நீட்டி படுத்துக் கொள்ள..
பக்கத்தில் படுத்துக்கொண்டவளின் மீது தனது சேலை முந்தானையை எடுத்து போர்த்திவிட்டு.. தலையை வருடி அவளை அணைத்துக் கொண்டார் சாரதா..
இதுவரை அனுபவித்திராத அம்மா வாசனையில் அடுத்த நொடி உறக்கம் அவள் கண்களை மென்மையாக தழுவியிருந்தது..
வாசலில் நின்று தேம்பாவணி தன் தாயை கட்டியணைத்து உறங்குவதை கண்டு விட்டு அங்கிருந்து சென்றிருந்தான் வருண்..
தொடரும்..

Last edited: