- Joined
- Jan 10, 2023
- Messages
- 71
- Thread Author
- #1
திவ்யாவிற்கு பத்மினி மீது தனிப்பட்ட முறையில் கோபம் உண்டு என்றாலும் அனைவரையும் அழைக்கும் வேளையில் அவளை மட்டும் அழைக்காமல் போனால் அது தவறாகிவிடும்.. பத்மினியின் மனம் வேதனை படக்கூடும் என்பதால் அவளையும் அழைத்திருந்தாள்..
பத்மினி ஆட்டோ பிடித்து திவ்யா வீட்டுக்கு வரும் வரை அனைத்தும் சரியாகத்தான் போனது.. ஆறு மணிக்கு பங்க்ஷன் என்பதால் அலுவலகத்திலிருந்து அனைவரும் நேரடியாக அங்கே வந்து சேர்ந்திருந்தனர்..
கேக் வெட்டி ஸ்நாக்ஸ் விநியோகம் செய்து.. வழக்கமான பிறந்தநாள் விழாவாக தான் சென்றது..
அதன் பிறகு அலுவலக ஊழியர்களுக்குள் கொண்டாட்டம் என்று ஆரம்பித்த பிறகுதான்.. விபரீதம் துவங்கியது..
வழக்கம்போல் பத்மினி ஒதுக்கப்பட்ட நிலையில்தான் இருந்தாள்.. என்று சொல்லுவதை விட ஒதுங்கி இருந்தாள் என்று சொல்லலாம்.. அந்தக் கூட்டத்தில்தான் திவாகர் இருந்தான்.. குற்ற உணர்ச்சி எதுவுமின்றி இயல்பாக கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு குதூகளித்தான்.. அவனைப் பார்க்க பத்மினிக்கு வயிறு எரிந்தது.. அவனோடு சேர்ந்து இன்னும் சிலரும் ஜோக் சொல்வதாய் நினைத்துக் கொண்டு மற்றவர்களை கேலி செய்து சிரித்ததை பார்த்து பத்மினிக்கு பொறுக்க முடியவில்லை..
திவ்யாவின் மூன்று வயது குழந்தை பிரதியுக்ஷாவை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சியபடி தனியாக நேரத்தை கடத்தினாள்..
மணி ஏழை தொட்டிருந்தது.. இன்னும் பத்து நிமிடங்களில் புறப்பட்டு விடலாம் என்று திவ்யாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட எத்தனிக்க..
"ஒரு அரை மணி நேரம் இரு பத்மினி.. சாப்பாடு தயாராகிடும்.. சாப்பிட்டு போயிடலாம்.." பத்மினியை கட்டாயப்படுத்தினாள் அவள்..
"அச்சோ கேக் ஸ்நாக்ஸ் சாப்பிட்டதே வயிறு திம்முனு இருக்கு.. சாப்பாடு வேண்டாம்.. வீட்டுக்கு போய் சமைக்கணும் நிறைய வேலை இருக்கு.. நான் கிளம்பறேனே.." என்றாள் பத்மினி..
"என்னைக்கோ ஒருநாள் வீடு வந்துட்டு இப்படி அவசரமா கிளம்பறேன்னு சொன்னா என்ன அர்த்தம்.. எல்லாரும் இருக்காங்களே.. நீ மட்டும் சாப்பிடாம போனா மனசு கஷ்டப்படாதா..!! அரை மணி நேரம்தான்.." என்று சொல்லிவிட்டு அவசரமாக அவளை கடந்து சென்று விட்டாள் திவ்யா..
அதன்பிறகு அவளைப் பிடிக்கவே முடியவில்லை.. அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்தபடி பரபரப்பாக தெரிந்தாள்.. சொல்லாமல் சென்று விடலாம் என்றுதான் எண்ணினாள்.. ஆனால் திவ்யா அத்தனை வலியுறுத்திய பிறகு அப்படி சென்றால் அது சரிவராது என்று தயங்கினாள் பத்மினி..
சோபாவில் அமர்ந்து குழந்தையோடு நேரத்தை செலவழித்து கொண்டிருந்த சமயத்தில்தான் ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்கள் விளையாடிக் கொண்டிருந்த பகுதியின் பக்கம் அவள் பார்வை விழுந்தது..
அதாவது திவாகர் யாராவது ஒருவரைப் போல் இமிடெட் செய்து நடித்துக் காட்டுவானாம்.. அது யார் என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்..
ஒவ்வொருவரையாக நடித்துக் காட்ட மற்றவர்கள் சரியாக பேர் சொல்லி கண்டுபிடித்தனர்.. பத்மினிக்கு இதையெல்லாம் பார்க்க பிடிக்கவில்லை.. அவரவர் உடல் பற்றிய குறைகளை கேலியாகச் சொல்லி அது மாதிரியாக நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.. மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.. ஆனால் அவளால் சிரிக்க முடியவில்லை..
தூரத்தில் அமர்ந்திருந்தவள் அங்கிருந்து விலகி வேறெங்காவது செல்ல நினைத்தாள்.. குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் அங்கிருந்து நகர்ந்த நேரத்தில்..
திவாகர் நடித்து காண்பித்துக் கொண்டிருந்த சைகையில் மனம் நெருடியதில் அப்படியே நின்று விட்டாள்.. இரண்டு ஆண்களின் காதினில் ஏதோ சொல்லி அழைத்து வந்தான் அவன்..
ஒருவன் தொப்பையோடு வழுக்கை தலையாய் இருந்தான்.. இன்னொருவன் சற்று உயரமாக திடகாத்திரமாக இருந்தான்.. தொப்பையோடு இருந்தவன் திவாகர் கழுத்தில் தாலி கட்டுவதை போல் நடிக்க.. திவாகர் அவன் கண்களை மூடிவிட்டு மற்றவர்களோடு கொஞ்சுவதை போல் இழைந்து கொண்டிருந்தான்..
"டேய் திவாகர் இருந்தாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா.."
"கொழுப்பு இருக்கட்டும் இது யாருன்னு சொல்லுங்க.." என்ற திவாகர் பத்மினியை ஏற்கனவே பார்த்திருந்தான்.. மற்றவர்கள் அவள் சற்று தொலைவில் நின்றதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாம்..
"பேர் தெரியும்.. ஆனா நாங்க சொல்ல விரும்பல.."
"அதெல்லாம் கிடையாது.. பேர் சொல்லணும்..!!"
"இது யாருன்னு ஒட்டுமொத்த கம்பெனிக்கும் தெரியும்.. தேவையில்லாம வந்த இடத்துல எதையாவது பேசி விவகாரத்தில் மாட்டி விட்டுடாதே..!! அமைதியா இரு.."
"இதை என்னடா வம்பா போச்சு.. அவங்க அவங்க தோற்றத்தையும் குணாதிசயத்தையும்தானே நடிச்சு காட்டினேன்.. இப்ப இது யாருன்னு தெரியுமா தெரியாதா..!!" அவன் கேள்வி கேட்க
"பத்மினி.." என்று உரக்க கத்திய பெண்ணொருத்தியின் வாயை இன்னொருத்தி மூடிக்கொள்ள அங்கே சிரிப்பு சத்தம்..
அங்கு நடந்தவற்றை கண்டு பத்மினி மனம் கொதித்து போனாள்.. அவன் சொன்னதன் அர்த்தம் அவளுக்கு நன்றாகவே விளங்கியது.. திருமணம் செய்தவனை விட்டுவிட்டு இன்னொருவனோடு இணைவதைப் போல தன்னை காட்சிப்படுத்துகிறான்.. உத்தமபுத்திரன் சொல்லிவிட்டான்.. சத்திய சீலர்கள் அனைவரும் அதைக் கண்டு சிரிக்கின்றனர்.. இது மாதிரியான மனிதர்களை அருவருப்பான கழிவு என நினைத்து கடந்து போ பத்மினி.. என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் சில விஷயங்களை ஜீரணிக்கவே முடிவதில்லை..
எப்படி.. எப்படி.. என்னை இத்தனை பேர் முன்னிலையில் இழிவு படுத்தலாம்.. கீழ்த்தரமாக நடந்து கொண்டதெல்லாம் இவன்.. கடைசியில் இவனை அவமானப்படுத்தி பதிலடி கொடுத்த காரணத்திற்காக எனக்கு கெட்ட பேரா..? ஆக ஒரு பெண் தன்னிடம் தவறாக நடந்து கொள்ளும் ஒரு ஆணை எதிர்க்கவே கூடாது.. ஒன்று அஞ்சி நடுங்க வேண்டும்.. இல்லையேல் அவனோடு அனுசரித்து போக வேண்டும்.. எதிர்த்து கேள்வி கேட்டால் இப்படித்தான் மிக கேவலமாக சித்தரிக்கப்படுவாள்.. அவள் ஒழுக்கத்தை குறி வைத்து அம்புகள் எறியப்படும்.. மன உளைச்சலில் பின் மண்டை வலிக்க ஆரம்பித்து விட்டது.. குழந்தையை இறக்கிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தாள்..
நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் மாந்தோப்பின் பின்பகுதியில் பரந்து விரிந்திருந்த இடத்தில் இப்போதுதான் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்றன.. நான்கைந்து வீடுகளை தவிர மற்ற இடங்கள் விற்பனைக்காக காத்திருக்கின்றன..
இருட்டிவிட்டது.. வரும்போது ஆட்கள் நடமாட்டத்தோடு பாதுகாப்பாக தெரிந்த இடம் இப்போது வெறிச்சோடி போயிருந்தது..
ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தை கடந்து செல்ல முயன்றாள் பத்மினி.. நெடுஞ்சாலையை அடையும்வரை நிம்மதி இல்லை..
அவள் பயந்தது போலவே குறுக்கே வந்து நின்றனர் மூவர்..
திவாகர் ஆனந்த் சதீஷ்.. மூன்று பேரையும் அங்கே கண்டவுடன் தூக்கி வாரி போட்டது அவளுக்கு..
தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக நின்று அவர்களை பார்த்தாள்..
"என்ன பத்மினி எங்களை இங்கே எதிர்பார்க்கலைல.." திவாகர் கோணலாக சிரித்தான்..
"என்னங்கடா.. வழியை மறிச்சு தேவையில்லாம வம்பு பண்றீங்களா..?" பத்மினி பார்வையிலும் பேச்சிலும் நெருப்பு..
"அதெல்லாம் இல்ல பத்மினி.. உன்கிட்ட வம்பு செஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்.. சமரசமா போய்டலாம்.. நீ என்னை முதலாளி கிட்ட போட்டு கொடுத்து வேலையை விட்டு தூக்கினது.. இதோ இவனை அடிச்சது.. இதோ இந்த சதீஷ் வொர்க்கல பெரிய மிஸ்டேக் செஞ்சிருக்கான்னு அவனை திட்டு வாங்க வெச்சது.. எல்லாத்தையும் மறந்து உன்னை மன்னிச்சு விட்டுடறோம்.. நாங்க கேக்கறதை மட்டும் நீ கொடுத்துடு.." என்றான் ஆனந்த்..
"இப்ப வழி விட போறீங்களா இல்லையா..?" பத்மினியின் இதயம் அதிவேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.. இந்நேரத்தில் இந்த மிருகங்களை கோபப்படுத்துவது வேலைக்காகாது.. இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் அவ்வளவுதான் அவள் இலக்கு..
"பார்.. பத்மினி இதைவிட அருமையான சந்தர்ப்பம் எங்களுக்கு வாய்க்குமா.. உன்னை பழிவாங்க நேரம் பார்த்துட்டே இருந்தோம்.. நல்ல சான்ஸ் கிடைச்சது.. இல்லடா திவாகர்.." ஆனந்த் சிரித்தான்..
பத்மினி அவர்களை முறைத்து விட்டு பக்கவாட்டில் நடக்கத் துவங்க மீண்டும் மூவரும் அதே பக்கம் வந்து அவளை வழிமறித்தனர்..
"இரு பத்மினி.. பேசிட்டே இருக்கும் போது.. நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.. எங்க மூணு பேரோட சேவிங்ஸ் ஐஞ்சு லட்சத்தை உனக்கே தந்துடறோம்.. பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிச்ச முதலாளியையே கவுத்துட்ட.. நாங்கெல்லாம் எம்மாத்திரம்.. அப்படியே குப்புற விழுந்துட்டோம்.. பேருக்கு உன் தொப்பை கணேசனை புருஷனா வச்சுக்க.. யாருக்கும் தெரியாம எங்க கூடவும் இரு.. உன்னை வசதியா பாத்துக்கறோம்.. நீ மட்டும் மறுத்த.. எவிடன்சோட எல்லா விஷயத்தையும் உன் புருஷனுக்கு போஸ்டர் அடிச்சு ஓட்டுவோம். ஞாபகம் வச்சுக்கோ.." ஆனந்த் பேசிய பேச்சில் பத்மினி கொதிநிலைக்கே சென்றாள்.. எம்.டியோடு சேர்த்து வைத்து பேசுகிறார்களா.. இப்போது புரிகிறது எல்லாம்..
உதய் கிருஷ்ணா யார் எவர் என்று உண்மையை இவர்களிடம் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. விளக்கம் சொல்லி தன்னை நிரூபித்துக் கொள்ள இவர்கள் பண்டிதர்களோ யோகிகளோ இல்லையே..!!
"ச்சீ.. பொறுக்கிகளா.. உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கடா.. தேவையில்லாம என்னை தொந்தரவு செஞ்சீங்க அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.."
"என்னடி செய்வ..?" ஆனந்த் அவள் கைப்பற்றினான்..
"கைய விடுடா நாயே..!! அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முயன்ற அதே நேரத்தில் அவனை அடிக்க கை ஓங்கினாள் பத்மினி.. அந்த கரத்தையும் அவன் பற்றிக் கொண்டான்.. அவன் ஆண் குறியில் மிதிக்க கால் ஓங்க முயல.. அவள் பாதத்தை மிதித்திருந்தான் திவாகர்..
வலியில் அம்மாஆஆ.. என்று அலறினாள் அவன்..
"டேய் மச்சி ஜென்மத்துக்கும் இவ நம்மள மறக்கவே கூடாது டா..!! நம்ம மூணு பேரையும் இவ அசிங்கப்படுத்தின மாதிரி.. நாமளும் இவளை அசிங்கப்படுத்தனும்.." என்றான் சதீஷ் குரூர பார்வையுடன்..
"இவளுக்கு ஏது மச்சான் அசிங்கமெல்லாம்.. அதெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணுங்களுக்கு.. இவதான்.. தே***வாச்சே.."
"அப்ப அழியாத அடையாளமா அவ உடம்புல மார்க் போட்டு விடனும் மச்சி.. அப்பப்ப அதை நெனச்சு அக்கா வெட்கப் பட்டுக்கட்டும்.." திவாகர் அவள் இடுப்பை கிள்ளினான்..
"என்னடி முறைக்கிற.. லோ ஹிப்ல புடவை கட்டறது நாங்க உன்னை பாக்கணும்னுதானே.. அப்புறம் பெரிய பத்தினியாட்டம் நடிக்கிற.. உனக்கு பத்மினின்னு பேர் வைச்சதை விட பேசாம பத்தினின்னு பேரு வச்சிருக்கலாம்.." என்றான் ஆனந்த் நக்கலாக..
"இவளுக்கெல்லாம் அந்த பேர் வச்சா பத்தினி குலமே பத்தி எரியும்டா.. இவளை ஏதாவது செய்யணும் மச்சான்.. இல்லனா என் மனசு ஆறாது.." அடிபட்ட கன்னத்தை தடவினான் திவாகர்..
"என்ன தோணுதோ செய் மச்சான் நான் பாத்துக்கறேன்.." இன்னொருவன் தைரியம் கொடுக்க பத்மினியை நெருங்கினான் திவாகர்.. அவள் இரு கைகளையும் பிடித்திருந்தான் ஆனந்த்.. சதீஷ் மொபைல் ஃபோனை எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தான்..
திவாகரின் கரங்கள் பத்மினியை தீண்ட கூடாத இடங்களிலெல்லாம் தீண்டியது.. பத்மினி உயிரோடு மரித்தாள்.. கதறினாள்.. துள்ளினாள்.. பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை என்றாலும் வாழ்க்கையில் எந்த பெண்ணும் எதிர்கொள்ள கூடாத மிக கசப்பான நிகழ்வு..
அன்னிய ஆடவனின் கரம் தன் அந்தரங்க பாகங்களில் தீண்டியதில் அவள் தேகம் அமிலம் பட்டதை போல் காந்தியது.. பிணத்தின் புழுக்கள் அவள் உடலை அரிப்பது போல் அருவருப்பு..
"நாளைக்கு ஒரு நாள்தான் உனக்கு டைம்.. நீயா நாங்க சொல்ற அட்ரஸ்க்கு எங்களை தேடி வரணும்.. இல்லைனா.. இந்த வீடியோவுல எங்க முகத்தை மறைத்து நீ அரைகுறையா இருக்கற போட்டோக்களை மட்டும்.. ஆன்லைன் பிராஸ்டியுஷன் பண்ற பொண்ணுன்னு உன் நம்பரை கொடுத்து நெட்ல லீக் பண்ணிடுவோம்.." என்றான் திவாகர்..
"நீ என்னதான் கத்தி கதறனாலும் உன்னை எவனும் நம்ப மாட்டான்.. நாங்க சொல்றதை கேக்கறதை தவிர உனக்கு வேற வழியே இல்லை..!! எங்கள பார்த்தா அவ்வளவு இளக்காரமா போச்சாடி உனக்கு.. நாங்க கூப்பிட்டா வரமாட்டியோ..!! நாளைக்கு நீயே அலறி அடிச்சுகிட்டு ஓடி வந்து எங்க கால்ல விழனும்.." ஆனந்த் அவளை உதறி தள்ளி விட்ட வேகத்திற்கு முழங்காலிட்டு கீழே விழுந்தவள்.. தனது கைப்பையை மார்பின் குறுக்கே பிடித்தபடி பிரமை பிடித்தவளாக அமர்ந்திருந்தாள்.. அவர்கள் மூவரும் அங்கிருந்து சென்று விட்டிருந்தனர்.. அழக்கூட தெம்பில்லை அவளிடம்.. சில கணங்கள் எதையோ வெறித்து பார்த்தபடி அந்த நிலையிலேயே இருந்தவள்.. பிறகு பையை எடுத்துக்கொண்டு தள்ளாடி நடந்தபடி அங்கிருந்து சென்றிருந்தாள்..
நடந்ததை சொல்லி முடித்திருந்தாள் திவ்யா.. நிலைகுத்திய பார்வையோடு நெருப்பில் வெந்து சிவந்த இரும்பாக அமர்ந்திருந்தான் உதய்..
"சார் இதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது.. என் தங்கச்சி பொண்ணுதான் நடந்ததை பார்த்துட்டு வந்து என்கிட்ட சொன்னா.. எனக்கு பாப்பாவை தூக்கி வச்சிருந்த அந்த அக்காவை.. மூணு பேர் வம்பு இழுத்தாங்கன்னு சொல்லி.. அவங்க அடையாளங்களையும் சொன்னா.."
"நான் உடனே பதறியடிச்சு அந்த இடத்துக்கு போய் பார்த்தேன்.. பத்மினி அங்கு இல்லை.. போன் செஞ்சேன்.. அவ எடுக்கல.. என்னோட ஹஸ்பண்ட்.. அந்த பொண்ணோட நடத்தை சரியில்லைன்னு சொல்றாங்க.. முதலாளியோடு சேர்த்து வச்சு தப்பு தப்பா பேசுறாங்க.. தேவையில்லாம நீ இந்த விஷயத்தில் தலையிடாதே அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. அவரை மீறி என்னால எதுவுமே செய்ய முடியல.." திவ்யா அழுதாள்..
எதிர்ப்புறம் அவன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்று தெரியவில்லை..
"திவ்யா.." அவன் அழைத்த குரலை கேட்கவே பயமாகத்தான் இருந்தது..
"சா.. சார்..?" திவ்யாவிற்கு நெஞ்சம் நடுங்கியது..
"நீ பெண்தானே..?"
"சார் சத்தியமா என் மேல எந்த தப்பும் இல்லை.. என் தங்கச்சி பொண்ணு பயந்துட்டா.. அவளால எதுவுமே செய்ய முடியல.. ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் கண்டிப்பா பத்மினிக்கு அப்படி நடக்க விட்டிருக்க மாட்டேன்.."
"எங்க வீட்ல வந்து பத்மினிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு ரொம்ப கில்டி பீலிங்கா இருக்கு சார்.."
'கல்யாணம் நடந்த உடனே இந்த உண்மையை எல்லார்கிட்டயும் சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சினையே இல்லை.. அவளை யாருமே இவ்வளவு தப்பா பேசி இருக்க மாட்டாங்க.. பிரச்சினையோட இந்த நிலைக்கு நீங்களும் ஒரு காரணம் சார்.. நான் வைச்சிடறேன் சார்.." திவ்யா அழைப்பை துண்டித்து விட்டாள்..
அலைபேசி நழுவி விழுவது கூட தெரியாமல் அமர்ந்திருந்தான் உதய் கிருஷ்ணா.. பத்மினியின் நிலைக்கு காரணமான தன் மீது அளவுகடந்த கோபம்.. இருதயத்திலிருந்து வெடித்து கிளம்பிய ஆக்ரோஷத்துடன் பற்களை நறநறவென கடித்து தன் தொடையின் மீது ஓங்கி ஓங்கி குத்தி அந்த வலியை அனுபவித்தான்.. தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றான்.. முடியவில்லை
எழுந்து தன் அறையை நோக்கி நடந்தான்.. பத்மினி உடலைக் குறுக்கி குழந்தை போல் தன் இரு கரங்களை நெஞ்சுக்கு நேரே வைத்து நடுங்கிய உதடுகளோடு உறங்கிக் கொண்டிருந்தாள்.. நொறுங்கிய இதயத்தோடு அவளை பார்த்தான் உதய்..
மெல்ல குனிந்து அவள் தலை வருடி கொடுத்து தோளிலிருந்து கைகளை தடவி கொடுத்தான்.. ஒரு மாதிரியாக நெளிந்தாள் பத்மினி..
கண்கள் சுருக்கிய உதய்யின் பார்வை அவள் தன் ஸ்பரிசத்திலிருந்து விலகிச் சென்ற இடங்களை ஆராய்ந்தன.. அத்தனையும் நகக்கீறல்கள்..
மெல்ல அந்த காயங்களை ஸ்பரிசித்தான்.. சட்டென உடல் குலுங்க.. அவளிடம் அதிர்வு.. மீண்டும் நடுக்கம்.. அடுத்த கணம் அவளை அணைத்துக் கொண்டான்.. தன் வாசனை அவளுக்கு தெரியுமாறு நெருங்கி படுத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஓரளவு ஆசுவாசமாகி பின் அமைதியானாள்..
உதய் கிருஷ்ணாவின் உயிருக்குள் வலித்தது..
வாய்மொழியாக திவ்யா மூலம் கேட்டவை காட்சியாக கண்முன் ஓட கண்கள் செவ்வரியோடி சிவந்து போயின.. அடுத்தகணம் ஒரு முடிவுடன்
உறங்கிக் கொண்டிருந்த பத்மினியை கையிலேந்தி கொண்டவன் அறையை விட்டு வெளியே வந்தான்..
அந்நேரம் வெளியே வந்த ரமணியம்மா.. "என்னடா உதய் என்ன ஆச்சு? எதுக்காக அவளை தூக்கிட்டு போற.." பதட்டத்தோடு கேள்வி கேட்க.. "அம்மா நீங்க வீட்ல இருங்க.. நான் வந்துடறேன்.." என்றவன் பத்மினியோடு வீட்டை விட்டு வெளியேறினான்..
தொடரும்..

Last edited: