- Joined
- Jan 10, 2023
- Messages
- 97
- Thread Author
- #1
"என்னடி அதுக்குள்ள கிளம்பற நீ வந்த வேலை அரைகுறையா நிக்குதே..! நீ கூட இருந்தா எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.. இங்க வேற யாருமே நான் சொல்றத நம்ப மாட்டாங்கடி புரிஞ்சுக்கோ.." நிவேதாவிடம் கவலையாக புலம்பிக் கொண்டிருந்தாள் வெண்மதி
"அதுக்கென்னக்கா பண்றது.. என் அத்தைக்கு உடம்பு சரியில்லை.. ஹோட்டல் சாப்பாடு தின்னு என் புருஷனுக்கு நாக்கு செத்துப்போச்சாம்.. பாப்பாவையும் ஸ்கூலுக்கு அனுப்பனுமே.. எத்தனை நாளைக்கு இங்க இருக்க முடியும் சொல்லு.. நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்கோ.. உன் கவலை அர்த்தமில்லாதது.. இங்க எல்லாம் சரியாத்தான் இருக்குது.. தேவையில்லாம அண்ணனை சந்தேகப்படாதே.. அண்ணியும் பாவம் இரண்டு பேரும் குழந்தை இல்லாம ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்காங்க.. ஏதாவது குட்டையை குழப்பி பிரச்சனையை உண்டாக்கிடாதே.."
"உன் ஆராய்ச்சி துப்பறிவு வேலைகளையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு கொஞ்ச நாள் சந்தோஷமா தங்கி இருந்துட்டு ஊருக்கு போற வழிய பாரு.." என்றபடி தன் பொருட்களை எல்லாம் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் நிவேதா..
"இது என்ன சோதனை.. இந்த வீட்ல யாருக்குமே சந்தேகம் வரலையே.. அப்ப நான் பாக்கறதெல்லாம் பிரமையா.. இல்லையே.. எல்லாமே என் கண் முன்னாடி தத்துரூபமா நடக்குதே..! ஐயோ கடவுளே நான் இதை யார்கிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்குவேன்.. வேற வழியே இல்ல வருண் கிட்ட தான் இதை பத்தி பேசி ஆகணும்..! உன் பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொரு பொண்ணு மேல ஏண்டா உனக்கு கண்ணு போகுதுன்னு வெளிப்படையா எப்படி அவன் கிட்ட கேட்க முடியும்.. மிளகாய் மாதிரி காரமா கடிப்பானே..! ம்கூம். பேசுற விதத்தில் பேசி உண்மையை வாங்கணும்..!" வெண்மதி இப்படி யோசித்துக் கொண்டிருக்க நிவேதாவையும் குழந்தையும் அவள் கணவன் சுந்தர் வந்து அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று விட்டான்..
அவள் ஐ லவ் யூ சொன்ன பிறகு வருண் விதவிதமாய் அறிவுரைகளை அள்ளி வழங்க.. எதற்கும் பயன் இருந்ததாய் தெரியவில்லை..
சொல்லப்போனால் கடந்த இரண்டு நாட்களாக தேம்பாவணியின் ஆட்டம் எல்லை மீறி போவதாக தோன்றியது வருணுக்கு..
அனைவரும் பார்க்க இடித்துக் கொண்டு அமருவதும் எதிரெதிரே வரும்போது உரசி கொண்டு செல்வதும்.. காரிலிருந்து இறங்கும்போது அவன் தோளோடு தோள் இடித்து.. சந்தர்ப்பம் வாய்த்தால் கன்னத்தில் முத்தமிட்டு பை சொல்வதும்.. என அவள் இனிய தொந்தரவுகளை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறிப் போகிறான் வருண்..
ஆனாலும் இரவில் அவளை சந்திக்காமல் தவிர்க்க நினைப்பதில்லை..
குட் நைட் சொல்லிட்டு குடுகுடுன்னு திரும்பி ஓடி வந்துடனும்.. என்று நினைத்துக் கொண்டு உள்ளே செல்பவன் அவள் உறங்கிய பிறகு தான் வெளியே வருவான்..
என்னை பாக்காம போனா தூங்க மாட்டா..! தனியா உக்காந்து பயப்படுவா அழுவா என்ற சமாதானம் வேறு..
உண்மையில் சொல்லப் போனால் சின்ன சின்ன சீண்டல்களோடு அவளை உறங்க வைத்து நெற்றியில் கன்னத்தில் முத்தமிட்டு சில சமயங்களில் உதட்டில் கூட இடறி விழும் இந்த முத்த மாத்திரை அவன் உறக்கத்திற்கு மருந்தா அல்லது அவளுக்கா..?
தேம்பாவணி லேசு பட்ட ஆள் இல்லை.. நெருங்கி பக்கத்தில் அமர்வது அவன் குப்பியிலிருந்து மாத்திரையை எடுக்கும் போது கன்னத்தில் முத்தமிடுவதும்.. என அவன் கோபத்திற்கு கொஞ்சமும் மசியாமல் இம்சை தருகிறாள்..
"இப்படி பண்ணாதே தேம்ஸ்.. இனிமே இந்த பக்கமே வரமாட்டேன்.."
"இப்ப என்ன செஞ்சுட்டேன்..?"
"நீ என்னை டெம்ட் பண்ற..! உனக்கே தெரியும் நான் சான்ஸ் கிடைச்சா யூஸ் பண்ணிக்கற ஆளுன்னு.. புரிஞ்சுக்கோடி.. நீ இப்படி நெருங்கி வரும் போது ஐ காண்ட் கண்ட்ரோல் மை செல்ஃப்.."
"ஏன் கண்ட்ரோல் பண்றீங்க ஜஸ்ட் எக்ஸ்பிரஸ் யுவர்செல்ப்..!"
நீண்ட பெருமூச்செறிந்து அவளை பார்த்தான் வருண்..
"நான் எக்ஸ்பிரஸ் பண்ண ஆரம்பிச்சா நீ அடுத்த மாசமே ப்ரெக்னன்ட் ஆகிடுவடி.." மனதில் நினைத்ததை வெளியே சொல்ல முடியாமல் கோபப்பார்வையோடு..
"உனக்கு திமிர் கூடி போச்சு.. அதனால தான் இந்த மாதிரியெல்லாம் பேசிட்டு இருக்கே.. இவ்வளவு சொல்றேனே உனக்கு புரியலையா.. நீ எங்க வாழ்க்கையில இடியா வந்து நிற்கிற தேம்பா.."
அவள் மனம் கசந்து வழிய கண்கள் விரக்தியாய் சிரிக்கிறது..
"எனக்கு புரியுது டாக்டர்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னோட இம்சைகளை பொறுத்துக்கோங்க.."
"அப்புறம்..?"
"அப்புறம் தான் நான் உங்க எல்லாரையும் விட்டு போயிடுவனே.?"
"வாட் யூ மீன்..?" அவன் குரலில் ஒரு பதட்டமும் நீளமான கோபமும்..
"ஐ மீன் நான் ரொம்ப நாளைக்கு இங்க இருக்க முடியாது.. என்னைக்காவது ஒரு நாள் இங்கிருந்து போய்த்தானே ஆகணும்.. அதுவரைக்கும் என் காதலை சுதந்திரமா அனுபவிச்சுக்கட்டுமா..?"
"நீ உன் காதலை சுதந்திரமா அனுபவிக்கிறதுக்கு நான் என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணனும்.. அப்படித்தானே!"
"ஓகே நீங்க ரியாக்ட் பண்ணாதீங்க.. சாவித்திரியோட சத்தியவானா.. சீதாவோட ஏக பத்தினி விரதன் ராமனாவே இருங்க..! நான் கெட்டவளா இருந்துட்டு போறேன்.."
"தேம்பாவணி ஐம் மேரீட்.. இதை உன் மனசுல நல்லா ஏத்திக்கோ.. அப்பதான் தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் உன்னை விட்டு போகும்.."
"எத்தனையோ முறை எனக்குள்ள சொல்லி பாத்துட்டேன்.. நீங்க கல்யாணமானவர் இன்னொருத்திக்கு சொந்தமானவர்னு. என் மனசு கேட்கவே மாட்டேங்குது.. வருண் உனக்கு தான் சொந்தம்னு அடிச்சு சொல்லுது.."
இதழ் குவித்து ஊதியபடி அயர்ச்சியாக அவளை பார்த்தான் வருண்..
"சரி நீ படு.."
"ஐ நீட் ஒன் ஹக்.." இரு கைகளை நீட்டி தலை சாய்த்து அவனைப் பார்த்தாள்..
"நோ வே.."
"ப்ளீஸ் ஒரு பிரண்ட்லி ஹக்.. எனக்காக" என்று கேட்ட பிறகு அவன் மறுக்கவில்லை.. அவள் விழித்திருந்த இரு கைகளுக்கு இடையே தன் கரத்தை நுழைத்து முதுகை வளைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
"தேங்க்யூ இப்ப நான் நிம்மதியா தூங்குவேன்.."
"நான் எப்படி தூங்கறது..?"
"ஏன் டாக்டர்..?"
"ப்ச்.. பேசாம படு.. இனிமே காதல் கீதல்னு சொல்லிக்கிட்டு என் பக்கத்துல வந்துடாத.. எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமாம்.."
"கெட்ட கோபம் வந்தா என்ன பண்ணுவீங்க..?" என்று கேட்டுவிட்டு அவள் உறங்கிப் போக..
"ம்ம். ரேப் பண்ணிடுவேன்" என்று அவன் சொன்னதை தேம்பாவணியின் ஆழ்மனம் உள்வாங்கிக்கொண்டது..
"ஏண்டி என்னை டார்ச்சர் பண்ற எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.. ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன்.. இப்ப எல்லாம் சரியாத்தான் தெரியும்.. ஆனா போகப்போக எல்லாம் தப்பாக்கிடும் தேம்ஸ்.. வயசாகும்போது இந்த காதல் கசந்து போகும்.. வாழ்க்கை சலிச்சு போகும்.." மன நோக சொன்னவனின் நினைவுகள் கிளினிக்கில் நடந்ததை மீண்டும் மன அடுக்குகளில் சேமித்துக் கொண்டிருந்தன..
இன்று ஒரு பெண் அவனிடம் கவுன்சிலிங்காக வந்திருந்தாள்..
முதல் விசிட்..
இளம்பெண்ணாக தெரிந்தாள்.. ஆனால் முகத்தில் அத்தனை சோகம்.. வாழ்க்கை சலித்து விட்டதாம்.. காதல் கசந்து விட்டதாம்..
"என் ஹஸ்பண்ட் என்னை நல்லாத்தான் பாத்துக்கறார் டாக்டர்.. ஆனா எனக்கு தான் அவரை பிடிக்கல.."
"ஏன் பிடிக்கல..?"
"அவர் என்னைவிட 20 வயசு பெரியவர்.. வெளிய நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போகும்போது அவர் உன்னோட அப்பாவான்னு கேட்டு எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்க.. என் கூட படிச்ச தோழிகள் என் வயசுல சொந்தக்கார பொண்ணுங்க தன் அழகான கணவனோடு ஜோடியாக வரும்போது எனக்கு இவரோடு சேர்ந்து வெளிய போகவே பிடிக்கல.. எல்லாரும் என்னை கேலியா பாக்கற மாதிரி தோணுது. என்னை பற்றி ரகசியமா பேசி சிரிக்கிற மாதிரி ரொம்ப அசிங்கமா இருக்கு.."
"இதெல்லாம் உங்க மன பிரமையா இருக்கலாம் இல்லையா..?"
"பிரமையில்ல டாக்டர் உண்மை.. நிறைய பேர் என்கிட்டேவே வந்து ரொம்ப அனுதாபப்படுற மாதிரி என் அந்தரங்க வாழ்க்கையை பத்தி விசாரிக்கறாங்க.. சொல்ல வெட்கக்கேடு.. என் புருஷனுக்கு வயசாகிட்ட மாதிரி தெரியறதுனால நான் ஈசியா மடங்கிடுவேன்னு இளவட்ட பசங்க என்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசறாங்க.. ரொம்ப டார்ச்சரா இருக்கு டாக்டர்.."
"நீங்க நினைக்கிறது தப்பு.. வயதான புருஷன் சின்ன வயசு இந்த பேதமெல்லாம் கிடையாது.. வக்கிர மனசுடைய ஆம்பளைங்க எந்த பொண்ணா இருந்தாலும் வலைவீசி பார்க்கத்தான் நினைப்பாங்க நீங்கதான் தைரியமா இருக்கணும் அவங்கள எதிர்த்து நிக்கணும்.."
"தப்பு பண்ணிட்டேன்னு தோணுது.. ஆரம்பத்திலேயே நான் யோசிச்சுருக்கணும்.."
"ஏன் யோசிக்கல.. அப்பவே நீங்க வேண்டாம்னு சொல்லி இருக்கலாமே.?"
"அப்ப பாக்க நல்லாத்தான் இருந்தாரு.. இப்போ அஞ்சே வருஷத்துல தலை முடியெல்லாம் கொட்டி கண்ணாடி போட்டு முகத்தில் சுருக்கம் விழுந்து.. ரொம்ப வயசான மாதிரி தெரியறார்.. இப்பல்லாம் அவர் நெருக்கம் கூட எனக்கு பிடிக்கல.."
"சரி உங்களுக்கு பிடிக்கலைன்னா அவர்கிட்ட உங்க நிலையை எடுத்து சொல்லி பிரிஞ்சிடுங்க.. இப்படி சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துல அவரை வெறுக்கறதுக்கு பதிலா சுமூகமா பேசி பிரியறது எவ்வளவோ பெட்டர் இல்லையா..?"
"என்ன காரணம் சொல்லி பிரியறது..! இப்போ என்னை பரிதாபமா விசாரிக்கிற சொந்தமெல்லாம் நான் விவாகரத்து வாங்கி தனியா போயிட்டா என்னை ரொம்ப கேவலமா பேசுவாங்க.. ஏன் தெரியுமா அவ ரொம்ப நல்லவர்.. என்னை ரொம்ப நல்லாவே பார்த்துக்கறார்.. உடல் தோற்றத்தை தவிர அவர்கிட்ட வேற எந்த குறையுமே இல்லை.. அப்புறம் நான் எப்படி அவரை பிரிய முடியும்.. அதே நேரத்தில் அவர் கூட சேர்ந்து வாழவும் பிடிக்கல.. ரொம்ப மன உளைச்சலா இருக்கு டாக்டர். நீங்க சொல்லுங்க நான் ரொம்ப தப்பானவளா..? இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னுடும் போலிருக்கு.."
வருண் இழுத்து மூச்சு விட்டான்..
"இங்க வர்றவங்க யாருமே தப்பானவங்க இல்லை.. உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு.. ஒண்ணு சகிச்சுக்கிட்டு வாழறது.. இன்னொன்னு சுதந்திரமா வாழறது.. எதை தேர்ந்தெடுக்கனும்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.."
"கணவன் மனைவி சந்தோஷமா வாழ அழகும் தோற்றமும் ஒரு பொருட்டே இல்லைன்னு நீளமா அட்வைஸ் பண்ணலாம்.. ஆனா நாளைக்கு திரும்ப நாலு பேர் அழகை குறிப்பிட்டு பேசும்போது மறுபடியும் உங்க மனசுக்குள்ள ஆழமா அமுங்கியிருக்கிற அந்த எண்ணங்கள் மீண்டும் எழுந்துக்கும்.."
"கணவன் மனைவி சேர்ந்து வாழ மனப்பொருத்தம் தான் முக்கியம்.. காலப்போக்குல அழிஞ்சு போற, இந்த அழகைவிட லைஃப் பார்ட்னரோட குணம்தான் உயர்ந்ததுன்னு நீங்க யோசிக்கணும்.. நான் அதைப்பற்றி சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை."
"இப்படி நீங்க மன உளைச்சல் பட்டு கஷ்டப்படுறதுக்கு பேசாம அவரோட உட்கார்ந்து பொறுமையா பேசுங்க.. உங்களுக்கு அவரை பிடிக்கவே இல்லைங்கற பட்சத்துல நீங்க ரெண்டு பேரும் பிரியறதுதான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.. உங்க மனசுல இருக்கற பாரத்தை அவர்கிட்ட இறக்கி வைங்க.. நிச்சயமா அவர் உங்களை புரிஞ்சுக்குவார்.. இவ்வளவு நல்ல கணவர் கண்டிப்பா உங்களுக்காக யோசிப்பார்.. உண்மையை அவரை காயப்படுத்தாமல் மென்மையாக எடுத்து சொல்லுங்க.. இதை விட்டா வேற வழியே இல்ல.. ஆனா எதுவானாலும் ஒன்னுக்கு ரெண்டு முறை நல்லா யோசிச்சு முடிவெடுங்க.. இதுல உங்க வாழ்க்கை மட்டுமில்லை, அவரோட வாழ்க்கையை அடங்கியிருக்கு.."
"ம்ம்.. யோசிக்கறேன் டாக்டர்.. என்னோட டிப்ரஷனுக்கு மெடிசன்ஸ்..?"
"மெடிசன்ஸ் தேவை இல்லை தைரியமா ஒரு முடிவெடுங்க.. மனசு ரிலாக்ஸ் ஆகிடும்.." வருண் மென்மையாய் சிரிக்க அந்தப் பெண் விடை பெற்றுக் கொண்டாள்..
கதவை திறந்து கொண்டு அவள் உருவம் வெளியேறியதும் வருணின் சிரிப்பு மாறியது..
வந்திருந்த பெண்ணின் இடத்தில் தேம்பாவணியை வைத்து கற்பனை குதிரைகள் எங்கெங்கோ அவனை அழைத்து சென்றது..
பிடித்த வண்ணங்களை கூட சரியாக தேர்ந்தெடுக்க தெரியாத ரெண்டுங்கட்டான் வயது அவளுடையது..
இப்படி ஒருத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டால்.. அடுத்த ஐந்து பத்து வருடங்களில் நாளைக்கு ஏதோ ஒரு மனநல மருத்துவனின் முன்பு என்னை குறை சொல்லியபடி அவளும் இப்படித்தான் அமர்ந்திருப்பாளோ..!
நீ அவளை காதலிக்கறியே வருண்..
இப்ப அது முக்கியமில்லை அவளோட வாழ்க்கை தான் முக்கியம்..
கண்டிப்பா அவளுக்கு ஏத்த மாதிரி இளமையா ஒருத்தன் வருவான் அவன்தான் தேம்பாவணிக்கு பொருத்தமானவன்.. அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைவதுதான் சரியா இருக்கும்.. நான் அவளுக்கு வேண்டாம்.. மனம் உறுதியாய் மறுத்து முடிவெடுத்துக் கொண்டது..
அத்தனை உறுதியும் அவளை பார்க்கும் போது தண்ணீர் பட்ட மண்பாண்டமாய் குழைந்து கரைந்து போகிறது என்பதுதான் உண்மை..
"இது என்ன.. இந்த டப்பாவை மட்டும் கவர்ல போட்டு பத்திரமா எடுத்து வைக்கறீங்க.." மாணவி ஒருத்தி லேப் அசிஸ்டன்ட் ஒருவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்..
"பொட்டாசியம் சயனைடு.. மோசமான விஷம்.. ரீசண்டா இதை லேபரட்டரில வாங்க கூடாதுன்னு பேன் பண்ணிட்டாங்க.. இது ரொம்ப நாளைக்கு முந்தைய ஸ்டாக் பாதுகாப்பா டிஸ்போஸ் பண்ண சொல்லியிருக்காங்க.."
"ஐயோ நல்லவேளை நான் கையாள தொடல.." மாணவி பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட.. கொஞ்சம் கூட பொறுப்பில்லாத அந்த லேப் அசிஸ்டன்ட் அந்த கெமிக்கல் டப்பாவை கொண்டு போய் பின்பக்கமிருந்த குப்பைகள் நிறைந்த பகுதியில் தூக்கியடித்து விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்..
அவர் தூக்கி வீசிய அந்த KCN தேம்பாவணியின் அறை கப்போர்ட்டுக்குள் பத்திரமாக ஒளிந்திருந்தது..
தொடரும்..

Last edited: