• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 26

Member
Joined
Mar 14, 2023
Messages
54
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Member
Joined
Apr 30, 2025
Messages
89
"அந்த பொண்ணு முன்னாடியே நீங்க என்னை அசிங்கப்படுத்தினா அப்புறம் எப்படி அவ என்னை மதிப்பா..?"

தேம்பாவணி கீழே இறங்கியதும் தன் கச்சேரியை அமர்க்களமாக ஆரம்பித்தாள் திலோத்தமா..

"இப்ப நான் உன்னை என்ன அசிங்கப்படுத்திட்டேன்..?"

"வர வேண்டாம்னு நான் சொல்றேன்.. வந்தா தான் ஆச்சுன்னு நீங்க வலுக்கட்டாயமா கார்ல ஏத்திக்கிட்டா அப்புறம் எனக்கென்ன மரியாதை இருக்கும்..?"

"இப்ப இதுல என்ன மரியாதை கெட்டுப் போச்சு உனக்கு.. முதல்ல தேம்பாவணியை கார்ல வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கென்ன உரிமை இருக்கு..?" அவனும் உஷ்ணமானான்..

"நிஜம் எப்படியோ.. இந்த வீட்டோட மருமகளா உங்களுக்கு மனைவியா நடிச்சிக்கிட்டு இருக்கேன்.. கிட்டத்தட்ட இந்த வீட்டோட முதலாளியம்மா நான் தானே..!" கடைசி வார்த்தைகளில் கண்களை மூடி பற்களால் நறநறத்தான் வருண்..

"அப்படிப்பட்ட என்னை அவமதிச்சு அவளை கார்ல ஏற சொன்னா பொண்டாட்டி வார்த்தைக்கு மதிப்பில்லைனு ஆகிப்போகாதா..? நாளை பின்னாடி அவ என்னை எப்படி மதிப்பா..!"

"நடக்கிற விதத்தில் நடந்துகிட்டா எல்லாருக்கும் மரியாதை தானா கிடைக்கும்..!"

"ஓஹோ அப்ப நான் பஜாரி எல்லார்கிட்டயும் சண்டைக்கு நிக்கறேன்னு சொல்றீங்களா..?"

"இது தேவையில்லாத பேச்சு.. உன் கூட வார்த்தைகளை வளர்க்க நான் விரும்பல.. அமைதியா வந்தா கூட்டிட்டு போவேன்.. இல்லனா கொண்டு போய் வீட்ல இறக்கி விட்டுட்டு நான் பாட்டுக்கு புறப்பட்டு போயிட்டே இருப்பேன்.." என்ற பிறகு உதட்டை இறுக மூடிக்கொண்டாள் திலோத்தமா..

வழக்கம்போல் அமரேஷ் வருணை பார்த்து சினேகமாய் புன்னகை பூத்தான்.. தாயிடமும் அளவாக பேசிக்கொண்டு.. அவனுக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை பெற்றுக் கொண்டான்..

திரும்பி வரும்போது மீண்டும் தன் பல்லவியை ஆரம்பித்து விட்டாள் திலோத்தமா..

வெளிப்படையாக அவனுக்கு தெரியும்படி கண்களை துடைத்துக் கொண்டாள்..

"இப்ப எதுக்காக இந்த அழுகை..?"

"நீங்க எல்லாரும் குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கீங்க.. ஏன் இப்ப விருந்தாளியா வந்த தேம்பாவணிக்கும் கூட எல்லா உறவுகளும் கிடைச்சிருக்கு.. ஆனா என் பையன் மட்டும் அனாதை மாதிரி ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறது நினைச்சா தான் என் மனசெல்லாம் குமுறுது.."

"அவனுக்கு நல்ல படிப்பு கிடைச்சிருக்கு.."

"இருக்கலாம் என்ன இருந்தாலும் ஒரு குழந்தைக்கு தன் தாயோடு இருக்கற மாதிரி சந்தோஷம் வேற எதுல வரும்..!"

"இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. வீட்ல பேசிட்டு நிச்சயமா உன்னை ரிலீவ் பண்ணிடுவேன்.. அப்புறமா உன் வழிய பார்த்துகிட்டு நீ போயிட்டே இருக்கலாம்.."

"அது எப்ப நடக்குமோ..? தெரியாத ஒரு விஷயத்துக்காக எத்தனை நாள் நான் ஏக்கத்தோடு காத்திருக்க முடியும்.."

"என்னை வேற என்னதான் பண்ண சொல்ற..?" பொறுமை இழந்தான் வருண்..

"என் குழந்தையை கூட்டிட்டு வந்து வீட்ல வச்சுக்க முடியாதா..?" மென்று விழுங்கினாள் திலோத்தமா..

"இத பத்தி நாம நிறைய பேசிட்டோம்.."

"இன்னொரு முறை பேசலாம் தப்பில்லை..!"

"உன் மகனால என் வீட்ல பிரச்சனை வரும்.. அவங்க சந்தேக கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாது.."

ஏற்கனவே ஆரம்பிச்ச ஒரு பொய்யிலதானே நம்ம வாழ்க்கை ஓடுது.. அதோட சேர்த்து இன்னொரு பொய் சொல்ல முடியாதா..! தேம்பாவணிக்கு ஒரு கதை சொல்ற மாதிரி என் பிள்ளைக்கும் சேர்த்து இன்னொரு கதை சொல்லுங்க.."

திரும்பி அவளை நெருப்பென முறைத்தான் வருண்..

"தேம்பாவணியோட விஷயம் உனக்கு அனாவசியம்..
இன்னொரு பொய் சொல்லி உங்க ரெண்டு பேரையும் நிரந்தரமா என் கூட தக்க வச்சுக்க நான் என்ன முட்டாளா..?"

"எவ்வளவு பெரிய சுயநலவாதி நீங்க..!"

"அப்படியே இருந்துட்டு போகட்டும்..! உன் எண்ணம் அதுவா இருக்கும்போது அதை மாத்த நான் முயற்சி பண்ணல.. நான் நிரந்தரமா உனக்கு விடுதலை தந்திடுவேன்.. உன் வாழ்க்கைக்கு ஒரு வழி பண்ணி கொடுத்துடுவேன்.. அப்புறமா உன் பையனை கூட்டிட்டு போய் வச்சுக்கிறதா.. இல்ல அவனை விட்டுட்டு வெளிநாடு போறதான்னு நீயே யோசிச்சு முடிவெடுத்துக்க.."

திலோத்தமாவை கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு கிளினிக் புறப்பட்டான் வருண்..

"என்ன வருண் கோவமா போற மாதிரி தெரியுது.. உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது சண்டையா..?" நிவேதா மகள் ஷாலுவிற்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்த வெண்மதி வாசலோடு சென்றுவிட்டவனை எட்டி பார்த்தபடி கேட்க..

"உங்க தம்பிக்கும் எனக்கும் சண்டை வரலைன்னா தான் ஆச்சரியம்.. அதுவுமில்லாம எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. எல்லாத்தையும் வெளிப்படையா உங்க கிட்ட சொல்லனும்னு என்ன அவசியம்.." முகத்திலடித்தார் போல் சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக வீசியபடி அவள் உள்ளே செல்ல..

"அடிப்பாவி..!" என்ற ரீதியில் கன்னத்தில் கை வைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மதி..

இரவு நேரத்தில்..

"ஏய் நிவேதா இங்க வாடி.. நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்காம பேசினியே..! ஏதாவது ரேண்டமா ஒரு லவ் சாங் சொல்லு.." என்றாள்..

"காதல் பாட்டா..? என்னக்கா ஆச்சு உனக்கு.. காதல் பாட்டு கேட்டுட்டு ஃபோன் போட்டு அத்தானை காதலிக்க போறியா என்ன..!" கேலி செய்தாள் நிவேதா..

"ப்ச்.. தெரியுமா தெரியாதா..?"

"இதோ இப்ப டிவில ஏதோ ஓடிக்கிட்டு இருந்துச்சு.. நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறந்தேன்.." என்றதும் யூட்யூபில் அந்த பாட்டை ஓட விட்டு இயர் போன் இணைத்து அவள் காதில் வைத்தாள் வெண்மதி..

"சரி இந்த பாட்ட கேட்டுக்கிட்டே நீ வருணையும் திலோத்தமாவையும் பாரு.." என்றதும் ஒன்றும் புரியாமல் பாட்டோடு சேர்த்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா..

"ஸ்டார்டிங் பிஜிஎம்ல இருந்து கனெக்ட் பண்ணு.."

தேவ தூதர்கள் சிறகு விரித்து ஆசீர்வதிப்பதை போல் ஒரு இசை.. அதைத்தொடர்ந்து..

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்

ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கென்றால்
உயிரால் தடுப்பேன்..

விஜய் ஆண்டனியின் குரலோடும் இசையோடும் கொஞ்சம் கூட பொருந்த முடியவில்லை.. தாங்க முடியாமல் இயர் போனை காதிலிருந்து எடுத்து கீழே வைத்தாள்

"உயிரை வாங்காத வெண்மதி.. நான்தான் சொன்னேனே புருஷன் பொண்டாட்டிகுள்ள எப்பவுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாது.. இதெல்லாம் ஆரம்பத்தில் மட்டும் தான்.. அப்புறம் அவங்க பேச்சு பார்வை எல்லாம் மாறிப் போயிடும்.. நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணாதே..!"

"சரிடி நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும்.. இதே பாட்டோட நம்ம அம்மாவையும் அப்பாவையும் கனெக்ட் பண்ணி பாரு.." என்று மீண்டும் இயர்போனை எடுத்து காதில் பொருத்திவிட..

நீ கடவுளின் பரிசென
கரங்களில் வர
தவம் என்ன புரிந்தேன்
உனை இங்கு பெற

வரமென கிடைத்தவள்
உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு
உயிரினை பெற..

ராஜேந்திரன் மனைவியின் கை பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருக்க.. அவர் கன்னத்தில் செல்லமாக குத்தினாள் சாரதா.. மிக சாதாரணமான உரையாடல்.. ஆனால் கச்சிதமாக பொருந்தியது இந்த பாடல்..

"ஆஹா என்ன காதல்.. பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கே..! எந்த பாட்டு போட்டாலும் பக்காவா பொருந்தும் போலிருக்கு.. நமக்கே தெரியாம நம்ம வீட்ல ஒரு காதல் மன்னன் இருந்திருக்காரு பாரேன்.." கன்னத்தில் கை வைத்து அவர்களை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா..

"என்னமோ எல்லாம் சலிச்சு போயிடும்.. கல்யாணம் முடிஞ்சு வருஷமாகிட்டா காதலும் இருக்காது ஒரு மண்ணும் இருக்காதுன்னு இப்பதான் சொன்ன.."

"அப்படித்தான் நினைச்சேன் ஆனா இங்க நேர் மாறா உல்டாவா தெரியுதே..! ஆனா அக்கா இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. இந்த மாதிரி காதல் பாட்டு போட்டு தம்பதிகளுக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரிய செக் பண்றது.. நீ எங்கேயோ போயிட்ட போ..!"

"இது என்ன பிரமாதம்.. ஒரு நாளைக்கு நாப்பத்து மூணு முறை சண்டை போட்டுக்கற எனக்கும் உன் அத்தானுக்கும் கூட எல்லா காதல் பாட்டும் பொருந்தும்.. ஆனா இந்த திலோத்தமாவுக்கும் வருண் பயலுக்கும் ஒரு பாட்டு செட் ஆக மாட்டேங்குதே..!"

"போக்கா.. நீ என்னென்னமோ சொல்ற..? எனக்கு ஒன்னும் புரியல.. ரெண்டு பேரும் பிடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. ஆனாலும் எப்படி கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆக மாட்டேங்குது புரியலையே..!"

"அப்படியே அந்த பிரேம் ல இருந்து திலோத்தமாவே தள்ளி வச்சுட்டு தூரத்தில உட்கார்ந்து பசங்களோட விளையாடிகிட்டு இருக்காளே தேம்பாவணி.. அவளுக்கும் நம்ம வருணுக்கும் இந்த பாட்டு செட் பண்ணு பார்க்கலாம்.."

"அக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர்.. நீ.. நீ.. சரியில்ல சொல்லிட்டேன்.."

"ஒருமுறை செட் பண்ணி பாருடி.." என்றதும் வேண்டா வெறுப்பாக பாடலோடு கலந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா..

பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உனை நிறைத்திடுவேன் …தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்

உள்ளத்தாலும் உடலின் மீதும்
உனை சுமந்திடுவேன்..தோழா
உலகம் அழியும் போதோ நானோ
உன்னை நினைத்திடுவேன்

இதயத்தின் மைய பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்..

மிரண்டு போனாள் நிவேதா.. செம கெமிஸ்ட்ரி என்று சொல்ல முடியாத நிலை.. கைதட்டி விசிலடித்து ரசிக்க முடியாத அவஸ்தை..

இத்தனைக்கும் தேம்பாவணி வருணிடமிருந்து தொலைவில் அமர்ந்திருந்தாள்.. வருண் மீது கோபமாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டாள்.. ஆனால் அதையும் மீறி இருவருக்குள்ளும் அப்படி என்ன பார்வை பரிமாற்றமோ..! காந்தம் தோற்றது..

"ஆத்தி இவங்க ரெண்டு பேரும் ஏன்க்கா இப்படி பார்த்துக்கறாங்க.. ஏதோ சரி இல்லையே..!" எச்சில் விழுங்கினாள்..

"இதையேதான் நானும் சொல்லிட்டு இருக்கேன்.. யார் என்னை மதிக்கறீங்க.." பெருமூச்சு விட்டாள் வெண்மதி..

"இல்ல இல்ல.. அந்த மாதிரி ரொமான்டிக்கா ஒரு பாட்டு போட்டுட்டு சம்பந்தமே இல்லாத ரெண்டு பேரை பார்த்தா கூட அப்படி தான் தெரியும்.. என் கண்ணுல தான் தப்பு.. அவங்க பார்வையில எந்த தப்பும் இல்லை.. நீ எதையாவது சொல்லி என்னை குழப்பி விடாத வெண்மதி.. திலோத்தமா பாவம்.. அண்ணா ரொம்ப நல்லவர்.. பேசாம இங்க இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு பெட்டியை கட்டுற வழிய பார்ப்போம்.. இது நமக்கு தேவையில்லாத வேலை.." நிவேதா எழுந்து ஓடிவிட..

"போ போ.. சீக்கிரம் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிச்சு ஆதாரப்பூர்வமா உங்க எல்லார்கிட்டயும் நான் நிரூபிக்கல என் பேரு வெண்மதி இல்ல..!" எம்ஜிஆரை போல் மூக்கிற்கு கீழே விரலால் தேய்த்துக்கொண்டு சவால் விட்டாள் வெண்மதி..

இரவில் தலையணையுடன் சாரதாவின் அறைக்குள் செல்லப் போன தேம்பாவணியை கைப்பற்றி வேகமாக அவளது அறை நோக்கி இழுத்து வந்தான் வருண்..

"எங்க.. எங்க கூட்டிட்டு போறீங்க.. என்ன விடுங்க டாக்டர் சார்..!" அவள் திமிறிய போதிலும் அறைக்குள் கொண்டு வந்து சேர்த்து கதவை சாத்திய பிறகு விடுவித்தான் வருண்..

"ஏன் இப்படி அழுத்தி பிடிக்கறீங்க.. பாருங்க கை எப்படி செவந்து போச்சுன்னு.." அவன் பற்றியிழுத்து வந்த இடத்தை தேய்த்து விட்டுக் கொள்ள வருணின் பார்வை அங்கே பதிந்தது..

"செவந்து போச்சுன்னா மருந்து போட்டுக்கலாம் அதை விடு.. இப்ப எதுக்காக அம்மாவோட ரூமுக்கு போற..?"

"தூங்கறதுக்காக..! அதான் இனிமே என் கூட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே.. போய் உங்க வைஃப் கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.." என்றாள் கோப பார்வையுடன்..

அந்தக் கோபம் வருணுக்குள் ஏதோ ஒரு குதூகலத்தை தந்தது..

"இன்னைக்கு நான் இங்கதானே இருக்கேன்.. இங்கேயே தூங்கு அம்மா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதே.. அவங்க வயசானவங்க.." என்றான் சாதாரண குரலில்..

"இன்னைக்கு இருப்பீங்க நாளைக்கு..? தினமும் உங்களுக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லி தொந்தரவு செய்ய முடியாதே.. ஏன்னா நீங்க கல்யாணம் ஆனவர் இல்லையா..?"

"ரொம்ப பேசாதடி..! மரியாதையா படுத்து தூங்கு.."

"முடியாது.. நான் சாரதா ஆன்ட்டி கிட்ட போறேன்..!"

"இவ்வளவு நாள் என் கூட தானே இருந்த.. இப்ப புதுசா என்ன ஆன்ட்டி பாட்டின்னு..!" கடுகடுத்தான் அவன்..

"இனி உங்களை அனாவசியமா தொந்தரவு பண்ண விரும்பல..!"

இடுப்பில் கை வைத்து இழுத்து மூச்சு விட்டான் வருண்..! "சரி படு.. இனி தினமும் வரேன் போதுமா..?"

"வேண்டாம் வேண்டாம்.. நீங்க போய் உங்க.." என்பதோடு வார்த்தைகளை நிறுத்திக்கொள்ள தன் கரத்தால் அவள் வாயை பொத்தியிருந்தான் வரூண்..

"தினமும் வருவேன்னு சொல்லிட்டேன்ல.. ஒழுங்கா படுத்து தூங்கு.. டார்ச்சர் பண்ணாத தேம்ஸ்.." என்றவன் அவள் தோள் மீது கை வைத்து படுக்கையில் அமர வைத்து கால்களை தூக்கி கட்டில் மீது வைத்தான்..

"படும்மா..! அடம் பிடிக்காதே..!" என்ற பிறகு அதற்கு மேல் முரண்டு பிடிக்காமல் படுத்துக் கொண்டாள் தேம்பாவணி..

வருண் கட்டிலில் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..

"டாக்டர் சார் எனக்கொரு சந்தேகம்..?"

"சொல்லு.."

"நைட் டிரஸ்ல கூட பாடி பில்டர் மாதிரியே இருக்கீங்களே..! எப்படி சார்..?" என்று சொல்லி ஒரு சிரிப்பு

"ஹான்.. டிரஸ் போட்டுட்டு அப்படியே தச்சு விட்டுட்டாங்க.."

"நீங்க எப்ப சார் ஒர்க்கவுட் பண்ணுவீங்க.. காலையிலேயே இல்ல நைட்லையா..?"

"பேய் நடமாடற நேரத்துல..!"

"பேய்த்தனமா ஒர்க் அவுட் பண்ணுவாங்க கேள்விப்பட்டுருக்கேன்.. பேய் நடமாடற நேரத்துல கூடவா வொர்க் அவுட் பண்ணுவாங்க.."

"கேள்வி கேட்காம தூங்குமா..!"

"தூக்கம் வரலையே..?"

"ஏன்..!"

"சாரதா ஆன்ட்டி என்னை கட்டிப்பிடிச்சு தூங்க வச்சாங்க..!"

"அப்படியெல்லாம் நான் உன்னை கட்டிப்பிடிச்சு தூங்க வைக்க முடியாது.." அவன் அவசரமாக சொல்லவும்

"நான் ஒன்னும் உங்கள கட்டி பிடிக்க சொல்லல..! சாரதா ஆன்ட்டி என்னை ரொம்ப அழகா அரவணைச்சுக்கிட்டாங்க.." அதை தான் சொன்னேன்.. என்றாள் மூக்கை சுருக்கி..

ஆழ்ந்து அவள் முகம் பார்த்தவன் அவள் உள்ளங்கை மீது தன் கரத்தை வைத்து அழுத்தினான்.. "நானும் உன்னை அன்பா அரவணைச்சுக்கறதா நீ நினைச்சுக்கோ..!" என்றதும்

"அப்ப சரி சாரதா ஆன்ட்டி என்னை கட்டிப்பிடிச்சுக்கறதா நினைச்சுக்கறேன்.." அவள் கண்களை மூட..

"இது என்னோட கை.." என்றான் பற்களை கடித்து..

அதற்குள் தேம்பாவணி கண்கள் மூடி உறங்கியிருந்தாள்..

"என்ன இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனே தூங்கிட்டா..!"என்று சிரித்தான் அவன்..

ஆழ்ந்த உறங்கிக் கொண்டிருந்தவளை இமை சிமிட்டாமல் பார்த்தவன்..
மெல்ல அருகில் வந்து அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்..

அவனால் தன் முகத்தை பின்னோக்கி விலக்கிக் கொள்ள முடியவில்லை..

முன்னெற்றியில் புரண்ட முடிகளை காதோரம் தள்ளி ஒதுக்கி விட்டவன்.. அந்த செம்பஞ்சு உதடுகளைக் கண்டான்..

"இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.." என்று கண்களை உருட்டியவனின் ஒற்றை விரல் உதட்டை நோக்கி பயணப்பட.. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவனாய்..

"டோன்ட் லூஸ் இட்..!" என்று மூச்சை ஆழ்ந்து இழுத்தான்.. "சில் வரூண்.." என்று மெல்ல விலகி.. அவளைப் பார்த்த படியே எழுந்து பின்னால் நகர்ந்து அறைக் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்..

தொடரும்..
👌👌👌👌💜💜💜...... Varun parthu nadhanthukaya.,........ Cloud burst mathiri ethachum nadathuda pothu.... 🤪🤪🤪..... Amma thilo unmavanayum ghuda vachikanuma..,.. Vilakidum podi😡😡🤬🤬🤬 nalla varuthu..... Sana sis💜💜💜👌👌👌👌.,..
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
97

பெண் நாரதரே உங்கள் சபதம் நிறைவேறும் நாள் மிக மிக அருகில் தான் உள்ளது 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
அடியே தில்லு முல்லு திலோத்தமா உனக்கு என்ன ஏத்தமா எங்க நாரதரு எம்மா கஷ்டபட்டுனு கிறாங்க டாக்குடரு டாபாய்ச்சி நெசத்த கண்டுக்கறதுக்கு மவளே அதுல மண்ண போடவா பாக்குற அடிங்க 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
164
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
 
Top