- Joined
- Jan 10, 2023
- Messages
- 86
- Thread Author
- #1
அன்றைய நாள் முழுக்க வருண் பற்றிய நினைவுகளோடு உழன்று கொண்டிருந்தாள் தேம்பாவணி..
அதிலும் அந்த முத்தம் நினைவடுக்குகளில் இனிமையாய் ஒட்டிக்கொள்ள அவளால் ஒரு கணம் கூட மறக்க முடியவில்லை.. நினைக்கும் போதெல்லாம் ஒரு ஏகாந்த மயக்கம்.. பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம் போல் உதட்டிலும் மனதிலும் விறுவிறுக்கும் தித்திப்பு..
எந்த அளவிற்கு ஒரு பொருளை மறக்க முயற்சி செய்கிறோமோ அதே அளவு அந்த பொருளை மென்மேலும் ஈர்த்துக் கொள்கிறோமாம்.. இது பிரபஞ்ச விதி..
இனி வருணிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்.. விலகலை கடைபிடிக்க வேண்டும் அவனை மரியாதையாக ஒரு மருத்துவன் அந்தஸ்தோடு மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கொள்கை பட்டியலை ஒன்று, இரண்டு, மூன்றென வரிசைப்படுத்திக் கொண்டிருக்க.. இன்னொரு பக்கமோ.. ஆவேசத்துடன் ஆண்மை திணவெடுக்க அவன் தந்த அந்த நீண்ட முத்தம் அவளின் சின்னஞ்சிறு மனதை மரங்கொத்தியாய் குத்தி பதம் பார்த்தது..
"முத்தம் கொடுத்தீங்களா..?" டிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொண்டே வருண் கேட்க.. எதிரே அமர்ந்திருந்த வயது முதிர்ந்த பெரியவர் திகைத்து விழித்தார்..
"டாக்டர்..!"
அதன் பிறகுதான் நிமிர்ந்து பார்த்து தான் சொன்னதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டவனாய் ஒரு ஜெர்க்குடன் "இந்த பொடிச்சி பார்த்த வேலையில.." என்று தனக்குள் பற்களை கடித்தவன்..
குரலை செருமிக் கொண்டு..
"ஐ மீன் லாஸ்ட் டைம் பிரிஸ்கிரைப் பண்ணின மெடிசன்ஸ் போட்டீங்களானு கேட்க வந்தேன்.." என்றான்..
"ஆமா டாக்டர் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டுட்டு தான் வரேன்.. ஆனா முத்தம் கொடுத்தீங்களான்னு கேட்டீங்களே யாருக்கு..!" அவரும் விடுவதாய் இல்லை..
"அ..து.. உங்க மனைவிக்கு தான்.. அடிக்கடி அன்பா அவங்களுக்கொரு முத்தம் கொடுங்க.. மனசு ரிலாக்ஸ் ஆகும்.. இந்த மாதிரி டென்ஷன் பிரஷர் இருக்காது..!"
"அது முடியாதே டாக்டர்.."
"ஏன்..!"
"அவதான் போன வருஷமே செத்துப் போயிட்டாளே.. கனவுல பேயா வந்து பயமுறுத்தறா.. டேய் மாடசாமி எப்படா என்கூட வரப்போறன்னு முன்னாடி வந்து நின்னு கண்ண உருட்டறான்னு பயந்து போய்தான உங்ககிட்ட ஓடி வந்தேன்.."
கண்களை மூடி நெற்றியில் கை வைத்துக் கொண்டான் வருண்..
"ஏன் டாக்டர் என் பொண்டாட்டி உங்களையும் பயமுறுத்துறாளா..?" பெரியவர் வருணை பார்வையால் சுரண்டினார்..
"என்னது.." என்று விழித்தவன்.. "உங்க மனைவி மேல அளவுக்கு மீறி பாசம் வச்சிட்டீங்க போலிருக்கு. அந்த நினைவுகளோட தாக்கம்தான் எங்க திரும்பினாலும் அவங்க உங்க கண்ணுக்கு தெரியிற மாதிரி தோணுது.. இது பேயும் இல்ல பிசாசும் இல்லை.. மெண்டலி கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகி இருக்கீங்க.. மெடிசன்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.."
"முத்தம் யாருக்கு தர்றது டாக்டர்.."
தாத்தா கிளுகிளுப்பாக கேட்க
"வேணும்னா எனக்கு தரீங்களா..?" வருண் பொறுமை இழந்து கொஞ்சம் ஹை பிச்சில் பதில் சொன்னான்..
"ஆம்பள டாக்டரா போய்ட்டீங்களே..?" என்று சிரித்துக் கொண்டே எழுந்தவர் "டாக்டர் நல்லா கலகலன்னுதான் பேசுறார்.. இவர் பேச்சிலேயே பாதி நோய் குணமாகிடும் போலிருக்கு.. பையன் சரியான இடத்துக்கு தான் அனுப்பியிருக்கான்.." என்றபடியே அங்கிருந்து வெளியேறினார்.. தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் வருண்..
காலையில் மாலினியிடம் கூட மொத்தமாக எத்தனை பேஷன்ட் வெயிட் பண்றாங்க.. என்று கேட்பதற்கு பதில் முத்தமா எத்தனை பேஷன் வெயிட் பண்றாங்க என்று கேட்டு மாலினி "டாக்டர்" என்று அலறி.. அவன் அதிர்ந்து..
"அது வந்து பயப்படாதம்மா.. முத்தே முத்தே முத்தம்மா..! பாட்டு பாடிட்டு இருந்தேனா.. அதுக்குள்ள நீ லைன் பிக் பண்ணிட்டே.. சரி சொல்லு.. எத்தனை பேஷன் வெயிட் பண்றாங்க" என்று பேச்சை மாற்றுவதற்குள் ஒரு வழியாகி போனான்..
"எல்லாம் இந்த தேம்பாவணியால வந்த வினை.. இனிமே அந்த பக்கம் போவே நீ.. ஏண்டா வருண் கல்யாணம் வேண்டாம் பொம்பளைங்க சகவாசம் வேண்டவே வேண்டாம்ன்னு தானே வீட்டுக்கு ஒருத்தியை கூட்டிட்டு வந்து பொண்டாட்டி ரோல்ல நடிக்க வச்சிருக்க.. அதையும் தாண்டி சபல கேஸ் மாதிரி நேத்து எதுக்குடா அந்த பொண்ணு மேல கடுவன் பூனை மாதிரி பாஞ்சு பிராண்டி வச்சிருக்க.. காமக்கொடூரா..!"
மனசாட்சி கண்டமேனிக்கு வசைப்பாடியது..
மாலையில் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஆஜராகி காரை விட்டு வெளியே வந்து காத்து வாங்குகிறேன் பேர்வழியென்று போக வரும் பெண்களின் ரசனை பார்வையையும் இலவச இணைப்பாக வாங்கிக் கொண்டிருந்தான் வருண்.
ஆடி அசைந்து மெதுவாகத்தான் வந்தாள் தேம்பாவணி.. என்னவோ அவன் முகம் பார்க்க தயக்கம்..
பாக்காத தேம்பா..! பாக்கவே கூடாது.. என்று தலை குனிந்த படி நடக்க..
இந்த வீணாய் போன தோழிகள் சும்மா இருக்காமல்..
திருட்டுத்தனமாய் டாக்டரை ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொண்டு..
"அவரோட தலைமுடி எப்படி காத்துல டான்ஸ் ஆடுது பாரேன்.. இந்த மாதிரி பலமா காத்தடிக்கும் போது தலைமுடியெல்லாம் பின்னாடி வழிச்சுட்டு போய் எப்படிப்பட்ட ஆம்பளைக்கும் முன் நெத்தியில சொட்ட தெரியும்.. ஆனா இவருக்கு மட்டும் எப்படி மலை வளைஞ்சு மேல போனாப்புல கொள்ளுன்னு முடி வளர்ந்திருக்கு.."
"ஹேய் தேம்பா அவரோட கண்ண பக்கத்துல நேருக்கு நேரா பார்த்திருக்கியாடி..!"
"என்னமோ இந்த சுமதி ரொம்ப க்யூட் ஐஸ்னு சொல்றா.. நான் பாக்கவே இல்லையே.. அன்னைக்கு பாடம் எடுக்கும் போது கூட அவர் வாயை தான் பாத்துட்டு இருந்தேன்.."
"எஸ் பியூட்டிஃபுல் லிப்ஸ்.. ஒரு மாதிரி ஆண்மைக்குரிய அழுத்தமான உதடுகள்.."
"உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா? ஏன்டி இப்படி தப்பு தப்பா பேசுறீங்க.."
"இது என்னடி வம்பா போச்சு.. ஒரு ஆம்பளையை சைட் அடிக்கிறது தப்பா.. அழகை ரசிக்கலாம் ஆனால் சொந்தம் கொண்டாட நினைக்க கூடாது அதுதான் தப்பு.."
இயல்பாக இருக்க வேண்டுமென்று முயற்சித்தவளை திரி தூண்டி விடுவதாய் தோழிகளின் கலகல பேச்சில் அவ்வப்போது சற்று தொலைவில் தெரிந்த வருணை திருட்டுத்தனமாய் நிமிர்ந்து பார்த்த கண்கள்..
அட ஆமால.. அடர்த்தியான கேசம்..
ஷார்ப்பான கண்கள்..
கொஞ்சம் தடிமனான எதையும் இறுக பிடித்துக் கொள்ள உதடுகள்.. என்று ஒவ்வொன்றையும் ரசனையோடு உறுதி செய்து கொண்டது..
பாதி தூரம் தலை குனிந்தபடி நடக்க மீதி தூரம் தோழிகளின் பேச்சிற்கேற்ப கண்ணிமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டே நடந்தாள்..
அவளோடு வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து செல்ல.. தன்னிடம் வந்தவளை கண்டு இயல்பாய் புன்னகைத்தான் வருண்..
தேம்பாவணியால் அப்படி சிரிக்க முடியவில்லை..
"போகலாமா..!" என்று இருவருமாக காரில் ஏறிக்கொண்டனர்..
"கொஞ்சம் ஸ்ட்ரெஸ்சா இருக்கு ஏதாவது பிளேலிஸ்ட் ஆன் பண்ணுங்களேன்.." அவள் சொன்னதும் காரின் பிளேயரை உயர்ப்பித்தான்..
ஏதோ ஒரு எஃப் எம் இல்..
முத்தம் தர ஏத்த இடம்
ஹய் ஹய்
முகத்துல எந்த இடம்
ஹோய் ஹோய்
இப்போதே சொல்லடி பெண் பூவே
எல்லாமே நல்ல இடம்
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு அவசரமாக சேனலை மாற்ற விரல்களைப் பின்னி பிறகு இருவருமே விலகி.. இறுதியில் வருண் அடுத்த சேனலை மாற்றினான்.
ஆஹா கூசுது முத்தம் முத்தம்…
ஆழகா இருக்குது முத்தம் முத்தம்…
வயச குறைக்குது முத்தம் முத்தம்…
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம்…
தேம்பாவணிக்கு உள்ளுக்குள் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.. வருண் அதற்கு நேர் மாறாக சிடுசிடுவென்று இருந்தான்..
மீண்டும் சேனலை மாற்ற..
புத்தம் புதியதடா கொடுத்த முத்தம் முத்தம்
அய்யோ உதடுகளில் அஹிம்சை யுத்தம்
கிளுகிளுப்பான பாடலில் வருண் திரும்பி அவளை முறைத்தான்..
"நா.. நான் ஒன்னும் பண்ணல.. பாட்டு அப்படி வருது.. நான் என்ன செய்யறது.." அப்பாவியாக பார்த்தாள் தேம்பா..
"ஆஃப் பண்ணி போடு..!" என்றவன் காரை ஓரங்கட்டி நிறுத்தினான்..
"வீட்டுக்கு போன பிறகு உன்கிட்ட வெளிப்படையா எதையும் பேச முடியாது.. அதனால இங்கேயே சொல்லிடறேன்.." என்று குரலை செருமிக் கொண்டு ஆரம்பித்தான்..
"இங்க பாரு நேத்து நடந்த விஷயத்தை நாம ரெண்டு பேருமே மறந்துடுவோம்.. அதுதான் உனக்கும் எனக்கும் நல்லது.. என்ன நான் சொல்றது புரிஞ்சுதா..?" வருண் கேட்க.. தேம்பாவணி யோசனையுடன் புரிந்தது என தலையசைத்தாள்..
"நீ.. நீங்க என்னை தப்பா நினைக்கலையே வருண் சார்.."
"இல்ல.. தப்பா எடுத்துக்கல இருந்தாலும் நீ அப்படி செஞ்சிருக்க கூடாது.. இனிமே செய்யாதே.."
"என்னது.. சரி நான் தப்பு செஞ்சிட்டேன்னு ஒத்துக்கறேன் நீங்க என்னை விலக்கி தள்ளிவிட்டு இருக்கலாம் இல்ல.. எதுக்காக என்னை அக்செப்ட் பண்ணிக்கிட்டீங்க.. அத்தோடு நிக்காம டீப் கிஸ் பண்ணி என் உதட்டை கடிச்சு வச்சு.."
"போதும் போதும் நிறுத்து.."
"இல்ல எனக்கு நியாயம் வேணும்.. எல்லா தப்பையும் என் மேல சுமத்தறது சரியில்ல.."
"இங்க பாரு.. நான் ஒரு ஆம்பள.. இயல்பாவே ஒரு ஆம்பளைக்குள்ள உணர்ச்சிகள் அதிகமா இருக்கும்.. ஒரு பொண்ணு பக்கத்துல வந்து முத்தம் கொடுக்கும்போது எந்த ஒரு ஆம்பளையும் வேண்டாம்னு சொல்ல மாட்டான்.. அப்படியெல்லாம் பிடிச்சு தள்ளி விடறது பளார்னு அறையறது இதெல்லாம் சினிமாவுல தான் நடக்கும்.. ரியல் லைஃப்ல இந்த மாதிரி சான்ஸ் கிடைக்காதான்னு ஒவ்வொருத்தனும் ஏங்கிக்கிட்டு இருக்கான்.. எனக்கு கிடைச்சது யூஸ் பண்ணிக்கிட்டேன்.."
வேண்டுமென்றே தன் மீதொரு மோசமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதற்காக இப்படி மடத்தனமாக பேசினான் வருண்.. அப்படியாவது அவள் தன்னிடமிருந்து தள்ளி நிற்கட்டுமே என்ற எண்ணம்..
"உண்மையாத்தான் சொல்றீங்களா..! என் இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா அவ உங்களுக்கு முத்தம் தந்திருந்தா அதையும் அக்செப்ட் பண்ணி இருப்பீங்களா..?"
"கண்டிப்பா.. அந்த பொண்ணு உன்ன மாதிரி அழகா இருந்திருந்தா அவளே இப்படி ஆஃபர் கொடுத்தா கண்டிப்பா அக்சப்ட் பண்ணுவேன்.. ஆனா பிரச்சனை இப்ப இது இல்ல.. நீ என்னோட பேஷன்ட்.. நம்ம உறவு அதுக்குள்ள நின்னுட்டா நல்லா இருக்கும்.. அதைத் தாண்டி என்னை நெருங்க நினைக்காதே.. அது உனக்குதான் ஆபத்து.. நான் அவ்வளவு நல்லவன் இல்லை.. ஏதோ புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டேன்.. இனியாவது என் வைஃப்க்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கறேன்.. அதுக்கு நீயும் கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணனும் ப்ளீஸ்.."
தேம்பாவணியின் முகம் கருத்து போனது.. ஆனாலும் இதுதான் நிதர்சனம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.. என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள்..
"முந்தாநாள் வரைக்கும் நம்ம உறவு ஆரோக்கியமாத்தானே இருந்தது.. ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்.. ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள இருந்தாலும் எவ்வளவு கண்ணியமா இருந்துகிட்டோம்.. இனி அப்படியே இருக்கலாம்.. உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.." அவன் சொல்ல சொல்ல..
கீழுதட்டை கடித்துக் கொண்டு.. சரி என தலையசைத்தாள் தேம்பாவணி..
"எதுக்காக அந்த உதட்டை போட்டு பாடா படுத்துற.. உன்னால நார்மலாவே இருக்க முடியாதா..?" அவன் பேச்சில் ஏதோ ஒரு எரிச்சல்..
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தறீங்க..?"
"நீ இப்படி பண்றது என்னை செடியூஸ் பண்ற மாதிரி இருக்கு.."
"நான் ஒன்னும் உங்கள செடியூஸ் பண்ணல.. எனக்கு அழுகை வந்தது.. கண்ட்ரோல் பண்றதுக்காக அப்படி உதட்ட கடிச்சிக்கிட்டேன்.."
"ஏன் அழுகை வரணும்..!"
"எனக்கு தெரியல.." எனும்போதே கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..
இழுத்து மூச்சுவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான் வருண்..
அவள் கரத்தை எடுத்து தன் தொடை மீது வைத்துக் அழுத்திக்கொண்டவன்..
"லிசன்.. நான் உன்னை மட்டும் குறை சொல்ல விரும்பல.. இதுல என் தப்பும் இருக்கு.. ஆனா இப்படி ஒரு விஷயம் நடந்ததையே நாம மறந்துடலாம்.. எப்பவும் போல இயல்பா இருக்கலாம்.. இனி வழக்கம் போல நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓகேவா..!" அவள் முகம் பார்த்து கண்சிமிட்டி சிரிக்க..
"எஸ்..!" என்றாள் அவள்..
"கொஞ்சம் சிரியேன்.. காலையிலிருந்து என் முகத்தை கூட பாக்கல நீ.." என்று அவள் முகத்தை குறுகுறுவென்று பார்க்க.. இதழ் விரித்து சிரித்தவள்.. "ஸ்ஆஆ..!" என்று முகம் சுணங்கினாள்..
வருணுக்கு ஏண்டா சிரிக்க சொன்னோம் என தர்ம சங்கடமாகி போனது..
எச்சில் விழுங்கிக் கொண்டு கண்டும் காணாதவன் போல்
"சரி கிளம்பலாம்." என திரும்பி காரை ஸ்டார்ட் செய்தான்..
ஏதாவது பேச்சை மாத்து வருண்..! மனதுக்குள் ஒரு வில்லன் விடாமல் சுரண்டி கொண்டிருக்க..
"ஆமா.. நேத்து தாவணி கட்டினியாமே.. எனக்கு காட்டவே இல்லை..!" என்றான் ரோட்டை பார்த்தபடி..
"கொஞ்ச நேரம் தான் கட்டியிருந்தேன்.. அப்புறம் கம்பேர்டபுலா இல்லைன்னு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு சுடிதார் போட்டுக்கிட்டேன்.." அவளுக்கு இயல்பாக முயற்சித்தாள்..
"உங்களுக்கு யார் சொன்னாங்க..?"
"அக்காதான் சொன்னா.. ஒரு போட்டோ கூட எடுத்து வைக்கல.. யூஸ்லெஸ் ஃபெலோஸ்.. நீயாவது ஒரு செல்பி எடுத்து வச்சிருக்க கூடாது..?"
"நான் நேத்து வேற உலகத்துல இருந்தேன்.. ஒரு பெரிய தாய் பறவையோட சிறகுக்குள்ள இருக்கிற மாதிரி.. எனக்கு அந்த நினைப்பை தவற வேற எதுவும் தோணல.." தேம்பாவணி சாரதாவுடனான முந்தைய நாள் பொழுதுகளில் சிலாகித்தாள்..
குரலை செருமி அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தான் வருண்..
"அப்போ உனக்கு அம்மா அப்பா என்னோட அக்கா.. இவங்களையெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ல வர்றே.. என் குடும்பத்தில இருக்கற எல்லாரும் உன் மனசுல நின்னுட்டாங்க போலிருக்கே.. என்னைத் தவிர..!"
"இவங்க எல்லாரையும் எனக்கு தந்தது நீங்கதானே.. அத்தனை பேரையும் உங்க ஒருத்தருக்குள்ள பாக்கறேன்.. நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமானவர்ன்னு காட்டத்தான்.." என்ற வார்த்தைகளை நிறுத்திவிட்டு ஜன்னல் பக்கமாக திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவனுக்கும் அதற்கு மேல் அவள் சொல்ல வந்தது என் அர்த்தம் புரியவே.. மீண்டும் மீண்டும் அதே விஷயத்திற்குள் போக விரும்பாமல் சிஸ்டத்தை உயிர்ப்பித்தான்..
முத்த மழை இங்கு கொட்டி தீராதா?
மீண்டும் மீண்டுமா..?
ஓ.. காட்..
"ஜஸ்ட் கோ வித் த ஃப்ளோ வருண்.. எதையும் ரொம்ப பிரஷர் பண்ணாத.."
கண்களை அழுத்தமாக மூடி திறந்தான் வருண்..
அவர்கள் அந்த முத்தத்தை மறக்க நினைத்தாலும்.. முத்தம் அவர்களை விடாமல் துரத்துகிறதே..!
தொடரும்..

Last edited: