• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 32

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
93
வீட்டுக்கு வந்த பின் கணவனிடமிருந்து விலகியே இருந்தாள் கமலி.. அவள் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவும் பிடிப்படவில்லை.. ஆனால் அந்த விலகல் நெருப்பாய் சுட்டது..

"என்னாச்சு கமலி.." ஏன் என்கிட்டருந்து தள்ளி தள்ளி போறே.. பார்க் போயிட்டு வந்ததுல இருந்து என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கற.." அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி..

கமலியின் புறக்கணிப்பு உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்த கோபத்தை கொழுந்துவிட்டெரிய செய்வதாய்..!!

வேகமாக சமையலறைக்குள் நுழைந்தவன் முரட்டுத்தனமாக அவள் கைப்பற்றி தன் பக்கம் இழுத்தான்.

"என்னடி பிரச்சனை உனக்கு..! என் முகத்தை இப்படி வச்சிருக்க..?"

"ப்ச்.. கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்களேன் ப்ளீஸ்."

"சரி ஆனா காரணம் மட்டும் சொல்லு.. பார்க்ல யாரையோ பார்த்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. யார் அவங்க. அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்புறமா பேசறேன்.. நீங்க போய் உங்க வேலையை கவனிங்க." அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை கமலி.

"என்னை அவாய்ட் பண்றியா கமலி.!"

கமலி நொந்து போனாள்‌.

"ஐயோ ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க.. தேவையில்லாமல் நான் எதுக்காக உங்க மேல கோவப்படணும்." சற்று தள்ளி நின்று மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையோடு தேங்காய் துருவல்களை போட்டு மூடி.. ஸ்விட்ச் ஆன் செய்தாள்.‌.

மிக்ஸியின் சத்தம் காதுகளுக்குள் இரைந்தது..

சூர்ய தேவ் கமலியை கூர்ந்து பார்த்தான்.

அவள் முகம் பேயறைந்தார் போல் வெளுத்துப் போயிருப்பதை கண்டதும் அவன் கோபம் கணிசமாக தணிந்து விட்டிருந்தது..

"ஐ அம் ஹியர் ஃபார் யூ கமலி.. எதுவா இருந்தாலும் என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்.." என்றான் நிதானமான குரலில்..

கமலி வெடுக்கென்று நிமிர்ந்தாள்.. "ஷேர் பண்ணிக்கிட்டு என்ன ஆகப்போகுது.. எதுவும் மாற போறது இல்ல.. என் வேதனை என்னோட.. விட்டுடுங்க.."

"என்னடி சொல்ற..? மனசுல இருக்கறதை வெளிப்படையா சொன்னாதானே பிரச்சனை என்னன்னு புரியும்..!"

"அதைப் பத்தி பேசக்கூட நான் விரும்பல.."

"அப்போ அதைப் பற்றி நினைச்சு கலங்கவும் கூடாது. மறந்துட்டு அடுத்த வேலையை பாக்கணும்."

"அப்படி என்னால இருக்க முடியலையே.! தட் மெமரிஸ ஆர் ஹான்ட்டிங்(haunting) மீ.. என்னால அதுலருந்து வெளியே வரவே முடியல..!" அடிக்குரல் உறுமலோடு கண்களை அழுத்தமாக மூடித் திறக்க.. சிவந்த விழிகள் கண்ணீரை கசிந்திருந்தன..

நெற்றி சுருக்கத்தோடு கமலியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"முதல்ல அந்த பார்க்ல பார்த்தவங்க யாரு.. அதை முதல்ல சொல்லு.."

அவள் முடியாது என்பதை போல் தலையசைத்தாள்..

"என்கிட்டே எதுவும் கேட்காதீங்க.. நான் இதையெல்லாம் மறக்க நினைக்கறேன்.."

சூர்யதேவ் மிக்ஸியையும் அடுப்பையும் அணைத்தான்..

"நீ மறக்கிற மாதிரி தெரியல..! முதல்ல இப்படி வா.. இங்க உட்காரு.." கமலியை இழுத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்து நாற்காலியை இழுத்து போட்டு அவள் எதிரே நெருக்கமாக அமர்ந்தான்..

"என்னாச்சு..? எது உன்னை இப்படி பயமுறுத்தது..?"

கமலி அமைதியாக சந்தன நிற மார்பிள் தரையை வெறித்தாள்..

"பதில் சொல்லுடி.." அவன் குரலில் கடுமை கூடியது..

"நான் நினைக்கிறது சரியா இருந்தா.. அவன்தான் உன்னோட.." என்றவன் அதற்கு மேல் சொல்ல விரும்பாமல் வார்த்தைகளை நிறுத்தினான்..

"அந்த பொண்ணு அவனோட வைஃப் கரெக்டா..?"

இல்லை என்று தலையசைத்தாள் கமலி..

"தென் ஹூ த ப்ளடி ஹெல் ஆர் தே?" பொறுமையிழந்து கத்த துவங்கினான் சூர்யதேவ்..

"அஷோக் தங்கச்சி ராகவி.. அவளோட ஹஸ்பெண்ட் சேத்தன்.." கமலி சலனமில்லாத குரலில் சொல்ல அவள் புருவங்கள் இடுங்கின..

"அவங்கள பார்த்து நீ ஏன் டென்ஷன் ஆகணும்..?"

"பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்துடுச்சு..‌ அந்த கசப்பான அனுபவங்கள்.. நிராகரிக்கப்பட்ட வலி வேதனை அவமானம்.. அப்படியே என் நெஞ்சை முறுக்கி பிழியுது.." நலிந்த குரலோடு விழிகளை மூடி திறந்தாள் கமலி..

"அவங்க இந்த ஊர்ல தான் இருக்காங்களா.. உனக்கு ஏற்கனவே தெரியுமா..?"

"எனக்கு எதுவும் தெரியல..! ராகவியோட புகுந்த வீடு செங்கல்பட்டுல இருந்ததா ஞாபகம்.. கோயம்புத்தூர் ஏன் வந்தாங்க எதுக்காக வந்தாங்க.. இப்ப என் கண்ணுல ஏன் விழுந்தாங்க எதுவும் தெரியல..!" சோர்ந்து தெரிந்தாள் கமலி..

"கமலி.. வேண்டாத கடந்த காலத்தை பத்தி யோசிச்சு ஏன் மனச போட்டு குழப்பிக்கற..!"

"நான் யோசிக்கல.. சம்பந்தப்பட்ட மனுஷங்க என் கண் முன்னாடி வரும்போது என்னால யோசிக்காமல் இருக்க முடியல..!"

சூரிய தேவ் அவளை கனிந்து பார்த்தான்..

"மனசுல எதுக்காக தேவையில்லாம இவ்வளவு வலியையும் வேதனையையும் சுமக்கனும்.. ஒருமுறை எல்லாத்தையும் வெளிப்படையா கொட்டி தீர்த்துட்டு மறந்திடுமா..!"

கமலி வாய் திறக்கவில்லை..

விழிகளை மூடி திறந்தபடி ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. "ஒரு கணவனா என்கிட்ட நீ எதையும் ஷேர் பண்ணிக்க வேண்டாம்.. அட்லீஸ்ட் ஒரு ஃபிரண்டா கூட என்னை நினைக்க முடியல இல்லையா..?"

"சரி ஓகே அப்புறம் உன் விருப்பம்.." அவர் தன் இரு தொடைகளிலும் கைகளை ஊன்றி எழுந்தான்..

கமலியின் தாழ்ந்திருந்த விழிகள் நிமிரவே இல்லை.. அவளை அழுத்தமாக ஒருமுறை பார்த்துவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்த வேளையில்..

"காதல் யாருக்கு வேணாலும் வரும்.. ஆனா எந்த இடத்தில காதல் வலிமை பெறுதுன்னு தெரியுமா..?" கமலியின் குரலில் அவள் பக்கம் திரும்பினான்.. கமலியின் விழிகள் நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன..

முதலில் அவள் கேள்வியே புரியவில்லை.. பிறகு எங்கிருந்து பதில் சொல்வது.. யோசனையோடு கருவிழிகளை உருட்டியவன் தோள்களை குலுக்கி தெரியாது என்பதைப் போல் தலையசைக்க..

வெறுமையாக சிரித்தாள் கமலி..

"வாழ்க்கையோட கஷ்ட நஷ்டங்களும் போராட்டங்களும் ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற அன்பையும் காதலையும் பாதிக்காம இருக்கணும்.. என்ன நடந்தாலும் சரி இந்த உலகமே அழிஞ்சாலும் சரி உனக்காக நான் இருப்பேன்னு தன்னோட துணை உடைஞ்சு போற சமயத்துல அவங்களை தாங்கி பிடிக்கணும் அதுதானே சூர்யா காதல்..!"

"சின்ன சின்ன பிரச்சனைகள் கூட ஒருத்தர் மேல வச்சிருக்கற அன்பை உடைச்சு காணாமல் போக வைக்குதுன்னா அதுக்கு பேரு காதலே இல்ல.. அது வேற..! இந்த உண்மையை நான் ஏன் புரிஞ்சுக்காம போனேன் சூர்யா..!"

"வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்து தான் ஒரு பாடத்தை கத்துக்கணும்னா.. அந்த வீணா போன அனுபவத்தால யாருக்கு என்ன பிரயோஜனம்..!"

"அஷோக் கூட நான் மூணு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையில்.. இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப கொடுத்து வச்சவன்னு நினைச்சேன்.. திகட்ட சந்தோஷத்தை தவிர வேற எதையும் நான் அனுபவிச்சதில்ல.. அஷோக் மாதிரி என்னை உண்மையா காதலிக்கிற ஒரு புருஷன் கிடைச்சது என்னோட பிறவி பாக்கியம்னு நினைச்சேன்.. ஆனா என்னோட சந்தோஷம் நிம்மதி.. எங்க ரெண்டு பேரோட காதல் வாழ்க்கை.. எல்லாம் நானே என் கண்ணை ஏமாத்திக்கிற கானல் நீர்ன்னு அப்ப எனக்கு புரியல.."

"ஒரு பொண்ணுக்கு குழந்தை இல்லாதது அவ்வளவு பெரிய குற்றமா சூர்யா..?"

"மூணு வருஷமா குழந்தை இல்லைன்னு டாக்டர் கிட்ட போனபோது.. ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு என் கருப்பைக்கு பலம் இல்லைன்னு ரிப்போர்ட் வந்துடுச்சு.. எ.. எனக்கு கு.. குழந்தையே பிறக்காதாம்.." கமலியின் குரல் நடுங்கியது.. "உண்மையிலேயே ரொம்ப நொறுங்கி போயிட்டேன்.." கமலி நீண்ட மூச்சோடு விழிகளை மூடினாள்..

அதனால என்னம்மா உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை..!! அவள் தலையை தடவிக் கொடுத்தான் அஷோக்..

கருத்தரிக்க முடியாது என்ற வேதனையை விட கணவன் தன்னை தாங்கி பிடிக்கிறான் என்ற சந்தோஷம் காயப்பட்ட இதயத்திற்கு மயிலிறகால் மருந்து தடவியதை போல் ஆறுதலை தந்தது..

"மூணு வருஷம் தானே ஆகுது இன்னும் நமக்கு நிறைய டைம் இருக்கு.. காத்திருப்போம்.. கண்டிப்பா நமக்கு குழந்தை பிறக்கும்.. விஞ்ஞானமும் மருத்துவமும் எவ்வளவோ முன்னேறி இருக்குது..! குழந்தை பெத்துக்க வழியா இல்ல.." அவள் கலங்கி நிற்கும்போதெல்லாம் அசோக் இப்படித்தான் கமலியை அணைத்து தேற்றுவான்..

கணவனின் அன்பிலும் அனுசரணையிலும் குழந்தை இல்லையென்பது ஒரு பெரிய குறையாக தோன்றவில்லை அவளுக்கு..

"கல்யாணமாகி மூணு வருஷம் ஆகிடுச்சா..? குழந்தை எங்கே? ஆணா பெண்ணா?" என்று யாரேனும் கேட்கும்போது முகம் மாறிவிடுகிறது..

ஒரு பிரச்சனையும் இல்லை கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று மருத்துவ ரிப்போர்ட் சொல்லியிருந்தால் கூட நம்பிக்கையோடு காத்திருக்கலாம்..

கர்ப்பப்பையில் குறைபாடு என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு நிம்மதியோடு வாழ முடியவில்லை.. சிலந்தி வலை போல் அந்த எண்ணங்களுக்குள்ளேயே சிக்கி சுழன்றாள் கமலி..

நிறைமாத கர்ப்பிணிகளை பார்த்தால் ஏக்கம்..

குழந்தையை தூக்கியபடி நடந்து வரும் தாய்மார்களை பார்த்தால் துக்கம்..

இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு தூரத்தில் தெரியும் குருவியை கைகாட்டி சோறு ஊட்டும் அம்மாக்களை பார்த்தால் கவலை..

வேறு பொழுதுபோக்குகளின் கவனத்தில் திசை திருப்பிக் கொண்டாலும்.. தன்னை சுற்றிலும் இது போன்ற ஏதேனும் ஒரு காட்சியைக் காண நேரும் போது நெஞ்சம் சுருக் சுருக்கென்று குத்துகிறது..

இது போதாதென்று.. ரணத்தை மேலும் குத்தி கிளறுவதை போல்.. குழந்தை பிறக்க வைத்தியம் சொல்கிறேன் ஆலோசனை தருகிறேன் பேர்வழி என்று.. அக்கம் பக்கத்து வீட்டாரும் தெரிந்தவர்களும் சொல்லும் அறிவுரைகள்.. அப்பப்பா..

சீமந்தங்களில் புறக்கணிக்கப்படுவதும்.. திருமணங்களில் ஓரங் கட்டப்படுவதும்.. கிளைக் கொடுமைகள்..

இதில் ஏதேனும் ஒரு குழந்தையை ஆசையாக பார்த்து ரசித்து விட்டால் இவள் காலடி மண்ணை எடுத்து சுத்தி போடும் பெரிய கிழவிகள்.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள்..

கமலியின் சோர்ந்த முகம் பார்க்கும் போது மட்டும்.. நெஞ்சில் போட்டு தட்டி ஆறுதல் சொல்லுவான் அஷோக்..

கவலையிலும்.. தன் அழகிலும் கவனம் இல்லாமல் போனதிலும்.. அவள் பொலிவு குறைந்து விட்டதாக குறைப்பட்டுக் கொள்வான் அவன்..

இனிப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த வாழ்க்கை.. சற்று தொய்வோடு.. ஸ்லோமோஷனில் சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள் கமலி..

அடுத்த கட்டம் என்னவென்று யோசிப்பதற்கு முன்னே.. அஷோக் பிணக்குகள் நீங்கி தன் பெற்றோரோடு ஒன்று சேர்ந்து விட்டான்..

மாலினி.. சீனிவாசன்.. கிராமத்து வீட்டை நிரந்தரமாக பூட்டிவிட்டு.. ஒரே மகனோடு வந்து செட்டிலாகிவிட்டனர்..

அவனும் அதைத்தான் விரும்பினான்.. தாய் தந்தை தன்னோடு இருப்பதில் அஷோக்கிற்கு ஏகோ போக குஷி.. ஆனால் மாலினியோ சீனிவாசனோ மகனை ஏற்றுக் கொண்டார்களேயன்றி மருமகளை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை..

இதில் வேறு குழந்தை பிறக்க ஏன் தாமதம் என்று மாலினி தோண்டி துருவி கேட்டதும்.. கமலி வெள்ளந்தியாக உண்மையைச் சொல்லிவிட.. நூல் இழையாக ஒட்டிக் கொண்டிருந்த போலி பாசமும் அறுந்து.. மாமியாரின் சுயரூபம் வெளிப்பட்டு முழு வெறுப்புக்கு ஆளானாள் கமலி..

எதைத் தொட்டாலும் குற்றம் என்று கடுகடுத்து கொண்டிருந்த மாமியாரை பற்றி கணவனிடம் புகார் கூற முடியவில்லை..

"அம்மாவும் அப்பாவும் நம்ம கூட இருக்கறதுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கமலி.. எங்க நம்ம கல்யாணத்தால வந்த விரிசல்.. கடைசி வரைக்கும் என்னை ஏத்துக்காமலேயே போயிடுவாங்களான்னு நினைச்சு பயந்துட்டேன்.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று பூரித்து பேசும் போதும்.. வேலை விட்டு வந்தவுடன் அம்மாவின் மடியில் தலை சாய்த்து படித்துக் கொள்ளும்போதும்.. உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் சஞ்சலங்களை வெளியில் சொல்ல வாய்ப்பில்லாது கமலியின் மனது கனத்து போகும்..

மாலினியின் மகள் ராகவி தலை பிரசவத்திற்காக தன் அண்ணன் வீட்டிற்கு வந்திருக்க.. முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டாள் கமலி..

ராகவி பெற்ற குழந்தையை கையில் ஏந்திய போது அவள் அடைந்த சிலிர்ப்பும்.. சந்தோஷமும் அதற்கு இரண்டு மடங்காக.. தலையில் கொட்டி கவிழ்த்த நெருப்பை போல் அனுபவித்த துன்பமும் ஈரம் காய்வதற்கு முன்.. சொந்த வீட்டிலேயே அகதியாக நடத்தப்பட்டாள் அவள்..

தலை பிரசவத்திற்கு வந்திருந்த ராகவி குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் அண்ணன் வீட்டில் தான் தங்கியிருந்தாள்..

குழந்தையை தூக்கவே கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

குழந்தை லேசாக நோவு கண்டாலும் "கண்ட சனியன்களோட கண்ணு பட்டு குழந்தைக்கு திருஷ்டி ஆகிடுது.. பொறாமை பிடிச்ச ஜென்மங்க.. இதுங்க கிட்டருந்து தாயையும் பிள்ளையையும் பாதுகாக்கிறதுக்குள்ள என் உயிரே போயிடும் போலிருக்கு..!" என்று கருவிக்கொண்டே தாயும் பிள்ளையுமாய் அமர வைத்து உப்பும் மிளகாயுமாய் சுத்தி போடுவாள் மாலினி..

முன்பெல்லாம் அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டு ஆறுதல் சொன்ன கணவன் இப்போது மரண வலியோடு மனம் வெம்பி தவித்துக் கொண்டிருக்கும் கமலியை கண்டு கொள்வதே இல்லை..

ஒரே தோழியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவள்.. வேலை மிகுதியில் நேரமில்லாமல் தத்தளிக்கும் மாயாவை தான் வேறு புலம்பி மென்மேலும் குழப்புவானேன்..

ஆளில்லாமல் தலையணையிடம் தன் கதையைச் சொல்லி கதறி தீர்த்தாள்..

பரவாயில்லை கணவனுக்காக பொறுத்துக் கொள்கிறேன்.. என்னவன் அவன் சொந்தங்களோடு சந்தோஷமாக இருக்கிறான் அது போதும்.. என்று திருப்தியடைந்து மனதை கல்லாக்கி.. காயங்களை சகித்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் தான் அடுத்த இடி..

"அஷு.." என்றழைத்து சின்ன குழந்தை போல் தன் வேதனைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள நெருங்கி வரும் மனைவியை தள்ளி வைத்தான் அஷோக்..

டயர்டா இருக்கும்மா..!

தூக்கம் வருது.. கமலி கொஞ்சம் தள்ளி படு..

ஏன் இப்படி ஒட்டி உறவாடற.. எரிச்சலா வருது..

எப்பவும் இதே நினைப்புதானா..! வீட்ல பெரியவங்க இருக்காங்க தங்கச்சி இருக்கா.. கொஞ்சம் இங்கிதமா நடந்துக்கோ..?

எத்தனை மாறிப் போய்விட்டான் இந்த அஷோக்..

கமலி ஒன்றும் தாம்பத்திய உறவுக்காக ஏங்கி நிற்கவில்லை.. ஒரு சிறு அணைப்பு.. நெற்றியில் ஒரு முத்தம்.. எல்லாம் சரியாகிவிடும் நான் பாத்துக்கறேன்.. பொய்யாக கூட சொல்லப்படும் இந்த ஆறுதல் வார்த்தைகள் போதும்.. கண்ணீரை விழுங்கி கொண்டு மகிழ்ச்சியோடு சிரிக்க முடியும் அவளால்..

அது கூட மறுக்கப்படும் நிலையில் வாழ்க்கையில் தோற்றுப் போனதாக இடிந்து போகிறாள்..

எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.. காதலில் திளைத்து கணவன் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களில் சிறு துயரத்தை கூட தேடி கண்டுபிடிக்க முடியவில்லை..

இப்போது அதற்கு நேர் மாறாக நிம்மதி எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறாள்..

ஒவ்வொரு விஷயத்திலும் மருமகளை குத்தி காட்டி மனதளவில் காயப்படுத்தினாள் மாலினி..

நல்லவேளை இந்த பட்டணத்து வாழ்க்கையில் வாசலில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து புரணி பேசும் பழங்கால சம்பிரதாயம் இல்லை.. அந்த வகையில் மாமியாரிடமிருந்து தப்பித்துக் கொண்டாள் கமலி..

ராகவியை குழந்தையோடு சீரும் சிறப்புமாக அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாயிற்று..

பல நாட்கள் இரவில் படுப்பதற்கு கூட அறைக்கு வருவதில்லை அஷோக்.. காதல் புளித்து போனது.. கமலியின் அழகு சலித்து போனது..

இல்லற வாழ்க்கை எக்ஸ்பயரி ஆகிவிட்டது..

வாழ்க்கையே வெறுத்து பைத்தியம் பிடித்து விடும் நிலையில்தான்.. அஷோக் அவளுக்கு அடுத்த ஆஃபர் தந்தான்..

சரோகேசி.. இன்னொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாடகைத் தாய் முறை..

இதுவும் படிப்பு வாசனையை அறியாத கிராமத்திலிருந்து வந்திருக்கும் அவன் தாய் கொடுத்த யோசனை தானாம்.. அப்படித்தான் அஷோக் சொன்னான்.. கமலியும் மேற்கொண்டு அதைப்பற்றி எந்த கேள்விகளும் கேட்டுக் கொள்ளவில்லை..

"நல்லா யோசிச்சு பார்த்தேன் கமலி அம்மா சொல்றதும் சரின்னு தோணுது.. எத்தனை நாளைக்குதான் உன் முகத்தை நானும் என் முகத்தை நீயும் வெக்கு வெக்குன்னு பாத்துட்டு வாழறது.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா எல்லா பிரச்சனைகளும் சரியாகிடும்னு தோணுது.."

"ஊர் பெயர் தெரியாத குழந்தையை தத்தெடுத்து வளர்க்கறதெல்லாம் ரொம்ப ரிஸ்க்.. குழந்தை நம்ம ரத்தத்தில் உருவானதாய் இருக்கணும்.. என் குணநலங்களை உரிச்சு வச்சுக்கிட்டு நம்ம சந்ததியோட பெயர் சொல்ற வாரிசா இருக்கணும்.."

"எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி தெரியுதே..!"

"உண்மைதான் கமலி.. ராகவி வந்திருந்த சமயத்துல கூடமாட ஒத்தாசைக்காக வேலைக்கு வந்து இருந்தாங்களே ராணியம்மா.. அவங்களோட பொண்ணு ராஜேஸ்வரி.. சாந்தமான முகம்.. ரொம்ப நல்ல பொண்ணு.. அழகு அறிவு பொறுமை.. இந்த மாதிரி எல்லா குண நலன்களும் சேர்ந்த ஒரு பொண்ணோட வயித்துல நம்ம குழந்தை ஜனிக்கறது பெரிய வரம் இல்லையா..?"

அப்படியானால் நான் சபிக்கப்பட்டவள்..

தொண்டைக்குள் விழுங்கிய எச்சில் கூட கசந்து போக கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் கமலி..

"முதல்ல எனக்கு பெருசா இதுல ஈடுபாடு இல்லை கமலி.. எனக்கு நீ உனக்கு நான் மட்டும் போதும்னு நினைச்சேன்.. ஆனா அம்மாவோட தொந்தரவு தாங்கல.. என் பேரை சொல்ல ஒரு வாரிசு வேணுமாம்.. மகள் வயித்து பேரனை பார்த்தாச்சு.. மகன் வழி பேரக்குழந்தையும் பாத்துட்டா நிம்மதியா என் கட்டை வேகும்னு கண்கலங்கி பேசறாங்க.. எனக்குமே குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்.. உனக்கு தான் தெரியுமே.. சின்னதா நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா.. இன்னொரு பெண்ணோட வயித்துலருந்து பிறந்தாலும் அது உன்னோட குழந்தை இல்லையா கமலி.. நீ தானே அந்த சிசுவை வளர்க்க போற.." இத்தனை நாள் கணவனின் மூச்சுக்காற்று கூட தன்னை தொடவில்லையே.. கை பிடித்துக் கொண்டு உருகி உருகி அவன் பேசிய தோரணையில் மயங்கி போனாள் கமலி..

உண்மைதான் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனும் போது அடுத்த வழியை தேர்ந்தெடுப்பது தான் உத்தமம்.. சின்னதாய் ஒரு குட்டி பாப்பா.. என்னை அம்மா என்றழைக்கப் போகிறதா..? தேகம் சிலிர்த்து அடிவயிறு குளிர்ந்து போனது.. அவளும் அந்த குழந்தைக்காக ஆசைப்பட்டு ஏங்கினாள்.. கணவனின் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னாள்.. தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொள்கிறோம் என்பதை அறியாமல்..

பணம் கொடுத்து வாடகை தாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டாள் ராஜேஸ்வரி..

அசோக்கின் உயிரணு ராஜேஸ்வரியின் கர்ப்பப்பையில் சேர்க்கப்பட்டு.. கரு உருவானது..

மிகுந்த மகிழ்ச்சியடைந்து ராஜேஸ்வரியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் கமலி..

"ம்கூம்.. பெத்துக்க துப்பில்ல.. இதுல இவளே கர்ப்பமான மாதிரி சந்தோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.." மெலிதாக மாமியாரின் சத்தம் காதோரம் தீண்டிய போதிலும்.. மகிழ்ச்சியில் காதடைத்து போனது..

"ராஜேஸ்வரியோடது ரொம்ப ஏழை குடும்பம்.. அங்கே பெருசா என்ன வசதி இருக்க போகுது.. இந்த வீட்டோட வாரிசை சுமக்கிற பொண்ணு.. அவளுக்கு தேவையானதை நாம தான் செய்யணும்.. குழந்தை பிறக்கிற வரைக்கும் ராஜேஸ்வரி இந்த வீட்டிலேயே இருக்கட்டும்.. கண்ணுக்கு கண்ணா அவளை நான் பார்த்துக்கறேன்.." கமலியின் முன்புதான் மாலினி அசோக்கிடம் வந்து சொன்னாள்..

அவனும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்னையின் முடிவை ஆமோதித்தான்..

கண்முன்னே தன் குழந்தை ராஜேஸ்வரியின் வயிற்றில் வளர போகிறது.. கமலிக்கும் சந்தோஷம்தான்..

ஆனால்.. மாமியாரை தாண்டி.. தன் கணவனாகப்பட்டவன் ராஜேஸ்வரியை உள்ளங்கைக்குள் வைத்து தாங்கியதில் மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல்..

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியை தவிர.. யாரும் அவளை அழைப்பது கூட இல்லை.. கணவன் கூட மறந்து போனான்..

ராஜேஸ்வரி பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கொஞ்சி தீர்த்தாள் மாலினி.. வகை வகையாய் பலகாரங்களை சமைத்து ஊட்டினாள்..

அஷோக் மாதம் தவறாமல் ராஜியை செக்கப் அழைத்துச் சென்றான்.. எதிலும் கமலியை கலந்து கொள்வதில்லை..

கமலியின் மாமனார் மாலினியின் கை பொம்மை.. பெயரளவில் கணவன் பதவியை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அற்ப ஜென்மம்.. அந்த வீட்டில் அவர் இருந்தாலும் இல்லையென்றால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை.. பயனும் இல்லை.. அதிகாரம் அனைத்தும் மாலினியின் கையில்..

மாலையில் கை நிறைய தின்பண்டங்களோடு வரும் அசோக் நேரடியாக ராஜேஸ்வரியிடம் தான் செல்லுவான்..

மணிக்கணக்கில் அவளிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பான் அப்படி என்னதான் பேசுவானோ தெரியாது.. அவள் வயிற்றை தொட்டுப் பார்த்து ஆத்மார்த்தமாக தன் குழந்தையை உணர்ந்து சிலிர்த்து போவான்..

தன் ரத்தம் என்ற பாசம்.. இதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்வதா..? மண்டு.. தன் தலையில் தட்டி.. மானசீகமாக தன்னையே திட்டிக் கொள்வாள் கமலி..

அஷோக் பிறந்தநாளின் போது முதல் கேக் துண்டை கமலியை தள்ளி நிறுத்திவிட்டு ராஜிக்கு ஊட்டிய போது கூட தனியறைக்குள் சென்று கதறி தீர்த்து கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்து சிரித்தாளே..!

ஆனால் இருவரும் பழகும் விதத்தில் மாறுபாடு தெரியும் போது..?

ராஜேஸ்வரி அஷோக்கை மயக்கத்தோடு பார்ப்பதும் அவன் கொஞ்சும் பார்வையோடு சைகையில் பதில் சொல்வதும்.. என் பிரமையா..? குழம்பி போனாள் கமலி..

இருக்கட்டும் எல்லாம் குழந்தையை பெற்று என் கையில் கொடுக்கும் வரை..‌ பிறகு குழந்தைக்கு நான்தான் தாய்..‌அஷுதான் தந்தை.. எங்கிருந்து வரப்போகிறாள் இந்த ராஜேஸ்வரி.. என்ற அலட்சியத்தில் சில விஷயங்களை கவனிக்காமல் போனது யார் பிழையோ..?

போகப் போக இரவில் கூட சில நேரங்களில் அஷோக் தன்னருகில் இல்லை என்பதை உணர்ந்தாள் கமலி..

எழுந்து அவனை தேடி வந்தால்.. திருதிருத்த முழியோடு பதட்டத்தோடு எதிரே வருவான்..

தண்ணி குடிக்க வந்தேன்..
அம்மாவை பாக்கறதுக்காக போனேன்..
ராஜேஸ்வரி கத்துன மாதிரி இருந்துச்சு..

ஏதாவது ஒரு காரணம்.. கமலி நம்பினாள்..

தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்ற உணர்வுபூர்வமான பிணைப்போ.. சபலமோ.. அல்லது முன்பே உருவாக்கிய திட்டமோ.. ஏதோ ஒன்று கமலியின் கண்ணை கட்டி விட்டு ராஜேஸ்வரியும் அஷோக்கும் இணைபிரியாத அளவில் நெருங்கி விட்டிருந்தனர்..

அஷோக் ராஜேஸ்வரியை இறுக்கமாக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவதை மட்டும் கமலி பார்க்காமல் போயிருந்தால் தன் கணவன் ஒரு துரோகி என்று கடவுளே வந்து சொல்லியிருந்தாலும் அவள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள்..

நம்பிக்கையும் காதலும் கண்முன்னே சிதைந்து போக இதயம் வெடித்து சிதறியது.. வாழ்க்கையில் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை..

அஷோக் பதறவில்லை.. குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவில்லை..

"எனக்கு ராஜேஸ்வரியை ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னால அவளை பிரிய முடியாது.. குழந்தை பிறந்த உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. அதுக்காக உன்னை கைவிட்டுடமாட்டேன்.. நீயும் என் கூடவே இருக்கலாம்.." என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறானே இவன் என் கணவன் தானா.. பைத்தியக்காரி போல் தலை சாய்த்து கண்ணீர் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"அய்யோ.. அம்மா.." என்று இதயம் ஓலமிட்டு அழுகிறது.. ஆனால் அடித்தொண்டையிலிருந்து கதறி தீர்க்க உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை..

"இப்படி ஒரு துரோகத்தை செய்ய எப்படி மனசு வந்தது அஷு.. எவ்வளவு காதலிச்சோம்.. நீங்கதான் எல்லாமேன்னு நம்பி இருந்தேனே.. அவ்வளவுதானா..?"

சீரணிக்க இயலாமல் அடிநெஞ்சிலிருந்து குமுறினாள்..

"நீ ஏன் துரோகம்னு நினைக்கற.. என் குழந்தையை சுமக்கிறவளுக்கு நான் தரக்கூடிய அங்கீகாரம்.. நீ பெருசா சீன் கிரியேட் பண்ற அளவுக்கு ஒன்னும் இல்லை.. நான் ஒன்னும் உன்னை விட்டுடலையே.. பாவம் ஆதரவில்லாத நீயும் எங்க போவ.. நிச்சயமா உன்னை நான் நல்லபடியா பாத்துக்குவேன்.."

அளவில்லாத காதலை கொட்டித் தந்து.. நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு.. ஐயோ அந்த காலங்கள் எல்லாம் பொய்யா..!

ஆஆஆஆ.. சித்தம் கலங்கியவளாய் பாய்ந்து சரமாரியாக அவனை அடித்தாள் சட்டையை கிழித்தாள்..

ஏய்.. ச்சீ.. அவளை உதறித் தள்ளினான் அசோக்..

"ஏய்.. என்ன..! நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. வாழ வழியில்லாத அனாத கழுதை..‌ குழந்தை பெத்து த்தர வக்கில்லாத மலட்டு நாய்.. உனக்கு வசதியான வாழ்க்கையும்.. ராஜா மாதிரி ஒரு புருஷனும் கேக்குதா..! இங்க பாரு என் பிள்ளைக்கு பொண்டாட்டியா வாழற தகுதி இவளுக்கு மட்டும் தான் இருக்கு.. இவதான் என் மருமக.. வயித்துல புள்ளைய சுமக்க வக்கில்லாத நீ ஒரு வேலைக்காரியா மூலையில ஒதுங்கி கிடக்கிறதுன்னா கிட.. இல்லைனா வீட்டை விட்டு வெளியே போடி.." மாமியார் குரோதமாக கர்ஜித்தாள்..

கமலிக்கு நன்றாகவே புரிந்து விட்டது.. அனைத்தும் மாலினியின் திட்டமிட்ட சதி.. அஷோக் தன் அன்னைக்கு உடந்தை..

பதுமை போல் ஓரத்தில் ஒதுங்கி நின்றாள் ராஜேஸ்வரி..

"அவ எங்க போவா.. அவளுக்கு ஆதரவு தர யார் இருக்காங்க.. விடுங்கம்மா.. அவளும் இங்கேயே இருந்துட்டு போகட்டும்.. அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவளுக்கு இன்னொருத்தி கூட எப்படி அனுசரிச்சு போகணும்னு தெரியாம போயிடுமா என்ன..? அதுவுமில்லாம அவளுக்கு என்னை விட்டால் நாதியில்ல.. நான் இல்லாம அவளால வாழ முடியாது..! விடுங்க.. விடுங்க.." அசோக் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்த பிறகு காலில் விழுந்து நீயே சரணாகதி என்று ஆதரவு தேட அவள் ஒன்றும் சுயமரியாதையை தொலைத்த ஈன பிறவி இல்லையே..!

கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டவள்.. வெறுங்கையோடு அங்கிருந்து புறப்பட்டு தோழி வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. தெய்வாதீனமாக அவளை தாங்கிப் பிடிக்க கடவுள் கொடுத்த தோழியாக மாயா இருந்தாள்.. இல்லையேல் அந்த நேரத்தில் கமலி என்ன முடிவெடுத்திருப்பாளோ கடவுளுக்கு தான் வெளிச்சம்..

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க மறந்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள் கமலி..

"அவ்ளோதானா சூர்யா.. அவ்வளவுதான் இல்ல.. குழந்தை பெத்துக்க தகுதி இல்லைனா காதல் காணாமல் போயிடுமா..! நான் வாழவே தகுதியில்லாதவளா ஆகிடுவேனா..?"

"ஒருவேளை அவனுக்கு அப்படி ஒரு குறை இருந்திருந்தா..? அதே அன்போடு நான் அவனை நேசிச்சி இருந்திருப்பேன்.. அந்த நேர்மையும் அன்பும் அவனுக்கு ஏன் இல்லாம போச்சு?"

"எப்படி சூர்யா.. அவனால இப்படி ஒரு பச்ச துரோகத்தை எனக்கு செய்ய முடிஞ்சது..

"குழந்தைக்காக அவளை கல்யாணம் செஞ்சுக்க போறேன்.. நீ என்னை விட்டு போய்டுன்னு சொல்லியிருந்தா.. மனசை கல்லாக்கிக்கிட்டு அவன் வாழ்க்கையை விட்டு விலகிப் போயிருப்பேன்.. ஏ.. ஏமாத்திட்டான்.. காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொல்லி.. சொல்லி நம்ப வைச்சு கழுத்தறுத்துட்டான்.."

"என்னால ஜீரணிக்கவே முடியல.. நெஞ்செல்லாம் வலிக்குது.. அவனை மறந்துட்டேன்.. ஆனா அலட்சியமா என்னை அனாதைன்னு எடுத்தெறிஞ்சு பேசின பேச்சு.. அதை என்னால மறக்கவே முடியல.."

"அவனை மறக்கவும் முடியாம மன்னிக்கவும் முடியாம.. உள்ளுக்குள்ள செத்துகிட்டு இருக்கேன்..!" நெஞ்சு வெடித்து துக்கம் பீறிட சத்தமாக கதறிக் கொண்டிருந்தாள் கமலி..

"சூர்யா..‌ சூர்.. சூர்..யா.." ஆதரவு தேடி கரங்கள் அவனை நோக்கி நீண்டன..

சட்டென அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான் சூர்ய தேவ்..

ஹக்.. இதயத்துடிப்பு நின்று போனது போல் சிலையானாள் கமலி..

நிறுத்த முடியாத அழுகை விம்மலாக வெளிப்பட முகம் உதறலோடு நடுங்கிக் கொண்டிருந்தது..

"உன்கிட்ட ஆறுதல் தேடிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா.." சுய பச்சாதாபத்தில் வெந்து போனாள் கமலி..

தன்னை சூர்யதேவ் தாங்கிக் கொள்ளவில்லை என்று மருகியவள் வேதனையின் ஊற்றாக அவன் கண்கள் சுரந்த தாய்ப்பாலை கவனிக்காமல் போயிருந்தாள்..

வெளியே வந்து நின்றவன் வாயை அகலமாக திறந்து நீண்ட மூச்சிழுத்தான்.. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.. முதல் மழை போல் முதல் கண்ணீர்..

அந்த கண்ணீரை காட்டி அவளை பலவீனப்படுத்த அவன் விரும்பவில்லை..

என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.. அவள் வலி.. அழுகை வேதனையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. இப்படி இருதயம் வலித்ததே இல்லை.. பிரசவ வலி போல் துடித்தான்.. அழுதான்..

முன் நெற்றியை சுவற்றில் சாய்த்தவன் முஷ்டியை மடக்கி சுவற்றில் குத்தினான்..

அவள் வலியை அவன் உணர்கிறான்..! அனுபவிக்கிறான்.. துடிக்கிறான்.. இனி அரவணைத்துக் கொள்வான்.. ஆறுதல் தருவான்..

கமலியின் கணவனாக.. அவள் நண்பனாக..

இது காதல் இல்லை என்றால் வேறு எது காதல்..!

தொடரும்..
 
Last edited:
Joined
Sep 18, 2024
Messages
40

கமலியின் புறக்கணிப்பு உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்த கோபத்தை கொழுந்துவிட்டுரிய செய்வதாய்..!!

கமலி வெடுக்கென்று நிமிர்ந்தாள்.. "ஷேர் பண்ணிக்கிட்டு என்ன ஆகப்போகுது.. இதுவும் குறைய போறது இல்ல.. என் வேதனை என்னோட.. விட்டுடுங்க.."

"என்னடி சொல்ற..? மனசுல இருக்கறதை வெளிப்படையா சொன்னாதானே பிரச்சனை என்னன்னு புரியும்..!"

"அதைப் பத்தி பேசக்கூட நான் விரும்பல.."

"அப்போ அதைப் பற்றி நினைச்சு கலங்கவும் கூடாது. மறந்துட்டு அடுத்த வேலையை பாக்கணும்."

"அப்படி என்னால இருக்க முடியலையே.! தட் மெமரிஸ ஆர் ஹான்ட்டிங்(haunting) மீ.. என்னால அதுலருந்து வெளியே வரவே முடியல..!" இரு கைகளால் இறுக பற்றிக் கொண்டாள்..

நெற்றி சுருக்கத்தோடு கமலியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"முதல்ல அந்த பார்க்ல பார்த்தவங்க யாரு.. அதை முதல்ல சொல்லு.."

அவள் முடியாது என்பதை போல் தலையசைத்தாள்..

"என்கிட்டே எதுவும் கேட்காதீங்க.. நான் இதையெல்லாம் மறக்க நினைக்கறேன்.."

சூரியதேவ் மிக்ஸியையும் அடுப்பையும் அணைத்தான்..

"நீ மறக்கிற மாதிரி தெரியல..! முதல்ல இப்படி வா.. இங்க உட்காரு.." கமலியை இழுத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்து நாற்காலியை இழுத்து போட்டு அவள் எதிரே நெருக்கமாக அமர்ந்தான்..

"என்னாச்சு..? எது உன்னை இப்படி பயமுறுத்தது..?"

கமலி அமைதியாக மார்பில் தரையை வெறித்தாள்..

"பதில் சொல்லுடி.." அவன் குரலில் கடுமை கூடியது..

"நான் நினைக்கிறது சரியா இருந்தா.. அவன்தான் உன்னோட.." என்றவன் அதற்கு மேல் சொல்ல விரும்பாமல் வார்த்தைகளை நிறுத்தினான்..

"அந்த பொண்ணு அவனோட வைஃப் கரெக்டா..?"

இல்லை என்று தலையசைத்தாள் கமலி..

"தென் ஹூ த ப்ளடி ஹு ஆர் தே?" பொறுமையிழந்து கத்த துவங்கினான் சூர்யதேவ்..

"அவங்க இந்த ஊர்ல தான் இருக்காங்களா உனக்கு ஏற்கனவே தெரியுமா..?"

"மனசுல எதுக்காக தேவையில்லாம இவ்வளவு வலியையும் வேதனையையும் சேர்த்து வச்சிருக்க.. ஒருமுறை எல்லாத்தையும் வெளிப்படையா கொட்டி தீர்த்துட்டு மறந்திடுமா..!"

"யார் வேணாலும் காதலிக்கலாம்.. ஆனா எந்த இடத்தில காதல் வலிமை பெறுது தெரியுமா..?" கமலியின் குரலில் அவள் பக்கம் திரும்பினான்.. கமலியின் விழிகள் நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன..

"வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்து தான் ஒரு பாடத்தை கத்துக்கணும்னா.. அந்த வீணா போன பாடத்தை கத்துகிறதுனால யாருக்கு என்ன பிரயோஜனம்..!"

அதனால என்னம்மா உனக்கு நான் கூட எனக்கு நீ குழந்தை..!! அவள் தலையை தடவிக் கொடுத்தான் அஷோக்..

கணவனின் அன்பிலும் அனுசரணையிலும் குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறையாக தோன்றவில்லை அவளுக்கு..

"மூணு வருஷம் ஆகிடுச்சா..? குழந்தைக்கு எத்தனை வயசாகுது" என்று யாரேனும் கேட்கும்போது முகம் மாறிவிடுகிறது..

ஒரு பிரச்சனையும் இல்லை கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று சொல்லியிருந்தால் கூட நம்பிக்கையோடு காத்திருக்கலாம்..

கவலையிலும்.. தன் அழகிலும் கவனம் இல்லாமல் போனதிலும்.. அவள் பொலிவு குறைந்து விட்டதாக குறைப்பட்டுக் கொள்வான் அஷோக்..

அவனும் அதைத்தான் விரும்பினான்.. தாய் தந்தை தன்னோடு இருப்பதில் அஷோக்கிற்கு ஏகோ போக குஷி.. ஆனால் மாலினியோ சீனிவாசனோ மகனை ஏற்றுக் கொண்டார்களேயான்றி மருமகளை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை..

இதில் வேறு குழந்தை பிறக்க ஏன் தாமதம் என்று மாலினி தோண்டி துருவி கேட்டதும்.. கமலி வெள்ளந்தியாக உண்மையைச் சொல்லிவிட.. நூல் இழையாக கொட்டிக் கொண்டிருந்த போலி பாசமும் அறுந்து.. மாமியாரின் சுயரூபம் வெளிப்பட்டு முழு வெறுப்புக்கு ஆளானாள் கமலி..

எதைத் தொட்டாலும் குற்றம் என்று கடுகடுத்து கொண்டிருந்த மாமியாரை பற்றி கணவனிடம் புகார் கூற முடியவில்லை..

"அம்மாவும் அப்பாவும் நம்ம கூட இருக்கறதுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கமலி.. எங்க நம்ம கல்யாணத்த்தால வந்த விரிசல்.. கடைசி வரைக்கும் என்னை ஏத்துக்காமலேயே போயிடுவாங்களான்னு நினைச்சு பயந்துட்டேன்.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று பூரித்து பேசும் போதும்.. வேலை விட்டு வந்தவுடன் அம்மாவின் மடியில் தலை சாய்த்து படித்துக் கொள்ளும்போதும்.. உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் சஞ்சலங்களை வெளியில் சொல்ல முடியாது கமலியின் மனது கனத்து போகும்..

மாலினியின் மகள் ராகவி தலை பிரசவத்திற்காக அண்ணன் வீட்டிற்கு வந்திருக்க.. முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டாள் கமலி..

ராகவிக்கு பிறந்த குழந்தையை கையில் ஏந்திய போது அவள் அடைந்த சிலிர்ப்பும்.. சந்தோஷமும் அதற்கு இரண்டு மடங்காக.. தலையில் கொட்டி கவிழ்த்த நெருப்பை போல் அனுபவித்த துன்பமும் ஈரம் காய்வதற்கு முன்.. சொந்த வீட்டிலேயே அகதியாக நடத்தப்பட்டாள் அவள்..

தலை பிரசவத்திற்கு வந்திருந்த ராகவி குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் அண்ணன் வீட்டில் தான் தங்கியிருந்தாள்..

குழந்தையை தூக்கவே கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

குழந்தை லேசாக நோவு கண்டாலும் "கண்ட சனியன்களோட கண்ணு பட்டு குழந்தைக்கு திருஷ்டி ஆகிடுது.. பொறாமை பிடிச்ச ஜென்மங்க.. இதுங்க கிட்ட இருந்த தாயும் பிள்ளையும் பாதுகாக்கிறதுக்குள்ள என் உயிரே போயிடும் போலிருக்கு..!" என்று கருவிக்கொண்டே தாயும் பிள்ளையுமாய் அமர வைத்து உப்பும் மிளகாயுமாய் சுத்தி போடுவாள் மாலினி..

முன்பெல்லாம் அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டு ஆறுதல் சொன்ன கணவன் இப்போது மரண வலியோடு மனம் வெம்பி தவித்துக் கொண்டிருக்கும் கமலியை கண்டு கொள்வதே இல்லை..

ஒரே தோழியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை

ஆளில்லாமல் தலையணையிடம் தன் கதையைச் சொல்லி கதறி தீர்த்தாள் கமலி..

டயர்டா இருக்குமா..!

தூக்கம் வருது கமலி கொஞ்சம் தள்ளி படு..

ஏன் இப்படி ஒட்டி உறவாடற எரிச்சலா வருது..

எப்பவும் இதே நினைப்புதானா..! வீட்ல பெரியவங்க இருக்காங்க தங்கச்சி இருக்கா.. கொஞ்சம் ஈரமா நடந்துக்கோ..?

"நல்லா யோசிச்சு பார்த்தேன் கமலி அம்மா சொல்றதும் சரின்னு தோணுது.. எத்தனை நாளைக்கு தான் உன் முகத்தை நானும் என் முகத்தை நீயும் வெக்கு வெக்குன்னு பாத்துட்டு வாழறது.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா எல்லா பிரச்சனைகளும் சரியாகிடும்னு தோணுது.."

"உண்மைதான் கமலி.. ராகவி வந்திருந்த சமயத்துல கூட மாட ஒத்தாசைக்காக வேலைக்கு வந்து இருந்தாங்களே ராணியம்மா.. அவங்களோட பொண்ணு ராஜேஸ்வரி.. சாந்தமான முகம்.. ரொம்ப நல்ல பொண்ணு.. அழகு அறிவு பொறுமை.. இந்த மாதிரி எல்லா குண நலன்களும் சேர்ந்த ஒரு பொண்ணோட வயித்துல நம்ம குழந்தை ஜனிக்குறது பெரிய வரம் இல்லையா..?"

உண்மைதான் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனும் போது அடுத்த வழியை தேர்ந்தெடுப்பது தான் உத்தமம்.. சின்னதாய் ஒரு குட்டி பாப்பா.. என்னை அம்மா என்றழைக்கப் போகிறதா..? தேகம் சிலிர்த்து அடிவயிறு குளிர்ந்து போனது.. அவளும் அந்த குழந்தைக்காக ஆசைப்பட்டாள் ஏங்கினாள்.. கணவனின் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னாள்.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறோம் என்பதை அறியாமல்..

பணம் கொடுத்து வாடகை தாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டாள் ராஜேஸ்வரி..

அசோக்கின் உயிரணு ராஜேஸ்வரியின் கர்ப்பப்பையில் சேர்க்கப்பட்டு.. கரு உருவானது..

மிகுந்த மகிழ்ச்சி டைந்து ராஜேஸ்வரியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் கமலி..

அவனும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சரி என்று ஆமோதித்தான்..

ராஜேஸ்வரி பக்கத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்சி தீர்த்தாள் மாலினி..

கமலியின் மாமனார் மாலினியின் கை பொம்மை.. பெயரளவில் கணவன் பதவியை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜென்மம்.. அந்த வீட்டில் அவர் இருந்தாலும் இல்லையென்றால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை.. அதிகாரம் ஒழுக்க மாலினியின் கையில்..

அஷோக் பிறந்தநாளின் போது முதல் கேக் துண்டை கமலியை தள்ளி நிறுத்திவிட்டு ராஜிக்கு ஊட்டிய போதூ கூட தனியறைக்குள் சென்று கதறி தீர்த்து கண்களை துடைத்துக் கொண்டு வந்து சிரித்தாளே..

ஆனால் இருவரும் பழகும் விதத்தில் மாறுபாடு தெரியும் போது..?

ராஜேஸ்வரி அஷோக்கை மயக்கத்தோடு பார்ப்பதும் அவன் கொஞ்சும் பார்வையோடு சைகையில் பதில் சொல்வதும்.. என் பிரமையா..? குழம்பி போனாள் கமலி..

இருக்கட்டும் எல்லாம் குழந்தையை பெற்று என் கையில் கொடுக்கும் வரை..‌ பிறகு குழந்தைக்கு நான்தான் தாய்..‌அஷுதான் தந்தை.. எங்கிருந்து வரப்போகிறாள் இந்த ராஜேஸ்வரி.. என்ற அலட்சியத்தில் சில விஷயங்களை கவனிக்காமல் போனாள் கமலி..

தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்ற உணர்வுபூர்வமான பிணைப்போ அல்லது சபலமோ.. அல்லது முன்பே உருவாக்கிய திட்டமோ.. ஏதோ ஒன்று கமலியின் கண்ணை கட்டி விட்டு ராஜேஸ்வரியும் அஷோக்கும் இணைபிரியாத அளவில் நெருங்கி விட்டிருந்தனர்..

அஷோக் ராஜேஸ்வரியை இறுக்கமாக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவதை மட்டும் கமலி பார்க்காமல் போயிருந்தால் தன் கணவன் ஒரு துரோகி என்று கடவுளே வந்து சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்க மாட்டாள்..

நம்பிக்கையும் காதலும் கண்முன்னே சிதைந்து போக இதயம் வெடித்து சிதறியது.. வாழ்க்கையில் இப்படி ஒரு வழியை அனுபவித்ததே இல்லை கமலி..

அஷோக் பதறவில்லை.. குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவில்லை..

"எனக்கு ராஜேஸ்வரியை ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னால அவளை பிரிய முடியாது.. குழந்தை பிறந்த உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. அதுக்காக உன்னை கைவிட்டுடமாட்டேன்.. நீயும் என் கூடவே இருக்கலாம்.." என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறானே இவன் என் கணவன் தானா.. பைத்தியக்காரி போல் தலை சாய்த்து கண்ணீர் விழிகள் குறுகுறுக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"அய்யோ.. அம்மா.." என்று இதயம் ஓலமிட்டு அழுகிறது.. ஆனால் அடித்தொண்டையிலிருந்து கதறி தீர்க்க உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை..

"இப்படி ஒரு துரோகத்தை செய்ய எப்படி மனசு வந்தது அஷு.. எவ்வளவு காதலிச்சோம்.. நீங்கதான் எல்லாமே நம்பி இருந்தேன்.. அவ்வளவுதானா..?"

நம்ப முடியாமல் குமுறினாள்..

ஆஆஆஆ.. சித்தம் கலங்கியவளை பாய்ந்து சரமாரியாக அவனை அடித்தாள் சட்டையை கிழித்தாள்..

ஏய்.. ச்சீ.. அவளை உதறித் தள்ளினான் அசோக்..

"ஏய்.. என்ன..! நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. வாழ வழியில்லாத அனாத கழுதை..‌ குழந்தை பெத்து த்தர வக்கில்லாத மலட்டு நாய்.. உனக்கு வசதியான வாழ்க்கையும்.. ராஜா மாதிரி ஒரு புருஷனும் கேக்குதா..! இங்க பாரு என் பிள்ளைக்கு பொண்டாட்டியா வாழற தகுதி இவளுக்கு மட்டும் தான் இருக்கு.. இவதான் என் மருமக.. வயித்துல புள்ளைய சுமக்க வக்கில்லாத நீ ஒரு வேலைக்காரியா மூலையில ஒதுங்கி கிடக்கிறதுன்னா கிட.. இல்லைனா வீட்டை விட்டு கிளம்பி போயிட்டே இரு.." மாமியார் குரோதமாக கர்ஜித்தாள்..

கமலிக்கு நன்றாகவே புரிந்து விட்டது.. அனைத்தும் மாலினியின் திட்டமிட்ட சதி.. அஷோக் அன்னைக்கு உடந்தை..

"அவ்ளோதானா சூர்யா.. அவ்வளவுதான் இல்ல.. குழந்தை பெத்துக்க தகுதி இல்லைனா காதல் காணாமல் போயிடுமா..! நம் வாழ்வே தகுதியில்லாத ஆகிடுவேனா..?"

"ஒருவேளை அவனுக்கு அப்படி ஒரு குறை இருந்திருந்தா.. அதே அன்போடு நான் அவனை நேசிச்சிருந்திருப்பேன்.."

"எப்படி சூர்யா.. அவனால இப்படி ஒரு துரோகத்தை எனக்கு செய்ய முடிந்தது..

"குழந்தைக்காக அவளை கல்யாணம் செஞ்சுக்க போறேன்.. நீ என்னை விட்டு விலகிடுன்னு சொல்லி இருந்தா.. மனதை கல்லாக்கிக்கிட்டு அவன் வாழ்க்கையை விட்டு விலகிப் போயிருப்பேன்.. ஏ.. ஏமாத்திட்டான்.. காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு நம்ப வைச்சு கழுத்தறுத்துட்டான்.."

"என்னால ஜீரணிக்கவே முடியல.. நெஞ்செல்லாம் வலிக்குது.. அவனை மறந்துட்டேன்.. ஆனா பேசின பேச்சு.. அது என்னால மறக்கவே முடியல.."

வெளியே வந்து நின்றவன் வாயை அகலமாக திறந்து நீண்ட மூச்செழுத்தான்.. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.. அந்த கண்ணீரை காட்டி அவளை பலவீனப்படுத்த அவன் விரும்பவில்லை..

👌👌👌👌👌💖💖💖
 
Member
Joined
Jul 19, 2024
Messages
61

Aligaiya ah varuthu writer sis ....ana Kamali thapa ah purujukitangaley...aduthu yena agumooo
Kamliku baby pirakatha ah ....
Apovey Surya aruthala ah peysi irukalameyyy
Kamili doctor ah ta aruthala ah tha theydunaga....
 
New member
Joined
Jun 4, 2024
Messages
3

❤️❤️
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76

அசோக் மாறி துரோகம் பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க, சூர்யா மாறி உண்மையா இருகவங்களும் இருக்காங்க.. இனி சூர்யா பார்த்துப்பான்.. அசோக் பார்க் ல இருந்து இருப்பான் ன்னு நினைச்சா, நீங்க அவங்க தங்கச்சி வீட்ட கொண்டு வந்துட்டீங்க சனா மா.. unexpecting twist 👌
 
Member
Joined
Jan 26, 2024
Messages
67
அருமையான பதிவு
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
மனைவியின் துயரத்தை தன் துயராக நினைக்கும் கணவன் கிடைப்பது பாக்கியம் ...... அது கமலிக்கு சூரியா மூலம் தான் கிடைத்துள்ளது......👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍
கமலி உனக்காக தான் சூரியா அதை சூரியா நிருபிப்பான்....
கலங்காதே கண்மணியே....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Joined
Jul 25, 2023
Messages
16
ஒரு உயிர் துடிக்கும் போது அனிச்சை செயல் போல துடிக்கும் இன்னொரு உயிர்னு சொல்றது உனக்கு சூர்யா கிட்ட தான் கிடைக்கும் கமலி.

இதோ இப்போ கூட உன் வலியை அவன் வழியா அனுபவிக்கிறனே இதை விடவா உனக்கு பெரிய ஆறுதல் வேணும் என்ன அவனுக்கு உன்னைப்போல் வெளிப்படையாக உணர்வுகளை காட்ட தெரியலையே தவிர இனி உன்னோட அவன் வாழும் வாழ்வில் உனக்கான முழுமை உனக்கான அங்கீகாரம் எல்லாமே ரொம்பவே சிறப்பா கிடைக்கும் உன் கணவன் உனக்கு கிடைக்க வைப்பான் கவலைப்படாதே கமலி
 
Member
Joined
Dec 23, 2023
Messages
38
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Joined
Jun 11, 2024
Messages
18
மிகவும் உணர்ச்சிகரமான பதிவு.. இதயத்தை கனக்க வைத்து விட்டது.

கமலி சொல்வது போல துரோகத்தை மறக்க முடியாது.. அது தரும் காயமும் ரணமும் வலியும் வேதனையும் சீக்கிரம் ஆறாது. துரோகிகளைக் கூட மறந்து தூக்கி எறிந்து விடலாம். அதனால் ஏற்பட்ட வலியை மறப்பது கொஞ்சம் கடினம் தான்.

அஷோக் செய்தது பச்சை துரோகம்… பிடிப்பட்ட பிறகு ஏதோ கமலிக்கு வாழ்க்கை பிச்சை போடுவது போல பேசியது.. ச்சீய்.. இவனெல்லாம் மனித வர்க்கத்திலேயே சேர்த்தி இல்லை. மிருகங்களோடு ஒப்பிட்டு அந்த ஐந்தறிவு ஜீவன்களை கேவலப்படுத்தக்கூடாது…

இதற்கு சரியான பதிலடி… கமலி நிறைவான மகிழ்வான வாழ்க்கை வாழ்வதை கண்டு அந்த துரோகி வயிறு எரிய வேண்டும்…
கண்டிப்பாக சூர்யா கமலியின் இந்த வேதனையான மனநிலையிலிருந்து மீட்டெடுப்பான் தன் உண்மையான தூய்மையான நேசத்தால் …. 😍😍😍😍😍

முத்தாய்ப்பாக கமலி கருவுற்று துரோகிகள் முன் மேடிட்ட வயிற்றுடன் கர்வமாக நிற்க வேண்டும்…

நாடகத்தனமாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை…
உண்மையான அன்பு எந்தவித குறையையும் நிவர்த்தி செய்யும் என்று பறைசாற்ற… நமது கமலியின் சூர்யா தான் மகப்பேறு மருத்துவர் ஆயிற்றே… அவள் மனதை தேற்றி அவள் குறையை தீர்த்து விடுவார்… 😊

அதற்கு சனாம்மா மனது வைக்க வேண்டும் 😊

சூர்யாவின் கண்ணீரைக் காணாத கமல் அவன் எழுந்து சென்று விட்டதால் அவனைப் பற்றி தவறாக நினைக்க கூடாது… கண்டிப்பாக அவன் தன்னவளுக்கு ஆறுதல் தந்து அவளுக்காக தான் எப்போதும் மாறா நேசத்துடன் இருப்பான் என்று உணர வைப்பான் 😍😍😍😍

அடுத்த பதிவு வரும் வரை கொஞ்சம் பதட்டமாக இருக்கும்… 😞😞
 
Member
Joined
Apr 7, 2023
Messages
56
👌👌👌👌👌👌👌👌👌👌
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
67
வீட்டுக்கு வந்த பின் கணவனிடமிருந்து விலகியே இருந்தாள் கமலி.. அவள் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எதுவும் பிடிப்படவில்லை.. ஆனால் அந்த விலகல் நெருப்பாய் சுட்டது..

"என்னாச்சு கமலி.." ஏன் என்கிட்டருந்து தள்ளி தள்ளி போறே.. பார்க் போயிட்டு வந்ததுல இருந்து என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கற.." அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி..

கமலியின் புறக்கணிப்பு உள்ளுக்குள் அனலாய் தகித்துக் கொண்டிருந்த கோபத்தை கொழுந்துவிட்டெரிய செய்வதாய்..!!

வேகமாக சமையலறைக்குள் நுழைந்தவன் முரட்டுத்தனமாக அவள் கைப்பற்றி தன் பக்கம் இழுத்தான்.

"என்னடி பிரச்சனை உனக்கு..! என் முகத்தை இப்படி வச்சிருக்க..?"

"ப்ச்.. கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்களேன் ப்ளீஸ்."

"சரி ஆனா காரணம் மட்டும் சொல்லு.. பார்க்ல யாரையோ பார்த்ததிலிருந்து உன் முகமே சரியில்லை. யார் அவங்க. அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்..?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் அப்புறமா பேசறேன்.. நீங்க போய் உங்க வேலையை கவனிங்க." அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை கமலி.

"என்னை அவாய்ட் பண்றியா கமலி.!"

கமலி நொந்து போனாள்‌.

"ஐயோ ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க.. தேவையில்லாமல் நான் எதுக்காக உங்க மேல கோவப்படணும்." சற்று தள்ளி நின்று மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலையோடு தேங்காய் துருவல்களை போட்டு மூடி.. ஸ்விட்ச் ஆன் செய்தாள்.‌.

மிக்ஸியின் சத்தம் காதுகளுக்குள் இரைந்தது..

சூர்ய தேவ் கமலியை கூர்ந்து பார்த்தான்.

அவள் முகம் பேயறைந்தார் போல் வெளுத்துப் போயிருப்பதை கண்டதும் அவன் கோபம் கணிசமாக தணிந்து விட்டிருந்தது..

"ஐ அம் ஹியர் ஃபார் யூ கமலி.. எதுவா இருந்தாலும் என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்.." என்றான் நிதானமான குரலில்..

கமலி வெடுக்கென்று நிமிர்ந்தாள்.. "ஷேர் பண்ணிக்கிட்டு என்ன ஆகப்போகுது.. எதுவும் மாற போறது இல்ல.. என் வேதனை என்னோட.. விட்டுடுங்க.."

"என்னடி சொல்ற..? மனசுல இருக்கறதை வெளிப்படையா சொன்னாதானே பிரச்சனை என்னன்னு புரியும்..!"

"அதைப் பத்தி பேசக்கூட நான் விரும்பல.."

"அப்போ அதைப் பற்றி நினைச்சு கலங்கவும் கூடாது. மறந்துட்டு அடுத்த வேலையை பாக்கணும்."

"அப்படி என்னால இருக்க முடியலையே.! தட் மெமரிஸ ஆர் ஹான்ட்டிங்(haunting) மீ.. என்னால அதுலருந்து வெளியே வரவே முடியல..!" அடிக்குரல் உறுமலோடு கண்களை அழுத்தமாக மூடித் திறக்க.. சிவந்த விழிகள் கண்ணீரை கசிந்திருந்தன..

நெற்றி சுருக்கத்தோடு கமலியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யதேவ்..

"முதல்ல அந்த பார்க்ல பார்த்தவங்க யாரு.. அதை முதல்ல சொல்லு.."

அவள் முடியாது என்பதை போல் தலையசைத்தாள்..

"என்கிட்டே எதுவும் கேட்காதீங்க.. நான் இதையெல்லாம் மறக்க நினைக்கறேன்.."

சூர்யதேவ் மிக்ஸியையும் அடுப்பையும் அணைத்தான்..

"நீ மறக்கிற மாதிரி தெரியல..! முதல்ல இப்படி வா.. இங்க உட்காரு.." கமலியை இழுத்து வந்து டைனிங் டேபிளில் அமர வைத்து நாற்காலியை இழுத்து போட்டு அவள் எதிரே நெருக்கமாக அமர்ந்தான்..

"என்னாச்சு..? எது உன்னை இப்படி பயமுறுத்தது..?"

கமலி அமைதியாக சந்தன நிற மார்பிள் தரையை வெறித்தாள்..

"பதில் சொல்லுடி.." அவன் குரலில் கடுமை கூடியது..

"நான் நினைக்கிறது சரியா இருந்தா.. அவன்தான் உன்னோட.." என்றவன் அதற்கு மேல் சொல்ல விரும்பாமல் வார்த்தைகளை நிறுத்தினான்..

"அந்த பொண்ணு அவனோட வைஃப் கரெக்டா..?"

இல்லை என்று தலையசைத்தாள் கமலி..

"தென் ஹூ த ப்ளடி ஹெல் ஆர் தே?" பொறுமையிழந்து கத்த துவங்கினான் சூர்யதேவ்..

"அஷோக் தங்கச்சி ராகவி.. அவளோட ஹஸ்பெண்ட் சேத்தன்.." கமலி சலனமில்லாத குரலில் சொல்ல அவள் புருவங்கள் இடுங்கின..

"அவங்கள பார்த்து நீ ஏன் டென்ஷன் ஆகணும்..?"

"பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்துடுச்சு..‌ அந்த கசப்பான அனுபவங்கள்.. நிராகரிக்கப்பட்ட வலி வேதனை அவமானம்.. அப்படியே என் நெஞ்சை முறுக்கி பிழியுது.." நலிந்த குரலோடு விழிகளை மூடி திறந்தாள் கமலி..

"அவங்க இந்த ஊர்ல தான் இருக்காங்களா.. உனக்கு ஏற்கனவே தெரியுமா..?"

"எனக்கு எதுவும் தெரியல..! ராகவியோட புகுந்த வீடு செங்கல்பட்டுல இருந்ததா ஞாபகம்.. கோயம்புத்தூர் ஏன் வந்தாங்க எதுக்காக வந்தாங்க.. இப்ப என் கண்ணுல ஏன் விழுந்தாங்க எதுவும் தெரியல..!" சோர்ந்து தெரிந்தாள் கமலி..

"கமலி.. வேண்டாத கடந்த காலத்தை பத்தி யோசிச்சு ஏன் மனச போட்டு குழப்பிக்கற..!"

"நான் யோசிக்கல.. சம்பந்தப்பட்ட மனுஷங்க என் கண் முன்னாடி வரும்போது என்னால யோசிக்காமல் இருக்க முடியல..!"

சூரிய தேவ் அவளை கனிந்து பார்த்தான்..

"மனசுல எதுக்காக தேவையில்லாம இவ்வளவு வலியையும் வேதனையையும் சுமக்கனும்.. ஒருமுறை எல்லாத்தையும் வெளிப்படையா கொட்டி தீர்த்துட்டு மறந்திடுமா..!"

கமலி வாய் திறக்கவில்லை..

விழிகளை மூடி திறந்தபடி ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. "ஒரு கணவனா என்கிட்ட நீ எதையும் ஷேர் பண்ணிக்க வேண்டாம்.. அட்லீஸ்ட் ஒரு ஃபிரண்டா கூட என்னை நினைக்க முடியல இல்லையா..?"

"சரி ஓகே அப்புறம் உன் விருப்பம்.." அவர் தன் இரு தொடைகளிலும் கைகளை ஊன்றி எழுந்தான்..

கமலியின் தாழ்ந்திருந்த விழிகள் நிமிரவே இல்லை.. அவளை அழுத்தமாக ஒருமுறை பார்த்துவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்த வேளையில்..

"காதல் யாருக்கு வேணாலும் வரும்.. ஆனா எந்த இடத்தில காதல் வலிமை பெறுதுன்னு தெரியுமா..?" கமலியின் குரலில் அவள் பக்கம் திரும்பினான்.. கமலியின் விழிகள் நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன..

முதலில் அவள் கேள்வியே புரியவில்லை.. பிறகு எங்கிருந்து பதில் சொல்வது.. யோசனையோடு கருவிழிகளை உருட்டியவன் தோள்களை குலுக்கி தெரியாது என்பதைப் போல் தலையசைக்க..

வெறுமையாக சிரித்தாள் கமலி..

"வாழ்க்கையோட கஷ்ட நஷ்டங்களும் போராட்டங்களும் ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற அன்பையும் காதலையும் பாதிக்காம இருக்கணும்.. என்ன நடந்தாலும் சரி இந்த உலகமே அழிஞ்சாலும் சரி உனக்காக நான் இருப்பேன்னு தன்னோட துணை உடைஞ்சு போற சமயத்துல அவங்களை தாங்கி பிடிக்கணும் அதுதானே சூர்யா காதல்..!"

"சின்ன சின்ன பிரச்சனைகள் கூட ஒருத்தர் மேல வச்சிருக்கற அன்பை உடைச்சு காணாமல் போக வைக்குதுன்னா அதுக்கு பேரு காதலே இல்ல.. அது வேற..! இந்த உண்மையை நான் ஏன் புரிஞ்சுக்காம போனேன் சூர்யா..!"

"வாழ்க்கையில் நிறைய விஷயங்களை இழந்து தான் ஒரு பாடத்தை கத்துக்கணும்னா.. அந்த வீணா போன அனுபவத்தால யாருக்கு என்ன பிரயோஜனம்..!"

"அஷோக் கூட நான் மூணு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையில்.. இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப கொடுத்து வச்சவன்னு நினைச்சேன்.. திகட்ட சந்தோஷத்தை தவிர வேற எதையும் நான் அனுபவிச்சதில்ல.. அஷோக் மாதிரி என்னை உண்மையா காதலிக்கிற ஒரு புருஷன் கிடைச்சது என்னோட பிறவி பாக்கியம்னு நினைச்சேன்.. ஆனா என்னோட சந்தோஷம் நிம்மதி.. எங்க ரெண்டு பேரோட காதல் வாழ்க்கை.. எல்லாம் நானே என் கண்ணை ஏமாத்திக்கிற கானல் நீர்ன்னு அப்ப எனக்கு புரியல.."

"ஒரு பொண்ணுக்கு குழந்தை இல்லாதது அவ்வளவு பெரிய குற்றமா சூர்யா..?"

"மூணு வருஷமா குழந்தை இல்லைன்னு டாக்டர் கிட்ட போனபோது.. ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு என் கருப்பைக்கு பலம் இல்லைன்னு ரிப்போர்ட் வந்துடுச்சு.. எ.. எனக்கு கு.. குழந்தையே பிறக்காதாம்.." கமலியின் குரல் நடுங்கியது.. "உண்மையிலேயே ரொம்ப நொறுங்கி போயிட்டேன்.." கமலி நீண்ட மூச்சோடு விழிகளை மூடினாள்..

அதனால என்னம்மா உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை..!! அவள் தலையை தடவிக் கொடுத்தான் அஷோக்..

கருத்தரிக்க முடியாது என்ற வேதனையை விட கணவன் தன்னை தாங்கி பிடிக்கிறான் என்ற சந்தோஷம் காயப்பட்ட இதயத்திற்கு மயிலிறகால் மருந்து தடவியதை போல் ஆறுதலை தந்தது..

"மூணு வருஷம் தானே ஆகுது இன்னும் நமக்கு நிறைய டைம் இருக்கு.. காத்திருப்போம்.. கண்டிப்பா நமக்கு குழந்தை பிறக்கும்.. விஞ்ஞானமும் மருத்துவமும் எவ்வளவோ முன்னேறி இருக்குது..! குழந்தை பெத்துக்க வழியா இல்ல.." அவள் கலங்கி நிற்கும்போதெல்லாம் அசோக் இப்படித்தான் கமலியை அணைத்து தேற்றுவான்..

கணவனின் அன்பிலும் அனுசரணையிலும் குழந்தை இல்லையென்பது ஒரு பெரிய குறையாக தோன்றவில்லை அவளுக்கு..

"கல்யாணமாகி மூணு வருஷம் ஆகிடுச்சா..? குழந்தை எங்கே? ஆணா பெண்ணா?" என்று யாரேனும் கேட்கும்போது முகம் மாறிவிடுகிறது..

ஒரு பிரச்சனையும் இல்லை கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்று மருத்துவ ரிப்போர்ட் சொல்லியிருந்தால் கூட நம்பிக்கையோடு காத்திருக்கலாம்..

கர்ப்பப்பையில் குறைபாடு என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு நிம்மதியோடு வாழ முடியவில்லை.. சிலந்தி வலை போல் அந்த எண்ணங்களுக்குள்ளேயே சிக்கி சுழன்றாள் கமலி..

நிறைமாத கர்ப்பிணிகளை பார்த்தால் ஏக்கம்..

குழந்தையை தூக்கியபடி நடந்து வரும் தாய்மார்களை பார்த்தால் துக்கம்..

இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிள்ளைக்கு தூரத்தில் தெரியும் குருவியை கைகாட்டி சோறு ஊட்டும் அம்மாக்களை பார்த்தால் கவலை..

வேறு பொழுதுபோக்குகளின் கவனத்தில் திசை திருப்பிக் கொண்டாலும்.. தன்னை சுற்றிலும் இது போன்ற ஏதேனும் ஒரு காட்சியைக் காண நேரும் போது நெஞ்சம் சுருக் சுருக்கென்று குத்துகிறது..

இது போதாதென்று.. ரணத்தை மேலும் குத்தி கிளறுவதை போல்.. குழந்தை பிறக்க வைத்தியம் சொல்கிறேன் ஆலோசனை தருகிறேன் பேர்வழி என்று.. அக்கம் பக்கத்து வீட்டாரும் தெரிந்தவர்களும் சொல்லும் அறிவுரைகள்.. அப்பப்பா..

சீமந்தங்களில் புறக்கணிக்கப்படுவதும்.. திருமணங்களில் ஓரங் கட்டப்படுவதும்.. கிளைக் கொடுமைகள்..

இதில் ஏதேனும் ஒரு குழந்தையை ஆசையாக பார்த்து ரசித்து விட்டால் இவள் காலடி மண்ணை எடுத்து சுத்தி போடும் பெரிய கிழவிகள்.. சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்வாள்..

கமலியின் சோர்ந்த முகம் பார்க்கும் போது மட்டும்.. நெஞ்சில் போட்டு தட்டி ஆறுதல் சொல்லுவான் அஷோக்..

கவலையிலும்.. தன் அழகிலும் கவனம் இல்லாமல் போனதிலும்.. அவள் பொலிவு குறைந்து விட்டதாக குறைப்பட்டுக் கொள்வான் அவன்..

இனிப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருந்த வாழ்க்கை.. சற்று தொய்வோடு.. ஸ்லோமோஷனில் சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தாள் கமலி..

அடுத்த கட்டம் என்னவென்று யோசிப்பதற்கு முன்னே.. அஷோக் பிணக்குகள் நீங்கி தன் பெற்றோரோடு ஒன்று சேர்ந்து விட்டான்..

மாலினி.. சீனிவாசன்.. கிராமத்து வீட்டை நிரந்தரமாக பூட்டிவிட்டு.. ஒரே மகனோடு வந்து செட்டிலாகிவிட்டனர்..

அவனும் அதைத்தான் விரும்பினான்.. தாய் தந்தை தன்னோடு இருப்பதில் அஷோக்கிற்கு ஏகோ போக குஷி.. ஆனால் மாலினியோ சீனிவாசனோ மகனை ஏற்றுக் கொண்டார்களேயன்றி மருமகளை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை..

இதில் வேறு குழந்தை பிறக்க ஏன் தாமதம் என்று மாலினி தோண்டி துருவி கேட்டதும்.. கமலி வெள்ளந்தியாக உண்மையைச் சொல்லிவிட.. நூல் இழையாக ஒட்டிக் கொண்டிருந்த போலி பாசமும் அறுந்து.. மாமியாரின் சுயரூபம் வெளிப்பட்டு முழு வெறுப்புக்கு ஆளானாள் கமலி..

எதைத் தொட்டாலும் குற்றம் என்று கடுகடுத்து கொண்டிருந்த மாமியாரை பற்றி கணவனிடம் புகார் கூற முடியவில்லை..

"அம்மாவும் அப்பாவும் நம்ம கூட இருக்கறதுல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கமலி.. எங்க நம்ம கல்யாணத்தால வந்த விரிசல்.. கடைசி வரைக்கும் என்னை ஏத்துக்காமலேயே போயிடுவாங்களான்னு நினைச்சு பயந்துட்டேன்.. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.." என்று பூரித்து பேசும் போதும்.. வேலை விட்டு வந்தவுடன் அம்மாவின் மடியில் தலை சாய்த்து படித்துக் கொள்ளும்போதும்.. உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கும் சஞ்சலங்களை வெளியில் சொல்ல வாய்ப்பில்லாது கமலியின் மனது கனத்து போகும்..

மாலினியின் மகள் ராகவி தலை பிரசவத்திற்காக தன் அண்ணன் வீட்டிற்கு வந்திருக்க.. முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டாள் கமலி..

ராகவி பெற்ற குழந்தையை கையில் ஏந்திய போது அவள் அடைந்த சிலிர்ப்பும்.. சந்தோஷமும் அதற்கு இரண்டு மடங்காக.. தலையில் கொட்டி கவிழ்த்த நெருப்பை போல் அனுபவித்த துன்பமும் ஈரம் காய்வதற்கு முன்.. சொந்த வீட்டிலேயே அகதியாக நடத்தப்பட்டாள் அவள்..

தலை பிரசவத்திற்கு வந்திருந்த ராகவி குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் அண்ணன் வீட்டில் தான் தங்கியிருந்தாள்..

குழந்தையை தூக்கவே கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

குழந்தை லேசாக நோவு கண்டாலும் "கண்ட சனியன்களோட கண்ணு பட்டு குழந்தைக்கு திருஷ்டி ஆகிடுது.. பொறாமை பிடிச்ச ஜென்மங்க.. இதுங்க கிட்டருந்து தாயையும் பிள்ளையையும் பாதுகாக்கிறதுக்குள்ள என் உயிரே போயிடும் போலிருக்கு..!" என்று கருவிக்கொண்டே தாயும் பிள்ளையுமாய் அமர வைத்து உப்பும் மிளகாயுமாய் சுத்தி போடுவாள் மாலினி..

முன்பெல்லாம் அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டு ஆறுதல் சொன்ன கணவன் இப்போது மரண வலியோடு மனம் வெம்பி தவித்துக் கொண்டிருக்கும் கமலியை கண்டு கொள்வதே இல்லை..

ஒரே தோழியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவள்.. வேலை மிகுதியில் நேரமில்லாமல் தத்தளிக்கும் மாயாவை தான் வேறு புலம்பி மென்மேலும் குழப்புவானேன்..

ஆளில்லாமல் தலையணையிடம் தன் கதையைச் சொல்லி கதறி தீர்த்தாள்..

பரவாயில்லை கணவனுக்காக பொறுத்துக் கொள்கிறேன்.. என்னவன் அவன் சொந்தங்களோடு சந்தோஷமாக இருக்கிறான் அது போதும்.. என்று திருப்தியடைந்து மனதை கல்லாக்கி.. காயங்களை சகித்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் தான் அடுத்த இடி..

"அஷு.." என்றழைத்து சின்ன குழந்தை போல் தன் வேதனைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள நெருங்கி வரும் மனைவியை தள்ளி வைத்தான் அஷோக்..

டயர்டா இருக்கும்மா..!

தூக்கம் வருது.. கமலி கொஞ்சம் தள்ளி படு..

ஏன் இப்படி ஒட்டி உறவாடற.. எரிச்சலா வருது..

எப்பவும் இதே நினைப்புதானா..! வீட்ல பெரியவங்க இருக்காங்க தங்கச்சி இருக்கா.. கொஞ்சம் இங்கிதமா நடந்துக்கோ..?

எத்தனை மாறிப் போய்விட்டான் இந்த அஷோக்..

கமலி ஒன்றும் தாம்பத்திய உறவுக்காக ஏங்கி நிற்கவில்லை.. ஒரு சிறு அணைப்பு.. நெற்றியில் ஒரு முத்தம்.. எல்லாம் சரியாகிவிடும் நான் பாத்துக்கறேன்.. பொய்யாக கூட சொல்லப்படும் இந்த ஆறுதல் வார்த்தைகள் போதும்.. கண்ணீரை விழுங்கி கொண்டு மகிழ்ச்சியோடு சிரிக்க முடியும் அவளால்..

அது கூட மறுக்கப்படும் நிலையில் வாழ்க்கையில் தோற்றுப் போனதாக இடிந்து போகிறாள்..

எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.. காதலில் திளைத்து கணவன் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களில் சிறு துயரத்தை கூட தேடி கண்டுபிடிக்க முடியவில்லை..

இப்போது அதற்கு நேர் மாறாக நிம்மதி எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறாள்..

ஒவ்வொரு விஷயத்திலும் மருமகளை குத்தி காட்டி மனதளவில் காயப்படுத்தினாள் மாலினி..

நல்லவேளை இந்த பட்டணத்து வாழ்க்கையில் வாசலில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து புரணி பேசும் பழங்கால சம்பிரதாயம் இல்லை.. அந்த வகையில் மாமியாரிடமிருந்து தப்பித்துக் கொண்டாள் கமலி..

ராகவியை குழந்தையோடு சீரும் சிறப்புமாக அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தாயிற்று..

பல நாட்கள் இரவில் படுப்பதற்கு கூட அறைக்கு வருவதில்லை அஷோக்.. காதல் புளித்து போனது.. கமலியின் அழகு சலித்து போனது..

இல்லற வாழ்க்கை எக்ஸ்பயரி ஆகிவிட்டது..

வாழ்க்கையே வெறுத்து பைத்தியம் பிடித்து விடும் நிலையில்தான்.. அஷோக் அவளுக்கு அடுத்த ஆஃபர் தந்தான்..

சரோகேசி.. இன்னொரு பெண் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாடகைத் தாய் முறை..

இதுவும் படிப்பு வாசனையை அறியாத கிராமத்திலிருந்து வந்திருக்கும் அவன் தாய் கொடுத்த யோசனை தானாம்.. அப்படித்தான் அஷோக் சொன்னான்.. கமலியும் மேற்கொண்டு அதைப்பற்றி எந்த கேள்விகளும் கேட்டுக் கொள்ளவில்லை..

"நல்லா யோசிச்சு பார்த்தேன் கமலி அம்மா சொல்றதும் சரின்னு தோணுது.. எத்தனை நாளைக்குதான் உன் முகத்தை நானும் என் முகத்தை நீயும் வெக்கு வெக்குன்னு பாத்துட்டு வாழறது.. நம்ம ரெண்டு பேருக்கும் இடையில குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா எல்லா பிரச்சனைகளும் சரியாகிடும்னு தோணுது.."

"ஊர் பெயர் தெரியாத குழந்தையை தத்தெடுத்து வளர்க்கறதெல்லாம் ரொம்ப ரிஸ்க்.. குழந்தை நம்ம ரத்தத்தில் உருவானதாய் இருக்கணும்.. என் குணநலங்களை உரிச்சு வச்சுக்கிட்டு நம்ம சந்ததியோட பெயர் சொல்ற வாரிசா இருக்கணும்.."

"எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி தெரியுதே..!"

"உண்மைதான் கமலி.. ராகவி வந்திருந்த சமயத்துல கூடமாட ஒத்தாசைக்காக வேலைக்கு வந்து இருந்தாங்களே ராணியம்மா.. அவங்களோட பொண்ணு ராஜேஸ்வரி.. சாந்தமான முகம்.. ரொம்ப நல்ல பொண்ணு.. அழகு அறிவு பொறுமை.. இந்த மாதிரி எல்லா குண நலன்களும் சேர்ந்த ஒரு பொண்ணோட வயித்துல நம்ம குழந்தை ஜனிக்கறது பெரிய வரம் இல்லையா..?"

அப்படியானால் நான் சபிக்கப்பட்டவள்..

தொண்டைக்குள் விழுங்கிய எச்சில் கூட கசந்து போக கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் கமலி..

"முதல்ல எனக்கு பெருசா இதுல ஈடுபாடு இல்லை கமலி.. எனக்கு நீ உனக்கு நான் மட்டும் போதும்னு நினைச்சேன்.. ஆனா அம்மாவோட தொந்தரவு தாங்கல.. என் பேரை சொல்ல ஒரு வாரிசு வேணுமாம்.. மகள் வயித்து பேரனை பார்த்தாச்சு.. மகன் வழி பேரக்குழந்தையும் பாத்துட்டா நிம்மதியா என் கட்டை வேகும்னு கண்கலங்கி பேசறாங்க.. எனக்குமே குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும்.. உனக்கு தான் தெரியுமே.. சின்னதா நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா.. இன்னொரு பெண்ணோட வயித்துலருந்து பிறந்தாலும் அது உன்னோட குழந்தை இல்லையா கமலி.. நீ தானே அந்த சிசுவை வளர்க்க போற.." இத்தனை நாள் கணவனின் மூச்சுக்காற்று கூட தன்னை தொடவில்லையே.. கை பிடித்துக் கொண்டு உருகி உருகி அவன் பேசிய தோரணையில் மயங்கி போனாள் கமலி..

உண்மைதான் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனும் போது அடுத்த வழியை தேர்ந்தெடுப்பது தான் உத்தமம்.. சின்னதாய் ஒரு குட்டி பாப்பா.. என்னை அம்மா என்றழைக்கப் போகிறதா..? தேகம் சிலிர்த்து அடிவயிறு குளிர்ந்து போனது.. அவளும் அந்த குழந்தைக்காக ஆசைப்பட்டு ஏங்கினாள்.. கணவனின் விருப்பத்திற்கு சம்மதம் சொன்னாள்.. தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக் கொள்கிறோம் என்பதை அறியாமல்..

பணம் கொடுத்து வாடகை தாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டாள் ராஜேஸ்வரி..

அசோக்கின் உயிரணு ராஜேஸ்வரியின் கர்ப்பப்பையில் சேர்க்கப்பட்டு.. கரு உருவானது..

மிகுந்த மகிழ்ச்சியடைந்து ராஜேஸ்வரியை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் கமலி..

"ம்கூம்.. பெத்துக்க துப்பில்ல.. இதுல இவளே கர்ப்பமான மாதிரி சந்தோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.." மெலிதாக மாமியாரின் சத்தம் காதோரம் தீண்டிய போதிலும்.. மகிழ்ச்சியில் காதடைத்து போனது..

"ராஜேஸ்வரியோடது ரொம்ப ஏழை குடும்பம்.. அங்கே பெருசா என்ன வசதி இருக்க போகுது.. இந்த வீட்டோட வாரிசை சுமக்கிற பொண்ணு.. அவளுக்கு தேவையானதை நாம தான் செய்யணும்.. குழந்தை பிறக்கிற வரைக்கும் ராஜேஸ்வரி இந்த வீட்டிலேயே இருக்கட்டும்.. கண்ணுக்கு கண்ணா அவளை நான் பார்த்துக்கறேன்.." கமலியின் முன்புதான் மாலினி அசோக்கிடம் வந்து சொன்னாள்..

அவனும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அன்னையின் முடிவை ஆமோதித்தான்..

கண்முன்னே தன் குழந்தை ராஜேஸ்வரியின் வயிற்றில் வளர போகிறது.. கமலிக்கும் சந்தோஷம்தான்..

ஆனால்.. மாமியாரை தாண்டி.. தன் கணவனாகப்பட்டவன் ராஜேஸ்வரியை உள்ளங்கைக்குள் வைத்து தாங்கியதில் மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல்..

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்.. கமலியை தவிர.. யாரும் அவளை அழைப்பது கூட இல்லை.. கணவன் கூட மறந்து போனான்..

ராஜேஸ்வரி பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கொஞ்சி தீர்த்தாள் மாலினி.. வகை வகையாய் பலகாரங்களை சமைத்து ஊட்டினாள்..

அஷோக் மாதம் தவறாமல் ராஜியை செக்கப் அழைத்துச் சென்றான்.. எதிலும் கமலியை கலந்து கொள்வதில்லை..

கமலியின் மாமனார் மாலினியின் கை பொம்மை.. பெயரளவில் கணவன் பதவியை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு அற்ப ஜென்மம்.. அந்த வீட்டில் அவர் இருந்தாலும் இல்லையென்றால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை.. பயனும் இல்லை.. அதிகாரம் அனைத்தும் மாலினியின் கையில்..

மாலையில் கை நிறைய தின்பண்டங்களோடு வரும் அசோக் நேரடியாக ராஜேஸ்வரியிடம் தான் செல்லுவான்..

மணிக்கணக்கில் அவளிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பான் அப்படி என்னதான் பேசுவானோ தெரியாது.. அவள் வயிற்றை தொட்டுப் பார்த்து ஆத்மார்த்தமாக தன் குழந்தையை உணர்ந்து சிலிர்த்து போவான்..

தன் ரத்தம் என்ற பாசம்.. இதையெல்லாம் தவறாக எடுத்துக் கொள்வதா..? மண்டு.. தன் தலையில் தட்டி.. மானசீகமாக தன்னையே திட்டிக் கொள்வாள் கமலி..

அஷோக் பிறந்தநாளின் போது முதல் கேக் துண்டை கமலியை தள்ளி நிறுத்திவிட்டு ராஜிக்கு ஊட்டிய போது கூட தனியறைக்குள் சென்று கதறி தீர்த்து கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்து சிரித்தாளே..!

ஆனால் இருவரும் பழகும் விதத்தில் மாறுபாடு தெரியும் போது..?

ராஜேஸ்வரி அஷோக்கை மயக்கத்தோடு பார்ப்பதும் அவன் கொஞ்சும் பார்வையோடு சைகையில் பதில் சொல்வதும்.. என் பிரமையா..? குழம்பி போனாள் கமலி..

இருக்கட்டும் எல்லாம் குழந்தையை பெற்று என் கையில் கொடுக்கும் வரை..‌ பிறகு குழந்தைக்கு நான்தான் தாய்..‌அஷுதான் தந்தை.. எங்கிருந்து வரப்போகிறாள் இந்த ராஜேஸ்வரி.. என்ற அலட்சியத்தில் சில விஷயங்களை கவனிக்காமல் போனது யார் பிழையோ..?

போகப் போக இரவில் கூட சில நேரங்களில் அஷோக் தன்னருகில் இல்லை என்பதை உணர்ந்தாள் கமலி..

எழுந்து அவனை தேடி வந்தால்.. திருதிருத்த முழியோடு பதட்டத்தோடு எதிரே வருவான்..

தண்ணி குடிக்க வந்தேன்..
அம்மாவை பாக்கறதுக்காக போனேன்..
ராஜேஸ்வரி கத்துன மாதிரி இருந்துச்சு..

ஏதாவது ஒரு காரணம்.. கமலி நம்பினாள்..

தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்ற உணர்வுபூர்வமான பிணைப்போ.. சபலமோ.. அல்லது முன்பே உருவாக்கிய திட்டமோ.. ஏதோ ஒன்று கமலியின் கண்ணை கட்டி விட்டு ராஜேஸ்வரியும் அஷோக்கும் இணைபிரியாத அளவில் நெருங்கி விட்டிருந்தனர்..

அஷோக் ராஜேஸ்வரியை இறுக்கமாக அணைத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவதை மட்டும் கமலி பார்க்காமல் போயிருந்தால் தன் கணவன் ஒரு துரோகி என்று கடவுளே வந்து சொல்லியிருந்தாலும் அவள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டாள்..

நம்பிக்கையும் காதலும் கண்முன்னே சிதைந்து போக இதயம் வெடித்து சிதறியது.. வாழ்க்கையில் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை..

அஷோக் பதறவில்லை.. குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவில்லை..

"எனக்கு ராஜேஸ்வரியை ரொம்ப பிடிச்சிருக்கு.. என்னால அவளை பிரிய முடியாது.. குழந்தை பிறந்த உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. அதுக்காக உன்னை கைவிட்டுடமாட்டேன்.. நீயும் என் கூடவே இருக்கலாம்.." என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்கிறானே இவன் என் கணவன் தானா.. பைத்தியக்காரி போல் தலை சாய்த்து கண்ணீர் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி..

"அய்யோ.. அம்மா.." என்று இதயம் ஓலமிட்டு அழுகிறது.. ஆனால் அடித்தொண்டையிலிருந்து கதறி தீர்க்க உடம்பிலும் மனதிலும் தெம்பில்லை..

"இப்படி ஒரு துரோகத்தை செய்ய எப்படி மனசு வந்தது அஷு.. எவ்வளவு காதலிச்சோம்.. நீங்கதான் எல்லாமேன்னு நம்பி இருந்தேனே.. அவ்வளவுதானா..?"

சீரணிக்க இயலாமல் அடிநெஞ்சிலிருந்து குமுறினாள்..

"நீ ஏன் துரோகம்னு நினைக்கற.. என் குழந்தையை சுமக்கிறவளுக்கு நான் தரக்கூடிய அங்கீகாரம்.. நீ பெருசா சீன் கிரியேட் பண்ற அளவுக்கு ஒன்னும் இல்லை.. நான் ஒன்னும் உன்னை விட்டுடலையே.. பாவம் ஆதரவில்லாத நீயும் எங்க போவ.. நிச்சயமா உன்னை நான் நல்லபடியா பாத்துக்குவேன்.."

அளவில்லாத காதலை கொட்டித் தந்து.. நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு.. ஐயோ அந்த காலங்கள் எல்லாம் பொய்யா..!

ஆஆஆஆ.. சித்தம் கலங்கியவளாய் பாய்ந்து சரமாரியாக அவனை அடித்தாள் சட்டையை கிழித்தாள்..

ஏய்.. ச்சீ.. அவளை உதறித் தள்ளினான் அசோக்..

"ஏய்.. என்ன..! நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. வாழ வழியில்லாத அனாத கழுதை..‌ குழந்தை பெத்து த்தர வக்கில்லாத மலட்டு நாய்.. உனக்கு வசதியான வாழ்க்கையும்.. ராஜா மாதிரி ஒரு புருஷனும் கேக்குதா..! இங்க பாரு என் பிள்ளைக்கு பொண்டாட்டியா வாழற தகுதி இவளுக்கு மட்டும் தான் இருக்கு.. இவதான் என் மருமக.. வயித்துல புள்ளைய சுமக்க வக்கில்லாத நீ ஒரு வேலைக்காரியா மூலையில ஒதுங்கி கிடக்கிறதுன்னா கிட.. இல்லைனா வீட்டை விட்டு வெளியே போடி.." மாமியார் குரோதமாக கர்ஜித்தாள்..

கமலிக்கு நன்றாகவே புரிந்து விட்டது.. அனைத்தும் மாலினியின் திட்டமிட்ட சதி.. அஷோக் தன் அன்னைக்கு உடந்தை..

பதுமை போல் ஓரத்தில் ஒதுங்கி நின்றாள் ராஜேஸ்வரி..

"அவ எங்க போவா.. அவளுக்கு ஆதரவு தர யார் இருக்காங்க.. விடுங்கம்மா.. அவளும் இங்கேயே இருந்துட்டு போகட்டும்.. அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவளுக்கு இன்னொருத்தி கூட எப்படி அனுசரிச்சு போகணும்னு தெரியாம போயிடுமா என்ன..? அதுவுமில்லாம அவளுக்கு என்னை விட்டால் நாதியில்ல.. நான் இல்லாம அவளால வாழ முடியாது..! விடுங்க.. விடுங்க.." அசோக் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்த பிறகு காலில் விழுந்து நீயே சரணாகதி என்று ஆதரவு தேட அவள் ஒன்றும் சுயமரியாதையை தொலைத்த ஈன பிறவி இல்லையே..!

கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டவள்.. வெறுங்கையோடு அங்கிருந்து புறப்பட்டு தோழி வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.. தெய்வாதீனமாக அவளை தாங்கிப் பிடிக்க கடவுள் கொடுத்த தோழியாக மாயா இருந்தாள்.. இல்லையேல் அந்த நேரத்தில் கமலி என்ன முடிவெடுத்திருப்பாளோ கடவுளுக்கு தான் வெளிச்சம்..

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க மறந்து வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள் கமலி..

"அவ்ளோதானா சூர்யா.. அவ்வளவுதான் இல்ல.. குழந்தை பெத்துக்க தகுதி இல்லைனா காதல் காணாமல் போயிடுமா..! நான் வாழவே தகுதியில்லாதவளா ஆகிடுவேனா..?"

"ஒருவேளை அவனுக்கு அப்படி ஒரு குறை இருந்திருந்தா..? அதே அன்போடு நான் அவனை நேசிச்சி இருந்திருப்பேன்.. அந்த நேர்மையும் அன்பும் அவனுக்கு ஏன் இல்லாம போச்சு?"

"எப்படி சூர்யா.. அவனால இப்படி ஒரு பச்ச துரோகத்தை எனக்கு செய்ய முடிஞ்சது..

"குழந்தைக்காக அவளை கல்யாணம் செஞ்சுக்க போறேன்.. நீ என்னை விட்டு போய்டுன்னு சொல்லியிருந்தா.. மனசை கல்லாக்கிக்கிட்டு அவன் வாழ்க்கையை விட்டு விலகிப் போயிருப்பேன்.. ஏ.. ஏமாத்திட்டான்.. காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொல்லி.. சொல்லி நம்ப வைச்சு கழுத்தறுத்துட்டான்.."

"என்னால ஜீரணிக்கவே முடியல.. நெஞ்செல்லாம் வலிக்குது.. அவனை மறந்துட்டேன்.. ஆனா அலட்சியமா என்னை அனாதைன்னு எடுத்தெறிஞ்சு பேசின பேச்சு.. அதை என்னால மறக்கவே முடியல.."

"அவனை மறக்கவும் முடியாம மன்னிக்கவும் முடியாம.. உள்ளுக்குள்ள செத்துகிட்டு இருக்கேன்..!" நெஞ்சு வெடித்து துக்கம் பீறிட சத்தமாக கதறிக் கொண்டிருந்தாள் கமலி..

"சூர்யா..‌ சூர்.. சூர்..யா.." ஆதரவு தேடி கரங்கள் அவனை நோக்கி நீண்டன..

சட்டென அங்கிருந்து எழுந்து சென்றிருந்தான் சூர்ய தேவ்..

ஹக்.. இதயத்துடிப்பு நின்று போனது போல் சிலையானாள் கமலி..

நிறுத்த முடியாத அழுகை விம்மலாக வெளிப்பட முகம் உதறலோடு நடுங்கிக் கொண்டிருந்தது..

"உன்கிட்ட ஆறுதல் தேடிக்கக்கூட எனக்கு உரிமை இல்லையா.." சுய பச்சாதாபத்தில் வெந்து போனாள் கமலி..

தன்னை சூர்யதேவ் தாங்கிக் கொள்ளவில்லை என்று மருகியவள் வேதனையின் ஊற்றாக அவன் கண்கள் சுரந்த தாய்ப்பாலை கவனிக்காமல் போயிருந்தாள்..

வெளியே வந்து நின்றவன் வாயை அகலமாக திறந்து நீண்ட மூச்சிழுத்தான்.. கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.. முதல் மழை போல் முதல் கண்ணீர்..

அந்த கண்ணீரை காட்டி அவளை பலவீனப்படுத்த அவன் விரும்பவில்லை..

என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை.. அவள் வலி.. அழுகை வேதனையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. இப்படி இருதயம் வலித்ததே இல்லை.. பிரசவ வலி போல் துடித்தான்.. அழுதான்..

முன் நெற்றியை சுவற்றில் சாய்த்தவன் முஷ்டியை மடக்கி சுவற்றில் குத்தினான்..

அவள் வலியை அவன் உணர்கிறான்..! அனுபவிக்கிறான்.. துடிக்கிறான்.. இனி அரவணைத்துக் கொள்வான்.. ஆறுதல் தருவான்..

கமலியின் கணவனாக.. அவள் நண்பனாக..

இது காதல் இல்லை என்றால் வேறு எது காதல்..!

தொடரும்..
உனக்காக டாக்டர் கண்களில் வரும் கண்ணீர் தான் உன்மேல் வைத்திருக்கும் காதலுக்கு சாட்சி.... இனி எல்லாமுமாக சூர்யா இருக்கும் அழாத தங்கமே.... 😍
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
81

கமலி மா அழாதட தங்கம் உன்னோட சூர்யா எப்பவும் உன் கூட இருப்பான் ஒரு கணவனாக மட்டுமே இல்ல ஒரு நல்ல நண்பராகவும் நல்லபடியாக உன்ன பாத்துக்குவாரு நிச்சயமா உனக்கு குழந்தை பிறக்கும் கலங்காத செல்லமாக 🥺🥺🥺
 
Member
Joined
Jan 29, 2023
Messages
75
💖💝💖💝💖💝💖💝
 
Top