• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 30

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
86
அன்று காலையில் குட் மார்னிங் சொல்லி அவளை எழுப்பி விட வருண் தேம்பாவணியின் அறைக்கு வரவில்லை..

முத்தமிட்டு முத்தமிட்டு அதே மயக்கத்தோடு அவன் விலகி சென்றதுதான் தெரியும்.. அதன் பிறகு எப்போது வந்து கட்டிலில் விழுந்தாளோ..!

முத்த மயக்கம் பல வித கலர் கனவுகளோடு அவளைக் ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து சென்றிருந்தது.. அன்றைய நாள் விடிந்ததிலிருந்து இரவோடு சேர்த்து முடிந்த வரை வசந்தம் வீசும் பொன்னாளாய் அமைந்து போனது அவளுக்கு.. மறக்கமுடியாத நன்னாள்..

ஆனால் இதோ மறுநாள் காலையில் கைகளை இறுக கட்டிக் கொண்டு பலவித எண்ணங்களோடு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள்..

வருணை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை..! சொல்லப்போனால் அவன் முகம் பார்க்க முடியாத அளவிற்கு மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல்.. தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி..

உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு பரவசத்தில் அவனை முத்தமிட்டு பிரிந்து கலர் கனவுகளோடு உறங்கும் வரை எல்லாம் சரியாகத்தான் தோன்றியது..

இப்போது காலையில் அனைத்தும் அபத்தமாக தெரிகிறது..

நன்றி உணர்வை காட்ட இப்படித்தான் முத்தமிடுவாயா..! வருண் கல்யாணம் ஆனவர்.. உனக்கு நினைவிருக்கிறதா இல்லை தெரிந்தே மறந்து போனாயா..?

குச்சியை வைத்துக்கொண்டு டீச்சர் போல் மிரட்டிக் கொண்டிருக்கிறது ஒரு உருவம்..

சட்டையின் கழுத்து பகுதியை இறுகப்பற்றிக் கொண்டு நெஞ்சம் நடுங்க அமர்ந்திருக்கிறாள்..

உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அந்த தருணத்தில் அவசரப்பட்டு முத்தமிடவில்லை.. நெடு நாட்களாய் நெஞ்சுக்குள் மெல்லிய வேராய் ஊடுருவி அடர்த்தியாய் வியாபித்து நிற்கும் ஒரு இனிமையான சலனம்..

கோப்பையில் வழிய வழிய ஊற்றிய திராட்சை ரசத்தை போல் மனம் நிரம்பி வழிந்த சந்தோஷத்தில்.. அந்த மெல்லிய சலனம் மெல்ல கசிந்து.. ஊற்றாய் பெருகி.. ஐயோ கடவுளே தப்பு தப்பு..

இதுல தப்ப என்ன இருக்கு..? வருண் டாக்டரை உனக்கு அவ்வளவு பிடிக்குமா..?

அவரைவிட உன்னை நல்லா வேற யார் பாத்துக்குவாங்க..!

இந்த உலகத்திலேயே உன் மேல அளவு கடந்து அன்பு செலுத்தின ஆம்பள அவர் ஒருத்தர் மட்டும் தானே..

அதுக்காக முத்தம் கொடுக்கலாமா..!

இந்த ஸ்பைடர் மேன் படத்துல ஹீரோயின் ஸ்பைடர்-மேனுக்கு நன்றியை வெளிப்படுத்தற விதமா முத்தம் தருவாளே..! அந்த மாதிரி..

அடச்சே..! அபத்தம்.. அது வெளிநாட்டு கலாச்சாரம்.. இங்க ஒருத்தருக்கு உதட்டோடு உதடு வைச்சு முத்தம் தரனும்னா ஒன்னு காதலனா இருக்கணும் இல்ல கணவனா இருக்கணும்.. வருண் யார் எனக்கு..!

அவர்தான் எனக்கு எல்லாமே..! அவர் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்..?

கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு எதிரே மயானம் போல் காட்சியளித்தது.. அவன் இல்லாத அந்த கற்பனை வாழ்க்கை..

"ஏய்.. குட்டி..! என்ன எழுந்து அப்படியே உட்கார்ந்துருக்க.. அம்மா சமையல் கட்டுல வேலையா இருக்காங்க.. நீ எழுந்துட்டியான்னு பார்க்க சொன்னாங்க.. காபி ஏதாவது குடிக்கறியா..?" படபடப்பான பேச்சோடு அந்த காலை நேரத்தில் பரபரப்பாக்கினாள் வெண்மதி..

"வெண்மதியை கண்டதும் இதுவரை தொற்றிக் கொண்டிருந்த இறுக்கம் மெல்ல வடிந்து போக.. மெல்லிதாய் புன்னகைத்து "இல்லக்கா வேண்டாம்..! நான் குளிக்க போகணும்.. காலேஜ்க்கு நேரமாச்சு.. நேத்து வேற லீவு போட்டுட்டேன் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போய் நேத்து மிஸ் பண்ணின பாடத்தையெல்லாம் எழுதி வைக்கணும்.." சொல்லிக்கொண்டே தனது அலமாரியை திறந்து துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடியவளை கைப்பற்றி நிறுத்தினாள வெண்மதி..

"நேத்து சந்தோஷமா இருந்தியா..?" என்ற கேள்வியில் தேம்பாவணி திடுக்கிட்டு விழிக்க..

"இல்ல.. அம்மா உன்னை சந்தோஷமா வச்சிருந்தாங்களா..?" என்றதும் இதமாய் புன்னகைத்து வெண்மதியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் தேம்பாவணி..

சந்தோஷத்தின் அறிகுறியாம் அது..

முத்தம்..

வெண்மதிக்கு கன்னத்திலும்.. வருணுக்கு ஆவேசமாய் உதட்டிலும்.. ‌‌

ஆங்.. கன்னத்தை தொட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி திரும்பி அங்கிருந்து நகர்ந்த வேலையில் திறந்திருந்த டிராயரை கண்டு அதை மூடுவதற்காக பக்கத்தில் வந்தாள்..

டிராயர் முழுக்க கலர் கலராய் அவள் ரகசியமாய் சேமித்து வைத்திருந்த பிள்ளையார் சிலைகள்.. விரலளவில் ஆரம்பித்து கையளவு வரை 20க்கும் மேற்பட்ட குட்டி குட்டியான பொம்மைகள்.. இதில் வெண்மதி தினமும் பூஜையறையில் வைக்கும் கலர் கணபதிகளும் அடங்கினர்..

"அடிப்பாவி.. பிள்ளையார் மேல உனக்கு இப்படி ஒரு கிரஷா.." கன்னத்தில் கை வைத்து ஒவ்வொரு சிலையையும் எடுத்து ஆசையோடு பார்த்த பிறகு இருந்த இடத்திலேயே அதை வைத்து ட்ராயரை மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நீ வெளியே வந்த நேரத்தில் எதிரே திலோத்தமா வெண்மதியை தீயாக முறைத்துக் கொண்டு நிற்க..

"ஆத்தி இவளை மறந்து போயிட்டேனே..! என்ன இப்படி முறைக்கறா.. சமாளிப்போம்.." என்று குரலை செருமி கொண்டு..

"என்ன திலோத்தமா காலையிலேயே பாசமா பார்க்கற. என்ன விஷயம்..? என அசடு வழிந்து சிரிக்க..

"ரொம்ப நடிக்க வேண்டாம்..? முந்தாநாள் ராத்திரி நான் அவ்வளவு எடுத்து சொல்லியும் எனக்கு சாதகமா பேசற மாதிரி சீன் போட்டுட்டு அந்தப் பக்கம் போய் இந்த சீப்பான டிராமாவுக்கு நீங்களும் ஒத்துழைச்சிருக்கீங்க.. உங்களுக்கு அந்த பொண்ணும் உங்க அம்மாவும் சேர்ந்து பண்ற கேலிக்கூத்தெல்லாம் சரின்னு பட்டதுன்னா வெளிப்படையா சொல்லி இருக்கலாமே.. எதுக்காக இப்படி ரெட்டை வேஷம் போட்டு என்கிட்ட ஒரு மாதிரியும் அங்க ஒரு மாதிரியும் நடிக்கணும்.. இது உங்களுக்கே கேவலமா தோணல..!"

"ஏய் நிறுத்து..! என்ன நீ.. வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டே போற.. ஒரு நாத்தனார்ன்னு மரியாதை இல்லை..? முதல்ல உன்னை விட வயசுல பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு கத்துக்க.. வாழ வந்த இடத்துல எப்படி அடக்கமா பேசணும் மரியாதையா நடந்துக்கணும்னு உனக்கே தெரியல.. அந்த சின்ன பொண்ண குறை சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குனு நினைக்கற.. என்கிட்டயே இப்படி வாய் பேசுறவ அந்த பொண்ணு கிட்ட போய் எடக்கு மடக்கா ஏதாவது பேசி வச்சு அவ மனசை புண்படுத்திட்டா.. அதான் உன்னால எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டினேன்.. இதுல எதுவும் தப்பு இருக்கிறதா எனக்கு படல.."

திலோத்தமா வாயடைத்துப் போனாள்.. ஒரு கணம் கோபத்தில் அதிகமாக பேசிவிட்டதையும் அந்த வீட்டில் வெண்மதிக்கு இருக்கும் செல்வாக்கையும் உணர்ந்து கொண்டவளாய்.. சட்டென சுதாரித்து..

"இங்க பாருங்க நான் ஒன்னும் உங்கள மரியாதை குறைவா பேசல.. என் நாத்தனாருங்கற உரிமைலதான் இப்படி பேசறேன்.. அப்ப இது என் வீடு இல்லையா நான் எதையும் தட்டிக் கேட்க கூடாதா..! யாரோ ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்து ஆட்டம் போட எல்லாருமா சேர்ந்து அனுமதிக்கிறீங்களே அது தான் ஏன்னு எனக்கு புரியல.. இதை தட்டி கேட்டால் நான் கெட்டவ.. அப்படித்தானே..?

"இன்னைக்கு அம்மா வேணும்.. அக்கா வேணும்னு உரிமை கொண்டாடி.. ஒரு நாள் மொத்தமா எல்லாத்தையும் நம்ம கிட்டருந்து பறிச்சிக்கத்தான் போறா.. நிச்சயமா ஏதோ ஒன்னு தப்பா நடக்கத்தான் போகுது.. அப்ப ஐயோ அம்மான்னு அழுது பிரயோஜனம் இல்ல.."

"என்ன உளர்ற நீ..? எதுவானாலும் உடைச்சு பேசு.."

"சரி.. நான் மறச்சு பேச விரும்பல வெளிப்படையா சொல்றேன்.. உங்க தம்பி அந்த பொண்ணுகூட ரொம்ப நெருக்கமா பழகறார்.. இது உங்களுக்கு தெரியலையா.. இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா..?" தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினாள் திலோத்தமா.. தேம்பாவணியை வீட்டை விட்டு விரட்டியடிக்க அவளுக்கு தெரிந்த கடைசி வழி..

வெண்மதி திகைத்துப் போனவளாய் அவளை பார்த்தாள்..

"மனசுல இவ்வளவு வச்சிருக்கறவ இதை வெளிப்படையா போய் உன் புருஷன் கிட்டயே கேட்க வேண்டியதுதானே..! தேவையில்லாம எதுக்காக என்கிட்ட வந்து சண்டை போட்டுட்டு நிக்கற.. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனிச்சுக்க வேண்டியது எங்க பொறுப்பு அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.. மத்தபடி நீ ஏதாவது கேள்வி கேட்கணும்னா உன் புருஷங்கிட்ட போய் கேளு.. என்கிட்ட வந்து எகிறாதே..! மறுபடி இந்த மாதிரி மரியாதை குறைவா என்கிட்ட வந்து பேசினா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.." முகத்தை திருப்பிக் கொண்டு வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

எச்சில் விழுங்கி நின்றாள் திலோத்தம்மா..

"அப்படியா?" என கேட்டு ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைக்கும் என்று பார்த்தால் இந்த சனியன் எனக்கென்ன வந்தது.. இது உன் பிரச்சனை.. உன் புருஷன்கிட்ட போய் கேளு என்கிறதே..!"

அவனிடம் போய் இது பற்றி கேட்பதாவது..?

மதித்து பதில் சொல்வானா.. நின்று இதைப் பற்றி பேசுவானா..!

ஒரே ஒரு பார்வை தான்.. இல்லையேல் உனக்கது தேவையில்லாத விஷயம்.. போய் உன் வேலையை பாரு.. என்றொரு வார்த்தை.. அதை தாண்டி பேச்சை வளர்க்க முடியாதே.. தவிர தேம்பாவணியோடு நெருங்கி பழகுவதை பற்றியும் அவர்களுக்கிடையே உள்ள உறவை பற்றியும் விசாரிக்க தனக்கென்ன உரிமை இருக்கிறது..

ஆனாலும் இந்த தேம்பாவணியை கொஞ்சமும் பிடிக்கவில்லை.. நடிப்பு நாடகம் என்பதை தாண்டி இதுவரை வருண் மனைவியாக ஒற்றை மகாராணியாக செல்வாக்கோடு வலம் வந்தவளுக்கு இப்போது இந்த தேம்பாவணி இடைஞ்சலாக வந்து நிற்கிறாள்.. அனைவரது கவனமும் இப்போது அவள் மீது குவிந்து நிற்கிறது..

குழந்தையாம்.. அழகியாம்.. வருண் கூட வைத்த கண் வாங்காமல் அவளைத்தானே பார்க்கிறான்.. இருவரும் ஜோடியாக வலம் வருகையில் காரணமில்லாமல் வயிறு பற்றி எரிகிறது.. வயது வித்தியாசம் இல்லாமல் தேம்பாவணியின் மீது பொறாமை..

வருண்.. தேம்பாவணி இருவரும் காலை உணவு வேளையில் கூட ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கி மிக ஆர்வமாக தட்டிலிருந்த உணவை உண்பதாக காட்டிக்கொண்டனர்..

தேம்பாவணி தனது புத்தக பையை எடுத்து வரும் வரை தந்தையோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் வருண்..

ஓரிரு நொடிகள் அவள் மீது பார்வை பதிந்தாலும் கவனமாக விலக்கிக் கொண்டு அவளைத் தவிர்ப்பதாக காட்டிக்கொண்டான்..

கார் ஓட்டும்போதும் கூட அதே மவுனம்..!

அவன் முகத்தில் தெரிந்த அந்த இறுக்கத்திலும்.. இறுதிவரை நீடித்த அந்த மௌனத்திலும் குழம்பியும் பயந்து போனாள் தேம்பாவணி..

அவள் எந்த மாதிரியான மனநிலையில் தவிக்கிறாளோ அதே நிலைதான் வருணுக்கும்..

குற்ற உணர்ச்சி..!

வயதில் சிறிய பெண்ணுடன் தான் இப்படி நடந்திருக்கக்கூடாது.. அப்படி என்ன மனதை கட்டுப்படுத்த முடியாத சபலம்.. ஒரு பெண்ணுக்கு கணவனாக என்னை அறிந்திருக்கும் பட்சத்தில் தேம்பாவணி என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்..! அவள் விபரம் அறியாத ஒரு சிறு பெண்.. நீ அனுபவம் வாய்ந்த ஒரு மனநல மருத்துவன்.. எந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்தாய்..! எங்கே தடம் புரண்டாய்.. ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னைத்தானே கடிந்து கொண்டான்..

தேம்பாவணியின் முகம் பார்க்க முடியவில்லை..

உனக்கு தேம்பாவணி ரொம்ப பிடிச்சிருக்குடா முதல்ல அதை ஒத்துக்கோ..!

ஒத்துக்கறேன் ஆனா அது சரி வராது.. அவ பாவம் சின்ன பொண்ணு.. அவளுக்கு எந்த விதத்திலும் நான் பொருத்தமானவன் இல்ல..! அவளுக்கு இப்பதான் வயசு 19.. எனக்கு 38.. இன்னும் ரெண்டு வருஷம் போனா 40.. அரைக் கிழவன்.. வாலிபத்தின் வாயிலை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்.. வாலிபம் முடிந்து முதுமையின் ஆரம்பத்தை நோக்கி காத்திருக்கும் என்னை திருமணம் செய்து கொள்வதெல்லாம் நடக்கும் காரியமல்லவே..!

முதுமையா..! யூ லுக்கிங் சோ யங்.. வருண் எப்போதிலிருந்து உனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பித்தது.. உன் மனதை கூட இளமையாத்தானே வைத்திருக்க..

அதெல்லாம் எனக்கு மட்டும்தான்.. இன்னொரு பொண்ணோட வாழ்க்கையின் வரும்போது நான் பல கோணங்கள்லருந்து யோசிச்சு பார்க்க வேண்டியது அவசியமா போகுது..

இப்படித்தான் இருவரின் எண்ணங்களும் வேறுபட்டு நிற்க..

முதல் முத்தம் இருவருக்குமிடையில் ஒரு தடுப்புச் சுவரை வளர்த்திருந்தது..

ஆனால் இத்தனை சங்கடங்களையும் உறுத்தல்களையும் தாண்டி.. தேம்பாவணி முத்தமிட்ட தன் உதடுகளை ஏதோ தித்திப்பை உணர்வதாய் அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டான் வருண்..

ஒரு பொண்ணு கிஸ் பண்ண வந்தா தள்ளி விடணும்.. இப்படி காட்டுமிராண்டி மாதிரி.. இதுதான் சாக்குனு.. கடிச்சு திங்கப்படாது..

அவ்வளவு.. காஞ்சி போயிருக்கியாடா நீ..

காஜி பயலாடா நீ..

முன்னால் வந்து நின்று கண்களை விரித்து கேள்வி கேட்ட மனசாட்சியை கொசு பேட்டால் அடித்து விரட்ட முயன்று கொண்டிருந்தான்..

நேற்றைய சம்பவத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு ஐயோ என்றானது..

நிதானம் தவறி கட்டுப்பாடுகளை இழந்து.. ஏற்கனவே அந்த உதட்டின் மீது கொள்ளை மோகம்.. வாய்ப்பு கிடைத்தால் விடுவானா என்ன..?

அவ்வப்போது உரசி கொண்ட பார்வையில் அவள் கீழ் உதடுகள் கொஞ்சம் தடித்து போயிருப்பதை பார்க்க முடிந்தது..

மேல் உதட்டுக்கும் இரக்கம் காட்டவில்லை அவன்..!

"பாவி பயலே.. வருண் நீயாடா இது..!" மனசாட்சி வேறு கூவியது..

"வரூண்..‌ வரூண்.. என்னடா பண்ணி வச்சிருக்க.. இதெல்லாம் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா உன் மான மரியாதை என்ன ஆவறது..!" நெஞ்சை நீவிக் கொண்டான்..

அவ்வப்போது முத்தமிட்ட மோகம் மனதைத் தென்றலாய் தொட்டு செல்ல நொந்து போனான்..

"அந்த லிப்ஸ்டிக் எங்க வச்சீங்க மாலினி கிட்ட குடுத்துட்டீங்களா..?" இறங்கும்போது கேட்டாள் தேம்பாவணி..

முதலில் திருதிருவென விழித்தவன்.. "எதுக்கு கேக்கற?" என்றான் கண்கள் சுருக்கி..

"வேணுமே..!" என்ற பிறகு பாக்கெட்டிலிருந்து அந்த லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க.. இப்போது தேம்பாவணி விழித்தாள்..

"அ.. அது.. அன்னைக்கு குடுக்க மறந்துட்டேன்.. தினமும் கொடுக்கணும்னு நினைச்சு எடுத்து பாக்கெட்ல வைப்பேன்.. ஆனா மறந்து போகுது.." ஸ்டியரிங்கில் முழங்கையை ஊன்றி கண்களை மூடியபடி நெற்றியை தேய்த்துக் கொண்டான்..

முன் கண்ணாடியில் தன் உதட்டை பார்த்து லிப்ஸ்டிக்கை பூசி கொண்டாள் தேம்பாவணி..

"இப்ப எதுக்காக இந்த லிப்ஸ்டிக்கை அள்ளி பூசிக்கற..!"

"அள்ளிப் பூசிக்கல லேசா தான் போட்டுக்கறேன்.." அவள் பதில் சொல்ல கண்ணாடியை பார்த்திருந்தவனுக்கு காரணம் புரிந்து போயிற்று..!

வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இதழின் இரு ஓரங்களில் வெட்டுப்பட்டு தடித்துப் போயிருந்தது..

அவன் தோளோடு தோள் இடித்து.. உதட்டு சாயம் சரியாக பரவ மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தேய்த்துக்கொள்ள.. லேசாக வாய் திறந்து கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"வாயில ஈ போகுது டாக்டர்.."

ஆங்..! என்று அவன் விழிக்க.. தேம்பாவணி என்னாச்சு என்று நிமிர்ந்து பார்த்தாள்‌.

பேசியது மனசாட்சி..

இறங்கபோனவளிடம் "லிப்ஸ்டிக்கை குடு" என்றான் கனத்த குரலில்..

தேம்பாவணி கண்கள் சுருக்கி பார்க்க..! இழுத்து மூச்சு விட்டவன்.. "ஐ அம் சாரி. இனிமே நீ இந்த மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கற அவசியம் வராது.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.." என்றான் கண்கள் மூடி திறந்து..

அந்த லிப்ஸ்டிக்கை அவன் கையில் தந்து விட்டு இறங்கப் போனவளிடம்

"சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு.. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.." என்று அவன் சொல்ல.. தலையசைத்துவிட்டு காரிலிருந்து இறங்கி போனாள் தேம்பாவணி..

இதழ் குவித்து ஊதி அந்த லிப்ஸ்டிக்கை ஏதோ ஒரு ஞாபகத்தில் திறந்து பார்த்தவன் அந்த வண்ண மெழுகில் கூட அவள் இதழ் வாசம் வீசுவதாய் உணர்ந்தான்..

"முத்திடுச்சு வருணே..!" மீண்டும் எங்கிருந்தோ ஒரு குரல்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
70
அன்று காலையில் குட் மார்னிங் சொல்லி அவளை எழுப்பி விட வருண் தேம்பாவணியின் அறைக்கு வரவில்லை..

முத்தமிட்டு முத்தமிட்டு அதே மயக்கத்தோடு அவன் விலகி சென்றதுதான் தெரியும்.. அதன் பிறகு எப்போது வந்து கட்டிலில் விழுந்தாளோ..!

முத்த மயக்கம் பல வித கலர் கனவுகளோடு அவளைக் ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து சென்றிருந்தது.. அன்றைய நாள் விடிந்ததிலிருந்து இரவோடு சேர்த்து முடிந்த வரை வசந்தம் வீசும் பொன்னாளாய் அமைந்து போனது.. மறக்கமுடியாத நன்னாள்..

ஆனால் இதோ மறுநாள் காலையில் கைகளை இறுக்க கட்டிக் கொண்டு பலவித எண்ணங்களோடு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள்..

வருணை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை..! சொல்லப்போனால் அவன் முகம் பார்க்க முடியாத அளவிற்கு மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல்.. தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி..

உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு பரவசத்தில் அவனை முத்தமிட்டு பிரிந்து கலர் கனவுகளோடு உறங்கும் வரை எல்லாம் சரியாகத்தான் தோன்றியது..

இப்போது காலையில் அனைத்தும் அபத்தமாக தெரிகிறது..

நன்றி உணர்வை காட்ட இப்படித்தான் முத்தமிடுவாயா..! வருண் கல்யாணம் ஆனவர்.. உனக்கு நினைவிருக்கிறதா இல்லை தெரிந்தே மறந்து போனாயா..?

குச்சியை வைத்துக்கொண்டு டீச்சர் போல் மிரட்டிக் கொண்டிருக்கிறது ஒரு உருவம்..

சட்டையின் கழுத்து பகுதியை இறுகுப்பற்றிக் கொண்டு நெஞ்சம் நடுங்க அமர்ந்திருக்கிறாள்..

உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அந்த தருணத்தில் அவசரப்பட்டு முத்தமிடவில்லை.. நெடு நாட்களாய் நெஞ்சுக்குள் மெல்லிய வேராய் ஊடுருவி அடர்த்தியாய் வியாபித்து நிற்கும் ஒரு இனிமையான சலனம்..

கோப்பையில் வழிய வழிய ஊற்றிய திராட்சை ரசத்தை போல் மனம் நிரம்பி வழிந்த சந்தோஷத்தில்.. அந்த மெல்லிய சலனம் மெல்ல கசிந்து.. ஊற்றாய் பெருகி.. ஐயோ கடவுளே தப்பு தப்பு..

இதுல தப்ப என்ன இருக்கு..? வருண் டாக்டரை உனக்கு அவ்வளவு பிடிக்குமா..?

அவரைவிட உன்னை நல்லா வேற யார் பாத்துக்குவாங்க..!

இந்த உலகத்திலேயே உன் மேல அளவு கடந்து அன்பு செலுத்தின ஆம்பள அவர் ஒருத்தர் மட்டும் தானே..

அதுக்காக முத்தம் கொடுக்கலாமா..!

இந்த ஸ்பைடர் மேன் படத்துல ஹீரோயின் ஸ்பைடர்-மேனுக்கு நன்றியை வெளிப்படுத்துற விதமா முத்தம் தருவாளே..! அந்த மாதிரி..

அடச்சே..! அபத்தம்.. அது வெளிநாட்டு கலாச்சாரம்.. இங்க ஒருத்தருக்கு உதட்டோடு உதடு வைச்சு முத்தம் தரனும்னா ஒன்னு காதலனா இருக்கணும் இல்ல கணவனா இருக்கணும்.. வருண் யார் எனக்கு..!

அவர்தான் எனக்கு எல்லாமே..! அவர் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்..?

கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு எதிரே மயானம் போல் காட்சியளித்தது.. அவன் இல்லாத அந்த கற்பனை வாழ்க்கை..

"ஏய்.. குட்டி..! என்ன எழுந்து அப்படியே உட்கார்ந்துருக்க.. அம்மா சமையல் கட்டுல வேலையா இருக்காங்க.. நீ எழுந்துட்டியான்னு பார்க்க சொன்னாங்க.. காபி ஏதாவது குடிக்கறியா..?" படபடப்பான பேச்சோடு அந்த காலை நேரத்தில் பரபரப்பாக்கினாள் வெண்மதி..

"வெண்மதியை கண்டதும் இதுவரை தொற்றிக் கொண்டிருந்த இறுக்கம் மெல்ல வடிந்து போக.. மெல்லிதாய் புன்னகைத்து இல்லக்கா வேண்டாம்..! நான் குளிக்க போகணும்.. காலேஜ்க்கு நேரமாச்சு.. நேத்து வேற லீவு போட்டுட்டேன் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போய் நேத்து மிஸ் பண்ணின பாடத்தையெல்லாம் எழுதி வைக்கணும்.." சொல்லிக்கொண்டே தனது அலமாரியை திறந்த துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடியவளை கைப்பற்றி நிறுத்தினாள வெண்மதி..

"நேத்து சந்தோஷமா இருந்தியா..?" என்ற கேள்வியில் தேம்பாவணி திடுக்கிட்டு விழிக்க..

"இல்ல.. அம்மா உன்னை சந்தோஷமா வச்சிருந்தாங்களா..? என்ற கேள்வியில் இதமாய் புன்னகைத்து வெண்மதி என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் தேம்பாவணி..

ஆங்.. கன்னத்தை தொட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி திரும்பி அங்கிருந்து நகர்ந்த வேலையிலீ திறந்திருந்த டிராயரை கண்டு அதை மூடுவதற்காக பக்கத்தில் வந்தாள்..

டிராயர் முழுக்க கலர் கலராய் அவள் ரகசியமாய் சேமித்து வைத்திருந்த பிள்ளையார் சிலைகள்.. விரலளவில் ஆரம்பித்து கையளவு வரை 20க்கும் மேற்பட்ட குட்டி குட்டியான பொம்மைகள்.. இதில் வெண்மதி தினமும் பூஜையறையில் வைக்கும் கலர் கணபதிகளும் அடங்கினர்..

"அடிப்பாவி.. பிள்ளையார் மேல உனக்கு இப்படி ஒரு கிரஷா.." கன்னத்தில் கை வைத்து ஒவ்வொரு சிலையையும் எடுத்து ஆசையோடு பார்த்த பிறகு இருந்த இடத்திலேயே அதை வைத்து ட்ராயரை மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நீ வெளியே வந்த நேரத்தில் எதிரே திலோத்தமா வெண்மதியை தீயாக மறைத்துக் கொண்டு நிற்க..

"ஆத்தி இவளை மறந்து போயிட்டேனே..! என்ன இப்படி முறைக்கறா.. சமாளிப்போம்.." என்று குரலை செருமி கொண்டு..

"என்ன திலோத்தமா காலையிலேயே பாசமா பார்க்கற. என்ன விஷயம்..? என அசடு வழிந்து சிரிக்க..

"ரொம்ப நடிக்க வேண்டாம்..? நேத்து நான் அவ்வளவு எடுத்து சொல்லியும் எனக்கு சாதகமா பேசுற மாதிரி சீன் போட்டுட்டு அந்தப் பக்கம் போய் இந்த சீப்பான டிராமாவுக்கு நீங்களும் ஒத்துழைச்சிருக்கீங்க.. உங்களுக்கு அந்த பொண்ணும் உங்க அம்மாவும் சேர்ந்து பண்ற கேலிக்கூத்தெல்லாம் சரின்னு பட்டதுன்னா வெளிப்படையா சொல்லி இருக்கலாமே.. எதுக்காக இப்படி ரெட்டை வேஷம் போட்டு என்கிட்ட ஒரு மாதிரி அங்க ஒரு மாதிரியா நடிக்கணும்.. இது உங்களுக்கே கேவலமா தோணல..!"

"ஏய் நிறுத்து..! நீ என்ன வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டே போற.. ஒரு நாத்தனார்ன்னு மரியாதை இல்லை..? முதல்ல உன்னை விட வயசுல பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு கத்துக்க.. வாழ வந்த இடத்துல எப்படி அடக்கமா பேசணும் மரியாதையா நடந்துக்கணும்னு உனக்கே தெரியல.. அந்த சின்ன பொண்ண குறை சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குனு நினைக்கற.. என்கிட்டயே இப்படி வாய் பேசுறவ அந்த பொண்ணு கிட்ட போய் எடக்கு மடக்க
கா ஏதாவது பேசி வச்சு அவ மனசை புண்படுத்திட்டா.. அதான் உன்னால எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டினேன்.. இதுல எதுவும் தப்பு இருக்கிறதா எனக்கு படல.."

திலோத்தமா வாயடைத்துப் போனாள்.. ஒரு கணம் கோபத்தில் அதிகமாக பேசிவிட்டதையும் அந்த வீட்டில் வெண்மதிக்கு இருக்கும் செல்வாக்கையும் உணர்ந்து கொண்டவளாய்.. சட்டென சுதாரித்து..

"இங்க பாருங்க நான் ஒன்னும் உங்கள மரியாதை குறைவா பேசல.. என் நாத்தனாருங்கற உரிமைலதான் இப்படி பேசறேன்.. அப்ப இது என் வீடு இல்லையா நான் எதையும் தட்டிக் கேட்க கூடாதா..! யாரோ ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்து ஆட்டம் போட எல்லாருமா சேர்ந்து அனுமதிக்கிறீங்களே அது தான் ஏன்னு எனக்கு புரியல.. இதை தட்டி கேட்டால் நான் கெட்டவ.. அப்படித்தானே..?

"இன்னைக்கு அம்மா வேணும்.. அக்கா வேணும்னு உரிமை கொண்டாடி.. மொத்தமா எல்லாத்தையும் உங்ககிட்ட இருந்து பறிச்சுக்க போறா..! நிச்சயமா எது உன்னை தப்பா நடக்கத்தான் போகுது.. அப்பா ஐயோ அம்மான்னு அழுது பிரயோஜனம் இல்ல.."

"என்ன உளர்ற நீ.. எதுவானாலும் உடைச்சு பேசு.."

"சரி.. நான் மறச்சு பேச விரும்பல வெளிப்படையா சொல்றேன்.. உங்க தம்பி அந்த பொண்ணு கிட்ட ரொம்ப நெருக்கமா பழகறார்.. இது உங்களுக்கு தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா..?" தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினாள் திலோத்தமா தேம்பாவணியை வீட்டை விட்டு விரட்டியடிக்க அவளுக்கு தெரிந்த கடைசி வழி..

வெண்மதி திகைத்துப் போனவளாய் அவளை பார்த்தாள்..

"மனசுல இவ்வளவு வச்சிருக்கறவ இதை வெளிப்படையா போய் உன் புருஷன் கிட்டயே கேட்க வேண்டியதுதானே..! தேவையில்லாம எதுக்காக என்கிட்ட வந்து சண்டை போட்டுக்கிட்டு நிக்கற.. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனிச்சுக்க வேண்டியது எங்க பொறுப்பு அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.. மத்தபடி நீ ஏதாவது கேள்வி கேட்கணும்னா உன் புருஷன் கிட்ட போய் கேளு.. என்கிட்ட வந்து எகிறாதே..! மறுபடி இந்த மாதிரி மரியாதை குறைவா என்கிட்ட வந்து பேசினா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.." முகத்தை திருப்பிக் கொண்டு வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

எச்சில் விழுங்கி நின்றாள் திலோத்தம்மா..

"அப்படியா என கேட்டு ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைக்கும் என்று பார்த்தால் இந்த சனியன் எனக்கு என்ன வந்தது உன் புருஷன் கிட்டயே போய் கேளு என்கிறதே..!"

அவனிடம் போய் இது பற்றி கேட்பதாவது..?

மதித்து பதில் சொல்வானா.. நின்று இதைப் பற்றி பேசுவானா..!

ஒரே ஒரு பார்வை தான்.. இல்லையேல் உனக்கது தேவையில்லாத விஷயம்.. போய் உன் வேலையை பாரு.. என்றொரு வார்த்தை.. அதை தாண்டி பேச்சை வளர்க்க முடியாதே.. தவிர தேம்பாவணியோடு நெருங்கி பழகுவதை பற்றியும் அவர்களுக்கிடையே உள்ள உறவை பற்றியும் விசாரிக்க தனக்கென்ன உரிமை இருக்கிறது..

ஆனாலும் இந்த தேம்பாவணியை கொஞ்சமும் பிடிக்கவில்லை.. நடிப்பு நாடகம் என்பதை தாண்டி இதுவரை வருண் மனைவியாக ஒற்றை மகாராணியாக செல்வாக்கோடு வலம் வந்தவளுக்கு இப்போது இந்த தேம்பாவணி இடைஞ்சலாக வந்து நிற்கிறாள்.. அனைவரது கவனமும் இப்போது அவள் மீது குவிந்து நிற்கிறது..

குழந்தையாம்.. அழகியாம்.. வருண் கூட வைத்த கண் வாங்காமல் அவளைத்தானே பார்க்கிறான்.. இருவரும் ஜோடியாக வலம் வருகையில் காரணமில்லாமல் வயிறு பற்றி எரிகிறது.. வயது வித்தியாசம் இல்லாமல் தேம்பாவணியின் மீது பொறாமை..

வருண்.. தேம்பாவணி இருவரும் காலை உணவு வேளையில் கூட ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கி மிக ஆர்வமாக தட்டில் இருந்த உணவை உண்பதாக காட்டிக்கொண்டனர்..

தேம்பாவணி தனது புத்தக பையை எடுத்து வரும் வரை தந்தையோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் வருண்..

ஓரிரு நொடிகள் அவள் மீது பார்வை பதிந்தாலும் கவனமாக விலக்கிக் கொண்டு அவளைத் தவிர்ப்பதாக காட்டிக்கொண்டான்..

கார் ஓட்டும்போதும் கூட அதே மவுனம்..!

அவன் முகத்தில் தெரிந்த அந்த இறுக்கத்திலும்.. இறுதிவரை நீடித்த அந்த மௌனத்திலும் குழம்பியும் பயந்து போனாள் தேம்பாவணி..

அவள் எந்த மாதிரியான மனநிலையில் தவிக்கிறாளோ அதே நிலைதான் வருணுக்கும்..

குற்ற உணர்ச்சி..!

வயதில் சிறிய பெண்ணுடன் தான் இப்படி நடந்திருக்கக்கூடாது.. அப்படி என்ன மனதை கட்டுப்படுத்த முடியாத சபலம்.. ஒரு பெண்ணுக்கு கணவனாக என்னை அறிந்திருக்கும் பட்சத்தில் தேம்பாவணி என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்..! அவள் விபரம் அறியாத ஒரு சிறு பெண்.. நீ அனுபவம் வாய்ந்த ஒரு மனநல மருத்துவன்.. எந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்தாய்..! எங்கே தடம் புரண்டாய்.. ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னைத்தானே கடிந்து கொண்டான்..

தேம்பாவணியின் முகம் பார்க்க முடியவில்லை..

உனக்கு தேம்பாவணி ரொம்ப பிடிச்சிருக்குடா முதல்ல அதை ஒத்துக்கோ..!

ஒத்துக்கறேன் ஆனா அது சரி வராது.. அவ பாவம் சின்ன பொண்ணு.. அவளுக்கு எந்த விதத்திலும் நான் பொருத்தமானவன் இல்ல..! அவளுக்கு இப்பதான் வயசு 19.. எனக்கு 38.. இன்னும் ரெண்டு வருஷம் போனா 40.. அரைக் கிழவன்.. வாலிபத்தின் வாயிலை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்.. வாலிபம் முடிந்து முதுமையின் ஆரம்பத்தை நோக்கி காத்திருக்கும் என்னை திருமணம் செய்து கொள்வதெல்லாம் நடக்கும் காரியம் அல்ல..

முதுமையா..! யூ லுக்கிங் சோ யங்.. வருண் எப்போதிலிருந்து உனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பித்தது.. உன் மனதை கூட இளமையா தானே வைத்திருக்க..

அதெல்லாம் எனக்கு மட்டும்தான்.. இன்னொரு பொண்ணோட வாழ்க்கையின் வரும்போது நான் பல கோணங்கள்லருந்து யோசிச்சு பார்க்க வேண்டியது அவசியமா போகுது..

இப்படித்தான் இருவரின் எண்ணங்களும் வேறுபட்டு நிற்க..

முதல் முத்தம் இருவருக்குமிடையில் ஒரு தடுப்புச் சுவரை வளர்த்திருந்தது..

ஆனால் இத்தனை சங்கடங்களையும் உறுத்தல்களையும் தாண்டி.. தேம்பாவணி முத்தமிட்ட தன் உதடுகளை ஏதோ தித்திப்பை உணர்வதாய் அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டான் வருண்..

ஒரு பொண்ணு கிஸ் பண்ண வந்தா தள்ளி விடணும்.. இப்படி காட்டுமிராண்டி மாதிரி.. இதுதான் சாக்குனு.. கடிச்சு திங்கப்படாது..

அவ்வளவு.. காஞ்சி போயிருக்கியாடா நீ..

காஜி பயலாடா நீ..

முன்னால் வந்து நின்று கண்களை விரித்து கேள்வி கேட்ட மனசாட்சியை கொசு பேட்டால் அடித்து விரட்ட முயன்று கொண்டிருந்தான்..

நேற்றைய சம்பவத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு ஐயோ என்றானது..

நிதானம் தவறி கட்டுப்பாடுகளை இழந்து.. ஏற்கனவே அந்த உதட்டின் மீது கொள்ளை மோகம்.. வாய்ப்பு கிடைத்தால் விடுவானா என்ன..?

அவ்வப்போது உரசி கொண்ட பார்வையில் அவள் கீழ் உதடுகள் கொஞ்சம் தடித்து போயிருப்பதை பார்க்க முடிந்தது..

மேல் உதட்டுக்கும் இரக்கம் காட்டவில்லை அவன்..!

"பாவி பயலே.. வருண் நீயாடா இது..!" மனசாட்சி வேறு கூவியது..

"வரூண்..‌ வரூண்.. என்னடா பண்ணி வச்சிருக்க.. இதெல்லாம் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா உன் மான மரியாதை என்ன ஆவறது..!" நெஞ்சை நீவிக் கொண்டான்..

அவ்வப்போது முத்தமிட்ட மோகம் மனதைத் தென்றலாய் தொட்டு செல்ல நொந்து போனான்..

"அந்த லிப்ஸ்டிக் எங்க வச்சீங்க மாலினி கிட்ட குடுத்துட்டீங்களா..?" இறங்கும்போது கேட்டாள் தேம்பாவணி..

முதலில் திருதிருவென விழித்தவன்.. "எதுக்கு கேக்கற?" என்றான் கண்கள் சுருக்கி..

"வேணுமே..!" என்ற பிறகு பாக்கெட்டிலிருந்து அந்த லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க.. இப்போது தேம்பாவணி விழித்தாள்..

"அ.. அது.. அன்னைக்கு குடுக்க மறந்துட்டேன்.. தினமும் கொடுக்கணும்னு நினைச்சு எடுத்து பாக்கெட்ல வைப்பேன்.. ஆனா மறந்து போகுது.." ஸ்டியரிங்கில் முழங்கையை ஊன்றி கண்களை மூடியபடி நெற்றியை தேய்த்துக் கொண்டான்..

முன் கண்ணாடியில் தன் உதட்டை பார்த்து லிப்ஸ்டிக்கை பூசி கொண்டாள் தேம்பாவணி..

"இப்ப எதுக்காக இந்த லிப்ஸ்டிக்கை அள்ளி பூசிக்கற..!"

"அள்ளிப் பூசிக்கல லேசா தான் போட்டுக்கறேன்.." அவள் பதில் சொல்ல கண்ணாடியை பார்த்திருந்தவனுக்கு காரணம் புரிந்து போயிற்று..!

வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இதழின் இரு ஓரங்களில் வெட்டுப்பட்டு தடித்துப் போயிருந்தது..

அவன் தோளோடு தோள் இடித்து.. உதட்டு சாயம் சரியாக பரவ மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தேய்த்துக்கொள்ள.. லேசாக வாய் திறந்து கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"வாயில ஈ போகுது டாக்டர்.."

ஆங்..! என்று அவன் விழிக்க.. தேம்பாவணி என்னாச்சு என்று நிமிர்ந்து பார்த்தாள்‌.

பேசியது மனசாட்சி..

இறங்கபோனவளிடம் "லிப்ஸ்டிக்கை குடு" என்றான் கனத்த குரலில்..

தேம்பாவணி கண்கள் சுருக்கி பார்க்க..! இழுத்து மூச்சு விட்டவன்.. "ஐ அம் சாரி. இனிமே நீ இந்த மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கற அவசியம் வராது.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.." என்றான் கண்கள் மூடி திறந்து..

அந்த லிப்ஸ்டிக்கை அவன் கையில் தந்து விட்டு இறங்கப் போனவளிடம்

"சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு.. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.." என்று அவன் சொல்ல.. தலையசைத்துவிட்டு காரிலிருந்து இறங்கி போனாள் தேம்பாவணி..

இதழ் குவித்து ஊதி அந்த லிப்ஸ்டிக்கை ஏதோ ஒரு ஞாபகத்தில் திறந்து பார்த்தவன் அந்த வண்ண மெழுகில் கூட அவள் இதழ் வாசம் வீசுவதாய் உணர்ந்தான்..

"முத்திடுச்சு வருணே..!" மீண்டும் எங்கிருந்தோ ஒரு குரல்..

தொடரும்..
முத்தல மா இது தான் ஆரம்பமே இனிமேல் தான் இருக்கு ஆட்டமே 😁😁😁
ரெண்டு பேரும் மனசுல ஒன்ன வச்சுகிட்டு வெளி உலகுக்கு ஏத்த மாதிரி ஒரு வேஷம் போட்டு தன்னையே ஏமாத்திக்க பாக்குறாங்க இதுல இருந்து இவங்க எப்படி வெளி வர போறாங்களோ 🙄🙄🙄
வெண்மதி மா செம்ம ஷாட் போ இவள எல்லாம் இப்படி தான் மூக்கு உடைக்கனும் முடிஞ்சா வாயை முதலில் உடைக்கனும் 😡😡😡
 
Active member
Joined
May 3, 2025
Messages
64
ஆமா வருணே..... முத்திடுச்சுதான்...😅😅... என்ன பேச போரானோ தெரியலையே...
தேம்ஸ் இனி இவன பத்தி நினைக்க கூடாதுனு ஏதாவது பேசிடுவானோ....
But love கூட over flow ஆன grapes juice மாதிரி வெளிய பொங்கிரும்... பாக்கலாம் எது வரைக்கும் போகுதுன்னு...

வெண்மதி செல்லமே செம்ம டோஸ்... இன்னும் கொஞ்சம் சேர்த்து வெச்சு வாங்கிருக்கானும் இந்த திலோவ...

ஆமா திலோ உனக்கு எதுக்கு எரியுது...யாரு நீ... ஆக்டிங் பண்றது நீ... இதுல தேம்பா darling ah சொல்றயா நீ...
உன்னோட குட்டு வெளிய வரப்பா இருக்குடி உனக்கு....

இந்த குற்றவுணர்ச்சி from both sides சொன்ன விதம் super sana baby.... Realistic ah இருந்தது....
 
Member
Joined
Apr 30, 2025
Messages
43
அன்று காலையில் குட் மார்னிங் சொல்லி அவளை எழுப்பி விட வருண் தேம்பாவணியின் அறைக்கு வரவில்லை..

முத்தமிட்டு முத்தமிட்டு அதே மயக்கத்தோடு அவன் விலகி சென்றதுதான் தெரியும்.. அதன் பிறகு எப்போது வந்து கட்டிலில் விழுந்தாளோ..!

முத்த மயக்கம் பல வித கலர் கனவுகளோடு அவளைக் ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து சென்றிருந்தது.. அன்றைய நாள் விடிந்ததிலிருந்து இரவோடு சேர்த்து முடிந்த வரை வசந்தம் வீசும் பொன்னாளாய் அமைந்து போனது அவளுக்கு.. மறக்கமுடியாத நன்னாள்..

ஆனால் இதோ மறுநாள் காலையில் கைகளை இறுக கட்டிக் கொண்டு பலவித எண்ணங்களோடு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறாள்..

வருணை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை..! சொல்லப்போனால் அவன் முகம் பார்க்க முடியாத அளவிற்கு மனதிற்குள் ஏதோ ஒரு உறுத்தல்.. தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி..

உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு பரவசத்தில் அவனை முத்தமிட்டு பிரிந்து கலர் கனவுகளோடு உறங்கும் வரை எல்லாம் சரியாகத்தான் தோன்றியது..

இப்போது காலையில் அனைத்தும் அபத்தமாக தெரிகிறது..

நன்றி உணர்வை காட்ட இப்படித்தான் முத்தமிடுவாயா..! வருண் கல்யாணம் ஆனவர்.. உனக்கு நினைவிருக்கிறதா இல்லை தெரிந்தே மறந்து போனாயா..?

குச்சியை வைத்துக்கொண்டு டீச்சர் போல் மிரட்டிக் கொண்டிருக்கிறது ஒரு உருவம்..

சட்டையின் கழுத்து பகுதியை இறுகப்பற்றிக் கொண்டு நெஞ்சம் நடுங்க அமர்ந்திருக்கிறாள்..

உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பில் அந்த தருணத்தில் அவசரப்பட்டு முத்தமிடவில்லை.. நெடு நாட்களாய் நெஞ்சுக்குள் மெல்லிய வேராய் ஊடுருவி அடர்த்தியாய் வியாபித்து நிற்கும் ஒரு இனிமையான சலனம்..

கோப்பையில் வழிய வழிய ஊற்றிய திராட்சை ரசத்தை போல் மனம் நிரம்பி வழிந்த சந்தோஷத்தில்.. அந்த மெல்லிய சலனம் மெல்ல கசிந்து.. ஊற்றாய் பெருகி.. ஐயோ கடவுளே தப்பு தப்பு..

இதுல தப்ப என்ன இருக்கு..? வருண் டாக்டரை உனக்கு அவ்வளவு பிடிக்குமா..?

அவரைவிட உன்னை நல்லா வேற யார் பாத்துக்குவாங்க..!

இந்த உலகத்திலேயே உன் மேல அளவு கடந்து அன்பு செலுத்தின ஆம்பள அவர் ஒருத்தர் மட்டும் தானே..

அதுக்காக முத்தம் கொடுக்கலாமா..!

இந்த ஸ்பைடர் மேன் படத்துல ஹீரோயின் ஸ்பைடர்-மேனுக்கு நன்றியை வெளிப்படுத்தற விதமா முத்தம் தருவாளே..! அந்த மாதிரி..

அடச்சே..! அபத்தம்.. அது வெளிநாட்டு கலாச்சாரம்.. இங்க ஒருத்தருக்கு உதட்டோடு உதடு வைச்சு முத்தம் தரனும்னா ஒன்னு காதலனா இருக்கணும் இல்ல கணவனா இருக்கணும்.. வருண் யார் எனக்கு..!

அவர்தான் எனக்கு எல்லாமே..! அவர் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்..?

கண்களைத் திறந்து பார்த்தவளுக்கு எதிரே மயானம் போல் காட்சியளித்தது.. அவன் இல்லாத அந்த கற்பனை வாழ்க்கை..

"ஏய்.. குட்டி..! என்ன எழுந்து அப்படியே உட்கார்ந்துருக்க.. அம்மா சமையல் கட்டுல வேலையா இருக்காங்க.. நீ எழுந்துட்டியான்னு பார்க்க சொன்னாங்க.. காபி ஏதாவது குடிக்கறியா..?" படபடப்பான பேச்சோடு அந்த காலை நேரத்தில் பரபரப்பாக்கினாள் வெண்மதி..

"வெண்மதியை கண்டதும் இதுவரை தொற்றிக் கொண்டிருந்த இறுக்கம் மெல்ல வடிந்து போக.. மெல்லிதாய் புன்னகைத்து "இல்லக்கா வேண்டாம்..! நான் குளிக்க போகணும்.. காலேஜ்க்கு நேரமாச்சு.. நேத்து வேற லீவு போட்டுட்டேன் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா போய் நேத்து மிஸ் பண்ணின பாடத்தையெல்லாம் எழுதி வைக்கணும்.." சொல்லிக்கொண்டே தனது அலமாரியை திறந்து துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடியவளை கைப்பற்றி நிறுத்தினாள வெண்மதி..

"நேத்து சந்தோஷமா இருந்தியா..?" என்ற கேள்வியில் தேம்பாவணி திடுக்கிட்டு விழிக்க..

"இல்ல.. அம்மா உன்னை சந்தோஷமா வச்சிருந்தாங்களா..?" என்றதும் இதமாய் புன்னகைத்து வெண்மதியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் தேம்பாவணி..

சந்தோஷத்தின் அறிகுறியாம் அது..

முத்தம்..

வெண்மதிக்கு கன்னத்திலும்.. வருணுக்கு ஆவேசமாய் உதட்டிலும்.. ‌‌

ஆங்.. கன்னத்தை தொட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி திரும்பி அங்கிருந்து நகர்ந்த வேலையில் திறந்திருந்த டிராயரை கண்டு அதை மூடுவதற்காக பக்கத்தில் வந்தாள்..

டிராயர் முழுக்க கலர் கலராய் அவள் ரகசியமாய் சேமித்து வைத்திருந்த பிள்ளையார் சிலைகள்.. விரலளவில் ஆரம்பித்து கையளவு வரை 20க்கும் மேற்பட்ட குட்டி குட்டியான பொம்மைகள்.. இதில் வெண்மதி தினமும் பூஜையறையில் வைக்கும் கலர் கணபதிகளும் அடங்கினர்..

"அடிப்பாவி.. பிள்ளையார் மேல உனக்கு இப்படி ஒரு கிரஷா.." கன்னத்தில் கை வைத்து ஒவ்வொரு சிலையையும் எடுத்து ஆசையோடு பார்த்த பிறகு இருந்த இடத்திலேயே அதை வைத்து ட்ராயரை மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நீ வெளியே வந்த நேரத்தில் எதிரே திலோத்தமா வெண்மதியை தீயாக முறைத்துக் கொண்டு நிற்க..

"ஆத்தி இவளை மறந்து போயிட்டேனே..! என்ன இப்படி முறைக்கறா.. சமாளிப்போம்.." என்று குரலை செருமி கொண்டு..

"என்ன திலோத்தமா காலையிலேயே பாசமா பார்க்கற. என்ன விஷயம்..? என அசடு வழிந்து சிரிக்க..

"ரொம்ப நடிக்க வேண்டாம்..? முந்தாநாள் ராத்திரி நான் அவ்வளவு எடுத்து சொல்லியும் எனக்கு சாதகமா பேசற மாதிரி சீன் போட்டுட்டு அந்தப் பக்கம் போய் இந்த சீப்பான டிராமாவுக்கு நீங்களும் ஒத்துழைச்சிருக்கீங்க.. உங்களுக்கு அந்த பொண்ணும் உங்க அம்மாவும் சேர்ந்து பண்ற கேலிக்கூத்தெல்லாம் சரின்னு பட்டதுன்னா வெளிப்படையா சொல்லி இருக்கலாமே.. எதுக்காக இப்படி ரெட்டை வேஷம் போட்டு என்கிட்ட ஒரு மாதிரியும் அங்க ஒரு மாதிரியும் நடிக்கணும்.. இது உங்களுக்கே கேவலமா தோணல..!"

"ஏய் நிறுத்து..! என்ன நீ.. வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டே போற.. ஒரு நாத்தனார்ன்னு மரியாதை இல்லை..? முதல்ல உன்னை விட வயசுல பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு கத்துக்க.. வாழ வந்த இடத்துல எப்படி அடக்கமா பேசணும் மரியாதையா நடந்துக்கணும்னு உனக்கே தெரியல.. அந்த சின்ன பொண்ண குறை சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குனு நினைக்கற.. என்கிட்டயே இப்படி வாய் பேசுறவ அந்த பொண்ணு கிட்ட போய் எடக்கு மடக்கா ஏதாவது பேசி வச்சு அவ மனசை புண்படுத்திட்டா.. அதான் உன்னால எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டினேன்.. இதுல எதுவும் தப்பு இருக்கிறதா எனக்கு படல.."

திலோத்தமா வாயடைத்துப் போனாள்.. ஒரு கணம் கோபத்தில் அதிகமாக பேசிவிட்டதையும் அந்த வீட்டில் வெண்மதிக்கு இருக்கும் செல்வாக்கையும் உணர்ந்து கொண்டவளாய்.. சட்டென சுதாரித்து..

"இங்க பாருங்க நான் ஒன்னும் உங்கள மரியாதை குறைவா பேசல.. என் நாத்தனாருங்கற உரிமைலதான் இப்படி பேசறேன்.. அப்ப இது என் வீடு இல்லையா நான் எதையும் தட்டிக் கேட்க கூடாதா..! யாரோ ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்து ஆட்டம் போட எல்லாருமா சேர்ந்து அனுமதிக்கிறீங்களே அது தான் ஏன்னு எனக்கு புரியல.. இதை தட்டி கேட்டால் நான் கெட்டவ.. அப்படித்தானே..?

"இன்னைக்கு அம்மா வேணும்.. அக்கா வேணும்னு உரிமை கொண்டாடி.. ஒரு நாள் மொத்தமா எல்லாத்தையும் நம்ம கிட்டருந்து பறிச்சிக்கத்தான் போறா.. நிச்சயமா ஏதோ ஒன்னு தப்பா நடக்கத்தான் போகுது.. அப்ப ஐயோ அம்மான்னு அழுது பிரயோஜனம் இல்ல.."

"என்ன உளர்ற நீ..? எதுவானாலும் உடைச்சு பேசு.."

"சரி.. நான் மறச்சு பேச விரும்பல வெளிப்படையா சொல்றேன்.. உங்க தம்பி அந்த பொண்ணுகூட ரொம்ப நெருக்கமா பழகறார்.. இது உங்களுக்கு தெரியலையா.. இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா..?" தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினாள் திலோத்தமா.. தேம்பாவணியை வீட்டை விட்டு விரட்டியடிக்க அவளுக்கு தெரிந்த கடைசி வழி..

வெண்மதி திகைத்துப் போனவளாய் அவளை பார்த்தாள்..

"மனசுல இவ்வளவு வச்சிருக்கறவ இதை வெளிப்படையா போய் உன் புருஷன் கிட்டயே கேட்க வேண்டியதுதானே..! தேவையில்லாம எதுக்காக என்கிட்ட வந்து சண்டை போட்டுட்டு நிக்கற.. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளியை நல்லா கவனிச்சுக்க வேண்டியது எங்க பொறுப்பு அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.. மத்தபடி நீ ஏதாவது கேள்வி கேட்கணும்னா உன் புருஷங்கிட்ட போய் கேளு.. என்கிட்ட வந்து எகிறாதே..! மறுபடி இந்த மாதிரி மரியாதை குறைவா என்கிட்ட வந்து பேசினா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.." முகத்தை திருப்பிக் கொண்டு வெண்மதி அங்கிருந்து சென்றுவிட..

எச்சில் விழுங்கி நின்றாள் திலோத்தம்மா..

"அப்படியா?" என கேட்டு ஊரைக் கூட்டி ஒரு பஞ்சாயத்து வைக்கும் என்று பார்த்தால் இந்த சனியன் எனக்கென்ன வந்தது.. இது உன் பிரச்சனை.. உன் புருஷன்கிட்ட போய் கேளு என்கிறதே..!"

அவனிடம் போய் இது பற்றி கேட்பதாவது..?

மதித்து பதில் சொல்வானா.. நின்று இதைப் பற்றி பேசுவானா..!

ஒரே ஒரு பார்வை தான்.. இல்லையேல் உனக்கது தேவையில்லாத விஷயம்.. போய் உன் வேலையை பாரு.. என்றொரு வார்த்தை.. அதை தாண்டி பேச்சை வளர்க்க முடியாதே.. தவிர தேம்பாவணியோடு நெருங்கி பழகுவதை பற்றியும் அவர்களுக்கிடையே உள்ள உறவை பற்றியும் விசாரிக்க தனக்கென்ன உரிமை இருக்கிறது..

ஆனாலும் இந்த தேம்பாவணியை கொஞ்சமும் பிடிக்கவில்லை.. நடிப்பு நாடகம் என்பதை தாண்டி இதுவரை வருண் மனைவியாக ஒற்றை மகாராணியாக செல்வாக்கோடு வலம் வந்தவளுக்கு இப்போது இந்த தேம்பாவணி இடைஞ்சலாக வந்து நிற்கிறாள்.. அனைவரது கவனமும் இப்போது அவள் மீது குவிந்து நிற்கிறது..

குழந்தையாம்.. அழகியாம்.. வருண் கூட வைத்த கண் வாங்காமல் அவளைத்தானே பார்க்கிறான்.. இருவரும் ஜோடியாக வலம் வருகையில் காரணமில்லாமல் வயிறு பற்றி எரிகிறது.. வயது வித்தியாசம் இல்லாமல் தேம்பாவணியின் மீது பொறாமை..

வருண்.. தேம்பாவணி இருவரும் காலை உணவு வேளையில் கூட ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கி மிக ஆர்வமாக தட்டிலிருந்த உணவை உண்பதாக காட்டிக்கொண்டனர்..

தேம்பாவணி தனது புத்தக பையை எடுத்து வரும் வரை தந்தையோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான் வருண்..

ஓரிரு நொடிகள் அவள் மீது பார்வை பதிந்தாலும் கவனமாக விலக்கிக் கொண்டு அவளைத் தவிர்ப்பதாக காட்டிக்கொண்டான்..

கார் ஓட்டும்போதும் கூட அதே மவுனம்..!

அவன் முகத்தில் தெரிந்த அந்த இறுக்கத்திலும்.. இறுதிவரை நீடித்த அந்த மௌனத்திலும் குழம்பியும் பயந்து போனாள் தேம்பாவணி..

அவள் எந்த மாதிரியான மனநிலையில் தவிக்கிறாளோ அதே நிலைதான் வருணுக்கும்..

குற்ற உணர்ச்சி..!

வயதில் சிறிய பெண்ணுடன் தான் இப்படி நடந்திருக்கக்கூடாது.. அப்படி என்ன மனதை கட்டுப்படுத்த முடியாத சபலம்.. ஒரு பெண்ணுக்கு கணவனாக என்னை அறிந்திருக்கும் பட்சத்தில் தேம்பாவணி என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்..! அவள் விபரம் அறியாத ஒரு சிறு பெண்.. நீ அனுபவம் வாய்ந்த ஒரு மனநல மருத்துவன்.. எந்த இடத்தில் கட்டுப்பாட்டை இழந்தாய்..! எங்கே தடம் புரண்டாய்.. ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி தன்னைத்தானே கடிந்து கொண்டான்..

தேம்பாவணியின் முகம் பார்க்க முடியவில்லை..

உனக்கு தேம்பாவணி ரொம்ப பிடிச்சிருக்குடா முதல்ல அதை ஒத்துக்கோ..!

ஒத்துக்கறேன் ஆனா அது சரி வராது.. அவ பாவம் சின்ன பொண்ணு.. அவளுக்கு எந்த விதத்திலும் நான் பொருத்தமானவன் இல்ல..! அவளுக்கு இப்பதான் வயசு 19.. எனக்கு 38.. இன்னும் ரெண்டு வருஷம் போனா 40.. அரைக் கிழவன்.. வாலிபத்தின் வாயிலை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்.. வாலிபம் முடிந்து முதுமையின் ஆரம்பத்தை நோக்கி காத்திருக்கும் என்னை திருமணம் செய்து கொள்வதெல்லாம் நடக்கும் காரியமல்லவே..!

முதுமையா..! யூ லுக்கிங் சோ யங்.. வருண் எப்போதிலிருந்து உனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் வர ஆரம்பித்தது.. உன் மனதை கூட இளமையாத்தானே வைத்திருக்க..

அதெல்லாம் எனக்கு மட்டும்தான்.. இன்னொரு பொண்ணோட வாழ்க்கையின் வரும்போது நான் பல கோணங்கள்லருந்து யோசிச்சு பார்க்க வேண்டியது அவசியமா போகுது..

இப்படித்தான் இருவரின் எண்ணங்களும் வேறுபட்டு நிற்க..

முதல் முத்தம் இருவருக்குமிடையில் ஒரு தடுப்புச் சுவரை வளர்த்திருந்தது..

ஆனால் இத்தனை சங்கடங்களையும் உறுத்தல்களையும் தாண்டி.. தேம்பாவணி முத்தமிட்ட தன் உதடுகளை ஏதோ தித்திப்பை உணர்வதாய் அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டான் வருண்..

ஒரு பொண்ணு கிஸ் பண்ண வந்தா தள்ளி விடணும்.. இப்படி காட்டுமிராண்டி மாதிரி.. இதுதான் சாக்குனு.. கடிச்சு திங்கப்படாது..

அவ்வளவு.. காஞ்சி போயிருக்கியாடா நீ..

காஜி பயலாடா நீ..

முன்னால் வந்து நின்று கண்களை விரித்து கேள்வி கேட்ட மனசாட்சியை கொசு பேட்டால் அடித்து விரட்ட முயன்று கொண்டிருந்தான்..

நேற்றைய சம்பவத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு ஐயோ என்றானது..

நிதானம் தவறி கட்டுப்பாடுகளை இழந்து.. ஏற்கனவே அந்த உதட்டின் மீது கொள்ளை மோகம்.. வாய்ப்பு கிடைத்தால் விடுவானா என்ன..?

அவ்வப்போது உரசி கொண்ட பார்வையில் அவள் கீழ் உதடுகள் கொஞ்சம் தடித்து போயிருப்பதை பார்க்க முடிந்தது..

மேல் உதட்டுக்கும் இரக்கம் காட்டவில்லை அவன்..!

"பாவி பயலே.. வருண் நீயாடா இது..!" மனசாட்சி வேறு கூவியது..

"வரூண்..‌ வரூண்.. என்னடா பண்ணி வச்சிருக்க.. இதெல்லாம் வெளி உலகத்துக்கு தெரிஞ்சா உன் மான மரியாதை என்ன ஆவறது..!" நெஞ்சை நீவிக் கொண்டான்..

அவ்வப்போது முத்தமிட்ட மோகம் மனதைத் தென்றலாய் தொட்டு செல்ல நொந்து போனான்..

"அந்த லிப்ஸ்டிக் எங்க வச்சீங்க மாலினி கிட்ட குடுத்துட்டீங்களா..?" இறங்கும்போது கேட்டாள் தேம்பாவணி..

முதலில் திருதிருவென விழித்தவன்.. "எதுக்கு கேக்கற?" என்றான் கண்கள் சுருக்கி..

"வேணுமே..!" என்ற பிறகு பாக்கெட்டிலிருந்து அந்த லிப்ஸ்டிக்கை எடுத்துக் கொடுக்க.. இப்போது தேம்பாவணி விழித்தாள்..

"அ.. அது.. அன்னைக்கு குடுக்க மறந்துட்டேன்.. தினமும் கொடுக்கணும்னு நினைச்சு எடுத்து பாக்கெட்ல வைப்பேன்.. ஆனா மறந்து போகுது.." ஸ்டியரிங்கில் முழங்கையை ஊன்றி கண்களை மூடியபடி நெற்றியை தேய்த்துக் கொண்டான்..

முன் கண்ணாடியில் தன் உதட்டை பார்த்து லிப்ஸ்டிக்கை பூசி கொண்டாள் தேம்பாவணி..

"இப்ப எதுக்காக இந்த லிப்ஸ்டிக்கை அள்ளி பூசிக்கற..!"

"அள்ளிப் பூசிக்கல லேசா தான் போட்டுக்கறேன்.." அவள் பதில் சொல்ல கண்ணாடியை பார்த்திருந்தவனுக்கு காரணம் புரிந்து போயிற்று..!

வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இதழின் இரு ஓரங்களில் வெட்டுப்பட்டு தடித்துப் போயிருந்தது..

அவன் தோளோடு தோள் இடித்து.. உதட்டு சாயம் சரியாக பரவ மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தேய்த்துக்கொள்ள.. லேசாக வாய் திறந்து கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..

"வாயில ஈ போகுது டாக்டர்.."

ஆங்..! என்று அவன் விழிக்க.. தேம்பாவணி என்னாச்சு என்று நிமிர்ந்து பார்த்தாள்‌.

பேசியது மனசாட்சி..

இறங்கபோனவளிடம் "லிப்ஸ்டிக்கை குடு" என்றான் கனத்த குரலில்..

தேம்பாவணி கண்கள் சுருக்கி பார்க்க..! இழுத்து மூச்சு விட்டவன்.. "ஐ அம் சாரி. இனிமே நீ இந்த மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கற அவசியம் வராது.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.." என்றான் கண்கள் மூடி திறந்து..

அந்த லிப்ஸ்டிக்கை அவன் கையில் தந்து விட்டு இறங்கப் போனவளிடம்

"சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துடு.. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.." என்று அவன் சொல்ல.. தலையசைத்துவிட்டு காரிலிருந்து இறங்கி போனாள் தேம்பாவணி..

இதழ் குவித்து ஊதி அந்த லிப்ஸ்டிக்கை ஏதோ ஒரு ஞாபகத்தில் திறந்து பார்த்தவன் அந்த வண்ண மெழுகில் கூட அவள் இதழ் வாசம் வீசுவதாய் உணர்ந்தான்..

"முத்திடுச்சு வருணே..!" மீண்டும் எங்கிருந்தோ ஒரு குரல்..

தொடரும்..
Iyooo..... Iyooooooo...... Nalla irruke evangha act pandrathu..... 🤪🤪🤪.... Semma...semma nose cutpa thiloku..... 😂😂😂.... Venmathi.... 👌👌👌👌👌..... Sariyana nathanar ketthu kattita...... Sana sis 💜💜💜💜...... Ud 👌👌👌👌👌......
 
New member
Joined
May 19, 2025
Messages
12
நிதானம் தவறி கட்டுப்பாடுகளை இழந்து.. ஏற்கனவே அந்த உதட்டின் மீது கொள்ளை மோகம்.. வாய்ப்பு கிடைத்தால் விடுவானா என்ன..?
டாக்டரே இது தான் கோ வித் ப்ளோவுக்கு அர்த்தமா 😂😂😂😂😂
 
Member
Joined
Jul 19, 2025
Messages
28
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jun 26, 2025
Messages
13
இன்னேக்கி ஃபுல் ஸ்கோரிங் மனசாட்சி தான்!! 🤣🤣🤣
முத்திடுச்சு வருணே 🤣🤣🤣
தேம்ஸ்கூட கொஞ்சம் தெளிவாயிருக்கு.டாக்டர் தான் ரொம்ப பொளம்புறாரு
ஈவினிங் வேற சீக்கிரம் வர சொல்லியிருக்கானே.புரிய வைக்கிறேன்,விலகிபோறேன்
பாடம் எடுக்குறேனு தேம்ஸ் மனச ஒடச்சுவிட்டுறாதேபா சாமி..
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
122
வருணே இது ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப முத்தி போச்சு.....🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭இனி இருவரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது......❤️❤️❤️❤️❤️
மதிம்மா நீ தான் சரியான ஆள் அந்த திலோ வை வீட்டை விட்டு வெளியற்ற....👍👍👍.....
திலோ நீ நினைப்பது கண்டிப்பாக நடக்காது.....🤨🤨🤨🤨🤨
 
Member
Joined
Jul 16, 2025
Messages
45
என்னப்பா பண்ணி வச்சிருக்கிற வருணு 😂.. லிப்ஸ்டிக் போடற அளவுக்கு சேதாரம் ம்ம்... வெண்மதி நீ தான் செம்ம தூள் 🫶🏻...
 
New member
Joined
Jun 27, 2025
Messages
3

இது என்னடா மருத்துவனுக்கு வந்த சோதனை..... வருண் சார் உங்க நிலைமை ரொம்பா பாவம்.... உண்மையான லவ்கு எப்படி ஜாதி மதம் அழகு முக்கியம் இல்லையோ அதே மாதிரி தான் வயசும் மனசுக்கு உண்மையா புடிச்ச போதும்....
 
New member
Joined
Feb 20, 2025
Messages
7
முத்தல மா இது தான் ஆரம்பமே இனிமேல் தான் இருக்கு ஆட்டமே 😁😁😁
ரெண்டு பேரும் மனசுல ஒன்ன வச்சுகிட்டு வெளி உலகுக்கு ஏத்த மாதிரி ஒரு வேஷம் போட்டு தன்னையே ஏமாத்திக்க பாக்குறாங்க இதுல இருந்து இவங்க எப்படி வெளி வர போறாங்களோ 🙄🙄🙄
வெண்மதி மா செம்ம ஷாட் போ இவள எல்லாம் இப்படி தான் மூக்கு உடைக்கனும் முடிஞ்சா வாயை முதலில் உடைக்கனும் 😡😡😡
Super♥️♥️
 
New member
Joined
Feb 19, 2023
Messages
2

முத்திடுச்சு வருணே ------- it's not a sentence. It's a haiku...... Just love it 😍
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
40

🥰👌
 
New member
Joined
Jul 28, 2025
Messages
19
கவுன்சிலிங் கொடுக்கற டாக்டருக்கே இப்ப அது தேவைபடுது போலவே... நேரா சூர்யா கிட்ட ஓடு... தெளிவாக்கி அனுப்புவான்...
 
Top