• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 35

Active member
Joined
Jan 18, 2023
Messages
128
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🫶♥️♥️♥️♥️🫶♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
138
பத்மினி தந்த காபியை பருகியபடி அனுஷாவின் உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் ரமணியம்மா..

பரிசோதனைகளின் முடிவு அன்றே வந்துவிட்டது.. மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்து உள்ளிருக்கும் நஞ்சுத் துணுக்குகளை எடுத்து விட்டால் பாதகம் ஒன்றும் இல்லை என்று மருத்துவர் சொன்னபிறகுதான் கேசவனுக்கு உயிரே வந்தது.. அன்றே மீண்டும் அவள் கர்ப்பப்பை சுத்தம் செய்யப்பட்டு சிகிச்சை நல்படியாக முடிவடைந்திருந்தில் மிகப்பெரிய கண்டத்தை கடந்து வந்த நிம்மதியோடு மாலையே ஓரளவு தெளிவடைந்திருந்தாள் அனுஷா..

"இப்ப எவ்வளவோ பரவாயில்லை அண்ணி.. வலி கூட அவ்வளவா இல்ல.." அனுஷா சொன்ன பிறகுதான் கேசவனும் பத்மினியும் கலக்கங்களும் சஞ்சலங்களும் நீங்கி நிம்மதியாக உணர்கின்றனர்..

"அக்கா நீ வந்த பிறகு தான் நல்லது நடக்கிற மாதிரி தோணுது.. ஒருவேளை நீ வராமல் போயிருந்தா ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்னவோ.." தம்பி மனதார புகழ்ந்தது..

"அண்ணி.. நீங்க கொடுத்த தைரியத்துலதான் கொஞ்சம் பாசிட்டிவா யோசிக்க ஆரம்பிச்சிருந்தேன்.. நமக்கு ஒன்னும் இல்லன்னு மொதல்ல நாம நம்பனும்னு எனக்கு அழகா புரிய வச்சீங்க.. என் எண்ணங்களுக்கு ஏத்த மாதிரியே டாக்டர் பயப்படற மாதிரி ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டார்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல அண்ணி.. என்று தம்பி மனைவியும் மாறி மாறி புகழ்ந்து தள்ளிவிட்டனர்..

"அடடா இதுல என் பங்கு என்ன இருக்கு.. நல்லது நினைச்சா நல்லது நடக்கும்.. முதல்ல கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.. மலை போல கண்ணுக்கு தெரிஞ்ச பிரச்சினை பனிபோல விலகிடுச்சு இல்லையா..!! அதே மாதிரி அனு போல அழகா ஒரு பெண் குழந்தை பிறக்கனும்னு ஆசைப்படுங்க.. அதுவும் சீக்கிரம் நடக்கும்.. எப்பவும் சந்தோஷமான மனநிலையிலேயே இருங்க.."

பத்மினி பெருந்தன்மையாக.. அனைத்து நற்பலன்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்த போதும் அனுஷாவும் கேசவனும் அவள் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை..

ஒருவகையில் அவர்கள் சொன்னது உண்மையும் கூட.. நடுக்கடலில் நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு துடுப்பு கிடைத்தது போல் பத்மினியின் துணை.. அக்கா என்பவள் இன்னொரு தாய்.. எதுக்கும் கவலைப்படாதடா நான் இருக்கேன்.. என்று கண்ணீரை துடைத்து.. துணை நின்று சோதனையை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பலத்தை தாயால் அல்லது தமக்கையால் மட்டுமே தர முடியும்..‌ உடன்பிறந்தவன் கால்கள் துவண்டு பிடிமானம் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு தமக்கையாக அவனை தாங்கிப் பிடித்து தன் கடமையை சரியாக செய்திருந்தாள் பத்மினி..

ஆனால் அதற்காக அவள் தன்னை பெருமையாக உணரவில்லை.. இது என் கடமை என் தம்பிக்காக செய்கிறேன் என்று பெருந்தன்மையோடு அனுஷாவின் உடல்நலம் தேறியதற்காக சந்தோஷப்படுகிறாள்.. நான் உனக்காக இதை செய்தேன்.. அதை செய்தேன் என்று சொல்லி காட்டாத உறவுகள் கிடைப்பது பெரும்பாக்கியம்..

இதோ இப்போது ரமணியம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கூட.. அவர்கள் பக்கம் பக்கமாக புகழ்ந்து பேசியதை பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை.. சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாத மனித பிறவிகள் இந்த உலகத்தில் அரிது.. அப்படிப்பட்ட அரிதான உன்னத பிறவிகளில் பத்மினியும் ஒருத்தி..

"இத்தனை நாள் அனுஷா பட்ட பாடுகளோடு இறுதியில் நல்லபடியாக சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறி நின்றதைப் பற்றி பத்மினி விவரித்து கொண்டிருக்க.. எப்படியோ குணமடைஞ்சதே சந்தோஷம்.." மனதார நிம்மதி கொண்டார் ரமணியம்மா..

எதிரே சோபாவில் அமர்ந்தபடி.. தொடைகளில் பதித்திருந்த இரு கரங்களை கோர்த்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தானோ அல்லது அவள் சொன்னதை கேட்டானோ தெரியவில்லை ஆனால் அந்த ஆழ்ந்த பார்வை மட்டும் ஆழமாக அவள் நெஞ்சை துளைத்தது..

"காலையில நீ போகும்போது என்னையும் கூட கூட்டிட்டு போ பத்மினி.. நானும் அனுஷாவை பார்த்து அவ உடம்பை பற்றி விசாரிக்கணும்.." என்றார் ரமணியம்மா..

"ஏன்ம்மா.. ஏற்கனவே உங்களுக்கே உடம்புக்கு முடியல.. பரவாயில்லை அதெல்லாம் கேசவனும் அனுவும் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.. ஃபோன் பண்ணி விசாரிச்சுக்கோங்க நேர்ல வந்து பாக்கணும்னு அவசியம் இல்லை.." பத்மினி சொன்னதை தொடர்ந்து..

"ஆமா அவ சொல்றதுதான் சரி.. முடியாத நேரத்துல நீங்க எதுக்காக சிரமப்படணும்.. அவங்க வீட்டுக்கு வரட்டும்.. பிறகு விசாரிச்சுக்கலாம்.. ஹாஸ்பிடல் போய் அலைய வேண்டாம்.." என்றான் சிடுசிடு மன்னன் உதய் கிருஷ்ணா..

"என்ன ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க.. இவ்வளவு தூரம் வந்துட்டு அந்த பொண்ண போய் விசாரிக்கலைன்னா எப்படி.. எனக்கு எந்த சிரமமும் இல்லை.. நாளைக்கு உதய் கூட கார்ல போயிட்டு கார்ல வர போறோம்.. இதுல என்ன கஷ்டம்.." ரமணியம்மா பிடிவாதமாக நிற்க உதய் நெற்றி சுருக்கினான்..

"என்னை இதுக்காக இழுக்கிறீங்க.. நான் எங்கேயும் வரல.. உங்களுக்கு பாக்கணும்னு தோணுச்சுன்னா பத்மினிய கூட்டிட்டு போய் பாத்துட்டு வாங்க.. உங்களை இங்க விட்டுட்டு போகத்தான் வந்தேன்.. நான் இப்பவே புறப்படணும்.." என்றான் பத்மினியை முறைத்தபடி..

"என்னடா பேசற.. உன் பொண்டாட்டியோட தம்பி மனைவியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க..‌ இப்படி விட்டேத்தியா பேசினா எப்படி..? நியாயமா பார்த்தா உன் மச்சானுக்கு நீதான் உறுதுணையா ஆறுதலா நிக்கனும்..!! இப்படியே எதுலயும் ஒட்டிக்காம எத்தனை நாளைக்கு வாழ போற உதய்.." ரமணியம்மா அதட்டினார்..

"எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல.. இப்படியே விட்டுடுங்க.. என்னை எதுக்காக கட்டாய படுத்தறீங்க.. அதான் பத்மினி இருக்காளே.. அவ பாத்துக்குவா எல்லாத்தையும்..!! திடீர்னு என்னால யார் கூடவும் இழைய முடியாது.. கட்டாயப்படுத்தாதீங்க.. விட்டுடுங்க.." உதய் கிருஷ்ணா இப்படி சொல்லவும் பத்மினியின் முகம் வாடிப் போனது..‌

"சரிடா.. அதுக்கு ஏன் இப்படி கடுகடுன்னு விழற.. யார் மேல உள்ள கோபத்தை யார்கிட்ட காட்டுற.. நேத்துல இருந்து இப்படித்தான் பத்மினி.. என்கிட்ட எரிஞ்சு விழறதும் எடுத்தெரிஞ்சு பேசறதும்மா இருக்கான் இவன்.. என்னன்னு கேளு" என்றார் ரமணியம்மா பரிதாபமாக..‌

"எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல.. நான் கிளம்பறேன்.. ரொம்ப நேரம் முழிச்சிருக்காதீங்க.. சீக்கிரம் தூங்குங்க.." என்றபடி பத்மினியை ஓரக்கண்ணால் பார்த்தான் அவன்..

"சரி நான் தூங்க போறேன்" என்று போர்வையோடு தலையணையை கையோடு எடுத்துக் கொண்டவர்.. பத்மினியின் அருகே வந்து அவள் காதோடு..

"மாப்பிள்ள முறுக்கு.. நீ இருன்னு சொல்லனும்னு எதிர்பார்க்கறான்.. எனக்காக உன்ன அழைச்சிட்டு வரல.. அவனுக்காகத்தான் உன்னை தேடி ஓடி வந்துருக்கான்.. நீ சரியா கண்டுக்கலைனதும் கோபம்.. நேத்து ராத்திரியிலிருந்து கடுபுடு கடுபுடுன்னு என் உயிரை வாங்கிட்டான்.. முதல்ல உன் புருஷனை என்னன்னு கவனி.." ரகசியமாக சொல்லிவிட்டு குரலை செருமிக் கொண்டு..

"அந்த ரூம் காலியாத்தானே இருக்கு.. நான் போய் அங்க படுத்துக்கிறேன்.." அவள் பதிலை எதிர்பார்க்காமல் ரமணியம்மா அங்கிருந்து நகர்ந்து சென்றார்..

உதய் கிருஷ்ணா அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.. பத்மினியின் இதழில் புன்னகை.. அனுஷாவின் உடல் நலனில் முன்னேற்றம் தெரிந்ததால் நேற்றைய வருத்தங்கள் இப்போது அவளிடம் இல்லை..

"சரி நான் புறப்படறேன்.. அம்மாவை பார்த்துக்கோ.. நீ இல்லாம அவங்களுக்கு கையும் ஓடல.. காலும் ஓடல..‌" வேறு எங்கோ பார்த்தபடி சொன்னான்..

"அவங்களுக்கு மட்டும்தானா..!!" அருகே வந்து அவனை இடுப்போடு கட்டிக்கொண்டு நிமிர்ந்து முகம் பார்த்தாள் பத்மினி..

"தள்ளி போடி.. இந்த கட்டிப்பிடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்..‌" அவள் கரங்களை விலக்கி விட முயன்றான்.. அத்தனை பலவீனமானவனா உதய் கிருஷ்ணா..? ஏதோ பிடிமானம் நழுவுவது போல் அவள்தான் பலசாலி போல் ஒரு நடிப்பு..

"வீட்டுக்கு போய் தூங்கணும்.. அம்மா நச்சரிப்பு தாங்கல.. இன்னைக்கு உன் தொல்லையும் இல்லை.. நிம்மதியா தூங்க போறேன்.." புருவங்களை ஏற்றி இறக்கி ஒரு அலட்சிய பாவனை..

"அப்ப நான் வேண்டாமா உங்களுக்கு..?" பத்மினியின் கண்கள் வேறு கதை பேசின..

"இங்கேயா..? அடுத்தவங்க வீட்ல எப்படி.. அதெல்லாம் சரிப்பட்டு வராது.." அவன் சொன்ன அடுத்த கணம் பத்மினி பெரிதாக சிரித்தாள்..

"நான் அதைப் பத்தி சொல்லல.. உங்க கூடவே இருக்கிறது.. ஹக் பண்ணிக்கிறது.. ஒண்ணா படுத்து தூங்கறது.." இதைப் பற்றி சொன்னேன் என்றாள் சிரிப்பு நிற்காமல்..

உதய் கிருஷ்ணாவின் முகம் மாறியது..

"என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல.. என்னை பார்த்தா கிண்டலா தெரியுதா..? தம்பி வீட்டுக்கு வந்தவுடனே என்னையும் அம்மாவையும் மறந்தாச்சு..‌ ஒரு போன் பண்ணி பேசக்கூட நேரமில்லை.. மேடம் அவ்ளோ பிஸி..!!" அவள் அணைப்பினில்தான் நின்றிருந்தான்..

"என்னது போன் பண்ணலையா.. சாயந்திரத்திலிருந்து இங்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பத்து வாட்டி கூப்பிட்டீங்க.. நானும் பேசிட்டுதானே இருந்தேன்.."

"நான்தானடி கூப்பிட்டேன்.. உனக்குதான் என் நினைப்பே இல்லையே..?" விழிகளும் இதழ்களும் கோபத்தை பறைசாற்றின..

வளர்ந்த குழந்தைக்கு என்னவென்று சொல்லி புரிய வைப்பது.. இது மாதிரியான நேரங்களில் தாம்பத்திய ரகசியங்கள் மட்டுமே கணவனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சரி வரும்..

நெருங்கி நின்றாள் பத்மினி.. உதய் கிருஷ்ணாவின் தேகம் உருகியது.. எண்பது வயதான பிறகும் மனைவியிடம் குழந்தையாக உரிமை கோபம் கொள்ளும் சுகமே தனி.. அதிலும் நீ எனக்கு மட்டும்தான் என்று சற்று அதிகமாகவே பாசம் வைத்திருக்கும் இந்த பெரிய குழந்தைகளின் செல்லக் கோபங்கள் இனிய தொல்லை..

அவன் தாடையைப் பற்றி தன் பக்கம் திருப்பினாள்..

"உதய்ம்மா.. ஏன் இவ்வளவு கோபம்..? ஒரு நிமிஷம் இப்படி உட்காருங்க.." அவனை நீள்விருக்கையில் தள்ளியவள்.. மடிமீது அமர்ந்து கொண்டாள்.. இதற்கு மேல் கோபத்தை எங்கனம் இழுத்து பிடிப்பது.. ஆனால் விடாப்பிடியாக தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தான் அவன்..

"நானும் நீங்களும் வேறில்லை அப்படித்தானே.. அப்ப என் தம்பி மட்டும் எப்படி உங்களுக்கு அந்நியமா தெரிவான்.. என் கூட பிறந்தவன் உங்களுக்கும் சொந்தம் இல்லையா..!! உங்க அம்மாவை நான் வேற்று ஆளாவா பாக்கறேன்.. அவங்க மேல எவ்வளவு அக்கறை எடுத்துக்கறேன்.. ஆனா என் தம்பிக்கு ஒரு பிரச்சனை வரும்போது நீங்க தள்ளி நிற்கிறது சரியா..? சரி அப்படியே தள்ளி நின்னாலும் என்னையும் செய்யக்கூடாதுன்னு விலகி நிற்க சொல்றீங்களே..!! நியாயமா பாத்தா நீங்க என் கூட நின்னுருக்கணும்.. சரி உங்களுக்கு வேலை.. தவிர்க்க முடியல.. அம்மாவை தனியா விட முடியாது.. நான் ஒத்துக்கறேன்..‌ ஆனா ஒரு ஃபோன் பண்ணி அவன்கிட்ட நிலைமை எப்படி இருக்குன்னு விசாரிச்சு இருக்கலாம்.. சரி அது கூட வேண்டாம்.. என்கிட்டயாவது அவனைப் பத்தி பேசி இருக்கலாம்ல.. நீங்க கூட இருக்கிறது எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் தெரியுமா..?" அவள் கேள்விகள் நெற்றியடியாக மூளையில் உரைத்தன..

"எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லைடி.." கோபம் தணிந்த குரல் சற்று இறங்கி ஒலித்தது..

"பழகிக்கணும் உதய்.. இப்படியே வாழ்ந்துட முடியாது..‌ உங்களுக்கு பொண்ணோ பிள்ளையோ பிறந்தா என் தம்பிதானே தாய்மாமன்.. முன்ன நின்னு அவன்தான் சீர் செய்யணும்.. நம்ம குழந்தைக்கு மொட்டை அடிக்க காது குத்த அவ மடியிலதான் உட்கார வைக்கணும்.. உங்க பொண்ணு வயசுக்கு வரும்போது முதல்ல அவன்தான் ஓலை கட்டணும்.. கல்யாணமும் அவன்தான் முன்ன நின்னு நடத்தி வைக்கணும்.. அதே மாதிரி அவனுக்கும் குழந்தை பிறந்தா.. சுப காரியங்களை நிறைவா செய்ய வேண்டிய கடமை உங்களுக்கும் இருக்கு..‌"

"என்னடி என்னென்னமோ பேசற..?" குழந்தைகள் என்றதும் அவன் கண்களில் ஒருவித சுவாரஸ்யமும் குறுகுறுப்பும் தெரிந்தன..‌ அவள் பேச்சினில் இதுவரை அனுபவித்திராத இன்பங்களில் உதய் கிருஷ்ணாவின் கரங்கள் அவள் இடையை இறுக்கிக் கொண்டன.. குழந்தைகளை முன்னிறுத்தி அவள் சொன்ன விஷயங்கள் அவனுக்குள் என்னென்னவோ மாயங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன..

"உண்மையைதான்ப்பா சொல்றேன்.. நாளைக்கு நமக்கு குழந்தைகள் பிறந்து வளரும் போது அவங்க எதிர்காலத்துக்காக நீங்க நாலு மனிதர்களுடன் நட்புறவு வச்சிக்கிட்டே ஆகணும்.. நட்பும் உறவும் நாம கொண்டு போற விதத்துலதான் அந்த உறவு வலுப்படறதும் பலவீனமாகறதும்.. ஏதாவது ஒரு கட்டத்துல பிரியமானவங்களுக்காக உங்களை மாத்திக்கிட்டே ஆகணும்.. அதுக்கான ஆரம்ப புள்ளியை என்கிட்ட இருந்து ஏன் நீங்க தொடங்கக்கூடாது.. நான் உங்களை கட்டாயப்படுத்தல உதய்.. என் மனசுல பட்டதை சொன்னேன்..‌ நீங்க இப்படி நடந்துக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் அவ்வளவுதான்.." தன் கழுத்தை கட்டிக்கொண்டு சொன்னவளின் முகத்தை ஊன்றிப் பார்த்தவன்.. நீண்ட பெருமூச்சோடு "சரி நான் புறப்படறேன்.." அவளை விலக்க முயன்றான்.. ஒருமாதிரியான வெட்கத் தவிப்பு.. பத்மினி புரிந்து கொள்ளவில்லை..

"என்ன வந்ததுல இருந்து போறதுலயே குறியா இருக்கீங்க.. ஏன் நான் வேண்டாமா..?" செல்லமான கோபத்துடன் கண்கள் சுருக்கினாள்..

"இதே கேள்வியை நானும் கேட்கலாம் இல்ல..!! நீதான் என்னைத் தேடவே இல்லையே.. பத்து நாள் என்னை பார்க்கலைன்னாலும் நீ கவலைப்பட போறதில்லை..!!" கோபத்தோடு முறைத்தான் அவன்..

"பாத்திங்களா பாத்திங்களா.. மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க.."

"அம்மா தாயே.. நான் எதுவும் சொல்லல.. என்னை விடு.. நான் போகணும்.."

"அப்பப்பா.. உங்களை சமாதானப்படுத்தவே முடியலையே.. கோபமும் பிடிவாதமும் ரொம்ப ஜாஸ்தி உதய் உங்களுக்கு.. தலையை உலுக்கினாள் பத்மினி.

"நீ ஒன்னும் சமாதானப்படுத்த வேண்டாம்.." தன் கன்னத்தை கிள்ள வந்த அவள் விரல்களிலிருந்து தலையை பின்னுக்கு நகர்த்திக் கொண்டான் உதய்..

"சரி நீங்க எதுவும் கேட்க வேண்டாம்.. கேட்டா உங்க டிக்னிட்டி கொறஞ்சிடும்.. நானே கேட்கறேன்.. நீங்க எனக்கு வேணும்.." என்றாள் அழுத்தமாக..

"என்ன..? எனக்கு புரியல..?"

"நீ..ங்க எனக்கு பக்கத்துல வேணும்.." அழுத்திச் சொன்னாள்..

"இப்ப மட்டும் தமிழ் சரியா இருக்கா என்ன..?" அவன் பேச்சில் நக்கல்.. ஆனால் கண்களில் ஆசையின் பிரதிபலிப்பு..

"உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு ஆசைதான்டா.. என்ன செய்யறது சூழ்நிலை அப்படி..!!" அவன் நெற்றி முட்டினாள் பத்மினி.. அவன் தன்னை அதிகமாக தேடி இருக்கிறான் என்பதன் அடையாளமே இந்த கோபம்.. இதை எப்படி விகல்பமாக எடுத்துக் கொள்ள முடியும்..

"இப்ப என்ன என்னதான்டி செய்ய சொல்ற..!!"

"என்னை அந்த ரூமுக்கு தூக்கிட்டு போங்க..!!" அவள் சொன்ன அடுத்த கணம் அவள் கண்களை பார்த்து ஆழ்ந்த மூச்செடுத்து பெண்ணவளை கையில் ஏந்தி கொண்டான் உதய்..

அவள் காண்பித்த அறையின் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு.. "இப்ப நான் கிளம்பட்டுமா" அவன் கேட்க..

"என்னடா அவசரம்.. என்னை விட்டு போகுமளவுக்கு அந்த வீட்ல என்னதான் இருக்கோ.." என்று அவன் சட்டையை பற்றியிழுத்து தன் மீது விழச் செய்தாள் பத்மினி..

"ஏய்.. என்னடி.." லேசான திகைப்போடு அவள் மீது படர்ந்தவன்..

"உன்னை தாண்டி அந்த வீட்ல ஒண்ணுமே இல்ல.. வெறுமையா இருக்கு.. ஆனா நான் கொஞ்சம் இங்கிதம் இல்லாதவன்.. உன்னை பார்த்த உடனே எனக்கு ஏடாகூடமாக ஆசை வருது.. இந்த நேரத்துல வாய் விட்டு கேட்டா தப்பா போயிடும்.. அதனாலதான் இங்கிருந்து புறப்படறேன்னு சொல்றேன்.. இப்ப கூட மெத்து மெத்துன்னு உன்மேல படுத்துகிட்டு.." பாதி வார்த்தைகளை வாயோடு விழுங்கியவன்.. "சரி விடு.. நான் போகணும்" என்று எழ முயல.. தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் பத்மினி..

"கணவன் மனைவிக்கான தாம்பத்தியம் வெறும் உடல் சம்பந்தப்பட்ட தேடுதல்ன்னு நீங்களும் நினைக்கிறீங்களா உதய்.."

கேட்டவளின் நெற்றியில் முத்தமிட்டான் உதய்.. "எனக்கு அதெல்லாம் தெரியாது பத்மினி.. எனக்கு நீ வேணும் அவ்வளவுதான்.. தேடினாலும் கிடைக்காத அளவுக்கு உனக்குள்ள ஆழமா போய் புதைஞ்சுக்கணும்னு தோணுது.. ஆனா நான் எதையாவது ஏடாகூடமா கேட்டு உன் மனசை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு யோசிக்கிறேன்.."

"இப்படி பேசியே நேரத்தை வீணாக்கி போர் அடிக்கிறதுக்கு பேசாம நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. நான் தூங்கப்.." என்று முடிப்பதற்குள் உதடுகளை கவ்வியிருந்தான் அவள் கணவன்..

நிமிடங்கள் கரையும் முன் அவள் ஆடைகளுக்கு விடுதலை தந்து.. வெற்றிகரமாக பெண்ணுக்குள் தன்னை சேர்த்திருந்தான்..

"அம்மாஆஆஆ..‌ என்ன இப்படி டைரக்டா..? வலிக்குது உதய்.." பத்மினி வாயைப் பொத்தி அலறினாள்..

"சாரிடா.. கண்ட்ரோல் பண்ண முடியல.." அடுத்த முறை நிதானமா ஸ்டார்ட் செய்யறேன்.. கிறக்கமான குரலோடு.. ஏற்ற இறக்கங்களோடு மூச்சு வாங்கியபடி முத்தமிட்டு முத்தமிட்டு அவளை தன் வசப்படுத்தி மதியிழக்க செய்து மயங்க செய்து.. தன் ஆசை போல் அவளுள் புதைந்தான்..‌

அடுத்த சுற்றுக்குள் நிதானமாக முத்தமிட்டு.. முன் விளையாட்டுகளில் அவளை திணற வைத்து.. மென் மெதுவாய் ஆட்கொள்ள கணவன் மீது பித்தானாள் பத்மினி.. இந்த நிதானமும் மென்மையும் பெண்மைக்கு பிடித்திருந்தது..

"உங்க வீட்ல டைனிங் டேபிள் இருக்கா பத்மினி.."

"ஏன் கேக்கறீங்க பசிக்குதா.. சாப்பிட போறீங்களா..?"

"சாப்பிட்டுட்டுதானே இருக்கேன்.. ஒரு முறை ஆசை தீர டைனிங் டேபிளில் சாப்பிடலாம்னு.." அவன் சொன்ன அடுத்த காண வெட்கப்பட்டு..

"நிஜமாவே உங்களுக்கு இங்கிதம் இல்லைதான்.." என்றவள் தன்னவனின் முன்னோக்கிய அழுத்தமான உந்து விசைதனில் தோள்பட்டையில் வலிக்க கடித்தாள்..

தேடல்களும் ஊடல்களும் தீர்ந்த பின்னே கூட அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் உதய்..

"என்ன அப்படி பாக்கறீங்க.. திரும்ப வேண்டும்ன்னு கேட்டுடாதீங்க.. என்னால முடியாது.." தலையசைத்து மறுக்கும் விதம் கூட கூடலுக்கு அழைப்பு விடுப்பதாய் கிறங்கினான் உதய்..

"அது இல்லடி.. முழுசா 48 மணி நேரம் உன்னை பார்க்கல.. அதான் இப்படி பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோணுது.."

"ரொம்ப காதலிக்கிறீங்க உதய்.."

"அப்படியா..? இதுதான் காதலா.. எனக்கு ஒன்னும் தெரியல.. எனக்கு தெரிஞ்சதெல்லாம்.."

"நான் உங்க பக்கத்திலேயே இருக்கணும் அதானே.." பத்மினி ஒருக்களித்து படுத்துக்கொள்ள அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் உதய் கிருஷ்ணா..

மறுநாள் காலையில்.. உதய் ரமணியம்மா.. பத்மினி மூவரும்.. காரிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்..

"ஆட்டோவில் போய் கஷ்டப்பட வேண்டாம் நானே டிராப் பண்றேன்.." இப்படித்தான் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்..

"ரமணியம்மா.. மாமா.." வாசலிலேயே நின்று ஓடி வந்தான் கேசவன்.. ரமணியம்மாவை அணைத்துக் கொண்டு அழுதான்.. தன் பிள்ளைக்கு எப்படி ஆறுதல் சொல்வாளோ அதேபோல் கேசவனையும் அணைத்துக் கொண்டு அவனுக்கு ஆறுதல் கூறி முதுகை தட்டிக் கொடுத்தார் ரமணி..

உதய் கிருஷ்ணாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு.. "நல்லா இருக்கீங்களா மாமா.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறதா அக்கா சொன்னா.. அதையும் தாண்டி எங்களை பார்க்க வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா.. அனுவோட நிலைமை கண்டு ரொம்ப பயந்துட்டேன்.. என்ன செய்யறது ஏது செய்யறது ஒண்ணுமே புரியல.. இல்லைன்னா நிச்சயமா உங்களுக்கு ஃபோன் பண்ணி பேசி இருப்பேன்.." அவன் இயல்பாக .. அதே நேரத்தில் அன்போடு உரையாடியதில் திணறிப் போனான் உதய் கிருஷ்ணா.. என்ன பேசுவதென்று ஒன்றும் புரியவில்லை..

இத்தனை அன்பாக பேசும் ஒருவனிடமிருந்து தன்னை உதறிக் கொண்டு மருத்துவமனை விட்டு செல்ல மனமில்லை.. அவர்களோடு சேர்ந்து மருத்துவமனைக்குள் நடந்தான்.. பத்மினியும் ரமணியம்மாவும் தங்களை பின்தொடர்ந்தவனை ஆச்சரியத்தோடு பார்த்தனர்..‌

அனுஷாவின் அறைக்குள் நுழைந்து.. அவள் நிலையை கண்டதும் தன்னையும் அறியாமல் அவன் இதயம் பிசைந்தது.. யாராக இருப்பின் துன்பமும் பிணியும் இதயத்தில் வலியையும் இரக்கத்தையும் தோற்றுவிக்காமல் போனால் நாம் என்ன மனித பிறவி..

"எப்படிம்மா இருக்க.. இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லையே.." வாய் திறந்து அரிய முத்துக்கள் உதிர்ந்தது உலகின் பேரதிசயம்.. ரமணியம்மா நெஞ்சை நீவிக்கொண்டார்.. பத்மினிக்கோ என் கணவர் என்ற பெருமிதம் தாங்கவில்லை..

"இப்ப எவ்வளவோ பரவாயில்ல அண்ணா.. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார்.." அனுஷாவும் இயல்பாக பேசினாள்..

"நீங்க ரொம்ப குடுத்து வச்சவர் அண்ணா.. அண்ணி ரொம்ப நல்லவங்க.. தேள் கொடுக்கு மாதிரி எத்தனை வார்த்தைகளை பேசி அவர்களை அவமானப்படுத்தி இருக்கேன்.. அதையெல்லாம் மறந்துட்டு பெரிய மனசோட எனக்காக வந்து இவ்வளவு கேர் எடுத்துக்கறாங்க.. நான் உங்களுக்கு ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கேன்.." அனுஷா ஆத்மார்த்தமாக சொன்ன அடுத்த கணம் நெகிழ்ச்சியோடு பெருந்தன்மை பொங்க மனைவியை பார்த்தான் உதய்..

இவர்கள் சம்பாஷனைகளை கண்டு கொள்ளாமல்.. பத்மினியின் கவனமெல்லாம் தம்பியோடு தீவிரமாக எதைப் பற்றியோ உரையாடிக் கொண்டிருப்பதில்தான் இருந்தது..

ரமணியம்மா அனுஷாவின் கைகளை பிடித்துக் கொண்டு அவளோடு உரையாடிக் கொண்டிருந்தார்..

அங்கிருந்து புறப்படும் வேளையில்.. கேசவனை தனியாக அழைத்து வந்தான் உதய்..

குரலை செருமிக் கொண்டு பிடரியை வருடியவன்.. நீண்ட தயக்கத்திற்கு பின்பு.. "க.. கவலைப்படாதீங்க.. எல்லாம் சரியாகிடும்..‌ ஏதாவது உதவி வேணும்னா தயங்காம என்னை கேளுங்க.. உங்க அக்கா கிட்ட மட்டும் இல்ல.. என்கிட்டயும் உரிமையா நீங்க பழகலாம்..‌ உங்களுக்காக நாங்க இருக்கோம்.." கேசவன் கரங்களை உதய் கிருஷ்ணா பற்றி கொள்ளவும்.. பெரும் அதிசயத்தை கண்டதைப் போல் அவன் கண்களில் நிறைவும் ஆனந்த நீர் துளிகளும்..

பத்மினி தான் அங்கே தங்கிக் கொள்வதாக கூறி விட.. கேசவனையும் ரமணியம்மாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டான் உதய் கிருஷ்ணா..

பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கேசவனும் ரமணியம்மாவும் வெண்டைக்காய் போல் வழவழவென்று நிறைய பேச்சு.. உதய் கிருஷ்ணனுக்கு இதெல்லாம் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது..

"இங்க பாருங்க மாமா.. இவங்க சொல்றதை கேளுங்களேன்" நடுநடுவே தன் அக்காள் கணவனையும் உரையாடலில் சேர்த்துக் கொண்டான் கேசவன்.. பெரும் துன்பத்திலிருந்து தன் மனைவி மீண்டதிலும்.. அவள் உடல்நலன் தேறி வந்ததிலும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான் அவன்..

"உதய்.. நான் கேசவன் வீட்ல தங்கிக்கிறேன்.. அவனுக்கும் பேச்சு துணையா இருக்கும்.. சாயங்காலம் வந்து என்னை அழைச்சுக்கிட்டு போ.." ரமணியம்மா சொன்னதை உதய் மறுத்து பேசவில்லை..‌ இருவரையும் கேசவன் வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்று தயாராகி அலுவலகத்திற்கு புறப்பட்டான் அவன்..

இங்கே.. பத்மினி தன் பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதை மனைவி மூலம் அறிந்து கொண்ட நடராஜ் மனதினில் கீழ்த்தரமான ஆசைகள் மீண்டும் முளைவிட்டன..

"புருஷனை பகைச்சிகிட்டு தனியா வந்து அனுஷாவை பார்த்துட்டு போறாளாம்.. அந்த வீட்லதான் தங்கி இருக்காளாம்..‌ போய் உங்க தங்கையை விசாரிக்கிறேன்.. பாக்கறேன்னு அவங்க வீட்டுக்கு போய் தேவையில்லாத வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டு வராதீங்க.. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்..!! ஏற்கனவே உங்களால வந்த பிரச்சினைகள் எல்லாம் போதும்.. நல்ல வசதியான வீட்டை விட்டுட்டு இந்த ஒன்டிக் குடித்தன வாடகை வீட்டில் குடியேறி கஷ்டப்படுறதெல்லாம் உங்களாலதான்.. திரும்ப ஏதாவது பிரச்சினையை இழுத்துட்டு வந்துடாதீங்க.. மஞ்சரி சொன்ன எதுவும் அவன் காதுகளில் விழவில்லை..

பத்மினி தனியாக தங்கி இருக்கிறாள்.. அப்படியானால் இன்று இரவே அவளை சந்தித்து தன் ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.. பலவந்தப்படுத்தியாவது அவளை அடைந்து விட வேண்டும்.. மானத்துக்கு பயந்து எந்த பெண்ணும் இதுபோன்ற இருட்டறை ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டாள்.. இது தனக்கு வாய்த்த அருமையான வாய்ப்பு.. நழுவ விடக்கூடாது.." கீழ்த்தரமான எண்ணங்களும் முறையில்லாத காம ஆசைகளும் கண்ணை மறைக்க தன் குடும்பத்தை மறந்து.. அன்று இரவில் கேசவனின் வீட்டின் பின்புறமிருந்து உள்ளே எகிறி குதித்தான் நடராஜ்..

தொடரும்..
😍😍😍😍😍
 
Joined
Jul 10, 2024
Messages
44
எப்படியோ ஒரு தரமான சம்பவம் இருக்கு நடராஜனுக்கு.🤛🏽🤛🏽🤛🏽🤛🏽 பத்மினி மட்டும் சமாளிக்க போறாளா இல்லை நம்ம உதய் தங்கமும் கூட இருப்பாரா. பார்க்கலாம்.👫🏻👫🏻👫🏻

உதய் வர வர எல்லாத்துக்கும் குழந்தை மாதிரி பத்மினிய தேடற. க்யூட்நஸ் ஓவர்லோட் உதய். 👌👌👌👌👌அழகா பத்மினிய லவ் பண்ண ஆரம்பித்துவிட்டாய். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️பத்மினி எடுத்து சொல்வதை புரிந்து கொண்டு நல்ல குடும்பஸ்தனாக மாற முயற்சி பண்ணற.👏👏👏👏👏👏👏
 
Member
Joined
Jun 27, 2024
Messages
57
waiting for next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top