- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
அவள் ஒருத்தி தங்கும் அறை தான் என்றாலும் சகல வசதிகளோடு பெரிய கட்டிலில் சுகமாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தவள் புரண்டு படுக்க முயன்ற போதுதான் அசைய முடியாதபடிக்கு யாரோ தன்னை இறுகப் பிடித்திருப்பதாக உணர்ந்தாள் செல்ல மீனா.. வேறு யாராவது அவள் இடத்தில் இருந்திருந்தால் பேய் அமுக்குகிறது என்று பயந்திருக்க கூடும்.. ஆனால் இது அடிக்கடி நிகழும் சம்பவம் என்பதால்.. விழிகள் மூடியிருந்த நிலையிலும்..
"இ..தே.. வேலை..யா போச்சு.. அத்தான்.." என்று உளறினாள் உறக்க கலக்கத்தில்..
"ஹ்ம்ம்.." என்று முனகலோடு புரண்டு படுத்தான் அவன்..
"ஸ்ஸ்.. தாடி குத்துது அத்தான்.. நிமிர்ந்து படுங்க .." அவள் முகம் சுழித்தாள்.. அவனிடமிருந்து பதில் இல்லை.. அவள் வயிற்றுப் பகுதியில் தாவணியை விலக்கி தலை வைத்திருந்தவன்.. தாவணியின் நுனியால் தலையை போர்த்திக் கொண்டு உறங்கி இருந்தான்..
மீண்டும் அவன் மறுபக்கம் புரண்டு படுக்க..
"அய்யோ.. அத்.. தான்.." என்று முனகியவள் அந்த உறக்க கலக்கத்திலும்.. அவள் வலக்கரம் கொண்டு அவன் கேசத்தை பற்றியிழுத்து நிமிர்த்தியவள் மென்மையாக அவன் தலையை வருடி கொடுக்க அதே நிலையில் அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் அவன்..
உறக்கப்பற்றாக்குறையில் இப்படித்தான் புரண்டு புரண்டு படுத்து அவளையும் சேர்த்து புரட்டி எடுப்பது வழக்கம்.. நாய் குட்டியை கொஞ்சுவது போல் மென்மையாக தேசத்தை வருடி கொடுத்தால் போதும்.. அப்படியே உறங்கிப் போவான்..
சில நேரங்களில் அவன் இதழ்கள் அழுத்தமாக அவள் நாபியில் பதிந்திருக்கும் வண்ணம் கவிழ்ந்து படுத்தவாறு அவள் வயிற்றை அணைத்துக் கொண்டும் உறங்குவான்.. தாடியும் மீசையும் குத்தி.. குத்தி.. உறக்கம் தொலைத்து இரவு முழுவதும் சிணுங்கிக் கொண்டே இருப்பாள் மீனம்மா..
மின்விசிறியின் காற்றில் விலகிய அவள் தாவணியை மொத்தமாக இழுத்து போர்த்திக் கொண்டான் அவன்.. மாராப்பிலிருந்தும் விலகிப் போனது அவள் தாவணி.. இதுவும் அடிக்கடி நிகழக் கூடியது தான்..
சிணுங்கும் குழந்தையை தட்டிக் கொடுத்து உறங்க வைப்பது போல்.. அவ்வப்போது கேசத்தினுள் தன் விரல் நுழைத்து ஸ்பரிசத்தினை உணர்த்தி உறங்கச் செய்தவள் மிகச் சில நிமிடங்களில் அவளும் அயர்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
"ஐயா ஏற்கனவே அம்பது கடைக்கு அனுமதி கொடுத்து இருக்கோம்.. இதைத் தாண்டி இடப்பற்றாக்குறை இருக்கு.. மேற்கொண்டு கடை போட்டுக்க நாம் அனுமதி கொடுத்தா பிரச்சனை தான் வரும்.." என்ற ஆண் குரலைத் தொடர்ந்து..
"நீ சொல்றதுக்கு சரிதான் காத்தவராயா.. ஆனா ஏழை பாழைங்க.. இந்த மாதிரி திருவிழா நேரத்தில் தானே சம்பாதிக்க முடியும்.. முயற்சி பண்ணி கொஞ்சம் இடம் ஒதுக்க முடியுமான்னு பாரேன்.." மாமாவின் கணீர் குரல் வெளிப்பக்கமிருந்து தெளிவாக கேட்க லேசாக விழிப்பு தட்டியது மீனாவிற்கு..
இடையை வளைத்து சோம்பல் முறிக்க.. "ப்ச் அமைதியா படுடி.. மனுஷனை தூங்கவிடாம தொந்தரவு பண்ணிக்கிட்டு.." அவன் கேசத்தின் சுருள் முடிகள் கூட மென்மையான முட்களாக வயிற்றை நிரடின..
"அம்மா தங்கம்.. தங்கம்.." கதவை தட்டினார் தாமோதரன்.. சட்டென கண்களைத் திறந்தவளுக்கு தூக்கி வாரி போட்டது..
"அய்யோ.. மாமா.." இரு விழிகளும் கலக்கத்தோடு விரிந்தன..
"தங்கம்.."
"மா.. மா.."
"எழுந்துட்டியா தங்கம்.. நல்லது.. மாமா வெளிய போறேன்.. கொஞ்சம் தயாராகி வந்தா உன்னை பாத்துட்டு கிளம்பிடுவேன்..!!" கதவின் வெளிப்பக்கத்திலிருந்து அவர் குரலில்..
"இதோ.. இதோ வந்துட்டேன் மாமா.." என்றவள்.. அவசரமாக எழ முயல.. அவள் இடையை கட்டிக்கொண்டு மேலும் வசதியாக படுத்துக் கொண்டான் அவன்..
"அத்தான் விடுங்க.."
"மாட்டேன்.."
எப்படியோ ஒரு வழியாக அவனை விலக்கி தள்ளிவிட்டு கட்டிலை விட்டு இறங்கவும் தாவணி அவன் கையோடு போனது..
"அய்யோ அத்தான்.." தலையில் அடித்துக் கொண்டு.. அவன் கையிலிருந்து தன் தாவணியை பிடுங்க முயல.. அவன் இழுக்க.. மீண்டும் அவன் மீது விழுந்திருந்தாள் மீனா.. இறுக அணைத்து அவளோடு சேர்ந்து புரண்டவன் மீனாவை தனக்கு கீழே கொண்டு வந்து அவள் மார்பில் தலை வைத்திருந்தான்.. தாவணி எக்கு தப்பாக இருவரையும் சுற்றியிருந்தது..
"அத்தான் என்னை விடுங்க மாமா கூப்பிடுறாரு.. நான் போகணும்.." கையை காலை உதைத்து முயன்றும் கூட அவனிடம் எந்த பலனும் இல்லாமல் போனது..
"தூங்க விடு செல்லம்மா.." கொட்டாவி வேறு.. சிறுபிள்ளை போல் மூக்கை வேறு அவள் நெஞ்சுக்குழியில் உரசினான்..
"எழுந்திருடா தடியா.. இப்போ நான் என்ன செய்வேன்.." நொந்து போனாள் மீனா..
"தங்கம்.."
"ஐயோ இவர் வேற.. அப்பாவும் பிள்ளையுமா சேர்ந்து என் உசுர வாங்குறாங்களே.." மீனா தலையில் அடித்துக் கொண்டாள்..
வேறு வழியில்லாமல் அவன் தோளில் முதுகில் வலிக்க வலிக்க கிள்ளி.. அதற்கும் அவன் கிச்சுகிச்சு மூட்டுவதைப் போல் லேசாக நெளிந்து சிரித்து வைத்து.. ஒரு வழியாக தன் மீதிருந்து அவனை கீழே தள்ளி.. தன் தாவணியை பிடுங்க முயல அது முடியாமல் போனது..
அவசர அவசரமாக.. தனது மர பீரோவிலிருந்து வேறு ஒரு தாவணியை உடுத்திக் கொண்டு.. கண்ணாடியை பார்த்து முகத்தை துடைத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்து நின்றாள் செல்ல மீனா..
"மாமா.."
"என்னடா இவ்வளவு நேரம்.. நல்ல தூக்கமோ!!"
"ஆ.. ஆமா.." திருவிழாவில் ஆட்டம் போட்டது ஒரே களைப்பு மாமா "அதான் தூங்கிட்டேன்.." அசடு வழிந்தாள் மீனா..
"சரி சரி.. அப்படின்னா இன்னும் கொஞ்ச நேரம் கூட ஓய்வெடுத்துக்கோ.. காலேஜுக்கு கூட விடுப்பு எடுத்துக்க.."
"இல்ல மாமா எனக்கு முக்கியமான பரீட்சை.. லீவு போட முடியாது..!!"
"அப்படியா.. அப்போ சரி.. மாமாவுக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு.. போயிட்டு ஒரு மணி நேரத்தில் வந்துடுவேன்.. நீ காலேஜுக்கு அகரன் கூட வண்டியில போயிடு..!! போய் இறங்கிட்டு எனக்கு ஃபோன் போடு.."
"சரி மாமா.."
"அப்புறம் அந்த முரட்டு பையன் மறுபடியும் வீட்டுக்கு வந்தானா..?" மகன் பற்றிய பேச்சு எடுக்கும் போது மட்டும் குரல் மாறியது..
"இ.. இல்லையே மாமா.." விழி பிதுங்கியது மீனாவிற்கு கண்டுபிடித்து விட்டாரோ..!! இதுவரை அப்படி நடந்ததில்லையே..!! சாமர்த்தியமாக அவர் கண்ணில் மண்ணை தூவி எப்படியாவது தன் அத்தானை அறையை விட்டு வெளியேற்றி விடுவாள்.. இன்றுதான் உறக்கத்திலிருந்து எழாமல் அவளை இழுத்து உருண்டு ஒரு வழியாக்கி மிகவும் முரண்டு பிடித்து விட்டான் முரடன்..
"சரி மாமா வரேன்.. அவள் தலையை வருடி கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தார் அவர்.. எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் செல்ல மீனா அவர் முன்பு வந்து நிற்க வேண்டும்.. அவள் இங்கே வந்ததிலிருந்து இது வழக்கமாகி போனது..
அதென்ன தான் பெற்ற பெண் பிள்ளையை விட இவள் ஒசத்தியா என்ற ஆதங்கம் ஒரு காலத்தில் காமாட்சிக்கு இருந்தது உண்மைதான்.. ஆனால் என்றைக்குச் செல்ல மீனா தன் மகனுக்கு அன்னையாகி போனாளோ அன்றிலிருந்து இந்த ஆதங்கமும்.. ஆற்றாமையும் மனதோடு மட்கிப் போனது..
தாமோதரன் வாசலை தாண்டி செல்லும் வரை அங்கேயே அமைதியாக நின்றவள்.. அவர் தலை மறைந்த பிறகு கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தாள்..
"அடேய்ய் அத்தான்.. இன்னுமா நீ எழுந்துக்கல.." கதவை தாழிட்டு அவனிடம் வந்தவள்.. படுத்திருந்தவனின் மேலே ஏறி அமர்ந்து நெஞ்சு முடியை பிடித்து இழுத்தாள்..
"ஆஆஆஆ.." வலியில் அலறி எழுந்து அமர்ந்தவனின் வாயை அவசரமாக தன் கரம் கொண்டு மூடினாள் மீனா..
"கத்தாதடா.."
"எது.. டா வா.." அவள் இடுப்பைப் பற்றி தன்மீது சரித்துக் கொண்டான் அவன்..
"அய்யோஓஓஓ.. அத்தான் என்னை விடுங்க.. விடிஞ்சிடுச்சு.. முதல்ல இங்கிருந்து போங்க.."
இரு கைகளை பின்னால் கட்டிலில் தாங்கி அவன் கால் நீட்டி அமர்ந்திருக்க.. இரு பக்கமும் கால் போட்டு அவன் வயிற்றில் அமர்ந்து கழுத்தை கட்டிக் கொண்டிருந்தாள் செல்ல மீனா..
"என்னடி நீயும் என்னை போக சொல்ற.. உனக்கும் நான் வேண்டாமா..!!" அவன் இளகிய குரல் நெஞ்சோரம் ஏதோ செய்ய..
வலிய சிரித்து அவன் தலையில் குட்டியவள்.. "நான் என்ன சொன்னா.. நீரு என்ன புரிஞ்சிக்கிறீரு.. முதல்ல எழுந்திருங்க.." என்று கட்டிலைவிட்டு கீழே இறங்கியவள் அவன் கைப்பற்றி இழுத்து கீழே நிற்க வைத்தாள்.. வலிமையான ஆண் மகன் என்றாலும் எப்போதும் இளம் பூங்கொடியின் இழுவிசைக்குள் கட்டுப்படுபவன் அவன்..
"நேத்து எப்ப வந்து படுத்தீங்க இங்க.." என்றாள் கலைந்திருந்த அவன் கேசத்தை கோதிவிட்டபடி.. சுருட்டை முடி அவனைப் போலவே படியாமல் முரட்டுத்தனமாக நின்றதில் சிரிப்புதான் அவளுக்கு..
"ராத்திரி கழனியில தூக்கம் வரல.. அதான் இங்க வந்துட்டேன்.." என்றவன் திரும்பி நின்று கண்ணாடியை பார்த்து படி தன் கேசத்தை சரி செய்து கொண்டிருந்தான்..
"வந்தவர் நேரா உங்க அறைக்கு போகணும்.. இங்க எங்க வந்தீரு..? இடுப்பில் கைவைத்து கேட்டாள் மீனா
"இது என்ன கேள்வி.. என் பொண்டாட்டி கிட்ட வராம வேற எங்க போவேன்..!!" தாடையை தேய்த்தபடி கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..
"ஆமா பொண்..டாட்டி.. சொன்னாங்க சொன்னாங்க.. யார் காதுலயாவது விழுந்திட போகுது.." இந்த வார்த்தைகளை முடிக்கும் சட்டென அவள் பக்கம் திரும்பினான் வெற்றி..
"ஏன்..? விழுந்தா என்ன..!! எனக்கென்ன பயம்.. கூரை மேல ஏறி நின்னு கூட சொல்லுவேன்.. பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி.."
"போதும் நிறுத்துங்க அத்தான்.. விட்டா தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவீங்க போலிருக்கு.."
பிடரியை வருடியபடி ஒரு காலை சாய்த்து நின்றவன் "அதுக்கு தான்டி நேரம் பாத்துட்டு இருக்கேன்.. எல்லாம் கூடி வரட்டும்.. அப்புறம் இருக்கு உனக்கு.." என்றான் நெடுநாள் பசியை தேக்கி வைத்திருப்பவன் போல் அவளை ஏற இறங்க பார்த்தபடி..
"சரி போதும் உங்க அறைக்கு போங்க அத்தான்.. சின்ன மாமா பார்த்தாருன்னா பிரச்சினை ஆகிடும்.." சிணுங்கினாள் அவள்.. எப்போதும் இப்படி வம்பு செய்து இம்சிப்பதில் அலாதி ஆனந்தம் அவனுக்கு..
"என்னடி சும்மா பிரச்சனை.. பிரச்சினைன்னு.. நான் பார்க்காத பிரச்சனையா.. இரு நானே போய் அவர்கிட்ட சொல்றேன்.." என்று நகர போனவனை வழிமறித்து கழுத்தோடு கட்டிக்கொண்டாள் மீனா..
"ப்ளீஸ்.. என் செல்ல அத்தான்ல.. அப்படியெல்லாம் செய்யக்கூடாது புரியுதா.." அவன் இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்..
"நகருடி செல்லம்மா.." கிறங்கிப் போனான் அவன்..
"ஏனாம்.." அவள் உதட்டை சுழித்தாள்..
"நீயா இப்படி பக்கத்துல வந்தா.. உன் அத்தானுக்கு கண்ட்ரோல் விட்டு போயிடும்.. இந்த விஷயத்தில் நான் ரொம்ப வீக்.."
"சரிதான்.. அப்போ இங்கிருந்து போங்க.."
"என்னோட அறைக்கு போனாலும் அங்கேயும் நீதானடி வரணும்.."
"வர்றேன் அத்தான்.. இன்னும் பல்லு கூட விளக்கல.. என்றவளை மேலும் பேசவிடாமல் இதழை கவ்வி நிதானமாக சுவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் வெற்றி..
அறைக் கதவை தாண்டி வெளியே வந்த நேரத்தில் கூடத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்று வெற்றியை முறைத்துக் கொண்டிருந்தான் கௌரிதரன்..
அவன் முறைப்புக்கு சற்றும் அசராமல் கல் தூணில் சாய்ந்து நின்றபடி அவனை எகத்தாளமாக பார்த்தான் வெற்றி..
வெற்றியின் கையில் சுருண்டிருந்த மீனாவின் தாவணியை கண்டு "எத்தன நாளா நடக்குது.." என்றான் கௌரிதரன் மிரட்டலாக..
"ஏன் உமக்கு தெரியாதா..?"
"எல்லாம் தெரியும்.. ஆனாலும் இன்னைக்கு உன் அக்கா கிட்ட சொல்லாம விடுறதில்ல..!!"
"போய் தாராளமா சொல்லும்.. அவ மூலமாவது என் தவிப்புக்கு ஒரு விடிவு கிடைக்குதான்னு பார்ப்போம்.."
"அப்ப சொல்ல மாட்டேன்.."
"சரி சொல்லாதீரு.." வெற்றி தோள்களை குலுக்கினான்
இப்படி கெஞ்சி கேட்கிறதால விடறேன்.. சொல்லாம இருக்கணும்னா காசு குடு.." தலையை சாய்த்து கையை நீட்டவும்.. கௌரிதரனை ஏற இறங்க பார்த்தபடி தனது பாக்கெட்டில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து ஓங்கி அவன் கையில் வைத்தவன் "இதெல்லாம் ஒரு பொழப்பு.. தூ.." என்று காரி துப்பாத குறையாக கேவலமாக பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான்..
"ஹான்.. அந்த பயம் இருக்கணும்.. அக்கா புருஷன்னா சும்மாவா.. வகுந்திடுவேன் பாத்துக்க.." குரலை செருமியபடி சுற்றும் முற்றும் பார்த்தபடி பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான் அவன்..
தொடரும்..

Last edited: