• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 34

Active member
Joined
Jan 18, 2023
Messages
140
Aiyooo Kamali ku onnum aga kudathu...... super wordings.....wow epi🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Joined
Mar 14, 2023
Messages
50
திருமண கோலத்தில் whatsappல் போட்டோ அனுப்பி வைத்த பிறகு அசோக்கிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் இல்லை.. அஷோக் தன்னை தொடர்பு கொள்ள முடியாதபடிக்கு அவன் எண்ணை கமலி பிளாக் செய்திருந்தாள் என்பது வேறு விஷயம்..

ஆனாலும் முன்பை போல் வெவ்வேறு எண்களிலிருந்து அழைத்து அவளை தொந்தரவு செய்வதில்லை..

பிழைப்பதற்காக ஏதேனும் ஒரு வேலையை கெட்டியாக பிடித்துக் கொண்டு தன்னை மறக்க முடியாமல் மருகி தவித்து.. வாழ்க்கையே வெறுத்து தற்கொலை எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பாள்.. திரும்பத் திரும்ப அழைத்து.. அவள் பலவீன புள்ளியில் கைவைத்து மனதை கலைத்து தன் வசப்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டிருந்தான் அஷோக்..

ஆனால் அவன் எண்ணங்களுக்கு நேர்மாறாக.. எதிர்பாராத விதமாக இத்தனை சீக்கிரத்தில்.. புகழ்பெற்ற மருத்துவனோடு கமலியை திருமண கோல நிழற்படத்தை whatsapp பில் கண்டதும்.. உண்மையை ஜீரணிக்க முடியாமல் போயிருக்கலாம்..!

கமலிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்று புகைச்சலோடு அடிவயிறு திகுதிகுவென்று தீப்பற்றி எரிந்திருக்கலாம்.. ஏதோ ஒன்று..!

தன் அலைபேசி எண்ணை இப்போதுவரை மாற்றாமல் தான் வைத்திருக்கிறாள் கமலி..

எது எப்படியோ..! திருமணத்திற்கு பின்பு அஷோக்கிடமிருந்து அழைப்பு குறுஞ்செய்தி எதுவும் வராமல் போனதில்.. மிகப்பெரிய தொல்லை தீர்ந்ததாக கமலி தனக்குள் நிம்மதி கொண்டிருந்தாள்..

அந்த நிம்மதியை கெடுக்கும் வண்ணம் அடுத்த தெருவில் குடி வந்திருக்கிறாள் ராகவி..

அன்று பார்க்கில் தன் கணவனின் கைகோர்த்தபடி நடைபயிற்சி வந்த ராகவி கமலியை பார்த்த பார்வையில் அத்தனை நக்கலும் இளக்காரமும் நிறைந்திருந்தது..

முதலில் ஆச்சரியப்பட்டு பின்பு கண்கள் சுருக்கி இதழ் வளைத்து நக்கலாக சிரித்து கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தவள் பக்கத்தில் அமர்ந்திருந்த சூர்யதேவ் டாக்டரை கண்டதும் முகம் சிறுத்து கணவன் சேத்தனிடம் மீண்டும் ஏதோ ரகசியமாகச் சொல்லிக் கொண்டு.. கமலியை முறைத்தபடி அவர்கள் அமர்ந்திருந்த பாதை வழியாக வந்து கொண்டிருப்பதை கண்டதும் கமலி அவசரமாக சூர்ய தேவ்வை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தாள்..

ராகவி தன்னை நெருங்கி பேச்சுக் கொடுக்கப் போகிறாளா அல்லது கடந்து செல்ல போகிறாளா என்பது வேறு விஷயம்.. ஆனால் அந்த நேரத்தில் ராகவியை எதிர்கொள்ளும் அளவிற்கு மனதில் தைரியம் இல்லை கமலிக்கு..!

மறுமணம் என்பது தேச துரோக குற்றமில்லை.. அதற்காக கமலி ஒன்றும் அஞ்சி நடுங்கவுமில்லை..

முதல் காரணம் ராகவியின் மேடிட்ட வயிறு.. நிறை மாத கர்ப்பிணியாய் கணவனின் கைப்பற்றி கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.. நடையில் மட்டும்தான் நிதானம்.. பார்வையிலும் பேச்சிலும் அத்தனை அடக்கமில்லை.. ஏதோ கமலியால் முடியாத ஒன்றை அவள் சாதித்து விட்டதை போல் முகத்தில் அத்தனை இறுமாப்பு..

ராகவியின் அந்த மமதையில் கமலியின் கடந்த கால சம்பவங்கள் கண்முன் வந்து போயின.. ராகவியால் கமலி அனுபவித்த துயரங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை..

தன் கண் பார்வை பட்டதால் குழந்தைக்கு கால் கொப்பளித்து விட்டதாக குற்றம் சாட்டும் மாமியாரிடமிருந்தும் நாத்தனாரிடமிருந்தும் வதை சொற்களை வாங்கிக் கட்டிக் கொண்ட கொடுங்கோல் காலமது..

மீண்டும் அதே மனிதர்களை சந்திக்க நேரிடும் போது கொஞ்சமும் மாறாத அதே இளக்கார பார்வை வலிக்கிறது.. ராகவி புன்னகையோடு தன்னிடம் வந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசினாலும்.. நிச்சயம் அவள் பேச்சு குதர்க்கமாக குத்தலோடு தன்னை காயப்படுத்தும் நோக்கோடுதான் இருக்கும்.. என்பதை கமலி நன்றாகவே அறிவாள்..

சங்கிலித் தொடர்போல் ராகவியிலிருந்து தொடங்கி அசோக்கில் முடியும் இந்த சகித்துக் கொள்ள முடியாத நினைவுகளை ஓரங்கட்ட வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட மனிதர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.. என்று நினைத்திருந்தாள்‌..

ஆனால் சோதனை காலமென்று.. மீண்டும் மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்..?

சூர்ய தேவ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்திருந்தாள் ராகவி.. இதே மருத்துவமனையில் தான் பிரசவம் பார்த்துக்கொள்ளப் போகிறாளாம்..

கமலி தான் அன்று ஓபி பார்த்துக் கொண்டிருந்தாள்..

கமலி ராகவியை தவிர்க்க நினைத்தது உண்மைதான். அவளோடு ஆயிரம் மனஸ்தாபங்கள் உண்டு என்றாலும் கடமை என வந்துவிட்டால் கமலி மிகச் சரியாக இருப்பாள்..‌

பணம் கட்டியதற்கான ரசீதும் ஓபி கார்டும் பெற்றுக்கொண்ட ராகவி ஹாஸ்பிடல் வளாகத்தில் தன் அழைப்புக்காக காத்திருந்தாள்..

அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ள அவள் அனுப்பப்பட்டது கமலியிடம்..

கமலி எந்த உணர்வுகளையும் வெளி காட்டிக் கொள்ளவில்லை..! அதுவும் போக இப்போது அஷோக்கே எதிரில் வந்து நின்றாலும் நேர் பார்வையோடு அவனை தைரியமாக எதிர்கொள்ளுமளவிற்கு தன் மனதை பக்குவப்படுத்தி கொண்டிருகக்கிறாள்..

ஆத்மார்த்தமாக தன்னை காதலிக்கும் கணவனின் துணையும் எந்த நிலையிலும் அவன் தன்னை தாங்கிப் பிடிப்பான் என்ற நம்பிக்கையும்.. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை கமலிக்கு தந்திருந்தது..

அளவுக்கதிகமான மகிழ்ச்சி துயரங்களை.. தோற்கடித்து மறக்கடித்து விடும்..

தன்னையே சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் தேவனின் நெருக்கத்திலும்.. பெரிய மனித தோரணைக்குள் ஒளிந்திருக்கும் அவன் குழந்தைத்தனத்திலும்.. தன்னையே தொலைத்து காயங்களையும் கசப்புகளையும் மறந்திருந்தாள் கமலி..

அதனால் இந்த நேரத்தில் ராகவியை எதிர்கொள்வது அவளை பொறுத்தவரை அத்தனை கடினமான காரியமாக இருக்கவில்லை..

வெளிச்சத்தின் நூல் பிடித்து பயணிக்கிறாள்.. இனி இருளை கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லையே..!

மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே வேலை என்று வந்துவிட்ட பிறகு தன் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. அதுதான் அந்த மருத்துவமனையில் முக்கிய விதிமுறையும் கூட..! கமலியும் அதற்கு விதிவிலக்கல்லவே..!

ஆனால் ராகவிக்கோ கமலியிடம் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் செய்து கொள்வதில் விருப்பமில்லை..

கமலியை பார்த்து முகம் சுளித்தாள் அவள்..

"வேற நர்ஸ் யாரும் இல்லையா..?"

"சாரி அவங்க கிட்ட என்னால செக்கப் பண்ணிக்க முடியாது..!" என்று கவுண்டரில் போய் புகார் சொல்லி சாந்தியின் செக்ஷன்க்கு மாற்றி விடப்பட்டாள் ராகவி..

கமலி இந்த விஷயத்தைப் பெரிது படுத்தவில்லை.. தெரிந்த சங்கதிதானே..! விழிகளை அழுத்தமாக மூடி திறந்து நீண்ட பெருமூச்சோடு அந்த நிகழ்வை கடந்துவிட்டாள்..

அதற்கடுத்து இரண்டு செக்கப்களுக்கும் தன் அன்னையோடு வந்திருந்தாள் ராகவி..

கமலியை பார்த்து தாயும் மகளுமாக முகம் சுழித்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்..

கமலியின் திசை பக்கம் வருவதையே கவனமாக தவிர்த்தனர்.. கமலிக்கு சிரிப்புதான் வந்தது..

தங்கள் மகளுக்கு பிரசவம் பார்த்துக்கொள்ள புகழ்பெற்ற இந்த மருத்துவமனை வேண்டும்.. கைதேர்ந்த டாக்டர்கள் வேண்டும்.. ஆனால் இந்த நர்ஸ் மட்டும் வேண்டாம்..! போகட்டும்.. இவர்கள் கண்ணில் படாமல் இருப்பதும் நல்லதுதான்.. அவர்கள் வசதிக்கேற்ப எந்த நர்சை உதவிக்கு அழைக்க வேண்டுமோ அழைத்துக் கொள்ளட்டும்.. என்று மனதில் நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினாள்..

தாயும் மகளும் தன்னை நிராகரித்து ஒதுங்குவது அப்படி ஒன்றும் மனதை பெரிதாக பாதிக்கவில்லை என்பதால் கணவனிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ளவில்லை கமலி..

சேத்தனுக்கு இங்கே மாற்றலாகி இருக்க வேண்டும்..! இரண்டாவது பிரசவம் என்பதால் தாய் வீட்டிற்கு அழைக்கவில்லை போலிருக்கிறது..

மகளுக்கு உதவியாக பிரசவத்திற்காக மாலினி இங்கே வந்திருக்க வேண்டும்.. எல்லாம் யூகம் தான்.. அதை தாண்டி அவர்களைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை கமலி..

இந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் உரிமையாளனின் மனைவிதான் கமலினி தன் மகளின் மூலம் தெரிந்து கொண்டிருந்த மாலினி அடக்கி வாசித்தாள்..

ஆனாலும் எப்போதும் அழுது வடிந்து கொண்டு சோர்வாக மாமியாருக்கு பயந்து அறைக்குள் முடங்கி கிடக்கும் கமலியிலிருந்து.. முற்றிலும் வேறுபட்டு தோற்றத்தில் சோபை நிறைந்து.. பார்வையில் கம்பீரம் கூடி தெரியும் இந்த கமலியை பார்க்க பார்க்க எரிச்சல்..

செக்கப் வரும் போதெல்லாம் கமலியை விட்டு ஒதுங்கி நின்றாலும்.. இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்ற வயிற்றெரிச்சலில் கமலியை வேண்டாத வார்த்தைகளால் தீண்டி விட்டுப் போனாள் மாலினி..

"இந்த ஹாஸ்பிடல்லதான் நீ வேலை செய்யறியா..?" மிதப்பான பார்வையோடு தன் முன்பு வந்து நின்றவளை கண்கள் சுருக்கி பார்த்தாள் கமலி..

"இந்த ஹாஸ்பிடல் ஓனரோட பொண்டாட்டின்னு சொன்னாங்க..! சம்பளத்துக்கு வேலை செய்யற..? பரவாயில்லை புடிச்சாலும் புடிச்ச.. பெரிய புளியங்கொம்பாத்தான் புடிச்சிருக்க.. இப்படித்தானே என் புள்ளையையும் மை வச்சு மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நல்ல வேளை.. அவன் உன்கிட்ட இருந்து தப்பிச்சுக்கிட்டான்.. பாவம் இந்த அப்பாவி மாட்டிகிட்டான்..‌ எப்படி..? இவன் கூடயாச்சும் நிரந்தரமா குடும்பம் நடத்துவியா இல்ல.. இவனையும் ஏதாவது குறை கண்டுபிடிச்சு விவாகரத்து வாங்கிட்டு அடுத்தவன தேடி போயிடுவியா..!" என்று மருத்துவமனையை ஒரு முறை சுற்றி பார்த்து பெருமூச்சு விட்டவள்..

"இதெல்லாம் எத்தனை நாளைக்கு..! குழந்தை பெத்துக்க தகுதி இல்லாத உன்னை இவனும் கழட்டி விட்டுடுவான்.. ஒருமுறை விவாகரத்து ஆகிடுச்சுன்னா அப்புறம் ஒவ்வொரு கையா மாறிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..! இதுக்கு ஒழுங்கா என் புள்ளையை அனுசரிச்சு மானத்தோட அவன் கூட குடும்பம் நடத்தியிருக்கலாம்.. இந்த பொழப்பு உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தப் போகுதோ எனக்கு கவலையா இருக்கு..!" போலியாக கவலைப்பட..

மார்பின் குறுக்கே கைகட்டி அவளை தீர்க்கமாக பார்த்தாள் கமலி..

"ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்.. என் மேல நீங்க அக்கறை எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி.. ஆனா பாருங்க நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. என் புருஷன் என்னை நல்லா பார்த்துக்கறார்.. என்கிட்ட நேர்மையாவும் அன்பாகவும் இருக்கறார்.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. அவருக்கு நான் மட்டும்தான் மனைவி.. எனக்காக அவர் என்ன வேணாலும் செய்வார்.. உதாரணத்திற்கு சொல்லப்போனா..‌ இப்படி நீங்க என்கிட்ட பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சா கூட உங்களையும் உங்க பொண்ணையும் பிரசவத்துக்காக இந்த ஹாஸ்பிடல்ல மட்டுமில்ல.. வேற எந்த ஹாஸ்பிடலையும் நுழைய விடாத மாதிரி பண்ணிடுவார்.. வேணும்னா ஒரு சாம்பிள் காட்டட்டுமா..!"

மார்பின் குறுக்கே கைகட்டிக்கொண்டு.. இதழோரம் குறுகுறுத்த ஏளன புன்னகையோடு நிதானமாக சாட்டையை வீசினாள் கமலி..

மாலினிக்கு முகம் வெளிறிப் போனது..

காயம் பட்டு முகம் சிவப்பாள்.. கண்ணீர் விடுவாள்.. அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு மறைவிடம் தேடி ஓடுவாள்.. என்றல்லவா நினைத்திருந்தாள்..

தோற்றத்தில் மட்டுமல்ல பேச்சிலும் ஆளுமை தெரிகிறதே.. அசராத புன்னகை பூத்த முகத்தோடு அமர்த்தலாக மிரட்டுகிறாளே.. ம்கூம்.. இவள் பழைய கமலியே அல்ல.. செல்வாக்கும் அதிகாரமும் புதுமிடுக்கை தந்திருக்கிறது போலிருக்கிறது.. உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல்.. உதட்டை சுழித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தாள் மாலினி.. கிட்டத்தட்ட ஓடியிருந்தாள் என்று சொல்ல வேண்டும்..

அதன் பிறகு கமலியின் திசை பக்கம் கூட திரும்பிப் பார்ப்பதில்லை..

தன் வாய் துடுக்கால் மகள் பிரசவத்திற்கு ஏதும் பங்கம் வந்து விடக்கூடாது என்ற பயம்..

அன்று கமலியை தன்னறைக்கு அழைத்திருந்தான் சூர்யதேவ்..

உள்ளே வந்தவளை கைநீட்டி அழைத்து விரல்களோடு விரல்கள் கோர்த்துக்கொண்டு தனக்கு நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டான் அவன்.. மேஜையில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தாள் கமலி..

"கேமராவில் பார்த்தேனே.. அந்த அந்த பொண்ணு இங்கதான் செக்கப் வர்ற மாதிரி தெரியுது..!"

"ஆமா.. லாஸ்ட் ஒன் மன்த்தா. இங்கதான் செக் வர்றாங்க.."

சூர்யதேவ் கண்களில் ஆச்சரியம் நிறைந்திருந்தது..

"இஸ்.. இட்..? நான் கவனிக்கலையே..!"

"உங்க கவனம் முழுக்க பொண்டாட்டி மேல மட்டுமே இருந்தா மத்த விஷயங்களை எப்படி பார்க்கறதாம்.." குறும்பு நிறைந்த பார்வையோடு உதடு குவித்து அவள் கேட்ட விதத்தில்.. கிறங்கிய கண்களோடு அவளை தன் பக்கம் இழுத்தான். சூர்ய தேவ்..

"ஆமா எந்த பக்கம் திரும்பினாலும் நீ தான் தெரியற.. தட்ஸ் நாட் மை மிஸ்டேக்..! ஜெகன் மோகினி.. நீதான் ஏதோ மேஜிக் பண்ணி வச்சிருக்க.." என்று அவள் ஒவ்வொரு விரல்களிலும் முத்தமிட்டான்..

விரல் நுனியில் கொடுக்கப்பட்ட முத்தங்கள் உடம்பு முழுக்க பரவி சிலிர்ப்பை தர.. உதடு கடித்தபடி அமைதியாக நின்றிருந்தாள் கமலி..

"அவங்களால உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே..! மேனேஜ் பண்ணிக்க முடியுமா.. இல்லைனா..?"

"நோ நோ.. இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. ஹாஸ்பிடல்னு வந்துட்டா எனக்கு எல்லாம் பேஷண்ட்ஸும் ஒண்ணுதான்..! நிச்சயமா என்னோட பர்சனல் இஷ்யூஸ்ஸ இங்க கொண்டு வரமாட்டேன்.." என்றான் திடமான குரலில்..

சூர்யா மோகனமாய் புன்னகைத்தான்..

"தட் இஸ் மை கமலி.. இதைத்தான் உன்கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்.. நாம சரியா இருக்கும் போது யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. யாரா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும்.. புரிஞ்சுதா மை டியர் வைஃப்.." புருவங்களை உயர்த்தி மையலோடு பார்க்க.. அவன் பக்கமாக முகத்தை நோக்கி குனிந்தவள்.. "புரிஞ்சது டாக்டரே.." என்று அவன் மூக்குநுனியை நிமிட்டியபடி கண் சிமிட்டினாள்..‌

சூர்யதேவ் உதட்டை குவித்து முத்தமிட முயல அதற்குள் கண்ணை ஏமாற்றி அவனிடமிருந்து விடுபட்டு சிட்டாக பறந்திருந்தாள் கமலி..

ஆளுங்கட்சி அரசியல்வாதி ஒருவனை யாரோ மர்மகும்பல் வெட்டி கொன்று விட்டார்களாம்..‌ தலைவனுக்காக போராடத் துடித்த கழக தொண்டர்கள் பேருந்தை தீயிலிட்டு கொளுத்துவதும் கடைகளை அடித்து நொறுக்குவதுமாக நகரத்தையே சின்னாபின்னமாக்கியதில்.. மாநில அரசு தலையிட்டு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தது..

தேவையில்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது..
சந்தேகத்திற்கிடமானவர்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தால் குண்டு கட்டாக தூக்கிச் சென்றது போலீஸ்.. பள்ளி கல்லூரிகள் விடுமுறை.. மக்கள் வேலைக்கும் தொழிலுக்கும் செல்ல வழியின்றி வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்..‌ கொரோனாவை விட மோசமான கொடூர மனிதர்களால் மக்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமானது..

அரசு மருத்துவமனைகளும் மிக முக்கிய தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன..

இந்த நிலையில்தான் இரவு நேரத்தில் சூர்ய தேவ் வீட்டுக்கு அவசர அவசரமாக ஓடி வந்தாள்
மாலினி..‌

வேர்த்து விறுவிறுத்த முகத்தோடு அவன் வீட்டுக் கதவை படபடவென தட்ட.. உறக்க கலக்கத்தோடு வந்து கதவை திறந்து எதிரே நின்றிருந்தவளை பார்த்து விழித்தான் சூர்ய தேவ்..

கதறி அழுது கொண்டிருந்தாள் அவள்..

"அழாம விஷயத்தை சொல்லுங்கம்மா!" நிதானமான குரலில் கேட்டான் சூர்யதேவ்..

பிரசவத்திற்கு இன்னும் பத்து நாட்கள் பாக்கியிருக்க.. ராகவி தவறுதலாக குளியலறையில் வழக்கி விழுந்து விட்டாளாம்.. பனிக்குடம் உடைந்து ரத்தப்போக்கு அதிகரித்து விட்டதாம்.. சேத்தன் வேறு இந்த நேரத்தில் வீட்டில் இல்லையாம்.. குழந்தையை அழைத்துக் கொண்டு ஏதோ உறவினர் வீட்டு விஷேசத்திற்கு வெளியூர் சென்றிருக்கிறானாம்.. அக்கம் பக்கத்தில் விசாரித்து டாக்டர் வீட்டை கண்டுபிடித்து இங்கே தேடி ஓடி வந்திருக்கிறாளாம்.. அழுகையோடு அத்தனை விஷயத்தையும் கூறி முடித்திருக்க..

"கமலி மெடிக்கல் கிட் எடுத்திட்டு என் கூடவா.." என்றவன் உடைமாற்றிக்கொண்டு தாமதிக்காமல் கமலியோடு புறப்பட்டு சேத்தன் வீட்டிற்கு சென்றிருந்தான்..

முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளும்.. பிரதான சாலைகளும்.. பிரபலம் வாய்ந்த கடைத்தெரு பகுதிகளும் மட்டுமே கலவர பூமியாக ஆகிவிட்டிருந்தன.. மற்றபடி மக்கள் குடியிருக்கும் வீட்டு பகுதிகளில் எந்த அசம்பாவிதமும் நேர்ந்திருக்கவில்லை..

மிகவும் கவலைக்கிடமான நிலையில் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ராகவி..

ராகவியை பரிசோதித்தான் சூர்ய தேவ்..

"பேபிகிட்ட எந்த மூவ்மென்ட்டும் இல்லை.. ப்ளீடிங் ஜாஸ்தியா இருக்கு.. பிளட் பிரஷர் வேற அதிகமா இருக்கு.. இந்த பொண்ணு மயக்கத்துக்கு போயிட்டா நிலைமை இன்னும் மோசமாகிடும்.."

"எப்படி சூர்யா வெளியே போக முடியும்.. ரோடு எல்லாம் பிளாக் பண்ணி வச்சிருக்காங்க.. நம்ம ஹாஸ்பிடல் போற வழியில நிலைமை இன்னும் மோசமா தான் இருக்கு.. இந்த நேரத்துல இந்த பொண்ணு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது சரியான ஐடியா இல்லை..!"

"நோ கமலி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாதான் இந்த பொண்ணு உயிரை காப்பாற்ற முடியும்.. சின்ன உயிர் இரண்டாம்பட்சம்.. ஆனா பெரிய உயிரை காப்பாத்தியே ஆகணும்.. நான் ரிஸ்க் எடுக்கறதா இல்ல.." என்றவன் ராகவியை கையிலேந்தி காரில் கொண்டு போய் அமர வைத்தான்.. கமலி அந்த பொண்ணு பக்கத்துல உக்காரு.. அன்கான்ஷியஸ் ஆகாம பார்த்துக்கோ..‌! மயங்கிட்டா ரொம்ப சிக்கலாயிடும்.. ஏதாவது பேச்சு கொடுத்துட்டே இரு.." என்றபடியே ஓட்டுனர் இருக்கைக்கு வந்திருந்தான் சூர்யதேவ்..

வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ராகவி.. மாலினிக்கு பதட்டத்தில் ஒன்றுமே ஓடவில்லை..

கமலி தான் ராகவியின் தலையை தடவி.. அவள் கைகளை பற்றி தைரியம் கொடுத்தாள்..

"இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு குட்டி பாப்பா பிறந்துடும். பயப்படாதீங்க.. இந்த வலியெல்லாம் எல்லா பொண்ணுங்களுக்கும் இயற்கைதானே.. வயசுக்கு வந்ததிலிருந்து வலிகளுக்கு பழகிக்க வேண்டியதா இருக்கு.."

"குழந்தை முகத்தை பார்த்ததும் பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போயிடும்.. பத்து நாளைக்கு முன்னாடியே குழந்தை முகத்தை பார்க்க போறீங்க.. தைரியமா இருங்க ஒன்னும் ஆகாது.."

அவள் வார்த்தைகளை மீறி ராகவிக்கு கண்கள் இருட்டிக் கொண்டே வந்தது.. அவள் தலை பக்கவாட்டில் சாய்ந்து கொண்டே போனது..

"ஐயோ கடவுளே என் பொண்ணு மயங்கறாளே..!" மாலினி நடுக்கத்தோடு கதறினாள்..

"கமலி ஏதாவது பண்ணு.. அவங்கள எழுப்பு..!" சூர்ய தேவ் வண்டியை ஒட்டியபடி கத்தினான்..

"ராகவி.. ராகவி.." என்று அவள் கன்னம் தட்டினாள்..

சொருகிய கண்கள் பாதி திறந்து கொண்டது..

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்.. உங்க முதல் குழந்தை பிறக்கும்போது அவன் முகத்தை பார்க்கும் போது உங்களுக்குள்ள ஒரு உணர்வு வந்திருக்குமே..! அந்த ஹேப்பினஸ் எப்படி இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?"

ராகவியின் சிந்தனை அந்த காலகட்டத்திற்குள் நுழைந்து.. இனிமையான அந்த நினைவடுக்குகளில் புகுந்து கொண்டது..

"அவனை கையில வாங்கின போது இவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பீங்க.. அன்னைக்கு நான் உங்க முகத்தை பார்த்தேன்.." கமலி மென்மையாக சிரித்தாள்..

ராகவி பலவீனமான அந்த நிலையிலும்.. கமலியை கூர்ந்து பார்த்தாள்..

"எதையோ சாதிச்ச திருப்தி உங்க முகத்துல..! எவ்ளோ அழகா இருந்தீங்க தெரியுமா.. பிரசவம் ஒரு தாய்க்கு மறு ஜென்மம்னு சொல்லுவாங்க.. அந்த நேரத்துல குழந்தையோடு சேர்த்து ஒரு அம்மாவும் பிறக்கிறா.. அப்படித்தானே..!"

ராகவி வலியில் பலகீனமாக முனகிய போதும் கமலி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்..

"கடுமையான வலிக்கு பிறகு நீங்க அனுபவிச்ச அந்த சந்தோஷத்தை இப்பவே உணருங்க.. உங்களுக்கு நல்லபடியா குழந்தை பிறக்க போகுது.. இன்னும் கொஞ்ச நேரம்தான் ஹாஸ்பிடல் போய்டலாம்.. ஏற்கனவே பிரசவ வலியை அனுபவிச்ச உங்களுக்கு.. இரண்டாவது பிரசவம் ஒரு பெரிய விஷயமே கிடையாது.. ரொம்ப ஈசியா குழந்தையை பெத்துடுவீங்க நீங்க வேணா பாருங்க.. கர்ப்பமா இருக்கிற பொண்ணுங்களுக்கு உங்க அனுபவத்தை கத கதையா சொல்ல போறீங்க..‌"

ராகவிக்கு வலியிலும் சிரிப்பு வந்தது..

"என் என் குழந்தைக்கு ஒன்னும் ஆகாதுல்ல..! நல்லபடியா எனக்கு குழந்தை பிறந்திடும் இல்ல.. எனக்கு பயமா இருக்கு..! நெஞ்செல்லாம் அடைக்குது.. நான் செத்து போய்டுவேனா.." பயத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு உளறினாள் ராகவி..

"தேவையில்லாம இப்படியெல்லாம் யோசிக்கவே கூடாது.. பாசிட்டிவ்வா மட்டும் யோசிங்க.. நல்லதே நடக்கும்..!" அவள் தலையை வருடிவிட்டாள் கமலி..

அதற்குள் கார் வழியில் நின்று விட்டது..

ஆள் இல்லாத ரோட்டில் நான்கைந்து ரவுடிகள் காரை வழிமறித்தனர்..

இவர்கள் ஆளுங்கட்சி அடியாட்கள் அல்ல எதிர்க்கட்சி ஆட்கள்.. இந்த நேரத்தில் கொடூரமான சம்பவம் எதையாவது முடித்துவிட்டு ஆளுங்கட்சி மீது பழியை போடும் திட்டம்..

"இந்தா பாருடா கார்ல கர்ப்பிணி பொண்ணு.. அப்படியே காரை கொளுத்தி விடு.. சென்சேஷனல் நியூஸ்.. தமிழ்நாடு பத்திகிட்டு எரியும்.. ஆட்சி கலையும்.. கட்சி ஆட்டம் காணும்.." அந்த கொடூரர்கள் சிரித்தனர்..

"பத்திரமா இருங்க.. யாரும் காரை விட்டு வெளியே வரக்கூடாது.." சூர்யதேவ் அடிகுரலில் சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கினான்..

கார் மீது பெட்ரோல் ஊற்ற போனவனை இழுத்து பளாரென ஒரு அறை.. அடுத்தடுத்து வந்தவர்களை சராமாரியாக தாக்கினான் சூர்யா..

அப்படியும் கூட காரிலிருந்த பெண்களை இழுத்து வெளியே தள்ளி.. ராகவியின் வயிற்றில் ஓங்கி கட்டையால் அடிக்க போனான் ஒருவன்.. குறுக்கே வந்து விழுந்தாள் கமலி.. அடியை தன் முதுகில் வாங்கிக் கொண்டாள்.. வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்தது..

"கமலிஇஇ.." என்று அலறியவனுக்கு அடுத்த நொடியே வெறிபிடித்து போனது.. நரசிம்மாவதாரம் போல் சுற்றியிருந்தவர்களை அடித்து நான் நார் நாராக கிழித்துப் போட்டிருந்தான்..

தன் மகளை காப்பாற்ற தான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாக போனதில்.. நடப்பதைக் கண்டு திக்பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள் மாலினி..

கைகால் உடைந்தும் உயிரை காப்பாற்றிக் கொள்ள தலை தெறிக்க ஓடியிருந்தது அந்த கூட்டம்..!

"கமலி கமலிமா.. உனக்கு உனக்கு ஒன்னும் இல்லையே..! நீ நல்லா இருக்கியா.." அவனை தொட்டு தொட்டு பார்த்தவன் படபடக்கும் இதயத்தோடு தன் மனைவியை கட்டி அணைத்துக் கொண்டான்..

தன் வலியை காட்டும் நேரம் இதுவல்லவே..!

"எனக்கு ஒன்னும் இல்ல.. நிலைமை ரொம்ப மோசமாயிட்டே போகுது.. ஹாஸ்பிடல் போறவரைக்கும் தாங்குமா தெரியல.. ஏதாவது பண்ணுங்க சூர்யா..!" கமலி படபடத்தாள்..

அந்தப் பெண்ணை கையிலேந்தி காருக்குள் படுக்க வைத்தான் சூர்யா..

"கமலி என்னோட ரெண்டு கையிலும் அடிபட்டு இருக்கு.. நான் இந்த பொண்ணுக்கு பிரசவம் பார்க்க முடியாது.. இன்ஃபெக்ஷன் ஆகிடும்.."

"நீ நீ தான் இந்த பொண்ணுக்கு பிரசவம் பார்க்கணும்.."

"நானா..!" கமலி படபடத்தாள்..

"ஆமா வேற வழி இல்ல.. தலை வெளிய வருது.. இதுக்கு மேல தாமதிக்க முடியாது.. யூ நோ வாட் டு டூ.. கமான் குயிக்.." என்றவன்.. மாலினியை பார்த்து..

"அம்மா அக்கம் பக்கத்துல எதாவது வீடு இருந்தா யாரையாவது உதவிக்கு கூட்டிட்டு வாங்க.." என்றான்..!

"சரி.. சரி டாக்டர்.." மாலினி காரை விட்டு இறங்கி ஓடினாள்..

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்ட கமலி.. இடுப்பு வரை ராகவியின் நைட் கவுனை விலக்கி விட்டு.. குழந்தை வரும் வழியை பரிசோதித்தாள்..

"குழந்தை வெளிய வந்துட்டு இருக்கு.. உன் குழந்தை மேல முழு கவனத்தை வை ராகவி.. நிச்சயமா உன்னால முடியும்.. உன் பலத்தை எல்லாம் ஒன்னு திரட்டி பேபியை வெளியே தள்ளு.. ஒருமுறை ஒரே முறை ட்ரை பண்ணு.." கமலி சொல்லச் சொல்ல.. சூர்யா கையில் துண்டை சுற்றிக் கொண்டு அவள் வயிற்றை கீழ்புறமாக தள்ளினான்..

கடைசி முயற்சியாக தன் பலத்தை ஒன்று திரட்டி.. அம்மாஆஆஆ.. என்ற அலறலோடு குழந்தையை வெளியே தள்ளியிருந்தாள் ராகவி..‌

ஆனால் கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டதில்.. என்ன பாதிப்பு நிகழ்ந்ததோ.. குழந்தைக்கு மூச்சுப் பேச்சில்லை.. !

தகுந்த முதலுதவிகளை செய்த பின்பும் குழந்தை கண்விழிக்கவில்லை..

அதற்குள் மாலினி உதவிக்காக ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தாள்..‌

"அம்மா குழந்தை கண்ணே திறக்கல.." பலவீனமான நிலையில் அன்னையிடம் சொல்லி அழுதாள் ராகவி..

"ஐயோ கடவுளே..! எங்களுக்கு ஏன் இந்த சோதனை..‌ எப்படியாவது எங்க குழந்தையை காப்பாற்றி கொடுத்துடு.." நெஞ்சில் கை வைத்துக் கொண்டு குலுங்கி அழுதாள் மாலினி..

குழந்தையை வாங்கி பரிசோதித்தான் சூர்ய தேவ்..

கமலி பதட்டமும் படபடப்புமாக அவன் முகத்தை பார்க்க.. நம்பிக்கையை தொலைத்த விழிகளோடு.. இல்லை என்ற தலையசைத்தான்..

"அய்யோஓஓஓ.." என்ற தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் மாலினி..

அழக்கூட முடியாத நிலையில் ஓய்ந்து போயிருந்தாள் ராகவி..

சிலிக்கான் பொம்மை போல் அசைவில்லாமல் சூர்ய தேவ் கையிலிருந்த குழந்தையை தன் கைக்குள் வாங்கிக் கொண்டாள் கமலி..

பெண் குழந்தை..

கண்ணீரோடு அந்த சிசுவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள்.. முகம் நடுங்க குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்..

"பா.. பாப்பா.. வ.. வந்துடுமா.. தயவு செஞ்சு திரும்ப வந்துடு.. என்னை பழி சொல்லுக்கு ஆளாகிடாதே..! என்கிட்ட வந்துடு என் கண்ணே.. இந்த உலகத்து மேல உனக்கென்ன அப்படி ஒரு கோபம்.. உன்னை பார்த்துக்க இத்தனை பேர் இருக்கோமே.. என்கிட்ட வந்து சேர்ந்திடு ராஜாத்தி.. எ.. என்னை ஏமாத்திடாதடி.. என்னால தாங்க முடியாது.." நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி தீர்த்தாள்..

எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது..

குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத ஒரு பெண்.. ஒரு பட்ட மரத்தை கட்டிக்கொண்டு கதறி தீர்த்தாளாம்..

"எப்படியாவது தழைச்சு வளர்ந்திடு.. என்னை மலடின்னு சொல்ற இந்த உலகம் உன்னையும் பட்ட மரம்னு ஒதுக்கி தள்ளி வெட்டி வீழ்த்திடும்.. வளர்ந்திடு மரமே.." என்று கண்ணீர் விட்டு கதறி தீர்த்து விட்டு போனாளாம்.. அதிசயத்தில் அதிசயமாக மரத்தில் இலை துளிர்த்ததாம்..

கண்ணீருக்கும்.. உணர்வுகளுக்கும் வலிமை அதிகம்..

தன் உடல் சூட்டை குழந்தைக்கு தந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு.. இதயத்துடிப்பின் ஓசையை குழந்தையின் செவிகளுக்குள் செலுத்தி.. சத்தமாக அழுது கொண்டிருந்தாள் கமலி..

ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து குழந்தை தன்னிடம் வந்து சேர்ந்து விடாதா என்று ஏக்கம் பரிதவிப்பு.. பெற்ற தாய் கூட அப்படி அழவில்லை..

கமலின் அழுகையை கண்டு இரண்டு பெண்களும் விம்மலோடு சிலையாகி போயிருந்தனர்..

"கமலி எல்லாம் முடிஞ்சு போச்சு மனசை தேத்திக்கோ.. நம்மளால எதையும் மாத்த முடியாது.." சூரிய தேவ் அவளுக்கு ஆறுதல் சொன்னான்..

குழந்தையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு அதன் நெத்தியில் முத்தமிட்டாள் கமலி..

தாயின் கதகதப்பை கமலிடம் உணர்ந்ததோ.. அல்லது இதயம் இப்படித்தான் துடிக்கும் என்று கமலிடயிடமிருந்து அறிந்து கொண்டதா தெரியவில்லை..! உள்ளத்து உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் சக்தி படைப்பாற்றலுக்கு உண்டு.. என்று நிரூபிக்கும் விதமாக.. தன் சின்னஞ்சிறிய குரலில் வீலென்று அழ ஆரம்பித்திருந்தது அந்த குழந்தை..! உயிர்ப்பற்று கிடந்த ரோட்டோர மின்விளக்கு மின்னல் வெட்டியதை பளிச்சென ஒளிர்ந்தது..

வெட்டி வெட்டி இழுக்கும் அழுகையோடு.. கண்களை அகலமாக திறந்து அந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தவள்.. பிள்ளை உயிர் பெற்று வந்ததில் சிந்தையின் செல்கள் உயிர்பெற்று மெல்ல சிரிக்க ஆரம்பித்திருந்தாள்..

சூர்ய தேவ் தன் மனைவியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டதாம்.. இறந்து போன பிள்ளையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பல மணி நேரங்களாக கதறி தீர்த்தாளாம் ஒரு தாய்..!

மார்பு சூட்டில் அடைக்கலமான குழந்தை.. உயிர் பெற்று மெல்ல அசைந்து அழ ஆரம்பித்ததாம்.‌. ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட செய்தி இல்லை ஆனால் கேள்விப்பட்டிருக்கிறான்... இன்று உண்மையாக கண்முன்னே காண்கிறான்..

"கமலி மை டியர் கமலி.. ரியலி யூ ஆர் எ மேஜிக் டி.." பரவசத்தோடு அவன் உள்ளம் காதலில் பொங்கி வழிந்தது..

அளவற்ற மகிழ்ச்சியோடு அழுது தீர்த்த கமலி குழந்தையை தாயிடம் கொடுத்தாள்..

மாலினி உதவிக்காக அழைத்து வந்திருந்த அந்த பெண் பக்கெட்டில் சுடுதண்ணி கொண்டு வந்து கொடுக்க.. முக்கியமாக செய்து முடிக்க வேண்டிய மற்ற வேலைகளை கையிலிருக்கும் உபகரணங்களை வைத்து நேர்த்தியாக முடித்திருந்தான் சூர்ய தேவ்..

குழந்தையை கழுவி துடைத்து "பாப்பாவுக்கு பால் கொடுங்க" என்று தாயிடம் கொடுத்துவிட்டு
காரை விட்டு இறங்கி நின்றாள் கமலி..

மாலினி ஓடி வந்து சாஷ்டாங்கமாக கமலியின் கால்களில் விழுந்து விட்டாள்..

பதறி அவளை தூக்கி நிறுத்தினாள் கமலி.. கையெடுத்து கும்பிட்டவளுக்கு வார்த்தைகள் வரவே இல்லை..

"எதுவும் பேச வேண்டாம் போய் உங்க மகளை பாருங்க.." என்று மாலினியை ராகவிக்கு உதவியாக காருக்குள் அமரச் சொன்னாள்..

மின்னல் வேகத்தில் முதுகு பக்கமிருந்து அவளை கட்டிக் கொண்டான் சூர்யதேவ்..

"என்ன.. என்ன ஆச்சு..!" என் பேபிக்கு.. முதுகில் வின் வின்னென்று தெறித்த வலியை பொறுத்துக் கொண்டு அவன் பக்கம் திரும்பினாள் கமலி..

கண்கள் நிறைந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நின்றிருந்தான் சூர்யா..

"ஐ லவ் யூ கமலி.. ஐ லவ் யூ.. ரொம்ப படபடப்பா இருக்கு.. இப்படி நான் எக்சைட் அனதே கிடையாது.. என்னால முடியலடி.." என்றவன் கமலியை இருக அணைத்துக் கொண்டான்..

அன்பும் கருணையும் அதிசயங்களை நிகழ்த்தி காட்டும்.. என்று கற்பிப்பதாய் நட்சத்திரங்களோடு சிரித்துக் கொண்டிருந்தது பிரபஞ்சம்..

தொடரும்..
Super ud
 
New member
Joined
Mar 19, 2024
Messages
11

Sariyana saatai adi ammakum ponnukum
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
67

வாவ்😮 கமலிம்மா யு ஆல்வேஸ் ராக்கிங்🎸🎶🎶🎸🎶🎶.. மாலினி கமலிம்மா மாதிரி ஒரு மருமகள மிஸ் பண்ணிட்ட... அதும் சரிதான் ஏன்னா எங்க சின்சியர் டாக்டர் சூர்யதேவ்க்கு வளர்ந்த குழந்தை க்கு கமலிம்மா கிடைக்காம போயிருப்பா.... தேங்க் காட்... 🥰
 
New member
Joined
Mar 23, 2024
Messages
10

Heart touching epi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
150

🥰🥰🥰🥰🥰🥰
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
76

இன்னா செய்தாரை ஒருத்தல்... என்பது போல, மருத்துவத்துறையில் மனஸ்தாபங்கள் எப்போதுமே இருக்க கூடாது. அது அந்த துறைக்கே கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு தன்மை. அது கமலியிடம் மனிதாபிமானத்துடன் இன்னும் அதிகமாவே இருக்கின்றது. Superb epi Sana ma.. ❤️👌.
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
73
சனா டியர் இரண்டு எபில ரொம்ப அழ வச்சுட்டீங்க. இந்த எபிக்காவது கமெண்ட் வார்த்தைகளில். 32 வது எபிக்கு வெறும் ஈமோஜி தான் போட்டேன்.

அந்த எபி என் மனதின் ரணத்தை மீண்டும் கிளறிய எபி.

கமலியின் அழுகை, அந்த வார்த்தைகள் அப்பப்பா எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள். இன்னும் அந்த நிலை மாறவில்லை குழந்தை இல்லாதவர்களை குத்தி பேசுவது.

ரொம்ப கஷ்டம் அந்த வேதனை. எவ்வளவு மனசை மாத்திகிட்டு தோற்றிக்கிட்டாலும், ஒரு சில சமயங்களில் மனம் உடைந்து கதறி அழ நேரிடும்.

குழந்தை பிழைத்து விட்டது. கமலி நீ மேஜிக் தான். 👌👌👌👌👌👌 👍👍👍👍 ❤️❤️❤️❤️❤️❤️❤️

ஆனா கமலிக்கு அடிபட்டதே. அவளுக்கு எதுவும் ஆககூடாது. அப்புறம் சூர்யா பாவம். இப்பதான் இரண்டு பேரும் புரிந்து காதலோடு வாழ ஆரம்பித்து இருக்காங்க.
 
Last edited:
Active member
Joined
Sep 14, 2023
Messages
159
கமலி சூரியாவின் காதலால் தன் பழைய காயங்களை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்...... இதற்கு சான்று தான் இந்த பிரசவம்......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூரியா கமலி நன்றாக வாழ வேண்டும்..... ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ ♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍😍😍😍 சூரியா கமலியை பாரு அவளுக்கு அடி பட்டு இருக்கு...
.....😔😔😔
 
Active member
Joined
Jul 31, 2024
Messages
55

🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Joined
Sep 19, 2023
Messages
69
Today எபி எத்தனை மணிக்கு வரும்?
 
Member
Joined
Jan 11, 2023
Messages
31

Speechless scenes.
 
Member
Joined
May 3, 2025
Messages
61
Kamali kadavul irukaru....entha kulanthaya thoda kudathunu sonangalo avale ava kayala delivery pakara mari aachu....

U are great kamali antha place unoda vedhanai entha alavu irukunu yosikave mudiyala....u make this epi heavy hearted...

Magic kamali....ithu writer kum porunthum...
 
New member
Joined
Jun 15, 2025
Messages
25

Ultimate
 
Top